Search This Blog

Tuesday 29 January 2013

ஜோதிடருக்கான இணைவுகள்






ஜோதிடருக்கான இணைவுகள்
       
வாதிப்பிரதிவாதங்களுடன் கூடியதும்,  சிக்கலாகக் கருதப்பட்டதுமான,ஜோதிட ருக்கான இணைவுகளைப் பற்றி ஆராய சமூகக் கண்ணோட்டத்தோடு,இக்கட்டுரையில் அலசப்பட்டுள்ளது.  இக் கருத்தைப்பற்றி, நமது முன்னோர்கள் எழுதியுள்ள நூல்களில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது,என்பதைப் பற்றி அறிந்துகொள்வோம்.
       

பிருகத்பராசர ஹோரா –- இலக்னத்திலோ,ஐந்திலோ,ஒன்பதிலோ அல்லது கார காம்சத்திலோ,கேது இருக்க,ஜாதகர் மிகச் சிறந்த கணித வல்லுநராகவும், ஜோதிடராக வும் திகழ்வார் எனக் குறிப்பிடுகிறது.
       

சர்வார்த்த சிந்தாமணி – வேங்கடஷர்மா,தனது சர்வார்த்த சிந்தாமணியில்,கீழ்க் கண்டவாறு குறிப்பிடுகிறார்–  பலமிக்க புதன் மற்றும் இரண்டாமதிபதி கேந்திரங்களில் இருந்தாலும் அல்லது சுக்கிரன்,  சுபரோடு கூடி இரண்டாமிடத்தில் அல்லது மூன்றில் இருந்தாலும் அல்லது உச்ச சுக்கிரன் இரண்டிலிருந்தாலும்,ஜாதகர் மிகப்பெரிய ஜோதி டராவார்.
       

பாவார்த்த ரத்னாகரா –  தனது ஆங்கில மொழிபெயர்ப்பில்,பீ.வி.இராமன்,கல்வி பற்றிய அத்யாயத்தில்,குறிப்பிடுவதாவது,நான்கில் புதன் இருந்தாலும் ஜாதகர், திறமை மிக்க ஜோதிடராவார் என்றும், சூரியன், புதன் மற்றும் இராகு  ஐந்தில் இருக்க,ஜாதகர் அனைத்தும் கற்றுத் தேர்ந்த ஜோதிடராக உருவாகிறார்.
       

சூரியன், புதன் இரண்டிலிருந்து,சனியால் பார்க்கப்பட்டால் ஜாதகர்,மிகச் சிறந்த கணித வல்லமையுடன்,ஜோதிடத்திலும் தேர்ச்சி பெறுகிறார்.
       

3/6/8/12 எனும் மறைவு ஸ்தானங்கள்,இதில் எட்டு மற்றும் பன்னிரெண்டாமிடங் கள்,கூடுதல் புத்திசாலித்தனத்தையும்,  அசாத்திய  தனித்  திறமைகளையும் அளிக்கக் கூடிய இடங்களாகும். ஆகையால், ஜோதிடம்,யோகா,தந்திரம் ஆகியவற்றிற்கு தேவை யான உள்ளுணர்வு நிலைகளைத் தருகின்றன.
      

காரகர்களைப் பொருத்தவரை,ஸ்பெகுலேஷனுக்குக் காரகனான இராகுஜோதிடர்களின் ஜாதகத்தில்,மிக முக்கிய பாத்திர மேற்று நடிக்கிறார்.
      

சூரியனின் தாக்கம்  மிக்க   ஜோதிடர், அரசியல் தலைவர்களின் ஜாதகங்களை அலசுவதிலும்,பலமிக்க புதனின் தாக்கம் ஜோதிடர் ஜாதக கணிதங்களில் வல்லுனராக இருப்பதோடு,பொட்டிலடித்தாற்போல் பலன் கூறுவதில் வல்லுனராகவும் இருப்பார்கள்
      

சுக்கிரனின் தாக்கம்பெற்ற ஜோதிடர் பெண்கள் ஜாதகத்தை அலசுவதில் திறமை மிக்கவராகவும்,  ஜாதகரின் திருமண சம்பந்தமான விஷயங்களை எடுத்துரைப்பதிலும் வல்லவராகவும் இருப்பார்.
      

எனினும், ஜோதிடரின்,  ஜாதகத்தில் புதன் மற்றும் 2 ம்  இடம்,பலம் மிக்கதாக அமைய வேண்டும் என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.
      இனி,பிரபலமான சில ஜோதிடர்களின் ஜாதகத்தை ஆய்வு செய்வோமா?


