Search This Blog

Monday, 10 February 2014

இராமபிரான்




ஶ்ரீ ராகவேந்ராய நமஹ
    கோசலைராமன், தசரதராமன், சீத்தாராமன், அயோத்திராமன் நமது     ஶ்ரீ ராமச்சந்திர மூர்த்தியின் ஜாதகத்தில் 5 கிரகங்கள் உச்சநிலை பெற்று, ஒரு இராஜயோக ஜாதகத்திற்கு உதாரணமாக பன்னெடுங்காலமாகத் திகழ்கிறது.
    ஆனால், உண்மையில் நடந்தது என்ன ? இந்த கிரகங்கள் ஶ்ரீ இராமபிரானின் வாழ்க்கையில், அவருக்கு அளித்ததென்னவோ துன்பங்களும், பின்னடைவுந்தானே ? இனி எந்த கிரக அமைப்பு, எங்ஙனம் அவருக்கு இன்னல்களைத் தந்தது என்பதைப் பார்ப்போமா ?
    கடக லக்னத்தில் உச்சமான குரு, அவருக்கு மிகவும் சக்திமிக்க, இராட்சதர்களின் எதிர்ப்பினைக் கொடுத்தது. இளமையிலேயே  தனது குரு விஸ்வாமித்ரரோடு கானகம் சென்று, அவரின் யாகசாலைகளை காக்க முற்பட்ட போது மாரீசி போன்ற அரக்க குலத்தவரை எதிர்த்துப் போராடி அழிக்க வேண்டியதாயிற்று. அது தவிர, மாரீசன், ஹரா, துர்சாஸனா மற்றும் மிகப் பெரிய, வீரம் மிக்க படைவீர்ர்களைக் கொண்ட இராவண சேனையையும், எதிர் கொண்டு போராட வேண்டியதாயிற்று.
    இதே, உச்ச குரு, இலக்னாதிபதியான சந்திரனுடன் இணைந்ததால், பாசம் மிக்க, பிரபுத்துவம் மிக்க மற்றும் அவரை உயிருக்குயிராய் நேசித்த தந்தை தசரதனைத் தந்தது, பாக்கிய ஸ்தானாதிபதி குரு இலக்னத்தில் இருப்பது இராமருக்கு தர்மம் தவறாத நிலையையும், எதையும் எது சரி ? எது தவறு ? – என சீர்தூக்கிப் பார்க்கும் புத்திசாலித்தனத்தையும் தந்ததோடல்லாமல், மிகவும் துக்ககரமான சூழலில், அவர் தந்தையைவிட்டுப் பிரியும் நிலையும் ஏற்பட்டது.
    சுக்கிரனின் மூலதிரிகோண வீடான துலாம், 4 ஆம் இடமாகி, அங்கு உச்சம் பெறும் சனி, இராமபிரானெனும் ஈடுஇணையற்ற, மஹாபுருஷனுக்கு மிகவும் பொருத்தமான, அழகான, எவருடனும் ஒப்புநோக்க முடியாத ஜனக மஹாராஜனால், அவனது பிரம்மாண்டமான அரண்மணையில் வளர்க்கப்பட்ட, அழகு தெய்வம், சீதாப்பிராட்டியை பட்டத்துராணியாகக் கொண்டுவந்தது.
    ஆனால், சுகஸ்தானமும், மகிழ்ச்சியான மணவாழ்க்கைக்கு உரிய இடமான 4 ஆம் இடத்தில், அமர்ந்த, 8 ஆம் அதிபதியும், அசுபருமான சனி, அவரை ஒருபோதும், குடும்ப சுகத்தை அனுபவிக்க, அனுமதிக்கவில்லை என்பதுதானே உண்மை ? ஏனெனில், பல காலம், பத்தினித் தெய்வம் சீதா பகைவர்களின் இருப்பிடமான, அரக்கர்கள் நிறைந்த அடர்ந்த வனாந்திரத்தில், தனது தனிமை வாழ்க்கையைக் கழிக்க வேண்டியதாயிற்று.
    இராவண வதத்திற்குப் பிறகு, இராமன், சில காலமே தனது மணவாழ்வின் மகிழ்ச்சியை, அனைத்து சுகங்களை, அமைதியாகக் கொண்டாடிய போது, கொடுமையான விதியின் விளையாட்டால், மீண்டும் தன் மனையாளைப் பிரிய வேண்டியதாயிற்று.
