Search This Blog

Sunday 18 January 2015

இந்த வார நட்சத்திர பலன்கள் 18/1/2015 முதல் 24/1/2015 வரை (தினபூமி நாளிதழில்)


இந்த வார நட்சத்திர பலன்கள்

18/1/2015 முதல் 24/1/2015 வரை
(தினபூமி நாளிதழில்)



மேஷம்

 (அஸ்வினி-1, 2, 3, 4 பாதங்கள்பரணி-1, 2, 3, 4 பாதங்கள்கார்த்திகை-1, பாதம்)
அஸ்வினி --

       இந்த வாரம் முதல் நாள்குடும்பத்தில் மகிழ்ச்சி குறையும்போட்டி பொறாமைகள் அதிகமாகும்.  2 ஆம் நாள்எதிர்பாராத தனவரவு ஏற்படும்.  புத்திர பாக்கியம்பதவி உயர்வுபுதிய தொழில் வாய்ப்புக்கள் ஏற்படலாம். 3 ஆம் நாள்,  பண விஷயமான சிந்தனைகள் எழும்சிலர் காவல்துறைப் பிரச்சனைகளைச் சந்திக்க நேரலாம்நான்காம் நாள்செய்யும் தொழிலில் தடைகள் ஏற்படலாம்தந்தை வழி உறவுகளால் தொல்லை ஏற்படலாம். 5 ஆம் நாள் குழந்தைகளால் அவமானமும்மனக்கலக்கமும் ஏற்படலாம். 6 ஆம் நாள்அரசாங்க வகை இலாபத்தால் மனம் மகிழ்ச்சி அடையும். 7 ஆம் நாள்புதிய நண்பர்கள் சேர்க்கையால் தொழிலில் இலாபம் ஏற்படலாம்.

பரணி  --

       இந்த வாரத்தின் முதல் நாள் நண்பர்களும் பகைவர் ஆவர்அரசு அதிகாரிகள் தொல்லை தரலாம்சுபவார்த்தைகளைக் கேட்டு ஞான தன்மைக்கு மாற முயல்வீர்கள். 2 ஆம் நாள்,தூக்கமின்மையால் சுறுசுறுபற்ற தன்மை நிலவும்.  குடும்பத்தில் அமைதியின்மையும் நிலவும். 3ஆம் நாள்அறிவுவிருத்தி ஆகும்மேலதிகாரிகளின் ஆதரவால் மேன்மை டைவீர்கள்ஆன்மீக வாதிகளின் சந்திப்பு மகிழ்ச்சி தரும்.   4 ஆம் நாள்எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய நாள்கீழே விழவிபத்தைச் சந்திக்க நேரலாம், 5 ஆம் நாள்உறவுகளுக்குள் மனகுறைகள் ஏற்படலாம்.  6ஆம் நாள்கடன் கொடுத்தவர்களின் கெடுபிடி தாங்கமுடியாது. 7 ஆம் நாள்விருந்தினர் வருகையால் வீட்டில் கும்மாளமும்குஷியாகவும் இருக்கும்சினிமாமால்களில் பொழுது போக்குதல் எனச் செலவுக்கும் குறைவிருக்காது.

கார்த்திகை  1 ஆம் பாதம்.—

இந்த வாரம் உடன் பிறப்புக்களிடையே கருத்து வேறுபாடு ஏற்படலாம்புத்திர பாக்கியம் ஏற்படும்கௌரவப் பட்டங்கள்பதவிகள் ஆகியவை கிடைக்கும்.  அரசாங்கத் துறைகளின் மூலமாக எதிர்பார்த்த அனுகூலங்கள் யாவும் வந்து சேரும்சில விஷயங்களில்சிலருக்குத் தடை,தாமதங்கள் ஏற்படலாம்மேடைப் பேச்சாளர்கள் தங்கள் பேச்சின் மூலமாக வருமானம் ஈட்டுவர்.  உடன்பிறப்புக்களிடையே கருத்து வேறுபாடு ஏற்படலாம்புத்திர பாக்கியம் ஏற்படும்.   அரசாங்கத் துறைகளின் மூலமாக எதிர்பார்த்த அனுகூலங்கள் யாவும் வந்து சேரும்சில விஷயங்களில்,சிலருக்குத் தடைதாமதங்கள் ஏற்படலாம்மேடைப் பேச்சாளர்கள் தங்கள் பேச்சின் மூலமாக வருமானம் ஈட்டுவர்.  

ரிஷபம்

கார்த்திகை – 2,3,4 பாதங்கள்-ரோகிணி-1,2,3,4-பாதங்கள்-மிருகசிரீடம்-1,2 பாதங்கள் )

கார்த்திகை 2,3,4 பாதங்கள் –

       இந்த வாரம் தனவரவு அதிகரிக்கும்நண்பர்கள் மற்றும் உறவுகளின் உதவியால் உள்ளம் மகிழும்.  தொழிலில் எதிர்பார்த்தபடி இலாபங்கள் இருக்கும்வாக்குவன்மையால் பொருளாதார முன்னேற்றங்கள் ஏற்படும்பூஜா வழிபாடுகளாலும்பெரியோர் ஆசிகளாலும் எண்ணிய எண்ணங்கள் ஈடேறும்பிரயாணத்தின் போது எச்சரிக்கையுடன் இருத்தல் அவசியம்பகைகளை வெல்லும் திறன்ஆகியவை ஏற்படும்வாழ்க்கையில் முன்னேற்றங்களையும்சுகானுபவங்களையும் மற்றும்கௌரவத்தையும் அடைவீர்கள்தாய் மாமனுக்கும் நன்மை ஏற்படும்.  தொலைதூரப் பயணங்களால் நன்மை ஏற்படும்சிலருக்கு வெற்றிகரமான தொழில் முன்னேற்றங்கள் ஏற்படும். ஆபரண சேர்க்கை உண்டுகல்வியில் வெற்றி பெறக் கவனமாகப் படிக்க வேண்டும்.

