Search This Blog

Monday, 7 January 2013

சக்திமிக்க தனயோகங்கள்

சக்திமிக்க தனயோகங்கள்
      இவ்   யோகங்கள்   ஜாதகரை,    எவரும்   எட்டமுடியாத உச்சத்திற்குக்    கொண்டு   செல்லும்.    அவர்   ஏழைக் குடும்பத்தில் பிறந்தவராக இருந்தாலும்,அவரை செல்வநிலையில் உயர்த்தியும் புகழின் உச்சிக்கும் இட்டுச்செல்லும்.



          மிகச்சிறந்த தன யோகமானது, 5 மிடம் மற்றும் 9 மிடம்  தொடர்புகாரணமாக அமைவதேயாம்.மேலும், 2 ம் அதிபதியை 9 ம்             அதிபதி பார்க்கும் போதும் அல்லது  9 ம் அதிபதி,          அல்லது  5 அல்லது  9 ல் இருந்தாலும் 5 மற்றும்   9 ம் அதிபதிகள்  இருவரும் நவாம்சத்தில் உச்சமடைந்திருந்தாலும் மேற் சொன்ன தனயோகம் ஏற்படுகிறது. இப்பாவங்கள் லக்னத்திலிருந்தோ,சந்திரராசியிலிருந் தோ கணக்கிடப்பட வேண்டும்.

          அடுத்ததாக,6  ம் அதிபதி மற்றும் பத்தாம் அதிபதிகளின்                                எவ்விதத்திலான   இணைவும் 9 ம் அதிபதியின் 2 ம் அதிபதியின் மீதான  பார்வையும்  மற்றும் 6, 9,  2  அதிபதிகளின், பாவங்களின் தொடர்பும், அவர்களின்  சேவை  மற்றும் உத்தியோகத்தின் மூல மான, முன்னேற்றங்களின்   காரணமாக   செல்வச் சேர்க்கையும் ஏற்படுகிறது. இந்த யொகத்தின் காரணமாக, ஜாதகருக்கு மதிப்பும்,
       


மரியாதையும்,புகழையும், அதிக செல்வத்தையும், நீண்ட ஆயுளை யும்,கரும்புள்ளிகளற்ற நற்குணத்தையும், புத்திசாலித்தனத்தையும், அனைவரிடமும் நன்கு பழகும் தன்மையையும் அதன காரணமாக மக்கள்  தலைவராகும் தகுதியையும், கலைகளிலும், விஞ்ஞானத் திலும் தேர்ச்சியையும், ஆடம்பரம்  மிக்கப் பெரிய வாகனங்களை யும்,அரண்மணை போன்ற அழகிய வசிப்பிடத்தையும்,அரச மரியா தையையும், வெகுமதியையும், அதிகாரத்தையும்  அள்ளி வழங்கு கிறது. உபஜெய ஸ்தானங்களான 3,6,10,11 ல், 9 ம்அதிபதி இருந்து, சுபரால்  பார்க்கப்பட்டு,  அல்லது    9  ம் அதிபதி 9 ம் இடத்துக்குத் திரிகோணத்தில்  இடம்பெற்று,  2, 9, 11  ம் அதிபதிகள் இணைந்து,                                                                     அனுகூலமான வீட்டிலிருக்க, ஜாதகர், செல்வந்தராகிறார். ஜாதகத் தில் இயற்கை சுபர்கள்,திரிகோணத்தில் இருந்து, அதாவது சுபகிரக மொன்று 9 மிடத்தில் இருந்து அஸ்தமனமாகாத, பாதிப்படையாத நட்பு கிரகத்தால் பார்க்கப்பட்டால், எல்லாவிதத்திலும் அதிர்ஷ்டசா லியாக,எல்லா வளங்களும் பெற்று,நல்வாழ்க்கை வாழ்கிறார்.