  
சந்


லக்///
குரு
 சனி
  []

இராகு
கேது
     இராசி
செவ்

சுக்


சூரி
புத
   ஜாதகம் –1
என்.ஸி.லஹிரி
வானியலாளர்



      









இவரது ஜாதகத்தில், பலம் மிக்க இலக்னாதிபதி  புதன், 4 ல்,தனது சுய,மூலதிரி கோண மற்றும் உச்ச வீட்டில் உள்ளார். 2 ம் அதிபதி சந்திரன் வர்கோத்தம்மாகி 11 ல் நல்ல நிலையிலுள்ளார்.புதன் மற்றும் 2ம் அதிபதி பலம்பெற்றுள்ளதால்,இந்திய தேசிய பஞ்சாங்கத்தை வடிவமைத்த புகழ்பெற்ற கணித வல்லுனரானார்.
      

இலக்னம்,ஒரு ஜாதகத்தின் அச்சாணியாகும்.ஜாதகரின்,வாழ்வின் ஏற்ற இறக்கங் கள்
1.     இலக்னாதிபதி இருக்கின்ற இடத்தைப் பொருத்தும்.
2.     இலக்னாதிபதியின் பலத்தைப் பொருத்தும்.
3.     இலக்னத்திலுள்ள கிரகங்கள் அல்லது அவற்றை பார்க்கும் கிரகங்களைப் பொருத்தும் அமையும்.
4.   

  இலக்னத்தைத் தவிர,மனதைக் குறிக்கும் 5ம் இடமும்,தொழிலைக்குறிக்கும் 10 மிடமும் தொழிலைக்காண, சம முக்கியத்துவம் அளிக்கப் படவேண்டும்.
உதாரணமாக,5 ம் அதிபதி 12ல் [ 5 க்கு 8] அல்லது 10 ம் அதிபதி 5 ல்  [ 10 க்கு  8 ]  இங்கு 8 ம் வீட்டின்  தாக்கம்  கூடுதலாக் கிடைக்கிறது. இலக்னம், சந்திரா இலக்னம்,சூரியலக்னம் ஆகிய மூன்றிலிருந்தும்,பலன்கள் பார்க்கப்படவேண்டும் என்பதை மனதிற்கொள்ள வேண்டும்.

முதலில்,8ம்வீட்டின் தாக்கத்தை வைத்து, வரும் இணைவுகளைக் காண்போம்.

1.      இலக்னாதிபதி 8 ல் இருக்கவும்.
2.      8 ம் அதிபதி இலக்னத்தில் இருக்க அல்லது இலக்னத்தைப்பார்க்கவும் அல்லது    இலக்னாதிபதியுடன் தொடர்புறவும்.
3.      5 ம் அதிபதி 12 ல் இருக்கவும் [ 5 க்கு 8 ].
4.      12 ம் அதிபதி 5 ல் இருக்கவும் அல்லது 5 மிடத்தைப் பார்க்கவும் அல்லது 6 ம் அதிபதியோடு தொடர்புறவும்.
5.      10 ம் அதிபதி 5 ல் [ 10 க்கு  8 ].
6.      5 ம் அதிபதி 10 ல் இருக்க அல்லது பார்க்க.

இதேபோல் 12 ம் இடத்தின் தாக்கம் கூடுவது எப்போது என்பதைக் காண்போம்.
7.      இலக்னாதிபதி 12 ல் இருக்கவும்.
8.      12 ம் அதிபதி இலக்னத்தில் அல்லது இலக்னத்தைப் பார்க்கவும் அல்லது இலக்னாதிபதியுடன் 12 ம் அதிபதி தொடர்புறவும்.
9.      5 ம் அதிபதி 4 ல் இருக்கவும்.[ 5 க்கு 12 ].
10.   4 ம் அதிபதி 5 ல் இருக்க அல்லது பார்க்க அல்லது 5 ம் அதிபதியுடன் தொடர்புறவும்.
11.   10 ம் அதிபதி 9 ல் [ 10 க்கு 12 ].
12.   9 ம் அதிபதி 10 ல் இருக்க அல்லது பார்க்க அல்லது 10 ம்அதிபதியுடன் தொடர்புறவும்.

