Search This Blog

Sunday 7 April 2024

அண்ணாமலையும், அரசியலும்

 




அண்ணாமலையும் அரசியலும்

        

 

 



புத,ராகு

சுக்

 

 

சனி(வ)

செவ்(வ)

ராகு

 

சுக்

 

ராசி

4 ஜூன், 1984.

12-00 பகல்

கரூர்.

சந்

 

 

நவாம்சம்

சூரி

 

 

லக்//

புத

லக்//

 

குரு(வ)

கேது

மா,சனி

(வ), செவ்(வ)

 

சந்

 

கேது

குரு(வ)

 

 

 

          மேலே திரு. அண்ணாமலை அவர்களின் ஜாதகம் கொடுக்கப்பட்டுள்ளது. பொதுவான பலன்களாக சிம்ம லக்னத்தில் பிறந்த ஜாதகர் விசேஷ ராஜ குணங்களை உடையவராக இருப்பார். நல்லொழுக்கமும், மரியாதையும் உடையவராகவும் இருப்பார். தூய உள்ளமும், வெளிப்படையானவராகவும், இரக்க குணம் உடையவராகவும், பரந்த மனப்பான்மை உடையவராகவும் இருப்பார். சில நேரங்களில் குறுகிய மனம் கொண்டவராகவும் இருப்பார். தலைமைக்கான தகுதியும், எதையும் சிறப்பாகவும், பெரிதாகவும் ஏற்பாடுகள் செய்வதில் வல்லவர். எப்போதுமே தன்னைச் சுற்றி அனைவரும் இருப்பதும், அவர்களுக்கு மத்தியில் தான் நடுநாயகமாக வீற்றிருப்பதையே விரும்புவார். பிறரை மன்னிக்கும் தாயாள குணம் உடையவர். பயமற்றவர். மிகவும் தைரியசாலி. ஆளுமை மிக்கவர். அர்ப்பணிப்பு உணர்வு, அமைதியை விரும்புதல் ஆகிய குணங்களை உடையவர். ஒவ்வொரு தருணத்திலும் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பதையே  விரும்புவார் முரட்டுத்தனமும், சுயதம்பட்டமும், தான் என்ற கர்வமும் உடையவர்.  எல்லோரையும் வசீகரிப்பதையே விரும்புவார்.  வாழ்க்கையின் முக்கிய குறிக்கோளாக முன்னேறிக் கொண்டே இருப்பதையே விரும்புவார். நியாயத்துக்காக போராடுவார்.

இவரது முக்கிய ஆசை – சமூக அந்தஸ்தை நிலைநாட்டிக் கொள்வதே ஆகும்.

கடக லக்னத்தில் பிறந்தவர்கள் தங்கள் பெற்றோர், ஆசிரியர், நற்குணமுள்ளோர் ஆகியோர் மீது பக்தியுள்ளவராக, விசுவாசமுள்ளவராக இருப்பார். திறமைமிக்க வேலையாள். அரசருக்கு மந்திரியாவார். புகழ் அடைவார். வெளிநாடு செல்வார். திறந்த மனமுடையவர், வெளிப்படையாக பேசக்கூடியவர் என்று காணப்பட்டாலும், பல விஷயங்களை மறைக்கக் கூடியவராகவே இருப்பார். உணர்ச்சி வசப்பட்டவர். கற்பனையாளர். பார்ப்பதற்கு கரடு முரடானவராக காணப்பட்டாலும், உள்ளூர மென்மையானவராக இருப்பார்.

         இவரது ஜாதகத்தில் சூரியன் பத்தாம் இடத்தில் இருப்பதால், திறமைசாலியாக இருப்பார். அரசால் அங்கீகரிக்கப்படுவார். கௌரவப் படுத்தப்படுவார். செல்வமுடையவர். இரக்கமுள்ளவர். அதிர்ஷ்டசாலி. நற்குணமுடையவர். மந்திரியாவார். புகழ் அடைவார். அரசு தொடர்பு, அரசுப்பணி, தலைமை பொறுப்பு, வாகன யோகம்,  அரசால் அனுகூலம் ஆகியவை உண்டு. கடின உழைப்பால் வெற்றி கொள்வார். தன்னை சார்ந்தவர்களையும் நற் செயல்கள் செய்யவே தூண்டுவார். ஞானம் மிக்க நல்லவர்களை போற்றுவார். உயர்பதவிகளை எய்துவார். பாராளுமன்றத்தில் இடம் பெறுவார். கவர்னர், பிரதம மந்திரி போன்ற மிகப் பெரிய பதவிகளையும் அடைவார்.

         சந்திரன் விரய பாவத்தில் அமர்ந்துள்ளதால், இனிமையாக பேசுவார். ஹோமம், மத விழாக்கள் போன்ற நற்காரியங்களுக்காக, தர்ம காரியங்களுக்காக பணம் செலவழிப்பார். வெற்றியாளர். மகிழ்ச்சியானவர்.

