Search This Blog

Showing posts with label தினபூமியில் - தினபலன். இந்த நாள் இனிய நாள் ? - இன்றைய நாள் எப்படி ?. Show all posts
Showing posts with label தினபூமியில் - தினபலன். இந்த நாள் இனிய நாள் ? - இன்றைய நாள் எப்படி ?. Show all posts

Tuesday, 4 November 2014

தினபூமியில் - தினபலன். இந்த நாள் இனிய நாள் ? - இன்றைய நாள் எப்படி ?



தினபூமியில் - தினபலன்.

இந்த நாள் இனிய நாள் ? - இன்றைய நாள் எப்படி ?

(ஜோதிடப் ப்ரவீணா. எட்டயபுரம் எஸ். விஜயநரசிம்மன்)
4/11/2014 –செவ்வாய்.

மேஷம் -- கல்வியில் வெற்றிபெற கடின உழைப்புத் தேவை. கௌரவக் குறைவு ஏற்படா வண்ணம் பார்த்துக் கொள்வது சிறப்பு. மனைவி, மக்களின் உடல் ஆரோக்கியத்தில் மிகுந்த அக்கறை தேவை. துன்பம் வந்தாலும் சிரிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.

ரிஷபம் -- அன்பு சகோதரர்களால் அதிக உதவி உண்டு. எடுத்த காரியங்கள் யாவற்றிலும் எளிதில் வெற்றி கிடைக்கும். முகநூல் மூலமாகப் புதிய நண்பர்களைப் பெறுவீர்கள். மனைவியின் உதவி பெற்று மகிழ்வீர்கள். வியாபாரிகளுக்குத் தன்னம்பிக்கை கூடும்.

மிதுனம் -- அன்னையின் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் தேவை. தடைபடும் காரியங்கள் கண்டு தன்னம்பிக்கை இழக்காதீர்கள். முயற்சி திருவினை யாக்கும் என முயற்சியைக் கைவிடாது, முன்னேற முயலுங்கள் வெற்றி உங்கள் பக்கம். வாழ்க வளமுடன்.

கடகம் -- எதிலும் ஆராய்ந்து செயல்களில் இறங்கவேண்டிய நாள். சிரத்தையற்ற செயலால் திறமை இருந்தும் நல்ல பெயர் கிடைக்காது. தொழில் ஆர்வம் கூடுவதால், ஆதாயம் பெருகும். சிலருக்குத் தேவையற்ற  கவலைகள் எழும். வியாபாரிகளுக்கு ஓரளவு இலாபம் கிடைக்கும்.

சிம்மம் -- எல்லா வளமும் பெறும் இனிய நாள். உல்லாசப் பயணங்களால் உள்ளம் மகிழும். புதுப்பெண்கள் சிநேகமும், தனக்கென ஒரு தனிவீடும் அமையும். குடும்பத்தில் சுபகாரியங்கள் குதுகலமாய் நிறைவேறும். எதிரிகள் பணிவர். ஏற்றம் ஏற்படும்.

கன்னி -- பல முகாந்திரங்களிலும் பண வரவு கூடும். எடுத்த காரியங்கள் எல்லாம் கை கூடும். அரசாங்கத்தால் ஆதாயம் கிடைக்கும். காளைகள் காதல் வயப்பட்டுக் களிப்பு எய்துவர். புதிய தொழில் முயற்சிகள்  எளிதாக ஈடேறும்.

துலாம் -- எல்லோருக்கும் நல்லதே நினையுங்கள். வழக்குகளில் வாய்தா வாங்கிக் கொள்வது நல்லது. மனைவியின் மனம் அறிந்து செயல்பட்டால் கருத்து வேறுபாடுகளைத் தவிர்க்கலாம். எந்தச் செயலையும் அவசரமின்றி நிதானமாகச் செய்தால் வெற்றி நிச்சியம்.

விருச்சிகம் தெய்வ பக்தியால் மனநிம்மதி கூடும். அன்னதானம் பொன்ற நற் காரியங்களில் ஈடுபடுவீர்கள். திருவருளாலும், குருவருளாலும் வாழ்க்கையில் நல்ல திருப்பங்கள் ஏற்படும். மனதிற்கினிய நல்ல மனைவி அமைவாள். புனிதப் பயணங்களால் புண்ணியம் சேரும்.

தனுசு -- தன்னம்பிக்கை, தைரியம் எல்லாம் ஓங்கும் நாள். அனைத்து செயல்பாடுகளும் அனுகூலமாய் அமையும். திருப்திகரமான தீர்த்த யாத்திரைகள் மகிழ்வு தரும். வேண்டுதல்கள் நிறைவேறும். புதிய தொழில்கள் தொடங்க சாதகமான சூழ்நிலை அமையும்.

மகரம் -- பெண்களால் தனலாபம் அடைவீர்கள். பிறருக்கு விருந்து உபசாரம் செய்து மகிழ்வீர்கள். பிரிந்தவர் கூடிப் பேரின்பம் அடைவர். மாணவர்களுக்குக் கல்வியிலும், வியாபாரிகளுக்குத் தொழிலிலும் வெற்றி கிட்டும்.

கும்பம் -- கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாது. எடுத்த காரியங்களில் ஆதாயம் பெற எச்சரிக்கையுடன் நடத்தல் அவசியம். தீயவழிகளில் தேவையற்ற செலவுகளைச் செய்ய வேண்டியது வரும். சிலருக்கு இடமாற்றமும், பணமுடையும் ஏற்படலாம்.

மீனம் -- குடும்ப சுகத்தில் திருப்தி ஏற்படும். புத்தாடை அணிகலன்கள் ஆகியவற்றை அணிவார், சாத்திரங்களில் ஆராய்ச்சியும், தேர்ச்சியும் ஏற்படும். பெரியோர்பால் நேசம் ஏற்படும்.தொழில் வளம் பெருகும். எதையும் துணிச்சலோடு எதிர் கொள்வீர்கள்