உத்தியோகம் அல்லது  தொழிலைக் காட்டும்  அளவு முள்ளாக நவாம்சத்தைக் கருத வேண்டும். மேற்சொன்ன  ஒன்று  அல்லது இரு இணைவுகளேனும் நவாம்சத்திலும், இருக்க வேண்டும். அவ்வாறிருந்தால்,  ஜாதகர்,  ஜோதிட சாஸ்த்திரத்தைக் கட்டாயம் கற்கும் நிலைஏற்படும்.எனினும்,அவருக்கு,அதையே வாழ்வாதாரத்திற்கான,தொழிலாக ஏற்க வேண்டிய நிலையேற்படாது..
      
இந்த நிலைகளை,பிரபலமான ஜோதிடர்களின் ஜாதகங்களைக் கொண்டு ஆய்வு செய்வோமா?
         ஜாதகம் --- 2
  
இராகு
சந்
ல///
சனி
 []
குரு
புத,சூரி



     இராசி

சுக்

கேது
செவ்
 பீ.சூரியநாராயண ராவ்.
 பிறந்த தேதி ---12 – 2 – 1856.
 பிறந்த நேரம் – 14 –30
 பிறந்த இடம் --சிக்ககுலெ



1.     




இலக்னாதிபதி சுக்கிரன் 8 ல் உள்ளார்.  [விதி – 1]
2.     பலம் மிக்க 5 ம் அதிபதி புதன் 10 ல்   [விதி – 6]
3.     சந்திரா லக்னம் – 8 ம் அதிபதி செவ்வாய், சந் – இலக்னத்தைப் பார்க்கிறார். [விதி – 2]
4.     சூரியலக்னம் – 8 ம் அதிபதி புதன்,சூரியலக்னத்தில் உள்ளார். [விதி –

             
இராகு  

சனி
சந்

லக்///

சூரி

     இராசி
புத,சுக்
செவ்

குரு

கேது
 ஜாதகம் --- 3

 B.V.இராமன்
 பிறந்த தேதி --- 08–08–1912.
 பிறந்த நேரம் – 19 –35
 பிறந்த இடம் –பெங்களூரு


1.   

  எட்டாமதிபதி புதன் மற்றும் 12 ம் அதிபதி சனி,இலக்னத்தின் மீதான தனது சக்தி மிக்க பார்வையை செலுத்துகிறார்கள்.[ விதி – 2 & 8 ]
2.     சந்திராலக்னம் –- 8 ம் அதிபதி குரு,சந்திராலக்னத்தைப் பார்க்கிறார்.[ விதி – 2 ]
3.     சூரியலக்னம் – இராகுவின்,சூரியன் மீதான சக்தி மிக்க பார்வை மற்றும் 10 ம் இடத்தின் மீதான பார்வை.
பீ.சூரியநாராயண ராவ் மற்றும் பீ.வி.இராமன் ஆகியோரின் ஜாதகங்கள் மேற்படி விதிகளுக்குப் பொருந்தி வருவதைக் கண்டோம்.இனி,நண்பர் ஒருவரின் ஜாகத் தைப் பார்ப்போம்.

  

இராகு



லக்//சனி  சூரி,புத
சந்
     இராசி


கேது

செவ்,
குரு,சுக்
 ஜாதகம் --- 4


 பிறந்த தேதி --- 13–08–1946.
 பிறந்த நேரம் –  05–56 AM
 பிறந்த இடம் – எட்டயபுரம்

1.     
இலக்னாதிபதி,8 ம் அதிபதி,இலக்னத்தில் இணைவு. [ விதி – 2 ]
2.    
இலக்னாதிபதி,12 ம் அதிபதி,இலக்னத்தில் இணைவு. [ விதி – 8 ]
3.     5 ம் அதிபதி 10 மிடத்தைப் பார்க்கிறார்.  [விதி – 6.]
4.     4 மற்றும் 5 ம் அதிபதி தொடர்பு.  [ விதி – 10 ]
5.     9 மற்றும் 10 ம் அதிபதி தொடர்பு. [ விதி – 12 ]
6.     சந்திராலக்னத்திலிருந்து,8 ம் அதிபதி, சூரியனோடு இணைவு,சந்திரனைப் பார்க்கிறார். [ விதி – 2 ].
எனவே,ஜோதிட அன்பர்களே, இவ்விதிகளைப் பயன்படுத்தி உங்கள் ஜாதகங்க ளையும் அலசிப் பாருஙகளேன்.வாழ                                            






வர்க்கக்கட்ட வழிமுறைகள் ...........
      
