Search This Blog

Wednesday, 25 April 2018





திருமணம் முக்கிய இணைவுகள்.


        நம்பத் தகுந்த மற்றும் தரமான பண்டைய நூல்களில் இருந்து 7 ஆம் வீட்டில்

 ஏற்படும் முக்கியமான இணைவுகள் பற்றிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

        இலக்னத்தில் இருந்தோ அல்லது சந்திரா இலக்னத்தில் இருந்தோ பாக்கியாதிபதி,

இராசியதிபதி, இலக்னாதிபதி, சுப கிரகம் ஆகியவை 7 இல் இருக்கவோ அல்லது 

பாரக்கவோ செய்தால் சந்தோஷமான திருமணமாக அமைந்து, அதிர்ஷ்டமுள்ள, அன்பு 

மிக்க, அழகு மிக்க பெண் மனைவியாக அமைவாள்.

        2, 7, 11 ஆம் அதிபதிகள் கேந்திர திரிகோணங்களில் அமர்ந்து, குருவால்

 பார்க்கப்பட, நிச்சியமாக சந்தோஷமான திருமணம், குழந்தைப் பிறப்புக்குத் தகுதியான 

பெண்ணுடன் நடக்கும். 2, 7, 11 ஆம் வீடுகளில் சுபர்கள் அமரவும் கணவனும் 

மனைவியும் அனைத்து சுக போகங்களோடும், ஆரோக்கியம் மிக்க, அதிர்ஷ்டமுள்ள 

மழலைச் செல்வங்களோடும் இனிதான வாழ்க்கையை நிம்மதியாகத் தொடரமுடியும்.

       7 ஆம் வீடு மகரமாகி   அதில் சனி, செவ்வாய் இணைவு ஏற்பட, காமம் மிக்க 

அழகும், அதிர்ஷ்டமும் நிறைந்த பெண் மனைவியாக அமைவாள்.

       7 ஆம் அதிபதியும், சுக்கிரனும் இரட்டைப்படை இராசியில் அமர, 7 ஆம் வீடும் 

இரட்டைப்படை இராசியாகி, 5 மற்றும் 7 ஆம் அதிபதிகள் அஸ்தமனமாகியோ, 

பலமிழந்தோ காணப்பட்டால் நல்ல மனைவியும், குழந்தைகளும் அமைந்து இல்லறம் 

இனிக்கும்.

      7 இல் குரு அமர, ஜாதகர் தன் மனைவியிடம் அன்பு மிக்கவராக இருப்பார். 

சுக்கிரன் உச்சம் பெற்றோ, ஆட்சியாகவோ, கோபுராம்சம் அல்லது வைசேஷிகாம்சம் ஆக, 

மனைவி அல்லது கணவன் நல்லவளாகவும், அழகு மிக்கவளாகவும் இருப்பாள்.

      சுக்கிரன் 7 ஆம் அதிபதியாகி சுபரால் பார்க்கப்பட்டாலும், 7 ஆம் வீடு சுப 

வீடாகவும்,  ஆகி, சுபரால் பார்க்கப்பட்டால் கணவன் அல்லது மனைவி  அர்ப்பணிப்பு 

உணர்வு உள்ளவராகவும், அழகுள்ளவராகவும் அமைவர்.


      சுக்கிரனுக்கு 4 , 8, 12 ஆம் வீடுகளில் அசுபர் இடம் பெற்றோ, சுக்கிரன் பாபகர்தாரி 

யோகத்தில் அமைந்தாலும், திருமணம் நடந்த உடனேயே மனைவி இறக்க நேரலாம். 


சுக்கிரனில் இருந்து 7 ஆம் வீட்டில் அசுப கிரகம் இருக்க சந்தோஷமற்ற மணவாழ்க்கை 

அமையும். ரிஷபம் இலக்கினமாகி 7 இல் சுக்கிரன் இருக்க  மனைவிக்கு மரணத்தை 

அளிக்கிறது.    