         தைரிய பாவத்தில் செவ்வாய் இருப்பதால், வீரம் மிக்கவர். சந்தோஷத்தை விரும்புபவர், புத்திசாலி, புகழ், தைரியம், பொறுமை, திறமை மிக்கவர். தனது சுய பலத்தினால் சக்தி மிக்கவர். இவர் இல்லத்தில் திருமகள் எப்போதும் நிரந்தரமாக, வாசம் செய்வார். அரசனால் விரும்பப்படுபவர். நோயற்ற வாழ்வு வாழ்வார். நாகரீகம் மிக்கவர். போர்களத்தில் சிறந்த வீரராக இருப்பார். அரசரால் கௌரவிக்கப் படுவார். வெல்ல முடியாதவர். மந்திரியாவார். நண்பர்களால் நன்மையடைவார்.

         ஒரு ஜாதகத்தில் புதன் கர்ம பாவத்தில் இருப்பது மிகச் சிறந்த நிலையாகும். ஜாதகர் சட்டம் அறிந்தவர். நியாயமானவர். உண்மையானவர். புத்திசாலி. பாயிண்டாக பேசுவதில் வல்லவர். நினைவாற்றல் மிக்கவர். பெற்றோர்களின் ஆசிகளை உடையவர். பரம்பரை சொத்துக்கள் கிடைக்கும்.  அரசு அதிகாரம் காரணமாக தக்க முடிவுகளை எடுக்கக் கூடியவர். உலகமே ஜாதகரைக் கொண்டாடும். இவர் தொட்டதெல்லாம் துலங்கும்.

          குரு 5 இல் இருப்பவர்கள், அகன்ற கண்களுடன் கவர்ச்சிகரமானவராக இருப்பர். மத ஆர்வம் மிக்கவர். கருணை உள்ளம் கொண்டவர். பெரிய அன்பர்களால் வணங்கப்படக் கூடியவர். வாதிடுவதில் வல்லவர். சிறந்த சொற்பழிவாளர். தர்க்கவாதி, குறுக்கு விசாரணை செய்வதில் வல்லவர். நியாயத்துக்காக போராடுவார். எழுத்தாளர். சகலகலா வல்லவர். அழகிய குழந்தைகளை உடையவர். அரசருக்கு ஆலோசகராக, மந்திரியாக திகழ்வார்.      

        கர்ம பாவத்தில் உள்ள சுக்கிரன் இவரை அமைதியானவராகவும், நட்பு மிகுகவராகவும், ஜோதிடக் கலையை அறிந்தவராகவும், கூர்மதி உடையவராகவும், உலகளாவிய புகழ் உடையவராகவும், ஆக்கிவிடுகிறது.  மக்கள் மத்தியில் மிகவும் மதிக்கப்படுபவராகவும் இருப்பார். விவசாயம் மூலம் நல்ல வருமானங்களை பெறுவார். அதிகாரம் மிக்க அரசு பதவிகளை பெறுவார். மனைவி செல்வம் மிக்கவராக இருப்பார். திருமணத்திற்குப் பிறகே அதிர்ஷ்டம் ஏற்படும்.காட்டில் இருந்தால் கூட ராஜ வசதி மிக்க வாழ்க்கை வாழ்வார்.  தூரதேசத்தில் அல்லது வெளி இடங்களில் வாழ்வார்.

       சனி தைரிய பாவத்தில் இருப்பதால், ஜாதகர் நியாயவானாகவும், விவேகமுள்ளவராகவும், திடமான, உறுதியான, அசைக்க முடியாதவராகவும் இருப்பார். இலவச ஆலோசனைகளை வாரி வழங்குபவராகவும் இருப்பார். ஜோதிட ஆர்வலர். ஆழ்ந்த விஞ்ஞான அறிவும் உண்டு. தைரியமான, வீரமுள்ள, துணிவானவராக இருப்பார். எதிரிகளை துவம்சம் செய்வார். சுறுசுறுப்பாக பணி செய்வார். அதிகம் பேசமாட்டார். வெற்றியாளர். வெல்ல முடியாத திறமைகளை உடையவர். தனிமையை விரும்புவார். (ஞானி போல்). யாருக்கும் தீங்கிழைக்காமல் ஆதரவு தருவார். எட்டு திக்கும் இவர் புகழ் பரவும்.

       கர்ம பாவத்தில் உள்ள ராகுவால் எதற்கும் அஞ்சாதவராக இருப்பார். நற்குணம் உடையவர். சக்தி மிக்கவர்களின் தயவு இவருக்கு எப்போதும் உண்டு. கவிதைகளில் ஆர்வமுண்டு. உயர் பதவி, அமைச்சர், போன்ற பதவிகள் தேடிவரும். வழக்கு விவகாரங்களில் வெற்றி அடைவார். இளமையில் கஷ்டங்களை அனுபவித்தாலும் 21 வயதுக்குப் பிறகு அதிர்ஷ்டம் ஆரம்பமாகும். 36 வயதில் முழுமையான முன்னேற்றங்களை அடைவார். 42 வயதில் பொது வாழ்க்கையில் நல்ல கௌரவங்களை அடைவார். ராஜ நிலையும் அடைவார்.

