Search This Blog

Monday 29 January 2018

பாவத்தின் சம்பளம்.



பாபா ராம் ரஹீம்" செய்த பாவத்தின் சம்பளம்.
        இந்த வருடம் வழக்குகள் வருடம் ! 2017 ஆம் வருடம் பல முக்கிய புள்ளிகளின் மீது ஏகப்பட்ட வழக்குகள் போடப்பட்டு பரபரப்பான வழக்கு வருடமானது ஏன் ?
        அதில் மிகப் பெரிய வழக்கு 7 கோடிக்கும் மேல் ஆதரவாளர்களை / சிஷ்யர்களைக் கொண்ட கற்பழிப்பு வழக்கில் கைதான "பாபா குர்மீட் ராம் ரஹீம் சிங் "கின் வழக்காகும். அவருக்காக அவரின் அபிமானிகள் ஹரியான, பஞ்சாப் மாநில காவல் துறை மற்றும் அதிகாரவர்க்கத்தை எதிர்த்துப் போராடினர். அதன் காரணமாக இரு மாநிலங்களுமே ஸ்தம்பித்தன.  இந்த நாடகங்களை போட்டி போட்டுக் கொண்டு டி. வி. சானல்கள் ஒளிபரப்பினர். இதை உலகமே ஆவலோடு பார்த்தது.
        இதற்குக் காரணம் டெலிவிஷன் சேனல்களோ, அரசு அதிகாரிகளோ அல்ல. அப்போதைய கோசார கிரகங்கள் நடத்திய நாடகம் அன்றோ ?
        பாபாவின் ஆதரவாளர்கள் 144 தடை உத்திரவையும் மீறி ஹரியானாவில் உள்ள பஞ்சகூலா கிராமத்தில் உள்ள ஆசிரமத்தின் முன் கூடினர். பாபாவின் கார் 27 ஆகஸ்டு 2017 அன்று பகல் 13-31 மணிக்கு ஹரியானா மாநிலம், ரோத்தக்கில் உள்ள கோர்ட்டை அடைந்தது. பெரிய நீதிபதிகள் 9 பேரைக் கொண்ட சுப்ரீம் கோர்ட் பெஞ்ச் இந்த கற்பழிப்பு மற்றும் கொலை வழக்கை விசாரித்தது.
        அதற்கு முன், குர்மீட் ராம் ரஹீம் சிங்" கின் ஜனன ஜாதகத்தைப் பார்த்துவிட்டு கோசார நிலைகளைப் பார்ப்போமா நண்பர்களே !
         இராஜஸ்தான் மாநிலம் குருசர்-மோடியா என்ற இடத்தில் மகர் சிங் சித்து, நசீம் கவுர் தம்பதிகளின் மகனாகப் பிறந்த,குர்மீட் இராம் – இரஹீம் சிங்" சாமியாரின் பிறந்த நேரம் கிடைக்கவில்லை. பத்திரிக்கைகளில் வந்த பிறந்த தேதியைக் கொண்டு, 15 – 8 – 1967 தேதிக்கு ஜாதகம் கணித்து ஆராய்வோம். அவருடைய அங்க லட்சணங்களைக் கொண்டு அவரது இலக்னம் சிம்மமாகக் கருதப்படுகிறது. அவரது சிறுவயது மற்றும் தற்போதைய முகம், சிங்கத்தை ஒத்து உள்ளதைக் காணலாம். சிம்ம இலக்னம். இலக்னத்தில் புளுட்டோ, சக்தி மிக்கவராகவும், மற்றவர்களை கவரக்கூடிய தன்மை உடையவராகவும் ஆக்கியது. சுக்கிரன் தனது சுயசாரம் பெற்று புளுட்டோவுடன் இணைந்ததால் அழகுக்கு மயங்குபவராகவும், காம உணர்வு மிக்கவராகவும் ஆக்கியது.
        இவரது ஜாதகத்தில் நீர் இராசிகளான கடகம், விருச்சிகம், மீனம் ஆகியவை 4, 8, 12 என்ற மாய மந்திர, மறைபொருள் திரிகோணங்களாகி, கடகத்தில்(12)  சூரியன், குரு, புதனும், விருச்சிகத்தில் (4) சந்திரனும், மாந்தியும் மீனத்தில் (8) சனியும் இடம் பெற்றுள்ளன.  குருவுக்குத் திரிகோணத்தில் சந்திரன், பார்வை பெறுவதோடு இருவரையும் சனி திரிகோண பார்வை செய்கிறார். இதன் காரணமாகவே ஜாதகர் ஆன்மிக மத குருவாக நேர்ந்தது. 


சனி
இராகு



ராம் ரஹீம்
15 – 8 – 1967
காலை 08-17
குருசர்-மோடியா.
இராஜஸ்தான்.
சூரி,குரு
புத

லக்//யுரே,
புளூ,சுக்.