       களத்திர பாவாதிபதி புத்திர பாவத்திலோ அல்லது மாறியோ இருக்க ஜாதகர் 

திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கலாம். அப்படித் திருமணம் செய்து 

கொண்டாலும் 

புத்திர பாக்கியம் இருக்காது. ஆண் ஜாதகத்தைப் பொறுத்தவரை 2 மற்றும் 7 ஆம் 

இடமும், பெண் ஜாதகத்தைப் பொறுத்தவரை 7 மற்றும் 8 ஆம் வீடுகளும் அசுபர் தொடர்பு 

பெற (பார்வை, இருப்பு)    மனைவியோ அல்லது கணவரோ   மறிப்பர். 5 ஆம் அதிபதி 

அல்லது 8 ஆம் அதிபதி களத்திர பாவத்தில் அமர  கணவன் அல்லது மனைவியின் 


மரணம் நிகழ்கிறது. இலக்னம், களத்திர பாவம் மற்றும் விரய பாவம் ஆகியவற்றில் 

அசுபர் இடம்பெற்று, சந்திரனும் பலம் இழந்து புத்திர பாவத்தில் அமர திருமணமோ 

அல்லது குழந்தைப் பிறப்போ மறுக்கப்படுகிறது. சந்திரனும், சுக்கிரனுக்கும் எதிராக சனி, 

செவ்வாய் இருப்பினும் திருமணம் மறுக்கப்படுகிறது.             

       பெண் ஜாதகத்தில் களத்திர பாவத்தில் சந்திரன், சனி இருக்க மறுதிருமணத்தைக் 

காட்டுகிறது. ஆணின் களத்திர பாவத்தில் இருக்க திருமணம் அல்லது புத்திர பாக்கியம் 

மறுக்கப்படுகிறது. இலக்னத்தில் இருந்து தன, களத்திர மற்றும் ஆயுள் பாவங்களில் 

அசுபக் கிரகங்கள் அமர களத்திர இழப்பு ஏற்படுகிறது. களத்திர பாவத்தில் சூரியன், 

இராகு 

அமர்வு, பெண்களால் சொத்துக்களை இழக்கக் காரணமாகிறது.

       களத்திர பாவம் ரிஷபமாகி புதன் இருந்தாலும், மகரமாகி குரு இருந்தாலும், 

மீனமாகி சனி + செவ்வாய் இருந்தாலும் வாழ்க்கைத் துணையின் உயிருக்கு 

ஆபத்தாகும். 


இலக்னத்தில் புதன் கேது இடம்பெற நோயுள்ள மனைவி அமைவாள். களத்திர பாவம் 

ஓர் அசுப வீடாகவோ அல்லது அசுப நவாம்சம் ஆகவோ இருந்து அதில் சந்திரன் அமர, 

ஒரு கொடூரமான, கீழான, வீட்டு வேலை செய்கிறவள் மனைவியாக அமைவாள்.  

அதுவே பலம் மிக்க சந்திரனாகில் நல்ல மனைவி அமைவாள். கேது 7 இல் இருக்க 

துஷ்ட மனைவியும், இராகு இருக்க வேற்று ஜாதி, மத மனைவியாகவும் அமைவாள்.

       6, 8, 9 ஆம் வீடுகள் அசுபரோடு தொடர்புற, பார்க்கப்பட பிறன்மனை நாடும் 

மனைவியாக அமைவாள். 7 இல் சனி இருக்க அல்லது நவாம்சத்தில் 7 ஆம் அதிபதி 

அசுபராக அல்லது 7 ஆம் அதிபதி அல்லது சுக்கிரன் அசுப இராசியில் இருக்க கொடிய 

மனைவி அமைவாள்.

       பலம் குறைந்த, பாதிப்படைந்த சுக்கிரன் 7 ஆம் வீட்டில் இருக்க, மனைவி 

மலட்டுத் தன்மை உடையவளாகவோ அல்லது கணவன் ஆண்மையற்றவனாகவோ 

இருப்பர். அசுபக் கிரக இணைவோடு, செவ்வாய் 7 இல் அமர, ஜாதகர் சிறுநீரக 

பிரச்சனை 

காரணமாக மலட்டுத் தன்மை அடைவார். சனி, சுக்கிரன் இணைவு 10 அல்லது 8 ஆம் 

பாவத்தில், சுபர் பார்வை பெறாது, ஏற்படுவதும் ஜாதகர் ஆண்மையற்றவராக இருக்கக் 

காரணமாகிறது. நீர் இராசியில் சனி அமர, அந்த இராசி 6 அல்லது 12 ஆம் பாவமாக 

இருக்கும் பட்சத்தில் ஜாதகர் திருநங்கை ஆவார்.

