Search This Blog

Showing posts with label 2014 - அக்டோபர் மாத இராசிபலன்கள் (ஜோதிட வாசல் இதழில் வெளியானது) விருச்சிகம். Show all posts
Showing posts with label 2014 - அக்டோபர் மாத இராசிபலன்கள் (ஜோதிட வாசல் இதழில் வெளியானது) விருச்சிகம். Show all posts

Wednesday, 1 October 2014

2014 - அக்டோபர் மாத இராசிபலன்கள் (ஜோதிட வாசல் இதழில் வெளியானது) விருச்சிகம்.

2014 - அக்டோபர் மாத இராசிபலன்கள்

(ஜோதிட வாசல் ஜோதிட இதழில் வெளியானது)

விருச்சிகம்

( விசாகம்- 4, அனுஷம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் கேட்டை -1,2,3,4 பாதங்கள் )

( இராசி  அறியாதவர்கள் பலன் அறியதோ, , நி, நு, நே, நோ, , , யு )

    தங்கள் இராசிநாதன் ஜென்ம இராசியில் அமர்வதால் ஏற்படும் மகிழ்ச்சியற்ற மன நிலைகள் குருவின் பார்வையால் மாறி குடும்பத்தில் சந்தோஷம் நிலவ வழிவகுக்கும். இலாபத்தில் உள்ள கிரகங்கள் அனைத்தும் அதனதன் தன்மைகளுக்கு ஏற்ப நன்பலன்களை அளிக்கும். பல வழிகளிலும் பணம் குவியும். உறவுகளின் உதவி உரிய நேரத்தில் கிடைக்கும். யாத்திரையும், வெளிநாட்டுப் பயணங்களும் மகிழ்ச்சி தரும். அரசியலில் நல்ல பதவிகள் இராஜயோக அமைப்பு உள்ளவர்களுக்குக் கிடைக்கும். ஆன்மிக வழிகளில் ஆர்வம் அதிகரிக்கும்.  தானிய விளைச்சல் அதிகரிக்கும்சிலருக்கு புத்திர பாக்கியம் ஏற்படும். அன்பளிப்பு, பரிசுகள் கிடைக்கும். புகழ், மரியதை ஆகியவை கூடும். குடும்பத்தில் நல்ல பல முன்னேற்றங்கள் ஏற்படும். நல்ஆரோக்கியம் ஏற்படும். திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமணம் நடக்கும். இது உங்களுக்கு அனுகூலமான, திருப்திகரமான, நல்ல நேரம். சிலர் மேலதிகாரிகளின் பாராட்டுக்கு ஆளாவர், தேவையற்ற அலைச்சல்கள் ஏற்படும். வீண் செலவுகள் அதிகரிக்கும். விபத்துக்களைத் தவிர்க்க பயணங்களில் எச்சரிக்கையுடன் இருத்தல் அவசியம்மொத்தத்தில் விருச்சிக ராசி அன்பர்களுக்கு 60 சதவிகித நற்பலன்கள் ஏற்படும்.

    குடும்பம் மற்றும் ஆரோக்கியம் : பலவகை யோகமும் சந்ததி விருத்தியும் ஏற்படும். செயல்திறன் கூடும். அதிக தனலாபமும், மனை, வீடுகள் மூலம் இலாபமும் ஏற்படும். தெய்வபக்தி பெருகும். பல புண்ணியத்தல யாத்திரைகள் மேற்கொள்வர். ஒதுங்கி நின்றாலும் சிலர் உங்களை வம்புக்கு இழுப்பர்.

    தொழில் மற்றும் வியாபாரம் ;-  தொழில் மற்றும் வியாபாரத்தில் அதிக அக்கறையும், ஈடுபாடும் அதிகரிக்கும். அதன் காரணமாகப் பண இலாபங்களும் அதிகரிக்கும்.  புதிய திட்டங்களில் முதலீடு செய்யாதிருப்பது நல்லதுஉலோகங்கள் மற்றும் கம்பளிப் பொருட்கள் வியாபாரம் அதிக ஆதாயம் தரும். தானிய வகைகளை பயரிடுவோருக்கு நல்ஆதாயம் ஏற்படும். சகோதரர்களின் ஆதரவால் பொருளாதாரத்தில்  திருப்திகரமான நிலை ஏற்படும்எல்லா நிலைகளிலும் ஏற்படும் போட்டிகளைச் சமாளிக்கக் கடின உழைப்பே கைகொடுக்கும்.  

