Search This Blog

Friday 26 May 2017


தென் மேற்குப் பருவ மழை.



       இந்த ஆண்டு தென் மேற்குப் பருவமழை சமுத்திரக் கரைகளான கேரள மேற்குக் கடற்கரைப் பகுதிகளை அடையத் தாமதமாகும். கோசரச் செவ்வாய் ரோகிணி நட்சத்திரத்திலும், வக்ரச் சனி நெருப்பு இராசியான தனுசுவிலும் இருப்பதே இதற்கான காரணங்களாகும்.
       வராகிமிஹிரர் தனது பிரஹத் சம்கிதாவில் குறிப்பிடுவதாவது -  சூரியனின் ரிஷப இராசிப் பிரவேசம் வசந்த காலப் பயிர் விளைச்சலுக்கான அறிகுறிகளைக் காட்டுகின்றன. அக் காலத்தில் சூரியனுக்கும், இலக்னத்திற்கும் கேந்திரங்களில் அசுபக் கிரகங்களின் தொடர்பு, போதுமான அளவு மழைப் பொழிவு இல்லாத காரணத்தினால் பயிர் அழிவைக் குறிகாட்டும் என்றும் குறிப்பிடுகிறார்.
        சூரியன் செவ்வாயுடன் இணைவதுடன், இராகு கேதுக்களும் சதுர பார்வை புரிகின்றன. ஆயினும், சூரியன் மீதான குருவின் பார்வை சிறிது கருணை காட்டலாம். புதன் கேந்திரத்தில் இருப்பது அறுவடை சுமாராக இருக்கும் என்பதைக் குறிகாட்டுகிறது. எனினும், கோசரச் செவ்வாய் ரோகிணி நட்சத்திரத்திலும், வக்ரச் சனி நெருப்பு இராசியான தனுசுவிலும் இருப்பதுவே மழைக் காலத்தைத் தாமதப்படுத்தும்.

சுக்
புத
சூரி
செவ்



சுக்
சந்
லக்,சூரி
புத,செவ்
கேது.
ரவி ரிஷப பிரவேசம்.
14/5/17, 22-57
டில்லி


ஆருத்ரா பிரவேசம்
22/6/17.
05-09, டில்லி

லக்//
இராகு

இராகு
சனி(வ)
சந்


குரு(வ)


சனி(வ)

குரு


        2017 ஜூன் மாதத்தில் எப்போதையும் விடக் குறைவான அளவே மழையை எதிர்பார்க்கலாம். மழை விரைவு வண்டி கேரளா, மஹாராஷ்டிரா, மத்திய பிரதேசம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களைத் தாமதமாகவே வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

        2017 ஜூலை பிற்பகுதியில், செவ்வாய் நீர் இராசியான கடகத்திற்கும், சனி மற்றுமொரு நீர் இராசியான விருச்சிகத்திற்கும் மாறும் போது நல்ல மழையை எதிர்பார்க்கலாம். பாரதத்தின் மத்தியப் பகுதியை கடகம் குறிகாட்டுவதால் அவ்விடங்களில் அளவுக்கு அதிகமான மழை பெய்ய வாய்ப்பு உண்டு. மத்தியப் பிரதேசத்திலும், சத்தீஷ்கரிலும் வெள்ள பாதிப்புகள் ஏற்படலாம்.

No comments:

Post a Comment