சந், மாந்
கேது,செவ்
நெப்



         1974 இல் கோசார குரு கும்பத்தில் இருந்து ஜனன ஜாதக பாக்கியாதிபதி செவ்வாயை பார்வை செய்ததால் தனது 7 ஆம் வயதில் அவர் மத சம்பந்தமான சேவைகளைத் துவக்கினார். அத்தருணத்தில் கோசார சனியும் மிதுனத்தில் இருந்து செவ்வாயை திரிகோண பார்வை செய்தது.
         1990 ஆம் வருடம், செப்டம்பர் திங்கள் 23ஆம் நாள் கோசார குரு மகரத்தில் இருந்து எதிர் பார்வையாக கடகத்தில் உள்ள ஜனன குருவையும், 12 இல் உள்ள இலக்னாதிபதி சூரியனையும் பார்த்த போது,  தனது 24 ஆம் வயதில் சன்யாச பட்டம் பெற்று தேரா சச்சா சவுதா" மதக் குழுவின் பீடம் பெற்றார். இவர் இந்த அமைப்பின் மூன்றாவது குரு ஆவார். 
         நீச சந்திரன், மாந்தியுடன் இணைந்துள்ளது. மத தருமத்துக்குக் காரணமான குரு கடகத்தில் இருந்து இவர்களைப் பார்க்கிறார். சந்திரன் தீயசக்திகளைக் குறிகாட்டுகிற புதனின் கேட்டை நட்சத்திரத்தில் இருப்பது அவரின் மனோபாவத்தைக் காட்டுகிறது.
         2002 ஆம் வருடம் இந்த ஆசிரமத்தின் பக்தையாக இருந்த சாத்வி என்ற பெண் அப்போதைய பிரதம தந்திரி. திரு. வாஜ்பேயி அவர்களுக்கு ராம் ரஹீமின் காம லீலைகளைப் பற்றி கடிதம் மூலமாகத் தெரிவித்தார். அப்போது கோசார சனி ரிஷப இராசியில் இருந்து எதிர் பார்வையில் விருச்சிகத்திலுள்ள ஜனன சந்திரனைப் பார்வை செய்ததோடு அல்லாமல் சதுர பார்வையாக இலக்னம், யுரேனஸ், புளூடோ மற்றும் சுக்கிரனையும் பார்வை செய்தது. அப்போது ஜாதகருக்கு சூரிய திசை, குரு புத்தி நடந்து கொண்டு இருந்தது. இரண்டுமே விரயபாவத்தில் இருப்பது குறிப்பிடத் தக்கது.
         2017 ஆகஸ்டு மாதம் 27 ஆம் நாள் சுமார் நண்பகல் 3 – 25 மணிக்கு ஹரியானா மாநிலத்தில் உள்ள நீயாதிபதி ஜக்தீப் சிங் அவர்களால் குர்மீட் ராம் ரஜீம் சிங் க்கு இரு பெண்களைக் கற்பழித்த வழக்கில், 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 30 லட்ச ரூபாய் தண்டத் தொகையும் தண்டனையாக வழங்கப்பட்டது. அப்போதைய சந்திரனும் அந்த நேரத்தில் விருச்சிகத்துக்குள் குருவின் விசாகம் 4 ஆம் பாதத்தில் நுழைந்தார். கோசார குரு ஆராய்தல் மற்றும் இக்கட்டான சூழ்நிலையைக் குறிக்கும் இராசியான கன்னியில் இருந்தார். மரணம், கர்மம் மற்றும தண்டனை தரும் நியாதிபதியான கோசார சனி விருச்சிகத்தில் இருந்தார். ஜனன சந்திரன், சிறையைக் குறிக்கும் பாவத்திற்கான 12 ஆம் பாவாதிபதி, மாந்தியுடன் இணைந்து விருச்சிகத்தில் உள்ளார். அவரின் சிறை தண்டனையை எவ்வளவு துல்லியமாக எடுத்துரைக்கிறது என்பதைக் கண்டோம்.
          சிம்ம இலக்னத்துக்கு எதிரியைக் குறிக்கும் 6 ஆம் இடத்து அதிபதி சனி முதல் தர மாரகர். ப்ஃராடுத் தனத்துக்கு உரிய  கோசார இராகு, ஆகஸ்டு 18, 2017 இல் கடகத்தில் நுழைந்தார். அது ஜனன ஜாதகத்தின் 12 ஆம் இடம் சிறையைக் குறிக்கிறது. அத்துடன் சந்திர கிரகணம் ஆகஸ்டு, 7 ஆம் நாள் 2017 இல் 6 ஆம் இடமான மகரத்தில் நிகழ்ந்ததை நாம் அறிவோம். அது 12 ஆம் இடம் (சிறை) அவமானம், புகழ் இழப்பு ஆகியவற்றையும் தந்தது. இலக்னாதிபதியான சூரியனையும் இராகு தீண்டினார்.
         அவருக்கு செவ்வாய் திசை, சனி புக்தி, குரு அந்தரம் 24 ஆகஸ்டு 2017 வரை நடந்தது. அதற்கு அடுத்த நாளே அவர் குற்றம் சாட்டப்பட்டார். 2, 11 க்கு உரிய புதன் 12 இல் இருந்து தனது புக்தியில் அவரை சிறைக்கு அனுப்பியது. புதன் தசை 22 பிப்ரவரி 2021 வரை உள்ளது. அவர் எந்த விதத்திலாவது வெளியே வந்து, திரும்பவும் சிறை செல்வார். அடுத்து வரும் 18 வருட இராகு தசாவில், இராகு தர்ம பாவத்தில் உள்ளதால்  அவரை சிறையிலேயே வைக்கும். சிம்மத்தில் இணைந்துள்ள  புளூட்டோவும், யுரேனஸ்ஸும் எதாவது ஒரு விதத்தில்  ஜாதகரின் வாழ்க்கையில் மாற்றத்திற்குக் காரணம் ஆகிறது. எனவே, ராம் ரஹீமின் ஜாதகத்தில் இலக்னத்தில் உள்ள புளூட்டோ அவர் வாழ்க்கையையே புரட்டிப் போட்டுவிட்டது.  
         இனி, முதலில் குறிப்பிட்ட விவரங்களைப் பார்ப்போம்.
ஆகஸ்டு 2017 கோர்ட் வழக்குகளினால் உணர்ச்சி மயமான மாதமானது ஏன் ?
       முதலில் 22 ஆகஸ்டு 2017 அன்றைய அமாவாசை நாளுக்கான ஜாதகக் கட்டத்தைப் பார்ப்போம்.
        இந்த குர்மீட் ராம் ரஹீம் சிங்" கின் வழக்கில் நீதி வழங்கியவர் 5 வருட பணி அனுபவமே கொண்ட நீதிபதி ஜக்தீப் சிங் ஆவார். இந்த வழக்கு சி. பீ. ஐ கோர்ட் நடந்தது.