     பெண்கள் :  புதிய ஆபரணங்கள் வாங்குவீர்கள். பணிபுரியும் பெண்கள் தாங்கள்  எதிர்பார்த்தபடி நல்ல இடத்தில் திருமணம், பதவி உயர்வுகள் மற்றும் முன்னேற்றங்கள் ஏற்படும். கருவுற்றிருக்கும்  பெண்களின் கைகளில் அழகிய குழந்தை தவழும் நிலை ஏற்படும். சுயதொழிலில் உற்பத்திப் பெருக்கம் ஏற்பட்டு, இலாபமும் அதிகரிக்கும். உங்கள் கணவர் நீங்கள் விரும்பியதையெல்லாம் கண்டிப்பாக வாங்கித் தருவார்.
    மாணவர்கள் : விளையாட்டு சம்பந்தமான பயணங்கள் பயனுள்ளதாக அமையும். பிற்பகுதியில் மாணவர்களுக்கு கவனச் சிதறல்கள் காரணமாக படிப்பில் ஆர்வம் குறையும். போட்டி தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் சில தடைகளை எதிர்கொள்வர். காதல் விவகாரங்கள் சாதகமாக அமையும். வாகனங்களில் செல்லும்போது வேகத்தைக் குறைத்தால் விபத்துக்களைத் தவிர்க்கலாம்.

    ஜனன ஜாதகப்படி இராசிக்கு அட்டமத்தானத்தில் கோசாரச் சந்திரன் சஞ்சரிக்கும் காலமே சந்திராஷ்டம காலமாகும்இக் காலத்தில் சிக்கல்களும், சிரமங்களும் ஏற்படலாம். தங்களுக்கு இம் மாதம் சந்திராஷ்டம காலம் 13 – 10 - 2014 இரவு 9  - 43 மணிமுதல் 16 – 10 - 2014 காலை 7 – 26  மணி வரை ஆகும். இக் காலங்களில் கவனமுடன் செயலாற்றுங்கள்.

    அதிர்ஷ்ட எண்கள்;- 3, 9, 2, 4, 1 மற்றும் 7 ஆகும். அனுகூலமற்ற எண்கள் 5, 6,  மற்றும் 8 ஆகும்.

    அதிர்ஷ்ட நிறம்;- ஆரஞ்ச், மஞ்சள், க்ரீம் மற்றும் சிகப்பு ஆகும். தவிர்க்க வேண்டிய நிறங்கள் நீலம், வெள்ளை மற்றும் பச்சை ஆகும்.

    அதிர்ஷ்டக் கற்கள்;-   மஞ்சள் புஷ்பராகத்தை அல்லது செம்பவளத்தை  தங்கத்தில் அல்லது செம்பில் பதித்த மோதிரத்தை செவ்வாய்க் கிழமையன்று, பூஜைக்குப் பிறகு வலது கை நாலாவது விரலில் அணிவது உத்தமம்.

    ஆகாதஇராசிமிதுனம், மாதம் - அய்ப்பசி, கிழமைவெள்ளி, நட்சத்திரம் -- ரேவதி, திதிகள்பிரதமை, சஷ்டி மற்றும் ஏகாதசி  ஆகும். யோகம் --  வியாதீபாதம், கரணம் -- கரஜை  ஆகும்.

    பரிகாரம் : தொடர்ந்து துர்க்கையை வணங்கி,  நெய்த் தீபம் ஏற்றிவர, துன்பங்கள் தூர விலகும். சூரிய நமஸ்காரம் செய்தல், சிவப்பு வண்ண ஆடையணியவும்,  வெள்ளை மலர்களால் அர்ச்சித்தலும், பவளம் அணியவும் அல்லது சிகப்புக் காளை தானம் செய்வதும் தோஷநிவர்த்தி ஆகும்.