Search This Blog

Saturday, 9 January 2016

பெண்கள் ருது ஆன கால நேரத்தின் பலனும் ,



பெண்கள் ருது ஆன கால நேரத்தின் பலனும்

பரிகாரங்களும்.
       பெண்களுக்கு ஜனன காலத்தைப் போலவே முதல் ருது காலமும் மிக முக்கியமானதென ஜோதிஷ சாஸ்திரத்தில் கருதப்படுகிறது. அப்பொழுதே அவள்     பெண் ” – என  அழைக்கப்படும் பெண்மைக்கு உரியவள் ஆகையால் முதல் ருது கால ஜாதகமும் முக்கியமானதாகிறது.
பெண்கள் ருதுவான மாத பலன்.
       சித்திரை மாதம் ருதுவானால்கணவனுக்கு ஆகாது. வைகாசிசுகமாக இருப்பாள். ஆனி மாதமானால்புத்திர பாக்கியத்தோடு திகழ்வாள். ஆடி மாதமானால்பல ஆண்களமீது ஆசை கொள்வாள். ஆவணிநல்ல குழந்தைகளைப் பெற்று மகிழ்வாள். புரட்டாசி எனில் விருத்தி புத்தி உடையவள். ஐப்பசி மாதமாகில் பிள்ளைகளைப் பெற்றபின் விதவையாவாள். கார்த்திகை மாதம்பலரையும் தூஷிப்பாள். மார்கழிநல்ல குழந்தைகளைப் பெறுவாள். தை மாதமானால் புண்ணியம் செய்தவள் ஆவாள். மாசி எனில் செல்வ வளம் பெற்று வாழ்வாள். பங்குனி மாதமாகில் -  பல குழந்தைகளுக்குத் தாயாவாள்.
       இனி தோஷமுள்ள மாதங்களுக்கு மட்டும் என்ன நிவர்த்தி என்று பார்ப்போம்.
       சித்திரை மாதம் ஒரு பெண் ருதுவானால் அவளின் கணவனுக்கு ஆகாது என்று பார்த்தோம். கணவன் பலவித துன்பங்களுக்கு ஆளாவான்.
சித்திரை மாதத்தில் ருதுவான தோஷம் விலக
       இதற்கு சாந்தி பரிகாரம் என்னவெனில்கணவனும் மனைவியும் புத்தாடை உடுத்தி, நவ கலசங்களை வைத்து, அதில் நவகிரகங்களை ஆவாஹனம் செய்து, ஹோமங்கள் செய்து பூஜிக்க வேண்டும். பிறகு ஆயிரம் ஓட்டைகள் இடப்பட்ட மண்பாத்திரத்தை அவர்கள் தலைக்கு மீது பிடித்து, நவ கலச நீரால் அவர்களுக்கு அபிஷேகம் செய்வித்து, பின் புத்தாடைகளைக் களைந்து, ஒரு சுமங்கலிக்குக் கொடுத்து, ஏழைகளுக்கு வயிறார அன்னமிட்டு உபசரித்தால், சித்திரை மாதம் ருதுவான தோஷம் நீங்கி, இருவரும் உறவுகள் அவர்களைக் கண்டு மகிழ அனைத்து செல்வங்களும் பெற்று ஜாடிக்கு ஏத்த மூடி போல் நல்ல பிள்ளைச் செல்வங்களையும் பெற்று மகிழ்வுடன் வாழ்வர்.
ஆடி மாதத்தில் ருதுவான தோஷம் விலக
       ஆடி மாதத்தில் பூப்பெய்தும் போது களத்திர பாவத்தில் சுக்கிரன் இருக்கவும், 7 ஆம் பாவதிபதி  மறைவு ஸ்தானங்களில் இருக்க, இலக்னாதிபதி பகையும் பெற்றிருந்தால், ஜாதகி பல ஆண்களை மோகித்து, அதிக காமத்தோடு அலைந்து, உற்றார் உறவுகள் முன் அவமானம் அடைந்து, பலரையும் விரோதித்துக் கொண்டு, மன சஞ்சலத்தோடு துன்புறுவாள்.  
       இதற்கு சாந்தி பரிகாரம் என்னவெனில் -- ஆடி மாதம் முதல் நாள், நவ கலச ஸ்தாபனம் செய்து, நவகிர பூஜை செய்து 16 நாட்கள் பூஜித்து, 16 நாட்களும் சுமங்கலிகளை அழைத்து மஞ்சள், குங்குமம், தாம்பூலம் கொடுத்து, பசுவுக்கு புல் கொடுத்தும், கடைசி நாளில் அன்னதானம் செய்தால் தோஷம் விலகும். அப்படிச் செய்தால் நல்ல பிள்ளைச் செல்வங்களைப் பெற்று, சுமங்கலியாய் மகிழ்வுடன் வாழ்வாள்.