நிகழ்வுகளைத் துல்லியமாகக் கணக்கிட்டுச் சொல்லுவது, ஜோதிடரைப் பொருத் தவரை,ஒரு சவாலான வேலையாகும்.பலவகையான முறைகளில், நாம் நிகழ்வுகளை ஆராய்கிறோம்.அஷ்டவர்க்கமுறை, கோசார முறை,விம்சோத்திரி தசா முறை என,பல முறைகளில் நிகழ்வுகளைத் துல்லி.மாகக் கணக்கிடமுடியும்.நிகழ்வுகளின் காலத்தைக் கணக்கிட,மகரிஷி பராசரரால் ஜோதிட உலகுக்கு அளிக்கப்பட்ட வரமே, விம்சோத்திரி தசா முறையாகும். நாம், இங்கு விம்சோத்திரி தசா,வர்க்கக்கட்டங்கள் மற்றும் கோசா ரம் மூலமாக நிகழ்வுகளின்  காலத்தைத்  துல்லியமாக  எங்ஙனம் கணக் கிடுவதென் பதை, சில உதாரண ஜாதகங்கள் மூலம் காண்போம்.
      
ஜாதகரின் ஜனன  ஜாதகத்தை,சரியான பிறந்த நேரத்திற்கு கணக்கிடாவிட்டால், வர்க்கக் கட்டங்களில்  இலக்னம்  மாறிவிடும் என்பதே,வர்க்கச் சக்கரங்களை பயன்ப டுத்தி பலன் கூறுவதிலுள்ள  குறையாகும். எனவே,  ஜாதகத்தை துல்லியமான நேரத் திற்கு கணக்கிடுவது அவசியமாகிறது.
      
ஒரு பாவத்தின் காரணிகளின்,  மீதான  தன் தாக்கத்தை ஏற்படுத்த,ஒரு கிரகத் திற்கு எப்போது,சக்தி கிடைக்கிறது?
1.     அப் பாவத்தின் இயற்கைக் காரகராக,அக்கிரகம் இருக்கும்போதும்.
2.     அப் பாவத்தின் அதிபதியாகும் போதும்.
3.     அந்த பாவத்தில்,அக்கிரகம் இருந்தாலும்.
4.     பாவாதிபதியால் பார்க்கப்பட அல்லது பாவாதிபதியைப் பார்க்கவும்.
5.     அப் பாவாதிபதியுடன் நெருங்கிய தொடர்பு கொள்ளும்போதும்.
6.     அவர் பாவத்தின் காரகரைப் பார்த்தாலோ அல்லது காரகரால் பார்க்கப் பட்டாலோ.
7.     அவர் பாவகாரகரோடு நெருங்கிய தொடர்பிலிருந்தாலும்.ஒரு கிரகம் பலம் மிக்கதாகிறது.
      
வர்க்கக்கட்டங்களிலும் கிரகங்கள் மேற்சொன்ன நிலைகளையடையும்போது, அந்த பாவத்திற்கான, துல்லியமான முடிவுகளைக் கணக்கிட்டுச் சொல்வது எளிதா கிறது.உதாரணமாக,இராசிக் கட்டத்தில் 5 ம் அதிபதியாகும் ஒரு கிரகம், சப்தாம்சக் கட்டத்தில் 5 ம் வீட்டில் இடம்பெற்றால், 5 ம் பாவ காரகங்களின் மீதான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வல்லமையைப் பெறுகிறது.அந்த கிரக தசாக் காலத் தில் ஜாதகருக்கு குழந்தை பிறக்கும் வாய்ப்பு ஏற்படுகிறது.
      
எனவே, குறிப்பிட்ட வர்க்கக் கட்டங்களை,இராசிக் கட்டத்தோடு ஒத்து நோக் கும் போது,எந்த குறிப்பிட்ட தசாக் காலத்தில் மற்றும் புத்தி காலத்தில் நிகழ்வுகள் நடக்கும்  என்பதை  நாம் உறுதிபட அனுமானிக்க ஏதுவாகிறது.ஆனால்,தசா புத்தி காலங்களைப் பொருத்தவரை, நீண்ட காலமாக இருப்பதால்,தசா,புத்தி நடத்தும் கிர கம்,இராசி மற்றும் வர்க்கக் கட்டங்கள் ஆகியவற்றின் நிலைகளை,தசா,புத்தி காலத் தில்,கோசார கிரகநிலைகளோடு ஒப்பிடும் போது,மிகத் துல்லியமாக நிகழ்வுகளைக் குறிப்பிட இயலும்.தசா புத்தி அதிபதிகள், அதன் கோசார நிலைகளில்,வர்க்கக்கட்ட இலக்ன  தாக்கத்தாலோ  அல்லது  குறிப்பிட்ட பாவத்தின் தாக்கத்தாலோ நிகழ்வு களை நடத்துகின்றன.
      