ரோகிணி  –

இந்த வாரம் ஆரம்பத்தில்பிரிந்த உறவுகள் சேரும்.  தொழிலில் புதிய முதலீடுகளால் உற்பத்தித்திறன் அதிகரித்து லாபம் பெருகும்புத்தக வெளியீட்டாளர்களுக்கு தங்கள் தொழிலில் ஏற்றமான காலம்பெரியோர்களின் ஆசிகள்ஆதரவு ஆகியவை எப்போதும் இருக்கும்கற்பனை வளம் பெருகும்சுபச் செய்திகளைக் கேட்டு மகிழ்வீர்கள்வார மத்தியில் நண்பர்களின் சவகாசத்தால் மனம் தீயவழிமுறைகளை நாடும். எனவே, கவனம் தேவைசிலருக்குத் தேவையற்ற காரணங்களல் அரசுக்கு அபராதம் செலுத்த நேரலாம்வாரக் கடைசியில் பக்தி மார்க்கத்தில் மனம் செல்வதால் உற்சாகம் பெருகும்குடும்பத்தோடு புண்ணிய ஸ்தல  யாத்திரைகள் சென்று மகிழ்வீர்கள்.

மிருகசிரீஷம் – 1 , 2 பாதங்கள் –

       இந்த வாரம் இடைவிடாத கடின உழைப்பின் காரணமாக நேரத்துக்கு உணவு உட்கொள்ளவும் நேரம் இருக்காதுதந்தைவழி உறவுகளால் அனுகூலம் ஏற்படும்அரசு வகையில் கட்ட வேண்டிய தீர்வைகள்வரி பாக்கிகள் ஆகியவற்றைச் செலுத்துவதற்குத் தேவையான பணவரவுகள்பணவுதவிகள் வந்து சேரும்பணிபுரியும் இடத்தில் மேலதிகாரிகளின் ஆதரவால் பணியில் முன்னேற்றங்களை அடைய முற்படுவீர்கள்மனதுக்குப் பிரியமான மங்கையுடன் நட்புஏற்படும் இனிய பயணங்களால் இன்புறுவீர்கள்மனமகிழ்ச்சிபகைகளை வெல்லும் திறன்ஆகியவை ஏற்படும்வாழ்க்கையில் சுகானுபவங்களையும்கௌரவத்தையும் அடைவீர்கள்.தொலைதூரப் பயணங்களால் நன்மை ஏற்படும்சிலருக்கு வெற்றிகரமான தொழில் முன்னேற்றங்கள் ஏற்படும்.

மிதுனம்

(மிருகசிரீடம்- 3,4 பாதங்கள்திருவாதிரை-1,2,3,4 பாதங்கள்புனர்பூசம்-1,2,3 பாதங்கள்)

மிருகசிரீஷம் – 3 , 4 பாதங்கள். –

       இந்த வாரம் எதிர்பாராத தனவரவும் உண்டுசுற்றத்தார் மூலமாகவும் பணவுதவிகள் கிடைக்கலாம்தொழிலில் விஸ்தரிப்பு நடவடிக்கைகள் மூலமாக வருமான வாய்ப்புகள் பெருகும்.கோபத்தைக் குறைத்தால் குடும்பத்தில் குழப்பங்களும் குறையும்தந்தைவழி உறவுகளால் வீண்தொல்லைகள் ஏற்படலாம்தீயவர்கள் தொடர்பால் சஞ்சலம் ஏற்பட வாய்ப்புண்டு.மேலதிகாரிகளால் பாராட்டப்பட்டு பதவி உயர்வின் மூலம் பணப் பயன்களை அடைவீர்கள்
வாகனங்களில் செல்லும் போது எச்சரிக்கையுடன் இருக்காவிட்டால் விபத்தில் சிக்க நேரிடலாம்.கவனம் தேவைவீட்டில் சுப காரியங்கள் அனைத்தும்  சிறப்புறவெற்றிகரமாக நடக்கும்புதிய நண்பர்கள் சேர்க்கைதொழில் இலாபம் ஆகியவை ஏற்படும்.  கற்பனை வளம் பெருகும்தாய் மூலமாக நன்மைகள் ஏற்படும்.

திருவாதிரை ---

       இந்த வாரத் துவக்கத்தில்நல்லவர்களின் தொடர்பு இல்லையெனில் வீண் கலக்கங்கள் ஏற்படலாம்உணவருந்தவும் நேரமின்றி உழைக்க வேண்டியது வரும்அப்படி உண்ணும் உணவும் வாய்க்கு ருசியாகக் கிடைக்காதுபுதிய தொழில் தொடர்புகளால் எதிர்பார்ப்புக்கு மேல் பணவரவு ஏற்படும்அரசு அதிகாரிகள் அனுகூலமாய் நடந்து கொள்வர்வார மத்தியில் பங்குச்சந்தையில் இலாபமும்போட்டி பந்தயங்களில் ஆதாயமும் கிடைக்கும்விரும்பிய பொருட்களை வாங்கக் கூடிய அளவுக்குத் திருப்திகரமான தனவரவு இருக்கும்வாரக் கடைசியில் பெரியவர்களின் ஆலோசனைக்கு ஏற்ப பூஜா வழிபாடுகளில் ஈடுபடுவீர்கள்நல்ல குரு வாய்க்கப் பெற்று ஆன்மிக வழியில் அறிவுத் தெளிவும் ஏற்படும்.

புனர்பூசம் – 1, 2, 3 – பாதங்கள்.

       இந்த வாரம் உங்களுக்குத் தெய்வ சிந்தனைகளால் மனதில் அமைதி நிலவும்.  ஆடை,ஆபரணங்கள்நல்ல உணவுஎதிர்பாராத தனவரவு ஆகியவை ஏற்படும்.  கௌரவப் பட்டங்கள்,பதவிகள் தேடிவரும்.  மேலதிகாரிகளின் ஆதரவால் பதவி உயர்வுகளை எதிர்பார்க்கலாம்புதிய நண்பர்களால் நன்மையும் ஏற்படும்மாணவர்களுக்குக் கவனச் சிதறல்கள் காரணமாகப் படிப்பில் ஆர்வம் குறையலாம்உங்களுக்குப் பயணங்களில் எதிர்பாராத பிரச்சனைகள் ஏற்படலாம்.தந்தைவழி உறவுகளால் உதவி இருக்காதுவிருந்தினர் வருகையால் மனம் மகிழ்ச்சி ஏற்படும்.அவர்களுடன் சினிமா போன்ற கேளிகைகளில் ஈடுபட்டு இன்பம் துய்ப்பீர்கள்சிலருக்குக் காரியத்தடைகள்காலதாமதங்கள் ஏற்படலாம்

கடகம்

(புனர்பூசம்- 4 ஆம் பாதம்பூசம்-1,2,3,4 பாதங்கள்ஆயில்யம்-1,2,3,4 பாதங்கள்)

புனர்பூசம் – 4 ஆம் பாதம்.

