Search This Blog

Sunday 28 July 2013

கிரகசாமியம் எனும் கிரகநிலை





கிரக சாமியம் எனும் கிரக நிலை

     தசா நாதனின் நிலை அறிந்து அதை கூடுதல் தகவலாகக் கொண்டு கூடுதல் பலனறியும் முறையினைப் பற்றி இங்கு காண்போம்.கிரக சாமியம் என்ற இந்த நிலையறியும் முறையையும், அதற்குண்டான பலன்களையும் விரிவாகக் காண்போம்.
     
மேஷத்திலிருந்து லக்னம் வரை எண்ணி அங்கிருந்து தசாநாதன் இருக்கும் இடம் வரையும் எண்ணி இரண்டு தொகையையும் கூட்டிவரும் தொகையை, அந்த தசாநாதனின் விம்சோத்திரி தசா வருடத்தை இரு மடங்காக்கி வரும் தொகையால் பெருக்கி வரும் தொகையை 27 ஆல் வகுத்துவரும் மீதி எண்ணுக்கு உரிய பலனை கீழ் காணும் அட்டவணையில் கண்டு,அந்த பலனையும் தசா பலனொடு இணைத்துச் சொல்லலாம்.
      
சிம்ம லக்னம் என வைத்துக் கொண்டால் மேஷத்திலிருந்து எண்ண 5 ம், தனுசுவில் சூரியன் இருக்க அந்த 5 தையும் கூட்ட வரும் தொகை 10 ஆக, நடப்பு தசா சூரியனாகக் கொண்டு, சூரிய தசா 6 + 6 = 12 ஆகும். இப் 12 டை 10 ஆல் பெருக்கி வரும் தொகையை 27 ஆல் வகுக்க வரும் மீதி 12×10 = 120/27 = ஈவு 4 மீதி 12 ஆகும்.

மேஷம்சிம்மம் (லக்னம்) =  5
சிம்ம லக்னம்  தசாநாதன்                                                              சூரியன்--தனுசுவில்   =  5 = கூட்ட     = 10  ()                                                                சூரிய தசா வருடம் 6   = எனவே   6+6 = 12  ()                                         () + ()  = 10 × 12 = 120 ÷ 27 = ஈவு 4, மீதி 12 ஆகும்.                                 இந்த 12 ம் எண்ணுக்குரிய பலன் :- அதிதி பூஜாவிருந்தினரைப் பூஜித்தல்மந்திரங்களை அறிந்தவன், புதையல் கிடைக்கும் அதிர்ஷ்டமுடையவன்.