        சுக பாவ கேது தைரியம், உண்மை, மென்மையான பேச்சு, செல்வ நிலை, முன்னேற்றம் ஆகியவற்றை குறிகாட்டுகிறது. நண்பர்கள் இவரை சந்தோஷமாக வைத்திருப்பர். உயர் பதவிகளை அலங்கரிப்பார். உயர் வாகன வசதிகள் ஏற்படும்.

பாவாதிபதிகள் மாறி நின்ற பலன்கள் –

        இலக்னாதிபதி கர்ம பாவத்தில் இடம் பெற்றுள்ளதால் அழகானவராகவும், திறமைசாலியாகவும், நற்காரியங்களை செய்பவராகவும் இருப்பார். ராயல் லைஃப் உண்டு. பெரியவர்களை, குருவை மதித்து நடப்பார். அரசரின் நண்பராக திகழ்வார். உயர் பதவிகளை அடைந்து, அனைவராலும் அறியப்பட்டவராகவும் இருப்பார். அரசியலில் சுறுசுறுப்பாக செயல்படுவார். தந்தையை காட்டிலும் நல்ல முன்னேற்றங்களை அடைவார்.

        தனாதிபதி கர்ம பாவத்தில் இருப்பதால், நன்கு படித்த மனைவி அமைவார். அனைத்து வசதிகளையும் பெறுவார். அரசராலும் மதிக்கப்படுவார். அரசால் கௌரவிக்கப்படுவார். அரசருக்கு சமமானவராக திகழ்வார். அரசுப் பணிகளில் திறமைசாலியாக திகழ்வார்.

        மூன்றாம் பாவாதிபதி கர்ம பாவத்தில் இருப்பதால், எப்போதும் மகிழ்ச்சியானவராக இருப்பார். தந்தை மற்றும் அரசர் மூலம் ஆதாயங்களை அடைவார். அரசால் கௌரவிக்கப்படுவார். அரசவையில் உயர்பதவிகளை பெறுவார்.

        சுகாதிபதி தைரிய பாவத்தில் இடம் பெற்றுள்ளதால் சுயமாக சம்பாதித்து வாழ்க்கையில் முன்னேறுவார். அநேக நண்பர்களை உடையவராக இருப்பார்.

        பூர்வ புண்ணிய ஸ்தானாதிபதி அங்கேயே இருப்பதால், தூய மனமுடையவராக இருப்பார். புத்திசாலிதனமாக பேசுவார். மற்றவர்களை சிறப்பானவராகி புகழ் பெறுவார். அனைவரின் நன்மதிப்பையும், மரியாதையையும் பெறுவார்.

        ஆறாம் அதிபதி தைரிய பாவத்தில் இடம் பெற்றுள்ளதால் இவரின் கண்கள் கோபம் வந்தால் சிவக்கும். அதிகமாக உழைப்பவர் ஆவார். சகோதர ஒற்றுமை இருக்காது.

         களத்திர பாவாதிபதி தைரிய பாவத்தில் உள்ளதால் பலம் மிக்கவர். உறவினர்களால் மிகவும் விரும்பப்படுவார்.

         அட்டமாதிபதி ஐந்தாம் இடத்தில் உள்ளதால், நிலையான முன்னேற்றம் இருக்காது. கையில் காசு தங்காது. அதிகமான சொத்துகளை சேர்ப்பதில் ஆர்வங்கொள்வார். அட்டமாதிபதி புத்திர காரகன் குருவாக இருப்பதால், குழந்தைகளாலும், செல்வத்தாலும் ஆசிர்வதிக்கப்பட்டவராகவும் இருப்பார்.

        பாக்கியாதிபதி தைரிய பாவத்தில் இருப்பதால் இவர் செய்யும் நற்காரியங்கள் இவரை மக்களிடையே புகழ் பெற வைக்கும்.

        கர்மாதிபதி அதே பாவத்தில் இடம் பெற்றுள்ளதால் ஜாதகர் உண்மைக்குமாறாக நடக்கமாட்டார். அன்பும், பாசமும் மிக்கவர். தாயின் சந்தோஷத்தை அதிகரிப்பார்.  நற்காரியங்களில் ஈடுபடுவார். புத்திசாலி, திறமை மிக்கவர். அரசனிடமிருந்து செல்வமும், கௌரவமும் பெறுவார். மக்கள் மத்தியில் இவர் புகழ் நிலைத்திருக்கும்.

        இலாபாதிபதி, கர்ம பாவத்தில் இருப்பதால், புத்திசாலியாகவும், உண்மையானவராகவும் இருப்பார். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றங்களை அடைவார். விரயாதிபதி விரயத்தில் இருப்பதால் நாற்கால் பிராணிகளிடம் அன்புள்ளவராக இருப்பார்.

