Search This Blog

Tuesday 4 September 2012

திருமணநிலைகள் --- 1


திருமணநிலைகள்
   I.       திருமணத்திற்கான ஆய்வின்போது,பரிசீலித்து சீர்தூக்கிப் பார்க்க வேண்டிய ஜாதக நிலைகள்
1.) 7 ம் பாவம்      2.) 7 ம் வீட்டிலுள்ள கிரகங்கள்   3.) 7 ம் அதிபதி
4.) 7 ம் அதிபதிக்கு இடங்கொடுத்தவன். 5.) காரகன்- சுக்கிரன்
6 ). (பெண்ணுக்கு) கணவன் காரகன் குரு 7). மேற்கண்ட கிரகங்களின் சாரநாதன்     8). நவாம்சம் மற்றும் அதன் அதிபதிகள். 9). 7 ம் வீட்டின் பதா( 7 ம் அதிபதி, லக்னத்திலிருந்து எத்தனையாவது ராசியிலிருக்கிறாரோ,
அதிலிருந்து 7 வது ராசி 7 ம் பதாவாகும். உபபதா 12 ம் அதிபதியை வைத்துக்
கணக்கிடுவதாகும். ) 10) மற்ற அம்சங்களாவன * 2 ம் அதிபதி / 2 ம் வீடு,
*4 ம் அதிபதி / வீடு ,5 ம் அதிபதி / வீடு ( இயற்கையான காதல், பண்பாடு,
பாரம்பரியம்,புத்திரபாக்கியம்,வம்சவிருத்தி ஆகியவற்றுக்கான இடம் ) 8 ம் வீடு / அதிபதி( காம வாழ்க்கை ) 9 ம் வீடு / அதிபதி ( பாக்கியஸ்தானம் )
11.) இவை லக்னம்,ராசி மற்றும் சூரியன் நிலைகளிலிருந்து அலசப்பட வேண்டும்.
12.) 7 ல் உள்ள கிரகங்களின் தன்மைகள்

சூரியன் இணக்கமற்ற, மகிழ்ச்சியற்ற மணவாழ்க்கை ( சுபர் பார்க்க நலம் )
பொறாமைகுணமும்,அதிகாரம் செலுத்துகின்ற துணை.

சந்திரன் :- (வளர் ) விரைவில்  திருமணம் நடக்கும். மகிழ்சிகரமான வாழ்க்கை,கவர்ச்         சியான துணை,பொதுவான வாழ்க்கை முன்னேற்றம்,குறுகிய தூர மகிழ்வுப் பயணங்கள். தேய்பிறைச் சந்திரனெனில் விசுவாசமில்லா, உண்மையில்லா மனைவி. சுபர் பார்வை பெற கற்புள்ள,உண்மையுள்ள மனைவியமைவாள்.

செவ்வாய் :- தாமதத்  திருமணம், ஆரோக்கியமற்ற, வழக்கு  விவகாரங்கள் அல்லது
துணை மரணம். பாசமிக்க, காமவுணர்வு மிக்க துணை. செவ்வாய் சுயவீட்டில் இருக்க, குரு பார்க்க அல்லது கடகத்திலிருக்க கேடில்லை எனலாம்.

புதன் :- ( பலம்மிக்க ) புத்திகூர்மையுள்ள, கலையுணர்வுள்ள, அதிர்ஷ்டமிக்க, மற்றும் செல்வ வளம்மிக்க துணை  அமையும். ( பலமற்ற ) இணக்க மற்ற,மகிழ்ச்சியற்ற மண வாழ்க்கை.

குரு :- உயர்குடியில் பிறந்த, அதிர்ஷ்டமிக்க, உண்மையுள்ள, தாராளகுணம கற்புநிலை தவறாத, பொதுவான முன்னேற்றமும்,சந்தோஷமான வாழ்க்கையும் அமையும்.

சுக்கிரன் :- ( பலம்மிக்க ) காதல் மிக்க  துணை, மிக  உயர்ந்த  முன்னேற்றமுடைய, சந்தோஷமான மற்றும்  அதிர்ஷ்டகரமான  புலன்  சம்பந்தப்பட்ட வாழ்க்கை.பாதிக்கப் பட்ட சுக்கிரனெனில் வரம்பு மீறிய, ஒழுக்கமில்லாத துணை,சந்தோஷமற்ற வாழ்க்கை, இசைவுள்ள இல்லற வாழ்க்கையில் பாதிப்பு.

