Search This Blog

Wednesday 31 October 2012

ரிஷபராசியின் குண இயல்புகள்

ரிஷபராசியின் குண இயல்புகள்





 காலபுருஷ தத்துவப்படி இரண்டாவது ராசியான, ரிஷபராசியின் பாகையளவு 30˚ முதல் 60˚ வரையாகும். இதன் அதிபதி, அசுரகுரு எனப்படும் சுக்கிரனேயாவார். இது ஒரு பெண் ராசி – பூமி தத்துவ ராசி – ஸ்திர ராசி யாகும்.இந்த ராசி, தெற்கு திசையையும், ரஜோ குணத்தையும், உடற்பகுதியிற் கழுத்தையும் குறிக்கிறது. சந்திரன் இந்த ராசியில் உச்சமாகிறார். யுரேனஸ் நீசமடைகிறார். ரிஷப ராசியிற் பிறந்தவர்கள், நல்ல ஆளுமையும், கவர்ச்சியும், உடையவர்கள்.உணர்ச்சி மிக்கவர்கள்,தங்கள் சொந்த பந்தங்களிடமும் ,நண்பர்களிடமும் மிகுந்த ஈடுபாடு உடையவர்கள். படோடாபம் மிக்க பழக்க வழக்கங்களை யுடையவர்கள், அன்புமிக்கவர்களாகவும், எதையும் யோசிக்காமல்,திடீரெனச் செய்பவர்களாகவும்,கர்வமிக்கவர்களாகவும்,புகழை விரும்புபவர்களாகவும் இருப்பர்.துணைவரிண் உடல்நலத்தின் காரணமாகக் கவலை கொள்ளும் நிலையுள்ளவர்கள்.இசையும், மந்திரப் பிரயோகங்களும் இந்த ராசிக்கார்களுக்கே உரியதாகும். வெகுதூரப் பயணங்கள் மேற்கொள்வர்.வியாபார நுணுக்கங்களும்,அனுபவ அறிவும் அதிகமுடையவர்கள். நடுத்தர உயரமும்,அகன்ற நெற்றியும்,ஒளிரும் கண்களும்,தடித்த கழுத்தும், கரிய கேசங்களும், நல்ல கட்டமைப்புள்ள உடல்வாகும் உடையவர்கள். காமத்தில் ஆர்வமும்,எப்போதும் இன்பத்தை விரும்புவர்களாகவும்,அதிக அளவு ஆசையும் கொண்டவராகவும் இருப்பர். இவர்கள் நேர்மையானவர்கள், நம்பத்தகுந்தவர்கள், பிறரிடம் பிரியம் மிக்கவர்கள், மெதுவாகப் பணிகளைச் செய்பவர்களாக இருந்தாலும், அவற்றை திறம்பட, நேர்த்தியாகச் செய்து விடுவார்கள்.கடின உழைப்பாளிகள் ஆயினும், வேலையில் குறைகூறினால், ரோஷப்பட்டு பணியை முடக்கிவிடுவர். எதையும் சிந்தித்து செயல்படக்கூடியவர்கள். கலை,இலக்கியம்,இசை, இயற்கையழகு ஆகியவற்றில் விருப்பமுடையவர்கள். ஓய்வையும்,சுகத்தையும் அதிகம் விரும்புபவர்கள். எதிர் பாலினத்தின் மீதான ஆர்வம் காரணமாக,அதிக காதல் விவகாரங்களைக் கொண்டவர்களாக விளங்குவர். நல்ல ஆரோக்கியமான மேனியுடையவர்கள். தலைக்கனம் மிக்கவர்களாக இருப்பினும், புன்னகை தவழும் முகமுடைய இவர்களின், ஆலோசனைகள், ஏற்றுக்கொள்ளத் தக்கதாக இருக்கும். என் வழி தனி வழியென,தனெக்கெனத் தனி கொள்கைகளும்,வழிமுறைகளும் உடையவர்கள்.