    முதல் முறை, இராமனைவிட்டு, இராவணனால் பிரிக்கப்பட்ட சீதை, இரண்டாவது முறையாக, அவமானத்தின் நிழல் கூட இராஜவம்சத்தின் மீது விழக்கூடாது என்ற நல்லெண்ணத்திலும், அரச தர்மத்தைக் காக்க வேண்டும் என்ற எண்ணத்திலும் இராமனே, அவளைக் கானகத்திற்கு அனுப்பிவைத்தான். இதன் மூலமாகவே, இராமனின் அரச கடமை தவறாத மற்றும் மக்களின் எண்ணங்களுக்கும், கருத்துக்களுக்கும் மதிப்பளிக்கிற தலையாய குணமும் இங்கு நிலைநாட்டப்பட்டது.
    இதேபோன்று, 5 மற்றும் 10 ஆம் அதிபதியான செவ்வாய். திருமணத்தைக் குறிக்கும் 7 ஆம் பாவத்தில் அமர்ந்தது, தனது செயலில் வெற்றிகண்டு, இந்த ஆதர்ச தம்பதிகளைப் பிரித்ததின் மூலமாகவும், அவர்களின் காதல் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்ததின் மூலமாகவும், தான் ஒரு  ‘ பிரிவினைக் கிரகம்’  என்ற பெயரை ஆணித்தரமாக நிலைநாட்டிக் கொண்டது,
    கடைசியாக, சீத்தாபிராட்டியை, இராமபிரான் வால்மீகியின் ஆசிரமத்தில் சந்தித்தபோது, சீதாதேவி மிகவும் பொறுமையிழந்து, ஜனக மஹாராஜன், எந்த இடத்தில் அவளை முதன் முதலாகக் கண்டெடுத்து, பாராட்டிச் சீராட்டி வளர்த்தானோ, அந்த பூமியிலேயே, பூமாதேவியின் மடியிலேயே, தன் மானுட வாழ்க்கையைத் துறந்து, மண்ணோடு மண்ணாக பூமாதேவியுடன் சங்கமித்தாள்என்பதுதானே கதை.
    மேலும், 5 ஆம் அதிபதி செவ்வாய், இராமன் தனது இரட்டைக் குழந்தைகளான, லவ குசா இருவரையும், அவர்களின் வாலிபக் காலம்வரைகாணவும் அனுமதிக்கவில்லை, அதற்கும் ஆப்புவைத்தான் அங்காரகன். அதன் காரணமாக, அன்புத்தாயைப் பிரிந்த நிலையில், அவர்கள் இருவரையும் அயோத்திக்கு அழைத்து வரும் நிலை ஏற்பட்டது.
    மரியாதை புருஷனான இராம்பிரானின், புகழுக்குப் பங்கம் ஏற்படா வண்ணம், இராஜக் கிரகமான, பத்தாமிடத்தில் உச்சம் பெற்ற சூரியனால் காக்க முடிந்தது.
    ஶ்ரீ இராமபிரானின் ஜாதகத்தில், அநேக இராஜயோகங்கள் தென்படுவது போல், சில அரிஷ்ட யோகங்களும் உள்ளன.
    கேந்திர ஸ்தானத்தில் அசுபர் நிலைபெற்றது, சர்ப்ப யோகத்தைத் தந்தது.
    இலக்னாதிபதி சந்திரன், சனியால் பார்க்கப்படுவது ப்ரவராஜ்ய யோகத்தைத் தந்தது. இந்த நிலை அலைந்து திரியும் யோகத்தைத் தந்தது.
    எனவே, நண்பர்களே! ஆனானப்பட்ட பகவான் இராமனையே விட்டுவைக்காத கிரகங்கள், நம்மைப் போன்ற சாதாரண மனிதர்களின் வாழ்க்கையை மட்டும்  விட்டு வைக்குமா ? அவை தரும் கஷ்டங்களை எவராயினும் அனுபவித்துத்தானே ஆகவேண்டும். ? எனவே, கிரகங்கள்கடவுளோ, பக்தனோஅரசனோ, ஆண்டியோ  அல்லது மகத்தானவரோ, சாதாரணமானவரோ எவரையும் வேறுபடுத்திப் பார்க்காமல் இன்ப, துன்பங்களை அளிக்கிறதேயன்றி, ஓரவஞ்சனை செய்வதில்லை. இதை உணர்ந்து இன்பமாக வாழ்வோமாக !
     வாழ்க பாரதம், வாழிய பாரத மணித் திருநாடு ! வந்தேமாதரம்!