       இந்த வாரம் பயிர்மனை இவற்றால் இலாபம் ஏற்படும்சிலருக்குத் திருமணம்சந்ததி விருத்தி ஏற்படலாம்சகோதரரால் நன்மைகள் உண்டுமனோதைரியம் அதிகரிப்பதன் காரணமாக எவரையும் எதிர்த்து வெற்றி பெறுவீர்கள்தொழிலில் எதிர்பார்த்தபடி பல வழிகளிலும் தனவரவு அதிகரிக்கும்அரசுப் பணியாளர்களுக்குப் புதிய பதவியும்பொறுப்பும் கிடைக்கும்வாகன வசதியும்,நற்கல்வியும் கிடைக்கும். சிலருக்கு அரசாங்க விருதுகள் கிடைக்கும் வாக்கு வன்மை ஓங்கும்.பூரண சயன சுகம் ஏற்படும் பிறருக்கு உதவும் நல்ல எண்ணம் மேலோங்கும். கோபத்தை அடக்கி உடன் பிறப்புக்களுடன் ஒத்துப் போவது நல்லது உங்கள் உடலில் சுறுசுறுப்புக் குறைந்து, சொம்பல் அதிகரிக்கும். மற்றவர்கள் உயர்வைக் கண்டு பொறாமை கொள்ளாதிருப்பது நல்லது.

பூசம் -- 

       இந்த வாரத் துவக்கத்தில் விருந்துமகிழ்ச்சிக் கொண்டாட்டம்ஆரவாரம்,  என வீட்டில் மகிழ்ச்சி பொங்கும்இந்த நாட்களில் உங்கள் திறமை மிக்க செயல்பாடுகளால் அனைவரின் பாராட்டையும் பெறுவீர்கள்நீங்கள் எதிர்பார்த்த இடங்களில் இருந்து பணவரவு தாராளமாக இருக்கும்அரசாங்கத்திடம் இருந்து அனுகூலமான செய்திகள் மற்றும் தகவல்கள் வந்து சேரும்.நல்ல பல கருத்துக்களைக் கேட்பதின் மூலமாக உங்களுக்கு  ஞானத் தன்மை  அதிகரிக்கும்பக்தி மார்க்கத்தில் செல்ல மனைவியின் பூரண ஓத்துழைப்புக் கிடைக்கும். புதிய கொள்முதல் மூலமாக தொழிலில் அதிகமான வருவாய்ப் பெருக்கம் ஏற்படும்தூர தேசங்களில் இருந்து எதிர்பார்த்த நல்ல செய்திகள் வரும்.  சுபகாரியச் செலவுகள் ஏற்படும்

ஆயில்யம் –

       இந்த வாரம் பக்தி மார்க்கத்தில் ஈடுபாடு அதிகரிக்கும்இளைஞர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புக்கள் ஏற்படும்வியாபாரத்தில் விரிவாக்கத் திட்டங்களால் வாடிக்கையாளர்களைக் கவர்ந்து இலாபத்தைப் பெருக்கிக் கொள்வீர்கள்எதிர்பார்த்தபடி தனவரவுகள் கைக்கு வந்து சேரும்.வந்த பணத்தை தரும காரியங்களுக்குத் தாராளமாகச் செலவு செய்து மகிழ்வீர்கள்.  பிறந்த நாள் விருந்துகளில் கலந்து கொண்டு  மகிழ்ச்சி அடைவீர்கள்.  நல்லோர் சேர்க்கையால் மாணவர்களுக்குக் கல்வியில் தேர்ச்சி உண்டுசிலருக்கு உழைப்பு அதிகமாகி அதற்கேற்றார் போல் ஆதாயமும் அதிகரிக்கும்சுபகாரியங்களுக்காக வீடே விழாக்கோலம் பூணும்திடீரென ஏற்படும்.
பயணங்களால் ஆதாயமும்மகிழ்ச்சியும் ஏற்படும்அரசுப் பணியாளர்களுக்கு எதிர்பார்த்தபடி தலைமைப் பதவிகள் தேடி வரும்.

சிம்மம்

மகம்-1,2,3,4 பாதங்கள்,பூரம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் உத்திரம்- 1 பாதம்)

மகம் –

       இந்த வாரத் துவக்கத்தில் கையில் எடுக்கும் காரியங்களில் எல்லாம் தடைதாமதங்கள் ஏற்படும்வேலைகளை முடிக்கத் தேவையற்ற அலைச்சல்கள் ஏற்படும்மறுநாள் எதிர்பாராத தனவரவுகள் இருக்கும்நல்ல வக்கணையான உணவு வகைகளை உட்கொள்வீர்கள்டீக்காக உடையணிந்து ஆட்களை அசத்துவீர்கள்.  வாரமத்தியில்குடும்பத்தில் சுபகாரியப் பேச்சுக்கள் பேசப்படும்தொழில்வேலை வாய்ப்புக்கள் பிரகாசாமாய் இருக்கும்மிகமிக முக்கியமான பெரியோர்களின் சகாயத்தால் பெருவாழ்வுக்கான அஸ்திவாரம் அமையும்.  வாரக் கடைசியில்,மனைவி மூலம் மட்டற்ற மகிழ்ச்சி நிலவும்வாக்கால் வருமானம் பெருகும்விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும்அரசாங்கத்தால் அனுகூலம் உண்டுவிரும்பிய பொருட்களை எல்லாம் வாங்கிக் குவிப்பீர்கள்