உள்ளுணர்வு மிக்கவர்கள். அதிகாரம் செய்யவே,தாங்கள் பிறந்த்தாக எண்ணங்கொண்ட இவர்கள்,மற்றவர்களை அடக்கியாள்வதை விரும்புவதோடு, எப்போதும் தாங்கள் செய்வதே சரியென நினைப்பவர்கள். கோபம் வராது,வந்தால் ரிஷபமெனும் காளையைப்போல்,முட்டித் தள்ளிவிடுவர். பணத்தின் அருமையறிந்தவர்கள். பணத்தைச் சேமிக்கும் பழக்கமுடையவர்களாதலால்,அனாவசியச் செலவுகளை தவிர்ப்பவர்கள்.சூதாட்டப் பழக்க முடையவர்கள்.புதன் திசையில்,அதில் ஆதாயம்பெற வாய்ப்புண்டு. இவர்கள், பிரச்சனைகளில் தாங்களாகவே மாட்டிக் கொள்ளக் கூடியவர்கள்.மற்றவர்களின் முகஸ்துதியில் மயங்காத வண்ணம்,அவற்றை தவிர்த்து,முன்ஜாக்கிரதையாக ஒதுங்கிவிடுவது இவர்களுக்கு நல்லது.இவர்களுக்கு எளிதில் பாதிப்படையக்கூடிய உறுப்புகள் தொண்டை, இதயம், மற்றும் சிறுநீரகம் ஆகும். இவர்களின் மணவாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக இருக்கும். இந்த ராசி ஆண்களுக்கு,அழகிய மனையாளும்,பெண்களுக்கு அன்புமிக்க மணாளனும் அமைவது உறுதி. கஷ்டங்களும், துன்பங்களும் மிகுந்த வாழ்க்கையமைந்தாலும்,எந்த சூழ்நிலையிலும் ,ஒருவரையொருவர் விட்டுக்கொடுக்காமல் வாழ்வர். ஒருவருக்கொருவர் அன்பு மழை பொழிந்து,அன்யோன்யமாகவும் வாழ்வர். பெண்கள் சிறந்த மனைவியாகவும்,தாயாகவும் விளங்குவர். தங்கள் இல்லத்தைச் சிறப்பாகப் பராமரிப்பதிலும், குழந்தைகளைச் சிறப்பாக பேணிக் காப்பதிலும் வல்லவர்கள். ரிஷப ராசிக்காரர்கள்,ஆடம்பரப் பொருட்கள்,காஸ்மெடிக்ஸ்,வாசனைப் பொருட்கள்,வாசனைத் திரவியங்கள்,தங்க ஆபரணங்கள்,நவரத்தினங்கள் ஆகிய வியாபாரங்களில் ஈடுபடலாம். மேலும்,பைனான்ஸ் சம்பந்தமானவை,விவசாயம், இசை,சினிமா,நடிப்பு,சினிமா தயாரிப்பு,வாகனப் போக்குவரத்து போன்ற தொழில்களில் ஈடுபடாலாம். கார்மண்ட்ஸ்,பியூட்டி பார்லர்,லேடீஸ் கிளப்,அழகு சாதனப் பொருட்கள் விற்பனை போன்றவற்றில் ஈடுபட்டால் லாபம் ஈட்டலாம். அதிர்ஷ்ட எண்கள் – 2 மற்றும் 8.கவர்ச்சி எண்கள் -7 மற்றும் 9 ஆகும். ஒத்துவராத எண்கள் 5 ஆகும். அனுகூலமற்ற எண்கள் 1,3,4 மற்றும் 6 ஆகும். அனுகூலமான கிழமைகள் – வெள்ளி,புதன்,சனி மற்றும் திங்களும்,கூட்டாளிகள் மூலம் லாபம் அளிப்பது வியாழனும், அனாவசியச் செலவுகள் அளிப்பது செவ்வாயும், வீட்டில் நல்ல ஓய்வு அளிப்பது ஞாயிற்றுக் கிழமையுமாகும்..வெண்மை,பிங்க் மற்றும் பச்சை ஆகிய வண்ணங்கள் மிகவும் பொருத்தமானவையாகும். கடவுளை வணங்கி, தங்கத்திலோ அல்லது பிளாட்டினத்திலோ பதித்த,வைரம் அல்லது எமரால்டு மோதிரத்தை,வலது கை 3 வது விரலில் அணிவது உத்தமம். புதன்,சூரியன், சனி மற்றும் ராகு தசாக் காலங்கள் நல்லதைத்தரும். குரு,சுக்கிரன் மற்றும் கேது தசாக் காலங்கள் தீமைகளைத் தருவனவாகும். சனி, இந்த ராசிக் காரர் களுக்கு உபகாரியாவார்.