ஐப்பசி மாதத்தில் ருதுவான தோஷம் விலக
       ஐப்பசி மாதத்தில் பூப்பெய்தும் போது, துலாராசியில் சூரியனும், களத்திர ஸ்தானாதிபதி எந்த கிரகமாய் இருந்தாலும், ஜாதகி குழந்தைகளைப் பெற்று, கணவனை இழந்து, விதவையாய் வறுமையுடன் வாழ நேரலாம்.
       இதற்கு சாந்தி பரிகாரம் என்னவெனில் சுமங்கலிப் பெண்களுக்கு ஸ்னானம் செய்வித்து, சிகப்பு நிற புத்தாடை, மாங்கல்யம், மஞ்சள், குங்குமம், கண்ணாடி, தாம்பூல தட்சிணைகள் வைத்து தானம் செய்து, உபசரித்து அனுப்பினால், இத் தோஷம் விலகுவதோடு, நல்ல பிள்ளைச் செல்வங்களைப் பெற்று, சுமங்கலியாய் மகிழ்வுடன் வாழ்வாள்.
கார்த்திகை மாதத்தில் ருதுவான தோஷம் விலக
        பெண்கள் கார்த்திகை மாதத்தில் பூப்பெய்தினால், கோபம் உடையவளாகவும், குரோதம், அனைவரையும் வெறுத்து, பகைத்துக் கொண்டு, பெரிய கலகக்காரியாகத் திகழ்வாள்.  
       இதற்கு சாந்தி பரிகாரம் என்னவெனில்  - பெண்கள் சோமவார விரதம் அனுஷ்டிக்க வேண்டும். சிவன் கோவிலில், தாமரை தண்டு திரிபோட்டு, பசு நெய் ஊற்றி திருவிளக்கேற்றி, அர்ச்சனை செய்ய வேண்டும். இதனால், இத் தோஷம் விலகுவதோடு, பெண் சாந்தம் உடையவளாகி, கணவனுக்கு இனியவளாய், எல்லோருக்கும் நல்லவளாய் இருப்பாள்.
பெண்கள் ருதுவான வார (கிழமை) பலனும், பரிகாரங்களும்.
       ஞாயிறு அன்று  ருதுவானால்நோயுற்று இருப்பாள். திங்கள்பதிவிரதையாக இருப்பாள். செவ்வாய் அன்று ருதுவானால் இடுக்கண் உண்டாயிருப்பாள். புதனானால்புத்திர பாக்கியமும், செல்வமும் உடையவளாய் இருப்பாள். வியாழன் அன்று ருதுவானால்பாக்கியவதியாய் இருப்பாள். வெள்ளி அன்று ருதுவானால்கணவனை தெய்வமாக வணங்கி, பதிபக்தியோடு திகழ்வாள். சனியானால்விபத்தில் சிக்க நேரலாம்.
இனி தோஷமுள்ள கிழமைகளுக்கு மட்டும் என்ன நிவர்த்தி என்று பார்ப்போம்.
ஞாயிறு அன்று ருதுவான தோஷம் விலக
       தோஷமுள்ள பெண் ஞாயிறன்று அதிகாலை எழுந்து, நீராடி, பக்தியுடன் சூரியனை வணங்கி, சூரிய பூஜை செய்து  சுமங்கலிப் பெண்ணுக்கு கோதுமை தானம் செய்து, இல்லாதவருக்கு அன்னதானம் செய்து, உபசரித்து அனுப்பி, இரவில் சூரியனுக்கு அர்ச்சனை செய்துவந்தால் இத் தோஷம் விலகி நோயில்லாது ஆரோக்கியத்தோடு மகிழ்வுடன் வாழ்வாள்.
