Search This Blog

Thursday, 4 September 2014

ஜோதிட வாசல்- மாத இதழ்- செப்-2014 மாதபலன்.

ஜோதிட வாசல்- மாத இதழ்- செப்-2014 மாதபலன்.

(மேஷம்-ரிஷபம்-மிதுன இராசிகளுக்கான பலன்)
ஓம் ஶ்ரீ ராகவேந்திராய நமக.
செப்டம்பர் -- 2014 மாத ராசிபலன்;;;;
கேது




1-செப்டம்பர்2014
ஆவணி-16
திங்கள்



குரு
சுக்

சூரி



சந்
செவ்
சனி ()
புத
இராகு
                      







    
கிரக மாற்றங்கள்
செவ்வாய்விருச்சிகம்  – 2 – 9 – 2014.
சூரியன் கன்னி – 17 – 9 – 2014.
சுக்கிரன்சிம்மம் – 1 – 9 – 2014 ( இரவு - 10 மணி ) மற்றும் கன்னி 26 – 9 - 2014
சனிவக்ர நிவர்த்தி – 9 – 9 - 2014
மேஷம்
(அஸ்வினி-1, 2, 3, 4 பாதங்கள்பரணி-1, 2, 3, 4 பாதங்கள்கார்த்திகை-1,2,3,4 பாதங்கள்)
( இராசி  அறியாதவர்கள் பலன் அறிய - சு, சே, சொ, , லெ, லு, லே, லோ, )
         ஆசை, தைரியம், பிடிவாதம், சாமர்த்தியம் உடைய மேஷராசி வாசகர்களே!
      உங்கள் இராசிநாதன் செவ்வாய் நல்ஆரோக்கியத்தையும், மனமகிழ்ச்சியையும், பகைகளை வெல்லும் திறனையும்அளிக்க வல்லவன் அல்லன் அதுவே ருண பாவ புதனால். செல்வச் செழிப்பையும், முன்னேற்றங்களையும், சுகானுபவங்களையும் மற்றும் கௌரவத்தையும் தருகிறான். தாய் மாமனுக்கும் நன்மை ஏற்படும். சூரியனால் முற்பகுதியில், நண்பர்களால் தொல்லையும் பிற்பகுதியில் தன விருத்தியும் ஏற்படும். தொலைதூரப் பயணங்களால் நன்மை ஏற்படும். சிலருக்கு குருவால் மனநிம்மதி கெடலாம். சுக்கிரன் வெற்றிகரமான தொழில் முன்னேற்றங்களை அளிக்கும் நிலையில் இல்லை.   சனி பயணங்களைத் தருவார். அப்போது விபத்து பயம் ஏற்படும். எச்சரிக்கை தேவை. பல வகையிலும் செல்வத்தையும், வாழ்க்கையில் முன்னேற்றத்தையும், இராகு அளிக்கிறார், வியபாவ கேது, ஞான மார்க்கத்தில் ஆர்வத்தையும், ஆன்மிக சிந்தனைகளையும் அளிப்பார்.  பொதுவாக மேஷ இராசி அன்பர்களுக்கு 60 சதவிகித நற்பலன்கள் ஏற்படும்.
       குடும்பம் மற்றும் ஆரோக்கியம் ; பொருளாதார நிலைகள் சீராகி வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை ஓங்கி ஒருவருக்கொருவர் உதவிகரமாக இருப்பர். குழந்தைகளின் முன்னேற்றங் கண்டு வாழ்க்கையில் மனமகிழ்ச்சி அதிகரிக்கும். தெய்வப் பிரார்த்தனைகளால் வேண்டியது நிறைவேறும். நண்பர்களின் உதவி கிடைக்கும்.
       தொழில் மற்றும் வியாபாரம் ; புதிய திட்டங்கள், புதிய நுணுக்கங்களைக் கைக் கொண்டு வியாபாரத்தில் ஆதாயம் காணலாம். சிலருக்கு வங்கி சம்பந்தமான கடன் விவகாரங்களில் அனுகூலம் ஏற்படலாம். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். அரசுப் பணியாளர்களுக்கு ஆதாயம் பெருகும். உண்மையான உழைப்பே உயர்வுதரும். விவசாய விளைபொருட்களால் நல்ல ஆதாயம் கிட்டும். வருமானம் பெருகி மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும்.  
       பெண்கள் ;- திருமணமாகாத பெண்களுக்குத் திருமணம் நடக்கும். பணிபுரியும் பெண்கள் சுறுசுறுப்பாகப் பணியாற்றிட  உயர் அதிகாரிகளின் பாராட்டைப் பெறுவர்செலவுகளை குறைத்து சேமிப்பை உயர்த்த ஓளிமயமான வாழ்வு அமையும். சுயதொழில் புரியும் பெண்கள் தங்கள் தொழிலில் புதிய பரிமாணங்களை சுலபமாக எட்டுவர்.
    மாணவர்கள்;- மாணவ, மாணவிகள் பள்ளியில் படிக்கும் பாடங்களை வீட்டில் திரும்பத் திரும்பப் படித்து மனதில் பதியவைத்து, விளையாட்டுத்தனமாக இருக்காமல் கவனமாகப் படித்தால் மட்டுமே தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற இயலும்விளையாட்டுத் துறையில் ஆர்வமுள்ள மாணவர்கள் போட்டிகளில் வெற்றி பெற்று, பள்ளிக்குப் பெருமை சேர்ப்பர்.
    சந்திராஷ்டமம்;- ஜனன ஜாதகப்படி இராசிக்கு அட்டமத்தானத்தில் கோசாரச் சந்திரன் சஞ்சரிக்கும் காலமே சந்திராஷ்டம காலமாகும்இக் காலத்தில் சிக்கல்களும், சிரமங்களும் ஏற்படலாம். தங்களுக்கு இம் மாதம் சந்திராஷ்டம காலம் 1 – 9 –2014 காலை 09 – 02 மணி முதல், 03 – 9 – 2014 பகல் 1 – 55 மற்றும் 28 – 9 – 2014 மாலை 4 – 39 மணி முதல் 30- 9 - 2014 மணிவரையாகும். இக் காலங்களில் கவனமுடன் செயலாற்றுங்கள்.
