Search This Blog

Showing posts with label 2014-அக்டோபர் மாத இராசி பலன் ஜோதிட வாசல் - ஜோதிட இதழில். Show all posts
Showing posts with label 2014-அக்டோபர் மாத இராசி பலன் ஜோதிட வாசல் - ஜோதிட இதழில். Show all posts

Wednesday, 1 October 2014

2014-அக்டோபர் மாத இராசி பலன் ஜோதிட வாசல் - ஜோதிட இதழில்---கடக இராசிக்கான பலன்கள்.

2014-அக்டோபர் மாத இராசி பலன்

ஜோதிட வாசல் - ஜோதிட இதழில்

கடகம்

(புனர்பூசம்- 4 ஆம் பாதம், பூசம்-1,2,3,4 பாதங்கள், ஆயில்யம்-1,2,3,4 பாதங்கள்)

( இராசி  அறியாதவர்கள் பலனறியஹி, ஹூ, ஹே, ஹோ, , டி, டு, டே, டோ )

          இம் மாதம் எல்லாவிதத்திலும் நன்மைகள் ஏற்படும். ஆரோக்கியம் மேம்படும். தனலாபம் அதிகரிக்கும். எடுத்த காரியம் அனைத்திலும் வெற்றி கிட்டும். பயிர், மனை இவற்றால் இலாபம் ஏற்படும். கல்வியில் தேர்ச்சி உண்டாகும். உயர்ரக வாகனங்கள் வாங்கும் யோகம் அமையும். அரசாங்க அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். உயர்பதவிகள் தேடிவரும். நிர்வாகத் திறன் மற்றும் செயல்திறன் அதிகரிக்கும். நல்ல மனைவி அமைவாள். பெயரும், புகழும் ஓங்கும். பொன்னும் பொருளும் கிடைக்கும், அதிகாரம் செய்யும் தலைமைப் பதவிகள் கிடைக்கும்,ஆயினும் ஜென்ம குரு, கேது, புதன், செவ்வாய் ஆகியோரின் அனுகூல மற்ற பலன்கள்  சங்கடங்களைத் தரலாம். மொத்தத்தில் கடகராசி அன்பர்களுக்கு 60 சதவிகித நற்பலன்கள் ஏற்படும்

.     குடும்பம் மற்றும் ஆரோக்கியம்: சாமர்த்திய சாலியாக விளங்குவார். வெளிநாட்டுப் பயணங்களும் அதனால் லாபமும் ஏற்படும். குடும்பத்திற்கு அதிகப்படியான வருமானம் கிடைக்கும். அனைத்து வசதிகளுடன் கூடிய தனி வீடு அமையும். பக்தி மார்க்கத்தில் அதிக ஈடுபாடு ஏற்படும். சிலர் பிறரால் ஏமாற்றப்படலாம். எனவே எச்சரிக்கை தேவை. சிலர் உருப்படியான வேலைகளைச் செய்யாமல், வெட்டிவேலைகளில் ஈடுபடுவர்.

     தொழில் மற்றும் வியாபாரம்: கூட்டாளிகளின் நியாயமற்ற நடவடிக்கைகள், எரிச்சலைத் தரும். தொழிலில் போட்டிகளைச் சமாளிக்க கடினமாக உழைக்க வேண்டிய நிலை ஏற்படும். வாடிக்கையாளர்களிடம் உண்மையாக நடந்துகொண்டால் வியாபாரம் பெருகும். நினைத்தபடி வாடகை வருமானங்கள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். புதிய வாகனங்கள் வாங்கும் எண்ணம் ஈடேறும். புதிய தொழில்கள்  மூலமாக பணவரத்து அதிகரித்து உயர்வும் ஏற்படும்.

    பெண்கள்; பணிபுரியும் பெண்களுக்கு சாதகமான நிலை உருவாகும் வீட்டிலுள்ளவர்களால், வீட்டு மனைவிகளுக்கு வேதனைகளும் சோதனைகளும் ஏற்படும். ஆனால், குழந்தைகளின் தேர்ச்சி மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கும். அரசின் உதவிகள் கைகொடுக்கும்எதைச் செய்தாலும் சிரத்தையுடன் செய்தல் வேண்டும், அரசில் பணிபுரியும் பெண்கள்  அதிகாரிகளின் ஆலோசனைகளைக் கேட்டு நடந்தால் நன்மைபயக்கும்.