செவ்வாய் அன்று ருதுவான தோஷம் விலக
       தென்னங்கீற்றால் அல்லது பனை ஓலையால் வேய்ந்த குடிசைக்குள், பூப்பெய்திய பூவையைப் படுக்க வைத்து, குடிசையின் வாயிலை அடைத்து குடிசையின் ஒரு பக்கத்தில் தீயிட்டுக் கொளுத்தி, பெண்ணை வேறு வழியாக வெளியில் அழைத்து வந்து நீராட்டி, சுமங்கலிப் பெண்ணுக்கும் ஸ்னானம் செய்வித்து, சிகப்பு நிற புத்தாடை, மாங்கல்யம், மஞ்சள், குங்குமம், கண்ணாடி, தாம்பூல தட்சிணைகள் வைத்து தானம் செய்து, இல்லாதவருக்கு அன்னதானம் செய்து உபசரித்து அனுப்பினால், இத் தோஷம் விலகுவதோடு, நல்ல பிள்ளைச் செல்வங்களோடு, அனைத்துச் செல்வங்களையும் பெற்று சுகமாய் மகிழ்வுடன் வாழ்வாள்.
சனிக் கிழமையன்று ருதுவான தோஷம் விலக
       ஒரு வெண்கலப் பாத்திரத்தில் நல்லெண்ணெய் ஊற்றி, அந்த எண்ணையில் அவளின் முகம் பார்க்கும்படிச் செய்து, மறுபடியும் வேறொரு கலச பாத்திரத்தில் பாலுடன் தானம் கொடுத்தால் தோஷம் நீங்கி ஜாதகி அனைத்துச் செல்வங்களும் குறைவில்லாது பெற்று வளமாக வாழ்வாள்.
பெண்கள் ருதுவான திதி பலனும், பரிகாரங்களும்.
       பெண் ருதுவானது பிரதமை திதியானால்அந்தக் கன்னி தீய குணமுடையவளாகவும், அதிகம் படுத்துபவளாகவும் இருப்பாள். துவிதியைஅழகுடையவள். திரிதியைஇன்பம் உடையவள். சதுர்த்திபல புருஷர்கள் மீது ஆசைவைப்பாள். கணவனுக்கே எதிரியாவாள். பஞ்சமிபுத்திரப் பேறு உடையவள். சஷ்டிஆசார முடையவள். சப்தமிபுத்திர பாக்கியம் உடையவள். அஷ்டமிபுத்திரர்களைப் பெற்றெடுத்து இழப்பாள், நவமிதுக்கம் உடையவள்.  தசமி தர்ம சிந்தனை உடையவள். ஏகாதசிதுன்பம் அடைவாள். துவாதசிபலம் உடையவள். திரயோதசிகோபம் உடையவள். சதுர்த்தசிசோரம் போவாள். அமாவாசை அல்லது பௌர்ணமிபாட்டுப் பாடுகிறவள். 
பிரதமை திதியில் ருதுவான பெண்களுக்கு தோஷம் விலக
      பெண்கள் சோமவார விரதம் அனுஷ்டிக்க வேண்டும். சிவன் கோவிலில்,  பசு நெய் ஊற்றி திருவிளக்கேற்றி, அர்ச்சனை செய்ய வேண்டும். ஏழைகளுக் அன்னதானம் செய்து இதனால், இத் தோஷம் விலகுவதோடு, பெண் திருமணமாகி புத்திர பாக்கியத்தோடு கணவனோடு சுக வாசியாக இன்பம் அனுபவித்து                                                                 கணவனுக்கு இனியவளாய் வாழ்வாள்.
சதுர்த்தி திதியில் ருதுவான பெண்களுக்கு தோஷம் விலக
      பெண்கள் சோமவார விரதம் அனுஷ்டிக்க வேண்டும். சிவனடியார்களுக்கு உணவளித்து இரவில் சிவன் கோவிலில்,  தாமரை தண்டு திரிபோட்டு, பசு நெய் ஊற்றி திருவிளக்கேற்றி, சிவபெருமானுக்கு அஷ்டோத்ர சத நாமங்களால் அர்ச்சனை செய்து, தீப தூபங்கள் காட்டி , நிவேதன ஆராதனைகள் செய்து வந்தால், அந்த தோஷம் விலகி, ஜாதகி பயபக்தியோடு, பதிவிரதையாக இருந்து, நல்ல புத்திரர்களைப் பெற்று, அனைத்துச் செல்வங்களையும் பெற்று சுகமாய் வாழ்ந்திருப்பாள்.
சஷ்டி திதியில் ருதுவான பெண்களுக்கு தோஷம் விலக
       வார்த்தைகளால் சண்டை சச்சரவுகளில் அந்தப் பெண் ஈடுபடாதிருக்கப் பரிகாரம் தங்கத்தால் ஆன சிறிய பசுவின் உருவம் செய்து, நவக்கிரக சாந்தி செய்து, அந்த பசுவை ஆசாரம் மிக்க அந்தணருக்கு தானம் செய்து, வயிறார உணவளித்து ஆசிகள் பெற, ஜாதகி இனிய வார்த்தைகளோடு, கணவனோடு இனிதே மகிழ்ந்து வாழ்வாள்.
