Search This Blog

Tuesday 4 September 2012

திருமண நிலைகள் - 4


அமைதியில்லா மணவாழ்க்கை:-

## 6 / 8 / 12 ம் வீடுகளில்,பிந்துக்கள் குறைந்த சுக்கிரன் மீது,செவ்வாய் மற்றும்
   சனியின் தாக்கம் சந்தேகம் நிறைந்த குணத்தைக் கொடுக்கிறது.
## 7 ம் பாவத்தில் செவ்வாய் அல்லது சனி மற்றும் 7 ம் அதிபதி, செவ்வாய்
   அல்லது சனி நவாம்சத்தில் இருக்க, ஒழுக்கங்கெட்ட மனைவி அமைவாள்.
## 7 ம் வீட்டில் 5 அல்லது அதற்கு மேலான பிந்துக்களுடன்,செவ்வாய் அல்லது
   சனியிருக்க மற்றும் 7 ம் அதிபதி செவ்வாய் அல்லது சனி நவாம்சமேறி,அல்லது
   இருவரில் ஒருவரால் பாரக்கப்பட மனைவியின் குணம் சந்தேகத்திற்குட்பட்ட
   தாக இருக்கும்.

மானக்கேடான மனைவி :-

## சுக்கிரன் 4 பிந்துக்களுடன் ராசி அல்லது,நவாம்சத்தில் நீசமாக மற்றும் செவ்வாயும்
   நீசமாக.
## சுக்கிரன்,ராசி அல்லது,நவாம்சத்தில் நீசமாகி, செவ்வாயால் பார்க்கப்பட.

கள்ள உறவு கொள்ளும் மனைவி:-

## சனியின் ராசி அல்லது நவாம்சத்தில் 1  -- 3 பரல்களுடன் சுக்கிரன் இருக்க மற்றும்
   சனியன் ராசியில் செவ்வாய் இருக்க.
## 7 ம் பாவத்தில் அல்லது 12 ம் பாவத்தில் அசுப நவாம்சத்தில் சந்திரன் இருக்க
   மற்றும் அசபர் இணைவுடன்,குறைந்த பரல்களுடன் சுக்கிரன் இருக்க.
## செவ்வாய் அல்லது சனியின் நவாம்சத்தில் 7 ம் அதிபதி இருக்க மற்றும்
   # செவ்வாய் அல்லது சனியால் 7 ம் வீடு பார்க்கப்பட அல்லது
   # செவ்வாய் அல்லது சனியின் ராசியில் 7 ம் அதிபதி இருக்க.
## செவ்வாயின் ராசி அல்லது நவாம்சத்தில் 5 அல்லது அதற்கு மேலான பரல்களுடன்
   சுக்கிரன் இருக்க மற்றும் சுயவீட்டில் செவ்வாயிருக்க,பிறன் மனை நாடும் தீவிர
   பழக்கத்துக்கு அடிமையாவார்.
## ராசி அல்லது நவாம்சத்தில்,சுக்கிரன் 4 அல்லது அதற்கு மேலான பிந்துக்களுடன்
   மற்றும் உச்சநிலை பெற மற்றும் பலம்மிக்க செவ்வாயால் பார்க்கப்பட ஒருவர்
   அதிக காமவேட்கையுடன் திகழ்வார்.
## கேந்திரம் அல்லது திரிகோணத்தில், 4 அல்லது அதற்கு அதிகமான பிந்துக்களுடன்
   சுக்கிரன் இருப்பானாகில், அது அநேக திருமணங்களைக் குறிகாட்டுகிறது.( சீக்கிர
   திருமணத்தையும் குறிகாட்டுகிறது ) சுக்கிரன் பாதிப்படையாத நிலையில் சுகமான
   மற்றும் மகிழ்ச்சிகரமான மணவாழ்க்கை அமைகிறது. செவ்வாயால் பார்க்கப்பட
   திருமணத்திற்கு பதிலாக பல பெண்களோடு தொடர்பு கொள்ளவைக்கிறது
## திரிகோணத்தில்,சுக்கிரன் 8 பிந்துக்களுடன் இருந்தாலும்,2 ம் வீட்டில் பாதிக்கப்பட்டி
   ருக்க திருமணத் தடைகள் ஏற்படுகின்றன.
## செவ்வாயின் நவாம்சத்தில் 5 அல்லது அதற்கு மேற்பட்ட பிந்துக்களையுடைய
   சுக்கிரன் மற்றும் சுயவீட்டில் உள்ள செவ்வாய் அந்த நபர் பெண்.பித்துப்பிடித்த
   வராவார்
## சுக்கிரனின் அஷ்டவர்க்கத்தில், செவ்வாய் 5 அல்லது அதற்கு மேலான பிந்துக்களுடன் 7ம் வீட்டில் இருக்க மற்றும் 5 ம் அதிபதியும்,7 ம் அதிபதியும்
திரிகோண பரிவர்த்தனையாக, ஒருவர் தன் மனைவியைக் கைவிடுவார்.