கீழ்கண்ட கிரக நிலைகள் ஆண்மையற்ற தன்மைக்குக் காரணமாகின்றன.
1.   
சனி 6 அல்லது 12 ஆம் இடத்தில் தாழ்வு நிலையில் இருக்கவும்.
2.   
சுக்கிரனில் இருந்து, சனி 6 அல்லது 8 ஆம் இடத்தில் இருக்கவும்.

3.   ஒற்றைப்படை இராசியில் புதனும், இரட்டைப்படை இராசியில் சந்திரனும் இருந்து, 

இருவரும் செவ்வாயால் பார்க்கப்பட்டாலும்.

4.   ஒற்றைப்படை நவாம்சத்தில் இலக்னம், சுக்கிரன், சந்திரன் இடம் பெறவும்.

5.   செவ்வாய் இரட்டைப்படையிலும், இலக்னம் ஒற்றைப்படையிலும் விழவும்.

6.   சனி – சந்திரன், செவ்வாய் – சூரியன், சனி – புதன் ஆகிய இணைகள், ஒன்று 
ஒற்றைப்படையிலும், மற்றொன்று இரட்டைப்படையிலும் அமர்ந்து, பரஸ்பர பார்வை புரிந்து 
கொண்டாலும்.

7.   சுக்கிரனும், 7 ஆம் அதிபதியும் 6 ஆம் வீட்டில் இருந்தாலும்.

       களத்திர காரகன் அல்லது களத்திர ஸ்தானாதிபதி இராகு அல்லது 

கேதுவுடன் இணைய, அசுபரால் பார்க்கப்பட கணவனோ, மனைவியோ பிறன் 

மனை நாடுபவர்களாக இருப்பர். களத்திரகாரகன், செவ்வாய் அல்லது சனி 

நவாம்சத்தில் இருக்க மற்றும் செவ்வாய் அல்லது சனியால் பார்க்கப்பட ஜாதகரின் 

குணம் கேள்விக்குரியதாகும். களத்திர ஸ்தானத்தில் உள்ள களத்திர காரகனை 

செவ்வாய் அல்லது சனி பார்க்க, ஜாதகர் கள்ளத் தொடர்புகள் உள்ள 

கண்ணியமற்றவராக இருப்பார். 7 இல் சனி, சந்திரன், செவ்வாய் இணைந்து 

இருக்க ஜாதகரும் அவரின் மனைவியும் குணம் கெட்டவர்களாக, ஒழுக்கம் 

அற்றவர்களாக  இருப்பர். தன, களத்திர, கர்ம ஸ்தானாதிபதிகள் களத்திர 

பாவத்தில் அமர்ந்தால் ஜாதகர் நெறி தவறிய, சீர்கேடுடைய, ஒழுக்கமற்றவராக 

இருப்பார்.


       நீச்சத்தை நோக்கி நகரும், வலுவிழந்த சந்திரன் அல்லது சுக்கிரன், 

கேந்திரத்தில் இருந்து, குரூர சஷ்டியாம்சத்தில்.  அசுபரோடு இணைந்தோ, பார்வை 

பெற்றோ இருக்க தாயுடன் தொடர்பு வைத்திருப்பார். ஓளிக் கிரகங்களுடன் அசுபர் 

இணைந்து கேந்திரத்தில் இருக்கவும், பார்க்கப்படவும் இதே நிலை நீடிக்கும். 4 ஆம் 

வீடு பாதிக்கப்பட்டிருந்தால் இதே நிலை ஏற்படுகிறது.

       பாதிப்பு அடைந்த சனி சுக பாவத்தில் இருக்க, முறையற்ற அல்லது கூடா 

உறவு வைத்திருப்பார். பாக்கிய பாவத்தில் பாதிக்கப்பட்ட சந்திரனோ அல்லது 

சுக்கிரனோ இருக்க குருவுடன் புணர்வார். பாக்கியாதிபதி. சந்திரன், சுக்கிரன் 

ஆகியோர் பாதிக்கப்பட்டாலும் இதே முடிவைக் கூறலாம். களத்திர பாவத்தில் 

அசுபருடன் கூடிய குளிகன் அல்லது சூரியன் 7 இல் இருந்து,  செவ்வாய் 4 இல் 

இருக்கவும் ,அல்லது செவ்வாய் சுகபாவத்திலும், இராகு களத்திர பாவத்தில் 

இடம்பெற்று இருக்கவும் அல்லது செவ்வாயின் வீட்டில் அமர்ந்த களத்திர 

பாவாதிபதியை சுக்கிரன் பார்த்தாலோ அல்லது 3 கேந்திர பாவங்களில் அசுபர் 

இடம் பெற்று இருந்தாலோ ஜாதகரின் காமம், முரட்டுத்தனமானதாக, 

கொடூரமானதாக, மிருகத்தனமானதாகவும் இருக்கும்.

