Search This Blog

Showing posts with label 2014-அக்டோபர் மாத இராசி பலன் ஜோதிட வாசல் - ஜோதிட இதழில்- ரிஷப இராசிக்கான பலன்.. Show all posts
Showing posts with label 2014-அக்டோபர் மாத இராசி பலன் ஜோதிட வாசல் - ஜோதிட இதழில்- ரிஷப இராசிக்கான பலன்.. Show all posts

Wednesday, 1 October 2014

2014-அக்டோபர் மாத இராசி பலன் ஜோதிட வாசல் - ஜோதிட இதழில்- ரிஷப இராசிக்கான பலன்.

2014-அக்டோபர் மாத இராசி பலன்

ஜோதிட வாசல் - ஜோதிட இதழில்

ரிஷபம்

ரிஷபம்

( கார்த்திகை – 2,3,4 பாதங்கள்-ரோகிணி-1,2,3,4-பாதங்கள்-மிருகசிரீடம்-1,2 பாதங்கள் )

( இராசி  அறியாதவர்கள் பலன் அறிய, , , , , வி, வு, வே, வோ )

        தங்கள் இராசிநாதன் சுக்கிரனின் அனுகூல நிலையால் நல்ல குழந்தை பிறக்கும். பதவியில் உள்ளவர்களின் பரிச்சியமும், அனுகூலமும் கிடைக்கும். உயர்பதவிகள் தேடி வரும். தனவிருத்தியும் உண்டாகும். வாகனங்களும், சொத்துக்களும் வந்து சேரும்.. சனியும், புதனும் அனுகூல நிலையில் உள்ளனர். பிற கிரகங்கள் சாதகமாக இல்லைசனியின் அனுகூலநிலை பொன்னும் பொருளும் தரும். குடும்பத்தில் உள்ளவர்களின் உதவிகள் கிடைக்கும். புதுவீடு கட்டுதல் போன்ற நன்மைகள் ஏற்படும். பதவி, கௌரவம் ஆகியவை உயரும். அவர் விருச்சிகத்துக்கு மாறும் வரை இராஜ யோகம் தான்சிலரின் பெற்றோர்க்கு ஆரோக்கியம் கெடும்இலாபத்தில் உள்ள கேது பயிர் விளைச்சலை அதிகப்படுத்துவார். பிற மொழிபேசும் பெண்களின் நட்பால் முன்னேற்றம் ஏற்படும். சுற்று வட்டாரத்தில் மதிப்பு, மரியாதை கூடும். தாய் மாமன் வகையில் நன்மை உண்டாகும். வாக்கு வன்மையும், வித்துவத்துவமும் ஏற்படும். நற்சிந்தனைகளில் நாட்டம் ஏற்படும். பிறர் வாங்கும் கடனுக்குப் பொறுப்பேற்காதிருப்பது நல்லது. நல்லவர்களுடன் பழகுவது நலம் பயக்கும். மொத்தத்தில் ரிஷப இராசி அன்பர்களுக்கு 65 சதவிகித நற்பலன்கள் ஏற்படும்.

    குடும்பம் மற்றும் ஆரோக்கியம்: கணவன் மனைவியடையே அன்பும் பாசமும் பெருகும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். புத்தி சாதுர்யத்தால் வாழ்க்கையில் பொருளாதார நிலை சீராக இருக்கும். குழந்தைகள் வகையில் சுபச்செலவுகள் ஏற்படும். கோவில் திருப்பணிகள் செய்வர். வாகனயோகம் ஏற்படும். வெளிநாட்டுப் பயணங்கள் ஆதாயம் தரும்.

    தொழில் மற்றும் வியாபாரம்: எதிர்கால தொழில் முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு விரிவாக்கத் திட்டங்களில் முதலீடுகள் செய்வது ஏற்றம் தரும். அரசு ஊழியர்களுக்கு, மற்றவர்களுக்கு கட்டளையிடும் தலைமைப் பதவி கிடைக்கும். வாடிக்கையாளர்களின் மனமறிந்து நடக்க ஆதாயம் பெருகும். வங்கிக் கடன்கள் சுலபமாகக் கிடைக்கும்.  அதன் காரணமாக சுயதொழில் புரிபவர்களுக்குப் பணப் பற்றாக்குறை நீங்கி உற்பத்தி பெருகி இலாபம் அதிகரிக்கும்.

     பெண்கள்: கணவன் மனைவிக்குள் நல்லுறவு அதிகரிக்கும். சுயதொழில் புரியும் பெண்களுக்கு எதிர்பாராத ஆர்டர்கள் கிடைக்கப் பெற்று ஆதாயம் பெருகும். அரசுப் பணிபுரியும் பெண்களுக்கு உடன் வேலை பார்ப்பவர்களின் உதவிகள் கிடைக்கும். உயர் பதவிகள், பாராட்டுக்கள் கிடைக்கும்.

     மாணவர்கள்: கல்வியில் கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்படும். விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிகிட்டும் வாய்ப்புக்கள் உருவாகும். முகநூல், வலைத்தளங்களில் பொழுதைக் கழிக்காமல் படிப்பின் மீது கவனம் செலுத்தினால் அதிக மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெறலாம். பணிக்காகப் போட்டித் தேர்வு எழுதுபவர்கள், கவனமாக எழுதி தேர்வுகளில் வெற்றி பெறுவர்.

     சந்திராஷ்டமம்;- ஜனன ஜாதகப்படி இராசிக்கு அட்டமத்தானத்தில் கோசாரச் சந்திரன் சஞ்சரிக்கும் காலமே சந்திராஷ்டம காலமாகும்இக் காலத்தில் சிக்கல்களும், சிரமங்களும் ஏற்படலாம். தங்களுக்கு இம் மாதம் சந்திராஷ்டம காலம் 28 – 10 –2014 அதிகாலை 05-43 மணி முதல், 30 – 10 – 2014 காலை 09 – 12 மணிவரையாகும். இக் காலங்களில் கவனமுடன் செயலாற்றுங்கள்.

    அதிர்ஷ்ட எண்கள்;- 2 மற்றும் 8 ஆகும். கவரும் எண்கள் 7 மற்றும் 9 ஆகும். சாதகமான எண்கள் 1, 3, 4 மற்றும் 6 ஆகும். அனுகூலமற்ற எண் 5 ஆகும்.


    அதிர்ஷ்ட நிறம்;- பிங்க், பச்சை, வெள்ளை ஆகும். தவிர்க்க வேண்டிய நிறம் சிகப்பு ஆகும்.

    அதிர்ஷ்டக் கற்கள்;- வைரத்தைத் தங்கத்தில் பதித்து வெள்ளிக் கிழமையன்று, பூஜைக்குப் பிறகு வலது கை மூன்றாவது விரலில் அணிவது உத்தமம்.

    ஆகாதஇராசிசிம்மம், மாதம்மார்கழி, கிழமைசனி, நட்சத்திரம் -- ஹஸ்தம், திதிகள்பஞ்சமி, தசமி மற்றும் பெளர்ணமி ஆகும். யோகம் -- சுக்கிலம், கரணம் -- சகுனி  ஆகும். இந்தக் காலங்களில் நல்ல காரியங்கள் செய்யாதிருப்பது நல்லது.

    பரிகாரம்;- தொடர்ந்து ஶ்ரீ ஆஞ்சனேயருக்கு சனிக்கிழமைகளில் நெய்த் தீபம் ஏற்றிவர, துன்பங்கள் தூர விலகும். வெள்ளை உடையும், வைரமும் அணியவும், வெள்ளி அல்லது மொச்சை தானம் செய்வது தோஷநிவர்த்தி தரும்.