@@ வாகனங்கள் மற்றும் சொத்துக்கள் :-

## சுக்கிரன் 5 பரல்கள் அல்லது அதற்கு மேலான பரல்களுடனோ, லக்னத்தில்
   அல்லது 10 ம் வீட்டில் இருக்க, ஒன்றுக்கு மேற்பட்ட வாகனங்களைக் கொடுக்கிறது.
## மேஷத்தில் அல்லது விருச்சிகத்தில், சுக்கிரன் 5 பிந்துக்களுக்கு மேலாகப் பெற்று,
   சுபரால் பார்க்கப்பட,வாகனங்கள்,செல்வம் மற்றும் சொத்துக்கள் பெறுவார்
## சுக்கிரனுக்கு இடங்கொடுத்தவன்,கேந்திர அல்லது திரிகோணத்தில், 5 பிந்துக்களுக்கு
   மேல் பெற்றிருக்க,ஜாதகர் சொத்து சுகங்களோடு மிகவும் மகிழ்ச்சிகரமான வாழ்க்கை
   வாழ்வார்
## சுக்கிரனுக்கு இடங்கொடுத்தவன், சுக்கிரனிலிருந்து 6 வது அல்லது 8 வது அல்லது
   திரிகோணத்தில், 5 க்கு மேற்பட்ட பரல்களோடு இருக்க மனைவியைப் பெறுவார்
   மற்றும் ஏழையாவார்.

@@ மனைவிகளின் எண்ணிக்கை :-

## மிகவும் அதிகமாக ( பலம்மிக்க 7 ம் அதிபதி ) மற்றும் மிகவும் குறைவாக (பலமற்ற
   7 ம் அதிபதி ) கீழ்க்கண்டவற்றின் பரல்களின் எண்ணிக்கையைப் பொருத்து
                # சுக்கிரனிலிருந்து 7 ம் பாவாதிபதி
                # சுக்கிரனிலிருந்து 9 ம் பாவாதிபதி
                # லக்னம் அல்லது சந்திரனிலிருந்து 9 ம் பாவாதிபதி
                # சுக்கிரனிலிருந்து 7 ம் அதிபதியின் உச்ச அல்லது நீச ராசி்

VI. வரன் வரும் திசை மற்றும் தூரம்:-

1.        7 ம் வீட்டின், அதிபதியின், மற்றும் சுக்கிரன் ஆகியவற்றின் ராசிகளின் திசை
களிலிருந்து.
2.        மேற்சொன்ன கிரகங்களில் பலம்மிக்க கிரகத்தின் திசையிலிருந்து.
            # 7 ம் பாவத்தில் உள்ள கிரகம்.
            # 7 ம் பாவத்தைப் பார்க்கும் கிரகம்.
            # சந்திரனிலிருந்து 7 ம் அதிபதி
            # சுக்கிரனிலிருந்து 7 ம் அதிபதி.
3.        நிலை மற்றும் பார்வையால் 7 ம் வீட்டை பாதிக்கும் கிரகம் இருக்கும் ராசியின்
திசையிலிருந்து.
4.        கணிதமுறை :-
##  7 ம் அதிபதி மற்றும் சுக்கிரன் பாகைகளைக் கூட்டிவரும் பாகை விழும் திசை.
5.        தூரம் :-
##  ராசியின் இயற்கை குணங்களின் படி ( 7 ம் அதிபதி + சுக்கிரன் )
    # சரராசியெனில் மிகவும் தொலைவான தூரத்திலிருந்தும்
    # ஸ்திரராசியெனில் உள்ளூர் / அருகிலிருந்தும்.
   # உபயராசியெனில் நடுத்தரமான தூரத்திலிருந்து.