n  ஜோதிட கலாநிதி .எஸ். விஜயநரசிம்மன். எம். எஸ்ஸி ( அஸ்ட்ராலஜி )






16 சம்ஸ்காரக்கள்


ஓம் ஸ்ரீ ராகவேந்திராய நமஹII
    கிரகங்கள் மனிதனை, அவனவன் கர்மவினைக்குத் தக்க, ஆட்டிப் படைக்கின்றன. இவ்வுலகில் உன்னதமான பிறவி மனிதப் பிறவியேயாம். ஏனெனில், இவ்வுலகப் படைப்பில் பகுத்தறிவு என்பது மானிடப் பிறவிக்கு மட்டுமே உரித்தானது. தர்ம, அர்த்த, காமம், மோட்சம் வாயிலாக, ஒவ்வொரு ஆத்மாவும் பேரின்ப வீட்டை அடையும் முகமாக, நமது முன்னோர்களும், முனிவர்களும்  பல அரிய வேதசாத்திர நூல்களை, நமக்கு அளித்துள்ளனர். அத்தகைய நூல்களில், அதர்வண வேதம், சத்பத ப்ராம்ணா, மனு ஸ்மிருதி மற்றும் புராண இதிகாச நூல்கள் குறிப்பிடத் தக்கவையாகும். இவை அனைத்திலுமே, முக்கியமாக சமூகத் தேவைகள் மற்றும் திருமண விதிமுறைகள் குறிப்பிடப்பட்டுள்ளன.
    பேரின்ப வீட்டை அடைய பொருள், இன்பம் என்ற இரு கரைகளுக்குக் இடையே ஒடும், தர்மம் எனும் நீர்போக்கில் சென்று, மோட்சம் எனும் பெருவீட்டை அடையவேண்டும். சத்பத ப்ராம்ணாவில்  “ மனைவியும், குழந்தைகளுமின்றி ஒருவனின் வாழ்க்கை முழுமையடைவதில்லை “ எனக் குறிப்பிடப்படுகிறது. பண்டைய நூல்களில் பதினாறுவித ஸம்ஸ்காராக்களில் ( சோடஸ ) திருமணமும் ஒன்று. பராசரர் காலத்தில் (.கி. மு. 3000 ) திருமணகாலமே வாழ்க்கையின் மைய நிகழ்வாகக் கருதப்பட்டது. எல்லா நாகரீகங்களிலும் மனைவியைப் பாதுகாப்பது கணவனின் கடமையென்றும், மனைவி மதக் கடமைகளை சரிவரக் கடைப்பிடித்து நடக்கவேண்டும் என்றும் சொல்லப்படுகிறது. அப்படிப்பட்டவளே “ தர்மபத்தினி ” என அழைக்கப்படுகிறாள். முகூர்த்த நூல்களில் கூறப்பட்டுள்ள பதினாறு ஸம்ஸ்காரக்கள் எனும் நிகழ்வுகள் : -
1.       நிஷேகம் – முதலிரவு
2.       கர்பாதானம் – கருத்தரிப்பு
3.       பும்ஸவனம் – கருவுக்குப் பால்பிரிவு தருதல்
4.       சீமந்தம் – கருவுக்கு உயிர் அளித்தல்
5.       ஜாதககர்மா – தோஷம் நீக்குதல் ( குழந்தைக்கு )
6.       நாமகரணம் — பெயர் சூட்டுதல்
7.       தோளாரோகணம் – தொட்டில் இடல்
8.       அன்னப் பிரஸன்னம் – உணவு ஊட்டுதல்
9.       கர்ணவேதம் – காது குத்துதல்
10.   சௌளம் – முடியெடுத்தல்
11.   அசஷராப்பியாசம் – எழுத்தறிவித்தல்
12.   உபநயனம் – பூணூல் அணிவித்தல்
13.   விவாகம் – திருமணம் (பிரம்மச்சரியம், குடும்பவிரதம், கன்யாதானம், உத்தானம் (பாணிக்கிரகணம்) சப்தபதி (அம்மிமிதித்தல், அருந்தி பார்த்தல்)
14.   நித்தியகர்மா – அன்றாடக் கடமைகள்
15.   கிரஹஸ்தாஸ்ரமம் – இல்வாழ்க்கை நடமுறை, வானப்ரஸ்தம் – பற்றற்ற வாழ்வு.
16.   அபரக்கிரியைகள் – அந்திமக்கடன்கள் ஆகியவையாகும்.
திருமணத்தைப் பற்றி பேசும்போது 7 ஆம் இடம் மாய உலகைக் கோடிட்டுக் காட்டுகிறது. 7 ஆம் வீடு, எந்த ஒரு வீட்டிலிருந்தும் முடிவுறும் வீடாகிறது. உடல் இலக்னம் எனில் உடல் இணைவுறம் இடமென்று ஏழாம் இடத்தைக் கொள்ளலாம். எனவே திருமணத்தை 7 ஆம் வீட்டுடன் தொடர்புபடுத்தலாம் அல்லவா ? மேலும் 7 ஆம் வீடு காமத் தரி கோணத்தில் அமைகிறது. ஜாதக நிலைகளை ஆராய கீழ்க்கண்ட ஜாதகத்தை எடுத்துக்கொள்வோம். இது இராமகிருஷ்ண பரமஹம்சரின் ஜனன ஜாதகம் ஆகும்.
     இதில் களத்திரகாரகன் சுக்கிரன் 2 ஆம் பாவத்தில் உச்சநிலையில் உளளார்.( 7 ஆம் வீட்டுக்கு 8 ஆம் வீடு ). அவருக்கு இடங்கொடுத்த குரு  5 இல் வக்கிரமடைந்து, ஜாதகருக்கு இனியபேச்சு மற்றும் கவிதைத் திறனை அளித்து காதல் உணர்வுகளைக் குறைந்தார். சுக்கிரன் உணர்வுகளை அதிகரித்து, அவர் தன்னுடைய மனைவியைக் தேவியின் அவதாரமாகவும், புனித தாயாகவும் கருதவைத்தார்.
     காமத்திரிகோண வீடுகளில், இலக்னத்தில் சூரியன், 7 ஆம் வீடு கிரகமமின்றியும், 5 ஆம் வீட்டில் சாத்வீக குணமுடைய 11 ஆம் அதிபதி குரு அமர்ந்துள்ளார். குரு, 5 ஆம் அதிபதி புதனைப் பார்க்கிறார். 9 இல் உச்சச் சனி, வக்கிரமாகி உள்ளார். சனி இலக்னாதிபதியானதால், அவருடைய பக்தி மற்றும் ஞானமார்க்கத்தை பரைசாற்றுகிறது. மோட்ச ஸ்தானமான 12 ஆம் வீட்டில் 3 ஆம் அதிபதி செவ்வாய்  அமர்ந்து அவரை ஞானியாக்கியது.
சுக்

