Search This Blog

Wednesday 8 April 2015

பஞ்சபூத தத்துவங்களும் கிரக தாக்கங்களும்.



       இந்தப் பிரபஞ்சத்தில் கிரகங்கள் பஞ்சபூத தத்துவங்களைக் கொண்டுள்ளன என்பது நாம் அறிந்ததே.
பூமிபுதன்,
காற்றுசனி, இராகு,
நீர்சந்திரன், சுக்கிரன்,
நெருப்புசூரியன், செவ்வாய்,
ஆகாயம்குரு ஆகும்.
       பிறப்பின் போது பலம் பொருந்திய கிரகத்தின் குணங்களின் அடிப்படையிலேயே மனித குணமும் அமைகிறது. இலக்னத்துக்கும் அதன் தாக்கம் ஏற்படுகிறது. இந்த தத்துவார்த்தங்கள் ஒரு மனிதனின் குணாதிசயங்களைக் கண்டுபிடிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
       அண்டவெளி தத்துவம் பலமிக்கதாக (ஆகாயம்) (குரு) பெற்ற ஜாதகர், புத்திசாலியாகவும், எதையும் புதிதாக உருவாக்கும் தன்மை உடையவராகவும் இருப்பார்.  சிறந்த மேடைப் பேச்சாளராகவும், அவர்கள் விரும்பிக் கற்கும் துறைக்கான, கருத்துக் களஞ்சியமாகவும் இருப்பார். அறிவு மிக்கவராகவும், சிறந்த இராஜதந்திரியாகவும் விளங்குவார். பெரிய திட்டங்களைத் திறம்பட வகுத்து, அதில் சுலபமாக வெற்றி அடைபவராகவும் இருப்பார். உயரமானவராகவும், 32 வயதுக்குப் பிறகு உடல் எடை கூடி குண்டாகவும் இருப்பார்.
       நெருப்பு தத்துவ கிரகத்தின் தாக்கம் (சூரியன், செவ்வாய்) அதிகம் பெற்றுப் பிறந்த ஜாதகர். தன்னம்பிக்கை மிக்கவர், பெருமையும் கர்வமும் மிக்கவர். நுண்ணிய அறிவுடையவர். புது நிறம் உடையவர். எப்போதும் பிறருக்கு அடிபணிந்தோ அல்லது பிறருக்குக் கீழான பதவியில் வேலைபார்க்கவோ விரும்பாதவர். உயரிய அதிகார பதவி வகிக்க விரும்புபவர். துணிச்சல்காரராகவும், சாதிக்கப் பிறந்தவராகவும் இருப்பார்.  
       பூமி தத்துவ கிரகத்தின் தாக்கம் (புதன்) அதிகம் பெற்றுப் பிறந்த ஜாதகர், குழந்தையைப் போன்ற மனம் படைத்தவர். அவரது நடவடிக்கைகள் குழந்தைத்தனம் மிக்கதாக இருக்கும். பலம் மிக்கவர். படோடாபத்தை விரும்புபவர், சுகவாசி, எப்போதும் மகிழ்ச்சி நிறைந்தவராகக் காணப்படுவார். அறிவாளி. தகவல் தொடர்பில் நிபுணத்துவம் பெற்றவராக இருப்பார். எப்போதும் தனது நகங்களை, பற்களை, கேசத்தை மிகவும் சுத்தமாகப் பராமரிப்பார். அவரது அறை, பொருள்களை வைக்கும் அலமாரி ஆகியவை மிகவும் சுத்தமாக, நேர்த்தியாக இருக்கும். நவநாகரீக உடையணிந்து, ஆடைக் கண்காட்சி மேடையில் (பேஷன் ஷோ) வருபவர் போல் காட்சி அளிப்பார்கடினமான பூமியைப் போல் கடின உழைப்பாளி. ஒரே மனதுடன் அர்ப்பணிப்பு உணர்வுடன் இருப்பவர். எதையும் மிகவும் பத்திரப்படுத்தி வைப்பவர்.
       நீர் தத்துவ கிரகத்தின் (சந்திரன், சுக்கிரன்) தாக்கம் அதிகம் கொண்டு பிறந்த ஜாதகர் இனிய பேச்சு உடையவர். அனைவரிடமும் இணைந்து பழகுவர். கூடி வாழ்வதில் பிரியமுடையவர். எவ்வளவு கடினமான வேலையாய் இருந்தாலும், தன் தோள்களில் சுமக்க வல்லவர். இசையையும், கலையையும் விரும்பும் இவருக்கு, அநேக நண்பர்கள் இருப்பர். மெலிந்த தேகம் உடையவர். ஆரோக்கியம் மிக்க உடலை உடையவர். நல்ல பார்வையும், உள்ளுணர்வு மிக்க மூளையையும் உடையவர்.

       காற்று தத்துவ கிரகத்தின் (சனி, இராகு) தாக்கம் அதிகம் கொண்டு பிறந்த ஜாதகர் அஜாக்கிரதை மிக்கவர், ஞாபகமறதி உடையவர். அவலட்சணமான, பார்த்தாலே வெறுப்பு ஏற்படுத்தக் கூடியவர். அதிகமாக சிந்திப்பவர்கள். மன அழுத்தத்துக்கு ஆளாகக்கூடியவர். கவலை தோய்ந்த முகமுடையவர்கள். தன்னைப்பற்றி தாங்களே பரிதாபப்பட்டுக் கொள்ளக் கூடியவர்கள். தர்மகுணம் நிறைந்தவர்கள் ஆயினும் விரைவில் உணர்ச்சி வசப்பட்டு டென்ஷன் ஆகக் கூடியவர்கள். பயணத்தில் ஆர்வம் மிக்கவர்கள். மெலிந்த உடல் உடையவர்கள். ஸ்தூல சரீர உலகில் இருப்பதைவிட, சிந்தனை உலகில் சஞ்சரிப்பவர்கள். அதிகம் கற்றவர்கள், அறிவாளிகள். மச்சள் வண்ணம் உடையவர்கள். பிரபுத்துவம் உடையவர்கள். அனைவராலும் மதிக்கப்படுபவர்கள். தூய உள்ளமும், தயாள குணமும் உடையவர்கள் ஆவர்.

No comments:

Post a Comment