பூரம் –

       இந்த வாரம் பழைய நண்பர்களிடம் சுமுகமாக இருப்பது நல்லது. பயணத்தின் போது  எச்சரிக்கையுடன் இருக்கவும். வீட்டில் பெண்களால் அதிக வீண் செலவுகள் ஏற்படும். வேலை விஷயமாக அலைச்சல்கள் ஏற்படும். பொறுமையைக் கடைப்பிடித்தால் குடும்பத்தில் வாக்குவாதங்களைத் தவிர்க்கலாம். வார மத்தியில் எதிர்பாராத தனவரவுகள், வஸ்திர லாபம், சுகபோஜனம் ஆகியவை ஏற்படும். அரசுத்துறை மூலமாக எதிர்பார்த்த ஆதாயங்கள் அனைத்துமே விரைவில் கிடைக்கும்  சினத்தை அடக்கினால் சிரமங்கள் குறையும்உடன் பிறந்தவர்களோடு அனுசரித்துச் செல்வது நல்லதுகல்வியில் தேர்ச்சிதெய்வ சிந்தனை மற்றும் தரும சிந்தனையும் ஏற்படும்சிலருக்கு உயர் ரக வாகனங்கள் கிடைக்கும்பணம் சம்பாதிப்பதில் ஆக்கமும்ஊக்கமும் ஏற்படும்.

உத்திரம்- பாதம் –

      இந்த வாரம் சிலருக்கு உழைப்பு அதிகமாகி அதற்கேற்ற ஆதாயம் இராது.  தொலைதூரச் செய்திகளால் இல்லத்தில் மகிழ்ச்சி பெருகும்சிலருக்குப் புதுப்புதுப் பதவிகளும் அதனால் வருவாய்ப் பெருக்கமும் ஏற்படும்ஆசிரியர்களின் ஆலோசனைப்படி ஆழ்ந்து படித்தால் அதிக மதிப்பெண்கள் பெறலாம்.  சிலருக்கு இடமாற்றங்கள்பயணத்தில் துன்பம்,  கடன் கொடுத்தவர்களின் கெடுபிடிசகோதரர் விரோதம்அரசு வகைத் தொல்லை,  ஆகியவை ஏற்படும்எனவே  துன்பம் வரும் போது துவளாமல்தைரியத்துடன் வாழ்க்கையில் முன்னேற முயலுங்கள்எப்போதும் தங்கள் சேவைகள் அனைவராலும் அங்கீகரிக்கப்படும்.  நீங்கள் எதிர்பாராத விதத்தில், நினைத்த இடத்திற்குஇடமாற்றங்கள் ஏற்படலாம்

கன்னி

உத்திரம் – 2, 3, 4-பாதங்கள்ஹஸ்தம்-1, 2, 3, 4 பாதங்கள்சித்திரை – 1,2 பாதங்கள்)

உத்திரம் – 2, 3, 4 – பாதங்கள்.

       இந்த வாரம் தொழில் வாய்ப்புகள் பிரகாசமாய் இருக்கும். உங்கள் தொழில் விஷயமாகத் தீட்டிய முக்கியத் திட்டங்கள் நிறைவேற எடுத்த முயற்சிகள் வெற்றி பெறும்வியாபாரிகளுக்கு வங்கிக் கடன்கள் உடனடியாகக் கிடைக்கும். அவர்கள் தங்கள் வாக்கால் வாடிக்கையாளர்களைக் கவர்ந்து இலாபத்தைப் பெருக்குவர். பெண்களின் அழகும்பொலிவும்அறிவுத்திறனும் கூடும்.குழந்தைகளின் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் தேவைபணவிஷயங்களில் மிகவும் எச்சரிக்கையுடன்  இருப்பது நல்லது.  நல்லவர்களுடன் ஏற்படும் பழக்கத்தால் நல்லதே நடக்கும்.மாணவர்களுக்குக் கல்வியில் தேர்ச்சி உண்டுபுதிய முயற்சிகளால் பண வருமானம் அதிகரிக்கும்.அதிகாரிகளின் நட்பால் ஆதாயம் பெறுவீர்கள்அரசாங்கத்தால் அனுகூலம் உண்டு.

ஹஸ்தம் –

இந்த வார ஆரம்பத்தில் விருந்துகளில் கலந்துகொண்டு நண்பர்களுடன் மகிழ்ச்சி பொங்கப்பொழுதைக் கழிப்பீர்கள்சிறப்பான பலன்களைத் எதிர்பார்க்கலாம் அரசியல்வாதிகளிடமும் மற்றும் அரசாங்கத்திடமும் எதிர்பார்த்த அனுகூலங்கள் அனைத்தும் தாமதமின்றிக் கிடைக்கும்தொழில் சம்பந்தமான முயற்சிகள் வெற்றித் திக்கை நோக்கிச் செல்லும்.  சுபச் செய்திகளை எதிர்பார்க்கலாம்.சிலருக்கு உயர்ரக வாகனங்கள் கிடைக்கும்பிரபலமானவர்களின் ஆறுதலும்நட்பும் கிடைக்கும்.புத்தக வெளியீடு போன்ற தொழில்களில் முன்னேற்றம் ஏற்பட்டுஆதாயம் அதிகரிக்கும்புதிய தொழில் முயற்சிகள் அரசு உதவியுடன் வெற்றி பெரும்கல்வியில் தேர்ச்சிதெய்வ சிந்தனை மற்றும் தரும சிந்தனையும் ஏற்படும்புதிய கடன்கள் வாங்கிப் பழைய கடன்களை அடைத்துவிடுவீர்கள்.

சித்திரை – 1,2 பாதங்கள் –

       இந்த வாரம் வியாபாரிகள் கவர்ச்சிகரமான பொருட்களைப் பரிசாக அறிவித்துத் தங்கள் வாடிக்கையாளர்களைக் கவர்ந்து இலாபத்தை அதிகரித்துக் கொள்வர்நண்பர்கள் விரும்பி வந்து உதவி செய்வார்கள்மாணவர்கள் அன்றன்றைக்குத் தங்கள் பாடங்களை அக்கறையுடன் படித்தாலே அதிக மதிப்பெண்கள் பெறமுடியும்உத்தியோகம் மற்றும் தொழிலில் அபிவிருத்தி ஏற்படும்.சிலருக்குப் பணமுடை ஏற்படுவதோடுதேவையற்ற அலைச்சல்களும் ஏற்படும்வீண் மனஸ்தாபங்களைத் தவிர்த்தால் வீட்டில் அமைதி நிலவும்பல புண்ணியத் தலங்களுக்கு பயணம் செய்யும் வாய்ப்புக் கிட்டும்திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமணம் நடக்கும்சிலர் பலவகையிலும் பிறரால் குற்றம் சாற்றப்பட்டு அவதிப்பட நேரலாம்பணிபுரியும் பெண்கள் பதவி உயர்வுகளை எதிர்பார்க்கலாம்.

