Search This Blog

Tuesday 10 January 2017

2017 ஆம் ஆண்டுக்கான புத்தாண்டு பலன்.








2017 ஆம் ஆண்டுக்கான புத்தாண்டு பலன்.

ஜோதிட ப்ரவீணா. எஸ், விஜயநரசிம்மன்.






செவ்
சுக்,கேது
01-01-2017
மார்கழி-17.ஞாயிறு
மறுநாள் காலை
மணி 4-19 கும்ப.சந்.

சந்
இராகு

சூரி
புத,சனி

லக்//
குரு

        உபநிஷத்தில் ஒரு வசனம் உண்டுஅதாவது நேரம் ஆயுளைச் சாப்பிடுகிறதுஏனென்றால் மனித வாழ்வின் ஒவ்வொரு நிமிடமும் நேரத்தால் குறைக்கப்படுகிறதுநேரத்திற்குக் காலம் என்ற பெயரும் உண்டுசில நூல்களில் இதைக் காலன் என்றும் அழைப்பர்காலன் என்றால் எமன் என்று பொருள்ஆயுளைச் சாப்பிடுவது எமன் தானே ? இவ்வாறாகக் காலம் உழன்று கொண்டிருப்பதை நம்மால் உணரமுடிவதில்லைஅதுபோல் பூமியும் தன்னைத்தானே சுற்றி வந்து வலம் வருவதையும் நம்மால் காணமுடிவதில்லைஇருப்பினும் கிரகங்களும் பூமியும் தத்தமது பணிகளைச் செவ்வனே செய்து கொண்டிருக்க மறப்பதில்லை.ஆண்டொன்று போனால் வயதொன்று போகும் என்பதுதானே உண்மை. 2016 முடிந்து 2017 இல் அடியெடுத்து வைக்கிறோம்.
       கோசார பலன்களை ஒரு வழிகாட்டியாகவே எடுத்துக் கொள்ள வேண்டும்தர்ம சாஸ்திரங்களில் கூறப்பட்டது போல்கேட்பதற்கு இனிமையாக சத்தியத்தைச் சொல்லுசத்தியம் அல்லாததை ஒருபோதும் சொல்லாதேஅந்த சத்தியமும் கேட்பதற்கு நாராசமாக இருக்கக் கூடாதுமேலும் பயம் விளைவிக்கக் கூடியதாகவும் இருக்கக் கூடாது.” அதாவது ஓரு ஜாதகத்தைப் பார்க்கும் ஜோதிடன்அவனுக்கு அனேக விஷயங்கள் தெரிந்திருந்தாலும்எதைச் சொன்னால் பலன் கேட்பவனுக்கு அதைத் தாங்கும் சக்தி உண்டோ அதை மட்டும் தான் சொல்ல வேண்டும்உண்மையான ஜோதிடன் அதைமட்டுமே சொல்வான்இதைக் கேட்டுவிட்டு ஜோதிடனுக்கு ஒன்றும் தெரியவில்லை என்று எண்ணிவிடக் கூடாதுஅதே நீதியின் அடிப்படையில்தான் இங்கு பலன் உரைக்கப் பட்டுள்ளது.
       2017 ஆம் ஆண்டு மலர்வது 31 – 12 - 2016 சனிக் கிழமை இரவு 12 – 00 மணி, 11 -21 முதல் 01-21 வரை கன்னி இலக்கினம்.
       2017 ஆம் ஆண்டு மலரும் வேளை இலக்கினம் எழுவது கன்னி இராசியாகும்கன்னி இலக்னமாகிஇலக்னாதிபதி புதன் முதல் வாரத்திற்கு பிறகு  ஆம் அதிபதி குருவுடன் பரிவர்த்தனை பெற்று அனுகூல நிலையில் உள்ளதால் அரசு மிக்க பலம் பெறும்அரசாங்க நிர்வாகம் மிக்க திறமையுடன் நடக்கும்விலைவாசி கட்டுக்குள் இருக்கும்பொருளாதாரம் சீராக இருக்கும்.நாடு வெற்றி நடைபோடும்பிரம்மாண்டமான கட்டுமானங்கள்பெரிய திட்டங்களெல்லாம் நிறைவேற்றப்படும்நமது பாரதத்தைப் பார்த்து உலக நாடுகள் பொறாமைப்படும் அளவுக்கு அதன் வளர்ச்சி இருக்கும்உலகளவில் விண்வெளி விஞ்ஞானத்தில் சாதனைகள் புரிந்து புகழ் அடையும்.  கர்ம பாவாதிபதியும் புதனாவதால் உலக அரங்கில் நம் தேசத்தின் பெருமைமதிப்பு,கௌரவம் அனைத்தும் உயரும்கல்வித்தரமும் உயரும்இலாபாதிபதியின் அனுகூல நிலையால் அயல்நாட்டு வர்த்தகம்,உலகளாவிய ஒப்பந்தங்கள் மற்றும் உடன்படிக்கைகள் அனைத்தும் சிறப்பாகவெற்றிகரமாக முடியும்பொருளாதார முன்னேற்றங்கள் ஏற்படும்மற்ற நாடுகளுக்கு நமது அரசாங்கம் உதவிக்கரம் நீட்டும்மக்களின் கடின உழைப்பு காரணமாக நாட்டின் நிலை உயரும். 6 இல் உள்ள சுக்கிரன் சில துன்பம் தந்தாலும்செவ்வாயால் நாட்டின் உள்கட்டமைப்புசாலை மேம்பாடு ஆகியவற்றில் நல்ல முன்னேற்றம் இருக்கும்மக்கள் தொகை உயரும் வாய்ப்பு உண்டுவிளைச்சல் அதிகமாகி தானிய உற்பத்தி அதிகரிக்கும்விளையாட்டுத் துறையில் நம் சாட்டவர்கள் சாதனைகள் புரிவர்வெற்றிகளைக் குவிப்பர்நாட்டின் பொருளாதார நிலை 7.7 விகிதம் உயரும்நாட்டு மக்களின் வாழ்க்கையில் அனைத்து வசதி வாய்ப்புகளும் பெருகும்.