       குடும்பாதிபதியும், களத்திராதிபதியும் நீச பாவத்தில் அமர்ந்து, சுபகிரகங்கள் 

கேந்திர, திரிகோணங்களில் இடம் பெற்றால் ஒரேயொரு திருமணம் நடக்கும். 

சூரியன் மற்றும் செவ்வாயின் நவாம்சத்தில், குரு மற்றும் சுக்கிரன் இடம் பெறவும் 

அல்லது களத்திர பாவம் அமர்ந்த புதன், குருவின் நவாம்சத்தில் அமர்ந்தாலும் 

ஜாதகர் ஒரு முறை மட்டுமே மணம் முடிப்பார்.


       களத்திர ஸ்தானாதிபதி மற்றும் களத்திர காரகன் உபய இராசிகளில் 

அல்லது நவாம்சத்தில் அமர ஜாதகர் இரு முறையேனும் திருமணம் செய்து 

கொள்வார். புதன் அல்லது சனி களத்திர பாவத்தில் அமர்ந்து, இலாப பாவத்தில் 

இரு கிரகங்கள் அமர்ந்திருந்தால் இரு மனைவிகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. 

களத்திர ஸ்தானாதிபதி சனியாகி அவருடன் ஓர் அசுபர் இணைய, ஜாதகருக்குப் 

பல மனைவிகள் இருப்பர். களத்திர பாவத்தில் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட 

அசுபர்கள் இருக்க அல்லது களத்திர காரகன் சுக்கிரன் நீசமாக, கிரகணமாக 

அல்லது அசுபருடன் கூடி பகை வீட்டில் இருந்தாலும் அல்லது 8 ஆம் அதிபதி 

இலக்னத்தில் இருந்தாலும் அல்லது 7 ஆம் அதிபதியோ, இலக்னாதிபதியோ ருண 

பாவத்தில் இருந்தாலோ அல்லது 7 இல் அசுபர் இருந்து அதன் அதிபதி சுபரோடு 

இணைந்து, நீச வீட்டிலோ அல்லது பகை வீட்டிலோ அமரவும் அல்லது 

குடும்பாதிபதி 6 இல் இருந்து, அசுபர் களத்திர பாவத்தில் இருக்கவும் ஆகிய மேற் 

சொன்ன நிலைகள் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட களத்திரத்திற்கு வகை 

செய்கிறது.


       குடும்பாதிபதி, இலக்னாதிபதி மற்றும் ருணாதிபதி ஆகியோர் அசுபரோடு 


கூடி களத்திர பாவத்தில் அமர்ந்தாலோ அல்லது பலம் மிக்க களத்திர 

ஸ்தானதிபதி 


கேந்திர, கோணங்களில் அமர்ந்து, கர்மாதிபதியால் பார்க்கப்பட்டாலும், அல்லது 

பலம்மிக்க 7 ஆம் மற்றும் 11 ஆம் அதிபதிகள் இணைந்தோ, பரஸ்பர பார்வை 

புரிந்தோ அல்லது கோணத்தில் நின்றாலோ, ஜாதகருக்குப் பல மனைவிகள் 

அமைவர்.


       இலக்னாதிபதியோ அல்லது 7 ஆம் அதிபதியோ நீசம் அல்லது பகை 

வீட்டில் இடம்பெற்றோ அல்லது நவாம்சத்தில் கிரகணம் அடைந்தோ இருக்க 

ஜாதகருக்கு முதல் மனைவி உயிருடன் இருக்கும் போதே மற்றுமொரு மனைவி 

இருப்பாள்.  வலுவிழந்த 7 ஆம் அதிபதி ஆகி, 7 ஆம் வீட்டில் அசுபர் இருக்க / 

பார்க்க அல்லது அசுப கிரகங்கள் 7 மற்றும் 8 ஆம் வீட்டில் இருக்க மற்றும் 

செவ்வாய் விரய பாவத்தில் இருக்கவும் அல்லது வலுவிழந்த குடும்பாதிபதி ஆகி, 

குடும்ப பாவத்தில் அசுபர் இருக்க அல்லது அந்த பாவத்தைப் பார்க்கவோ மேலே 

குறிப்பிட்ட நிலையே ஏற்படும்.







