Search This Blog

Saturday 28 May 2022

திருமணம் – சொர்க்கமா? நரகமா? – கிரகங்களின் கையில்…….!

 




திருமணம் – சொர்க்கமா? நரகமா? – கிரகங்களின் கையில்…….!

         திருமணம் சொர்க்கத்தில் நிச்சியக்கப்படுகின்றன? அது சொர்க்கமாகுமா?

நரகமாகுமா ? - என்பதை கிரகங்கள் தீர்மானிக்கின்றன. இருமனம் இணைந்தால் திருமணம்.

அதில் இளசுகளுக்கு ஓர் எதிர்பார்ப்பு எழுகிறது. பெண்ணுக்கு வரும் கணவன் நல்லவனா?

அழகனா? அடங்குவானா? அனுசரித்துச் செல்வானா? ரெமோவா அல்லது அம்பியா என்று

ஏகப்பட்ட வினாக்கள் எழும். அதேபோல் ஆடவருக்கும் பல கனவுகள் இருக்கும்.

மணவாழ்வில் மகிழ்ச்சி இருக்குமா? சுகம் தருமா என்று பல கேள்விகள் எழத்தானே

செய்யும். 

         நாம் ஒன்று நினைக்க, நடப்பது வேறொன்றாக அன்றோ அமைந்து விடுகிறது.

சிலருக்குப் படித்த, பண்புள்ள மனைவியும், சிலருக்கு அடங்காப் பிடாரியாக,

மாற்றுத் திறனாளியாக, சோரம் போனவளாக, சுகம் தர முடியாதவளாக அமைந்து

உண்டு. சிலருக்கு தாமத திருமணம், துணையிழந்து பின் மறுமணம் புரிதல், சிலருக்குப்

பல தாரங்கள் அமைதல் திருமண யோகமே இல்லாமை, இல்லற சுகம் அடைவதில்

சிக்கல்கள் என அனைத்து நிலைகளுக்கும் தீர்வு காண நாம் ஆராய வேண்டிய இடம்

பாவமெனும் ஏழாம் பாவம் தானே?

        களத்திர பாவத்திலுள்ள கிரகங்கள், பாவாதிபதியுடன் சேர்ந்த, பார்த்த கிரகங்கள்,

பாவத்தை பார்க்கும் கிரகங்கள், காரகன் சுக்கிரன் ஆகியவற்றின் தன்மைகள் நாம்

இந்த பாவத்தை ஆய்வு செய்ய உதவுகின்றன.       

        இதன் விளக்கத்தைக் காண்போமா? நண்பர்களே! களத்திரபாவமான 7 ஆம் இடத்தில்

சந்திரன் இருக்கப் பிறந்தவர்கள் சாந்தமானவராகவும், அழகுள்ளவராகவும், வனிதையருக்கு

வசப்பட்டவராகவும் விளங்குவர். இதுவே, சூரியன் 7 இல் உள்ளவர்கள் கர்வம்  மிக்க,

சினம் மிக்க துணையை வெறுப்புடன் நடத்துபவராகவும் விளங்குவர். செவ்வாய் 7 இல்

இருக்க ஜாதகர் மனைவியைப் பிரிவதோ, இழப்பதோ நிகழும். 7 ஆம் பாவத்தில் அமர்ந்த

செவ்வாயை சனி மட்டும்(சுப பார்வையின்றி) பார்க்க மனைவி மரணிப்பாள்.

புதன் களத்திர பாவத்தில் இருக்க ஜாதகர் அங்ககீனராகவும், கலைகளில் தேர்ச்சி

உடையவராகவும், தொழில், வணிகம் ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்றவராகவும்

திகழ்வார்.