         நடப்பு சுக்கிர தசையில் முன்னேற்றங்கள் இருக்கும். புகழும், வசதி வாய்ப்புகளும் கூடும். புத்தகம் வெளியிடுவார். அரசு தலைமை பதவிக்கான வேலைகள் முன்னேற்றகரமாய் இருக்கும். வாகன சுகம் உண்டு.

        புதன் புத்தியில் அரசர்களுடன் நட்பு உருவாகும். கௌரவம் கூடும். புதன் புத்தி ஆரம்பத்தில் சிறப்பாகவும், மத்திம காலத்தில் சுமாரானதாகவும், முடிவில் சில ஆரோக்கிய குறைவுகளும் இருக்கும். விஷ்ணு சகஸ்ரநாமம் கேட்பது சிறப்பு.

        சுக்கிர திசை, புதன் புத்தி, குரு அந்தரத்தில் (ஜூலை 2024 முதல் டிசம்பர் 2024 வரை) சக்திமிக்க பதவிகள் வந்து சேரும்.

இராஜ யோகங்கள்-

       அசுபர்கள் உச்சமடைந்தால் பராக்கிரம சாலியாக இருப்பாரேயன்றி, அரசர் ஆகமாட்டார் என்று ஜீவ ஷர்மா குறிப்பிடுகிறார். கல்யாணவர்மா – ஒரு பகுதிக்கு தலைவராகவோ அல்லது சிற்றரசராகவோ ஆவர், என குறிப்பிடுகிறார்.

       வெல்ல முடியாத அரசராவார்.

     இலக்கினத்தை அசுபர் பார்த்தால், ஜாதகர் அரசர் ஆவார். சுப கிரகங்கள் கேந்திரங்களில் இருந்தால் ராஜயோகம் ஏற்படும்.

     ஆத்ம காரகன் சூரியன் நவாம்சத்தில் கடகத்தில் உள்ளார். அதுவே, காரகாம்சம் ஆகும். ஆத்ம காரகன் நவாம்சத்தில் சுபர் வீட்டில் உள்ளதால் ஜாதகர் செல்வந்தர் ஆவார்.

      தனாதிபதி சுபருடன் கூடி கேந்திரத்தில் இருக்க யுக்தி சமன்வித வாகினி யோகம் ஏற்படுகிறது என சர்வார்த்த சிந்தாமணியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால், ஜாதகர் சிறந்த பேச்சாளராகவும், திறமை மிக்கவராகவும் இருப்பார்.

      பர்வத யோகம் – கேந்திரத்தில் சுபர் இருந்து 6, 8 ஆம் இடங்களில் கிரகங்கள் இல்லை எனில் இந்த யோகம் ஏற்படும். இதனால் ஜாதகர் அதிர்ஷ்டசாலி, செல்வந்தர், சொற்பொழிவாளர், தர்மவான், கற்றவர் மற்றும் நகரத்தின் தலைவர் ஆவார்.

      விபரீத விமல ராஜயோகம் – விரயாதிபதி, விரயத்தில் இருக்க ஏற்படுவதாகும். இதனால் ஜாதகர் வெற்றியாளராக இருப்பார். நற்குணம் இருக்கும். சுதந்திரமானவர், மதிப்பிற்குரிய உயர் பதவியில் இருப்பார்.

      மாளவிய பஞ்ச மகா புருஷ யோகம் – சுக்கிரன் ஆட்சி பெற்று தசம கேந்திரத்தில் உள்ளதால் இந்த யோகம் ஏற்படுகிறது. இதனால் ஜாதகர் 100 ஆண்டுகள் வாழ்வார். சகல சௌபாக்கியங்களும் ஏற்படும்.

 

 

 

 

Thursday 9 February 2023

பாதகாதிபதி குற்றவாளியா?



                                                                             



பாதகாதிபதி குற்றவாளியா?

         பாதக கிரகங்கள் மற்றும் இராசிகள் எவை ? அவை இலக்னத்துக்கு 11, 9, 7 ஆகிய பாவங்கள் அதில் உள்ள கிரகங்கள் அல்லது அவைகளின் அதிபதிகள் ஆவர். இவை முறையே சர, ஸ்திர, மற்றும் உபய இராசிகளுக்கு உடையவை. ‘’ஜாதக பாரிஜாத’’ த்தில் இந்த பாதகாதிபதிகள் காரா அல்லது மாந்தி இடம்பெற்றுள்ள இடத்தின் அதிபதிகளுடன், இடம் பெற்றால் அதிக துன்பங்களை தரவல்லது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

         எனவே, பாதகாதிபதி என்ற தகுதியை ஒரு கிரகம் அடைய கீழே கொடுக்கப்பட்டுள்ள இரண்டு நிலைகளை அடைய வேண்டும்.