மேஷம்

(அஸ்வினி-1, 2, 3, 4 பாதங்கள்பரணி-1, 2, 3, 4 பாதங்கள்கார்த்திகை-1, பாதம்)
இராசி  அறியாதவர்கள் பலன் அறிய - சுசேசொலெலுலேலோ, )

       மேஷ இராசி வாசகர்களே !

       இந்த ஆண்டு ஆரம்பம் முதலே நல்ல பலன்களாக நடக்கும்பண வருமானம் அதிகரிக்கும்தொழில் விருத்தியடையும்.படிப்பிலும் பணியிலும் முயற்சி செய்வோருக்கு நன்மைகள் உண்டாகும்இதுவரை தீர்க்க முடியாத பிரச்சனகள் அனைத்தும்தீரும்அடிக்கடி ஏற்படும் பயணங்களாலும்வீடு அல்லது இடமாற்றங்களாலும் வீட்டில் குழப்பங்கள் நிலவலாம்.பொருளாதாரநிலை சிறப்பாக இருப்பது போல் தோன்றினாலும் வரவுக்கு மிஞ்சிய செலவுகள் ஏற்படும்உடன் பிறந்தவர்களின் செயல்பாடுகளில் அக்கறையாகவும்அனுகூலமாகவும் நடக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்வியாபார விஷயங்களில் கலப்புபலன்களாக நடக்கும்கூட்டாளிகள் விஷயத்தில் எச்சரிக்கையுடன் இல்லாவிட்டால் தடைகளும்பிரிவும் ஏற்பட வாயப்பாகும்வருமானத்தை பூமிவீடுவாகனம் ஆகியவற்றில் முதலீடு செய்வது நல்லதுஆண்டு முடிவில் அனைத்து எதிர்பார்ப்புகளும் ஈடேறும்திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடந்தேறும்வழக்குகளில் இழுபறி நிலை இருக்கும்பிறருக்கு ஜாமீன் கொடுப்பதோ,கூட்டுக் கையெழுத்திடுவதோ கூடாதுஅரசு மற்றும் தனியார் துறையில் இருப்பவர்களுக்கு பற்பல நன்மைகள் ஏற்படும்.ஒன்பதாம் மாதம் குருவின் துலா பிரவேசம் முன்னேற்றம் தரும்அரசு வெகுமானம் கிடைக்கும்புண்ணியத் தல யாத்திரைகள் மகிழ்ச்சி அளிக்கும்சனீஸ்வரனை வணங்கச் சங்கடங்கள் தீரும்இன்னல்கள் குறையும்மொத்தத்தில் மேஷ இராசிஅன்பர்களுக்கு 65 சதவிகித நற்பலன்கள் ஏற்படும். அதிர்ஷ்ட எண் – 5. நிறம் – இளம் சிவப்புசகல கஷ்டங்களும் தீர தக்ஷிணாமூர்த்தி ஸ்லோகம் சொல்வது நல்லது,

ரிஷபம்

கார்த்திகை – 2,3,4 பாதங்கள்-ரோகிணி-1,2,3,4-பாதங்கள்-மிருகசிரீடம்-1,2 பாதங்கள் )
  ( இராசி  அறியாதவர்கள் பலன் அறிய – விவுவேவோ )

       ரிஷப இராசி வாசகர்களே !

       இந்த ஆண்டு தங்கள் இராசிநாதன் சுக்கிரனால் உயர்ரக ஆடை ஆபரணங்கள்பொழுதுபோக்கு உபகரணங்கள் ஆகியவைகிடைக்கும்திருமணம் ஆகாதவர்களுக்குப் பெரிய இடத்துப் பெண்ணுடன் திருமணம் நடக்கலாம்காதல் விவகாரங்கள்ஆரம்பமாகி இனிதே தொடரும்பண வருமானம் அதிகரிக்கும்குடும்பத்தில் ஒற்றுமை நிலவி மகிழ்ச்சியும் நிலவும்வியாபாரம்,தொழில் ஆகியவை விருத்தியடைய முழு முயற்சியுடன் ஈடுபடுவீர்கள்புதிய வேலைக்காக முயற்சி செய்வோருக்கு சாதகமாக அமையும்சிலருக்கு அலைச்சல்டென்ஷன்பணியில் நெருக்கடிகள் ஏற்படலாம். வெளிநாடு செல்ல விரும்புவோருக்குதடங்கலுக்குப் பின்  வெற்றி கிடைக்கும்வழக்குகளில் வெற்றி கிடக்கும்அரசுப் பணியாளர்களுக்கு சம்பள உயர்வுடன் கூடிய பதவி உயர்வை எதிர்பார்க்கலாம்.வேலைப்பளு அதிகரிக்கும்சிலருக்குக் காரிய தடைகள் ஏற்படலாம்உத்தியோகத்தில்பிரச்சனைகள் எழலாம்பயணம் செய்யும்பொது எச்சரிக்கை தேவைபுத்திர பாக்யம் ஏற்படும்குடும்ப வாழ்வு ஒரே சீராகஇருக்கும்நல்ல முன்னேற்றங்களும் இருக்கும்தொழில் புரிவோர் மற்றும் பணியில் உள்ளவர்களுக்கு சிறு கஷ்டங்கள்இருக்கலாம்கடன்களை மீட்கவும்புதிய சொத்துக்கள் வாங்கவும் அனுகூலமான ஆண்டாகும்சொல்லும் பேச்சைக் கேட்காதகுழந்தைகளைப் பற்றிய கவலை ஏற்படும்.  கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கையுடன் இருத்தல் அவசியம்.  பயிர் விளைச்சல்அதிகரிக்கும்அதிர்ஷ்ட எண் – 5, நிறம் – பிஸ்கட் கலர்மொத்தத்தில் ரிஷப இராசி அன்பர்களுக்கு  இந்த ஆண்டு 60 சதவிகிதநற்பலன்கள் ஏற்படும்.