    அதிர்ஷ்ட எண்கள்;- 1 மற்றும் 9 ஆகும். கவரும் எண்கள் 4 மற்றும் 8 ஆகும். சாதகமான எண்கள் 2, 3, 5 ஆகும். அனுகூலமற்ற எண்கள் 6 மற்றும் 7 ஆகும்.
    அதிர்ஷ்ட நிறம்;- சிகப்பு, மஞ்சள், செம்பு மற்றும் தங்க நிறமாகும் ஆகும். தவிர்க்க வேண்டிய நிறம் கருப்பு ஆகும்.
    அதிர்ஷ்டக் கற்கள்;- செம்பவழம் செம்பில் அல்லது வெள்ளியில் பதித்து வியாழக் கிழமையன்று, பூஜைக்குப் பிறகு வலது கை முதலாவது விரலில் அணிவது உத்தமம்.
    ஆகாதஇராசிவிருச்சிகம், மாதம்கார்த்திகை, கிழமைஞாயிறு, நட்சத்திரம் -- ஹஸ்தம், திதிகள்பிரதமை, சஷ்டி மற்றும் ஏகாதசி ஆகும். யோகம் -- விஷ்கம்பம், கரணம் -- பவம்  ஆகும்.
    பரிகாரம்;- தொடர்ந்து ஶ்ரீ ஆஞ்சனேயருக்கு சனிக்கிழமைகளில் நெய்த் தீபம் ஏற்றிவர, துன்பங்கள் தூர விலகும். வெள்ளை உடையும், வைரமும் அணியவும், வெள்ளி அல்லது மொச்சை தானம் செய்வது தோஷநிவர்த்தி தரும்.                                 
ரிஷபம்
( கார்த்திகை – 2,3,4 பாதங்கள்-ரோகிணி-1,2,3,4-பாதங்கள்-மிருகசிரீடம்-1,2 பாதங்கள் )
( இராசி  அறியாதவர்கள் பலன் அறிய , , , , , வி, வு, வே, வோ )
       உறுதியான செயலும், உயர்பதவிக்கான ஆளுமைத் தகுதிகளும் உடைய ரிஷபராசி வாசகர்களே !
       தங்கள் இராசிநாதன் தங்களை நற்செயல்களில் ஈடுபடுத்தி, மனமகிழ்ச்சியையும், அனைத்து வசதிகளையும் தந்து, நல்ல அறிவையும், நல்ல நண்பர்களையும் அளிப்பான்.  சூரியனால் சிந்தனா சக்தி மற்றும் நிர்ணயத் திறன்கள் குறையும். 6 இல் உள்ள செவ்வாய், மிக முக்கியமாக ஈடுபடும் செயல்பாடுகளில் வெற்றிகரமான நல்ல முடிவுகளை மற்றும் இலாபங்களை அளிக்கிறான். சந்தோஷம், நோயினின்று விடுதலை மற்றும் அதிகாரத்திலுள்ள நல்ல மனிதர்களின் தொடர்பையும் ஏற்படுத்துகிறான். சிலருக்குத் தேவையற்ற அலைச்சல்களைத் தருவான் புதன்,  குருவோ தன் பங்குக்குத் தடைகளையும், பணி மாற்றங்களையும் தரலாம். தனக்கென ஒரு தனி வீடு தருவான் சுக்கிரன். திருமணம், புத்திர பாக்கியம் ஆகியவற்றையும் அளிக்கிறான். எதிலும் வெற்றியையும், எல்லாவற்றிலும் முன்னேற்றத்தையும் தரும் சனி, தசா, புத்தி சாதகமானால், இராஜயோகத்தையும் அளிக்கிறான். பஞ்சம இராகு குழந்தைகளால் தொல்லைகளை ஏற்படுத்துவான். இலாப பாவக் கேதுவால் பயிர் விளைச்சல் அதிகரிக்கும், நீதித் துறையில் உள்ளவர்களுக்கு முன்னேற்றமான காலம். உத்தியோக உயர்வு மற்றும் வருமான உயர்வு உண்டு. மூத்த சகோதரருக்கு ஆரோக்கியக் குறைவு ஏற்படலாம்.  மொத்தத்தில் ரிஷபராசி அன்பர்களுக்கு 70 சதவிகித நற்பலன்கள் ஏற்பட, உங்கள் காட்டில் மழைதான்.
       குடும்பம் மற்றும் ஆரோக்கியம்இறைபக்தியும் தரும சிந்தனையும் உண்டாகும். கோவில் திருப்பணிகள் செய்வர். வாகனயோகம் ஏற்படும். பெரியோரின் ஆசிகள் கிடைக்கும். வீட்டில் மகிழ்ச்சிகரமான சூழல்கள் நிலவும்.
       தொழில் மற்றும் வியாபாரம்; பணிபுரியும் இடத்தில் மற்றவர்களுக்கு கட்டளையிடும் தலைமைப் பதவி கிடைக்கும். விவசாயத்தில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். சுயதொழில் புரிபவர்கள், பணியாட்களின் பூரண ஒத்துழைப்பால் உற்பத்தி பெருகி இலாபம் அதிகரிக்கும். பொருளாதாரம் மிக உயர்ந்த நிலையடையும். எதிரிகளின் செல்வம் வந்து சேரும்.
       பெண்கள்; உறவுகளிடையே நல்லுறவு அதிகரிக்கும். சுயதொழில் புரியும் பெண்களுக்குப் புதிய ஆர்டர்கள் மூலமாக ஆதாயம் பெருகும். பணிபுரியும் பெண்களுக்கு உயர் அதிகாரிகளின் உதவிகள் கிடைக்கும். உயர் பதவிகள், பாராட்டுக்கள் கிடைக்கும்.
       மாணவர்கள்; மாணவர்களுக்குக் கல்வியில் உயர்வும், விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிகிட்டும் வாய்ப்புகள் உருவாகும். வீணாகப் பொழுதைக் கழிக்காமல் படிப்பில் மட்டும் கவனம் செலுத்தினால் அதிக மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெறலாம். பணிக்காக போட்டித்தேர்வு எழுதுபவர்கள், வெற்றி பெற்று முன்னேற்றமடைவர்.