Monday 29 October 2012

TAURUS / VRISHABA

TAURUS / VRISHABA The second sign of the Zodiac, is from 30 ˚to 60 ˚. Vrishaba rasi is an earthy, fixed, female, moist, semi fruitful, of short ascension denotes south direction and rajo guna. It indicates neck. Lord of this house is Venus. Here Moon gets exalted, Mars detriment and Uranus is debilitated. The symbol of this sign is the Bull. Vrishaba rasi native will have good appearance and dynamic personality. They are most emotional, have great attachment towards friends and relatives. very luxurious, amorous, impulsive and proud. They are carried away by praise. Health of the better half will cause anxious moments. Long journeys, music, manthras , are associated with Taurus. They have practical business abilities and to be careful to avoid self indulgence and recognize flattery, The ideas of this rasi is, earthy sign – activities related to earth and material things, the bull –two supreme virtue on earth, agriculture and milk ,virtuous labour, slow activities, pleasure loving and sensual. The natives of this rasi are short to middle, broad forehead, plumpy, bright eyes, thick and stout neck, dark hairs, clear complexion, well developed body, ambitious, obstinate. preserving, constant, conservative determined , social, affectionate and loving but can also be very unreasonable, prejudiced, when angry will not stop at anything. Slow and steady worker. They are enduring , very patient, violent and unrelenting, strong will, domestic and determined. Anything done is well done and thought beforehand. A hard worker, when opposed, they become stubborn and unyielding. Usually secretive and reserved, sincere, reliable and trustworthy. They are fond of pleasure and love, natural beauty, art, music and literature. Sympathetic having a magnetic quality. They have the ability to earn and good for executive jobs.They become worldly and a pleasurable life. Fond of ease, comfort, opposite sex and will have many love affairs. Ever smiling but highly diplomatic, can depend on their opinion. They posses normally robust and super-human health, less sensitive pains, suffer from over abundance of life, will never admit physical disability. If they fall ill ,recovery is slow, as their recuperative power is unsatisfactory. They have the habit of saving money and never squander unnecessarily. They may have gambling nature and will gain during Mercury period. Patience and perseverance is the basic nature. Of materialistic mind, will get money from others. Practical and rise gradually, they do not take chances, absolutely not extravagant but save always and do not risk money. They know the value of money and never waste. As Venus is lord of Taurus, indicates love affairs, taste in music, art , cinema and drama etc. They are loyal and sincere in love to the one whom they like even though there may be opposition and upsetting conditions. They should have a self control. They are not impulsive in love, and take a long time in selecting partner in life. Faithful in love with deep emotions, do not like quarrels and hate confusion. They respond well to kind treatment and are flattered by luxury. They will always fulfil their social and financial obligations. Vrishaba men will have loving wives and ladies devoted husbands. They will tolerate the sufferings, and miseries in their married life and never desert the beloved partner and under any circumstances, they will shelter the partner,well looked after, attended upon, cared for and protected at all times. Taurus ladies are good wives and mothers, reserved and calm in nature.They doubt their husband’s love and make no secret of their love. They take care of their home and are good dutiful parents for children being strict and tyrannical to them with good intentions Taurus husbands are devoted to their wives and adore them,reliable,generous and faithful. They never neglect the house and needs of the partner. They like to see their wife, always well dressed, attractive and pleasing, and love them extensively. Their life will be good and prosperous. They have comfort ,rest and peace at home. An orderly and decorated home, a tidy and good maintenance of house and furniture etc. peace, pleasure, property,prosperity, popularity and position means much to them. They like to trade in luxury goods,cosmetics,scents,jewels and gems etc. Any business connected finance. Agriculture, music, pleasure resorts, cinema, actors, film producers etc. transport business, I.T . department, ladies clubs and schools, fashion and beauty parlours etc. Dealer in ladies garments and beauty items will be a source of success. Lucky numbers are 2 & 8. Attractive to them are 7 & 9,passive numbers are 1,3,4,& 6 where number 5 will disagree. Favourable days – Friday, Wednesday, Saturday, and Monday .Thursday indicates gain through partner. Tuesday denotes extravagant expenses. Sunday should be a day of rest. day of fast is Friday .The best suited colours are Pink, Green and White. Avoid use of red colour. Lucky stones are Diamond, Sapphire and Emerald in gold or platinum which be worn in third finger of right hand on Friday morning after performing prayers. If the lord of the Taurus, Venus is debilitated or unfavourable, one should use white coral or white sapphire to mitigate the evil effects.

