Search This Blog

Wednesday 5 September 2012

நண்பேன்டா ---- 3

நண்பேன்டா ..............3


இருவர் ஜாதகத்திலும் பலம்மிக்க தீய கிரகம்,     ஒரே       ராசியில் இருக்க அவ் விருவரும் நகமும் சதையும்போல்      ஆரம்பகாலத்தில் இருந்தாலும்,ஆரம்ப காலத்தில்     நட்பாகத் தோற்றமளித்த    அவர்களின்        நட்பு வெகு சீக்கிரமே ,இருவருக்குள்ளும்     ஆழமான வெறுப்பை    ஏற்படுத்தி,கோபமுடன் பிரியும் நிலையை ஏற்படுத்திவிடுகிறது.அதேபோல் இருவருக்கும் ஒரு ராசியிலுள்ள கிரகத்தின் தசாக் காலத்தில்,அந்த ராசி மீது கோசாரத்தில் சனி அல்லது ராகு அல்லது கேது   கடந்து    செல்லும்போது,     நண்பர்களுக்கிடையே      கருத்து வேறுபாடும்,தான்தான் பெரியவன்    என்ற     கர்வமும்,போட்டியும்,நட்பைக் குப்பையாக்கிவிடுகிறது

இருவரின் லக்னமும் ஒன்றுக்கொன்று அனுகூலமற்ற ராசிகளிலோ அல்லது 6/8 ஆக இருந்தாலோ        இவர்களிடையே நட்பென்பது எப்போதுமே ஏற்படாத வொன்றாகிவிடும்.         ஆனால், வேறுயேதேனும் சாதகமான கிரக நிலைகள் இருவர்   ஜாதகத்திலும்      இருந்தால் நட்புயேற்பட வாய்ப்பு உண்டு. உதாரண மாக,தனுசு    லக்ன    ஜாதகருக்கும்,   கடக       லக்ன ஜாதகருக்கும், ஒருவருக் கொருவர்   அனுசரித்துச்   செல்வது கடினம்.அதைப்போலவே கன்னி மற்றும் கும்ப    லக்ன ஜாதகர்கள் காலாகாலத்திற்கும் முரன்பட்டவர்களாக,நட்பின்றி இருப்பர்.

மேலும் ஒருவருடைய நடப்பு தசாநாதன்,மற்றவரின் லக்னத்திலிருந்து அனுகூலமற்ற ஒரு ராசியில் இடம்பெற்றாரானால்,இருவரிடையே ஏற்பட்ட நட்பு கரடுமுரடானதாக  இருக்கும்.   அதேபோல்    இருவருக்கும்    ஒரே தசா காலமானால்,இருலர் ஜாதகத்திலும் அந்த தசாநாதர்களும் வெவ்வேறு, ராசிக்குடையவர்களாயின்,இருவர் மனதிலும் நட்பு துளிர்விடஆரம்பிக்கும்.

ஒருவரின் லக்னாதிபதி மற்றவரின் லக்னத்திலிருந்தால் அப்போது,இருவரின் நட்பும் பலப்படும். உதாரணமாக,ஒருவருக்கு சூரியதசை நடந்து,மேஷத்தில் சூரியன் உச்சம் பெற்றிருக்க,மற்றவருக்கு துலாத்தில் நீசம் பெற்று தசா நடக்க,இருவருக்குமிடையே அவிழ்க்கமுடியாத நட்பு  முடிச்சு விழுந்து, இரண்டற கலந்துவிடுவர்.

இருவரது ஜாதகத்திலும் ஒரே ராசியில் லக்னாதிபதி,சந்திரன் அல்லது 11 ம் அதிபதி இடம்பெற நண்பேன்டா என நீடித்து நிலைக்கும்,சீரான நட்புக்கு, லக்னாதிபதி மற்றும் புதன்,சுக்கிரன்,குரு ஆகிய சுபகிரகங்கள் தங்களுக்குள் ராசிகளைப் பங்கிட்டுக் கொண்டு நிற்க வேண்டும்.அப்படிப்பட்ட நிலை கிரகங்களுக்குள்,அதிகமாக ஏற்பட ஆழமான, பிரிக்கமுடியாத, கருத்து வேறுபாடு ஏற்படுத்தாத,நீடித்து நிலைக்கும் நட்பாக அமையும் என்பது உறுதி.

No comments:

Post a Comment