Pages

Wednesday, 1 October 2014

2014 - அக்டோபர் மாத இராசிபலன்கள் (ஜோதிட வாசல் இதழில் வெளியானது) மீனம்

2014 - அக்டோபர் மாத இராசிபலன்கள்

(ஜோதிட வாசல் ஜோதிட இதழில் வெளியானது)


மீனம்
( பூரட்டாதி – 4 ஆம் பாதம், உத்திரட்டாதி-1,2.3.4 பாதங்கள் , ரேவதி- 1,2,3,4 பாதங்கள்)

( இராசி  அறியாதவர்கள் பலன் அறியதீ, து, , , ஶ்ரீ, தே,தோ, ச்ச, சீ )

    தங்கள் இராசிநாதன் தொழில் பாவத்திற்கும், இராசிக்கும் அதிபதியாகி புத்திர பாவத்தில் இருப்பதால்  புத்திர பாக்கியம் ஏற்படும். இலாபங்கள், வாழ்க்கையில் மகிழ்ச்சி நிறைந்த நிகழ்ச்சிகள், நல்லவர்களுடன் நட்பு, அரசு அனுகூலம், அறிவு விருத்தி, சொத்து விருத்தி, உயர் அதிகாரிகளின் ஆதரவு மற்றும் அனைத்திலும் வெற்றி என அனைத்தும் சிறப்பாகவே நடக்கும். சிலருக்கு அலைச்சல்கள் அதிகமாகும். சிறு காயங்கள் மற்றும் இழப்புக்கள் ஏற்படலாம். உறவுகளிடையே பகை உருவாகலாம். பெண்களால் தொல்லைகள் மற்றும் விரயங்கள் ஏற்படலாம். சிலருக்கு புதிய பதவிகள், கௌரவம் கிடைக்கும். பொது வாழ்விலும், கூட்டாளிகள் மூலமாகவும் தனலாபம், மனமகிழ்ச்சி, வெற்றி ஆகியவை வந்து சேரும். சிலருக்கு அஜீரணம் ஏற்படும். நண்பர்கள் மற்றும் உறவுகள் மூலம் உதவி மற்றும் ஒத்துழைப்புக் கிடைக்கும். திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமணம் சிறப்பாக நடக்கும்.  சிலருக்கு அரசால் தொல்லைகளும், திடீர் மாற்றங்களும், தண்டச் செலவுகளும் ஏற்படும். மொத்தத்தில் மீனராசி அன்பர்களுக்கு 55 சதவிகித நற்பலன்களே ஏற்படும்.

    குடும்பம் மற்றும் ஆரோக்கியம் : மனைவியின் மத சம்பந்தமான நடவடிக்கைகள் கணவனின் பக்தியையும் ஊக்குவிக்கும். அவளின் முழு ஒத்துழைப்பு தங்களுக்கு மன அமைதி அளிக்கும். எனினும் குழந்தைகளுக்கு சிறு உடல் உபாதைகள் ஏற்படலாம். உயர்ரக வாகனங்கள் கிடைக்கும். கோவில் திருப்பணி செய்யும் பாக்கியம் கிடைக்கும்.

    தொழில் மற்றும் வியாபாரம் : உங்கள் நலம் விரும்பிகளால் கூட்டாளிகளுடனான குழப்பங்கள் சுமுகமாகத் தீர்த்து வைக்கப்படும்தொழிற்சாலையில் புதிய விரிவாக்கத் திட்டங்களை  அவசரமின்றி நிதானமாகச் செய்தால் இழப்புக்களைத்  தவிர்க்கலாம். உயர்அதிகாரிகள் மற்றும் அரசியல் வாதிகளின் நெருக்கத்தால் பதவி உயர்வும், இடமாற்றங்களும் சுலபமாகக் கிடைக்கும்.

    பொருளாதாரம் மற்றும் போட்டி பந்தயங்கள் : புதிய வருமானங்கள் வருவதற்கான வழிகள் தென்படவில்லை. பங்குச்சந்தை விவகாரங்களில் முதலீடுகளைக் குறைப்பதன் மூலம் அதிக இழப்பைத் தவிர்க்கலாம். தேவையற்ற செலவினங்கள் கூடும். பழைய வாகனங்கள் மற்றும் பொருட்களை விற்றுவிட்டுப் புதியனவற்றை வாங்குவர்.

