Search This Blog

Sunday 4 November 2018

நாடியில் ஜாதக ஆய்வு



நாடியில் ஜாதக ஆய்வு 



ஜாதகம் – 36 அ & ஆ & இ

         கீழ்க் கண்ட ஜாதகங்கள் அ. கணவன் ஜாதகம், ஆ. மனைவி ஜாதகம் மற்றும் இ. அவர்களின் திருமண நாளின் ஜாதகம் ஆகும்.


சந்,இராகு


லக்///,சுக்
செவ்,சூரி
உ. ஜா. 36. அ
இராசி
கணவன்


குரு,புத
சனி



கேது

        
குரு, சிஷ்யனுக்கு இடையே நிகழ்ந்த சம்பாஷணை போல் கொடுக்கப்பட்டுள்ளது.

         சிஷ்யன் – மதிப்பிற்கு உரிய ஐயா ! இந்த ஜாதகருக்கு எப்போது திருமணம் நடக்கும் ? இந்த ஜாதகத்திலுள்ள கிரக நிலைகளைப் பார்க்கும்போது குப்பமாக இருக்கிறதே ?
         குரு- சிஷ்யா, எப்போது கோசார குருவானவர், இரண்டாம்முறையோ ? அல்லது 3 ஆம் முறையோ மகரத்தை தொடுகிறாரோ, அப்போது ஜாதகருக்குத் திருமணம் நடக்கும். அப்போது கிரக நிலைகள் சாதகமாக அமையும். அனைத்து உறவுகளும் அப்போது ஒன்று கூடுவர்.
         சிஷ்யன் = குருவே இந்த பையனின் ஜாதகத்தில் மனைவி மற்றும் இந்துக்கு உரிய சுக்கிரனுடன் சூரியன் மற்றும், செவ்வாய் உள்ளனர். சுக்கிரனுக்கு இரு புறமும் நெருப்பு கிரகங்கள் உள்ளன. இந்த கிரக நிலைகள் செவ்வாய் + சுக்கிரன் + சூரியன் எனவே, இந்த மணமகனுக்கு செவ்வாய் மற்றும் சூரியனால் விந்துகள் எரிக்கப்பட்டு, அழிக்கப்பட்டு மலட்டுத் தன்மை அடைந்தார். எனது அனுமானம் சரியா, தவறா ? குருஜி !
        குரு – சிஷ்யா ! உனது முடிவு ஓரளவு சரி ! ஆனால் அவன் ஆண்மையற்றவன் என்றால் அவனுக்கு எதற்கு திருமணம் நடக்கவேண்டும் ? அவனுக்கு திருமணம் என்ன குழந்தைகள் விளையாட்டா ? ஆனால் நீ ஒரு விஷயத்தை கவனிக்கத் தவறிவிட்டாய். ஆம் ! சனி மற்றும் சூரியனின் பரிவர்த்தனையே அது ! எனவே, அவன் தனக்கு ஒரு ஆணுக்குத் தேவையான  உடல் கூறுகள் சிறப்பாக உள்ளது என நினைத்துக் கொள்கிறான். இந்த தவறான நம்பிக்கையால் மணம் முடிக்க விழைகிறான்.
       சிஷ்யன் – இந்த தம்பதிகளுக்கு இந்தத் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியைத் தருமா, குருவே ?  