Search This Blog

Friday 7 September 2012

இரு கிரக இணைவு பலன்கள்.


இணைந்த கிரக யோக பலன்கள்
லக்னத்தில்
இரு கிரக கூட்டு
(துவி கிரக யோகம்)
1.         சூரியன்,சந்திரன்-ஜாதகருக்கு அதிக குழந்தைகள் உண்டு.பெற்றோருக்கு துக்கமும்,மனகஷ்டமும் உண்டு
2.         .சூரி-செவ்---பொல்லாதவர்,எப்போதும் அலைச்சலுடையவர்,கெட்டபுத்தியுடையவர்,தந்தை துக்கமுடையவர்.
3.         சூரி புத தீயவர், பாவ புத்தியுடையவர், ஒழுக்கமில்லாதவர், உற்றார் உறவினரால் கைவிடப்பட்டவர்,ஆரோக்கியமற்றவர்,வாகன யோகமில்லாதவர்
4.         சூரிகுரு = கோபமுடையவர்,மந்தபுத்தியுடையவர்,உடல் நலமில்லாதவர்,முட்டாள், செய் நன்றி மறப்பவர், திருடர்,வெறுப்புடையவர்.
5.         .சூரி சுக் = பண்டிதர்களை வெறுப்பவர், குறைவான குழந்தைகளையுடையவர்,கோபமுள்ளவர்,கொடூரமானவர்,ஆசையில்லாதவர், அன்னியரது கஷ்டத்தையுடையவர், நோயாளி.
6.         சூரி சனி = முட்டாள், வியாதியுடையவர்,சுற்றத்தால் கைவிடப்பட்டவர்,கெட்ட குணமுள்ளவர்.
7.         சந் செவ் = தீய குணமுடையவர், செல்வமில்லாதவர், வாக்கில் சமர்த்தர், நற்குணமற்றவர்.
8.         சந் புத = நல் வாக்கு உடையவர்,செல்வந்தர், கம்பீரமானவர்,கருணையுடையவர்,வணங்கத்தக்கவர்,ஆயினும் பிற பெண்கள்பால் நாட்டமுடையவர்.
9.         சந் குரு = அழகுடையவர், நீண்ட ஆயுளுடையவர்,நற்புகழுடையவர்,நற்கண்களுடையவர்,நல்ல தலைமயிருடையவர்
10.     சந் சுக் =நல்ல விஷயங்களில் ஆசையுடையவர்,அழகிய முகமுடையவர்,பணமுடையவர், அரச பிரியமுடையவர்,தர்மவான்
11.     சந் சனி = தீயவழிகளில் செல்வம் சேர்ப்பவர், அற்ப குணமுடையவர்,மற்றவர் பணத்திற்கு ஆசைப்படுபவர்,தீயவர்களிடம் தோல்வியடைபவர்.
12.     செவ்வாய் புதன் = பிறரிடம் ஏமாறுபவர், வார்த்தை ஜாலமுடையவர்,எப்போதும் வசிப்பதில் ஆசையுடையவர்,தீய எண்ணமுடையவர்.
13.     செவ்வாய் குரு = கடின சுபாவமுடையவர்,,குறைவான குழந்தைகளுடையவர், தீயன செய்வதில் ஆசையுடையவர்,பிறருக்கு மகிழ்ச்சியளிப்பவர்.
14.     செவ் சுக் = கபமும்,வீணான சிரமும் உடையவர்,ஏமாறுபவர், செய்நன்றி மறந்தவர்,வீரமுள்ள மகனுடையவர், தோல்வியடைபவர்.
15.     செவ் சனி = கொடுமை செய்வதிலும்,கடுமையாக பேசுவதிலும் வல்லவர்,பிறர் பொருளை அபகரிப்பவர்,அதிகமாக கோபமடைபவர்.
16.     புத குரு = வணங்கற்கினியவர்,அழகானவர், சகல சௌபாக்கியமுடையவர், வசீகரிக்க வல்லவர், மிகுந்த செல்வமுடையவர்.
17.     புத சுக் = இராஜ காரியங்களில் சமர்த்தர், அரசரால் கொண்டாடப்படுபவர்,அநேக சாத்திரங்களில் ஆவலுடையவர்,செல்வமுடையவர்,உண்மையானவர்.
18.     புத சனி= அரச வேலைகளில் சமர்த்தர்,தீயவர்,ஒழுக்கமற்ற மனைவியோடு வாழ்பவர், பணமில்லாதவர், மக்களால் வெறுக்கப்பட்டவர்.
19.     குரு சுக் =அரசனுக்கு விருப்பமுடையவர்,அதிக பணத்தாசை பிடித்தவர்,நீதியறிந்தவர்,தனமுடையவர்,சாத்திர மறிந்தவர்.
20.     குரு சனி =அதிக பணமுள்ளவர்,வித்தியாசமானவர்,மாயையில்லாதவர்,கடினமான மனதுடையவர்,ஆபத்துகளையுடையவர், சத்தியமற்றவர்.
21.     சுக் சனி =புத்தியில்லாதவர்,செய்நன்றி மறந்தவர்,பிறன் மனை நாட்டமுடையவர், எப்போதும் சற்றத்தாரிடம் அன்புடையவர்.

      

No comments:

Post a Comment