    பெண்கள் : பணிபுரியும் பெண்கள் தற்போது பார்க்கின்ற வேலையை விட்டுவிட்டு வேறு நல்ல வேலை தேடுவார்கள், உயர் அதிகாரிகளின் சகாயத்தால் பணிகளில் இருந்து வந்த கெடுபிடிகள் குறையும். தகுந்த முடிவுகள் எடுக்காமல் புதிய திட்டங்களை நிறைவேற்ற முடியாமல் போகலாம்.
     
    மாணவர்கள் :  உயர்கல்வி பயிலும் மாணவர்கள் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தவேண்டும். அக்கறையுடன் படித்து அதிக மதிப்பெண்கள் பெற அயராது பாடுபடவேண்டும். வேடிக்கை விளையாட்டுக்கள், வெட்டிப் பொழுதுபோக்குகள் மற்றும் தேவையற்ற இன்பப் பயணங்கள் சிலரின் வாழ்க்கைப் பயணத்தையே திருப்பிப் போட்டுவிடலாம். எனவே, வெற்றிகளைக் குவிக்க விழிப்புடன் செயல்பட்டால் இலக்குகளை எளிதில் எட்டலாம்

    ஜனன ஜாதகப்படி இராசிக்கு அஷ்டமத்தானத்தில் கோசாரச் சந்திரன் சஞ்சரிக்கும்  காலமே சந்திராஷ்டம காலமாகும்இக் காலத்தில் சிக்கல்களும், சிரமங்களும் ஏற்படலாம். தங்களுக்கு இம் மாதம் சந்திராஷ்டம காலம் 23 –10 - 2014 மாலை      04 - 34 மணிமுதல் 25 – 10 - 2014 இரவு 12 – 18  மணி வரை ஆகும். இக் காலங்களில் கவனமுடன் செயலாற்றுங்கள்.

     அதிர்ஷ்ட எண்கள்;- 1, 4, 3 மற்றும் 9 ஆகும். அனுகூலமற்ற எண் 8 ஆகும்அனுகூலமான எண்கள் 2, 5, 6 ஆகும்.

    அதிர்ஷ்ட நிறம்;- மஞ்சள், சிகப்பு, ரோஸ் மற்றும் ஆரஞ்ச்  ஆகும். தவிர்க்க வேண்டிய நிறம் நீலம் ஆகும்.

    அதிர்ஷ்டக் கற்கள்;- புஷ்பராகக்கல்லை தங்கத்தில்  பதித்து மோதிரத்தை வியாழக்கிழமையன்று, பூஜைக்குப் பிறகு வலது கை முதலாவது விரலில் அணிவது உத்தமம்.

ஆகாதஇராசிகும்பம், மாதம் - பங்குனி, கிழமைவெள்ளி, நட்சத்திரம் -- ஆயில்யம், திதிகள்பஞ்சமி, தசமி, அம்மாவசை மற்றும் பௌர்ணமி  ஆகும். யோகம் --  வஜ்ரம், கரணம் -- சதுஷ்பாதம் ஆகும்,

பரிகாரம்;- தொடர்ந்து ஶ்ரீ லட்சுமி நரசிம்மரை வணங்கி,  நெய்த் தீபம் ஏற்றிவர, துன்பங்கள் தூர விலகும். சூரிய நமஸ்காரம் செய்தல், மஞ்சள் வண்ண ஆடையணியவும்,  மஞ்சள் மலர்களால் அர்ச்சித்தலும், புஷ்பராகக்கல் அணியவும் கொண்டைக் கடலைதானம் செய்வதும் தோஷநிவர்த்தி ஆகும்.


எட்டயபுரம். ஜோதிட ப்ரவீணா.
எஸ். விஜயநரசிம்மன். எம். எஸ்ஸி.
(அப்ளைடு அஸ்ட்ராலஜி),     
ஆதித்யா ஜோதிட ஆராய்ச்சி மையம்



No comments:

Post a Comment