       சந்திராஷ்டமம்;- ஜனன ஜாதகப்படி இராசிக்கு அட்டமத்தானத்தில் கோசாரச் சந்திரன் சஞ்சரிக்கும் காலமே சந்திராஷ்டம காலமாகும்இக் காலத்தில் சிக்கல்களும், சிரமங்களும் ஏற்படலாம். தங்களுக்கு இம் மாதம் சந்திராஷ்டம காலம் 03 – 9 – 2014 பகல் 1 - 56 மணி முதல், 05 – 9 – 2014 மாலை 05 – 09 மணிவரையாகும். இக் காலங்களில் கவனமுடன் செயலாற்றுங்கள்.
       அதிர்ஷ்ட எண்கள்;- 2 மற்றும் 8 ஆகும். கவரும் எண்கள் 7 மற்றும் 9 ஆகும். சாதகமான எண்கள் 1, 3, 4 மற்றும் 6 ஆகும். அனுகூலமற்ற எண் 5 ஆகும்.
       அதிர்ஷ்ட நிறம்;- பிங்க், பச்சை, வெள்ளை ஆகும். தவிர்க்க வேண்டிய நிறம் சிகப்பு ஆகும்.
       அதிர்ஷ்டக் கற்கள்;- வைரத்தைத் தங்கத்தில் பதித்து வெள்ளிக் கிழமையன்று, பூஜைக்குப் பிறகு வலது கை மூன்றாவது விரலில் அணிவது உத்தமம்.
       ஆகாதஇராசிசிம்மம், மாதம்மார்கழி, கிழமைசனி, நட்சத்திரம் -- ஹஸ்தம், திதிகள்பஞ்சமி, தசமி மற்றும் பெளர்ணமி ஆகும். யோகம் -- சுக்கிலம், கரணம் -- சகுனி  ஆகும்.
       பரிகாரம்;- தொடர்ந்து ஶ்ரீ ஆஞ்சனேயருக்கு சனிக்கிழமைகளில் நெய்த் தீபம் ஏற்றிவர, துன்பங்கள் தூர விலகும். வெள்ளை உடையும், வைரமும் அணியவும், வெள்ளி அல்லது மொச்சை தானம் செய்வது தோஷநிவர்த்தி தரும்.                                 
மிதுனம்
(மிருகசிரீடம்- 3,4 பாதங்கள், திருவாதிரை-1,2,3,4 பாதங்கள், புனர்பூசம்-1,2,3 பாதங்கள்)
( இராசி  அறியாதவர்கள் பலன் அறிய கா, கி, கு, , , , கே, கோ, )
       வாழ்க்கையின் அனைத்து நிலைகளிலும்மாற்றங்களை விரும்புவர்களுமான மிதுனராசி வாசகர்களே !
       அனுகூலமான நிலையில் அமர்ந்திருக்கும் இராசிநாதன் புதனால் புத்தி தெளிவு பெறும். கல்வியில் வெற்றி கிட்டும். கௌரவம், சாமர்த்தியம் ஆகியவை உயரும். தன பாவ குருவால் அழகிய மனைவி அமைவாள். செல்வம் சேரும். வெற்றிகளால் மகிழ்ச்சியும், புத்திர பாக்கியமும் ஏற்படும். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். முற்பகுதியில் சுய சம்பாத்தியத்தால்  செல்வத்தைத் தருகிறான், சூரியன். பிற்பகுதியில் கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாட்டை ஏற்படுத்தலாம். அதிகாரம் செய்யும் முக்கிய பதவி, அந்தஸ்து, மரியாதை ஆகியவை சுக்கிரனின் தயவால் கூடும்.  நல்ல நண்பர்களையும் அளிக்கிறான்.   சனியோ, வீண் செலவுகளையும், குழப்பங்களையும் தருகிறான்இராகு, உறவுகளுக்கிடையே இடியாப்பச் சிக்கல்களை உருவாக்கிவிடுகிறான். புண்ணியத்தல யாத்திரைகள், மடாதிபதிகள் மற்றும் ஆன்மிகப் பெரியோர்களின் தரிசனம் ஆகியவற்றைக் கேது அளிப்பார்மொத்தத்தில் மிதுன இராசி அன்பர்களுக்கு 60 சதவிகித நற்பலன்கள் ஏற்படும்.
       குடும்பம் மற்றும் ஆரோக்கியம்; ஆரோக்கியம் பெருகும்எவரும் சாதிக்க முடியாத சாதனைகளைச் செய்து முடிப்பர். திருக்கோவில் திருப்பணிகள் செய்வர். வீட்டில் மகிழ்ச்சிக் கொண்டாட்டங்கள் நிகழும். வெளிநாட்டுப் பயணங்கள் ஆதாயம் தரும். திருமணம் மற்றும் வம்ச விருத்தி ஏற்படும்.