களத்திர பாவம் –

       களத்திர பாவம் எனும் 7 ஆம் பாவம் முக்கியமாகத் திருமணம், மனவி அல்லது கணவன் மற்றும் மணவாழ்க்கையின் மகிழ்ச்சி பற்றிய விவரங்களை குறிகாட்டுகிறது.
       திருமணம் – வாழ்க்கையின் முக்கிய அடையாளம் மற்றும் குறிப்பிடத்தக்க சம்பவமும் ஆகும். காதல் மற்றும் பாசத்தால் உருவாக்கப்பட்ட ஸ்தாபனமாகும். ஆனால். இது பலதரப்பட்ட உள்ளுணர்வு மிக்க மற்றும் மனம், எண்ணம்,                உணர்ச்சிகளால் ஆன  சிக்கலான காரணிகளால் உருவாக்கப்பட்ட அமைப்பு ஆகும். ஆயினும், நமக்குத் திருமணம் பற்றிய ஜோதிடத் தகவல்கள் மட்டுமே தேவை என்பதால்  சமூகம் மற்றும் சட்டம் தொடர்பான காரணிகளை ஒதுக்கிவிட்டுப் பாரப்போம்.
       திருமணம் – பகுத்தறிவில்லாத, முரட்டுதனமான உணர்வுகளுக்குரிய ஸ்தாபனம் அல்ல. மேலும், அது இருவரை மட்டும் பாதிக்கக்கூடிய ஒரு சமுதாய ஒப்பந்தம் அல்ல. அதுவே சமூக அக்கறையுடன் கூடிய குடும்ப உறவுகளுக்குள்ளான அடிப்படை அமைப்பு ஆகும். இந்த அமைப்பின் மூலமாகவே நல்ல எதிர்கால சந்ததிகள் உருவாக்கப்படுகின்றனர். நம் நாட்டில் திருமணம் என்பது - தர்ம, அர்த்த, காம, மோட்சம் ஆகியவற்றை சமமாகப் பேணக் கூடிய இரு மனங்கள் இணையக்கூடிய  புனிதச் சடங்காகக் கருதப்படுகிறது.
       ஏழாம் பாவத்தை ஆய்வு செய்யும் போது மூன்று முக்கியமான காரணிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும்.  அவை 1). 7 ஆம் பாவம் 2). . 7 ஆம் அதிபதி 3). களத்திர காரகன் (சுக்கிரன்) ஆகியவை ஆகும். இவை தவிர 7 ஆம் வீட்டில் உள்ள கிரகங்கள் மற்றும்  7 ஆம் அதிபதியோடு இணைந்துள்ள கிரகங்கள் ஆகியவற்றை பற்றிய நிலைகளும் கருத்தில் கொள்ளப்படலாம்.
வெவ்வேறு பாவங்களில் 7 ஆம் அதிபதி நிற்கும் பலன்கள்.
7 ஆம் அதிபதி இலக்னத்தில் இடம் பெற்ற ஜாதகர் –
         குழந்தைப் பருவம் முதல் நன்கு பழகிய மிகவும் பரிச்சயமான பெண்ணை மணப்பார் அல்லது ஒரே வீட்டில் வளர்க்கப்பட்ட பெண்ணாகவும் இருக்கலாம். இந்த ஜாதகரின் கணவனோ மனைவியோ நிலையான மனமுடையவராகவும், அறிவு முதிர்ந்த மனிதராகவும் இருப்பார். மிக்க அறிவாளியாகவும், எந்த ஒரு செயலில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள், சாதக பாதகங்களை முழுவதுமாக அறிந்தவராகவும் இருப்பார். பாதிப்படைந்த 7 ஆம் அதிபதி அடிக்கடி பயணங்களை ஏற்படுத்துவார். 7 ஆம் அதிபதி மற்றும்  களத்திரகாரகன் சுக்கிரன் பாதிப்பு அடைய ஜாதகர் உணர்ச்சி மிக்கவராகவும், எதிர்பாலரிடம் இரகசிய உறவு கொள்ள விழைபவராகவும் இருப்பார்.
7 ஆம் அதிபதி இரண்டில் இடம் பெற்ற ஜாதகர் –