அஷ்டமி திதியில் ருதுவான பெண்களுக்கு தோஷம் விலக
      அரக்கியைப் போல் கடும் வார்த்தைகள் பேசுபவளாதலால், பூப்பெய்திய மூன்றாம் மாதத்தில், நவகிரக சாந்தி செய்து, சிறுபிள்ளைகளுக்குப் பானகம், நீர் மோர் அளித்து, உணவும் அளித்தால் ஜாதகி, நற்குணம் பொருந்தி, அறிவுள்ள புத்திரர்களைப் பெற்று, நல்வாழ்க்கை வாழ்வாள்.
துவாதசிதிரயோதசி இவ்விரண்டு திதிகளில் ருதுவான பெண்களுக்கு தோஷம் விலக
      சிவாலயத்தில் நெய்விளக்கேற்றி, ருத்திர பகவானுக்கு அபிஷேக, அர்ச்சனை, ஆராதனைகள் செய்துவந்தால், ஜாதகிஅடக்கம்பொறுமை சாந்தம்இரக்கம்சமத்துவம் முதலிய நற்குணங்கள் கொண்டு, எல்லோருக்கும் நல்லவளாக இருந்து இனிதே வாழ்வாள்.
சதுர்த்தசி - திதியில் ருதுவான பெண்களுக்கு தோஷம் விலக
       ருதுவான பெண்ணுக்கு நவக்கிரக சாந்தி விதிப்படி செய்து, ஒன்பது நாளைக்கு ஆசார அனுஷ்டானத்தோடு விரதம் இருந்து தினமும் 27 முறை அரசமரத்தை பிரதட்சிணம் செய்ய வேண்டும். ஒன்பதாவது நாளன்று காகத்துக்கு அன்னமிட்டும், 9 பேருக்கு அன்ன உபசாரம் செய்து, அன்றிரவு நவக்கிரகங்களுக்கு அர்ச்சனை, ஆராதனை செய்தல் வேண்டும். இதனால் ஜாதகி நற்குணம், நற்செயல்கள் உடையவளாய், கணவனையே கண்கண்ட தெய்வமாக மதித்து, நல்ல புத்திரர்களைப் பெற்று, சுகமாய் வாழ்வாள். ( அரசமரத்தைக் காலை 6 மணி முதல் 12 மணி வரை மட்டுமே  சுற்ற வேண்டும் )
பௌர்ணமி - திதியில் ருதுவான பெண்களுக்கு தோஷம் விலக
       பெண் ருதுவான மூன்றாம் மாதத்தில் வரும் பௌர்ணமி நாளன்று, நவக்கிரக சாந்தி விதிகளின் படி செய்து விரதம் இருந்து, 9 பேருக்குத் தாம்பூல தட்சிணையோடு, உணவு அளித்து, கல்யாணப் பூசணிக்காய் தானம் செய்தால் தோஷம் விலகி, ஜாதகி, நல்ல கணவனோடு, கூடிக் குலாவி, பிள்ளைகளைப் பெற்றெடுத்து, சந்தோஷமாய் வாழ்வாள்.
       எனவே, நண்பர்களே ! இந்த கலிகாலத்தில் நாம் எதையுமே சீரியஸாக எடுத்துக் கொள்வதில்லை. பெண்கள் பூப்பெய்துவதில் இத்தனை தோஷங்கள் இருப்பதை நாம் அறிவோமா ?. இனி அடுத்த மாதம் தொடர்ந்து நட்சத்திர பலன், தரிசன பலன், கால பலன், நாழிகை, ஜாமபலன், யோகபலன் ஆகியவற்றைப் பற்றி பார்ப்போம்.     வாழ்க வளமுடன்.  //

Sunday, 8 November 2015

கேது,சுக்கிர மகாதசா பொதுப்பலன்கள்







கேது மகாதசா பொதுப்பலன்கள்.தசாக் கலாம் - 7 வருடங்கள்.
கேது புக்தி – 4 மாதம் – 27 நாட்கள்.