    மாணவர்கள் : பருவத்தேர்வுகளில் குறைவான மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் அதிக அக்கறையுடன் படிக்கவேண்டும். மாணவர்களின் கவனம் உல்லாசப் பயணங்களிலும், இன்ப நுகர்விலும், விளையாட்டுத்தனங்களிலும் ஈடுபடுவதால் அறிவுத்திறனும், கல்வியில் தேர்ச்சியும் குறையும். தொழிற் கல்வி மாணவர்கள் தங்கள் தனித் திறமைகளால் முன்னேறுவர்.   தேர்வுகள் நெருங்குவதால் கூட்டாகச் சேர்ந்து அக்கறையுடன் படித்தால் அதிக மதிப்பெண் பெறலாம்.

     சந்திராஷ்டமம்;- ஜனன ஜாதகப்படி இராசிக்கு அட்டமத்தானத்தில் கோசாரச் சந்திரன் சஞ்சரிக்கும் காலமே சந்திராஷ்டம காலமாகும்இக் காலத்தில் சிக்கல்களும், சிரமங்களும் ஏற்படலாம். தங்களுக்கு இம் மாதம் சந்திராஷ்டம காலம் 05 – 10 - 2014 அதிகாலை 3 – 37 மணி முதல் 07 – 10 - 2014 அதிகாலை 6 – 02  மணி வரையாகும். இக் காலங்களில் கவனமுடன் செயலாற்றுங்கள்.

    அதிர்ஷ்ட எண்கள்;- 4 மற்றும் 6 ஆகும். கவரும் எண்கள் 8 மற்றும் 1 ஆகும். சாதகமான எண்கள் 2, 7 மற்றும் 9 ஆகும். அனுகூலமற்ற எண்கள் 3 மற்றும் 5 ஆகும்.

    அதிர்ஷ்ட நிறம்;- வெள்ளை, க்ரீம், சிகப்பு, மற்றும் மஞ்சள் ஆகும். தவிர்க்க வேண்டிய நிறங்கள் நீலம் மற்றும் பச்சை ஆகும்.

    அதிர்ஷ்டக் கற்கள்;- வெள்ளியில் பதிக்கப்பட்ட முத்து மோதிரத்தைத் தங்கத்தில் பதித்து திங்கள் கிழமையன்று, பூஜைக்குப் பிறகு வலது கை நான்காவது விரலில் அணிவது உத்தமம்.

    ஆகாதஇராசிசிம்மம், மாதம்மாசி, கிழமைபுதன், நட்சத்திரம் -- அனுஷம், திதிகள்துவிதியை, சப்தமி மற்றும் துவாதசி ஆகும். யோகம் -- வியாகதம், கரணம் -- நாகவம்  ஆகும்.

    பரிகாரம்;- தொடர்ந்து சிவபெருமானுக்கு  நெய்த் தீபம் ஏற்றிவர, துன்பங்கள் தூர விலகும். வெண்மையான ஆடையணியவும், வெண்மையான மலர்களை அர்ச்சித்தலும், சங்குதானம் அல்லது பச்சரிசி தானம் செய்வதும் தோஷநிவர்த்தி தரும்.                           

2014-அக்டோபர் மாத இராசி பலன் ஜோதிட வாசல் - ஜோதிட இதழில்

          


2014-அக்டோபர் மாத இராசி பலன்

ஜோதிட வாசல் - ஜோதிட இதழில்




மேஷம்

( அஸ்வினி-1, 2, 3, 4 பாதங்கள்பரணி-1, 2, 3, 4 பாதங்கள்கார்த்திகை-1 பாதம்)

( இராசி  அறியாதவர்கள் பலன் அறிய - சு, சே, சொ, , லெ, லு, லே, லோ, )

    தங்கள் இராசிநாதன் செவ்வாய் அனுகூலமற்ற நிலையில் உள்ளார். ஆரோக்கியக் குறைவு, வெளிநாட்டு வாசம் ஏற்படலாம். ஆயினும் சூரியன், புதன், இராகு  அனுகூலமான நிலையில் உள்ளதால்,  தங்களுக்குப் பலவகை இலாபங்களையும், மகிழ்ச்சியையும், சுகத்தையும், தனலாபத்தையும், அனைத்து  நன்மைகளையும் தரும்பக்தியில் நாட்டம் தரும். பயணங்களில் எச்சரிக்கை தேவை. உயர்ரக ஆடை ஆபரண வகைகள்மற்றும் விரும்பிய பொருட்களெல்லாம் கிடைக்கும். குழந்தைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமணம் நடக்கும், வாகன சுகம் ஏற்படும்.  புகழ் ஓங்கும். அனைவராலும் போற்றப்படுவர். மொத்தத்தில் மேஷராசி அன்பர்களுக்கு 60 சதவிகித நற்பலன்கள் ஏற்படும்.