லக்//

கேது
22 ஆகஸ்டு 2017
அமாவாசை
00-00
டெல்லி
சுக்,செவ்

புத(வ),சூரி
சந்,இராகு

சனி(வ)

குரு

        இந்த கோசார ஜாதகத்தில் காமத்துக்குப் பெயர்போன 6 மற்றும் 7 ஆம் அதிபதிகளான சுக்கிரன் மற்றும் செவ்வாய்   இணைந்து கற்பழிப்புக் குற்றத்துக்காக, நியாயத்துக்கு உரிய தர்ம ஸ்தானமான 9 ஆம் இடத்தை சனி குரு ஆகிய கிரகங்கள் பார்வை செய்தது காமச் சாமியாருக்கு கடுமையான தண்டனையை வழங்கியது.
சனி(வ)
ராகு
லக்//
சூரி,சந்


சுக்
சனி(வ)

லக்//
செவ்
  

நவாம்சம்
சுக்
கே


தசாம்சம்


குரு
புத(வ)
குரு
ராகு


கேது

புத(வ)
செவ்

சூரி,சந்

        நவாம்சத்தில் 7 ஆம் அதிபதி செவ்வாய் 10 ஆம் வீட்டில் இருந்து 8 அதிபதி குருவால் பார்க்கப்படுகிறார். இது காம விவகாரத்தால் ஏற்படும் அவமானத்தைக் குறிக்கிறது.
        தசாம்சத்தில் 7 ஆம் அதிபதி குரு 8 இல் உள்ளார். அவர் நீச சனியால் பார்க்கப்படுகிறார். 8 ஆம் அதிபதி  மீண்டும் கற்பழிப்பு வழக்கையை குறிகாட்டுகிறார்.
        கற்பழிப்புக் குற்றம் ஜாமீனில் வெளிவர முடியாத குற்றம் என்று  தெரிந்தும் டீவி சேனல்காரர்கள் செய்தியை பெரிதாக்க வேண்டும் என்பதற்காக சாமியாருக்கு ஜெயிலா ? பெயிலா ? – என ஒளிபரப்பினர். பிரச்சனைகளுக்குப் பயந்து பலங்குறைந்த, பாதிக்கப்பட்ட பெண்கள் மீடியாவுக்குத் தங்கள் முகத்தை வெளிக்காட்டாது இருந்தனர். 
        அன்று மாலை 3 மணிக்கு தனுசு இலக்னம் 8 இல் செவ்வாய், சுக்கிரன் இருந்த நிலையில் ராம் ரஹிமின் குற்றம் உறுதிப்படுத்தப்பட்டு தண்டனை வழங்கப்பட்டது. இந்த கிரக நிலைகள் காரணமாக ஆகஸ்டு 2017 கோர்ட் வழக்குகளுக்குப் பேர் போனதாயிற்று. மும்முறை தலாக் பற்றிய வழக்கும் இம்மாதமே நடந்தது.
        எனவே, ராம் ரஹிமின் ஜனன ஜாதகம் மற்றும் வழக்கு நடந்த அன்றைய கோசாரநிலை ஆகியவற்றை காணும் போது அவருக்கு நேர்ந்த கதிக்குக் காரணமான கிரகங்கள் தந்த தண்டனை என்பது உறுதியாகிறதல்லவா ?. முக்கியமாக சிம்மத்தில் புளூட்டோ இருப்பது ராம் ரஹீமின் வாழ்க்கையில் பாதிப்பைத் தந்தது எனலாம்.


No comments:

Post a Comment