ராகு
குரு (வ)
லக்,
சூரி,சந், புத(வ)
ஸ்ரீராமகிருஷ்ணபரமஹம்சர்
18 – 2 – 1836 – 6 – 44 காலை
கமர்புகுர் – ஹூக்ளி.
மேற்குவங்காளம்


செவ்


கேது
சனி (வ)


    சுக்கிரன் மற்றும் சந்திரன் ஆகியவற்றின் பரஸ்பரத் தன்மைகள், புனித முனிவரின் உள்மனதைக் குறிகாட்டுகிறது. குருவின், பூரட்டாதி நட்சத்திரத்தில் உள்ள சந்திரன் கும்பத்தில் அமர்வு மற்றும் அதன் அதிபதி சனி உச்சமாகி தர்ம வீடான 9 இல் இருப்பது அவரின் ஞானசக்தியைக் குறிகாட்டுவதோடு, காமத்தை விட்ட நிலையையும் குறிகாட்டுகிறது.
    காலபருஷ தத்துவப்படி 7 ஆம் வீட்டுக்கு அதிபதியான சுக்கிரன், கான்டிகாரகனாகி காம உந்துதலில் சிக்கலைத் தருகிறார். 5 ஆம் வீடு ஆரூட லக்னமாகி அங்கு குரு அமர்ந்திருப்பது தர்மத்தைப் பரப்பப் பிறந்தவர் என்பதைக் குறிகாட்டுகிறது.
    கடகம் உபபதா இலக்னமாகி, அதற்கு 7 ஆம் இடத்தில் உச்சச் செவ்வாயின் அமர்வு, அவருடையை ஞானமார்க்கத்திற்கு அவரின் மனைவியும் உதவக் காரணமானது.
    ரிஷபம் தாரபதாவாகி, அதற்கு 7 இல் கேது அமர உடல் தொடர்பற்ற மணவாழ்க்கையைத் தந்தது.
    7 ஆம் அதிபதி இலக்னத்தில் இடம்பெற்றுள்ளது, சீக்கிர மற்றும் நிலையான திருமண வாழ்வைத் தந்தது. ஜாதகர் தனது 23 வது வயதில் 6 வயதுச் சிறுமி சாரதாவை மணந்தார்.
          இலக்னாதிபதி மற்றும் 7 ஆம் அதிபதிக்கு இடங்கொடுத்தவனுமான சனி பாக்கிய ஸ்தானத்தில் இருப்பது மணமான நிலையில், தூய்மையான ஞானியாகவும் இருக்கச் செய்தது. சந்திரன் மற்றும் சுக்கிரனின் 2 / 12 நிலை ஞானிக்கு உணர்வுகளைக் கட்டுப்படுத்தும் தன்மையைத் தந்தது.
    எனவே, நண்பர்களே ! எல்லா நாகரீகங்களிலும் மனைவியைப் பாதுகாப்பது கணவனின் கடமையென்றும், மனைவி மதக் கடமைகளை சரிவரக் கடைப்பிடித்து நடக்கவேண்டும் என்றும் சொல்லப்படதன்படி நடந்ததல்லவா ?
  
--- ஜோதிட கலாநிதி .சே. விஜயநரசிம்மன் . எம். .எஸ்ஸி .(அஸ்ட்ராலஜி)


Sunday, 9 February 2014



அம்மா என்றால் அன்பு

    ‘அம்மா என்றால் அன்புஎன அடிமைப்பெண்ணில் பாடிய அம்மா, இன்று தமிழ் நாட்டிற்கே அம்மா ஆனார். இனி இந்திய நாட்டின் தாய் ஆவாரா ? அவரது ஜாதகம் என்ன சொல்கிறதுஎனப் பார்ப்போமா?

    மாண்புமிகு முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா அவர்களின் ஜாதகம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 24 பிப்ரவரி 1948 அன்று பிற்பகல் 2 – 30 மணிக்கு கர்னாடக மாநிலம் மைசூரில் பிறந்தார்.

சுக்
இராகு

லக்//

லக்//
குரு
செவ்()
கேது
சந்

சூரி
புத()


      இராசி
சனி()
சனி()


     நவாம்சம்


செவ்()
சந்
சூரி
சுக்

குரு

கேது


இராகு
புத()


இருப்பு கேது தசா 3 6 மா 2 நாள்.

    பொதுவான பலன்கள்; மதிநுட்பம் உடையவர். உணர்வுபூர்வமான  பேச்சு, சொற்பொழிவுத் திறன், விஞ்ஞான மற்றும் தர்க்க எண்ணங்கள் ஆகியவையும் உடையவர். ஆராய்ச்சி மனப்பான்மை, சமூக பாரம்பரியம் காத்தல், பாட்டு, இசை, நடனம், கவிதை, கலை ஆகியவற்றில் ஆர்வமுடையவர். கம்பீரமான குரல், நல்ல உச்சரிப்பு, மக்களைக் கவரும் தன்மையுடையவர். படிப்பதிலும், எழுதுவதிலும் ஆர்வமுடையவர். பிறரை வேலை வாங்குவதில் வல்லவர்.