         ஏழில் அந்தணன் எனும் குரு இருக்கப் பெற்றவர்கள், தன் தந்தையைக்

காட்டிலும் எல்லாவிதத்திலும் சிறந்தவராகவும், புத்திமானாகவும், குணமுள்ள

மனைவியை உடையவராகவும் இருப்பார். எனினும், குரு இருக்கும் இடத்தைவிட

பார்க்கும் இடமே சிறப்பதால், வாழ்க்கை சுமாராகவே இருக்கும். களத்திரகாரகன்

சுக்கிரன் 7 இல் இருக்கப் பிறந்தவர்கள் அழகானவராகவும், பணக்காரராகவும், பல

பெண்களை நேசிப்பவராகவும்,  திகழ்வார். சனி இருக்க, அந்த ஜாதகர் மனைவி மூலம்

நோய்களைப் பெற்று பாதிப்படைவார், நிழல் கிரகங்களான இராகு அல்லது கேது இருக்கப்

பெற்றவர்கள் தன்னைவிட கீழான நிலையில் உள்ள மங்கையை மணப்பார்.

         சிலர் இல்லாளை இழந்து இன்னலுறுவர். சிலருக்கு மறுதாரம் அமைவதில்

தாமதம் ஏற்படலாம். உதாரணமாக, 7 ஆம் இடம் மகரமாகி, அதில் அந்தணனாகிய

தேவகுரு அமர்ந்து இருக்க அவரின் மனைவி மண்ணுலகம் விட்டு விண்ணுலகம்

அடைவாள். 5 ஆம் பாவாதிபதி, களத்திர பாவமெனும் 7 இல் இருந்தாலும் மனையாள்

மரணித்து மனத்துயரங்கள் பல அடைவார். அட்டமாதிபதி, களத்திர பாவம் ஏறினால்

ஜாதகர் இல்லற சுகம் அனுபவிக்க முடியாதவராகவும், மனைவியை இழப்பவராகவும்

இருப்பார். 

         மிதுனம் 7 ஆம் இடமாகி அங்கே, சனி, சூரியன் இணைவு பெற ஜாதகர்

மனைவியை இழப்பவராகவோ அல்லது புத்திரபாக்கியம் இல்லாதவராகவோ இருப்பார்.

கன்னி 7 ஆம் இடமாகி அதில் குருவும், சதுர்த்த கேந்திரமாகிய 4 ஆம் வீட்டில் பாபர்

இருக்க மணாளனின் மனைவி மரிப்பாள். 7 ஆம் இடம் மீனமாகி அதில் சூரியன் இருந்தால்

ஜாதகர் சக்தியற்றவராக இருப்பதோடு இல்லாளையும் இழப்பார்.  மேற் சொல்லப்பட்ட

பாவக் கிரகங்கள் தங்கள் சொந்த வீட்டிலோ, உச்ச வீட்டினிலோ இருப்பின் மனைவிக்கு

எவ்வித பாதிப்பும் ஏற்படாது.

          சுக்கிரன், செவ்வாயின் நவாம்சம் அல்லது தனது சுய வீடுகளான மேஷம்,

விருச்சிகத்தில்  இருந்து சுக்கிரன்,  செவ்வாயுடன் இணைந்து இருந்தாலும், பார்த்தாலும்

ஜாதகர் பிறர் மனையாளுடன் சேர விருப்பம் உடையவராக இருப்பார். சுக்கிரன் 7 ஆம்

இடத்தில் இருந்தாலும் பிறன் மனை நோக்கும் குணம் உடையவராக இருப்பார்.