எதிரிகளோடு சண்டையிடுவார், நண்பர்களுடன் கருத்துவேறுபாடு, உறவகளைப் பிரிதல், மனக்கலக்கம், சொத்து இழப்பு, சந்தோஷக் குறைவு, பாசத்தை மறந்து பேதப்படுதல், அடக்குதல் அல்லது சிறைப்படுதல். மனைவி, மக்கள், சகோதரர் இவர்களின் மீது வெறுப்பு உண்டாகுதல், புரட்டாசி மாதத்தில் விலங்கு பூண நேரல், ஆயுர்பாவ விஷயத்தில் முடிவு செய்யப்பட்ட மாதம் புரட்டாசி மாதமானால் பீடை உண்டாகும்.
சுக்கிர புக்தி – 1 வருடம் 2 மாதங்கள்.
மனைவியும், மக்கட்பேறும், கன்று, காலியுண்டாகுதலும், நினைத்த காரியமெல்லாம் கைகூடுதலும், புக்தியின் முடிவில் பீடை உண்டாகும். மனைவிக்குப் பீடை உண்டாகும். சொத்துச் சேருதல், நம்பிக்கைகளும், விருப்பங்களும் வெற்றிபெறுதல், புக்தி முடிவில் ஆரோக்கியக் குறைபாடு, மனைவி மற்றும் மத சம்பந்தமான நபர்களிடம் சண்டைகள், பிறரால் அவமானம் அடைதல், மற்றவர்கள் மீது வெறுப்படைதல் ஆகியவை ஏற்படும்.
சூரிய புக்தி – 4 மாதம் – 6 நாட்கள்.
நெடுந்தூரப் பயணங்கள், திருமணம் செய்து கொள்ளப் போகும் ஆணை / பெண்ணைப் பற்றிய ஆவல் அதிகரித்தல், வெளிநாட்டுப் பயணங்களின் மூலமாக ஆதாயம் அடைதல், ஏமாற்றங்கள், தடைகள், குடும்பத்தினருக்கு ஆரோக்கியக் குறைவு ஏற்படுதல், உறவுகளுடனான, கூட்டாளிகளுடனான, மனைவியுடனான கருத்து வேறுபாடுகள் ஆகியவை ஏற்படும். இருக்கும் இடத்தைவிட்டு வெளிநாடு சென்று திரும்பி வருதல், காய்ச்சல், தலைவலி, மனக்கிலேசம் ஆகியவையும் ஏற்படும்.
சந்திர புக்தி – 7 மாதங்கள்.
பெண்கள் மூலமாக வழக்குகள், சண்டைகள், குழந்தைகளுக்கு ஆரோக்கியக் குறைவு ஏற்படுதல், கன்று காலி உண்டாகுதல், பொன் ஆபரணங்கள் சேருதல், தீமைகள் வந்து விலகுதல் ஆகியவை ஏற்படும். பலம் மிக்க சந்திரன் எனில், இலாபங்கள் மற்றும் பொருளாதார வெற்றிகள் ஏற்படும், அமைதியான மனம், பணியாளர்களை அமர்த்துதல், பெண் குழந்தை பிறத்தால், தாயின் மூலமான இலாபங்கள் ஆகியவை ஏற்படும்.
பாதிக்கப்பட்ட சந்திரனனால், சொத்து இழப்புக்கள் ஏற்படலாம், மனஅமைதி குறைதல், வழக்குகள், மகன் மற்றும் உறவுகளைப் பிரிய நேரல். பெண்கள் தொடர்பான வழக்குகளைச் சந்தித்தல், குழந்தைகள் மூலமான இழப்புக்கள் ஆகியவை ஏற்படும்.
செவ்வாய் புக்தி – 4 மாதம் 27 நாட்கள்.
குடும்பத்தாருடன் சண்டைகள், இளைய சகோதரர்களுடன் சண்டை, சொத்து இழப்பு, பெண்கள் மூலமாக அழிவு, அக்னியால், திருடர்களால், எதிரிகளால் ஆபத்து, வழக்கு மற்றும் சிறைப்படுதல், முன்னேற்றப் பாதைகளில் பல தடைகள், தடங்கல்கள் ஏற்படுதல். பயம் ஏற்படுதல், கவலைகள் ஏற்படுதல், அறுவை சிகிச்சை போன்ற துன்பங்கள் ஆகியவையும் ஏற்படும். இவை அனைத்தும் பொதுப் பலன்களே. ஜாதகரின் ஜாதகத்தில் செவ்வாயின் நிலையைப் பொறுத்து பலன்கள் மாறுபடும்.

இராகு புக்தி – 1 – 18 நாட்கள்.