துலாம்

சித்திரை-3,4 பாதங்கள்சுவாதி – 1,2,3,4 பாதங்கள் மற்றும் விசாகம்- 1,2,3 பாதங்கள்)

சித்திரை-3,4 பாதங்கள் –

இந்த வாரம் உங்களுக்கு மிக்க அனுகூலமான வாரம்பல வழிகளிலும் தனவரவு ஏற்படும்.எந்தக் காரியத்தையும் திறம்படச் செய்யும் உங்கள் செயல்திறன் கூடும்அதன் காரணமாக உங்கள் பணி இலக்கை அடைவீர்கள்சிலருக்கு மற்றவர்களுக்கு ஆணையிடும் உயர்பதவிகள் கிடைக்கும்.புதிதாக வேலை தேடுபவர்களுக்கு நல்ல காலம் பிறக்கும்மாணவர்கள் தங்கள் கிரகிப்புத் தன்மையால் கல்வியின் தரத்தை உயர்த்திக் கொள்வர்எதிர்பாராத இடத்தில் இருந்து வந்த பணவரவால் மனம் மகிழும். பொருளாதார நிலைகள் திருப்திகரமாக இருக்கும். தனவரவு அதிகரிப்பால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் அதிகரிக்கும்நவநாகரீக ஆடைகளை வாங்கி உடுத்தி மகிழ்வதோடுஉறவுகள் வருகையால் உள்ளம் மகிழும்உறவுகளுடன் உயர்தர உணவகங்களில் உணவருந்தி மகிழ்வீர்கள் 
  
சுவாதி 

      இந்த வாரம் புதிய தொழில் தொடங்க எடுக்கப்படும் முயற்சிகள் வெற்றி பெறும் காலம் கனிந்து வரும்.  தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும். அரசுப்பணியில் உள்ளவர்களுக்கு அதிகாரிகளின் அன்பு மற்றும் ஆதரவால் பணி உயர்வு நினைத்தபடி கிடைக்கும். சிலருக்குப் பணமுடை காரணமாக சேமிப்புக்களில் இருக்கும் பணத்தில் கை வைக்க வேண்டிய நிலை ஏற்படும்.பழைய பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகள் நல்ல வருமானத்தை அடைவார்கள்.திடீர்ப் பயணங்கள் மூலமாக ஆதாயங்கள் ஏற்படும்புதிய கடன்கள் வாங்கிப் பழைய கடன்களை அடைத்துவிடுவீர்கள்சிலநேரங்களில் சுறுசுறுப்பற்ற நிலையும்மனோபயமும் நிலவும்போட்டி,பந்தயங்களில் வெற்றி கிடைக்கும்கல்வியில் தேர்ச்சி ஏற்பட கடின உழைப்புத் தேவை.

விசாகம்- 1,2,3 பாதங்கள் –

       இந்த வாரம் உடன்பிறப்புக்களிடம் இருந்து நீங்கள் எதிர்பார்க்கும் பணவுதவிகள் கிடைக்கும்.புதிய வீடுபூமி வாங்கக் கூடிய சந்தர்ப்பங்கள் உருவாகலாம்வாகனங்களில் செல்லும் போது கவனமாகச் செல்லவும்எல்லா வசதிகளும் இன்பமும் ஏற்படும் என எதிர்பார்க்க முடியாது.ஏதாவது மனக்குறை இருந்து கொண்டே இருக்கும்அரசு வேலைக்கு மனுச் செய்தவர்களுக்கு அனுகூலமான பதில்கள் வரும்வியாபாரிகளுக்கு வியாபாரம் ஏற்ற இறக்கமின்றி ஒரே சீராக இருக்கும். நல்ல உயர்ந்த மனிதர்களின்பண்புமிக்கவர்களின் நட்பு ஏற்படும்.  சிலருக்குப் பயணங்களிலும்அரசுவகையிலும் தொல்லைகள் ஏற்படலாம்தொழிலில் பணியாளர்களின் ஒத்துழைப்புக் குறைவால்உற்பத்தி குறையும் வாய்ப்பு ஏற்படலாம்..

விருச்சிகம்

விசாகம்- 4, அனுஷம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் கேட்டை -1,2,3,4 பாதங்கள் )

விசாகம்ஆம் பாதம் –

        இந்த வாரம் சுகமும் ஆடை ஆபரண சேர்க்கைபுத்திர பாக்கியம் மற்றும் எதிர்பாராத பணவரவுகள் ஆகியவை ஏற்படும்சிலருக்கு வீண்பேச்சுவீண்அலைச்சல் மற்றும் வீண்செலவுகள் ஏற்படும்மிகப் பெரிய சாகசங்களைப் புரிவீர்கள்அதிகாரிகளுடன் வீண் சச்சரவுகளை விலக்கினால் பணியில் எதிர்பார்த்த உயர்வுகள் இருக்கும்சம்பாதிக்கும் திறன் மேம்படும்மிகக் கடினமான வேலைகளையும் தன்னம்பிக்கை காரணமாக சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள்குடும்ப சந்தோஷம் குறைவில்லாது நிறைந்திருக்கும்தம்பதிகளிடையே அன்னியோன்யம் அதிகரிக்கும்பெரியோர்களின் ஆசியால் நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வெற்றி அடையும்அண்டை வீட்டார்,நண்பர்கள் மற்றும் சகோதரரால் உங்கள் பிரச்சனைகளுக்கு ஒரு முடிவு வரும்.