Wednesday 24 October 2012

இராசிகளின் குண இயல்புகள்


                                                           இராசிகளின் குண இயல்புகள்




     ஒரு கிரகம்,ஒருராசியில் இருக்கும்போது அதன் குணாதிசயங்களைப் பொறுத்து பலன்கள் மாறுபடுகின்றன. அந்த ராசியாதிபதியே,அந்த ராசியில் அமர்ந்தால் அந்த ராசியின் பலனிகளில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது.ஒரு அசுபகிரகம் லக்னத்தில் இடம்பெற்றாலோ, அவரின் பார்வை பெற்றாலோ,அந்த கிரகங்களின் கெடுதலான குணங்களின் அடிப்படையில்,கெடுதலான  பலன் களைத் தருகிறது.அதுவே,சுபக் கிரகமாகயிருப்பின்,கெடுதல்களைக் குறைத்து,நல்ல பலன்களை அதிகரிக்கிறது. ஜாதகங்களை ஆராய வேண்டிய அடிப்படையில்,ஒவ்வொரு ராசியைப்பற்றியும் இந்தப் பகுதியில்,கருத்துப்பரிமாற்றங்களை,விரிவாக அலசுவோம். ராசி மண்டலம்,12 ராசிகளாக அல்லது வீடுகளாகப்  பிரிக்கப்பட்டுள்ளன.  சந்திரனின்  நிலை ஜன்மராசி என அழைக்கப்படு கிறது.உதாரணமாக, மேஷராசியில் சந்திரன் இருந்தால், அதுவே ஜன்மராசியாகும். இந்திய முறையிற் கூறப்படும் ஜன்மராசி முறைகளினின்று, மேலைநாட்டு ஜோதிடமுறையில் கூறப்படும், ஜன்ம ராசிமுறையானது மாறுபட்டது என்பதை நாம் நினைவிற் கொள்ளவேண்டும்.மேலைநாட்டு முறையில்,சூரியன் இருக்கும் நிலையே ஜன்மராசியாக எடுத்துக்கொள்ளப் படுகிறது. மனித வாழ்க்கையானது 9 கிரகங்களாலும் மாறி,மாறி / சுழற்சி முறையில், இந்திய ஜோதிடத்தில் உள்ள தசா முறைகளின்படி, ஆட்சி செய்யப்படுகின்றன. இந்த தசா காலத்தரன் உட்பிரிவே புத்தி காலம் என பிரிக்கப்பட்டுள்ளது.

மேஷராசியின் குண இயல்புகள்

 