       தொழில் மற்றும் வியாபாரம்; தொழில் மற்றும் வியாபார முதலீடுகளுக்கு  வங்கிக் கடன்களும், அரசு உதவிகளும் மிகுந்த சிரமத்துக்கிடையே கிடைக்கும். விவசாயப் பணிகள் சுமாராக நடந்து, ஓரளவு ஆதாயம் பெருகும். அரசுப் பணியாளர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றங்கள் கிடைக்கும். தீவிர பரிசீலனைக்குப் பிறகு பங்குச் சந்தையில் முதலீடுகள் செய்யலாம். பொருளாதாரத்தில் திருப்திகரமான நிலை உருவாகும். கலைத் துறையினருக்கு பல வழிகளிலும் முன்னேற்றம் ஏற்படும்.
      பெண்கள்; பணிபுரியும் பெண்களுக்குப் புதிய வாகனயோகம் ஏற்படும். அதிகாரிகளின் ஆதரவு பணி உயர்வுக்கு வழிவகுக்கும். சுயதொழில் புரியும் பெண்களுக்குப் பணியாளர்களின் ஒத்துழைப்புப் பெருகி, உற்பத்திப் பெருக்கத்தால், ஆதாயமும் பெருகும். கணவன் மற்றும் உறவுகளின் உதவிகளும் கிடைக்கும். கலைத் துறையினருக்கு பல வழிகளிலும் முன்னேற்றம் ஏற்படும்
      மாணவர்கள்; கல்வியில் உயர்வும், விளையாட்டுப் போட்டிகளில் ஆர்வமும் ஏற்பட்டு, வெற்றிகளும் குவியும். நல்ல முன்னேற்றங்கண்டு பெற்றோர்க்கும், ஆசிரியர்களுக்கும் மாணவர்கள் பெருமை தேடித்தருவர். தேர்வுகள்  மாணவர்கள் தேவையற்ற வேலைகளில் ஈடுபடாமல், படிப்பில் கவனம் செலுத்தினால் நல்ல மதிப்பெண்கள் பெறலாம்.  
      சந்திராஷ்டமம்;- ஜனன ஜாதகப்படி இராசிக்கு அட்டமத்தானத்தில் கோசாரச் சந்திரன் சஞ்சரிக்கும் காலமே சந்திராஷ்டம காலமாகும்இக் காலத்தில் சிக்கல்களும், சிரமங்களும் ஏற்படலாம். தங்களுக்கு இம் மாதம் சந்திராஷ்டம காலம் 05 – 9 – 2014 மாலை 05-10 மணி முதல், 07 – 9 – 2014 இரவு 07 – 34 மணிவரையாகும். இக் காலங்களில் கவனமுடன் செயலாற்றுங்கள்.
     அதிர்ஷ்ட எண்கள்;- 7 மற்றும் 3 ஆகும். கவரும் எண்கள் 5 , 6 மற்றும் 9 ஆகும். சாதகமான எண்கள் 1 மற்றும் 2 ஆகும். அனுகூலமற்ற எண்கள் 4 மற்றும் 8 ஆகும்.
     அதிர்ஷ்ட நிறம்;- மஞ்சள், பர்ப்பிள், பச்சை, நீலம் மற்றும் பிங்க் ஆகும். தவிர்க்க வேண்டிய நிறங்கள் கருப்பு மற்றும் சிகப்பு ஆகும்.
     அதிர்ஷ்டக் கற்கள்;- மரகதம், மஞ்சள் புஷ்பராகம் 3, 5, 7 அல்லது 10 கிராம் தங்கத்தில் பதித்து புதன் கிழமையன்று, பூஜைக்குப் பிறகு வலது கை நான்காவது விரலில் அணிவது உத்தமம்.
     ஆகாதஇராசிமகரம், மாதம்ஆடி, கிழமைதிங்கள், நட்சத்திரம் -- ஸ்வாதி, திதிகள்பிரதமை, சப்தமி மற்றும் துவாதசி ஆகும். யோகம் -- பரிகம், கரணம் -- கெளலவம்  ஆகும்.
     பரிகாரம்;- தொடர்ந்து பெருமாளுக்கு சனிக்கிழமைகளில் நெய்த் தீபம் ஏற்றிவர, துன்பங்கள் தூர விலகும். பச்சைப் பட்டாடையும், மரகதமும் அணிந்தாலும், ஸ்வர்ணதானம் அல்லது பாசிப்பயிறு தானம் செய்வது தோஷநிவர்த்தி தரும்.                         