VII . மனைவியின் குணம் :-

1.      நல்ல மனைவி :-
# 7 ம் அதிபதி அல்லது சுக்கிரன், குரு அல்லது சுக்கிரனால் பார்க்கப்பட.
# 7 ம் அதிபதியுடன் சுபர் இணைவு / சுப நவாம்சம் கேந்திரத்தில் பெற.
# 7 ம் பாவத்தில் குரு இருக்க.
# 7 ம் அதிபதி 4 ல் அல்லது 10 ல் இருக்க.
# 7 ம் பாவத்தை / அதிபதியை சுபர் பாரக்க.
# கடகம் 7 ம் வீடாகி அதில் செவ்வாய் மற்றும் சனி இருக்க, அழகான மற்றும்
  நன்நடத்தையுடைய மனைவி அமைவாள்.
# 7 ம் அதிபதியாக சூரியன் அல்லது சுக்கிரன் இருந்து சுபரால் பார்க்கப்பட
# பலம்மிக்க 7 ம் அதிபதி குருவோடு இணைய அல்லது பார்க்கப்பட.
# சிம்மம் 7 ம் வீடாகி,சுபரால் பார்க்கப்பட.
# 7 ம் பாவத்தில்,  7 ம் அதிபதியாகி,புதன் உச்சம்பெற.
2.        துஷ்ட மனைவி :-
# 7 ம் பாவத்தில் சூரியன் அல்லது 7 ம் அதிபதியின் நவாம்சாதிபதி அசுபராக.
  அவனுக்கு விருப்பமற்ற மனைவியமைவாள்.
# 7 ம் வீட்டில் சனியிருக்க, அருவருப்பான,நோயுள்ள, தீய வார்த்தைகளைப்
  பேசக்கூடிய மனைவியமைவாள்.
# 7 ம் அதிபதி அல்லது சுக்கிரன், நீச நவாம்சம் பெற.
# சூரியன் அல்லது சந்திரன் 7 ம் அதிபதியாகி,அசுபரால் பாதிப்படைந்து மற்றும்
  அசுபராசியில் அல்லது அசுப நவாம்சம் பெற.

VIII. கணவனின் தன்மை :-

1.      நல்ல கணவன் :-
# 7 ம் வீடு சொந்த வீடாகி அல்லது சுயநவாம்சமாகி,அதில் குரு அல்லது  புதன் 
  அல்லது  சுக்கிரன் அல்லது சந்திரனிருக்க.
# 7 ம் வீடு சுயவிடாகி அல்லது சுயநவாம்சமாகி அதில் செவ்வாயிருக்க, காதல்
  கணவனாகி,ஆனால் கோபமிக்கவனாக அமைகிறான்.
# இரட்டைப்படை ராசியில் சுபரிருக்க மற்றும் 7 ம் வீடு சுபர் தொடர்பு பெற.
# 8 ம் வீட்டில் சனியிருக்க, உண்மையான கணவன் அமைகிறான்.

2.      தீய கணவன் :-

# பலங்குறைந்த 7 ம் வீடு, 7 ல் உள்ள கிரகம் சுபர் பார்வை பெறாதிருக்க,
  தொழிலற்ற கணவன் அமைவான்.
# 7 ம் வீட்டில் புதன் மற்றும் சனி இருக்க ஆண்மையற்ற கணவன் அமைவான்
   # ராசி அல்லது நவாம்சத்தில்,7 ம் வீடு,சுயவீடாகி,சனி அதிலிருக்க,வயது முதிர்ந்த
     மற்றும் முட்டாளான கணவனைக் கொடுக்கிறது.
 # 8 ம் வீட்டில் சனியிருக்க , நோயாளி கணவனைக் குறிகாட்டுகிறது.
 # லக்னத்தில் அல்லது 8 ம் பாவத்தில்,ராகு அல்லதி கேது இருக்க இழிவான
   மற்றும் அசுத்தமான கணவன் அமைகிறான்.
# நவாம்சத்தில்,சரராசியில் 7 ம் வீடு மற்றும் 7 ம் அதிபதி அமைய எப்போதும்
  வீட்டைவிட்டு வெளியில் சுற்றிக்கொண்டிருக்கும் கணவனே அமைகிறான்.
# கும்பமே 7 ம் இடமாகி தன் சுயவீட்டில், எவ்வித சுபர் தொடர்புமற்ற சனி
   வயது முதிர்ந்த கணவனைக் குறிகாட்டுகிறான்.