         திருமணத்தின் மூலமோ பெண்களாலோ செல்வ நிலை உயரும். பாதிப்படைந்தால் முறையற்ற வழிகளில் பெண்களை பயன்படுத்தி சம்பாதிப்பார், இதற்கு அவரின் மனைவியும் விதிவிலக்கல்ல. சிரார்த்த வீடுகளில் பரிமாறப்படும் உணவுகளை உட்கொள்வார். அதேபோன்ற உணவினையே தேடிச்செல்வார். 2 ஆம் வீடு உபய இராசியாகி, பாதிப்படைந்தால் ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் ஏற்படும். 7 ஆம் அதிபதியின் திசை, மாரக கிரக திசையாக அமைந்தால் அவர் மரணத்தைத் தழுவலாம். நிலையற்ற அலைபாயும் மனதை உடையவராக இருப்பார். எப்போதும் காம உணர்விலேயே இருப்பார்.
 7 ஆம் அதிபதி மூன்றில் இடம் பெற்ற ஜாதகர் –
         ஜாதகரின் இளைய சகோதரர் வெளிநாட்டில் வசிக்க கூடிய அதிர்ஷ்டக்காரராக இருப்பார். பாதிப்படைந்தால் – ஜாதகர் தனது சகோதரர் அல்லது சகோதரி மணந்துள்ள வாழ்க்கைத் துணையுடன்  முறையற்ற உறவு வைத்திருப்பார். சகோதரருக்கும் துரதிர்ஷ்டம் ஏற்பட்டுவிடுகிறது. அவருக்குப் பிறக்கும் குழந்தைகளில் பெண் குழந்தைகள் மட்டுமே உயிரோடு இருக்கும்.
7 ஆம் அதிபதி நான்கில் இடம் பெற்ற ஜாதகர் –
         அனைத்து சுக சௌகரியங்களுடன் கூடிய அதிர்ஷ்டக்கார வாழ்க்கைத் துணையுடனும், அனேகக் குழந்தைகளைப் பெற்றும் சந்தோஷமாக வாழ்வார். ஜாதகர் உயர் பட்டப் படிப்பினை முடித்து அதனால் நல்ல பலன் அடைவதோடு, பல வாகனங்களை உடையவராகவும் திகழ்வார். பாதிப்படைந்தால்,  அறிவு முதிர்ச்சியற்ற, இழிவான குணமுள்ள வாழ்க்கைத் துணையால், மணவாழ்க்கையும் பாதிப்பு அடையும். வாகன விஷயத்திலும் முடிவில்லாத பல கஷ்டங்களையும் அனுபவிப்பார். நிழல் கிரகங்கள் மற்றும் அசுபகிரகங்களால் மேலும் பாதிக்கப்பட்டால் வாழ்க்கைத் துணையின் குணம் கேள்ளிவிக்கு உரியதாக இருக்கும்.
7 ஆம் அதிபதி ஐந்தில் இடம் பெற்ற ஜாதகர் –
         இளமையிலேயே திருமணம் ஆகும். வாழ்க்கைத் துணை செல்வ நிலையில் உயர்ந்த, மிக நல்ல குடும்பத்தில் இருந்து அமையும். அறிவு மிக்க முதிர்ச்சி பெற்ற துணையாக அமைவது ஜாதகருக்கு மேலும் சாதகமான நிலையாக இருக்கும். 7 ஆம் அதிபதி பலமற்றவராக இருப்பின் குழந்தைகள் இல்லா நிலை ஏற்படலாம். மிகவும் அதிகமாக அல்லது மோசமாக பாதிக்கப்பட்ட நிலையில் வாழ்க்கைத் துணையின் முறையற்ற உறவுகளின் மூலமாக குழந்தை பிறக்கலாம்.   7 ஆம் அதிபதிக்கு நல்ல கிரக தொடர்பும், தீய கிரகத் தொடர்பும் இரண்டுமே ஏற்பட்டால், அவற்றின் தாக்கம் காரணமாக, பெண் குழந்தைகள் மட்டும் பிறக்கும். ஜாதகரின் அலுவலக உயர் அதிகாரிகளுக்கு வெளிநாட்டுத் தொடர்புகள் மூலமாகப் பல இன்னல்கள் ஏற்படலாம். ஜாதகர் நல்ல ஒழுக்கமான குணங்களை உடையவராக இருப்பார்.