செல்வம் இழப்பு, மரியாதை மற்றும் சொத்துக்களைப் பற்றிய பயம் ஏற்படுதல். அதிகாரிகள் மற்றும் கொள்ளையர்களால் இழப்பு ஏற்படுதல், சோகங்கள், எதிரிகள் மூலமாக சண்டைகள் ஏற்படுதல், கொடூரமான மனிதர்களால் இழிவாகப் பேசப்படுதல், இழிவான பெண்களோடு முறையற்ற தொடர்பு கொள்ளுதல் ஆகியவை ஏற்படும். விஷ பயம் உண்டாகுதல், அரசனுக்குக் கேடு, பெண்களுக்குப் பீடை, இகபோக, தன நாசம் ஏற்படுதல், புகழ் மறைந்து களங்கம் ஏற்படுதல்  ஆகியவை ஏற்படும். இவை அனைத்தும் பொதுப் பலன்களே. ஜாதகரின் ஜாதகத்தில் இராகுவின் நிலையைப் பொறுத்து பலன்கள் மாறுபடும்.
குரு புக்தி – 11 மாதம் 6 நாட்கள்.
தனலாபம், அரசரின் நட்பு ஏற்படுதல் (விஐபி), விஷபயம் உண்டாகி விலகுதல், இலட்சுமி கடாக்ஷ்ம் பொருந்திய மனைவி அமைதல், அதிகமான செல்வம் சேருதல் ஆகியவை ஏற்படும். கடவுள் பக்தியும், மத சம்பந்தமான நல்ல காரியங்களில் ஈடுபாடும் அதிகரித்தல், ஆண்மகவு பிறத்தல், மனைவியுடன், மற்றும் எதிர் பாலினத்தோடு ஏற்படும் தொடர்பால் மகிழ்ச்சி அடைதல். உயர் அதிகாரிகளின் மூலமான அனுகூல நிலையால் இலாபம் அடைதல்,  சொத்துச் சேர்க்கை, புகழ் மற்றும் மரியாதை கூடுதல், இலாபகரமான செயல்பாடுகள், திருமணம் ஆகவில்லையெனில், காதல் விவகாரங்களில் முன்னேற்றம் இருக்கும்.
சனி புக்தி -  1 – 1 மாதம் – 9 நாட்கள்.
 உறவுகளால் தொல்லை மற்றும் வெறுப்படைதல், பகைவர்களுடன் சண்டை இடுதல், பணம் மற்றும் பதவி இழத்தல், கால்களில் காயம் ஏற்படுதல், குடியிருப்பு மாற்றம்,  பலவழிகளிலும் இழப்புக்கள் ஏற்படுதல், மனக்கவலைகள், குழப்பங்கள் ஏற்படுதல், சனி பலம் பெற்று இருக்க இந்த பலன்கள் மாறுபட்டதாக இருக்கும்.
புதன் புக்தி – 11 – 27 நாட்கள்.
ஆண்மகவு பிறத்தல், சொத்து சேர்க்கை, மற்றவர்களிடம் இருந்து பல உதவிகள் கிடைத்தல், பூமி மூலமான இலாபங்கள் ஏற்படுதல், புத்திசாலித்தனமும், அறிவும் அதிகரித்தல், பாதிக்கப்பட்ட, பலம் இழந்த புதன் ஆனால்இழப்பு, குழந்தைகளால் கவலைகள் ஏற்படுதல், புதிய திட்டங்களில் தோல்வி காணுதல், பொறாமை கொள்ளுதல், தவறான வழிகளில் செல்லுதல், வஞ்சித்தல், மோசடி செய்தல், எதிரிகளால் தொல்லை ஆகியவை ஏற்படும். நினைத்த காரியங்கள் நிறைவேறாது, புத்திர சோகம் ஏற்படலாம். சுற்றத்தாரால் பயம் உண்டாகுதலும், நிலை மாற்றங்களும் ஏற்படும்.

சுக்கிர மகாதசா பொதுப்பலன்கள் 20 வருடம்.
சுக்கிர புக்தி – 3 வருடம் – 4 மாதங்கள்.