சனி :-   மகிழ்ச்சியற்ற மணவாழ்க்கை.
ராகு :-  பிரிவினை,நோயாளி, மோசமான சுபாவமுள்ள துணை.


இவற்றில்  சுபர் தொடர்பு அல்லது சுயவீட்டிலுள்ள கிரகங்கள் அல்லது உச்ச
கிரகங்கள்  மேற்சொன்ன எதிர்  மறையான  விழைவுகளை  மாற்றிவிடுகிறது. இதைப்
போலவே, நல்ல  கிரகங்களின்  மீதான  அசுபபாதிப்பு, சுபரால் ஏற்படும் நல்ல விளைவு
களைக் குறைத்துவிடுகிறது.

13. ஏழாமதிபதியின் நிலை :- கேந்திர /கோணங்களில் இருக்க இசைவான,ஒற்றுமைமிக்க இல்லற வாழ்க்கை.ஏழாமதி பதி  6 / 8 / 12 ல்  இருக்க  ஆரோக்கியமற்ற  துணை  மற்றும்  மகிழ்ச்சியற்ற மண வாழ்க்கை. பாதகத் தன்மைகள், சுப பார்வை பெற குறையும்.

14. சுக்கிரனின் நிலை :-
பலம்மிக்க   சுக்கிரன் எதிர்பாலரை கவர்ந்திழுக்கும் தன்மையை இளம் வயதி         
லேயே கொடுத்துவிடுகிறார். மேலும், இனிய இல்லற வாழ்க்கைக்கும ஆசீர்வ       
திக்கிறார்.
3 / 6 / 10 / 11 ம் வீடுகளில் சுக்கிரன் இடம்பெற அல்லது சுப சுக்கிரன் 7ல் இடம்
பெற திருமணத்திற்குப் பின் அதிர்ஷ்டம்.

சுக்கிரன் கேந்திரத்தில் / சுய / உச்ச வீட்டில்  இடம்பெற பொருள் லாபம், இனிய
இல்லறத்தால்  ஆசீர்வதிக்கப்படுகிறார் மற்றும் எல்லா வகையான வாழ்க்கை
சுகங்களையும் அள்ளித்தருகிறார்.

2 / 5 / 6 / 7 / 9 / 12 ஆகிய இடங்களில் , மற்ற இடங்களை விட அதிக நன்மை
யளிக்கிறார்.. மகரத்தில் மிக்க ஒட்டுதலையும்,ஆக்ரமிப்புடன் கூடிய விருப்பத்தை
யும் கொடுக்கிறார்.

12 ல் சுக்கிரன் இனிய  இல்லறத்திற்கும்,இரகசிய  காதல் விகாரங்களையும்,
அதிக பொருள் சேர்க்கும் பேராசையையும் அளிக்கிறார். ஆனால் அவர் சனியின்
நவாம்சத்தில் இடம்பெற கூடாது.

15. ஏழாமதிபதியின் பலம் :-
                 எப்போது ஒரு வீடு பலமிழந்ததாக கருதப்படுகிறது ?
அந்த வீடு அதன் அதிபதி அவ்வீட்டின் காரகர் ஆகியோர் கீழ்கண்ட
வகையில் 18 புள்ளிகள் பெற்றால் பாதிக்கப்பட்டுள்ளது எனலாம்
------எல்லாமே பலமிழக்க ( 3 புள்ளிகள் )
---- பாபகர்த்தாரி நிலை  ( 3 புள்ளிகள் )
---- அசுபர் கூட்டு அல்லது பார்வை ( 3 புள்ளிகள் )
----- பகை கிரக இணைவு  ( 3 புள்ளிகள் )
----- இவற்றிலிருந்து 4 / 8 / 12 ல் அசுபரரகள் ( 3 புள்ளிகள் )
----- இவற்றிலிருந்து 5 / 9 ல் அசுபர்கள் ( 3 புள்ளிகள் )
----- மேலே கண்டவற்றில் 2 அல்லது 3 நிலைகளில் பாதிக்கப்பட்டால் அந்த வீடு பலமிழந்ததாகக் கருதப்படுகிறது.