    சிம்மராசியில் பிறந்த இவர், அகன்ற முகமும், சிங்கத்தைப் போன்ற பயமற்ற மற்றும் சீரான அசைவுகளும் உடையவர். கம்பீரம், அழகிய உணர்வுகளை வெளிப்படுத்தும் கண்கள், காட்டு ராஜா சிங்கம் போன்ற அரசகுணம், திறந்த மனம், தயாளகுணம், உண்மையான மற்றும் தலைமைப்பண்பு உடையவர். சிறந்த அமைப்பாளர், கோபமுறும் போது எரிச்சலடைந்தாலும் மன்னித்து மறக்கும் குணம் உடையவர். சுதந்திரமானவர் ஆனால் முரட்டு குணமும் உடையவர். தைரியம் மிக்க கொள்கையுள்ள, மற்றவர்களுக்கு அடிபணியாத அல்லது மற்றவர்கள் ஆணையிடுவதை விரும்பாதவர். இலக்கை அடையும் குறிக்கோள், அர்ப்பணிப்பு உணர்வுடன்  எடுத்த காரியத்தை முடிப்பவர். சில நேரங்களில் சோம்பலும் உடையவர். திடீரென அனைத்து வேலைகளையும் கைவிட்டுவிட்டு அமைதியாக அமர்ந்துவிடுவார். எந்த சூழ் நிலையிலும் சந்தோஷமாகவே வாழ விரும்புவார். மதவுணர்வு, தர்மகுணம், கர்வம் மற்றும் சுயமரியாதையும் உடையவர்.

    இந்த இராசிக்காரர்களின் மாறுபட்ட குணங்கள்முரட்டுத்தனம், தற்புகழ்ச்சி, மற்றவர்களைக் கவரும் முயற்சி, எதற்கும் தன்னையே முன்னிலைப்படுத்தும் குணம், அனைவரையும் ஒன்றாக பாவிக்கும் தன்மையின்மை அதாவது ஓரவஞ்சனை செய்தல் ஆகும்.

    தவிர்க்க வேண்டிய குணங்கள் வீண்பேச்சு, மாறுபட்ட பேச்சு, ஒருவேலை முடியுமுன்னே, அடுத்த வேலையைத் தொடங்குதல், ஓரு நிலையற்ற மனம், எதற்கும் உடனடியாக ஒரு முடிவெடுக்காமை, பொறுமையின்மை, ஒரு விஷயத்தின் முடிவை உடனே அறியும் ஆர்வம் ஆகியவையாகும். பங்குனி மாதம், கிருஷ்ண பஞ்சமி, செவ்வாய்க் கிழமை, நண்பகல் நேரம், இவர்களுக்கு பாதிப்புத்தரும் காலம் அல்லது மனக்குழப்பம் தரும் காலமாகும்.

    மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், எதையும் மறைத்துப் பேசும் குணமற்றவர்கள்.. இவர்களை எளிதில் சமாதானப்படுத்திவிட முடியும், ஆக்ரமிப்பு குணம், பாசம்மிக்கவர், முணுக்கென்று கோபங்கொள்ளக்கூடியவர். உணர்ச்சி மிக்கவர். சுறுசுறுப்பு மிக்கவர். தன் வேலைகளைத் தானே செய்து கொள்ளக்கூடியவர். உயர்பதவி மற்றும் மிக உயர்ந்த நிலையடையும் ஆர்வம் மிக்கவர். சந்தோஷம் மிக்கவர். இரகசிய  வேலைகளில் ஈடுபடக்கூடியவர். அநேக வேலையாட்களை உடையவர். மற்றவர்களுக்காகப் பணிபுரியக்கூடியவர். திடீரெனத் தாக்குதல்களுக்கு உட்படக் கூடியவர். தனது முயற்சிகளிலும், முன்னேற்றங்களிலும் அடிக்கடி தடைகளைச் சந்திக்கக் கூடியவர்.

    சத்ரிய ஜாதியிற் பிறந்திருப்பதால், தைரியம் மிக்கவர். இரக்க குணம், தர்க்க குணம் உடையவர். வீர சாகசக் கதைகள் கேட்பதில் ஆர்வமுடையவர்.

    இராட்சஸ கணத்தில் பிறந்துள்ளபடியால், இவரைக் கண்டு பிறர் அஞ்சுவர். மற்றவர்களிடம் சண்டையிடுவர். மற்றவர்களிடம் மாறாத அன்பு பாரட்டக்கூடியவர்.

    இராசிகளில் கிரகங்கள் தரும் பலன்கள்
    பாக்கிய பாவத்தில் சூரியன் இருப்பதால், அழகிய முகம் மற்றும் அழகிய கூந்தலையுடையவர். தலைமைப் பதவிக்குத் தகுதியானவர். 9 இல் நிற்கும் சூரியன் ஒருவரை புகழ் மிக்கவராக ஆக்கும். சந்தோஷ வாழ்க்கையுடையவர். சமூகத்தில் உயர்ந்த நிலையை அடையக் கூடியவராதலால், அனைவராலும் வணங்கப் படக் கூடியவர். மத ஆர்வமும், பக்தி சிரத்தையும் உடையவர்.

