Search This Blog

Showing posts with label 2014 - அக்டோபர் மாத இராசிபலன்கள் (ஜோதிட வாசல் இதழில் வெளியானது) -- தனுசு.. Show all posts
Showing posts with label 2014 - அக்டோபர் மாத இராசிபலன்கள் (ஜோதிட வாசல் இதழில் வெளியானது) -- தனுசு.. Show all posts

Wednesday, 1 October 2014

2014 - அக்டோபர் மாத இராசிபலன்கள் (ஜோதிட வாசல் இதழில் வெளியானது) - தனுசு

2014 - அக்டோபர் மாத இராசிபலன்கள்

(ஜோதிட வாசல் ஜோதிட இதழில் வெளியானது)

தனுசு

 ( மூலம்-1,2,3,4 பாதங்கள், பூராடம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் உத்ராடம் –1,2 பாதங்கள்)

( இராசி  அறியாதவர்கள் பலன் அறியயே, யோ, , பீ, பூ, , , டா, பே )

    தங்கள் இராசிநாதன் குருவால்  உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைத்தல் அரிது.    கர்ம பாவத்தில் உள்ள புதனால் ஆரோக்கிய நிலை மேம்படும். அதிக வருமானம் மற்றும் தனலாபம் ஏற்படும். மகிழ்ச்சிகரமான வாழ்க்கை, எடுத்த காரியங்கள் யாவினும் வெற்றி, ஆகியவை ஏற்படும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஆகியவையும் ஏற்படும். சிலருக்குச் சில விஷயங்களில் தடை, தாமதங்கள் ஏற்படலாம். அரசு மூலம் வெகுமதி கிடைக்கும். கல்யாணம் போன்ற சுபமங்கள காரியங்கள் நடக்கும். மனைவி மூலம் பூர்ண சுகமும் கிடைக்கும். பெரிய இடத்துப் பெண் மனைவியாக அமைவாள். அதனால் வாழ்க்கையில் முன்னேற்றங்கள் ஏற்படும். புண்ணியத்தல யாத்திரைகள் சென்று புண்ணியம் தேடி வருவீர்கள். கல்வி சிறக்கும். கடின உழைப்பின் காரணமாக தொழிலில் அங்கீகாரம் அல்லது பரிசு கிடைக்கும்.  வாகன வசதிகள் மேம்படும். பலவழிகளில் மற்றும் வாக்கு வன்மையாலும் பணவரவு கூடும். அந்தஸ்து உயரும்.   தொலைதூரத்திலிருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். சிலருக்குக் கெட்ட கனவுகள் தோன்றும்மொத்தத்தில் தனுர்ராசி அன்பர்களுக்கு 70 சதவிகித நற்பலன்கள் ஏற்படும்.

    குடும்பம் மற்றும் ஆரோக்கியம் : புதிய சாதனைகள் புரிவர். உடற்பொலிவும் ஒளியும் கூடும். மனதுக்குப் பிடித்தபடி மனை, வீடு மற்றும் வாகன வசதிகள் கிடைக்கும். மனைவியுடன் சிறுசிறு ஊடல்கள் ஏற்படும். தெய்வபக்தியும், தர்மசிந்தனையும் ஏற்படும். ஒரு நல்ல குறிகோளுக்காக புண்ணியத்தல யாத்திரைகள் மேற்கோள்வர்சிலருக்கு புத்திரபாக்கியம் ஏற்படும்.

    தொழில் மற்றும் வியாபாரம் : வளர்பிறைபோல் நாளுக்குநாள் சந்தோஷமும், செல்வமும் பெருகும். பால் வளம் பெருகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் புதுத் தெம்பும், உற்சாகமும் கூடும். அரசு அதிகாரிகளுக்கு பிறர்குக் கட்டளையிடும் பெரும் பதவிகள் கிடைக்கும். பிறர் பணமும் இவருக்கு வந்து சேரும். ஆறு, கடல் போன்றவற்றின் வாணிபம் பெருகி இலாபம் கிடைக்கும். அரசுப் பணிகள் கிடைக்கும். ஹங்கேரி, அரேபிய நாடுகள், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுடனான வர்த்தக ஏற்றுமதிகள் கூடும்.