     காலபுருஷ தத்துவத்தின் முதல் ராசியான மேஷராசி. முதல் 30˚ யைக் கொண்டுள்ளது. இது ஒரு நெருப்புத் தன்மையுடைய, சர ராசி, ஆண்ராசி,ஒற்றைப் படை ராசியாகும். செவ்வாயின் ஆட்சிக்குட்பட்ட,இந்த ராசி மனித உறுப்புகளில் தலையையும், முகத்தையும் குறிக்கிறது. இந்த ராசியில் சூரியன் உச்சமும்,சனி நீசமுமடைகிறது.ஆட்டின் அடையாளங் கொண்டது மேஷராசி. மேஷராசியில் ஜனன மானவர்கள், அதிக ஆசையுடை யவர்களாகவும், உடல்வலு அதிகமுள்ள வர்களாகவும் இருப்பர். எந்தவொரு கஷ்டத்தையும், சவாலையும் எதிர்கொள்ளும் மனோ தைரி யமும்,உடல் சக்தியும் உடையவர்கள்.நெஞ்சுரமும், தற்பெருமையும் மிக்கவர்கள். மற்ற வரை   அடக்கியாள்வதில்  மிக்க மகிழ்ச்சியடைபவர்கள்.சின்ன விஷயத்தையும்,பெரிதாக்கி, பிரச்சனை யாக்கும் அற்பகுணமுடையவர்கள்.குறுகிய கண்ணோட்டங் கொண்டவர்கள். வெகு விரைவில் பொறுமையிழந்து,சினங்  கொள்ளும் குணமு டை யவர்கள்.தங்கள் சுயநலத்திற்காகஉண்மைக்குப் புறம்பாக பேசுபவர்கள். கர்வம் மிக்கவர்கள் மற்றும் சுயகட்டுப்பாடற்றவர்கள். இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு சந்திரன்,  சனி, புதன்,ராகு,கேது ஆகிய கிரகங்களின் தசா காலங்கள் மிக மோச மான விளைவுகளைத் தருவனவாகும்.
     இந்த ராசியிற் பிறந்தவர்கள், முரட்டுத்தனமுடையவர்கள், சண்டைக்கார்ர்கள். மெலிந்த உடலும்,  திடகாத்திரமான   உடலமைப்பும் கொண்டவர்கள்.  நீண்ட முகமும்,கழுத்தும் உடைய வர்கள்.அகன்ற நெற்றியும்,குறுகிய நாடியும் உடையவர்கள்.மச்சமோ, காயத்தழும்போ தலைப் பகுதியில் இருக்கும்.  அடர்ந்த புருவமும்,கடினமான மயிரும் உடையவர்கள்.சிலருக்குத் தலை வழுக்கையாகவும் இருக்கும்.சுறுசுறுப்பானவர்கள்,சாதாரணமானவர்கள் மற்றும் எதையும் மனதில் வைத்துக்கொள்ளாமல் பட்டெனப் பேசுபவர்கள்,நிர்வாகத்திறனும் மற்றவர்களை கட்டுக்குள் வைக்கும் மேலாண்மைத் திறனுமுடையவர்கள். திட்டங்களை வகுப்பதில் திறமையற்றவர்களாக இருப்பினும்,   மற்றவர்களை வழிநடத்துவதிலும்,கட்டுப்பாட்டில் வைப்பதிலும் வல்லவர்கள். திடீரென முடிவுகளை எடுப்பதிலும், உடனடி நடவடிக்கைகளை முடுக்கிவிடுவதிலும், அதன் மூலமாக   முன்னேற்றத்திற்கு  வழிவகுப்பதிலும் திறமைசாலிகள். சுதந்திர எண்ண முடையவர் கள், வீரமுடையவர்கள் மற்றும் வீண் செலவுகள் அதிகம் செய்பவர்கள். இவர்களின் வாழ்க்கை கஷ்டங்கள் நிறைந்ததாகவும்,  அதிர்ஷ்டங்கள் மாறி,மாறி வருவனவாகும். அரசியலிலும்,மத விஷயங்களிலும் ஆர்வமுடையவர்கள். அடிக்கடி பயணம் மேற்கொள்வர். அவநம்பிக்கையுள்ள,விருப்பமில்லாத குடும்ப உறவுகளும்,அவர்களின் ஆதரவுமற்றிருப்பார். ஒரு சில குழந்தைகள் உடையவராகவும்,அடிக்கடி வீட்டை மாற்றிக் கொண்டிருப்பவராகவும் இருப்பார். மிக்க அவசரத்துடன்,இளம் வயதிலேயே திருமணம் செய்து கொள்வர். வாழ்க்கையில் வழக்கு விவகாரங்கள் ஏற்பட வாய்ப்புண்டு.   சூழ்நிலைக் கைதியாக வெளிநாட்டில் வாழ வேண்டிய சூழல் உருவாகும்.  பொதுவாக மேஷ ராசிக்காரர்கள் நல்லாரோக்கியமுடையவர்கள்.நோய் எதிர்ப்பு சக்தி அதிக முடையவர்கள்.இவர்களின் தலைப்பகுதியில்,சிறு காயங்களும், தீவிர விபத்தால் பலத்த அடிகளும் ஏற்படுமாதலால்,வாகனங்களை முரட்டுத்தனமாக ஓட்டுவதை தவிர்க்க வேண்டும்.