   தைரிய பாவத்தில் சந்திரன், எப்போதும் மகிழ்ச்சியுடன் கூடிய மனநிலையைத் தரும். மென்மையான பேச்சையுடைவர் மற்றும் உலகத்தாரால் பெரிதும் மதிக்கப்படக் கூடியவர்.

   வீரிய பாவத்தில் செவ்வாய், வீரத்தைத் தருவார். மதசம்பந்தமான விழாக்களில் ஆர்வம் ஏற்படும். அரசாங்கத்தால் கெளரவப் படுத்தப்படுவார்.

   புதன் 9 இல் இருப்பதால் நற்குணமுடையவர், உண்மையானவர், மதப் பற்று உடையவர். தீர்த்த யாத்திரைகள் மற்றும் புனித பயணங்களில் ஆர்வமுடையவர். தெய்வத்தொண்டுகள் புரிபவராகவும் இருப்பார். அதிர்ஷ்டமுடையவர். தன் அறிவாலும், செல்வத்தாலும் தன்  குடும்பப் பெருமையை நிலைநாட்டக் கூடியவர். தனது புத்தி கூர்மையால் புகழை அடையக்கூடியவர். பல மொழிகளை மற்றும் கலைகளை அறிந்தவர்.

   குரு 7 இல் இருக்கத் தேன் போன்ற குரலையுடையவர். அனைவரையும் கவரக்கூடியவர். சொற்பொழிவுத் திறனுடையவர். நட்புடன் பழகக்கூடியவர். கலைகளில், கவிதைகளில், சாத்திரங்களில் மற்றும் ஜோதிடத்தில் ஆர்வமுடையவர். அரசனைப் போல் சந்தோஷமடைவர். மிக விரைவில் உயர்நிலை அடைவர். நல்ல ஆலோசகராக இருப்பர். கலைத் தொழிலில் ஈடுபடுவர். நல்ல நண்பர்களை உடையவர்கள். எதிரிகளை வெல்பவர்கள்.

   சுக்கிரன் 10 இல் இருக்க, இவரின் புகழ் உலகெங்கும் பரவும். நல்ல எண்ணமுடையவர். அதிக ஆடை ஆபரணங்களை உடைத்தாயிருப்பார். யாகங்கள் செய்தல், புனித நீராடல், தானதருமங்கள் செய்தல் ஆகியவற்றில் ஈடுபாடு அதிகமிருக்கும். பொதுச் சேவை மற்றும் தர்ம காரியங்களால் புகழடைவார். செல்வ மிகுதியும், அரசில் அதிகாரம் மிக்க பதவிகளை அடைவார். அனைத்துவகை உயர்ரக வாகனங்களை உடைத்தவராய் இருப்பார். கலைத்துறையில் பணிபுரிவார். காட்டில் அமைந்துள்ள, அனைத்து வசதிகளுடன் கூடிய மாளிகையில் வசிப்பார். மற்றவர் களின் நிழலில் வாழ்வதை விரும்பமாட்டார். திருமணமின்றி வாழ்வார். எல்லாவகையிலும் முன்னேற்றங் காண்பார்.

    சனி 2 இல் இருக்க பயணங்கள் அதிகம் செய்வார். அரசு கெளரவங்களைப் பெறுவார். இனிமையாகப் பேசியே, மற்றவர்கள் மூலமாகத் தனது வேலைகளை நிறைவேற்றிக் கொள்வார். தனது செல்வங்களைச் சரியான முறைகளில் முதலீடு செய்து பாதுகாத்துக் கொள்வார். மக்களுக்காக தனது செல்வங்களைச் செலவு செய்வார். அவர்களைத் தனது அன்பால் கட்டுப்படுத்துவார். பகைவர்களுக்கு அஞ்சமாட்டார். தங்கள் சொந்த இடத்தைவிட்டு, வெளியிடங்களில் அனுகூலமான பலன்களை அடைவார்.

    இராகு 11 இல் இருக்க, நீண்ட ஆயுளும், ஆரோக்கியமும் உண்டு. கடின உழைப்பு உடையவர். சமூகத்தில் மதிப்புமிக்கத்  தலைவராவார். அனைவரிடத்தும் நல்ல பெயரெடுப்பார். பிறந்த நாட்டுக்குப் புகழைச் சேர்ப்பார். அதிபுத்திசாலியான நண்பர்களைப் பெற்றிருப்பார். எதிலும் அதிக இலாபங்களைப் பெறுவார். சொற்பொழிவுத் திறன் மூலமாகப் பொருள் ஈட்டுவார். இவரது அனைத்து அபிலாஷைகளும் நிறைவேறும். வெற்றிகரமானவராக வாழ்வார். மந்திரங்கள் மற்றும் சாத்திரங்களைப் பற்றிய அறிவு மிக்கவராக இருப்பார்.