அனுஷம் –

       இந்த வாரம் புதிய தொழில் வாய்ப்புக்கள்லாட்டரி யோகங்கள்புண்ணியத்தல தரிசனங்கள் ஆகியவை ஏற்படும். பண விஷயத்தைப் பொருத்தவரை திருப்திகரமான வாரமாக இருக்கும்.சிலருக்குப் பெரிய இடத்துப் பெண் மனைவியாக அமைவாள்மனைவி மூலம் பூர்ண சுகம் கிடைக்கும்மாணவர்களுக்குக் கல்வியில் தேர்ச்சி உண்டாகும்.  அரசுப் பதவியில் உள்ளவர்கள் தயவால் அனுகூலமான பலன்களை அடைவர் நல்ல புத்திர பாக்கியம் ஏற்படும். சிலருக்குத் தாங்கள் கைவைக்கும் வேலைகளில் எல்லாம் தடை தாமதங்கள் ஏற்பட வாய்ப்புண்டு..வாகனங்களுக்கு உரிய ஆவணங்களை மறக்காமல் எடுத்துச் செல்லவில்லை என்றால் தண்டம் கட்டவேண்டியது வரும்சிலருக்கு தோலில் அரிப்பு போன்ற ரோகங்கள் வரலாம்குடும்பத்தில் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது.

கேட்டை 

       இந்த வாரம் எல்லா நிகழ்வுகளும் மகிழ்ச்சியை வரவழைக்கும்பெரியோர்களின் ஆசி,பக்தி மார்க்கத்தில் ஈடுபாடு ஆகியவற்றால் நல்ல மனிதர்களின் தொடர்புகள் ஏற்படும்உறவுகள்,நண்பர்கள் மற்றும் குடும்பத்தார் மூலமான உதவிகள் தடைப்படாதுஎடுத்த முயற்சிகள் யாவும் வெற்றி அடைய அதிக உழைப்பு தேவைப்படும். கடின உழைப்பே எப்போதும் உங்கள் பையை பணத்தால் நிரப்பும்சிலருக்குப் பெரிய இடத்துப் பெண் மனைவியாக அமைவாள்மனைவி மூலம் பூர்ண சுகம் கிடைக்கும்புதிய பெண்கள் தொடர்பு ஏற்படும்பல வகையான உயர்ந்த வாகன வசதி அமையும்அரசுப்பதவியில் உள்ளவர்களின் அனுகூலமான நடவடிக்கைகள் மனதில்புத்துணர்ச்சியை ஏற்படுத்தும்.

தனுசு

மூலம்-1,2,3,4 பாதங்கள்பூராடம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் உத்திராடம் –1 பாதம்)

மூலம் –

       இந்த வாரம் நண்பர்களிடம் சுமுகமாக இருக்க முயற்சியுங்கள்பயணங்களால் செலவுகள் அதிகமாகும்ஆதலால் பணமுடையும் இருக்கும்.  பணிபுரிவர்களுக்கு வேலையில் சிரத்தையும்,மாணவர்களுக்குக் கல்வியில் தேர்ச்சியும் உண்டாகும்.  அரசுப் பதவியில் உள்ளவர்கள்மேலதிகாரிகளின் தயவால் அனுகூலமான பலன்களை அடைவர் நல்ல புத்திர பாக்கியம் ஏற்படும்.புதுத்தெம்பும்உற்சாகமும் கூடும்வாகன வசதிகள் மேம்படும்அந்தஸ்து உயரும்சிலருக்கு அதிகாரப் பதவியும்அமைச்சர் போன்ற பதவிகளும் கிடைக்கும்தொலை தூரத்திலிருந்து நற்செய்திகள் வந்து மகிழ்ச்சி அளிக்கும்பக்திப் பெருக்கால் ஞானத் தன்மை எய்துவீர்கள்.பயணங்களில் எச்சரிக்கை தேவைதங்கள் பொருட்களை மிகுந்த பாதுகாப்புடன் வைத்துக் கொள்ளுங்கள்.

பூராடம் 

இந்த வாரம் சுக சௌகரியங்கள் கூடும்.. சுபசெய்திகளால் மனம் மகிழும்வெளிநாட்டுப் பயணம் மற்றும் வாணிபத்தால்  தனலாபம் அதிகரிக்கும்வீட்டில் அமைதியும்நிம்மதியும் நிலவும்.  மனைவியின் பேச்சைக் கேட்டு நடக்க வேண்டிய நிலை ஏற்படும்செலவுகளைக் குறைத்து சேமித்து வைப்பது எதிர்காலத்துக்குப் பயன்படும். வியாபாரத்தில் போட்டிகளைச் சமாளிக்கக்கடினமாக உழைக்க வேண்டியது வரும்விவசாயிகளுக்கு அதிக மகசூல் ஏற்பட்டுஇலாபத்தால் வசதிகள் பெருகும்சிலருக்கு  உழைப்பு அதிகமாகிஅதற்கேற்ற இலாபமோபலனோ கிடைக்காது. புத்தி தெளிவு மற்றும் செயல்திறன் அதிகரிக்கும்புதுத்தெம்பும்உற்சாகமும் கூடும்வாகன வசதிகள் மேம்படும்அந்தஸ்து உயரும்சிலருக்கு அதிகாரப் பதவியும்அமைச்சர் போன்ற பதவிகளும் கிடைக்கலாம்.

உத்திராடம் –1 ஆம் பாதம் –

       இந்த வாரம் தொலை தூரத்திலிருந்து நற்செய்திகள் வந்து மகிழ்ச்சி அளிக்கும்.உதவிகரமான புதிய நண்பர்கள் கிடைப்பர்.  எழுத்துத் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்தாய் மாமனுக்கும் நன்மை ஏற்படும்சிலருக்குக் கௌரவப் பட்டங்கள் கிடைக்கும். இரவுப் பயணங்களில்எச்சரிக்கை தேவைபல திசைகளில் இருந்தும் பணம் கூடுதலாக வரும்மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்படாதிருக்க அனுசரித்துச் செல்வது நல்லதுஎதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு தொழிலில் புதிய திட்டங்களைத் தீட்டி முன்னேற முயல்வீர்கள்உறவுகள் வருகையால் சந்தோஷம் பெருகுவது பொல்செலவுகளும் அதிகரிக்கும்.  சிறப்பான பொதுஜனத் தொடர்பு காரணமாக உபரி வருமானம் கிடைக்கும்நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் வீணான வாக்குவாதம் செய்யாதிருப்பது நல்லது.