மிதுனம்

(மிருகசிரீடம்- 3,4 பாதங்கள்திருவாதிரை-1,2,3,4 பாதங்கள்புனர்பூசம்-1,2,3 பாதங்கள்)
    இராசி  அறியாதவர்கள் பலன் அறிய – காகிகுகேகோ )

       மிதுன இராசி வாசகர்களே !

       இந்த ஆண்டு அனேக நன்மைகள் ஏற்படும்செல்வ நிலை உயரும்அழகிய மனைவி வாய்ப்பாள்அழகும் பொலிவும்கூடும்வாக்குவன்மை ஓங்கும்தன தான்ய விருத்தியும்மாணவர்களுக்குக் கல்வியில் தேர்ச்சியும் ஏற்படும்.  நற்செயல்களில்ஈடுபடுவீர்கள். மனமகிழ்ச்சியும்அனைத்து வசதிகளும் வந்து சேரும்சிந்தனா சக்தி மற்றும் நிர்ணயத் திறன்கள் குறையும். எல்லா வசதிகளும் இன்பமும் உண்டாகும்உயர்ந்த செல்வநிலை அடைவர்உயர்ரக ஆடை ஆபரணங்கள்பொழுதுபோக்குஉபகரணங்கள் ஆகியவை கிடைக்கும்பெரிய இடத்துப் பெண் மனைவியாக அமையலாம்சிலருக்குக் குடும்பத்தில் ஒற்றுமையின்மைகருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு விலகும்காரிய தடைகள் ஏற்படலாம்அரசுப் பணியாளர்களுக்குஉத்தியோகத்தில் பிரச்சனைகள் இன்றி காலம் கழியும் பயணம் செய்யும்பொது எச்சரிக்கை தேவைவியாபாரம் , தொழிலில் எதிர்பார்த்த நல்ல முன்னேற்றங்கள் இருக்கும்எல்லா வழிகளிலும் இலாபமும் ஏற்படும்மிக முக்கியமாக ஈடுபடும்செயல்பாடுகளில் வெற்றிகரமான நல்ல முடிவுகள் மற்றும் இலாபங்கள் ஏற்படும்.  நோயினின்று விடுதலை மற்றும்அதிகாரத்திலுள்ள நல்ல மனிதர்களின் தொடர்பும் ஏற்படும்திருமணம்புத்திர பாக்கியம் ஆகியவையும் ஏற்படும்எதிலும்வெற்றியையும்எல்லாவற்றிலும் முன்னேற்றத்தையும் தரும் சனிதசாபுத்தி சாதகமானால்இராஜயோகத்தையும் அளிக்கிறான்.நீதித் துறையில் உள்ளவர்களுக்கு முன்னேற்றமான காலம்உத்தியோக உயர்வு மற்றும் வருமான உயர்வு உண்டுமூத்த சகோதரருக்கு ஆரோக்கியக் குறைவு ஏற்படலாம்அதிர்ஷ்ட எண் – 7, நிறம் – வெண்மைகஷ்டங்கள் தீர ஶ்ரீரங்கம் ரங்கநாதரை வணங்கி வரவும். மொத்தத்தில் மிதுனராசி அன்பர்களுக்கு 70 சதவிகித நற்பலன்கள் ஏற்பட, உங்கள் காட்டில் மழைதான்.
    
கடகம்

(புனர்பூசம்- 4 ஆம் பாதம்பூசம்-1,2,3,4 பாதங்கள்ஆயில்யம்-1,2,3,4 பாதங்கள்)
  ( இராசி  அறியாதவர்கள் பலனறிய – ஹிஹூஹேஹோடிடுடேடோ )

       கடக இராசி வாசகர்களே !