வாகன யோகம், ஆபரணங்கள், முத்துக் குடை, குதிரை, யானை, நறுமணப் பொருட்கள் மற்றும் அனைத்து சுகங்கள், வசதி வாய்ப்புக்கள் ஆகிய அனைத்தும் கிடைக்கும். நல்ல பணியாட்கள், ஒளிமிகுந்த உடல் மற்றும் சொத்துக்கள். உயர் அதிகாரிகளின் மூலமாக ஆதாயங்கள், எதிரிகள் விலகி ஓடுதல், புகழ் கூடுதல், , புத்திர பாக்கியம் ஆகியவை ஏற்படும். பொருளாதார வெற்றி ஏற்படும். துன்பம் நீங்கி இன்பம் வரும் நாளில் பொருட்களின் சேர்க்கையும், எளிமை அல்லது பரிதாப நிலையும் ஏற்படும். கோசார சுக்கிரன் துலாத்தைக் கடக்கும் போது அக் காலம் சோகத்துக்கான காரணமாக அமையும்.  
சூரிய புக்தி – 1 வருடம்.
பலம் மிக்க சூரியனனால், அதிகாரம் மிக்கவர்களின், உயர்பதவியில் உள்ளவர்களின் அனுகூலமான உதவிகள் கிடைக்கும். வம்ச அபிவிருத்தி அடையும், பணம் சேருதல், மதிப்பு, மரியாதை கூடுதல். பூமி இலாபம், மகிழ்ச்சிகரமான மணவாழ்க்கை ஆகியவையும், பலமற்ற, பாதிப்படைந்த சூரியனனால், உயர்அதிகரிகளால் நஷ்டம் அடைதல், மனைவி, கூட்டாளிகளால் பிரச்சனைகள் ஏற்படுதல், குழந்தைகள் மற்றும் பிறரால் தொல்லைகள் ஏற்படும். குடும்பப் பிரச்சனை, வாழ்க்கையே போராட்டம் ஆகுதல், வயிறு, கன்னங்கள், கண்கள் பாதிப்பு அடைதல் ஆகியவை ஏற்படும். துன்பம், தனவரவு குறைதல், மனைவி, மக்கள் ஓடிவிடுதல், பலருடன் வழக்கு உண்டாகுதல், தெய்வக் குற்றம் உண்டாகுதல், உற்றார் பகை ஆகியவை ஏற்படும்.
சந்திர புக்தி – 1 – 8 மாதங்கள்.
சந்திரன் பலம் மிக்கவன் ஆனால், நினைத்த காரியங்கள் கைகூடும், விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும், மகிழ்ச்சியான மணவாழ்க்கை அமையும், பெண்கள் மூலமாக ஆதாயம் அடைதல், கல்வி, அறிவு, பணம், குழந்தைகள், வண்டி வாகனங்கள் ஆகியவை கிடைக்கும். கடவுளை பிரார்த்தனை செய்தல், இன்பம் தரும் மாதர்களுடன் சேர்க்கை ஆகியவையும், பாதிப்பு அடைந்த சந்திரன் எனில், மனைவி மூலமாக கஷ்டம் அடைதல், கண்நோய், தலைவலி, பல்வலி, சொத்தை இழத்தல், மணவாழ்க்கையில் தற்காலிகமான இணக்கமின்மை,  வலி, நரம்புத் தளர்ச்சி மற்றும் மனையால் பகை ஆகியவை ஏற்படும்.
செவ்வாய் புக்தி – 1 – 2 மாதங்கள்.
சொத்துக்கள் அதிகரித்தல், எதிர் பாலினத்தாரின் தாக்கம், கடமை தவறுதல், பொருள் பற்று, சந்தோஷ பார்வைகள், எண்ணங்கள், அசாத்திய உழைப்பு மற்றும் அதிக பணமழை பொழிதல், திருமணம், பூமிலாபம், வெளிநாட்டுப் பயணம், கண்ணில் பாதிப்பு, புண்கள் மற்றும் காயங்கள் ஆகியவை ஏற்படும். பெண்களால் கரும நாசமும், இஷ்ட தேவதையை பூஜித்தலும், இருவர் மூலமாகப் பகை உண்டாகுதலும், உடலில் குஷ்ட  நோய் உண்டாகி விலகுதல் ஆகியவையும் ஏற்படும்.
இராகு புக்தி – 3 வருடங்கள்.
தியானம், தனித்திருத்தல், முனிவரைப் போன்று தவமிருத்தல், புதையல், வம்ச விருத்தி, புத்திரனால் கலகம் ஏற்படுதல், நற்செய்திகள், உறவுகளின் மூலமான கௌரவம், மதிப்பு, மரியாதை, பகை வெல்லல், தீ மற்றும் திருடர்களால் காயம் ஏற்படுதல், மருந்து உண்டு,  அதனால் விஷம் தலைக்கு ஏறி, அங்கு இங்கும் அலைதல் ஆகியவையும், எல்லாவற்றிலும் ஒரு சூழ்நிலை மாற்றம் ஏற்படுவதையும் எதிர்பார்க்கலாம்.