     இவர்கள் நன்கு தூங்கி, கூடுமான அளவு ஓய்வெடுத்தல் நலம்.  பச்சைக் காய்கறிகளும்,  நல்லுணவும் அதிகம் உண்ணவேண்டும்.  தங்கள் உணர்வுகளைக் கட்டுப்படுத்தி,கவலைகளை, கோபங்களைத் தவிர்த்து அமைதியாக வாழ முயலவேண்டும்.   அசைவ உணவுகளைத் தவிர்த்தல் வேண்டும்.இவர்கள் அதிக ஆசைகளுடையவர்களாக இருப்பினும்,அந்த அளவுக்கு செல்வ நிலை உயர வாய்ப்பில்லை.  இவர் வெட்டிச் செலவுகளை  தவிர்த்தல்  நலம். ஆத்திரம்   மிக்க நடவடிக்கைகளாலும், முட்டாள்த்தனமான மூலதனங்களாலும்,  இவர்கள் பணத்தையிழக்க வாய்புண்டு. எந்த ஒரு நடவடிக்கையிலும், அவசரப்படாமல்,நிதானமாக செயல்படுவது இவர்களுக்கு நல்லது.
     மேஷராசிக்காரர்களின், உண்மையான காதலும், நல்ல மனமும், கவர்ச்சியும் எதிர் பாலரை கவரும். மற்றவர்களை   அடக்கியாளும் தன்மையைக் குறைத்துக் கொண்டால்,இலர்களின் வாழக்கையில் இன்பம் பெருகும். அத்துடன் தங்கள் உணர்வுகளைக் கட்டுப்படுத்தி, பொறுமையுடன் செயல்படுவது இவர்களுக்கு நல்லது. மேஷப்பெண்கள் புத்திசாலிகளாகவும், நகைச்சுவை யுணர்வுடையவர்களாகவும் இருப்பர். மேலும் சுதந்திர வுணர்வும்,கர்வமும்,பொறாமை குணமும், உடையவர்கள்.தங்கள் குடும்பம், சுற்றுச்சூழல், தோற்றம் ஆகியவற்றைப் பற்றி தற்பெருமை யடிப்பவர்களாக இருப்பினும், விருந்து உபசரிப்பதில் சிறப்பானவர்கள். இவர்கள்  தங்கள்  கணவர்கள்  தங்களை நன்கு, அன்போடு கவனித்துக் கொள்ளவேண்டும் என்றும்,மற்ற பெண்களை தங்கள் முன் புகழக்கூடாது என்றும் எதிர்பார்ப்பார்கள்.  இவர்கள் தங்கள் கணவனை அடக்கியாள்பவர்களாக இருப்பார்கள்..மோகமும்,முரட்டுத்தனமும் இவர்கள் உடன் பிறந்தது. பொறுமை யும்,  தந்திரமும் இருந்தால் இவர்களைக் கட்டுப் பாட்டில் வைக்கலாம்.
     இவர்கள் சுத்தமான,அழகான வீட்டையுடையவர்கள்.வீட்டையும்.குடும்பத்தையும் மிகவும் நேசிப்பவர்கள். அதிகமான நண்பர்களைப் பெற்றிருப்பதே இவர்களின் பலவீனமாகும்.
     அதிர்ஷ்ட நாட்கள் – செவ்வாய்,சனி மற்றும் வெள்ளிக் கிழமைகள். அதிர்ஷ்ட எண்கள் – 1 மற்றும் 9 ,நட்பு எண்—2,3,5, பகை எண்கள் – 6,7 , ஈர்க்கும் எண்கள் – 4 மற்றும் 8 ஆகும்.
     அதிர்ஷ்ட நிறம் – சிகப்பு,மஞ்சள்,செம்பு நிறம் மற்றும் தங்க நிறம் ஆகும். அதிர்ஷ்ட ரத்தினங்கள் – செம்பவளம். செவ்வாய் பலமிழந்து காணப்பட்டால் – தாமிரம் அல்லது வெள்ளியில்   
     பதித்த செம்பவளம்,ரூபி அல்லது முத்து அணியலாம்