Wednesday, 3 September 2014

நாட்டைக் காக்கும் காவல்துறை.

நாட்டைக் காக்கும் காவல்துறை.

       நாட்டையும், வீட்டையும் காக்கும் பெருமைமிகு காவல்துறைப் பணி மற்ற பணிகளைப் போன்றதல்ல. அது நாட்டைக்காக்கும் ஒரு பொறுப்பு மிக்க பணியாகும். நாட்டையும், நாட்டு மக்களையும் குற்றச் செயல்கள் புரிபவரிடம் இருந்து காத்து, சட்டம் மற்றும் ஒழுங்கை நிலைநாட்டும் தலையாய கடைமையை உடைத்தாய் இருக்கிறது காவலர் பணி. நாட்டின்பால் ஏற்பட வேண்டிய ஆழமான, தியாக உணர்வும், பொறுப்புணர்வும் கொண்ட அதிகாரிகளைக் கொண்டது நமது இந்திய காவல்துறை. மக்கள், சட்டத்தை உடைத்துக் குற்றங்கள் செய்வதில் இருந்து அவர்களைத் தடுக்கும் முக்கியத் துறையாகும்.

       இக் காரகங்கள் அனைத்துமே, செவ்வாய் மற்றும் குருவின் முக்கிய காரகங்கள் ஆகும். சட்டம், தியாகம், பொறுப்புணர்ச்சி, காத்தல் ஆகியவை குருவின் காரகங்களாகும். செவ்வாய் தைரியம், வீரம் மற்றும் சீருடைப் பணி ஆகியவற்றைக் குறிக்கிறது. மேலும், அதுவே குற்றச் செயல்களுக்கும் காரணமாகிறது. எனவே இக் காரகங்கள் பலம் பெறும் போது, குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடவைக்கிறது. கொலைகார்ர்கள், கொள்ளையர்கள், கூலிப்படைகள், ஆள்கடத்துபவர்கள் மற்றும் கடத்தல்காரர்கள் ஆகியவர்களை உருவாக்குவது செவ்வாய் மற்றும் சனியின் தாக்கமே ஆகும்.

       இத்தகைய குற்றவாளிகளைக் கண்டுபிடித்து, குற்றங்களைத் தடுப்பதே காவல்துறை அதிகாரிகளின் தலையாய கடமையாகிறது.

       காவல்துறைப் பணிகளில் இருப்பவர்கள் ஜாதகங்களில், செவ்வாய், குரு ஆகிய கிரகங்களின் தாக்கம்  முக்கியமானதாக இருப்பதைக் காணலாம். ஆயினும், சனியின் தாக்கத்தையும் நாம் ஒதுக்கிவிட முடியாது. செவ்வாய் குரு மற்றும் சனியின் ஒன்றிணைந்த தாக்கங்கள் மற்றும் அவற்றின் கர்ம ஸ்தானத்துடனான தொடர்பு ஜாதகரை காவல்துறைப் பணிக்குத் தள்ளிவிடுகிறது எனலாம்.

       இலக்னத்தின் பங்கு மிக முக்கியமானதாகும். அதுவே ஜாதகரின் தனித்திறன், உடலமைப்பு மற்றும் அவர் பொறுப்பு மிக்க பதவிக்குப் பொருத்தமானவரா ? – என்பதை உணர்த்துவதே இலக்னமாகும்.

              அடுத்து, 6 ஆம் வீடு சட்டம் மற்றும் வழக்குகளைக் குறிகாட்டுகிறது. எனவே, 6 ஆம் வீடு இதற்குக் கூடுதலாக முக்கியப் பங்கு வகிக்கிறது.

       இரண்டு மற்றும் 11 ஆம் வீடுகள் செல்வநிலை மற்றும் வருமானத்தைக் குறிகாட்டுகிறது. 10 ஆம் வீடு, 10 ஆம் அதிபதி, 10 இல் உள்ள கிரகம் மற்றும் நவாம்சத்தில் 10 ஆம் வீட்டில் உள்ள கிரகம், 10 ஆம் வீட்டைப் பார்க்கும் கிரகங்கள் ஆகிய அனைத்தின் தாக்கங்களும் அறியப்பட வேண்டும்
.
       சிம்மம் இலக்னமாகி, செவ்வாய், குரு இணைந்து இருக்க, மேற்சொன்ன மற்ற வீடுகளும் அனுகூலமாக அமைய ஜாதகர் புகழ் பெற்ற, வெற்றிகரமான, பிரபலமான, கடமை உணர்வுள்ள, கம்பீரமான மற்றும் கடினமான காவல்துறை அதிகாரியாகத் திகழ்வார்.

       இதில், சனியும் சமமான முக்கியப் பங்கு வகிக்கிறது. ஏனெனில், சனி பொதுஜனங்களைக் குறிக்கும், நாட்டு மக்களையும் குறிக்கும். அரசுப்பணியைக் குறிப்பதுவும் அதுவே ஆகும். நாட்டின் அமைதி காக்கும் அரசின் முக்கிய அங்கமே காவல்துறை ஆகும்.

       இவ்வாறாக, 10 ஆம் இடத்தோடு 2 மற்றும் 11 ஆம் வீடுகளும், செவ்வாய், குரு மற்றும் சனியின் தொடர்புற வேண்டும்.