         முதலாவதாக 11, 9, 7 ஆம் வீடுகள் முறையே சர. ஸ்திர, உபய வீடுகள் அல்லது வீட்டு அதிபதிகளாக இருக்க வேண்டும். அந்த பாதகாதிபதியானவர், காரேஷா அல்லது மாந்தி உள்ள இடத்தின் அதிபதியாகவும் இருக்க வேண்டும். மாந்தி என்பது நாம் அறிந்த ஒன்று. காரேஷா பற்றி ‘’ஜாதக பாரிஜாதம்’’ ஸ்லோகம் 56 இல் செல்லப்பட்டள்ளது. அது என்ன? காரா என்பது இலக்னத்தில் இருந்து 22 ஆம் திரிகோணம் ஆகும். அதன் அதிபதியே காரேஷா ஆவார்.

        எனவே, மேற்சொன்ன காரணங்களால் மட்டுமே ஒரு கிரகம் பாதகாதிபதி தகுதியை பெறுகிறது. எனவே, பல ஜாதகங்களில் பாதகாதிபதியே அமைவதில்லை. அதனால், அப்படிப்பட்ட ஜாதகங்களில் பாதகாதிபதி நிலை பொய்த்துப் போய், சிறப்பான பலன்களைத் தருபவர் ஆகிறார்.

        பாதகாதிபதி என்ன பாதகம் செய்யும் எனபது ஸ்லோகம் 30 பகுதி 18 இல் குறிப்பிடப்பட்டுள்ளது. பாதக ஸ்தானாதிபதி அல்லது அதற்கு தொடர்புடைய கிரக தசா / புத்தி காலங்களில் நோய் மற்றும் துன்பங்களைத் தருகிறது. பாதக ஸ்தானத்துக்கு கேந்திரங்களில் இடம்பெற்றுள்ள கிரக தசா / புத்தி காலங்களில் ஜாதகர் கவலைகளுக்கு உள்ளாவதோடு, வெளிநாட்டு பயணங்களும் மேற்கொள்ள நேரிடுகிறது.

        பிரசன்ன மார்க்கம் எனும் பண்டைய நூலில் வேறு விதமாக விளக்கம், குழப்பான முறையில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. பாதக ஸ்தானங்கள் இலக்கனத்தில் இருந்து 11, 9, 7 என்பது ஆரூட இலக்னத்தில் இருந்து பார்க்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  அதில் இந்த காரா மற்றும் மாந்தியின் நிலைபற்றி குறிப்பிடப்படவில்லை. இது பிரசன்ன கட்டத்திற்கு மட்டுமே பொருந்தும்.

        அதன் (பிரசன்ன மார்க்கம்) ஆசிரியர் வசிஷ்டர் குறிப்பிடுவதாகக் கூறுவதாவது ’’எதிர்காலத்தை பற்றிய பலன் அறிய வருபவர்கள், அவர்கள் கேள்வி கேட்டாலும் கேட்காவிட்டாலும் பிரசன்ன கட்டத்தின் மூலமாக அவர்கள் பலன் அறிய ஆரூட இலக்னத்தின் மூலமாக தகுதி உடையவர் ஆகிறார்கள். மேலும், ஜோதிடர் துல்லியமான கேள்வி நேரத்தை குறித்துக் கொள்ளவதோடு சகுனம் மற்றும் சமிக்ஞைகளையும் நோக்க வேண்டும்.

        பிரசன்ன மார்க்கம் மேலும் 2 விளக்கங்களை குறிப்பிடுகிறது. 1. பாதக ஸ்தானத்தில் இருந்து கேந்திரங்களில் உள்ள கிரகங்கள் பாதகம் செய்கின்றன.2. பொதுவாக, எல்லா சர ராசிகளுக்கு பாதக ஸ்தானமாக கும்ப ராசி அமைகிறது.

        விருச்சிக ராசி, சிம்மம், கன்னி, விருச்சிகம் மற்றும் தனுசு ஆகிய ராசிகளுக்கு பாதகம் செய்கிறது. ரிஷபத்திற்கு மகரம் பாதகம் ஆகிறது.  கடகம், கும்பத்திற்கும், மிதுனம், மீனம் ஆகிய ராசிகளுக்கு தனுசு ராசியும் பாதக ஸ்தானங்கள் ஆகின்றன.

        முதல் மற்றும் மூன்றாவது விதிகள் பிரசன்ன மார்க்க ஆசிரியரால் குறிப்பிடப்பட்டுள்ளது. பிரசன்ன மார்க்கத்தில் பாதகம் பற்றிக் குறிப்பிடுகையில், மனம், உடல், ஆத்மா, மனக் குழப்பம், உடல் உபாதைகள், தொல்லைகள் போன்றவற்றில் மட்டுமே பாதகம் ஏற்படுத்துகிறது. பிற பிரச்சனைகளான சமூக பிரச்சனை, குடும்ப பிரச்சனைகள், பொருளாதாரம், உத்தியோகம் மற்றும் தொழில் பிரச்சனைகள் ஆகியவற்றில் பாதகம் செய்வதில்லை.