7 ஆம் அதிபதி ஆறில் இடம் பெற்ற ஜாதகர் – 
         இரண்டு திருமணங்கள் புரிந்து, இருவருடனும் வாழ்வார். மாமன் மகளை மணக்கலாம். அதிபதியும், காரகரும் மோசமாக பாதிப்படைந்து இருந்தால் ஜாதகர் மலட்டுத் தன்மை உடையவரக இருப்பார். மேலும் பல நோய்களும் இருக்கலாம். வாழ்க்கைத் துணை நோயுள்ளவராகவும், பொறாமை குணம் உடையவராகவும், வாழ்க்கைத் துணையை மண வாழ்வில் சந்தோஷமாக வாழவிடாதவராகவும் இருப்பார். காரகன் நல்ல நிலையைப் பெற்று, அதிபதி பலமற்று இருந்தால் ஜாதகர் மூலநோயால் கஷ்டப்படுவார். சுக்கிரன் பாதிப்பு அடையாமால், பலம் குறைந்து காணப்பட்டால், ஜாதகர் அஜாக்கிரதை காரணமாக வாழ்கைத் துணையை தொலைத்துவிடலாம் அல்லது அவளை விட்டு ஓடிவிட நேரலாம். 
7 ஆம் அதிபதி ஏழில் இடம் பெற்ற ஜாதகர் –
        பலம் மிக்கவராக இருந்தால் ஜாதகர் காந்த மெனக் கவர்ந்து இழுக்கும் அழகு உடையவராக இருப்பார். பெண்கள் இவரைக் கவர இனிப்பை மொய்க்கும் எறும்பு எனச் சுற்றி தங்கள் விருப்பத்தைத் தெரிவிக்க முயலுவர். கணவனோ அல்லது மனைவியோ கௌரவம் மிக்க, மதிப்பு மிக்க குடும்பத்தில் இருந்து வந்தவராகவும், மரியாதைக்குரிய சமூக அந்தஸ்து உடையவராகவும் இருப்பார். பலமற்ற, பாதிக்கப்பட்ட 7 ஆம் அதிபதி ஆயின், தனிமை நிறைந்த வாழ்க்கையைத் தந்து விடுகிறது. திருமணம் இல்லாத, மற்றும் நண்பர்கள் அற்ற நிலையும், திருமண ஏற்பாடுகளின் போது இழப்புக்கள் ஏற்படும்.
7 ஆம் அதிபதி எட்டில் இடம் பெற்ற ஜாதகர் –
        நல்ல நிலையில் இருந்தால் சொந்தத்தில் திருமணம் நடக்கும் அல்லது துணைவர் பெரிய பணக்கார இடத்தில் இருந்து அமைவார். பாதிக்கப்பட்ட நிலையில் இருந்தால் துணைவரின்  விரைவான மரணத்திற்குக்கு காரணமாவார் 7 ஆம் அதிபதி. ஜாதகர் தூரதேசத்தில் மரணமடைவார். நோயுற்ற மனைவி, முசுடான குணம் உடையவளாக அமைவாள். கணவன் மணமுறிவுக்கோ அல்லது பிரிவினைக்கோ முயலுவார்.
7 ஆம் அதிபதி ஒன்பதில் இடம் பெற்ற ஜாதகர் –
         பலம் மிக்கவராக இருப்பின் ஜாதகரின் தந்தை வெளிநாட்டில் வசிப்பதின் மூலமாக தனது அதிர்ஷ்டத்தை பெருக்கி வாழ்க்கையில் முன்னேற்றம் உடையவராய் இருப்பார். ஜாதகர் நல்ல சரியான வாழ்க்கையை நடத்தக்கூடிய அளவுக்கு தூண்டுதலாக அமையக்கூடிய, அறிவுள்ள, புத்திசாலித்தனம் மிக்க மனைவி அமைவாள். பாதிப்படைந்த 7 ஆம்அதிபதி 9 இல் இருப்பின் ஜாதகரின் தந்தை இளமையிலேயே இறக்கலாம். இவருக்கு அமைந்த மனைவி தர்ம வழியில் நேர்மையான முறையில் இவரை வாழ விடமாட்டாள். இவர் வீண் செலவுகள் செய்து சொத்துக்களை இழந்து வறுமையில் வாழ நேரும்.
