Search This Blog

Showing posts with label குருப் பெயர்ச்சி பலன்கள் -2018-19. Show all posts
Showing posts with label குருப் பெயர்ச்சி பலன்கள் -2018-19. Show all posts

Monday, 13 August 2018

குருப் பெயர்ச்சி பலன்கள் -2018-19



குருப் பெயர்ச்சி பலன்கள் -2018-19


விருச்சிகம்



( விசாகம்- 4, அனுஷம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் கேட்டை -1,2,3,4 பாதங்கள் )
       தைரிய காரகனான செவ்வாயை அதிபதியாகக் கொண்ட சோர்விலாத மனத்தையும், இனிமையான பேச்சையும், கேட்பவர்களுக்கு மறுக்காது கொடுப்பவருமான  விருச்சிக இராசி அன்பர்களே! தங்கள் இராசிக்கு குருப் பெயர்ச்சி  தரும்  பலன்களைப் பார்ப்போம். பொதுப் பலன்கள், பார்வை பலன்கள், மூர்த்தி நிர்ணயப்படி சிறப்பு பலன்கள் என அனைத்து இராசி நண்பர்களுக்கும் சீரான சிறப்பான பலன்களே அமையும்.

       தங்கள் இராசிக்கு தன, புத்திர பாவாதிபதியான குரு தங்கள் ஜன்ம இராசியில் புரட்டாசி மாதம் 18 ஆம் நாள், வியாழக் கிழமை, 04 – 10 – 2018 முதல் சஞ்சரிக்கிறார். ‘ ஜென்ம இராமர் வனத்திலே சீதையைச் சிறை வைத்ததும் ‘ – என வரும் பழம் பாடல் படி இராம பிரானுக்கே அந்த கதி என்றால் நமக்கு. அதனால் துவக்கத்தில் பதவி உத்தியோகத்தில் பிரச்சனைகள் எழலாம். காடு, மேடு பள்ளமென அலைந்து திரிய நேரும். சுபகாரியச் செலவுகள் ஏற்படும். அளவுக்கு அதிகமான பொருள் வரவு வந்தாலும் செலவுகளும் அதிகமாகும். சிறுசிறு உபாதைகள் எழலாம். உயர்குலப் பெண்ணால் அவப் பெயர் ஏற்படலாம். தான தருமம் செய்வதால் கைப் பணம் கரையும். வெளிநாட்டுப் பயண வாய்ப்புகள் ஏற்படும். இடமாற்றம், பதவி மாற்றம் ஆகியவை நிகழலாம். அனைத்திலும் இலாபமும்,  மகிழ்ச்சியும் குறையும். தேவையற்ற, ஆதாயமற்ற பயணங்கள் ஏற்படும். புகழ் மங்கும், பிறர் வழங்கும் மதிப்பு, மரியாதை எனத் துவங்கிய வாழ்வு இந்த வருடம் முன்னேற்றகரமாகவே இருக்கும். படிப்பை முடித்தவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்புக்கள் தாமதமாகவே கிடைக்கும். உறவுகளைப் பிரிய வேண்டிய நிலை ஏற்படும். எதிலும் ஒரு பிடிப்பும், ஆர்வமும் இருக்காது. உங்கள் செயல்பாடுகளில் எப்போதும் ஓர் அச்ச உணர்வு இருந்து கொண்டே இருக்கும். இராஜகோபமும், பொன், பொருள் இலாபமின்மை ஆகியவை ஏற்படும். தகவல் தொடர்பு ஐ. டி நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு வெளிநாட்டு வாய்ப்புகள் ஏற்பட்டு, வெளிநாடு செல்வர். குழந்தை இல்லாதவர்கள் புதிதாக குழந்தை தத்தெடுக்க சரியான காலமாகும். சிலருக்குக் குழந்தைகளின் திறமையான செயல்பாடுகளின் மூலம் மகிழ்ச்சியான தருணங்களாக அமையும். அடிக்கடி மன மாற்றங்கள் ஏற்பட்டு, குழப்பமான சூழ்நிலையே நிலவும். வீண் கற்பனைகளை வளர்த்துக் கொள்ளாதீர்கள். அதன் காரணமாக உடல் சோர்வும், கோபமும் அடிக்கடி ஏற்படும். கணவன் மனைவி உறவுகளில் முகவும் இணக்கமான சூழல் நிலவும். சிலருக்கு வேலையில் கூடுதல் பொறுப்புகள் வந்து சேரும். தெய்வ அனுகூலமும், தெய்வீக புருஷர்களை சந்தித்து, இவர்களின் அருளாசி பெறுவீர்கள். உயர்கல்வி படிக்கும் மாணவர்களின் கல்வித் திறன் மேம்படும்.   

