Search This Blog

Sunday 17 March 2013

மேஷலக்னம் -- பாவார்த்த ரத்னாகரா



c
பாவார்த்த ரத்னாகரா

     அன்பு நண்பர்களே ஜோதிட மாமேதை பீ.வீ இராமன் அவர்களின் மிகச் சிறந்த நூல்களில் ஒன்றான பாவார்த்த ரத்னாகரா என்ற மொழி பெயர்ப்பு நூலில் இருந்து சில ஜோதிட இணைவுகைப் பார்ப்போம். இந்த நூல் ஶ்ரீ இராமானுஜாச்சார்யா என்ற ஜோதிட அறிஞர் சமஸ்கிருதத்தில் எழுதியதின் ஆங்கில மொழி பெயர்ப்பு நூலாகும். இவர் மகாராஷ்டிர மாநிலம் மங்களத்திரி என்ற இடத்தில் - ஶ்ரீ பாஷ்யம் ஜகனாதாச்சார்யா என்ற ஜோதிட மேதைக்கு மகனாகப் பிறந்தவர் ஆவார்.

முதல் வீடு எனும் இலக்னம்

1. மேஷ இலக்னத்தில் பிறந்த ஜாதகரின் ஜாதகத்தில் சூரியன் மற்றும் சந்திரனின் இணைவு சந்தேகம் இன்றி இராஜ யோகத்தைத் தருகிறது. 

2. இந்த இலக்னத்துக்கு 9 மற்றும் 12 ஆம் அதிபதி குரு 10 ஆம் இடத்தில் இருக்க மாரகர் ஆகிறார். 2 மற்றும் 7 ஆம் அதிபதி சுக்கிரனும் மாரகரே. நான் என் அனுபவத்தில் பலர் சுக்கிர திசையில் மரணத்தைத் தழுவியதைக் கண்டிருக்கிறேன்- எனக் குறிப்பிடுகிறார். சுக்கிரன் தனியாக மாரகத்தை அளிக்கும் சக்தியற்றவன். புதன் - சனி போன்ற மற்ற மாரக கிரகங்களின் இணைவிருந்தால் மட்டுமே அது அவனுக்கு சாத்தியமாகிறது. என பராசரர் கூறுகிறார். 

3. இந்த இலக்ன ஜாதகருக்கு 9 மற்றும் 10 ஆம் அதிபதிகளான குரு மற்றும் சனி ஆகியோர் நிச்சியமாக இராஜ யோகத்தை அளிப்பதில்லை.

ஜாதகம் - !

பிறந்த தேதி - 5 - 3 - 1898 நேரம் காலை 9 மணி  (13 பாகை வ - 77 பாகை கி-35 கலை )


லக் -


புத-சூரி-சுக்
      இராசி
கேது-சந்
செவ்-இராகு


சனி

குரு

தசா இருப்பு சனி 2 வ 3 மா 19 நாள். 
            
 இந்த ஜாதகர் தனது 20 வயதில் - புதன் தசா - சனி புத்தியில் இறந்தார். சுக்கிரனுடன் இணைந்த புதன் கொல்லும் தன்மை இங்கு நிரூபணமாகிறது.



சூரி
குரு-சுக்;
புத-இராகு
   நவாம்சம்   
; லக் --
சனி
செவ்-கேது;

சந்



ஜாதகம் - 2 
13-10-1860 இரவு - சுமார் 7 மணி (13 பாகை வ - 77 பாகை கி-35 கலை )   
         

லக் 


;
     
     இராசி
கேது
செவ்-இராகு
குரு-சனி-சுக்


புதன்;
சூரி-சந்;

தசா இருப்பு - சந்திரன் - 6 வ 1 மா - நாள்.           