உதாரணமாக, ஒரு  திருமணத்தைப் பொருத்தவரை தசா புத்தி அதிபதிகள், நவாம்ச லக்னம் அல்லது 7 ம் வீட்டின் தாக்கத்தால்,திருமணநாளில் அப் பாவகங் களின் மீது வரும்போதோ அல்லது பார்க்கும்போதோ நடைபெறும் எனலாம்.

ஜாதகம் - 1
 பிறந்த தேதி – 18 – 11 – 1966 – நேரம் – 07 – 58 இரவு. 13 வ 00 – தீர்க்காம்சம் 77 கி 35.—சந்திர தசா இருப்பு – 03 வ – 10 மா – 18 நாள்.

   சனி
இராகு

ல///


குரு
சந்
     இராசி
செவ்

சூரி,புத
சுக்
கேது

குரு
கேது

சூரி,புத
சுக்
செவ்

ல///

   சப்தாம்சம்


சந்

இராகு
சனி


இந்த  ஜாதகருக்கு, 06 – 11 – 1997 ல்  இவரின்   குரு தசா, சனி புத்தி,புதன் அந்தர காலம் நடக்கும்போது  பெண் மகவு  பிறந்தது. தசாநாதன்,புத்திரகாரகன் குரு, 5 ம் வீட்டதிபதி, சுக்கிரனைப்  பார்க்கிறார். 9 ம்  அதிபதி சனி புத்திக்கு அதிபதியாவார். அவரும், புத்திரகாரகன் மற்றும் தசாநாதன்,உச்சமான குருவால் பார்க்கப்படுகிறார். அந்தர நாதன் புதன், 5 ம் அதிபதி  சுக்கிரனோடு நெருக்கமான இணைவிலுள்ளார். சுக்கிரனும்,குருவால் பார்க்கப்படுகிறார்.
      
சப்தாம்சக் கட்டத்தில்  ( குழந்தைப்பிறப்புக்கானது ) ஒன்பதாம் அதிபதி குரு ஒன்பதாமிடத்திலிருந்து, ஐந்தாம்  இடத்தைப்  பார்க்கிறார். சனியும்,ஐந்தாமிடமும், இலக்னமும் குருவால் பார்க்கப்படுகிறார்கள்.பதினோராம் வீட்டிலுள்ளபுதன்,ஐந்தாம் வீட்டைப் பார்க்கிறார்.
       
06 – 11 – 1997 அன்று   குரு மற்றும் 9 ம் இடத்தை,சப்தாம்ச ஏழாம் அதிபதி யான சனி, கோசாரத்தில் பார்க்கிறார்.கோசார புதன் சப்தாம்சதின் ஐந்தாம் வீட்டின் மீது சென்று கொண்டிருந்தார். எனவே,ஜாதகருக்கு குரு தசா,சனி புத்தி,புதன் அந்த ரத்தில் குழந்தை பிறந்தது.
ஜாதகம் – 2
பிறந்த தேதி – 10 05 – 1969 – நேரம் – 0921 இரவு. 13 வ 04 – தீர்க்காம்சம் 84 கி 15.—  தசா இருப்பு – 15 வ – 0 மா – 0 - நாள்.

   சுக்
இராகு
சூரி
சனி
புதன்

 சந்



     இராசி

ல///
செவ்

குரு
கேது

சந்

லக்///
புத,சனி

செவ்,குரு
கேது


சுக்
   நவாம்சம்
இராகு

சூரி




      இந்த  ஜாதகருக்கு  
27 – 06 – 1966 அன்று திருமணம் நடந்தது.அப்போது,அவ ருக்கு, சனி தசா, செவ்வாய் புத்தி,செவ்வாய் அந்தரம் நடந்து கொண்டிருந்தது. 5 ம் வீட்டிலுள்ள சனி 7 ம் வீட்டைப் பார்க்கிறார்.சனியின் நீச தன்மை,அவனுக்கு இடங் கொடுத்த, செவ்வாய்  சந்திர  கேந்திரத்தில் இருப்பதால் பங்கமாயிற்று.புத்திநாதன் செவ்வாய்,ஏழாம் அதிபதி புதன் இருவரும் பரஸ்பர பார்வை புரிகின்றனர்.
      