=== மேலும் ஒரு வீட்டின் அதிபதி 6 / 8 / 12 ல் இருந்தாலும் அல்லது
6 / 8 / 12 ஆம் அதிபதிகள் அந்த வீட்டிலிருந்தாலும்,அவ் வீடு
பலமிழந்ததாகும்.

=== ஒரு வீட்டில் அதன் அதிபதியிருக்க அல்லது பார்க்க,பலமிக்க நட்பு கிரகத் இருக்க அல்லது பார்வைபெற, குகு,சுக்கிரன, அல்லது வளர்பிறை  சந்திரன் போன்ற இயற்கை சுபர்களின் இணைவு அல்லது பார்வைபெற ( இவர்கள் 6 / 12 க்கு அதிபதியாக இருத்தல் கூடாது ) அல்லது சுபகர்த்தாரியில் இருக்க, அந்தவீடு பலம்மிக்கதாகக்  கருதப்படுகிறது.
 
=== இராசியிலும்  நவாம்சத்திலும், இந்த  மூன்றின் மீதான சுப / அசுபகிரகங்களின் அனைத்துப் பார்வைகளும் பார்க்கப்பட வேண.டும். நவாம்சக் கட்டமும், நவாம்ச கிரக நிலைகளும் ஒருவரின் திருமணநிலை மற்றும் துணைபற்றிய நம்பகமான தகவல்களை ராசிக் கட்டத்தோடு இணைத்துப் பார்க்கும்போது நமக்குக் கிடைக்கின்றன. இதில் சிறந்த
மேலான நிலை எது எனில், கிரகங்களின் உச்ச / சுய / நட்பு ராசி நிலைகள் மற்றும் சுப நவாம்ச நிலையே யாகும்.

=== ஏழாம்வீட்டில், அதிக கிரகங்கள் இருக்கும்போது,அக் கிரகங்களில் பலம்  மிக்க மற் றும் 7 ம் அதிபதிக்கு  நட்புமிக்க  கிரகமே அதிமுக்கியமானதாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.

=== திருமணத்திற்கான  யோக  நிலைகளும், 7 ம் பாவத்திற்குரிய யோகங்களும் பாரக்கப்பட வேண்டும்..

சம்மந்தப்பட்ட கிரக தசா / அந்தரதசா மற்றும் கோசார நிலைகள் ஆகிய
வற்றை,திருமணக் காலங்காண பகுத்தாய்வு செய்யவேண்டும்.
     


II.     இசைந்த இல்வாழ்க்கைக்கான பகுப்பாய்வு :-
  
1.                  இசைந்த இல்வாழ்க்கைக்கான பலன் அறிய, சம்பந்தப்பட்டவீடுகளுட   
னான சுப,அசுப கிரக இணைவுகள் மற்றும் பலதரப்பட்ட கிரகங்களின்
இடமாற்றங்கள் அலசப்பட வேண்டும்.

2.                  இசைந்த இல்வாழ்க்கைக்கான மனோதத்துவ அணுகுமுறையிலான
பகுப்பாய்வு :- ஒருவரின் மனநிலையே மணவாழ்வின் மகிழ்ச்சி நிலையை உறுதி செய்கிறது. மணவாழ்க்கைக்கான முக்கிய
குறிகாட்டிகள்:-

== சூரியன் கௌரவம்,மதிப்பு, மரியாதை மற்றும் பிதுரார்ஜிதம்.