ஏனெனில், சுக்கிரன் சனியின் இராசியில் உள்ளான். அதுவே கணவன் ஸ்தானம். அதன் அதிபதி சனி. எனவே, அவன் மனைவி அவனை திட்டி, விரட்டு விரட்டுன்னு விரட்டி, சில சமயங்களில் அடிக்கக்கூட செய்வாள். கும்பத்தில் ஏற்பட்டுள்ள பரிவர்த்தனையால் சனி கும்பத்தில் தனது மிக்க பகைவர்களான சூரியன், செவ்வாயுடன் இருப்பது போல் ஆவதால் ஜாதகன் தனது சொந்த வீட்டில் குடியிருக்க முடியாத நிலையும், அதன் காரணமாக இளம் தம்பதிகள் தங்கள் மோக வாழ்க்கையைத் தொடரமுடியாத நிலையும் ஏற்படுகிறது. சனி சிம்மத்தில் இருப்பதால் ஜாதகர் தனது மனைவியிடம் வீட்டை ஒப்படைத்துவிட்டு வெளியேறி அரசுப்பணியில் தன்னை இணைத்துக்கொண்டதாக அமைகிறது. எனவே, குருவே இதற்கு மேல் அவன் ஆண்மையற்றவன் என்பதற்கு என்ன நிரூபணம் வேண்டும் ?
         குரு- சிஷ்யா ! இந்து வேத கதைகளின்படி புதன் முறையற்ற வழியில் பிறந்தவன் ஆகிறான். குருவும் கணவனுடன் இருப்பதை உணர். இந்த ஜாதகத்தில் மற்றுமொரு இணைவு மனக் குழப்பத்தை உருவாக்கும் சந்திரன் மற்றும் இராகு இணைவாகும்.  மேற்கு திசையில் உள்ள கிரகங்கள் (துலாம்)கேது + சுக்கிரன் + சூரியன் + செவ்வாய் (பின் 3 கிரகங்கள் கும்பம்) கேதுவும், சனியும் பகை கிரகங்கள் ஆகும். கேது கயிறு மற்றும் சங்கிலியைக் குறிக்கக் கூடியதாகும். எனவே, காதலோடு தன் அருகில் வரும் கணவனை, மனைவியானவள் கயிறாலோ, சங்கிலியாலோ பிணைத்து அடிக்க ஆரம்பித்துவிடுவாள். எனவே, எப்பொதெல்லாம் கோசாரத்தில் சன் கேது இணைவு வருகிறதோ அப்போதெல்லாம் கணவனுக்கு இந்த கஷ்டங்கள்தான். கேதுவானவர் ரிஷபம், மிதுனம் ஆகிய இராசிகளைக் கடக்கும் காலங்களில் இநவ்வித கஷ்டங்கள் அவரைத் தழுவும். இந்த இன்னல்கள் அவரது 47 வது வயதுவரை தொடர்ந்து இருக்கும். இதன் பின்னரே அவளிடம் விவாகரத்து பெற்று உய்வார் என்று சுகர் நாடியில் குறிப்பிடப்பட்டுள்ளது சிஷ்யா’ என்று கூறினார் குரு.
         சிஷ்யன் – குருவே, அவன் மனவியின் ஜாதக பலன்களை விளக்குங்கள் ஐயா.
         குரு – சிஷ்யா ! மனைவியின் ஜாதகத்தில் குருவும், புதனும் பரிவர்த்தனை பெற்றுள்ளனர். பெண்ணைக் குறிக்கும் சுக்கிரன் கணவனைக் குறிக்கும் செவ்வாயின் இராசி, விருச்சிகத்தில் உள்ளார். சுக்கிரன் தன் எதிரிகளான சனி, செவ்வாய் மற்றும் இராகுவுடன் இணைவு. ஆகையால், இவரின் மனைவி கீழ்தரமான மக்களுடன் தொடர்பில் இருப்பதாக அர்த்தம் கொடுக்கிறது. ஜாதகத்தில் பலம் குறைந்த சந்திரன் உள்ளதால், சுக்கிரன், இராகு இணைவு ஜாதகியை இழிவான மனதை உடையவளாக எடுத்துக் காட்டுகிறது. இது அவள் கணவனுக்குத் தெரிந்திருந்தும், பிறர் அவளோடு மகிழ்ச்சியாக இருக்க முயற்சித்த போதும், அவன் பெயரளவிலேயே கணவனாகத் திகழ்ந்தான்.  
        சிஷ்யன் – இதை நான் எப்படி அறிந்து கொள்வது ? குருவே !