       இந்த ஆண்டு தங்கள் இராசிநாதன் சந்திரன் தங்களுக்கு சுக சௌக்கியத்தையும்நல் ஆரோக்கியத்தையும் அளிப்பார்.தானிய விருத்திபோதுமான பணவரவு ஆகிய நல்ல பலன்களை அளிப்பார்சகோதரர்களுக்கிடையே கருத்துவேறுபாடு ஏற்படலாம்.  குரு மாற்றங்களைத் தந்தாலும்செப்டம்பருக்குப் பிறகு நல்ல பலன்களைத் தருவார்மனோதைரியம் ஓங்கும்.ஆண்மைச் சக்தி அதிகரிக்கும்புதுப்புது பதவிகளும் அதனால் வருவாயும் கூடும்செல்வச் செழிப்பும்முன்னேற்றங்களும்,சுகானுபவங்களும் மற்றும் கௌரவமும் கூடும்சகோதரர்கள்அருகாமையில் உள்ளவர்களால் பிரச்சனைகள் ஏற்பட்டாலும்,பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும்அதன் காரணமாக குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக அமையும்நற்செயல்களில்ஈடுபடுவீர்கள். கடன்களை மீட்கவும்புதிய சொத்துக்கள் வாங்கவும் அனுகூலமான ஆண்டாகும்மனமகிழ்ச்சியும்அனைத்துவசதிகளும் வந்து சேரும்சிந்தனா சக்தி மற்றும் நிர்ணயத் திறன்கள் குறையும்.  மிக முக்கியமாக ஈடுபடும் செயல்பாடுகளில்வெற்றிகரமான நல்ல முடிவுகள் மற்றும் இலாபங்கள் ஏற்படும்.  தன விருத்தியும்தொலைதூரப் பயணங்களால் நன்மையும் ஏற்படும்சிலருக்கு  மனநிம்மதி கெடலாம். வெற்றிகரமான தொழில் முன்னேற்றமும்இனிய பயணங்களும் ஏற்படும்பயணத்தின் போது விபத்து பயமும் ஏற்படலாம்எச்சரிக்கை தேவைஞான மார்க்கத்தில் ஆர்வமும்ஆன்மிக சிந்தனைகளும் ஏற்படும்.அதிர்ஷ்ட எண் – 4, நிறம் – இளம் மஞ்சள்தினமும் விநாயகர் அகவல் சொல்லிவர விக்னங்கள் தீரும்.  பொதுவாக கடக இராசிஅன்பர்களுக்கு 60 சதவிகித நற்பலன்கள் ஏற்படும்.

சிம்மம்

மகம்-1,2,3,4 பாதங்கள்,பூரம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் உத்திரம்- 1 பாதம்)
    ( இராசி  அறியாதவர்கள் பலன் அறிய – மிமுமெமோடிடுடேடோ )

       சிம்மராசி வாசகர்களே !

      இந்த ஆண்டு குடும்பத்தில் ஓரளவுக்கு சந்தோஷம் நிலவும்உங்கள் மனோதைரியத்தாலும்சகிப்புத் தன்மையாலும் அனைத்துச் சங்கடங்களையும் சமாளித்துவிடுவீர்கள்தந்தை வகை சொந்தங்களுக்கு இன்னல்கள் ஏற்படும்வழக்கு மற்றும் சட்டரீதியான விஷயங்களில் உங்களுக்கு அதிர்ஷடம் காத்துக் கொண்டிருக்கிறதுகுடும்பத்தில்  சந்தோஷம் நிலவும்மன அழுத்தம்உங்கள் பொருளாதார நிலையில் முன்னேற்றம் இருக்கும்பணிபுரியும் இடத்தில் சுற்றுச் சூழலில் உங்களுக்குச் சாதகமானஅனுகூலமான திருப்பங்கள் ஏற்படும்சிலருக்கு புதிய சொத்துக்கள்வீடு ஆகியவை வாங்கும் யோகம் ஏற்படலாம்.புத்திர பாக்யம் ஏற்படும். வாக்குவன்மை ஓங்கும்தன தான்ய விருத்தியும்மாணவர்களுக்குக் கல்வியில் தேர்ச்சியும் ஏற்படும்.போதுமான பணவரவு ஏற்படுவதால் செல்வ நிலை உயரும்தொழில் அதிபர்களும்தொழிலாளிகளும் அனுசரித்துச் செல்ல வேண்டிய காலமிதுபணியில் இருப்பவர்கள் எவருக்கும் நம்பிக்கைத் துரோகம் செய்யாமல் நடந்து கொள்ளவேண்டும்.வியாபாரிகளுக்கு ஏற்ற தாழ்வுகள் இருந்து கொண்டே இருக்கும்புதிய கடன்களை வாங்காதிருப்பது நல்லதுவெளிநாட்டு வியாபாரத்தை அபிவிருத்தி செய்ய நல்ல காலம் இது.  இனிய விழாக்களும்,  பதவிகளும்எடுத்த காரியங்கள் யாவினும் வெற்றியும்  கிடைக்கும்.  கல்வியில் முன்னேற்றமும்இளைய சகோதரர்களால் மற்றும்  சிறுபயணங்களால் ஆதாயமும் கிடைக்கும்எழுத்து மற்றும் பதிப்பித்தல் துறையில் முன்னேற்றமும் ஏற்படும்அதிர்ஷ்ட எண் – 2. நிறம் – மஞ்சள்தினமும் விஷ்ணு சகஸ்ரநாமம் படிப்பதும்திருப்பதிகுருவாயூர் ஆகிய திருத்தலங்களுக்குச் சென்று வரக் கஷ்டங்கள் தீரும்மொத்தத்தில் சிம்மராசி அன்பர்களுக்கு 60 சதவிகித நற்பலன்கள் ஏற்படும்.

கன்னி

உத்திரம் – 2, 3, 4-பாதங்கள்ஹஸ்தம்-1, 2, 3, 4 பாதங்கள்சித்திரை – 1,2 பாதங்கள்)
இராசி  அறியாதவர்கள் பலன் அறிய – டோபிபூபேபோ )

      கன்னி இராசி வாசகர்களே !