குரு புக்தி – 2 – 8 மாதம்.
பதவியால் இலாபங்களும், ஆதாயங்களும் அடைதல், மதத் திருவிழாக்கள், மகிழ்ச்சி மிக்க குடும்ப வாழ்க்கை, மேலதிகாரிகள், முதலாளி அல்லது குருவின் காரகம் பெறும் நபர்களிடமிருந்து நன்மைகள் அடைதல், புகழ் மற்றும் மரியாதை பெறுதல், ஆரோக்கியம், சந்தோஷம், அறிவு, சொத்துக்கள், திருமணம், காம இன்பம், நல்ல காரியங்கள் ஆகியவற்றின் மூலமாக ஆதாயம் அடைதல், தானியம், பிராமணர்கள், ஆகியவற்றாலும் இலாபம் அடைதல், தசா முடிவில் மனவி, மக்கள் நோயால் வாடுவதைப் பார்த்து கவலை அடைதல் ஆகியவை ஏற்படும். ரேவதி, உத்திர நட்சத்திர காலங்களில் வருத்தம் உண்டாகுதலும் ஏற்படும்.
சனி புக்தி – 3 – 2 மாதங்கள்.
அதிகாரம் மிக்கவர்களின், உயர்பதவியில் உள்ளவர்களின், பெரியோர்களின் இராணுவத்தின், காவல் துறையின், அல்லது அரசாங்கத்தின் அனுகூலமான உதவிகளும், இலாபங்களும், மதிப்பு, மரியாதைகளும்  கிடைக்கும். அழகு மிக்க கன்னிப் பெண்ணை அடைவார், சொத்துக்கள் சேரும், வசதி வாய்ப்புகளும் சந்தோஷமும்  பெருகும்,
பாதிக்கப்பட்ட, பலமிழந்த சனியெனில், ஆரோக்கியம் பாதிக்கப்படும்,  கை, கால்களில் வலி ஏற்படும், கை, கால் முடங்கி சரியாகும், துன்பமும், உடலில் நோய் ஏற்படுதலும், சாப்பிடும் உணவின் மீதும் விஷம்போல் வெறுப்பு ஏற்படுதலும், கண் பார்வையில் பாதிப்பு ஆகியவையும் ஏற்படும். அரசாலும், அதிகாரிகளாலும் மரியாதைக் குறைவும், இழப்பும் ஏற்படும். அலைந்து திரிதல், சூதாட்டம், குடித்துக் கெடுதல் ஆகியவை ஏற்படும்.
புதன் புக்தி – 2 – 10 – மாதங்கள்.
மனைவி மக்கள் சிறப்படைதலும், அவர்களால் சந்தோஷம் உண்டாகுதலும், சொத்து, பொருள் சேருதலும்,  கல்வி, கலை, விஞ்ஞான அறிவு அதிகரித்தலும், ஞானம், இசை பாடுதல், நல்ல சிவந்த நிறமுடையவர்களால் பலவித நன்மைகள் உண்டாகுதலும் ஏற்படும். எதிலும் வெற்றி கிடைக்கும், திருமணத்திற்குப் பிறகு மகனுக்கு அனைத்துவித வசதி வாய்ப்புக்கள், அதிகாரம் மற்றும் புகழ் ஏற்படுதலும், எதிரிகளை வெல்லும் பலம் பெறுதலும் உண்டாகும். ஆனாலும், வாயு, பித்தத்தால் ஏற்படும் நோய்களால் கஷ்டப்படுவார். வழக்குகளில் வெற்றி, இசையைக் கற்பதில் ஆர்வம் ஆகியவையும் ஏற்படும். அதிகாரம் மிக்கவர்களின், உயர்பதவியில் உள்ளவர்களின் அனுகூலமும், இராஜாங்க உதவிகளும், இலாபங்களும்   கிடைக்கும்.
கேது புக்தி – 1 வருடம் 2 மாதங்கள்.
தீயால், நாற்கால் விலங்குகளால் ஆபத்து, காதல் விவகாரங்களால் அல்லது மனைவியால் தொல்லைகள், துணைவருக்கு நோய் ஏற்படுதல், விஷந்தீண்டி மீளுதலும், மனமகிழ்ச்சியின்மையும், பணயிழப்பும், தீய பெண்களுடன் தொடர்பும், வாசஸ்தலத்தில் தனித்திருத்தல் ஆகியவையும் ஏற்படும்.