          ஒருவர் ஜாதகத்தில் அசுபகிரகங்கள்,கேந்திரத்திலிருக்க,
அவரை,  ல்  இருக்கும், அஸ்தமனமாகத, பாதிப்படையாத,சக்தி
மிக்க,சுபரான நட்புகிரகம் பார்க்க மிகப் பெரிய செல்வந்தராகிறார்.
மீன  லக்கினமாகி, 11 ம் அதிபதி சனி 11 ல் இடம்பெற்று சுபக்கிரக
பார்வை பெற,தடையில்லாது,சனி திசையில் செல்வம் கொட்டோ
கொட்டென்று கொட்டுகிறது.   அதெபோல்,   2, 9, 11 ம் இடங்களில் சுபர்  இருக்க  அல்லது  ஒரு  உச்ச  கிரகம்,மேற்படி இடங்களிலி ருந்து, நட்புமிக்க  சுபரால்,காரகாம்ச லக்னத்திலிருந்து பார்க்கப்பட
அளவற்ற செல்வம் பெற்ற அதிர்ஷ்டசாலியாகிறார்,ஜாதகர்.

          இராசியில் அதிக  பாகையைக்    கொண்டுள்ள கிரகமே ஆத்மகாரகராவார்.இந்த ஆத்மகாரக கிரகத்தின் நவாம்ச நிலையே காரகாம்ச லக்னமாகும்.

          காரகாம்சத்திலிருந்து.சுக்கிரன் 4 ம் அதிபதியோடு   4 ல் இருக்க,அவர்களை  நட்பு கிரகம் பார்க்க  ஆடம்பர வாகனங்களும், அதிக செல்வங்களை யுடையவராகவும்  இருப்பார். ஆரூடலக்னத் தில் 2,9,11 ம்அதிபதிகள் இருக்க,ஒருவர் மிகப்பெரிய செல்வந்தராக
ஆகிவிடுவார்.

                                    --- இளசை விஜயன்


ஜோதிட ப்ரவீணா. எஸ் விஜயநரசிம்மன்.
ஆதித்யா ஜோதிட ஆய்வு மையம்,
எம் 4 / 118 – த.வீ.வ.வா.குடியிருப்பு,
பகுதி 6, கூடல்புதூர்,
மதுரை -- 625 017
அலைபேசி எண் 9789101742.









ஆணா? பெண்ணா ? திருநங்கையா ?


         இலக்னம்,   சூரியன்,   குரு    மற்றும்    சந்திரன் ஆகியவை ஒற்றைப்படை    இராசியிலிலும்,       நவாம்சத்திலும் ஒற்றைப்படை இராசியிலும்    இருக்க,     அது    ஆண்    மகவைக் குறிக்கும். இவை யனைத்தும்,    இராசியிலும்,     நவாம்சத்திலும்         இரட்டைப்படை இராசிகளில் இடம்பெற,அது பெண் குழந்தையைக் குறிக்கும்.

அலி பிறப்புக்கான, ஆறு கிரக நிலைகள் :-

1. சூரிய,சந்திர பரஸ்பரபார்வை புரியவும்,
2. சனி,செவ்வாய் எதிர் எதிர் இராசியிலிருக்கவும்,
3. இரட்டைப்படை இராசியில் சூரியன் இருக்க,எதிர் இராசியில்
  செவ்வாய் அல்லது சூரியன்,இரட்டைப்படை இராசியில் இருந்து,
  எந்த இராசியிலிருந்தேனும்,செவ்வாய் பார்க்கவும்.
4 சந்திரனும்,இலக்னமும் ஒற்றைபடை இராசியிலிருக்க, செவ்
  வாய் பார்க்கவும்.
5. சந்திரன்,இரட்டைப்படையிலும்,புதன் ஒற்றைப்படை இராசியிலி 
  ருந்து, இரண்டையும்,செவ்வாய் பார்க்கவும்.
6. நவாம்சத்தில்,சுக்கிரன்,சந்திரன் மற்றும் இலக்கினம் ஆகியவை  
  ஒற்றைப்படை இராசியிலிருக்கவும்.

இந்த  யோகங்கள்,கருத்தரிக்கும் காலத்தில் இருக்க,ஆண் அல்லது
பெண்    குழந்தையைத் தரக்கூடிய நிலைமை எழாமல் போகலாம்.
இந்த    இணைவுகள்  ஒரு குழந்தையின் ஜாதகத்தில் காணப்பட்
டால்,  அந்த  தாய்க்கு, அதற்குப் பிறகு குழந்தை பிறக்க வாய்ப்பு
இருக்காதெனலாம்.