         ஜன்ம இலக்கினமோ அல்லது சந்திரா இலக்கினமோ எது பலமானதோ அதற்கு

7 ஆம் பாவத்தை எடுத்துக் கொண்டு பலன் உரைப்பதே சிறப்பு. 7 ஆம் பாவத்தில் அசுபக்

கிரகங்கள் அமர ஜாதகர் மனைவியை இழப்பார். 7 ஆம் பாவத்தில் சந்திரன், சூரியன்,

செவ்வாய் இவர்கள் இருந்தால் ஜாதகர் மறுமணம் செய்து கொள்வார். பொதுவாக,

இல்லாளை இழந்து இன்னுமொரு திருமணம் செய்து கொள்பவர்கள் ஜாதகத்தில்

தாரதோஷமோ, பெண் சாபமோ இருக்கும். இதன் காரணமாகவே, இளமையிலேயே

மனைவியை இழந்து மறுதாரம் அமைய காலதாமதம் ஏற்படும். உரிய நிவாரணங்களாக

தோஷ, சாப நிவர்த்தி ஹோமம் செய்து ரட்ஷை ஏற்பது, மாங்கல்ய பிராப்த யந்திரப்

பிரதிஷ்டை போன்றவற்றின் மூலம் நிவாரணம் பெறலாம். 

          7 ஆம் பாவத்தை சுப கிரகங்கள் பார்த்தால் ஜாதகர் நல்ல மனையாளை

அடைவார். சிலருக்கு திருமணம் தாமதம் ஆகலாம். மறு மணமும் ஏற்படலாம்.

ஆனால், இரண்டாம் திருமணமே தாமதப்படும். முன்பே, கூறப்பட்டது போல் ஜாதகத்தில்

அமைந்துள்ள தார தோஷமோ அல்லது முற்பிறவியில் ஏற்பட்ட சாபமோ காரணமாக

இருக்கும். உரிய பரிகாரத்திற்குப் பிறகு திருமணம் உறுதியாக நடக்கும். 

         ஏழாம் அதிபதி அல்லது களத்திர காரகன் உச்சம், வக்கிரம் பெற்றாலும்

அல்லது இலக்ன கேந்திரங்களில் இருந்தாலும் ஜாதகன் மிக்க பலமுடையவனாகி,

ஒன்றிக்கு மேற்பட்ட மனைவிகளை உடைத்தாய் இருப்பான். அதேபோல், 7 ஆம் அதிபதி

உபய இராசியிலோ அல்லது அதன் நவாம்ச இராசியிலோ இருந்தால் ஜாதகர் இருதார

யோகம் உடையவராவார்.

         7 ஆம் பாவம் உச்ச இராசியாக அமையப் பெற்றால், மனைவி மூலம்  திரண்ட

செல்வத்துடனும், நிலபுலன், வீடு, வண்டி வாகனம் போன்றவற்றுடன் ஜாதகருக்கு

சுகபோக சுப வாழ்க்கை அமையும்.  7 ஆம் வீடு, அதன் அதிபதி, களத்திரகாரகன்,

சுக்கிரனுக்கு இடம் கொடுத்தவன் இவைகளின் அமைப்பு குறிப்பாக உச்ச இராசியிலோ,

ஆட்சி வீட்டிலோ, மூலதிரிகோண வீட்டிலோ அல்லது வர்க்கோத்தம நிலை அடையுமாயின்

அல்லது சுப கிரக இணைவு, பார்வை பெறுமாயின் மற்றும் 1, 2, 4, 5, 7, 9, 10, 11 ஆகிய

பாவங்களில் இவ்விணைவு ஏற்படுமாயின் ஜாதகருக்கு சகல சௌபாக்கியங்களும்,

செல்வங்களும், நீண்ட ஆயூளும் கூடிய களத்திரம் ஏற்படும்.   

         தோஷமோ, சாபமோ உடையவர்களுக்கு ஜோதிட சாஸ்திரம் ஒரு வரப்பிரசாதம்

ஆகிறது. ஜாதகங்களை நன்கு ஆராய்ந்து தோஷ, சாபங்களுக்குத் தக்கவாறு உரிய

நிவாரணம் அல்லது பரிகார முறைகளை விளக்கி ஜாதகர்களின் துன்பங்கள் நீங்கி

இன்பங்காண நல் வழிகாட்டி ஆகிறது ஜோதிடம் என்றால் மிகையாகாது.

No comments:

Post a Comment