செவ்

கேது


உ. ஜா. 36. ஆ
இராசி
மனைவி



லக்///, சந்
சூரி, புத
சனி,ராகு
சுக்

குரு

         குரு – சிஷ்யா ! கீழ்தரமானவர்களிடம் பழகும் கெட்ட குணத்தை உடையவள் தன் மனைவி என்பதை அறிந்த பின் அவன் துறவு பூணும் எண்ணம் கொண்டான். கணவன் காரகன் செவ்வாய் வடதிசையைக் குறிக்கும் மீன இராசியில் இருப்பதே இதற்கான காரணம் ஆகும். மற்றுமொரு வடதிசை இராசியான விருச்சிகத்தில் சனி, இராகு, சுக்கிரன் ஆகிய மூன்று கிரகங்களின் இணைவு உள்ளது. இதன்படி, சனி மற்றும் இராகு சுக்கிரனிடம் (மனைவி) சுதந்திரமாகப் பழகும்போது செவ்வாய்(கணவன்) அமைதியாக சொர்க்கத்தில் அமர்ந்து (மீனம்) கடவுளை வேண்டுகிறார்.(குரு, செவ்வாய்க்கு 7 இல் அமர்ந்து). செவ்வாயை அடுத்து கேதுவும் அதன் பிறகு குருவும் உள்ளது கணவன் கடவுளை வேண்டி இந்த அசிங்கமான அவமானகரமான நிலையில் இருந்து விடுபட வேண்டும் என்பதையே குறிகாட்டுகிறது.   
      


இராகு

லக்///,சந்
சுக்,செவ்
உ. ஜா. 36. இ
இராசி
திருமணநாள்
ஜாதகம்.


சூரி,குரு

புத
கேது.சனி



         கும்பம் இலக்னமாக இருந்த போது இருவருக்கும் திருமணம் நடந்தது. இலக்னாதிபதி சனி கேதுவுடன், இது சிங்கத் துணியைக் குறிக்கிறது. அதாவது கணவனுக்கு சிங்கத் தோலை அணிந்து சன்யாசம் மேற்கொள்ள விதிக்கப்பட்டிருக்கிறது என்று பொருள். இலக்னம் சனியின் வீடு,  சுக்கிரன், செவ்வாயுடன் இணைவு. இது மனைவியின் குணம் கேள்விக்கு உரியது என்பதைக் காட்டுகிறது. சுக்கிரன் + செவ்வாய் + சந்திரன் (பொய்மை தன்மையை குறிக்கிறது). இவனுக்கு வாய்த்த மனைவி வஞ்சனை புரிபவள், இவளது கற்பு கேள்விக்கு உரியது என குறிகாட்டுகிறது. மேலும் சனி பரிவர்த்தனை மூலமாக கும்பத்திலேயே இருக்கிறது. எனவே, திருமணநாளின் கிரக இணைவுகளில் ஒன்று = சனி + சந்திரன் + சுக்கிரன் இவை திருமண வாழ்க்கைக்கு சரியில்லாத கிரக நிலையாகும். இந்த நிலை இந்த கணவனுக்கு வரப்போகும் மனைவி ஏற்கனவே பிறரால் அனுபவிக்கப்பட்ட, குணக்கேடுடைய செகண்ட் ஹேண்ட் மனைவியாகவே இருப்பாள் என்பதைக் குறிகாட்டுகிறது.

ஜாதகம் 37 அ & ஆ

         இது ஒரு குழந்தையின் ஜாதகம் அ. ஆ. அதை குழந்தையின் அப்பா பலன் காண கொண்டுவந்த போது உள்ள கிரக நிலைகள் ஆகும். ஜாதகரின் தந்தை வந்த போது மேஷம் இலக்னமாக எழுந்தது. இலக்னாதிபதி செவ்வாய் தனுசுவில் உள்ளார். செவ்வாய் இராகுவுடன் நெருக்கமாக உள்ளார். செவ்வாய் இராகுவை சரியாக தொட்டபோது இந்தக் குழந்தை வாழ்க்கையில் மிகப் பெரிய ஆபத்தில் இருந்து மீண்டிருக்க வேண்டும். மேலும், ஜாதகம் ஆ வில் கோசார குரு செவ்வாய்க்கு திரிகோணத்தில் உள்ளது. இதன் மூலமு நாம் அறிவது என்னவென்றால் இந்தக் குழந்தை இறப்பின் வாசலைத் தொட்டுவிட்டு ஒரு மருத்துவரால் காப்பாற்றப்பட்டுள்ளது என்பதேயாம்.