மகரம்

உத்திராடம்- 2,3,4- பாதங்கள்திருவோணம்-1,2,3,4 மற்றும் அவிட்டம் 1,2 பாதங்கள் )


உத்திராடம்- 2,3,4- பாதங்கள் ---

       இந்த வாரம்  பூமி அல்லது வாகனம் வாங்கும் யோகம் ஏற்படும்அதுபோல் உங்கள் எதிரிகளிடம் இருந்து விலகியே இருப்பது நல்லதுஉங்களது நற்குணங்கள் அனைவரின் பாராட்டையும் பெறும். மாணவர்களுக்குக் கல்வியில் தேர்ச்சி உண்டாகும். பொன் பொருள் ஆபரணங்கள் ஆகியவை விதவிதமாகக் கிடைக்கும்நல்ல பண்பாளர்களின் நட்பும்அன்பும் கிடைக்கும்மனதில் தெய்வ பக்தி கூடும்நினைத்ததை நினைத்தபடியே சாதிக்கும் திறன் அதிகரிக்கும்நல்ஆரோக்கியமும்புதுத் தெம்பும்புத்தொளியும் ஏற்படும்.  பணக்கார மனைவியும் அமைவாள்அழகானஎழில் நிறைந்த வீடும் கிடைக்கும்தாயின்  ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. சிலருக்கு குடும்ப வாழ்க்கையில் குழப்பம் வரலாம்கடன் கொடுத்தவர்கள் கண்டிப்புடன் நடந்துகொள்வர்.

திருவோணம்-

       இந்த வாரம்   புதிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் சந்திப்பால் உள்ளம் மகிழும். தொழிற்சாலையில் புதிய எந்திரகளை நிர்மாணித்து, உற்பத்தியைப் பெருக்கி உன்னத நிலையை அடைவீர்கள்.  தொழிற்சாலைக்கு விஜயம் செய்யும் வெளிநாட்டு மூதலீட்டாளர்களுடன் நவீன உணவு விடுதிகளில் உண்டு மகிழ்வீர்கள். உங்கள் தொழில்வழி முன்னேற்றம் அனைவரின் பாராட்டுதல்களையும் பெறும். அரசு வகையிலும் அதிக அளவு சகாயங்களைப் பெறுவீர்கள். புதிய முதலீட்டுத் திட்டங்கள் மூலமாகப் பணத்தைச் சேமிக்க முற்படுவீர்கள்புண்ணியத் தல யாத்திரைகள் ஏற்படும்பொருளாதார உயர்வினால் எப்போதும் மனதில் மகிழ்ச்சி பொங்கும்பண வருவாய் அதிகரிக்கும்வியாபாரிகள் எதிர்பார்த்தபடி வங்கிக் கடன்கள் சிரமமின்றிக் கிடைக்கும்

அவிட்டம் 1,2 பாதங்கள் –

இந்த வாரம் தாராளமான பணவரவு ருக்கும்.  இனிய தகவல்கள் இல்லம் தேடி வரும்சுற்றமும்நட்பும் சூழ சுபகாரியப் பேச்சுகள் இனிதே நடைபெறும்.  சமயோஜிதமாகச் செயல்பட்டு எதிரிகளின் திட்டங்களை முறியடிப்பீர்கள்நவீன காலத்துக்கு ஏற்றபடி புதுப்புது சாமான்களை அறிமுகப்படுத்தி வியாபாரத்தில் ஏற்றம் காண்பீர்கள்அரசுப் பணியாளர்கள் அக்கறையுடன் பணிபுரிந்துஅதிகாரிகளின் பாராட்டுதல்களைப் பெறுவார்கள்குடும்பத்தில் இதுவரை ஏற்பட்டபெரும்  குழப்பங்கள் தீரும்.  புதிய கடன்களை வாங்க வேண்டிய சூழ்நிலை எழும்தீய குணம் உள்ள  நபர்களிடம் இருந்து விலகி இருப்பதே நல்லதுபுதிய முதலீடுகளால் தொழில் ஏற்றம் காணும்.

கும்பம்

அவிட்டம் – 3,4 பாதங்கள்– சதயம்-1,2,3,4 பாதங்கள்-பூரட்டாதி-1,2,3 பாதங்கள்)

அவிட்டம் – 3,4 பாதங்கள்

       இந்த வாரம் உறவுகள்நண்பர்கள் மற்றும் குடும்பத்தார் ஆகியோரின் ஒத்துழைப்பால் அகம் மகிழும்நீண்ட நாட்களுக்குப் பின்னர் வந்த  பழைய உறவுகளின்  வரவு  மகிழ்வைத் தரும்.நெருங்கிய நண்பர்களின் உதவியால் கூட்டாளிகளிடையே ஏற்பட இருந்த குழப்பங்கள் தீர்த்து வைக்கப்படும்.. வீட்டு வாடகை வசூல் திருப்திகரமாக இருக்காதுமாணவர்களின் கல்வி முன்னேற்றத்துக்குக் கடின உழைப்பு தேவைப்படும்வீட்டில் நவீன உபகரணங்கள் பலவற்றைவாங்கி மகிழ்வீர்கள்வியாபார சம்பந்தமான வெளிநாட்டுப் பயணங்கள் இலாபம் தரும்இதுவரை கடினமாக இருந்த காரியங்கள் எளிதில் கைகூடும்எதிர்பார்த்த இனங்களில் இருந்து தனவரவு உண்டுகுடும்ப உறவுகளின்  ஒத்துழைப்பால் குடும்ப முன்னேற்றம் சாத்தியப்படும்.