நவாம்சத்தில், இலக்னத்தில் சனியும், 9 ல்  செவ்வாய்,  7 ம் அதிபதி குருவு டன் இணைந்துள்ளார்.எனவே, சனி  மற்றும்  செவ்வாய், திருமணத்திற்கான பலம் மிக்க குறிகாட்டிகளாகிறார்கள்.திருமண நாளன்று,மீனத்தில் கோசாரசனி இருந்தார். நவாம்சத்தின் ஏழாமிடத்தைப் பார்வைபுரிந்தார்.புத்திநாதன் செவ்வாய்,ரிஷப நவாம் சத்திலிருந்து, 7 மிடத்தை பார்வைசெய்தார்.எனவே,ஜாதகருக்கு,சனி தசா,செவ்வாய் புத்தியில் திருமணம் நடந்தது.
ஜாதகம் – 3
      பிறந்த தேதி – 2402 – 1948 – நேரம் – 0214  . 1218 – தீர்க்காம்சம் 76 கி 39.— கேது தசா இருப்பு – 02 வ – 09 மா – 21 நாள்.


   சுக்
இராகு

ல///
 புத
சூரி

சனி

     இராசி
செவ்
சந்
குரு

கேது

புத


சுக்,சூரி
கேது



குரு
   தசாம்சம்

இராகு
சனி
லக்///
சந்
செவ்


முதலமைச்சர் ஜே.ஜெயலலிதா அவர்களின் ஜாதகம்.24 – 06 – 991 அன்று அவருக்கு செவ்வாய் தசா, சுக்கிர புத்தி,சந்திர அந்தர காலம் நடந்தபோது முதலமைச் சராகப் பதவியேற்றார்.
      
தசா நாதன் செவ்வாய்,சந்திரனோடு  இணைந்து சிம்மராசியில்  (அதிகாரத்தின், தலைமைப் பண்பின் இராசி ) பத்தாம்  இடத்தைப்   பார்க்கிறார்.  அத்துடன்   ஏழாம் மற்றும் பத்தாம்  அதிபதி  குருவும் செவ்வாயைப் பார்க்கிறார். புத்தி அதிபதி சுக்கிரன் ஐந்தாம்  வீட்டுக்கு அதிபதியாகி உச்ச நிலையில் உள்ளார்.அதுவும் கேந்திர பாவமான

பத்தாம்  வீட்டில் அமர்ந்து, திரிகோணாதிபதி, உன்னதமான இராஜயோகத்தைத் தருகி றார். அந்த  இராசியதிபதி  சந்திரன், பலம் மிகுந்த பெளர்ணமிநிலவாகி,சூரியன்,புதன், குருவால்  பார்க்கப்படுகிறார். தசாம்சத்தில், புத்தியதிபதி சுக்கிரன்,தசாம்ச லக்னாதிபதி யாகிறார். அவர்  ஒன்பதாமிடத்தில்  சூரியனோடு இணைந்துள்ளார்.அந்தராதிபதி சந்தி ரன், பத்தாம்  அதிபதியாகி இலக்னத்தில் உள்ளார்.அவர் 24 – 06 -- 1991 அன்று பதவிப் பிரமாணம்  எடுத்துக்கொண்ட நாளில் தசா மற்றும் புத்தியதிபதி கோசாரச் செவ்வாய் மற்றும் சுக்கிரன் கடகத்தில் இணைந்திருந்தனர். தசாம்சத்தில் பத்தாமிடமாக கடகமே உள்ளது.
      
எனவே, இராசிக் கட்டம்,வர்க்கக் கட்டம்,விம்சோத்திரி தசா,புத்தி காலம் மற்றும் கோசார நிலைகளைக்  கருத்திற்  கொண்டு  மிகத்  துல்லியமாக  நிகழ்வுகளுக்கான நேரத்தைச் சுட்டிக்காட்ட இயலும் என்பதை இக்கட்டுரை   மூலம் அறிந்தோம். அதை விடுத்து  இராசிக்  கட்டத்தை மட்டும்,பார்த்து கூறுவதென்பது பாதி கிணற்றை தாண் டிய கதையாகத்தானே  இருக்கும்.  எனவே   ஜோதிட   அன்பர்கள், இம்முறைகளை கையாள்வது சாலச்சிறந்ததாகும்.