      மேஷம் முதல் மீனம் வரையிலான 12 இராசிகளில் நீங்கள் தான் மிகவும் அதிர்ஷ்டக்காரர்கள்உங்கள் வாழ்க்கை திரைப்படத்தில் வருவதுபோல் திடீர் திடீரென மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டேயிருக்கும்இந்த ஆண்டுபணவரவு வெகுவாகப் பெருகும்படிப்பிலும்உத்தியோத்திலும் பற்பல விசேஷ நன்மைகள் உண்டாகும்சிலர் இரவோடு இரவாக சினிமாவில் காட்டுவது போல் ஒரு பாட்டிலேயே மிகப் பெரிய பணக்காரர்கள் ஆகிவிடுவார்கள்வீடு வாங்கவும்கட்டவும்வாகனங்கள் வாங்கவும் சரியான சமயம் ஆகும்முதல் பாதியில் குடும்ப சந்தோஷம் நிறைவாக இருக்கும்பிற்பகுதியில் தடைகளும்இடைஞ்சல்களும் ஏற்படும்பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும்சில தடைகள் ஏற்பட்டாலும்வியாபாரம் இலாபகரமானதாக இருக்கும்பதவி உயர்வுகளைஅதற்குரிய சம்பள உயர்வுகளோடு ஏதிர்பார்க்கலாம்திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடந்தேறும்மனோதைரியம் ஓங்கும்அரசுப் பணியாளர்களுக்குப் புதுப்புது பதவிகளும் அதனால் வருவாயும் கூடும்வியாபாரிகளுக்கு செல்வச் செழிப்பும்,முன்னேற்றங்களும்சுகானுபவங்களும் மற்றும் கௌரவமும் கூடும்கணவன் மனைவியரது உறவு சுமுகமாக இருக்கும்.வழக்குகளில் அமோக வெற்றி ஏற்படும்ஒரே ஒரு கொள்கையைக் கடைப் பிடித்தால் எல்லாக் காரியங்களிலும் வெற்றி கிடைக்கும்தங்களுக்கு உதவிகரமான நண்பர்கள் ஏற்படுவர்நல்ல செயல்பாடுகளைச் செய்யும் நிலை உருவாகும்எடுத்த காரியங்களில் வெற்றிகள் கிட்டும்சிலருக்கு முறைமீறிய காதல் ஏற்பட்டு  கட்டாயத் திருமணத்தில் முடியலாம்வேண்டாத விவகாரங்களில் மூக்கை நுழைக்காமல் வாழ்க்கையில்  எச்சரிக்கையுடன் நடப்பது நல்லதுதங்களுக்கு அதிர்ஷ்ட எண் -2, நிறம் –ஆரஞ்சுகஷ்டங்கள் தீர சிவ கவசமும்சிவ ஸ்தோத்திரம் ஆகியவற்றைப் படிக்கவும்மொத்தத்தில் கன்னி இராசி அன்பர்களுக்கு65 சதவிகித நற்பலன்கள் ஏற்படும்.

துலாம்

(சித்திரை-3,4 பாதங்கள்சுவாதி – 1,2,3,4 பாதங்கள் மற்றும் விசாகம்- 1,2,3 பாதங்கள்)
இராசி  அறியாதவர்கள் பலன் அறிய – ரிருரேரோதிதுதே )

       துலா இராசி வாசகர்களே !

       இந்த ஆண்டு தங்கள் குடும்பத்தில் சந்தோஷம் நிலவும்போதிய அளவுக்கு வசதி வாய்ப்புகள் பெருகும்பணப் பற்றாக்குறை அவ்வப்போது தலைதூக்கும்புத்திரர் பற்றிய கவலை ஏற்படும்ஆயினும் அவர்கள் படிப்பிலும்தொழிலிலும் முன்னேற்றம் அடைவார்கள்வழக்குகளில் வெற்றி கிடைக்கும்கணவன் மனைவி உறவு மேன்மை அடையும்மனவேற்றுமை மற்றும் கருத்து வேறுபாடுகளால் பிரிந்தவர் ஒன்று சேரும் வாய்ப்பு உண்டுதெய்வ வழிபாடு மற்றும் புனித யாத்திரைகள் செல்வதற்கும் ஏற்ற காலம்திடீர் பயணங்களால் பெரும்பகுதி வெளியூரில் இருக்க வேண்டிய நிலை ஏற்படும்.  பொருளாதார நிலை சீராகவும்சிறப்பாகவும் இருக்கும்அரசுப் பணிகளில் எதிர்பார்த்த முன்னேற்றங்கள் கிடைக்கும்வீட்டில் போதிய அளவுக்கு வசதி வாய்ப்புகள் பெருகும்.  நினத்த காரியங்கள் நினைத்தபடி நடக்கும்விரும்பிய பொருட்கள் அனைத்தும் வீடு வந்து சேரும்.பணவரவு வெகுவாகக் கூடும்.  வழக்கு மற்றும் சட்டரீதியான விஷயங்களில்  உங்களுக்கு சாதகமாகமான பலன்களே ஏற்படும்.தொழிலில் நல்ல முன்னேற்றகரமான காலமாக அமையும்சுயதொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு இது அதிர்ஷ்டகாலம்அரசுப் பணியாளர்கள் மற்றவர் வலையில் சிக்க நேரலாம் எச்சரிக்கை தேவை வாக்கு வன்மை கூடும்ஞானமுயற்சியும்நற்சிந்தனையும் உயர்வைத்தரும்உங்கள் திறமைகளைக் காட்டி சுயமுயற்சி மற்றும் தன்னம்பிக்கையைக் கூட்ட வெற்றி கிட்டும்ஒருவர் நன்மை தந்தால் மற்றவர் தீமை செய்வதுதானே கிரகங்களின் இயல்புஎனவே,  கவலை வேண்டாம்.உங்கள் அதிர்ஷ்ட எண் – 3 மற்றும் நிறம் கிளிப் பச்சைதுர்க்கையை வணங்கத் துன்பங்கள் விலகும்மொத்தத்தில் துலாராசிஅன்பர்களுக்கு 55 சதவிகித நற்பலன்கள் ஏற்படும்.