    கேதுவின் 5 ஆம் இட இருப்பு, புனித பயணங்களைத் தரும். மற்றவர்களுக்காகப் பாடுபடுவார். நல்ல ஆலோசனைகளை மற்றவர்களுக்கு வழங்குவார். வெளிநாட்டுப் பயணங்களை அதிகம் விரும்புவார்.
பாவாதிபதிகள், பாவங்களில் மாறிநின்ற பலன்கள் ---

   இலக்னாதிபதி, 9 இல் இடம்பெற, அதிர்ஷ்டசாலி, புகழ்பெற்றவர், தெய்வ பக்தி மிக்கவர். புத்திசாலி, ஞானிகளின் நட்பையுடையவர். இவர்களின் சேவைகளின் காரணமாக, உலகம் உள்ளவரை மக்களின் நினைவில் நிற்பர்.
   2 ஆம் பாவாதிபதி 3 இல் இருக்க, அறிவாளி, திறமைமிக்கவர்.
   3 ஆம் அதிபதி 9 இல் இருக்க, இவர் புகழை மக்கள் எக் காலத்தும் போற்றுவர்.
   4 ஆம் அதிபதி 9 இல் இருக்க, தங்களுக்கு வரும் இன்னல்களைத் தாங்களே, சுயமாகத் தீர்த்துக் கொள்ளும் திறமை மிக்கவர்கள். தனது கட்டளைகளுக்குப் பணிந்து நடக்கும் நபர்களை உடைத்தாயிருப்பார். தந்தை வழி நடப்பார். சுயமுயற்சியில் பொருள் சேர்ப்பார்.

    5 ஆம் அதிபதி 10  இல் இருக்க, அரச வாழ்க்கை வாழ்வார். புகழ் மிக்கவராய் இருப்பார். அரசு தொடர்பான பணிகள் அமையும். பல வழிகளில் நன்மையடைவார். தாயின் ஆசிகளைப் பெற்றவர். அரசியல் மூலமாக ஆதாயம் பெறுவார்.

    6 ஆம் அதிபதி 3 இல் இருக்க, கோபத்தால் சிவக்கும் கண்களையுடையவர். அதிகமாக உழைப்பவர். உறவுகளிடம் சுமுக உறவு இருக்காது. மற்றவர்களைச் சார்ந்தே இருப்பார். அரசியலில், வெற்றிக்கு பலம்மிக்க 3 மற்றும் 6 ஆம் இடங்கள் முக்கியமானது.

    7 ஆம் அதிபதி  7 இல் இருக்க, எதிர் பாலரால் ஏமாற்றம் ஏற்படலாம். பொறுமையற்றவராய் இருப்பார். இரகசியங்களைக் காக்க முடியாதவராய் இருப்பார். குருவானவர் கேதுவின் நட்சத்திரத்தில் இருப்பதால் திருமணம் ? குரு- சுக்கிரன் இணைவு மகாராணி யோகம் தரும்.
    8 ஆம் அதிபதி 2 இல் இருக்க, செலவு செய்த பணங்கள் திரும்ப வராது, சாஸ்திர ஞானம் அதிகமுடையவர், பல பயணங்கள் மூலமாகவே தனது பொருளாதார நிலையை மேம்படுத்திக்கொள்வார்.

    9 ஆம் அதிபதி 2 இல் இருக்க, தன் அதிர்ஷ்டத்தைப் பற்றிய எண்ணங்களை உடையவர். அமைதியை விரும்புபவர்.

    10 ஆம்  அதிபதி 7 இல் இருக்க, சுதந்திர எண்ணமுடையவர். வர்த்தகத் தொடர்புகள் உடையவர். கூட்டுச் சேர்ந்து வெற்றி பெறுவார். வழக்குகளைச் சந்திப்பார்.

    11 ஆம் அதிபதி 3 இல் இருக்க, அதிக நண்பர்களையுடையவர். சுயசார்பு உடையவர்.

    12 ஆம் அதிபதி 10 இல் இருக்க, விலை உயர்ந்த ஆபரணங்கள் உடையவர். மற்றவர்களுக்காகவே சேவை செய்பவர். அவர்களுக்காகவே வாழ்பவர். பிறரைப் பின் பற்றியே வாழ்வார்.


குரு மஹாதிசை பலன்கள்

    அதிகாரத்திலுள்ளவர்கள் தான் விரும்பிய கனிகளைப் பறிப்பர். யாகங்கள், வேதத்தைப் பற்றிய அறிவு, கடவுள் பக்தி, புராணங்கள் மற்றும் சாஸ்திர அறிவு ஆகியவற்றைப் பெறுவார். நல்லவர்கள், ஞானிகள் நட்பு பெருகும். மதிப்பு மரியாதை உயரும். தலைமைப் பதவி தேடிவரும். கடந்த காலம் மற்றும் எதிர் காலம் பற்றிய அறிவு பெருகும். அரசாட்சி கைக்கு வந்து சேரும். அனைத்து வசதிகளும் பெருகும். மக்களால் போற்றி வணங்கப்படும் நிலை உருவாகும். யாகங்கள் மற்றும் மங்கல நிகழ்வுகளில் பங்கு பெறுவதால் மகிழ்ச்சி பெருகும்.