          
இராகு
குரு
செவ்-சந்;;
;
புதன்
    நவாம்சம்;;   
;

சுக்-சனி


லக்
கேது-சூரி

இந்த    ஜாதகத்தில் 9 ஆம் அதிபதி குரு மற்றும் 10 - 11 ஆம் அதிபதி சனி இணைவு. சனியின் அசுபத்தன்மை குருவைக் கெடுத்துவிடுகிறது. எனவே- இருவரின் இணைவும் - ஜாதகருக்கு இராஜயோகத்தை அளிக்கவில்லை. இந்த ஜாதகர் 5 ஆம் இடத்தில் இணைந்துள்ள குருவின் திசை மற்றும் சனி புத்தியில் உச்ச செவ்வாய் இவர்களைப் பார்ப்பதன்  காரணமாக ஜாதகர் தன் வேலையை இழந்தார். புதன் புத்தியில் மீண்டும் வேலை கிடைத்தபோதும் - புதன் புத்தி முடிவில் இவரின் முடிவும் சம்பவித்தது.

6 ஆம் அதிபதி மற்றும் 8 ஆம் அதிபதியுடன் செவ்வாய் இணைந்த நிலை- அந்த தசா-புத்தி காலத்தில் தலை சம்பந்தப்பட்ட நோயின் காரணமாக இறப்பைத் தருகிறது. பொதுவாக மேஷ இலக்ன ஜாதகருக்கு சின்னம்மை - ஆயுதத்தால் ஏற்படும் காயங்கள் மற்றும் புண்கள் ஏற்படும் என்ற பயம் இருக்கும் - என்பது கற்றறிந்த ஜோதிடர்களின் கூற்றாகும். இதன் மூலம் நாம் அறிவது - செவ்வாய் இலக்னாதிபதியாக இருந்த போதும் 3 மற்றும் 6 க்கு  அதிபதியான புதனுடன் இணையும் போது தசா காலத்தில் மாரகம் செய்வான் என்பதேயாம். ( ஜாதகம் - 2)

மேஷ இலக்னத்துக்கு மட்டுமே 2 ஆம் அதிபதி 12 க்குச் செல்வது நல்லது ஆகும். மற்ற இலக்னங்களுக்கு நல்லதல்ல. ஏனெனில் மேஷத்துக்கு 2 ஆம் அதிபதி சுக்கிரன் உச்சம் பெற்று பலம் பெறுவதாலேயே ஆகும்.

சுக்கிரன் செவ்வாய் இணைவு மாரகத்தைத் தந்தாலும் - செவ்வாய் யோகத்தையும் தர வல்லவர். 2 ஆம் வீட்டில் குரு மற்றும் சுக்கிரன் இணைந்த செவ்வாய் கண்டிப்பாக புகழைத் தரும் யோக காரகராகிறார்.  ( சுக்கிரன் 2 ஆம் அதிபதி குரு 9 ஆம் அதிபதி - இருவரும் (2-9) இணைந்தால் அளவற்ற செல்வம் சேரும் ). இதே நிலையை 4 ஆம் வீட்டில் செவ்வாய் குருவுடன் இணைந்த போதும் தருகிறார். இத்துடன் சந்திரனும் இணைந்து இருந்தாலோ- ஆயில்ய நட்சத்திரத்தில் செவ்வாய் - பூச நட்சத்திரத்தில் குரு மற்றும் சந்திரனும் இருந்து - செவ்வாய் திசை - சந்திர புத்தி நடக்கும் போதோ அல்லது மாறி நடந்தாலோ மற்றும் குரு திசை - சந்திர புத்தி நடக்கும் போதோ அல்லது மாறி நடந்தாலோ அந்தக் காலத்தில் இராஜயோகத்தை அளிக்கிறது. இதன் காரணமாக சொத்து - பூமி - வீடு - மதிப்பு மிக்க பொருட்கள் - விருப்பங்கள் நிறைவேறுதல் - அரசாங்க விருதுகள் - விழாக்கள் - பதவி என அனைத்தும் கிடைக்கும்.