விருச்சிகம்

விசாகம்- 4, அனுஷம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் கேட்டை -1,2,3,4 பாதங்கள் )
இராசி  அறியாதவர்கள் பலன் அறிய – தோநிநுநேநோயு )


       விருச்சிக இராசி வாசகர்களே !

       இந்த ஆண்டு உங்கள் இராசிநாதனால் எல்லாவிதத்திலும் நன்மை உண்டாகிறதுதிருமணம் நடக்கும்சந்ததி விருத்தி ஏற்படும்ஆயுள் விருத்தி ஏற்படும்பயிர்மனை இவற்றால் இலாபம் ஏற்படும்ஆடை ஆபரணங்கள் சேரும்வேதம் கல்வி இவற்றில் தேர்ச்சி ஏற்படும்வீரம் பெருகும்சகோதரரால் நன்மை ஏற்படும்கீழ் நிலையில் உள்ளவர்களால் நன்மை ஏற்படும்.அவர்கள் மூலம் பணவரவும் ஏற்படும்பணவரவு சீராக இருக்கும்பயணங்கள் பயன் உள்ளதாக அமையும்குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்துச் செல்வது நல்லதுபுத்திரர் பற்றிய கவலை ஏற்படும்ஆயினும் அவர்கள் படிப்பிலும்தொழிலிலும் முன்னேற்றம் அடைவார்கள்வீட்டில் போதிய அளவுக்கு வசதி வாய்ப்புகள் பெருகும்மருத்துவச் செலவுகள் அதிகரித்து மனக்கவலை அளிக்கலாம்அதிகாரிகளுக்கு எதிர்பாராத இடமாற்றத்தால் அலைச்சல்கள் அதிகரிக்கும்புனித யாத்திரைகள் செல்வதற்கு ஏற்ற காலம்சுயதொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்கள் புதிய முதலீடுகளைத் தவிர்ப்பது நல்லதுகுடும்பத்தில் புதிய சர்ச்சைக்களும்வாக்குவாதங்களும் உண்டாகலாம்அதைப் பொருட்படுத்தாமல் உங்கள் கடமையைச் செய்ய வேண்டும்.நண்பர்களின் மூலமாக உதவிகளும்ஆதாயங்களும் இருக்கும்உயர்பதவிகள் கிடைக்கும்சிலருக்கு அலைச்சல்கள் அதிகமாகும்பயணத்தின்போது  விபத்துக்கள் ஏற்படலாம்பணியாட்களால் உதவி கிடைக்கும்சிலர் ரகசிய வேலைகளில் ஈடுபடுவர்உங்களது அதிர்ஷ்ட எண் – 4 , நிறம் – வெள்ளியின் நிறம்வருடம் முழுவதும் வள்ளி மணாளன் சுப்ரமணியனின் ஸ்தோத்திரம் படிப்பது கஷ்டங்களைத் தீர்க்கும்மொத்தத்தில் விருச்சிகராசி அன்பர்களுக்கு 50 சதவிகித நற்பலன்கள் ஏற்படும்

தனுசு

 ( மூலம்-1,2,3,4 பாதங்கள்பூராடம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் உத்திராடம் –1 பாதம்)
இராசி  அறியாதவர்கள் பலன் அறிய – யேயோபீபூடாபே )

       தனுசு இராசி வாசகர்களே !

      ஆண்டுத் துவக்கத்தில் தங்கள் இராசிநாதன் குரு 10 இல் இருந்து இன்னல்கள் தந்தாலும்செப்டம்பருக்குப் பிறகு இலாபஸ்தானம் அமர்ந்து அரசு மரியாதைஉயர்ரக வாகனங்கள்இராஜதந்திரத்தால் அரசியலில் நல்ல பதவிகளை அடைதல்,கிராமத்தலைமை ஆகியவற்றைத் தருவான்இராஜயோகம் தருவதோடுதவத்திலும் பூஜை புனஸ்காரங்களிலும்தெய்வீககாரியங்களிலும் ஈடுபடுத்திபுண்ணிய காரியங்கள் மற்றும் தான தர்மங்களையும் செய்ய வைக்கிறார்வளம் கொழிக்கும்வயல்களால் வசதிகள் பெருகும்புதிய வீடு வாங்கவும்கட்டவும்பழைய வீட்டை அதிக விலைக்கு விற்கவும் வாய்ப்புண்டு.புத்திரர்கள் படிப்பிலும்வாழ்க்கையிலும் முன்னேற்றம் அடைவார்கள்படிப்பிலும் பணியிலும் முயற்சி செய்வோருக்கு நன்மைகள்உண்டாகும்இதுவரை தீர்க்க முடியாத பிரச்சனைகள் அனைத்தும் தீரும்சாண் ஏறினால் முழம் சருக்கும் என்ற கதையாக எல்லாவிதத்திலும் வாழ்க்கையில் ஏற்படும் சருக்கல்களை சமாளிக்கும் மனோதிடம் ஏற்படும்பொருளாதார நெருக்கடிகளைச் சமாளிக்க உடுக்கை இழந்தவன் கை போல் நண்பர்கள் ஓடிவந்து உதவுவர்இதுநாள்வரை தடைப்பட்ட சுபகாரியங்கள் ஈடேறி இல்லத்தில் இனிமை சேர்க்கும்அதிகாரிகளின் ஆலோசனைகளையும்அறிவுரைகளையும் கேட்டு நடந்தால் அலுவலகப் பிரச்சனைகளில் இருந்து எளிதில் விடுபடலாம்வழக்குகளில்  அவ்வப்பொழுது ஏமாற்றம்கோபம் ஆகியவை ஏற்படும்.மனைவியின் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம்பெற்றோர்கள் மனம் புண்படாதபடி நடந்துகொள்ள வேண்டும்தொழில்,உத்தியோகம்கொடுக்கல்வாங்கல் இவையெல்லாமே அனுகூலமாக இருக்கும்வெளிநாடு செல்லவும்தூரதேசப் பயணங்கள்மேற்கொள்ளவும் நல்ல வாய்ப்புண்டு.  உங்களது அதிர்ஷ்ட எண் – 5 , நிறம் – ரோஜா வண்ணம்சிவ தரிசனம் மற்றும்இராகுவிற்குப் பூஜை செய்ய  இன்னல்கள் தீரும்.