Tuesday 23 October 2012

MESHA RASI




MESHA RASI



2
      When a planet sits in a Rasi,the results are modified according to
its characteristics. If the Rasiyathipathi / Lord of the signis posited in it will manifest the results.Malefic planets occupying ascendant aspects on the planets change nature, brings out latent bad qualities into action.
A benefic in ascendant mitigate evils and enhances the good effects. The signs are discussed  in  detail  as t hese  from  the basis of analysis of horoscopes.
                      MESHA RASI or ARIES
   This first sign is from 0˚to 30 ˚.Fiery by nature, sterile , movable, masculine and is  of  short  ascension.  Head  and face of the body are represented by this rasi,  ruled  by  Mars.  Surya is exalted and sani debilitated. Its symbol  is  two  rams striking each other. main idea in this Rasi   essentially  is  action,  rash  nature,  combative, lascivious, springy and hardy. Spirit of fighting and defending, to face resistance from within  due  to  thamo   guna. Compete, rival, cope with another, contend, struggle for or against are the basic ideas also.
     Natives  born  in  the  sign of Aries, have lean and muscular body, middle stature,  neither  thick  nor stou rudy complexion, long face and neck,  broad  head  and  narrow  at  the chin. Mark or scar on the fore head, bushy eyebrow, rough or  wiry hair varying in colour from dark to sandy, sometimes going bald. Eyes grey to grayish brown. They will be ambitious,     activity,  courage,  energy,  impulsiveness  and   lover of independence.  Aries  born  persons are ambitious, rash and aggressive. They are of simple,  frank  and  of outspoken nature, well disposed and capable  of  holding  command  in  executive   positions.   They have no organizing  capacity  but  can  guide  and   control   others.   They are independent, brave , venturesome  generous, to some extent extravagance. Also  well  informed,  ingenious  zealous,  dogmatic  in  their opinions, remarkable for sudden changes  and  quick  actions and have progressive tendency. Life will be full of struggle and fortune is variable. Ardent in politics  and  religion.  Travelling  in   life  is imminent. Relatives are unfavourable,  and  the  family  ties  are sometimed  strained, frequent changes in residence,  having  a  few children. They marry early and in hurry. There  will be no darth of enemies, but will be conquerer of them. They will  succeed  best  in  vocations   requiring quick action, decision, executive or mechanical ability and responsibility.
       Arians,  generally enjoy good health and have power of resistance to the diseases. They are prone to minor injuries and serious and serious accidents  particularly  to the head. So they should avoid rash driving. They are liable to suffer from headaches, burns, inflammatory diseases, brain affliction, collie pains,  high fever, pimples, paralysis, insomnia and small pox etc.
      They should take plenty of rest and sleep. Green vegetables and good food is must for them. They should relax, control their feelings, avoid worry,  excitement  and  anger.  They  are not meant for amazing wealth inspite  of  their  strong desires. Extravagant, which be avoided. They may lose  money  through  impulsive actions and rash investments. If evil planets occupy , Aries,  indicate  that they start in a flash and  end in a crash, their budget always remain as unbalanced. They should think calmly and seriously before taking any action.
       They  are  extremely  frank  and  enthusiastic  in love, their good nature and charm  attract  the  opposite sex. Of practical views, lasting affection, freedom  and  adventure  in  love  are their basic traits. They should   soften  their   dominant   nature, to  be  happy,  should not be impatient and emotional.
      Arian wives are witty, intelligent and independent, zealous, proud and   always  speak  high   of their domestic environments, appearance, own family but prove to be a good host. They expect that their  husbands should   look   after  them   well,  speak   high and never  praise others especially in their presence,  They love the man if they  can admire him. Generally   Arian  wives  over  ride  and  over  power   their husbands, aggressive and are very romantic. They can be controlled with tact and patience.
    Husbands are very desirable  partners, usually they select beautiful, clever and good wives. Generous on  bountiful, romantic but spendthrift. Rash  and  passionate.
   If we  see  about  their domestic  environments, they have a good and clean house, good  friends  and  excellent   hosts.   Love their home and family. Many friends are the weakness of  Arians and are cheerful. In order to  have  a  happy  home,   they  should avoid rash temperament, criticism of  each  other  and   not  to  be more impulsive and impatient.
       Professions  connected  with  Army,   defence,  Surgeons, police, chemist,  law,  iron  and  steel, machines, factories, industry or sports goods are best suited for them. 

Thursday 18 October 2012

இராசியின் குணங்கள் -- மகரம் முதல் மீனம் வரை.


இராசியின் குணங்கள் -- மகரம் முதல் மீனம் வரை.