சதயம்-

      இந்த வாரம் அன்புமிக்க பெண்களால் ஆனந்தம் பெருகும்அரசு வகையில் எதிர்பார்த்த  ஆதாயம் மற்றும் உதவிகளால்  தொழிலில் முன்னேற்றம் ஏற்படலாம்.உங்கள் திறமைமிக்க செயல்களால் வெற்றிகளும்பாராட்டுதல்களும் குவியும்தங்கள் வாழ்க்கையில் மனைவி மூலமாக முன்னேற்றத்துக்கான நல்ல ஆலோசனைகள் கிடைக்கும்.   வெளியூர்ப் பயணங்கள்வெற்றிகரமாகவும்இலாபகரமாகவும் அமையும்.  இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கமங்கல காரியங்கள் ஈடேறும்மாணவர்களுக்குப் படிப்பில் தேர்ச்சி ஏற்பட்டுஅறிவுச் சுடரொளி வீசும். புது வீடுகட்டிக் குடியேறும் பாக்கியம் ஏற்படும். இதுநாள்வரைப் போராடி வந்த வழக்குகள் உங்களுக்குச் சாதகமாக வெற்றி அடையும். நீண்ட கால நோயாளிகளின் உடல்நிலைப் படிப்படியாக்க் குணமாகும்.

பூரட்டாதி-1,2,3 பாதங்கள் –

        இந்த வாரம் கலைஞர்களுக்குச் சிறப்பான வாரம். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி, கைநிறைய முன் பணம் பெற்று மகிழ்வர்.  தொழிலில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு இதுநாள்வரை இருந்து வந்த இழுபறி நிலைகள் பகலவனைக் கண்ட பனி போல் விலகும், சிலருக்கு வருமானவரிப் பிரச்சனைகள் தலைதூக்கலாம் எனவே, கம்பெனிக் கணக்குகளை  சீராக எழுதிவைக்கவும். இல்லையெனில் சிக்கல்களைச் சந்திக்கலாம். வந்தபின் ஓடுவதைவிட, வருமுன் காப்பது தானே புத்திசாலித்தனம். வீட்டில் பிடிவாதங்களைத் தளர்த்தினால் பிணக்குகள் தீரும். இடம் சம்பந்தமான வழக்குகள் வெற்றி பெற்று, புதிய சொத்துக்கள் சேரும். மனைவியை மகிழ்விக்க, புதிய ஆடைகள், ஆபரணங்கள் என வாங்கிக் கொடுத்து அசத்துவீர்கள்.

மீனம்

பூரட்டாதி – 4 ஆம் பாதம்உத்திரட்டாதி-1,2.3.4 பாதங்கள் , ரேவதி- 1,2,3,4 பாதங்கள்)

பூரட்டாதி – 4 ஆம் பாதம் –

      இந்த வாரம் சிலர் திருமணம் முடித்துப் புதிய வாழ்க்கையைத் துவங்குவார்கள். அரசு மூலம் புதிய கருவிகள் வாங்கி வெளாண்மையை விரிவாக்கம் செய்வீர்கள். கூட்டுத் தொழிலில் எச்சரிக்கையுடன் இருக்கவும். உங்கள் வாக்கு வன்மையால் பொருளாதார உயர்வு அடையும் வாய்ப்புகள் உருவாகும். வெளிவட்டாரப் பழக்கவழக்கங்களால் உங்களுக்குத் தேவையானவற்றை அடைவீர்கள்.  இந்த வாரம்  உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் வெற்றியின் மகிழ்ச்சியை அனுபவிப்பீர்கள்உங்கள் இல்லத்தில்  மகிழ்ச்சிகரமான கொண்டாட்டங்கள் தூள் பரத்தும்மாணவர்கள் தங்கள் பொன்னான நேரத்தை முகநூல் மற்றும் இணையதளங்களைப் பார்ப்பதில் வீணடிக்காமல்கருத்தோடு படித்தால் நல்ல மதிப்பெண்கள் பெறலாம்.

உத்திரட்டாதி-

       இந்த வாரம் பணவரவு அதிகரிப்பதால், சூரியனைக் கண்ட தாமரை மலர்போல் உங்கள் முகம் பிரகாசிக்கும். நிலுவையில் இருந்த   வழக்குகள்   நிச்சியமாக வெற்றி பெரும்விஐபி களின் நட்பு உருவாகும்அவர்கள் மூலமாக ஆதாயங்கள் பெறும் நிலை உருவாகும்கீர்த்தி பெருகும்புனித காரியங்களில் ஈடுபாடு ஏற்படும்.கௌரவப் பட்டங்கள் கிடைக்கும்பணிபுரிபவர்களுக்கு உதவியாளர்கள் அமைவர்அரசுப் பணிக்கு முயற்சி செய்பவர்கள் அனுகூலமான பதில்களை எதிர்பார்க்கலாம்.  விவசாயிகளுக்கு கால்நடைச் செல்வம்பால்வளம் பெருகும்மனதில்  நினைத்ததை நினைந்தபடியே நடத்தி முடிப்பீர்கள்அதிகாரம் பண்ணும் தலைப்பதவி கிடைக்கும்.பலவகைப் பயணங்களும் அதனால் இலாபமும் ஏற்படும்.

ரேவதி-

       இந்த வாரம் அரசுப் பணி புரிபவர்களுக்கு அனுகூலமான மற்றும் அற்புதமான வாரம்அவர்களுக்கு உயர் அதிகாரிகளின் ஆதரவு இருப்பதால்எதிரிகளின் கொட்டம் அடங்கும்அரசுப் பணிபுரியும் பெண்கள் தங்களுக்கு விருப்பமான இடத்திற்கு மாற்றம் பெற முயற்சிப்பர்அந்த முயற்சிகளில் அவர்கள் வெற்றியும் பெறுவார்கள். சிலருக்கு அனைத்து வசதிகளுடன் கூடிய அழகிய இல்லம் அமையும்புதிய பதவிகள் தேடிவரும்அந்தஸ்து உயரும்.  விவசாயிகளுக்கு ஆதாயம் கிட்டும்.சுபச் செய்திகளால் மனம் மகிழ்ச்சி ஏற்படும்தனவரவு அதிகமாவதால் தான தருமங்களில் ஈடுபாடு ஏற்படும்மாணவர்கள் தங்கள் தெளிவான அறிவினால் பாடங்களைச் சுலபமாக கிரகித்துக் கொண்டு அதிக மதிப்பெண்கள் பெறுவர். அதனால் அவர்களின்   தேர்வு முடிவுகள் பெற்றோர்களுக்கு மகிழ்ச்சி தருவதாக இருக்கும்.


n  ஜோதிட கலாநிதி எஸ்விஜயநரசிம்மன்எம்எஸ்ஸி.(அஸ்ட்ரோ) -94888 62923.
...