IX.  எவ்வகையான திருமணம் ?


# காதல் திருமணம் ( முதற் காதல்,பிறகு திருமணம். ) :-
 # மிகச்சிறந்ததாக,5 / 7 / 9 / 10 அல்லது 11 ம் வீடுகளில்,5 ம் அதிபதியும் 7 ம்
  அதிபதியும் இணைவு அல்லது திரிகோண பரிவர்த்தனை அல்லது 3 / 11 தொடர்பு
  ஆகியவை காதற் திருமணத்தை நிறைவேற்றும்.மேற்கண்ட இணைவுகள் 6 / 8 /
  12 ல் விழ காதலர்கள தங்கள் காதலைத் தியாகம் செய்துவிட்டு,பிரிவுக்கு உடபடுத்
  தப்பட்டு,வேறொரு, தெரியாத நபரை மணக்க நேரிடும்.
# காதல் திருமணத்திற்கு, 5 ம் வீடு, சந்திரன்,செவ்வாய், சுக்கிரன் அல்லது ராகுவால்
  பார்க்கப்பட்டு மற்றும் பலமற்ற 9 ம் வீடும் அமைய வேண்டும்.
# 5 ம் வீடு / 5 ம் அதிபதி ,7 ம் வீடு / 7 ம் அதிபதி ராகு / கேதுக்களின் இணைவு
  அல்லது பார்வை பெற .
# 7 ம் அதிபதி 5 ல் இடம்பெற்று, சுக்கிரன் சூரியன், செவ்வாய் அல்லது ராகுவால்
  பாதிப்படைய.
# 5 ம் அதிபதி இருக்குமிடத்தில், ராகு அல்லது கேது உச்சம்பெற.
# குரு அல்லது சுக்கிரனை ,ராகு அல்லது கேது பார்வைபுரிய.
# லக்னத்தில் ராகு இருக்க
# 7 ல் சனி + கேது இருக்க.
# 9 ம் வீட்டில் சுக்கிரன் இருக்க.
# சந்திரன்,லக்னாதிபதி மற்றும் 7 ம் அதிபதி லக்னத்தில் அல்லது 7 ம் இடத்தில்
  இடம்பெற.
# 7 ம் அதிபதியோடு செவ்வாய் லக்னத்திலிருக்க / 7 ம் வீட்டிலிருக்க அல்லது 5 ம்
  அதிபதியோடு 5 ம் வீட்டிலிருக்க.
# சுக்கிரன்,லக்னாதிபதியோடு லக்னத்தில் அல்லது 7 ம் வீட்டில்,7 ம் அதிபதியோடு
  இருக்க.
# 7 ம் அதிபதியோடு, லக்னாதிபதி பரிவர்த்தனையாக.
# 7 ம் அதிபதி 7 ம் வீட்டிலிருக்க.
# 5 ம் அதிபதியோடு அல்லது 9 ம் அதிபதியோடு லக்னாதிபதி பரிவர்த்தனையாக /
  பார்க்க அல்லது இணைய.
# 5 ம் அதிபதி 9 ம் அதிபதியோடு இணைய அல்லது 7 ம் அதிபதி 9 ம் அதிபதியோடு
  இணைய.
# 5 ம் வீட்டிலோ,அல்லது 9 ம் வீட்டிலோ செவ்வாய் இருக்க மற்றும் 7 ம் அதிபதி
  யோடு 11 ம் அதிபதி பரிவர்த்தனை பெற.
# லக்னத்திலிருந்து அல்லது சந்திரனிலிருந்து 5 ம் இடத்தில் சுக்கிரனிருக்க.
# லக்னாதிபதியைவிட, 8 ம் அதிபதி பலம்பெற்றவராகயிருக்க மற்றும் 9 ம் வீடும்,
  குருவும் பாதிப்படைய, கீழ் சாதிப் பெண்ணுடன் திருமணம் நடக்கும்.