மகரம்

உத்திராடம்- 2,3,4- பாதங்கள்திருவோணம்-1,2,3,4 மற்றும் அவிட்டம் 1,2 பாதங்கள் )
இராசி  அறியாதவர்கள் பலன் அறிய – போஜிஜூஜேஜோகாகீ )

       மகர இராசி வாசகர்களே !

       இந்த ஆண்டு பலவழிகளிலும் பணம் சேரும்அமைச்சர் போன்ற  பதவிகள் கிடைக்கும்சிலருக்குப் பெண்குழந்தை பிறக்கும்கௌரவமும்அந்தஸ்தும் ஏற்படும்கட்டளை இடும் பெரும் பதவிகள் வந்து அடையும்பெரிய மனிதர் என்று பெயரெடுப்பார்குழந்தைகள் படிப்பில் முன்னேற்றம் ஏற்படும்ஆனால் வாலிப வயதில் உள்ளவர்களை நீங்கள் கண்காணிக்க வேண்டும்வழக்குகளில் ஓரளவு வெற்றி கிடைத்தாலும்மனக்கசப்பும்அமைதிக் குறைவும் உண்டாகும்மனைவியின் ஒத்துழைப்பும்ஆறுதலும்தான் உங்களுக்குப் பக்கபலம்குடும்பத்தில் குதூகலமும்அனைத்துவகை இன்பமும்நல்லுணவும்,நிம்மதியான தூக்கமும்வஸ்திர லாபமும் கிடைக்கும்பெரிய இடத்துப் பெண் மனைவியாக அமைவாள்.  நறுமணப் பொருட்களும்ஆடம்பர சாதனங்களும்திருமணமும்மணவாழ்க்கையில் மகிழ்ச்சியும்கல்வியிற் தேர்ச்சியும்,  சொத்துச் சேர்க்கையும்எல்லா நிலையிலும் முன்னேற்றங்களும்வியாபாரத்தில் வெற்றியும் ஏற்படும்சிலருக்கு மனக்குழப்பங்களும் ஏற்படலாம்தங்கள் சிறப்பான பொருளாதார நிலை நிலவும்தங்கள் துணைவியார்வியாபாரக் கூட்டாளிகள்நிலம்வீடு,வாகனம் மூலமான வருமானங்கள் கை கொடுக்கும்வெளிநாட்டு வியாபரங்கள்முதலீடுகள் அனுகூலமாக இருக்கும்பணியைப் பொறுத்தவரை சீரானசிறப்பான வருடமாக அமையும்.  ஆடை ஆபரணங்கள் சேரும்சகோதரரால் நன்மை ஏற்படும்அவர்கள் மூலம் பணவரவும் ஏற்படும்வழக்குகளில் ஓரளவு வெற்றி கிடைத்தாலும்மனக்கசப்பும்அமைதிக் குறைவும் உண்டாகும்.மனைவியின் ஒத்துழைப்பும்ஆறுதலும்தான் உங்களுக்குப் பக்கபலமாக இருக்கும்உங்களது அதிர்ஷ்ட எண்  - 6 – நிறம் – பாசிப் பச்சைதினந்தோறும் ஸௌந்தர்ய லஹரி படித்து சகல சௌபாக்கியங்களையும் பெறலாம்.  மொத்தத்தில் மகரராசி அன்பர்களுக்கு 65 சதவிகித நற்பலன்கள் ஏற்படும்.

கும்பம்

அவிட்டம் – 3,4 பாதங்கள்– சதயம்-1,2,3,4 பாதங்கள்-பூரட்டாதி-1,2,3 பாதங்கள்)
இராசி  அறியாதவர்கள் பலன் அறிய – குகூகோஸீஸூஸே,ஸோதா )

       கும்ப இராசி வாசகர்களே!