இராகு
குரு
சுக்
சூரி,புத
லக்///
உ. ஜா. 37. அ
இராசி



சந்,செவ்
சூரி,குரு




கேது

         குழந்தையின் ஜாதகத்தில் குரு கிழக்கு திசை இராசியான மேஷத்தில் உள்ளார். கோசார ஜாதகத்தில் மேஷத்துக்கு 9 ஆம் வீடான்ன தனுசுவில்


லக்///

இராகு

உ. ஜா. 37. ஆ
கோசாரம்


சனி, சூரி, புத
குரு(வ)
செவ்,ராகு
சுக்

சந்


குழந்தையின் வாழ்க்கையில் மிக ஆபத்தான நிலையைக் குறிகாட்டும் வகையில் செவ்வாய் இராகு இணைவில் உள்ளனர்.  ஜாதகம் ஆ வின் படி மிதுனத்தில் சூரியன் புதன், கோசாரத்தில் அவ்விடத்தில் கேது வருகிறார். இது தந்தைக்கு மனக் கஷ்டங்கள் உள்ளதையும், விசாரங்கள் உள்ளதையும் அதன் முடிவுகள் சாதகமாகவே இருக்கும் என்பதையும் குறிகாட்டுகிறது. கோசார இலக்னாதிபதி செவ்வாய் இராகுவையும், சுக்கிரனையும் கடப்பது, இந்த ஆபத்துகளின் முடிவு குழந்தைக்கு அனுகூலமானதாக நல்லதாகவே அமைந்தது.  
ஜாதகம் 38.அ & ஆ
        ஜாதகரின் ஜாதகம் 38. அ மகரத்தில் உள்ள சனி, சுக்கிரன் மீது கோசார இராகு வரும்போது அவரின் தொழில் நிலையில் பல இன்னல்கள் ஏற்பட்டன. மனைவியைக் குறிகாட்டும் சுக்கிரனுடன் சனி இணைவு அவரது மனைவிக்கு காய்ச்சலில் விழுந்ததைக் குறிகாட்டுகிறது.
        இந்த ஜாதகத்தில் தெற்கு திசை இராசிகளில் (கன்னி, மகரம்) சூரியன், கேது, சனி, சுக்கிரன் ஆகியோர் உள்ளனர். இதில் சூரியன் சனி மீதி கோசார இராகு வந்தபோது புகைப்படக் கலை சம்பந்தமான (சுக்கிரன்+கேது) பொருளாதார இழப்பை ஏற்படுத்தியது என்பதைக் குறிகாட்டுகிறது. அத்துடன் ஜாதகர் அரசாங்கத்தால் தொல்லைகளை (சனி+சூரியன்) அனுபவித்ததையும் குறிகாட்டுகிறது.
         எனவே, சனி+சூரியன்+சுக்கிரன்+கேது இணைவின் மீது கோசார இராகு வந்த போது குடும்பத்தில் கஷ்டங்கள் மற்றும் பெரிய அளவில் பொருளாதார நஷ்டத்தையும் அளித்தது என்பதே பலன் ஆகும். இதே நேரத்தில்தான் கோசார கேதுவும் கடகத்தில் உள்ள உச்ச குருவைக் கடக்கும் போது ஜீவன் காரகன் குரு கேதுவின் தீய தாக்கத்தினால் ஜாதகரின் உடல் நிலை மோசமாகி அதை சரி செய்யவும் வாழ்க்கையில் ஏற்பட்ட கஷ்டங்கள், கவலைகள் குறைய ஜாதகர் கடவுளை வேண்டி அதிகப்படியான பூஜைகளைச் செய்தார். இதன் காரணமாக அவரின் குடும்ப கஷ்டங்களும், கவலைகளும் ஓரளவு குறைந்தது.  இத்தகைய கஷ்டங்களை தருகிற கிரக அணைவுகளை உடைய ஜாதகங்களில் அந்த கிரகங்களுக்கு  குரு 7, 5 அல்லது 9 ஆம் இடங்களில் இருக்க அது ஜாதகருக்கு நல்ல பலன்களை அள்ளித்தரும். இது சனிக்கு மிகவும் பொருந்தும். சனிக்கு 5,7,9 இல் குரு இருக்க அவரால் ஏற்படும் பாதக பலன்கள் ஜாதகருக்கு குறைந்து நல்ல பலன்களே ஏற்படும். 
 