       இராசி மற்றும் நவாம்சத்தில் நெருப்பு இராசிகளின் தொடர்பும் அவசியம் ஆகிறது. 2, 10 மற்றும் 11 ஆம் அதிபதிகளின், இராசி அல்லது நவாம்சத்தில் மேஷ, சிம்ம, தனுசு ஆகிய இராசிகளில் இடம் பெறுவது, காவல்துறை அதிகாரிகளின் ஜாதகத்தில் பலமாகக் குறிகாட்டுப்படுகிறது, விருச்சிக இராசியான நெருப்பு இராசி இல்லை எனினும், அதன் அதிபதி செவ்வாய், வெப்ப கிரகம் ஆதலால் அதனையும் கணக்கில் எடுத்துக் கொள்ளலாம்.

       உண்மையில் அரசைக் குறிக்கும் சூரியனும் காவல்துறைப் பணிக்கு உதவும் காரகர் ஆகிறார். காவல்துறை, அரசின் முழு அதிகாரத்திற்கு உரியது மற்றும் பலம் மிக்க  சக்தியையும் உடைத்ததாய் இருக்கிறது.

       ஆத்ம காரகன், ஆத்ம காரகனின் சாரம் ஆகியவையும் முக்கிய பொறுப்பாகின்றன.

       மேலே சொல்லப்பட்ட காரணிகளைத் தொகுத்துக் காணலாம்

1.   இலக்னம்தனித்திறன், உயர்வுநிலை அல்லது ஏற்றநிலை, உடல் தகுதி மற்றும் விருப்பங்கள் ஆகியவற்றைக் குறிக்கும்.

2.   () 10 ஆம் வீடுதொழில் வீடு.
(). 2 ஆம் வீடுவருமான வழி.
(). 11 ஆம் வீடுவாழ்வாதாரம்.
(). 9 ஆம் பாவம்தொழிலுக்கு உதவும் அதிர்ஷ்டம்.(பாக்கியம்) தொழில்      மற்றும் சொத்து வருமானங்கள்.

   3.  6 ஆம் பாவம்வழக்கு, குற்றம், சண்டை. விபத்துக்கள், திருட்டுக் குற்றங்கள், கடன்கள், பாக்கிகள், சேவைகள், பதவி உயர்வுகள், பதவி இறக்கங்கள், பதவி       நீடித்தல், பதவி மாற்றங்கள் மற்றும் நீக்கங்கள்.

   4.  குறிகாட்டிகள்செவ்வாய், குரு, சனி ஆகியோர்.
   5.  கை கொடுப்பவர்சூரியன்.

   6. இராசி மற்றும் நவாம்சத்தில் மேஷ, சிம்ம, விருச்சிக மற்றும் தனுசு    இராசிகள்.

   7. நட்சத்திரங்கள்கிருத்திகை, மிருக சிரீடம், புனர்பூசம், பூசம், உத்திரம்,    சித்திரை, விசாகம், அனுஷம், உத்திராடம், அவிட்டம் மற்றும் பூரட்டாதி.

   8. அரசுவேலை  -- சூரியன்சந்திரன் தாக்கம், 1 மற்றும் 6 அல்லது 10 ஆம் வீடு ஒன்று அல்லது வேறு வழிகளில் தொடர்பு கொள்ளுதல்.

  9.  ஆத்ம காரகன் – (). ஆத்மகாரகன் இடம் பெறும் இராசி, நவாம்சம் மற்றும்     நட்சத்திரங்கள்.   (). ஆத்ம காரகனின்  சுய வீடுகள். () . ஆத்ம காரகன்   இடம் பெற்ற வீடு.

      மேற்கண்ட முறையில் ஆராய இரு புகழ் பெற்ற காவல்துறை அதிகாரிகளின் ஜாதகத்தைப் பார்ப்போம்.

      கே. பி. எஸ். கில். .பி.எஸ்நாம் நன்கு அறிந்த காவல்துறை உயர் அதிகாரியான இவர் 29 டிசம்பர் 1934 அன்று பாக்கிஸ்தானிலுள்ள லாகூரில் பகல் 2 மணிக்குப் பிறந்தார். மேஷ இலக்னம். இலக்னாதிபதி செவ்வாய் 6 இல் இருந்து இலக்னத்தைப் பார்க்கிறார். 6 ஆம் வீடு சேவையைக் குறிக்கிறது. குற்றங்களைத் தடுப்பது காவலர் பணிதானே ? இலக்னத்துடனான அல்லது 10 ஆம் இடத்துடனான  மற்றும் அதன் அதிபதிகளுடனான ஒளிக்கிரகங்களின் தொடர்பு காவல் துறை அதிகாரிகளின் ஜாதகத்தில் காணலாம். அதுவே அரசுப் பணியைத்தருவதாகும். இங்கு இலக்ன அதிபதி 6 இல் சந்திரனுடன் இணைந்து, அவரின் ஹஸ்த நட்சத்திரத்திலேயே உள்ளார். இது அவருக்குக் காவல் துறையில் உயர் அதிகாரப் பதவியைத் தந்தது.



லக்///



இராகு

குரு
செவ்
சந்
சனி


இராசி
கேது



நவாம்சம்
லக்///
புத
இராகு


சூரி
சுக்
சூரி
புத

குரு
செவ்
சந்

   சுக்
சனி
கேது

சந்திர திசா இருப்பு – 4 9 மா 4 நாள்.

