Search This Blog

Loading...

Sunday, 29 July 2012

ஜோதிடம் கற்க

ஜாதகரின் வாழ்க்கை நிகழ்வுகள்,இந்த நேரத்தில் இன்னது நடக்கும் என துல்லியமாக கண்டறியப்பட்டாலே பலன் கூறும் ஜோதிட முறை, அதன் முழுமையான, நூறு சதவிகித நன்மைகளின் மகிழ்ச்சியை அடையமுடியும்.

மிகமிக வேகமாக ஓடும் தற்போதைய , எந்திரத்தனமான மனித வாழ்க்கையில், நேரமின்மை மற்றும் பொறுமையின்மை காரணமாக, அனைவரும் எதிர்வரும் காலங்களில் என்ன நடக்கப் போகிறது என்பதையறிய மிக்க ஆவலுடன் உள்ளனர்.

மேலும், பலன் கூறுவதில் துல்லியம் இருந்தால் ஜோதிட விஞ்ஞானத்தை நம்பாதவர்களும், ஜோதிடம் உண்மையா? அல்லது பொய்யா? என மனக் குழப்பம் உடையவர்களும், கண்டிப்பாக துல்லியமான பலன் காரணமாக தங்கள் மனநிலையை மாற்றிக்கொண்டு நம்பிக்கையடைவர்.அத்தகைய நம்பிக்கையை அடைய எளிய முறையில் ஜோதிடப் பாடங்களை நடத்த முயல்கிறேன். படித்து பலனடைந்து,எனக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்து உங்கள் பினூட்டங்கள் மூலமாக, எனது முயற்சிகளுக்கு உத்வெக மளிக்கக் கோருகிறேன்.

ஆரம்பநிலையிலுள்ளவர்களும், ஜோதிட அடிப்படை அறிந்தவர்களும், அலுப்புத்தட்டாமல், படித்து அறிந்து கொள்ளும் வகையில்,பாடங்களும்,பல ஜோதிடப் பத்திரிக்கைகளில் என்னால் எழுதப்பட்ட,ஜோதிடக் கட்டுரைகளை யும் எழுதியுள்ளேன். அவற்றை படித்து , பயன் பெற்று, உங்கள் பின்னூட்டங்கள் மூலமாக ஊக்கமளிக்க வேண்டுகிறேன்.

கடந்த  ஒரு வருடம்  2  மாதத்தில்  140 பதிவுகளை அளித்துவிட்டேன்.உங்கள் அனைவரையும் தங்கள் பின்னுட்டங்களைத்  தவறாது அளித்து என்னை ஊக்குவிக்கவும் கேட்டுக்கொண்டேன். இந்தியப் பார்வையாளர்கள் 16,825-அமெரிக்கப் பார்வையாளர்கள் 2334 பேரும்,  உக்ரைன் - 1012, ஸ்ரீலங்கா - 964, சிங்கப்பூர் -- 243, குவைத் -- 48,  இங்கிலாந்து -- 438, மலேசியா -- 236, யூ.ஏ.இ -- 263, ஜெர்மனி -- 148, பிரான்ஸ் -- 38, ரஷ்யா -- 8, கத்தார் -- 7, சீனா -- 211,லாட்வியா-31, எத்தியோப்பியா-3, அயர்லாண்ட் -57, தான்சான்யா-77 என 26,000 த்துக்கும் மேற்பட்டோர், பார்வை புரிந்தும் பின்னூட்டம் அளிக்காதது மனச் சோர்வு
அளிக்கிறது. எனவே, வாளாவிருக்காமல் தங்கள் ஆலோசனைகளையும், பின்னூட்டங்களையும் அளித்து ஆதரவு அளிக்கக் கேட்டுக்கொள்கிறேன். நன்றி.வணக்கம்.

8 comments:

  1. நீங்கள் தொடருங்கள் உங்கள் சேவை யை சிறப்பாக

    ReplyDelete
  2. you did great job brother. please continue
    K.Rajinikanth

    ReplyDelete
  3. Thank U Sir. I will continue for the benifit of the people, who are inerested in astrology.

    ReplyDelete
  4. nalla irukku unga post .......

    ReplyDelete
  5. நன்றி.. தங்கள் வார்த்தைகள் ஊக்கமளிக்கின்றன.நண்பர் ஜகதீசன் அவர்களே !

    ReplyDelete
  6. மிக அருமையான பதிவுகள் உங்கள் பனி தொடர வாழ்த்துக்கள் ஐயா ,,,திதி சூன்யத்தை பற்றி எழுதுங்கள் ஐயா ஆவலோடு இருக்கிறேன்,,,,

    ReplyDelete
    Replies
    1. ஆதரவுக்கு நன்றி. நண்பரே. திதி சூனியம்பற்றி எழுதுகிறேன்.

      Delete