    பெண்கள் : குழந்தைகள் பராமரிப்பில் அதிக அக்கறைகொண்டு மனமகிழ்ச்சி அடைவீர்கள். திருமணமாகாத பெண்களுக்குத் திருமணமாகி மகிழ்ச்சிகரமான வாழ்க்கை அமையும்பணிபுரியும் பெண்கள் வேறு உயர்வான பணிக்குச் செல்ல காய்களை நகர்த்துவர். உயர் அதிகாரிகளின் அனுசரணையால் உற்சாகம் பொங்கி, மனநிறைவோடு தங்கள் பணிகளைத் திறம்படச் செய்வர். அரசு மூலம் சுயவுதவிக் குழுக்களுக்குப் புதிய சலுகைகள் கிடைக்கும்.

    மாணவர்கள் : மாணவர்களின் கல்வித்தரம் உயரும். சில மாணவர்களுக்கு ஆசிரியர்களின் வழிகாட்டுதல் இருந்தாலும், வீணாகப் பொழுதைக் கழிப்பதால் பின்தங்கிய நிலையில் இருப்பர். தடகளப் போட்டிகளில்  பங்கு பெற்று தேசிய அளவில் பரிசுகளையும், பதக்கங்களையும் வெல்வர்மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற அக்கறையுடன், ஆர்வமுடன் கவனமாகப் படித்தால் மட்டுமே எண்ணிய இலக்கை அடைய முடியும்.

    ஜனன ஜாதகப்படி இராசிக்கு அட்டமத்தானத்தில் கோசாரச் சந்திரன் சஞ்சரிக்கும் காலமே சந்திராஷ்டம காலமாகும்இக் காலத்தில் சிக்கல்களும், சிரமங்களும் ஏற்படலாம். தங்களுக்கு இம் மாதம் சந்திராஷ்டம காலம் 16 – 10 - 2014 காலை 7- 27  மணி முதல் 18 – 10 – 2014 மாலை 6 – 53  மணி வரை ஆகும். இக் காலங்களில் கவனமுடன் செயலாற்றுங்கள்.

    அதிர்ஷ்ட எண்கள்;- 6, 3, 5,  மற்றும் 8 ஆகும். சாதகமான எண்கள் 1 மற்றும் 4 ஆகும். அனுகூலமற்ற எண்கள் 2, 7,  மற்றும் 9 ஆகும்.

    அதிர்ஷ்ட நிறம்;- ஆரஞ்ச், பச்சை, க்ரீம், வெள்ளை மற்றும் வெளிர் நீலமாகும்.   தவிர்க்க வேண்டிய நிறங்கள் சிகப்பு  மற்றும் கருப்பு ஆகும்.

    அதிர்ஷ்டக் கற்கள்;- புஷ்பராகத்தை தங்கத்தில்  பதித்த மோதிரத்தை வியாழக் கிழமையன்று, பூஜைக்குப் பிறகு வலது கை முதலாவது விரலில் அணிவது உத்தமம்.

    ஆகாதஇராசிமீனம், மாதம் - ஆடி, கிழமைவெள்ளி, நட்சத்திரம் -- பரணி, திதிகள்திருதியை, அஷ்டமி மற்றும் திரயோதசி  ஆகும். யோகம் --  வஜ்ரம், கரணம் -- தைதுலை  ஆகும்.

    பரிகாரம்;- தொடர்ந்து ஶ்ரீ கிருஷ்ணரை வணங்கி,  நெய்த் தீபம் ஏற்றிவர, துன்பங்கள் தூர விலகும். சூரிய நமஸ்காரம் செய்தல், மஞ்சள் வண்ண ஆடையணியவும்,  மஞ்சள் மலர்களால் அர்ச்சித்தலும், புஷ்பராக்கல் அணியவும் அல்லது கொண்டைக்கடலை தானம் செய்வதும் தோஷநிவர்த்தி ஆகும்.