       மூன்று மற்றும் ஆறாம் அதிபதி புதன் ஒன்பதில் உள்ளார். காவல்துறைக்கு செவ்வாய், சனி, குரு மற்றும் சூரியன் ஆகியோர் காவல் துறைக்குக் காரகர் ஆவர்.   6 ஆம் அதிபதி புதன் கடக நவாம்சம் பெற்றுள்ளது அவரின் அரசுவேலைக்குக் காரணமானது. 6 ஆம் அதிபதி புதன், சூரியன் மற்றும் சுக்கிரனுடன் இணைந்து 9 இல் உள்ளார். சுக்கிரன் ஆட்சிப் பணியைக் குறிக்கும் கிரகமாகும்.

       ஆத்ம காரகன் சுக்கிரன் 2 மற்றும் 7 ஆம் வீட்டுக்கு அதிபதியாகி தனுசு சுக்கிரன், செவ்வாயின் நவாம்சத்திலும், இலக்னாதிபதி செவ்வாய் சுக்கிரனின் நவாம்சத்திலுமாக பரிவர்த்தனை பெற்று இருப்பது பலம் மிக்க காவல்துறை உயர் அதிகாரியின் நிலையை உணர்த்துகிறது.

       இவரின் ஜாதகத்தில் சூரியன் மற்றும் சனி பலம் மிக்க கிரகங்காளாகும்.      2 ஆம் வீட்டு அதிபதி சுக்கிரன், குருவின் இராசியான 9 ஆம் வீட்டில் உள்ளார். அவர் செவ்வாயின் நவாம்சம் பெற்றுள்ளார்.

       10 ஆம் அதிபதி சனி 11 இல் தனது சுய வீட்டில் உள்ளார். செவ்வாயின் அவிட்ட நட்சத்திர சாரம் பெற்று, நவாம்சத்தில் தனது உச்ச வீட்டில் உள்ளார். அவரின் பார்வை 5 மற்றும் 8 ஆம் வீட்டின் மீது விழுகிறது. இலக்னாதிபதி செவ்வாய், 10 ஆம் அதிபதி சனியின் பார்வையைப் பெறுகிறது. இதன் காரணமாகவும் இலக்னம் பலம் பெறுவதால் செவ்வாய், சனியின் தாக்கம் உயர் காவல் துறைப் பணியை உறுதி செய்கிறது.

       சூரியன், புதன் மற்றும் சுக்கிரனின் நெருப்பு இராசியுடனான தொடர்பும் இதை உறுதி செய்கிறது எனலாம்.

       இவை தவிர சூரியன் 9 இல் இருப்பது ஒருவருக்கு தைரியத்தையும், புகழையும், தலைமைக்கான ஆளுமையையும், மிக உயர்ந்த பதவிகளையும் தருகிறது. பொதுவாக சூரியன் நெருப்பு இராசிகளில் இருப்பது ஜாதகரை ஒரு பொறியாளராகவோ அல்லது சீருடைப் பணிகளில் உயர் பதவியையோ (இராணுவம், காவல்துறை) தருகிறது.

       ஆறில் சந்திரன் இருப்பது சமூகத்தாலும், அரசாலும் பாராட்டுக்களைப் பெறுவர். அதிக வலிமை உள்ள எதிரியையும் வெல்வர். அரசுப்பணியில் வெற்றி பெற்றுத் திகழ்வர். மேலும், செவ்வாய் இணைவு காவல்துறை அதிகாரி என்பதை உறுதி செய்கிறது,

       ஏழில் இருக்கும் குரு விரைவாக உயர் பதவிகள் பெறும் நிலையைக் காட்டுகிறது. இராகு 10 இல் இருப்பதுவும் சீருடைப் பணிக்குக் குறிகாட்டி ஆகும்,

கிரண் பேடி ஐ.பி. எஸ்.

       இந்திய நாட்டின் முதல் பெண் போலீஸ் உயர் அதிகாரி ஆவார். இவர் தனது தைரியம் மிக்க, கடமை தவறாத குணங்களால் புகழ் பெற்றவர். இவர் பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸ்ஸில், 9 ஜூன் 1949 ஆம் வருடம் மதியம் 2 – 10 மணிக்குப் பிறந்தார்.

       இவரின் ஜாதகத்தில் 10 ஆம் வீட்டில் சுக்கிரன், தொழிலுக்கான முதல் குறிகாட்டி ஆகிறார். இரண்டாவது குறிகாட்டி பத்தாம் அதிபதி புதன் ஆவார்.  அவர் சுய நவாம்சத்தில் உள்ளார். இது இந்த ஜாதகியின் தொழிலானது கலை, நடிப்பு, நடனம், இசை, எழுத்து ஆகியவை தொடர்புடைய தொழிலாக இருக்கலாம் என்பதைக் குறிகாட்டுகிறது.

       இப்போது நாம் ஆத்ம காரக கிரகமான சூரியனின் நிலையைக் காணலாம். சூரியன் 9 ஆம் வீட்டில், செவ்வாயின் மிருக சிரீட நட்சத்திரத்தில் உள்ளார். இந்த ஜாதகத்தில் சூரியனும், செவ்வாயும் மிக்க பலம் உள்ள கிரகங்களாக உள்ளனர். சூரியன் தனது சுய நவாம்சத்தில் உள்ளார். மேலும், சுக்கிரன், புதன் பரிவர்த்தனை ஆகியவை வெற்றிகரமான ஆட்சிப்பணிக்கு உரிய ஜாதகமாகக் குறிகாட்டுகிறது. செவ்வாய் மற்றும் சூரியன் 10 ஆம் அதிபதி புதனுடன் 9 ஆம் வீட்டில் இருப்பது வெற்றிகரமான காவல்துறைப் பணியைக் குறிகாட்டுகிறது.