    குடும்பம் மற்றும் ஆரோக்கியம் : குழந்தைகளின் முன்னேற்றம் மகிழ்ச்சி தரும். பொருளாதார நிலைகள் சீராகி வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும். காரியங்கள் அனைத்தும் வெற்றி பெரும். இருவரின் பக்தி மீதான நம்பிக்கையால் வாழ்க்கையில் மனமகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்ப ஆரோக்கியம் பெருகும்நண்பர்களின் உதவி கிடைக்கும்.

    தொழில் மற்றும் வியாபாரம் : வியாபார நிலவரங்களுக்கு ஏற்ப புதிய நுணுக்கங்களைப் புகுத்தி வியாபாரத்தில் ஆதாயம் காணலாம். உதிரிப் பாகங்கள் அல்லது மென்பொருள் சாதனங்களின் விற்பனை சூடுபிடிக்கும்.  சிலருக்கு  வெளிநாட்டுப் பயணங்கள் ஏற்படலாம். வாழ்வில் ஒளியும் முன்னேற்றமும் ஏற்படும். மதிப்புமிக்க மனிதர்களின் நட்பு கிடைக்கும். அரசுப் பணியாளர்களுக்கு ஆதாயம் பெருகும்விவசாய விளைபொருட்களால் நல்ல ஆதாயம் கிட்டும்.

    பெண்கள் : கணவன்மார்களின் உதவியால் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்பணிபுரியும் பெண்கள்  கடமை தவறாது செயல்பட்டு உயர் அதிகாரிகளின் பாராட்டைப் பெறுவர்செலவுகளை குறைத்து சேமிப்பை உயர்த்த ஓளிமயமான வாழ்வு அமையும். சுயவுதவிக் குழுப் பெண்களுக்குச் சுலபமாக வங்கிக் கடன்கள் கிடைக்கும்.

    மாணவர்கள்: மாணவ, மாணவிகளுக்கு அறிவுத்திறனும், கல்வியில் தேர்ச்சியும் ஏற்படும். ஹைக்ரீவரை வணங்க நினைவாற்றல் அதிகரிக்கும்.  மிகுந்த அக்கறையுடன் பாடங்களைப்  படித்தால் மட்டுமே தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற இயலும். விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்று, பள்ளிக்குப் பெருமை சேர்ப்பர். வண்டி வாகனங்களில் மிதவேகத்தில் சென்றால் விபத்துக்களைத் தவிர்க்கலாம்.

    சந்திராஷ்டமம்;- ஜனன ஜாதகப்படி இராசிக்கு அட்டமத்தானத்தில் கோசாரச் சந்திரன் சஞ்சரிக்கும் காலமே சந்திராஷ்டம காலமாகும்இக் காலத்தில் சிக்கல்களும், சிரமங்களும் ஏற்படலாம். தங்களுக்கு இம் மாதம் சந்திராஷ்டம காலம் 25 – 10 – 2014 இரவு 12 – 19 மணி முதல், 28 – 10 – 2014 அதிகாலை 5 – 42 மணிவரையாகும். இக் காலங்களில் கவனமுடன் செயலாற்றுங்கள்.

    அதிர்ஷ்ட எண்கள்;- 1 மற்றும் 9 ஆகும். கவரும் எண்கள் 4 மற்றும் 8 ஆகும். சாதகமான எண்கள் 2, 3, 5 ஆகும். அனுகூலமற்ற எண்கள் 6 மற்றும் 7 ஆகும்.

    அதிர்ஷ்ட நிறம்;- சிகப்பு, மஞ்சள், செம்பு மற்றும் தங்க நிறமாகும் ஆகும். தவிர்க்க வேண்டிய நிறம் கருப்பு ஆகும்.


    அதிர்ஷ்டக் கற்கள்;- செம்பவழம் செம்பில் அல்லது வெள்ளியில் பதித்து வியாழக் கிழமையன்று, பூஜைக்குப் பிறகு வலது கை முதலாவது விரலில் அணிவது உத்தமம்.


    ஆகாதஇராசிவிருச்சிகம், மாதம்கார்த்திகை, கிழமைஞாயிறு, நட்சத்திரம் -- ஹஸ்தம், திதிகள்பிரதமை, சஷ்டி மற்றும் ஏகாதசி ஆகும். யோகம் -- விஷ்கம்பம், கரணம் -- பவம்  ஆகும். இந்தக் காலங்களில் நல்லசெயல்கள் செய்வதைத் தவிர்ப்பது நல்லது.

    பரிகாரம்;- தொடர்ந்து ஶ்ரீ ஆஞ்சனேயருக்கு சனிக்கிழமைகளில் நெய்த் தீபம் ஏற்றிவர, துன்பங்கள் தூர விலகும். வெள்ளை உடையும், வைரமும் அணியவும், வெள்ளி அல்லது மொச்சை தானம் செய்வது தோஷநிவர்த்தி தரும்.