இரட்டைப் பிறவிக்கான இணைவுகள் :-
சந்திரன் மற்றும் சூரியன் ஏழுக் கேழாய் இருக்கவும்.
அதே நிலையில் சந்திரன்,சனி இருக்கவும் இரட்டைப் பிறவி என
லாம்.

         மிதுனம்,கன்னி இலக்னமாகி,புதனும், ஆறாம் அதிபதியும் பரிவர்த்தனை  பெற,அது பெண் தன்மையுள்ள அலிப் பிறப்பாகும்.
சனி  ஆறிலிருக்க,  மேற்  சொன்ன   நிலைகளிலிருந்தால்,ஆண் தன்மையுள்ள அலிப் பிறப்பாகும்..

சனி கேது,
புத
சூரி





சந்

 இராகு





குரு
 சுக்
சுக்
 
   இராசி

 செவ்

நவாம்சம்
 சூரி

  குரு







 லக்//






செவ்
இராகு

சனி

சந்
லக்//
புத
கேது
பிறந்த தேதி:- 15 / 16 – 3 – 1997,  பிறந்த நேரம்    02 – 15   ஏ.எம்.
10N22 – 16E14 - செவ்வாய் தசாயிருப்பு     2 வருடம்    9   மாதம்   4 நாள்.


          இந்த ஜாதகத்தில் பத்து கிரகங்களில்,ஏழு உபய இராசிக ளில் உள்ளன.இதுவே ஆணுமில்லை,பெண்ணுமில்லை என்பதைக்
கூறிவிடுமன்றோ ? சூரியன்,சந்திரன்,சனி,செவ்வாய் மற்றும் புதன்
ஆகியவை உபயத்தில் உள்ளன.புதன் பெண் இராசியில் உள்ளார்.

          தனுசு இலக்னம்,ஆண் இராசி ஆனாலும்,செவ்வாய்,சனி ஆகியோர் பார்வையால் பாதிப்படைந்துள்ளது. இலக்னாதிபதி குரு,
சனியின்   இராசியில் இருப்பதும்,இந்நிலை மேலும்,இரு குணங்க
ளுடைய,  பிறப்பாகப்   பிறக்கவைத்தது. 8 ம் அதிபதி  சந்திரன் 7 ல்         7 ம் அதிபதி   புதன் மீனத்தில்,சனி,சூரியன் மற்றும் கேது இணை
வால்    பாதிக்கப்பட்டது.    செவ்வாயின் பார்வையால் ஏற்பட்ட பாதிப்பு, கருத்தரிக்கவும்,  குழந்தை   பெற்றெடுக்கவும், முடியாத நிலை  ஏற்படுத்தியது.  இந்த  சக்திமிக்க பாதிப்புகள்,முக்கியமாக அசுபர்கள்  கேந்திரத்தில்  இருப்பதுவும், சந்திரன் 7 ல் இருப்பதும் சக்தி வாய்ந்த,  பாலாரிஷ்ட  யோகத்தைத் தந்தது. செவ்வாயைத் தொடர்ந்து, இராகுதசா நடக்குமென்பதால்.ஆப்ரேஷன் செய்தாலும்
சரியாகாத நிலையைக் காட்டுகிறது.


                               --- எட்டயபுரம் விஜயநரசிம்மன்

Sunday, 2 December 2012

கடக ராசியின் குணயியல்புகள்





கடக ராசியின் குணயியல்புகள்
      

      கடக  ராசியின்  பாகையளவு  90 பாகை முதல் 120 வரையிலான பாகையள வாகும்.இது ஒரு சர ராசி,நீர்,இரட்டைப்படை மற்றும் பெண் ராசியாகும். இதன் அதிபதி சந்திரன் ஆவார். இந்த ராசியில் குரு 5˚ யில் உச்சமாகிறார்.செவ்வாய் 28˚ யில்  நீசம் பெறுகிறார்.நண்டு இதன் அடையாளமாகும். சூரியனுக்கு நட்பும்,புதன்,சுக்கிரன் மற்றும் சனி ஆகியோருக்கு பகைராசியாகும்.
      