இராகு
செவ்
புத()
சூரி
சுக்

குரு()
இராகு

லக்///
புத()
சனி



இராசி

செவ்


நவாம்சம்


குரு()
சனி

சூரி
சந்

சந்
கேது
லக்///
சுக்
 
கேது


சனி தசா இருப்பு – 17 1 மா 27 நாள்.

       அடுத்து நமது ஆய்வின் மூன்றாவது படியாக, இலக்னத்துக்கு 2 ஆம் அதிபதி சுக்கிரன் 10 ஆம் வீட்டில் இருக்கிறான். குருவின் தனுசு நவாம்சத்தில் இருக்கும் சுக்கிரன், இராகுவின் சாரத்தில் உள்ளார். இராகு வர்க்கோத்தமம் பெற்று, செவ்வாயின் மேஷ இராசியில் இடம் பெற்றுள்ளார். எனவே சுக்கிரன்புதன், குரு, இராகு மற்றும் செவ்வாய் ஆகியோரின் தாக்கம் பெற்றுள்ளார். இந்த நிலை தொழிலைப் பொறுத்தவரை பொறியாளர் அல்லது காவல்துறை அதிகார பதவிகளைக் குறிகாட்டுகிறது.

       அதன் பிறகு 11 ஆம் இடம் ஆராயப்பட வேண்டும். 11 ஆம் அதிபதி சந்திரன் சனியின் அனுஷ நட்சத்திரத்தில், செவ்வாய் ஆட்சி செய்யும், விருச்சிக இராசியில் இடம் பெற்றுள்ளார். சந்திரன், சூரியனின், சிம்ம நவாம்சம் பெறுகிறார். இது காவல் துறையில் உயரிய அதிகார பதவியைக் குறிகாட்டுகிறது.

       முடிவாக, 9 ஆம் வீட்டை ஆராய வேண்டும். 9 ஆம் வீட்டில் புதன், செவ்வாய் மற்றும் சூரியன் ஆகியோர் இருக்கின்றனர். இவை, ஆட்சிப்பணி மற்றும் காவல் துறை உயர்பணியைக் குறிகாட்டுகிறது.

       சூரியனும், செவ்வாயும் சார பரிவர்த்தனை பெற்றுள்ளனர். சூரியன் மிருகசீரிடத்திலும், செவ்வாய் கார்த்திகை நட்சத்திரத்திலும் உள்ளனர். புதன் சந்திரனின் ரோஹிணி நட்சத்திரத்தில் உள்ளார். சந்திரன் விருச்சிகத்தில் உள்ளார். இதுவும் ஆட்சிப்பணி அல்லது காவல்துறை உயர் பணியைக் குறிகாட்டுகிறது. சூரியன் சுய நவாம்சமும், செவ்வாய் கும்ப நவாம்சமும் மற்றும் புதன் சுய நவாம்சமும் பெற்றுள்ளனர். 9 ஆம் வீட்டு அதிபதி சுக்கிரன் 10 ஆம் வீட்டில் இடம் பெற்றுள்ளார். அவர் மீன நவாம்சம் பெற்று, இராகுவின் திருவாதிரை நட்சத்திரத்தில் உள்ளார். சனி 6 ஆம் வீட்டான தனது சுயவீட்டைப் பார்க்கிறார்.

       இவ்வாறாக, சூரியன், செவ்வாய், குரு, புதன் மற்றும் சுக்கிரன் ஆகியோர் இந்த ஜாதகியின் தொழிலுக்கு ஆழ்ந்த தொடர்பு ஏற்படுத்துகின்றன. ஆட்சிப் பணிக்கு சுக்கிரன், சூரியன் மற்றும் சந்திரன் ஆகியோரே குறிகாட்டிகள் என முன்னரே குறிப்பிட்டிருந்தோம். இந்த ஜாதகத்தில் சுக்கிரன் 10 இல், சூரியன் 9 இல் உள்ளனர். சந்திரன், சூரியனையும், 10 ஆம் அதிபதி புதனையும் பார்வை புரிகிறார். 9 ஆம் அதிபதியான சுக்கிரன் மற்றும் 10 ஆம் அதிபதியான புதனின் பரிவர்த்தனை மகாயோகம் அல்லது மகாராஜயோகத்தை அளிக்கிறது. இந்த நிலைகள் ஆட்சிப்பணிக்கு ஒரு அசைக்க முடியாத மற்றும் பலம் மிக்க கிரக நிலைகள் ஆகிறது.

       ஒன்றுக்குள் ஒன்றாக உறவான சூரியன், செவ்வாய் மற்றும் குருவின் தாக்கங்கள் காவல்துறை உயர் பணிக்கான முக்கிய இணைவாக உள்ளன. இந்த நிலைகள் காரணமாக இவர் ஒரு கடமை, கண்ணியம் மற்றும் கட்டுப்பாடு மிக்க அதிகாரியாகப் பணியாற்றி உலகப் புகழ் பெற்றார்.

       ஜோதிடகலாநிதி.எஸ். விஜயநரசிம்மன். எம். எஸ்ஸி (அப்ளைடு அஸ்ட்ராலஜி)






Tuesday, 2 September 2014


 எனது புதிய புத்தக வெளியீடு - வெளியிடுபவர் - DR. நவமணி சண்முகவேலு அவர்கள்