       இந்த ஆண்டு  காசி ஸ்தல யாத்திரை மேற்கொள்ளலாம்அதிக உழைப்பும் குறைந்த வருவாயும் உள்ள வேலைகளில்ஈடுபட்டு வாழவேண்டிய சூழ்நிலை ஏற்படும் சிலருக்குப் பல வழிகளிலும் பணவரத்துப் பெருகும்குடும்ப சுகம் பூர்ணமாகக்கிடைக்கும்அரசால் ஆதாயங்கள் ஏற்படும்வாக்கு வன்மையால் இலாபம் உண்டாகும்புதிய பதவிமரியாதைஅந்தஸ்துஆகியவை உயரும்வீட்டில் மகிழ்ச்சியான கொண்டாட்டங்கள்சுபகாரியங்கள் நடக்கும்சிலருக்கு வீண் விரயம்சந்தோஷமற்றவெளிநாட்டு வாசம் ஏற்படலாம்சிலருக்கு மந்திரி போன்ற உயர்பதவிகள் கிடைக்கும்கார் போன்ற உயர் வாகனாதிகள்கிடைக்கும்மனதிற்குப் பிடித்தபடி எல்லாம் நடக்கும்அரசு மரியாதைஉயர்ரக வாகனங்கள்இராஜதந்திரத்தால் அரசியலில் நல்லபதவிகளை அடைதல்கிராமத் தலைமை ஆகியவை ஏற்படும்தம்பதிகளிடையே கருத்து ஒற்றுமை மேலோங்கும்இராஜயோகம்ஏற்படுவதோடு தவத்திலும்,  தெய்வீக காரியங்களிலும் ஈடுபாடு ஏற்படும். புண்ணிய காரியங்கள் மற்றும் தான தர்மங்களையும்செய்வீர்கள்புதிய வீடு வாங்கவும்கட்டவும்பழைய வீட்டை அதிக விலைக்கு விற்கவும் வாய்ப்புண்டு.  குழந்தைகளின் கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும்பயணங்களும் அதனால் செலவுகளும் ஏற்படும்.  சிலருக்குக் கல்வியில் முன்னேற்றம் ஏற்படலாம்மேற்படிப்புக்காக வெளிநாடு செல்லும் வாய்ப்பு ஏற்படும்நல்ல நண்பர்கள் கிடைப்பர்.  அறிவு விருத்தியாகும்.உயர்பதவிகளில் உள்ளவர்களின் உதவிகள் கிடைக்கும்.  அதிர்ஷ்ட எண் – 7, நிறம் – ஆலிவ் பச்சை ஆகும்கஷ்ட நிவர்த்திகாகத் தினந்தோறும் கனக தாரா ஸ்தோத்திரம் படிப்பது நல்லதுமொத்தத்தில் கும்பராசி அன்பர்களுக்கு 65 சதவிகித நற்பலன்கள் ஏற்படும்,   

மீனம்

பூரட்டாதி – 4 ஆம் பாதம்உத்திரட்டாதி-1,2.3.4 பாதங்கள் , ரேவதி- 1,2,3,4 பாதங்கள்)
      ( இராசி  அறியாதவர்கள் பலன் அறிய – தீதுஶ்ரீதே,தோச்சசீ )

       மீன இராசி வாசகர்களே !

       இந்த ஆண்டு மனைவிமக்களுடன் வாழ்க்கை சந்தோஷமாகக் கழியும்பலவகையான வாகன சுகமும் ஏற்படும்.பணக்காரர்களின் சிநேகம் உண்டாகும்கீர்த்தி பெருகும்புதிய தொடர்புகள் மகிழ்ச்சி தரும்புத்தி சாதுர்யமும்அறிவுத் திறனும்அதிகமாகும்அரசு வேலை கிடைக்கலாம்வேலையில் உதவிபுரிய உதவியாளர்கள்  இருப்பர்ஆண் சந்ததி ஏற்படும்கால்நடைச்செல்வம் மற்றும் பால்வளம் பெருகும்பொன் பொருள் மற்றும் ஆடைஆபரணங்கள் கிடைக்கும்திருமணம்ஆகாதவர்களுக்குத் திருமணம் கைகூடும். தங்கள் பெற்றோர்களின் ஆரோக்கியத்தில் அக்கறை ஏடுத்துக் கொள்ளுங்கள்ஓரளவு பணவரவுகள் திருப்திகரமானதாக இருக்கும்வெளிநாட்டு வியாபாரத்தை அபிவிருத்தி செய்ய நல்ல காலம் இதுமனைவி,மக்களுடன் வாழ்க்கை சந்தோஷமாகக் கழியும்பலவகையான வாகன சுகமும் ஏற்படும்புதிய தொடர்புகள் மகிழ்ச்சி தரும்புத்திசாதுர்யமும்அறிவுத் திறனும் அதிகமாகும்காதல் விவகாரங்களில் விரும்பத்தகாத பிரச்சனைகள் எழலாம்அரசு வேலைகிடைக்கலாம்வேலையில் உதவி புரிய உதவியாளர்கள்  இருப்பர்கல்வியோஎதிர்காலத்திய வாழ்க்கையையோ மேம்படச் செய்ய விரும்பினால் மனம் தளராமல் எல்லா முயற்சிகளையும் செய்யுங்கள்முயற்சி வெற்றி தரும் என்பதற்கு இது ஒருஎடுத்துக்காட்டான ஆண்டாகும்முன்பின் தெரியாத நபர்களிடம் வம்புக்குப் போவதோஅவர்களிடம் விரோதம் கொள்வதோநல்லதல்லபுத்திரர்களைப் பொறுத்த மட்டில் சிறப்பான ஆண்டாக இருக்கும்மனைவியிடம் சிறு குறைகள் இருந்தாலும் பெரிதுபடுத்தாமல் இருப்பது அவசியம்உங்களது அதிர்ஷ்ட எண் – 4. நிறம் – தபால் பெட்டிச் சிவப்பு ஆகும்சகல கஷ்டங்களும் தீரசிவானந்த லஹிரி ஸ்தோத்திரம் படிப்பது நல்லதுமொத்தத்தில் மீனராசி அன்பர்களுக்கு 70 சதவிகித நற்பலன்கள் ஏற்படும்.

No comments:

Post a Comment