    மக்கள் பணி புரிபவர்கள், தலைமைப் பதவியேற்கும் நிலை உருவாகும்அடிக்கடி வெளிநாடு செல்லும் நிலை ஏற்படும். தர்க்கங்களிலும், போட்டிகளிலும் வெற்றி கிட்டும். உயர் பதவிக்கான தேர்தல்களில் வெற்றி பெற்று, உயர் பதவிகளைப் பிடிக்கும் நிலை உருவாகும்.

குரு புத்தி கல்வித் துறை மூலமாகப் புகழ் மற்றும் உயர்நிலை ஏற்படும். அரசாள்பவரால் அனுகூலங்கள் கிடைக்கும். முன்னேற்றம், மதிப்பு, அதிர்ஷ்டம் யாவும் உயரும். அனைத்திலும் வெற்றி கிட்டும். அரசர்களுக்கெல்லாம் அரசராகத் திகழ்வார். சில இன்னல்களும் ஏற்படலாம். அதற்குப் பரிகாரமாக ருத்ர ஜபம் மற்றும் சிவ சகஸ்ரநாமமும் செய்யலாம்.

சுக்கிர அந்தரம் பல புதிய திறமைகள் உருவாகும். அதிக உழைப்பு ஏற்படும்.  (19-1- 2014).

சூரிய அந்தரம் – (27-2-2014 முடிய) அரசியல்  ஆதாயங்கள் ஏற்படும். செல்லும் இடமெல்லாம் அனைவராலும் மதிக்கப்படுவார்.
சந்திரன் அந்தரம் – (3-5-2014 முடிய) போட்டிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும்.
செவ்வாய் அந்தரம்ஆயுத பயம். எதிரிகளால் தொல்லைகள்.
யோகங்கள்

    அமலா யோகம்இலக்னத்திலிருந்து அல்லது சந்திரனிலிருந்து 10 ஆம் இடத்தில் சுபர் இருக்க, சந்திரனும், நட்சந்திரங்களும் வானத்தில் உள்ளவரை புகழ் நிலைத்திருக்கும். அரசால் கெளரவிக்கப்படுவார். பிறருக்கு உதவும் குணம் இருக்கும்

    பர்வத யோகம்கேந்திரத்தில் சுபர் இருக்க, 7 மற்றும் 8 ஆம் இடத்தில் கிரகமின்றியோ அல்லது சுபர் அமரவோ ஏற்படுகிறது. செல்வநிலை உயரும். தயாளகுணம், சாத்திர அறிவு, புகழ் ஏற்படும். தலைவர் ஆவார்.

    சூரியன்-புதன் இணைவுபிரபுத்துவம் மிக்கவர், மக்களுக்கும் மற்றும் அரசருக்கும் பிடித்தமானவர். சக்திமிக்கவர், கற்றறிந்தவர், அழகுடையவர்.

   சந்திரன்செவ்வாய் இணைவுவீரம் மிக்கவர்.
சந்திர யோகங்கள்

    அனபா யோகம்சூரியனைத் தவிர, சந்திரனுக்குப் 12 இல் வேறு கிரகங்கள் இருக்க ஏற்படுவதாகும். அரசராவார். கவர்ச்சி மற்றும் மகிழ்ச்சியுடையவர்.
சூரிய யோகம்

    வெசி யோகம்சூரியனுக்கு 2 இல், சந்திரனைத் தவிர மற்ற கிரகங்கள் இருக்க ஏற்படுவதாகும். உண்மையானவர், சந்தோஷம் மிக்கவர், நல்ல பார்வையுடையவர்.
இராஜ யோகங்கள்

    இலக்னம் அல்லது ஆத்ம காரகனின் இராசியிலிருந்து (சனி) 3 மற்றும்ஆம் இடத்தில் அசுபர் இருக்க ஜாதகி அரசராவார். கேந்திரத்தில் சுபர் இருக்க இராஜயோகம் ஏற்படுகிறது. ஆத்மகாரகன் சுபராசியில் இருக்க ஜாதகர் செல்வந்தராவார்.

     காரகாம்சத்திற்குக் கேந்திரத்தில் சுபர் இருக்க அரசராவார். (காரகாம்சம்கும்பம்).
இவ்வாறாக இன்னுமும் பல அரச யோகங்கள்  அம்மாவின் ஜாதகத்தில் உள்ளன. பஞ்ச மகாபுருஷ யோகங்களான ஹம்சயோகமும், மாளவிய யோகமும் அமைந்துள்ளன என்பதும் குறிப்பிடத் தக்கதாகும். எனவே பல வகைகளிலும் தலைமைப் பதவியேற்கும் யோகம் அம்மாவிற்கு உண்டு என்பது வெள்ளிடைமலையாகும். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 30 இடங்களைப் பிடித்தால் கூட தலைமைப் பதவியைக் கோரும் வலுவான நிலையை அடைவார் என்பது உறுதி. வாழ்க பாரதம்வாழிய பாரத மணித்திருநாடு!
   

 ஜோதிட கலாநிதி.எஸ். விஜயநரசிம்மன். எம். எஸ்ஸி.(அப்ளைடு அஸ்ட்ராலஜி).