       குரு தனது 5 ஆம் பார்வையாக புத்திர, பூர்வ புண்ணிய பாவங்களைப் பார்வை செய்வதால்  மணமான தம்பதியர்க்கு மழலைச் செல்வம் ஏற்பட்டு மனம் மகிழ வைக்கும். தாய் வழியில், ஏதேனும் ஒரு வகையில் பணவரவு ஏற்படும். நோய் பாதிப்புகள் குறைந்து, சுகமான, சொகுசான வாழ்க்கை அமையும். தெய்வீக கைங்கரியங்கள் செய்து தெய்வ அனுக்கிரகத்தை பெறுவீர்கள். காதல் விவகாரங்களில் ஏற்பட்ட தடங்கல்கள் அனைத்தும்   நிவர்த்தியாகும்.

       குரு தனது 7 ஆம் பார்வையாகக் களத்திர பாவத்தைப் பார்வை செய்வதால், கூட்டாளிகளிடையே ஒற்றுமை ஓங்கும். கணவன், மனைவி இடையே இணக்கமான உறவு ஏற்படும். ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு இன்பமான, இணக்கமான வாழ்க்கை வாழ்வார்கள்.  புதிய ஒப்பந்தங்கள் நிறைவேறும். தாயாரின் ஆரோக்கியம் மேம்படும். ஆராய்ச்சிக் கல்விக்கான பிறரின் உதவிகள் தடையின்றி கிடைக்கும். கூட்டு வியாபாரம் செய்பவர்கள் மேன்மை அடைவார்கள்.

       குரு தனது 9 ஆம் பார்வையாக பாக்கிய பாவத்தைப் பார்ப்பதால் சமுதாயத்துக்கும், மக்களுக்குமான பொதுச் சேவைகளில் ஈடுபட்டுனுயர்வு அடைவார்கள். கோவில் திருப்பணுகள், தர்ம காரியங்களில் ஈடுபட்டு, புகழ் அடைவர். மதிப்பு, மரியாதை, கௌரவம் ஆகியவை உயரும். பூர்வீகத் தொழில்கள், விவசாயம் ஆகியவை  மேம்பாடு அடையும். இலாபமும் கூடும்.  


 விருச்சிக இராசியினருக்கு மூர்த்தி நிர்ணயப்படி ரஜத மூர்த்தியாக இரண்டாம் நிலையில் அமைவதால் இந்த இராசிக்காரர்களுக்கு வெள்ளி ஆபரணங்கள், பாத்திரங்கள் ஆகிய சேர்க்கை உண்டாகி நன்மை அளிக்கும். ரஜத மூர்த்தியாவதால், அவர் அளிக்கும் நன்மை ஓரளவு குறைகிறது.  சுமாரான பலன்களே ஏற்படும். 70%
       ஒவ்வொரு வியாழக் கிழமையும், குரு ஹோரையில், தொடர்ந்து 12 வாரங்கள் குரு ஸ்தோத்திரத்தை 108 முறை பாராயணம் செய்து, மஞ்சள் வர்ண மலர்களால் அர்ச்சித்து வழிபாடு செய்ய நற்பலன்கள் சித்திக்கும்.