# #  வெற்றிகரமான காதல் திருமணம்:-
 
# ராசி மற்றும் நவாம்சக் கட்டங்களிலும், செவ்வாயும்,சுக்கிரனும் பரிவர்த்தனை 
  பெற.
# கட்டங்களில்,ஆணின் செவ்வாயும், பெண்ணின் சுக்கிரனும், இணைய அல்லது
  பார்க்க. இதுவே மாறி வர.
# ஆணின் குரு, பெண்ணின் சுக்கிர ராசியிலிருக்க.

##  வெற்றிபெறாத காதல் திருமணம் :-

   # ஆணின் ராகு, பெண்ணின் சுக்கிர ராசியில் அல்லது மாறிவர விவாகரத்து
     அல்லது தொடரும் துன்பம்.
   # ஆணின் சுக்கிரன், பெண்ணின் சனியின் ராசியில் அல்லது மாறிவர.நீண்டு
     கொண்டேயிருக்கும் கவலைகள் மற்றும் கஷ்டங்கள்.
   # ஆணின் சுக்கிரன்,பெண்ணின் ராகுவின் ராசியில் ஆணின் மூர்க்கத்தனமான
     காம வெறியால் விவாகரத்து ஏற்படலாம்.
   # ஆணின் சுக்கிரன், பெண்ணின் சூரிய ராசியில் விவாகரத்து அல்லது பிரிவினை.
   #  பெண்ணின் செவ்வாய், ஆணின் ராகு ராசியில் பெண்ணின் மூர்க்கத்தனமான
     காம வெறியால் விவாகரத்து ஏற்படலாம்.

2        ஜாதிவிட்டு ஜாதி மாறி திருமணம் :-

 # லக்னாதிபதி 7 ம் பாவத்திலிருந்து, சனியால்பார்க்கப்பட.
 # 9 ம் அதிபதி குருவாகி, சனி மற்றும் ராகு அல்லது கேதுவால் குரு, 7 ம் வீடு,
   9 ம் வீடு அனைத்தும் பாதிக்கப்பட.
 # புதன் பாகை + 7 ம் அதிபதி பாகையின் கூட்டுப் பாகை, சனி, ராகுவால் பாதிக்கப்
   பட.
 # சுக்கிரன் பாகை + 7 ம் அதிபதி பாகை + 9 ம் அதிபதி பாகையின் கூட்டுப்பாகை,
   சனி மற்றும் ராகுவால் பாதிக்கப்பட.
 # 2 ம் பாவம் பாதிக்கப்பட, சுக்கிரன்,சனியோடு அல்லது ராகு மற்றும் லக்னத்தோடு
   தொடர்புற,சந்திரன் மற்றும் சுக்கிரன் 7 ம் பாவதிபதியோடு தொடர்பு கொள்ள
 # காதலுக்கான இணைவுகள்,ஜாதிமாறித் திருமண இணைவுகள் 6 / 8 / 12 ல ஏற்பட
   அல்லது  ஒருவரின் சுக்கிரன் மற்றவரின் சனியின் ராசியில்,ராகு, சூரியராசியில்
   விழ.

X   மறுமணம் :-
  
    # இறப்பு மற்றும் விவாகரத்துக்குப் பிறகு மறுமணம் நியாயமாக கருதப்படுகிறது.
      பொதுவாக,மனைவிகளின் எண்ணிக்கை, 7 ம் அதிபதியின் நவாம்ச எண்ணிக்கை
      அல்லது 7 ம் அதிபதியை பார்க்கும் கிரகங்களின் எண்ணிக்கையைப் பொருத்து
  அமைகிறது. குறிப்பிட்ட யோகங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:-

No comments:

Post a Comment