      கடக ராசி ஜாதகர்களை ஆசிரியர்கள்,போதகர்கள் என அழைக்கப்படுபவர்கள். ஏனெனில் அவர்கள்  மக்களை அரவணைத்துச் செல்லக்கூடியவர்கள்.பொதுக்கூட்டங்களில் பேசக்கூடிய திறமைமிக்கவர்கள். குருட்டுத்தனமான உணர்ச்சிகளும், மகிழ்ச்சியைக் கூட்டும் நிகழ்வுகளில் ஈடுபாடுடையவர்களாகவும் இருப்பர். நன்கு பேசுபவர்களாகவும்,நன் மதிப்புடையவர்களாகவும், கொள்கைப் பிடிப்புள்வர்களாகவும்  இருப்பர்.  இவர்கள்  தங்கள்  மீதான விமர்சனங்களையும், மற்றவர்களின் பரிகசிப்பையும் விரும்பமாட்டார்கள். உடலளவில்  ஏற்படும்  அபாயங்களை  எதிர்கொள்ளும்  துணிச்சல் இவர்களிடம் இருக்காது. ஆனால்  மனோவலிமை  உடையவர்கள். பாசமிக்கவர்கள்,உண்மையானவர்கள், எதற்கும் அசைந்து கொடுக்காதவர்கள் மற்றும் எதையும்  தீர  ஆலோசித்து  முடிவெடுப்பவர்கள். கோபம் மிக்க இவர்களின் கோபமானது வந்த சுவடு தெரியாமல் மறைந்து  விடும். மற்றவர்களைக் கவரும் திறமையற்றவர்கள். எப்போதும்  கற்பனை உலகிலேயே  சஞ்சரித்துக்கொண்டிருப்பதாலும், மிகுந்த உணச்ச்சிகளால் உந்த படுபவர் களாவதால் மன அமைதி இழந்து சுற்றித் திரிபவர்களாகவும் இருப்பர். அதிர்ஷ்ட சூழ்நிலைகளைத் தவறவிடுபவர்களானாலும், வாழ்க்கையின் பிற்பகுதியில் நல்ல அதிர்ஷ்டக்கார்களாகத் திகழ்வர். இவர்களின் உடற்கட்டானது  சுமாரான  உயரமும், குண்டான உடலும் கொண்டது. வட்டமுகம், சப்பைமூக்கு,இரட்டைநாடி,அகன்றமார்பு,சிறிய கைகளும்,பாதங்களும் உடையவர்களாக இருப்பர்.
      
      கடகத்தார் மற்றத்தையும், பயணங்களையும், புதுமைகளையும்  விரும்பக் கூடியவர்கள். சுற்றத்தாரோடும்,குடும்பத்தாரோடும் மிகவும் பாசத்தோடு இருப்பவர்கள்.பொது வாழ்வில்  தங்களை  ஈடுபடுத்திக்  கொள்வதில்   மிக்க   ஆர்வமுடையவர்கள்.  கருணையுள்ளவர்கள், மாற்றமுடையவர்கள்  மற்றும்  பொறுமையற்றவர்கள்.  உணர்ச்சி மிக்கவர்கள்.  காமம்  மிக்கவர்கள், காதலுணர்வு  மிக்கவர்கள். உண்மையான   உணர்வுடையவர்கள்   மற்றும்  பொறுப்பு மிக்கவர்களான   இவர்கள்  நிலையற்ற மனமும் உடையவர்கள்.. இவர்கள்  ஓரிடத்திலிருந்து  பெருந்தொகையைப்  பெறுவதை விட,  பல  இடங்களிலிருந்து சிறுசிறு தொகைகளை அடைவதையே விரும்புவர். இளமையில் மோசமான உடல் நிலையோடு இருந்தாலும்,  வயது  ஏறயேற  ஆரோக்கியத்திற்  முன்னேற்றமிருக்கும். இவர்கள் நேர்மையான வியாபாரிகளாக இருக்கத் தகுதியானவர்கள். தங்களது கடுமையான உழைப்பின்  மூலமாக  சொத்துக்களைச்  சேர்ப்பவர்கள்.  நல்ல கணவர்கள்,மனைவிகள் கடகத்திற் பிறந்தவர்களாகவே இருப்பர். தங்களது துணைக்கு எப்போதும் உண்மையானவர்களாகவும், மணவாழ்க்கையை  தெய்வீகமாகக்  கருதுபவர்களாகவும் தங்கள் குழந்தைகளுக்காக எதையும் தியாகம் செய்யக் கூடியவர்களாகவும் இருப்பர். நுரையீரல்,தொண்டை,நரம்பு சம்பந்தமான நோய்கள்  காய்ச்சல்,இருமல்,பயந்தநிலை,ஹிஸ்டீரியா,மார்பில் கட்டி போன்ற நோய்களும் வரக் கூடும்.
     