மேலும் - செவ்வாய் 5 ஆம் வீட்டில் இருக்கும் போது - தனது தசாக்காலத்தில் யோகத்தைத் தருகிறார். 5 ஆம் வீடு சிம்மம் நட்பு வீடாகும். இலக்னாதிபதி 5 க்குச் செல்வது நல்லதே ஆகும். என்றாலும் பராசரரும்- லோமசாவும் குழந்தைகளால் சந்தோஷமற்ற நிலை உருவாகும் என்று கூறுகின்றனர். அத்துடன் முதல் குழந்தை உயிரோடு இருகாது - என்றும் கூறுகின்றனர்.


4. 3 ஆம் வீட்டில் குரு - சுக்கிரனுடன் - செவ்வாய் இணைந்திருக்கும் போது யோகத்தைத் தருவதில்லை. எனது அனுபவத்தில் செவ்வாய் - குரு மற்றும் சுக்கிரன் தசாக்காலங்களில் ஒருவர் போதுமான அளவுக்கு - கடன் - எதிரிகள் - வழக்கு - கௌரவக்குறைவு - புரிந்து கொள்ளாமை - கருத்து வேறுபாடு - மனக்கவலை மற்றும் நோய்களால் கஷ்டங்களை அனுபவிக்கிறார். 
   

5.   4. மேஷ இலக்னத்திற்கு 11 இல் குரு இருக்க தசாக்காலத்தில் எவ்வித யோகங்களும் தருவதில்லை.
         5.     இவர்களுக்கு புதன் மற்றும் செவ்வாய் 6 இல் இருக்க புண்கள் - தோல் வியாதிகள் - சின்னம்மை ஆகியவற்றை தசாக்காலங்களில் தருவர்.
     6.      மேஷ இலக்னத்தில் பிறந்தவர்களுக்கு 7 இல் செவ்வாய் மற்றும் சுக்கிரன் இருக்க சுய சம்பாத்தியத்தில் சொத்து சேர்க்கும் அதிர்ஷ்டமும்- செல்வமும் உண்டாகும். 
   7.     8 இல் செவ்வாய் எவ்வித யோகத்தையும் தருவதில்லை எனினும் சூரியன் - சுக்கிரன் - இணைந்தால் சிறிது புகழை மட்டும் தருவர்.
       
      8.     9 இல் சூரியன் மற்றும் செவ்வாய் சிறப்பு யோகத்தை ஏற்படுத்துகிறார்.

     9.   இலக்னத்தில் சுக்கிரன் - சூரியனோடு இருந்து குருவால் பார்க்கப்படாது இருந்தால் யோகத்தைத் தருகிறார்.

  10.  குருவால் பார்க்கப்படும் சுக்கிரன் நிச்சியம் யோகம் தருவதில்லை. ஆனால் அவரால் பார்க்கப்படும் சூரியன் யோக காரகர் ஆகிறார்.

       11.   சூரியன் - புதன் -மற்றும் சுக்கிரன் 11 இல் இருந்து திசை நடத்தும் போது  அதிர்ஷ்டத்தைத் தருகிறார்.
        12.  இலக்னத்தில் சூரியனும் 4 இல் சந்திரனும் இருக்க யோகம் ஏற்படுகிறது.
         
   13.       10 இல் சூரியன் - சுக்கிரன்- குரு இருந்து தசா நடக்க அக் காலத்தில் ஜாதகர் கங்கை நதியில் புனித நீராடுகிறார்.

     

6.   
7.  
8.  
9.  
1
1
                           
                           v];.tp[aeurpk;kd; vk;.v];]p
                                   (mg;isL m];l;uhy[p)
                            nry;: 94888 62923.9789101742.
                          Website:www.studyofastrology.com.

3 comments:

  1. This Page is can't readable

    ReplyDelete
    Replies
    1. தற்போது ஃபாண்ட் மாற்றி பதிவு செய்துள்ளேன். படிக்க இயலும் என நினைக்கிறேன். நன்றி.

      Delete
  2. please try in mozilla firefox. thank u

    ReplyDelete