        ஜாதகர் படுகின்ற கஷ்டங்களுக்கான காரணங்கள் அல்லது இன்னல்களுக்கான வேர்களைக் கண்டறிந்து அதற்கான பரிகாரங்கள் மற்றும் அதி தேவதைகளை குறிப்பிடுவதே முக்கியமாக கருதப்படுகிறது.

        சில ஆசிரியர்கள் துர்ஸ்தானங்களான 6, 8 மற்றும் 12 ஆம் வீடுகளை பாதக ஸ்தானங்களில் சேர்த்தாலும் அவை பாதக ஸ்தானமாகக் கருதப்படக் கூடாது என பிரசன்ன மார்க்கத்தில் 31 வது சுலோகத்தில், 15 வது பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

        உதாரணமாக, குரு பாதகாதிபதியாகி, அவர் இராகுவுக்கு கேந்திரங்களில் நின்று அந்த பாவங்கள் துர்ஸ்தானங்களான 6, 8, 12 ஆகிய பாவங்களானால் பாதகம் இல்லை என, பாதகம் மற்றும் துர்ஸ்தானங்களுக்கான வேறுபாட்டை விளக்குகிறார்.  

        ஜனன ஜாதகத்தில் பாதகாதிபதி, அது இருக்கும் இடம், அதற்கான காரகங்களில், இயற்கை காரகத்துவங்களில் மட்டுமே பின்னடைவுகளையும், கஷ்டங்களையும் தரும். பாதகாதிபதி இல்லாத ஜாதகர் தனது வாழ்க்கை எனும் கடலை கஷ்டங்களின்றி நீந்தி கரை சேர முடியுமா?

     ஜாதகம் – 1

     பிறந்த தேதி – 15 – 5 – 1935 மாலை 1 – 40 மணி, 12 வ 18, 76 கி 37. சந்திர திசை இருப்பு – 2 வ 11 மா 24 நாட்கள்.

 

 

சூரி-1

புத- 19

சுக்-12

 

சனி

சுக்

செவ்

புத

சனி-17

லக்//15

ஜாதகம் -1

இராசி

கேது-4

லக்//

ராகு

 

நவாம்சம்

 

ராகு-4

 

சூரி

கேது

 

மாந்தி

12

குரு-_(வ)

26

 

 

செவ்-15

சந்-29

 

 

மாந்தி

சந்

    

        மேற் கண்ட ஜாதகத்தில், இலக்கினம் கும்பம், 9 ஆம் இடம் துலாம், அதன் அதிபதி சுக்கிரன், துலாத்தில் குரு அமர்ந்துள்ளார். 22 வது திரேகாணம் கன்னி இராசியில் 2 வது திரேகாணமாகும். அது மகரத்தில் விழுகிறது. மகரம் சனியின் ஆட்சி வீடு. அந்த சனி கும்ப இராசியில் உள்ளார். எனவே, காரா அல்லது காரேசா சனி ஆகிறார். விருச்சிகத்தில் மாந்தி உள்ளார். அதன் அதிபதி செவ்வாய். பாக்கியாதிபதி சுக்கிரன், பாக்கிய பாவத்தில் உள்ள குருவும், காராவுக்கு அதிபதியாகவோ, அல்லது மாந்தியுடன் இணைந்தோ இல்லாத நிலையில், இலக்னத்தைப் பொறுத்து பாதகாதிபதி இல்லை என்ற நிலையே உள்ளது.

       பண்டைய நூலாசிரியர்களின் கருத்துப்படி எந்தவொரு பலனையும் இலக்கினத்துக்கும், சந்திரா இலக்கினத்துக்கும் பார்க்க வேண்டும் என்பதேயாம்.

       இங்கு சந்திரா இலக்கினம் கன்னி. அதற்கு பாதக ஸ்தானம் 7 ஆம் இடம் மீனம் ஆகும். அதன் அதிபதி குரு ஆவார். சந்திரனில் இருந்து 22 ஆம் திரேகாணம் மேஷத்தின் கடைசி திரேகாணம், தனுசில் விழுகிறது. எனவே, குரு காரேசா ஆகிறார். சுக்கிரன் வீட்டில் குரு உள்ளார். மாந்தி செவ்வாயின் வீட்டில் உள்ளார். 7 ஆம் அதிபதி சுக்கிரனோ அல்லது செவ்வாயோ அல்ல. எனவே, சந்திரனில் இருந்தும் இந்த ஜாதகத்தில் பாதகாதிபதி அமையவில்லை.