இராகு


லக்///

உ. ஜா. 38. அ
இராசி

குரு(வ)

சனி,சுக்

செவ்
புத

சூரி,கேது

          38 ஆ இது மற்றுமொருவரின் ஜாதகத்தைப் பார்ப்போம். இவரின் ஜாதகத்தில் குருவும், சுக்கிரனும் உள்ள இராசியைக் கோசார சனி கடந்த போது அவருக்கு புகழும் கௌரவமும் கூடியது. பொருளாதார மேம்பாடும் ஏற்பட்டது. சுக்கிரன் + சனி இணைவு தனலாபத்தையும், குரு + சனி இணைவு புகழையும் கௌரவத்தையும் அதிகரித்தது என பலன் எடுக்கலாம்.




சந்
கேது
லக்///,சனி
உ. ஜா. 38. ஆ
கோசாரம்



செவ்

சூரி,புத
இராகு
குரு
சுக்


         கோசார சனி தனுசுவை கடப்பதாக வைத்துக் கொள்வோம். அங்கே ஜனன ஜாதகத்தில் உள்ள புதன் + சூரியன் இணைவு காரணமாக ஜாதகருக்கு அரசாங்கத்தாலும், முட்டாள்களாலும் தொல்லைகளை ஏற்படும். சனி மகரத்தைக் கடக்கும் போது அதில் உள்ள அதன் பகை கிரகமான உச்ச செவ்வாயைத் தொடும் போது இந்த ஜாதகர் அவரின் எதிரிகளால் மிக அதிகமாக கஷ்டங்களை அனுபவித்தார். ஆயினும், கோசார உச்ச குருவின் தொடர்பு ஓரளவு சிரமங்களைக் குறைத்தது, அதுவே, கோசார குரு சிம்மத்துக்கு மாறிய போது மீண்டும் பிரச்சனைகள் தலை தூக்கின. இதன் காரணமாக குருவின் காரகமான பொருளாதாரம் மிகுந்த இன்னல்களைத் தந்தது. மேலும், எதிரிகள் தொல்லை, மனக் குழப்பங்கள், வியாபாரத்தில் நஷ்டங்கள் என படாதபாடு பட்டுவிட்டார். நெருங்கிய உறவுகளும், நண்பர்களும் கூட அவருக்கு எதிராக செயல்பட ஆரம்பித்தனர். இந்த நிலையானது கோசார சனியானது ஜனன செவ்வாயைக் கடக்கும் காலம் வரை நிலவும்.

ஜாதகம் -39 அ & 39 ஆ, மற்றும் 40.