இனி 1 முதல் 27 வரையான பலன்களைக் காண்போம்.
1.   குளித்தல் :- (ஸ்னானம்) நல்ல குழந்தைகள்,மகிழ்ச்சியான மண வாழ்க்கை,உறவுகளால் மதிக்கப்படுதல்,முயற்சிகளில் வெற்றி.
2.   ஆடையணிதல் :- (வஸ்த்ர தாரணம்) அரசாலும்,அரசாங்கத்தாலும் கெளரவிக்கப்படுதல், செல்வம் சேருதல், ஆடை, ஆபரண,நவரத்தினங்கள் சேருதல்.நல்ல உடற்பலமும், நறுமண திரவியங்களும் உடையவராதல்.
3.   
வீபூதி அல்லது சந்தன அலங்காரம் :- (விபூதி அல்லது கந்தாலங்காரம்) கெளரவமும், மனமகிழ்ச்சியும், பணிசெய்யும் திறனும் அதிகரிக்கும்.
4.   வணங்குதல் :- (சிவலிங்கம் அல்லது பூஜா யத்தனம்)- நிலங்கள் மூலமாக தனலாபம், வாகன ஆதாயம், மகிழ்ச்சியாக வாழ்தல் ,உறவினர்களால் மிகவும் நேசிக்கப்படுதல் மற்றும் பெரிதும் மதிக்கப்படுதல்.
5.   
ஐந்தெழுத்தை ஜபித்தல் :-- ( பஞ்சாட்ச்சரி ஜபம்) – பணமும், நிலவளங்களும் பெருகுதல், அரசாங்கத்தால் தொல்லை மற்றும் பணத்தை இழத்தல்.
6.   சிவனை பூஜித்தல் :- (ஷிவ் பூஜா) – கொடூரமானவர்களுடன் கூட்டுவைத்தல், மக்களிடம் அன்புவைத்தல் மற்றும் தனலாபம் பெருதல்.
7.   தியாகம் செய்ய முற்சித்தல் (உபாசனா அல்லது யஞ்ஞ எத்தனம்) :- இதய நோய் ஏற்படுதல், கல்வி சம்பந்தமான விவாதங்கள் ,பேராசிரியராகும் நிலை,கல்லீரல் சம்பந்தமான நோய் ஏற்படுதல்.
8.   மஹாவிஷ்ணுவைத் தொழுதல் :- (விஷ்ணு பூஜா) – தங்கமுடியாத சந்தோஷம்,உறவினர் மற்றும் நிலங்கள் மூலமாக தனலாபம்,எதிரிகளை வெல்லுதல்.
9.   வணங்குதல் :- (நமஸ்கார்) – இனிமையான பேச்சு, நல்ல வாகனம்,ஏமாற்றுதல்,வஞ்சித்தல்.
1
0.  கிரிவலம் :- (கிரி பிரதட்ஷணம்) – மண்ணீரல் நோய், வயிற்றுப்போக்கு,காய்ச்சல், அரசாங்கத்தாரால் தொல்லை, துர்க்கை அம்மனை வணங்குதல்.
11.  ருத்ரனை பூஜித்தல் :- (ருத்ர பூஜா) -. கிராமத்தின் அல்லது நகரத்தின் தலைவராதல்,மனைவி,மக்களின் முன்னேற்றம் மற்றும் அதிக தனவரவும், சுக செளக்கியங்களும்,மகிழ்ச்சியான வாழ்க்கையும் அமைதல்.
1
2.  விருந்தினரை பூஜித்தல் :- (அதிதி பூஜித்தல்)- ரஜோ குணம்,புதையல் கிடைத்தல்,மந்திரவாதி அல்லது மந்திரங்களை உச்சரித்தல்,ஓதுதல்,
1
3.  உணவு உட்கொள்ளுதல் :- (போஜனம்) – தனது ஜாதியைச் சேர்ந்தவர்களின் மதச் சடங்குகளைச் செய்யவிடாமல் தடுப்பவன், பரந்தநோக்குடையவன், மற்றவர்களை வெறுப்பூட்டுபவன், மற்றவர்களுக்குத் தொல்லை தருபவன். எப்போதும் நோயுள்ளவன், மகிழ்ச்சியற்றவன்.
1
4.  தண்ணீர்க் குடம் :- (உதகம்பா) – ஒத்துவராத மற்றும் உண்ணக்கூடாத உணவுகளை உண்ணுதல்,உறவினர் மற்றும் நண்பர்களிடம் விரோதம் கொள்ளுதல்.
1
5.  கோபம் :- ஏழ்மைநிலை,பிறரை வெறுப்பூட்டுபவர், பிறர் மீது பொறாமைப்படுபவர்.
1
6.  தம்பூலம் தரித்தல் :- ஆடைகள் மற்றும் வாகனங்கள் அடைதல்,நல்ல குணமுடையவராய் இருத்தல்,சக்ரவர்த்திகளுடனும்,அரசர்களுடனும் பழகுதல், சிறந்த பேச்சுத்திறமை  மற்றும் மிகுந்த நிர்வாகத் திறமை.
1
7.  தேவசபை  :- (அஸ்தானம் அல்லது தேவசபா) – நல் இதயம்,எதையும் சீர்தூக்கிப் பார்க்கும் குணம் ,மந்திரசித்தி, பிறருக்கு உதவும் குணம், நிதானமுள்ளவன்,மொத்தத்தில் குணக்குன்று,
1
8.  கிரீடம் அணிதல் :- (க்ரீட தாரணம்).- இராணுவத்தின் தலைமைத் தளபதி, தனலாபம், கல்விமான்,புகழ்மிக்கவர்.
1
9.  ரகசியம் :- (ரஹஸ்ய) நல் வார்த்தைகள்,ரகசியமான மற்றும் சோம்பெறித்தனமுடையவர்.
2
0.  சுகமின்மை :- (அலஸ்யம்) சோம்பேறி,மந்தப்புத்தியுள்ளவன் மற்றும் முட்டாள்,சாத்திரங்கள் அறிந்தவன்.
2
1.  தூக்கம் : (நித்ரா அல்லது சேஷஸயனா) :- மற்றவர்களின் வேலையைச் செய்தல்,அதிக காமமுள்ள,வெறுக்கத்தக்கவன்,தாய்க்கும் மனைவிக்கும் தொல்லைகள் தருப்பன்.
22.  குடிநீர் :- (ஜலபானா) – உறவினரோடு, குருவோடு,பெரியோரோடு பகை கொள்ளுதல்,நோயுள்ளவர்;.
23.  அமிர்த பானம் :- ஆரோக்கியமுள்ள, மகிழ்ச்சிகரமான மனைவி  மக்கள்,தரமான,சத்தான உணவுண்ணுதல்,அரசரால் அல்லது அரசாங்கத்தாரால் மதிக்கப்படுதல்,
24.  பணம் சம்பாதித்தல் :- (தனார்ஜனா).—மதிப்பிற்குரிய, முயற்சிகளில் வெற்றி, பல வழிகளில் லாபமடைதல்,செல்வந்தர்..
25.  கிரீடத்தை அகற்றுதல் :- (க்ரீட விஷர்ஜ்னம்) – வேலையை இழத்தல், பதவியை இழத்தல்,மகிழ்ச்சியற்ற மனநிலை,மக்களால் ஒதுக்கப்படுதல்,கண்டிக்கப்படுதல். மற்றும் மதிப்பிழத்தல்.
26.  அதிக தூக்கம் (அதிநித்ரா) :- தமச குணம்,கல்லீரல் நோய் மற்றும் மூட்டுவலி ஆகியவற்றால் முடங்கிவிடுதல்,அரசாங்கத்தை எதிர்க்கும் ராஜவிரோதி;
27.  பெண்ணைப் புணருதல் – (ஸ்திரீ ஸம்போகம்) :- மிக அதிக காமமுடையவர், அறுவருப்பானவர். மற்றவர்களைக் குறைசொல்பவர் மற்றும் கஷ்டங்களால் வெறுத்துப்போனவர்.
                                                      

No comments:

Post a Comment