        ஆனாலும், இந்த ஜாதகி வாழ்க்கையில் படாதபாடுபட்டாள். உயர்ந்த மரியாதைக்குரிய குடும்பத்தில் பிறந்தவர், நடுத்தரமான நல்ல சமூக பின்புலம் உள்ளவர்.   இவரது மகன் வேறு ஜாதி, ஏழை பெண்ணை காதல் மணம் முடித்ததை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். அழகிய மகளோ அரேபிய நாட்டில் ஒரு ஹோட்டல் பணியாளை காதலித்து மணந்து அன்னைக்கு அசிர்ச்சி தந்தாள். பாதகாதிபதியின் பாதிப்பு இல்லாத பட்சத்தில் எப்படி இந்த நிலை ஏற்பட்டது ? யோககாரகன் சுக்கிரன் 5 ஆம் வீட்டில் உள்ளார். 5 ஆம் வீடும், 5 ஆம் அதிபதியும் பாபகர்த்தாரியில் இரு பாவ கிரகங்களான கேது மற்றும் செவ்வாய்க்கு இடையே உள்ளார். 5 ஆம் அதிபதி புதன் அதற்கு 12 இல் உள்ளார். குரு 5 ஆம் வீட்டை பார்வை செய்தாலும், அவர் வக்ரமடைந்து அசுபராக பல இன்னல்களை தந்தார். எனவே, இங்கு பாதகாதிபதி இல்லாத நிலையில் அதை பலன் காண எடுத்துக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.

ஜாதகம் – 2

பிறந்த தேதி – 9-9-1960 – இரவு 7-15 மணி, 18 வ 56, 72 கி 51. சுக்கிர தசா இருப்பு –     14 வ 9 மா 18 நாட்கள்.

லக்//-5

சந்-17

 

செவ்-2

 

 

குரு

சுக்

கேது

 

கேது

ஜாதகம் - 2

இராசி

கேது-4

புத

 

நவாம்சம்

 

 

ராகு-23

சூரி-25

 

லக்//

சனி-20

குரு-3

 

 

 

 

புத-3

சுக்-16

 

சூரி

ராகு

செவ்,

சனி

சந்

 

        இந்த ஜாதகத்தில் 7 ஆம் அதிபதி புதன் ஆவார். இலக்கினம் மீனம் முதல் திரேகாணத்தில் இருப்பதால் 22 ஆம் திரேகாணம் துலாம் முதல் திரேகாணத்தில் அமையும். அந்த இராசியின் அதிபதி சுக்கிரன். சுக்கிரன், புதனோடு இணைந்து புதனின் இராசியிலேயே உள்ளார். புதன் பாதகாதிபதி ஆவதோடு அவரே காரேஷாவும் ஆகிறார். எனவே, ஜாதகரின் மணவாழ்க்கையில் எவ்வளவு பாதகங்கள் செய்து, ஒரு வழி செய்திருப்பார் உபய இராசிக்கு பாதகாதிபதியான புதன்.

         ஜாதகரின் மனைவி துர்குணமுள்ளவளாக இருந்ததால், 8 ஆண்டுகளே இணைந்து வாழ்ந்து விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டாள். இரண்டாம் மனைவி 20 நாட்களே உடன் இருந்து பிரிந்துவிட்டாள். அவன் ஆண்மையற்றவன் என்று சொல்லி அவளும் விவாகரத்து பெற்றுவிட்டாள். 7 ஆம் வீட்டு பாதகாதிபதி புதன் இவன் மணவாழ்க்கை சோகத்திற்கு காரணமானான் என நாம் முடிவு செய்யலாமா?

         பாதகாதிபதி புதன் என்பதை ஒதுக்கிவிட்டு, 7 வீட்டையும், களத்திர காரகன் சுக்கிரனை மட்டுமே வைத்து ஆராயலாமா?

         7 ஆம் அதிபதி புதன் 8 ஆம் அதிபதி, களத்திர காரகன் சுக்கிரனுடன் உபய இராசியில் இணைந்துள்ளார். 7 ஆம் பாவம், பாவாதிபதி மற்றும் களத்திர காரகன் ஆகியோர் பிற உபய இராசிகளில் அமர்ந்துள்ள செவ்வாய் (2 மற்றும் 9 ஆம் அதிபதி) மற்றும் சனியால்(11 ஆம் அதிபதி) பார்க்கப்படுகிறார்கள். இது பல தார யோகத்தை தந்தது. உபய இராசியில் இருக்கும் சுக்கிரனை அசுப கிரகங்களான செவ்வாய், சனி பார்ப்பதே ஒன்றுக்கு மேற்பட்ட திருமணத்திற்கு வழி வகுத்தது இங்கு உபய இராசியில் அமர்ந்த சுக்கிரனை, இயற்கை பாவிகள் இருவர் பார்த்ததே இந்த பாதிப்பு நிலைக்கு மேலும் வலு சேர்க்கிறது.