      பணவிஷயத்தில் நேர்மையானவர்கள்,  அனாவசியச்  செலவுகள்  செய்ய மாட்டார்கள்.பிறரிடமும் நேர்மையை விரும்புவார்கள்.நேர்மையற்றவர்களை வெறுப்பவர்கள்.பண விவகாரங்களைப்  பொறுத்தவரை  அதிர்ஷ்டசாலிகள். பாச மிக்கவர்கள்,காதல் விவகாரங்களில் உண்மையானவர்கள் ஆனால் அவற்றை வெளியிடுவதில்  திறமையற்ற வர்களாக இருப்பர். பெண்கள்  நல்ல தாயாக  இருப்பர். விருந்தோம்பலில்  சிறந்தவர்கள். கடகத்தார்  வணிக  நோக்கம்   கொண்டவர்கள்.  நீர் சம்பந்தமான தொழில்களான முத்து,உப்பு,மீன் போன்றவற்றையும், படகோட்டிகளாகவும், கப்பற்படை, நீர்மூழ்கிக் கப்பல்,  கப்பல்  துறைகள், இறக்குமதி, ஏற்றுமதி, போக்குவரத்து மற்றும் சுற்றுலாத்துறை ஆகியவற்றில் ஈடுபடலாம். மேலும் இவர்கள் சிறந்த சமையற்கலை வல்லுனராகவும், உணவக மேலாளர், மேடைப்  பேச்சாளர்,மத போதகர் களாகவும், காண்டிராக்டர் மற்றும் விவசாயத் துறைகளிலும் ஈடுபடலாம்.
     
      அதிரிஷ்ட நாட்கள் – சந்தோஷத்திற்கும்,குதூகலத்திற்கும் அனுகூலமான நாட்கள் ஞாயிறும்,வெள்ளியுமாகும்.வெற்றி முயற்சிகளுக்குத் திங்களும்,வெற்றிக்கு செவ்வாய் வியாழனும்,பயணத்திற்கும்,பங்கு முதலீட்டுக்கு புதனும் நல்ல நாட்களாகும். தடை, தாமதம், கஷ்டம், நஷ்டம், வழக்கு  விவகாரம் என மோசமான விழைவுகள் தரும் நாள் சனியாகும். வெண்மை,க்ரீம்,சிகப்பு மற்றும் மஞ்சள் ஆகியவை அதிர்ஷ்ட நிறங்களாகும். நீலமும்,பச்சையும் தவிர்க்கப் படவேண்டிய  நிறங்களாகும். ஒத்துப்போகும்  எண்கள் 4,6.கவரும் எண்கள் 8.1,அனுகூலமான எண்கள் 2,7,9 ம் ,தவிர்க்கப்பட  வேண்டிய  எண்கள் 3 மற்றும் 5 ம் ஆகும்.  நாலாவது  விரலில், பூஜிக்கப்பட்ட,  வெள்ளியில் முத்துப் பதித்த மோதிரத்தை அணிவது நல்லது. சந்திரன் பாதிக்கப் பட்டிருந்தால் முத்தோடு,மஞ்சள் புஷ்பராகம் அணிவது உசிதம்.வளர்பிறை நாட்களில் அணிவது உத்தமம்.