== சந்திரன் மனநிலை.. == செவ்வாய் காமவுணர்வு.
== சுக்கிரன் காதல்           == இவைகளுடனான, இராகுவின் இணைவு
மணவாழ்வின் ஆனந்தத்தை தடை செய்துவிடும்.
இக் கிரகத்துடன் ராகு இணைந்தால் :-
*** சூரியன் :- இருவரின் நிலைகளிலுள்ள ஏற்ற தாழ்வு காரணமாக கௌரவப்
பிரச்சனை ஏற்படுகிறது.
*** சந்திரன் :- மாறுகின்ற மனநிலையைத் தருகிறது.
** செவ்வாய் :- பிடிவாதகுணம்,தம்பதியரிடையேயான உணர்வுகளை காயப்
படுத்தலாம்.
*** சுக்கிரன் : - பெற்றோர் சம்பந்தமின்றி காதல் அல்லது வேறொருவர் மீது
காதல் கொண்டவரோடு திருமணம் நடக்கலாம்.
==== 7 ம் வீடு,சுத்தமாக மற்றும் சுபர் தொடர்பு பெற,மேற்கண்ட நிலைகள்
ஏற்படாது.ஆனால், இரு நிலைகளில் ராகுவால் பாதிப்பு ஏற்பட :-
### சந்திரன் + சுக்கிரன் +ராகு = ஆரோக்கியமற்ற காமவுணர்வைத் தூண்
டுகிறது.7 ம் வீடும் பாதிக்கப்பட்டால் ஆணானாலும்,பெண்ணானாலும்
காம வெறியுடையவர்களாக மாற வழியுண்டு.
### செவ்வாய் + சுக்கிரன் + ராகு = வெட்கங் கெட்ட காமவுணர்வை
வெளிப்படுத்துவர்.
### இவற்றில் இரு நிலைகளில் பாதிப்பு ஏற்பட, தம்பதியரிடையேயான
உறவுகள் பாதிக்கப்படும். எல்லா நிலைகளும் ராகுவால் பாதிப்படைய(4)
இருவரிடையேயான உறவு சீர்திருத்த முடியாத நிலையையடையலாம்.
### பாதிப்பால் ஏற்படுகிற முடிவுகள், சுப / அசுப இணைவைப் பொருத்தே
அமையும்...

III.            திருமண காலம் :-
   
1.                     இளமையில், சீக்கிரமே திருமணம் நிகழ்தல் :- (18 வயது முதல் 22 வரை )
##7 ம் வீடு, அதிபர்,காரகர் ஆகியோர் சுபரோடு இணைவு.
### லக்னத்தில் சுபர் (வக்ரமில்லாத மற்றும் அஸ்தமனமாகாத சுக்கிரன் )
அல்லது 7 ல் சுபர் மற்றும் பலம் மிக்க 7 ம் அதிபதி மற்றும் 2 / 8 ம்
வீடுகளில் அசுபர் இடம் பெறாமை.
### 7 ம் அதிபர் 7 ம் வீட்டைப் பார்க்க.
###சுயவீடு,கேந்திர / கோணங்களில் 7 ம் அதிபர் அல்லது சுப கிரக பார்வைபெற

### பாதிப்படையாத 7 ம் அதிபர் மற்றும் 7 ம வீடு. 2 ம் சுபர் சாரம் பெற்றிருக்க.
.
###சுக்கிரன் கேந்திரத்தில் ( 7 ம் பாவத்தைத்தவிர ) திரிகோணத்தில் இருக்க.
அஷ்டவர்க்கத்தில் சுக்கிரனின் பிந்து 5 க்குக் குறையாமல் இருக்க.
###லக்னாதிபதி,7 ம் அதிபதி, சுக்கிரன் இவர்களில் இருவருடன்,மற்றும்
சுபருடன் இணைவு பெற.
###7 ம் அதிபதி மற்றும் சுக்கிரன் 4 ம் பாவத்தில் இடம்பெற.
### 2, 7 மற்றும் லக்ன பாவாதிபதிகள் சுபருடன் இணைவுபெற.
### சுபர் வக்ரமாகாதிருக்க மற்றும் சுக்கிரன் அஸ்தமனமாகாதிருக்க.
### சீக்கிர திருமணத்திற்கு மற்ற இணைவுகள் :-
    
>>>5 / 7 ம் பாவங்களில் பலம் மிக்க சந்திரன் இருக்க.
>>>அசுபர் தொடர்பில்லாத காரகர் + லக்னாதிபதி அல்லது 7 ம் அதிபதி +லக்னாதிபதி,சுப ராசியில் இருக்க அல்லது சுபரோடு இணைய.>>>பாதிப்பில்லாத சுக்கிரன் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட சம்பந்தப்பட்ட
கிரகம் நீர் ராசியில் இடம்பெற.


4 comments:

  1. நன்றி. நண்பரே!

    ReplyDelete
  2. எல்லாம், சரியாகவே சொல்லியுள்ளீர் !

    ReplyDelete