        சுக்கிரன் உபய இராசியில் அமர்ந்து, அந்த இராசி அதிபதி உச்சம் பெற்று, 7 ஆம் அதிபதியும் பலம் பெற ‘’பகு-தார யோகம்’’ (பல தார யோகம்) ஏற்படும் என்று ‘’ பிருஹத் பராசர ஹோரா சாஸ்த்ரா’’ விலும்  கூறப்பட்டுள்ளது. இந்த நிலைகளை நாம் இந்த ஜாதகத்தில் காணமுடிகிறது. பாதகாதிபதியை விலக்கிவிட்டுப் பார்த்தாலும் மகிழ்ச்சியற்ற மணவாழ்க்கை உறுதியாகிறது. ஆயினும், இரு முறையும் விவாகரத்து வரை சென்று வாழ்க்கை வீணானதற்கு காரணமாக பாதகாதிபதி புதனை சொல்லலாம்.

ஜாதகம் – 3

தியாகி - வீர சர்வார்கர் -28 – 5 – 1883 – இரவு – 9 – 25 மணி, 18 வ 23, 73 கி 53. செவ்வாய் திசை இருப்பு – 1 வ 1 மா  26 நாட்கள்.

       தனுசு இலக்கினம். 7 ஆம் அதிபதி புதன், உபயத்துக்கு பாதகாதிபதி. 22 வது திரேகாணம் கடகத்தின் 3 வது திரேகாணத்தில் விழுகிறது. அந்த திரேகாணாதிபதி குரு, காரேஷா ஆகிறார். குரு 7 இல் அதன் அதிபதி மற்றும் பாதகாதிபதி புதனுடன் மிதுனத்தில் உள்ளார்.  பாதகாதிபதி புதன் 7,10 க்கு அதிபதியாகி இலக்கினத்தை பார்வை செய்கிறார்.

 

செவ்-8

கேது-19

சுக்-16

சூரி-16

சனி- 10

குரு-14

புத-0-16

 

ராகு

சனி

 

சூரி

செவ்

சந்-4

ஜாதகம் - 3

இராசி

 

குரு

 

நவாம்சம்

 

 

 

 

சுக்

லக்//27

 

 

ராகு

 

 

 

லக்//

சந்

புத

கேது

 

      எனவே, இந்த பாவங்கள் அனைத்துமே மிகவும் பாதிப்புகளை அடைகின்றன. மிகப் பெரிய தியாகி, சுதந்திர போராட்ட வீரர், மதிப்பிற்குரிய விநாயக் தாமோதர சர்வாக்கர் தன் உடல் பொருள் ஆவி அனைத்தையும் துச்சமாக நினைத்து வெள்ளையனை எதிர்த்துப் போராடி நமது தாய் திருநாட்டிற்காக இன்னலுற்று தன் வாழ்கையை அர்பணிக்க நேர்ந்தது. தாய் நாட்டிற்காக அவர் பட்ட துன்பங்கள் கொஞ்சநஞ்சமல்ல.

      இயற்கை சுபர் குரு, இலக்கினாதிபதியாகி, இலக்கினத்தைப் பார்த்த போதும், அவருக்கு ஏற்பட்ட வறுமையை, பொருள் கஷ்டத்தை, துன்பங்களையும் தடுக்க முடியாதவர் ஆனார். அதற்கு காரணம் அவர் இராகுவின் திருவாதிரை நட்சத்திர சாரம் பெற்று, ஆயுத திரேகாணத்தில் அமர்ந்ததேயாம். பாதகாதிபதியின் தொடர்பு மேலும் அதிக துன்பத்திற்குக் காரணமாயிற்று.

        மேற்கண்ட ஜாதகங்களை அலசி ஆராய்ந்து பார்க்கும் போது, பாதகாதிபதி மட்டுமே ஜாதகருக்கு பாதகம் செய்துவிடவில்லை என்பதை அறிகிறோம். அடிப்படையிலேயே ஜனன ஜாதகத்தில் பாதிக்கக் கூடிய கிரக அமைப்புகள் இருந்தால் மட்டுமே பாதகாதிபதியின் தாக்கம் எடுபடும் என்பதை அறிய வேண்டும். அப்போதுதான் பலன்கள் மேலும் சீர்கேடடையும்.

        ஒவ்வொரு ஜாதகமும் பாதகாதிபதியை கொண்டிருக்க வேண்டியதில்லை. அதேபோல், ஜாதகத்தில் பாதகாதிபதியை அடையாளம் கண்டாலும் அவர் பாதகம் செய்யும் குற்றவாளி என்று தீர்மானிக்க வேண்டியதில்லை. ஜாதகத்திலுள்ள பாதிப்பு எரியும் நெருப்பு என்றால் பாதகாதிபதி எண்ணை போன்றவரே. அதாவது தீசெயலுக்கு உதவுபவர், தூண்டிவிடுபவர் மட்டுமே என்று கொள்ளலாம். எனவே, பாதகாதிபதியின் பாத்திரப்படைப்பு சாதாரணமானதே ஆகும். சில சமயங்களில் மட்டுமே அது சுறுசுறுப்பாக செயல்படும் என்று சொல்லலாம். ஆனால், பிரசன்ன ஜாதகத்தில் மட்டும் பாதகாதிபதி தன் முழு தீமையைக் காட்டிவிடுகிறார்.