         இந்த ஜாதகர் பிறரால் கவரப்பட்ட தனது வீடு திரும்பக் கிடைக்குமா ? – எனக் கேட்டார். கோசாரத்தில் வீடு காரகன் சுக்கிரன் விருச்சிகத்தில் நுழைந்தான். அங்கு ஜனன ஜாதகத்தில் இராகு அமர்ந்துள்ளார். பிரசன்னத்தின் போது மேஷம் இலக்னமானது. அதன் அதிபதி செவ்வாய் தனது பரம வைரிகளான இராகு மற்றும் புதனுடன் கிரக யுத்தத்தில் உள்ளார்.  செவ்வாயின் ஆட்சி வீடான  விருச்சிகத்தில் சுக்கிரன் உள்ளார். எனவே, ஜாதகர் பொருளாதார கஷ்டங்களினால்  பண நஷ்டத்தை சந்தித்தார்.(சுக்கிரன்). கோசாரத்தில் குரு கன்னியில் ஜாதக சுக்கிரன் + புதன் + சூரியன் இணைவு மீது வரும்போது நிச்சியமாக வீடு திரும்பக் கிடைக்கும். ஆனால் அது நிரந்தரமானது அல்ல. ஏனெனில், சுக்கிரனுக்கு இரண்டாம் இடத்தில் சந்திரன் + சனி இணைவு சுக்கிரன் வீடான துலாத்தில் ஏற்படுவதால் மீண்டும் வீட்டை இழக்க நேரலாம்.




கேது


உ. ஜா. 39. அ
இராசி

குரு


லக்///
செவ்

இராகு
சனி,சந்
சூரி,சுக்
புத



லக்/// சந்

கேது

உ. ஜா. 39. ஆ
கோசாரம்

குரு(வ)

சனி, சூரி

ராகு,புத
செவ்
சுக்



         இங்கு மற்றொரு நபரின் ஜாதகம் கொடுக்கப்பட்டுள்ளது. இது ஜாதகம் 39 ஆ வை ஒத்த்தே. மிதுன இலக்னம். கேள்வியின் போது இலக்னத்தில் செவ்வாய்  மேற்கு திசையில் உள்ளது. ஜாதகம் 39 அ வில் இலக்னத்தில் செவ்வாய் உள்ளது.

சூரி, புத

சுக்

இலக்/// செவ்

உ. ஜா. 40.
இராசி

கேது, சந்
குரு

சனி,ராகு






சனியும் சந்திரனும் மேற்கு திசையான துலாத்தில் உள்ளனர். எனவே, ஜாதகரின் மீது வேலை பார்க்கும் இடத்தில் இவர் மீது செய்யாத குற்றத்துக்கு பழி விழுவதைக் குறிகாட்டுகிறது. (சனி – வேலை, சந்திரன் – குற்றம்) அந்த நேரத்தில் செவ்வாய் மிதுனத்துக்கு வருவதால், ஜாதகருக்கு பணியில் பழி விழுந்ததால், பணி இடை நீக்கம் செய்யப்பட்டார்.
         39 அ ஜாதகத்தில் குரு உச்சம் பெற்றுள்ளார். ஜாதகம் எண் 40 இல் உச்ச குருவோடு சந்திரனும், கேதுவும் உள்ளனர். இது ஜாதகர் புனித நதிகளில் புண்ணிய நீராடல் மற்றும் அனுகூலமான நல்ல பலன்களைக் குறிகாட்டுகிறது. மேலும் கோசார குரு கடகத்தில் அமர்ந்து மகரத்தில் உள்ள கோசார சனியைப் பார்ப்பதால்  ஜாதகர் தனது அனைத்து முயற்சிகளிலும் வெற்றி அடைவார். ஜனன ஜாதகத்தில் சனி, இராகு இணைவு இருப்பதால் மேலும் நற்பலன்களை அடைவார்.

         ஜாதகம் எண் 40 இல் கன்னி இராசியில் உச்ச புதனும், நீச சுக்கிரனும் இணைவு. இது ஜாதகர் கீழான ஏமாற்று வழிகளில் பணம் சம்பாதிப்பதைக் காட்டுகிறது. சுக்கிரனுக்கு இரண்டாவது இராசியில் கர்மகாரகன் சனி ஏமாற்றுக்காரன் சந்திரனோடு இருப்பதே பிறரை ஏமாற்றிப் பணம் சம்பாதிப்பதை குறிகாட்டுகிறது. செவ்வாய், சூரியனுக்குப் பின்னரும், சந்திரனுக்கு முன்னரும் சுக்கிரன் இருப்பது அவன் சுலபமாக சம்பாதிக்கும் பணம் வந்த்து போலவே அழியும் என்பதைக் குறிகாட்டுகிறது.