Search This Blog

Showing posts with label முன்வினை. Show all posts
Showing posts with label முன்வினை. Show all posts

Sunday, 29 July 2012

முன்வினை.......

உலகத்திலே மனிதர்கள் முன்ஜென்மத்தின் வினை கொண்டு அவரவர் செய்த பாவபுண்ணியத்துக்கு ஈடாக சுகதுக்கங்களை அனுபவித்து வருகிறார்கள்.இது சாஸ்திர சமபந்தம் மனித ஜென்மத்திலே,ஒருவன் ஷூ போட்டு செல்கிறான் மற்றவன் அதற்கு பாலிஷ் போடுகிறான்.

இதனாலேயே பாவ புண்ணியங்களுக்கான பலாபலன்களை நாம் உணர்ந்து கொள்ளலாம், மனைவி மக்கள், பெற்றோர், உற்றார், உறவினர் இவர்களோடு கூடி வீடு,தோட்டம், வாகனங்கள் என நல்ல விதமாக, சந்தோஷமாக நல்ல வேலையுடன், உயர்பதவியுடன், புகழுடன் வாழ்கிறவர்கள் போன ஜென்மத்தில் பெரும் புண்ணியம் செய்தவர்கள் என்றும் உண்ண உணவின்றி,உடுக்க உடையின்றி,யாசித்து உண்ணும், ஏழ்மை வாழ்க்கை நடத்தி,வேலையின்றித் தவித்தும், வீடுவாசலின்றி அலைந்தும்,  பலவித வியாதிகளால் துன்பப்பட்டும்,கொடுமைமிக்க மனைவி,கொடிய நண்பர்கள் என அமைந்தும், மனைவியின்மை, மழலைகளின்மை, உடல்ஊனம், சர்வகாலமும் துன்பமும் அனுபவிப்பவர்கள் சென்ற பிறவியில் பாவங்கள் பல புரிந்தவராவர்.

இந்த இரகசியத்தை அறியவேண்டுமானால் ஜோதிட சாஸ்திரம் மூலமாக பலன்களைப் பார்த்து அறியவேண்டும். இதற்கு கணித ஆராய்ச்சிவன்மையும்,நல்அறிவும் வேண்டும். அதற்கான பாடங்களை இனி தொடர்ந்து பாரக்கலாம்.