Column1 Column5 Column6 Column7
இராசி மகரம் கும்பம் மீனம்
அதிபதி சனி சனி குரு
உருவம் சுறாமீன் குடத்தோடுமனிதன் இரட்டை மீன்
பாலினம் பெண் ஆண் பெண்
தன்மை/குணம் இரட்டைப்படை ஒற்றைப்படை இரட்டைப்படை
சரம்,நிலம், ஸ்திரம்,காற்று. உபயம்,நீர்.
தமோ தமோ சத்துவ
வலிமை இரவில் பகலில் பகலில்
திசை தெற்கு மேற்கு வடக்கு
உறுப்பு முழங்கால் கணுக்கால் பாதம்
மாதம் தை மாசி பங்குனி
பிரிவு 4-கால்/நீர் 2 -கால்ராசி நீர்
தாது மூலா ஜீவன்
பிரஷ்டோதயா சிரோதயா உபோதயா
லத்தீன் பெயர் காப்ரிகான் அக்குவாரீஸ் ஸ்பைஸஸ்
வர்ணம் வைசியர் சூத்திரர் பிரைமணர்
உச்சகிரகம் செவ்வாய் சுக்கிரன்
நீச கிரகம் குரு புதன்
நிறம் பலநிறம் இண்டிகோ வைலட்
நட்பு கிரகம் சுக்கி,ராகு,கேது சுக்கிரன் சூரி,செவ்,ராகு,கேது.
பகை சூரியன் சூரியன்,ராகு,கேது
சமம் சந்திரன்,புதன் சந்,செவ்,புத,குரு சந்திரன்,சனி
அமைப்பு நடுத்தர குறைந்தஉயரம் குறைந்தஉயரம்
இருப்பிடம் நீர்காடு நீர்பகுதி சமுத்திரம்
பகுதி வெளியிடம் உள்ளிடம் இடை
தேசம் பாஞ்சாலம் யவனம் கோசலம்
லக்கினநாழிகை 5---1/4 4---3/4 4---1/4
பார்வை இராச்செவிடு பகலில் முடம் இரவில் முடம்
மூலதிரிகோணம் 4 வது பாகையில்
நட்சத்திரங்கள் உத்திராடம்-2,3,4 அவிட்டம்-3,4. பூரட்டாதி - 4
திருவோணம் சதயம் உத்திரட்டாதி
அவிட்டம்-1,2. பூரட்டாதி - 1,2,3. ரேவதி
நாடுகள் அல்பேனியா, அபிஸினியா, போர்ச்சுக்கல்
இந்தியா, புருஷ்யா, நார்மண்டி,
பல்கேரியா ரஷ்யா,டார்டரி. காலிஷியா,
மெக்சிகோ எகிப்து


இராசியின் குணங்கள் - துலாம் முதல் தனுசு வரை



இராசியின் குணங்கள் - துலாம் முதல் தனுசு வரை




Column1 Column2 Column3 Column4
இராசி துலாம் விருச்சிகம் தனுசு
அதிபதி சுக்கிரன் செவ்வாய் குரு
உருவம் துலாகோல் கருந்தேள் கீழேகுதிரை,
மேலேவில்லாள்
பாலினம் ஆண் பெண் ஆண்
தன்மை/குணம் ஒற்றைப்படை இரட்டைப்படை ஒற்றைப்படை
சரம்,காற்று ஸ்திரம்,நீர் உபயம்,நெருப்பு
ராஜச ராஜச சத்துவ
வலிமை பகலில் பகலில் இரவில்
திசை மேற்கு வடக்கு கிழக்கு
உறுப்பு தொப்புழுக்குகீழ் மர்மஸ்தானம் தொடைகள்
மாதம் ஐப்பசி கார்த்திகை மார்கழி
பிரிவு 2-கால்ராசி பலகால் 2/4-கால்ராசி
தாது மூலா ஜீவன்
சிரோதயா சிரோதயா பிருஷ்டோதயா
லத்தீன் பெயர் லிப்ரா ஸ்கார்பியோ சாஜிடாரியஸ்
வர்ணம் சூத்திரர் பிராமணர் க்ஷத்ரியர்
உச்சகிரகம் சனி ராகு,கேது
நீச கிரகம் சூரியன் சந்திரன்
நிறம் வெண்மை பசுமை சிகப்பு
நட்பு கிரகம் புதன் சூரியன்,குரு சூரி,செவ்,சுக்,ரா,கே
பகை குரு சனி
சமம் சந்திரன்,செவ். புதன்,சுக்கிரன் சந்,புதன்,சனி
அமைப்பு உயரமான உயரமான நடுத்தர
இருப்பிடம் கடைவீதி கிணறு போர்க்களம்
பகுதி வெளியிடம் உள்ளிடம் இடை
தேசம் கொல்லம். மலையாளம் சிந்துதேசம்
லக்கினநாழிகை 5 நாழிகை 5---1/4 5---1/2
பார்வை பகற் செவிடு பகற் செவிடு இராச்செவிடு
மூலதிரிகோணம் 5-வதுபாகையில் 10வது பாகையில்
நட்சத்திரங்கள் சித்திரை - 3,4 விசாகம் - 4 மூலம்
சுவாதி அனுஷம் பூராடம்
விசாகம் - 1,2,3. கேட்டை உத்திராடம்-1,
நாடுகள் ஆஸ்திரியா பிரேசில்,நார்வே, அரேபியா,
அர்ஜன்டினா ட்ரான்ஸ்வால் ஆஸ்ட்ரேலியா
ஜப்பான்,திபெத் மொராக்கோ ஹங்கேரி,
குஜராத்,பர்மா மும்பை ஸ்பெயின்