7 ஆம் அதிபதி பத்தில் இடம் பெற்ற ஜாதகர் –
        அதிபதி நன்நிலையில் இருந்தால், ஜாதகருக்கு வாழ்க்கையில்  வெளிநாட்டுத் தொழில் மூலமாக செல்வ மழை கொட்டும் அல்லது தன் வாழ்க்கையில் தொழில் முன்னேற்றத்துக்காக அடிக்கடி பயணம் மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும். இவருக்கு அமையும் மனைவி அல்லது கணவன் விசுவாசம் மிக்கவராகவும், உண்மையானவராகவும் இருப்பார். இவருடைய வருமானம் கூடும் விதமாக, துணையானவர் வேலைக்குச் செல்பவராக இருப்பார் அல்லது வாழ்க்கையில் முன்னேறும் விதமாக அவருடைய முன்னேற்றங்களுக்குக் கை கொடுப்பவராக இருப்பார். பாதிக்கப்பட்டிருந்தால், வாய்க்கும் களத்திரம் கச்சத்தனம் உள்ளவராகவும், பேராசை மிக்கவராகவும் இருப்பார். ஜாதகரின் தொழில் முன்னேற்றங்கள் பாதிப்பு அடைவதோடு, சீர்கேடு அடையலாம்.
7 ஆம் அதிபதி பதினொன்றில் இடம் பெற்ற ஜாதகர் –
         ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் நிகழலாம் அல்லது பல பெண்களுடன் உறவு வைத்திருக்கலாம். சுபநிலையில் இருந்தால், உயர்ந்த நிலையில், பெரிய குடும்பத்தில் வந்தவளாக இருப்பாள் அல்லது அதிக செல்வ வளங்களைக் கொண்டு வருபவளாக இருப்பாள். பாதிப்படைந்த நிலையில் இருந்தால் ஜாதகர் ஒன்றுக்கு மேற்பட்டவரை மணக்கலாம். அதில் ஒருவர் நீண்ட காலம் வாழ்ந்திருப்பார்.
7 ஆம் அதிபதி பன்னிரெண்டில் இடம் பெற்ற ஜாதகர் –
        ஒன்றுக்கும் மேற்பட்ட திருமண வாழ்க்கை ஏற்படலாம். முதல் மனைவி உயிருடன் இருக்கும் போதே வேறொருத்தியை அவளுக்குத் தெரியாமல் ரகசியமாக மணக்கலாம். பாதிப்படைந்த நிலையில் முதல் மனைவியைப் பிரிந்த நிலையிலோ அல்லது அவள் இறந்துவிட்ட நிலையிலோ வேறு ஒருத்தியை மணப்பார். ஆனால் இந்த பாதிப்பு அதிகமுள்ள நிலையில் கணவன், மனைவி திருமணம் நடந்த சில காலத்திலேயே பிரிவினையாலோ, இறப்பாலோ பிரிய நேரலாம் ஆனால் மறுமணத்துக்கான வாய்ப்பு இருக்காது. இறப்பானது பயணத்தின் போதோ அல்லது வெளிநாட்டிலோ ஏற்படலாம். காரகரும், 7 ஆம் அதிபதியும் பலம் குறைந்தவராகக் காணப்பட்டாரானால் ஜாதகர் மனைவியின் முகத்தைக் கனவில் மட்டுமே காணமுடியுமே அன்றி திருமணம் அவருக்கு வாய்க்கப் பெறாது. அவருக்கு அமையும் பெண் வேலைக்கார வீட்டுப் பெண்ணாகவும் இருக்கலாம். பொதுவாக அவர்     ஏழையாக இருப்பார். எச்சிற் கையில் காகத்தைக் கூட ஓட்டமாட்டார்.
       மேலே கூறப்பட்ட ஜாதக நிலைகளின் பலன்களை இதில் கூறப்பட்டுள்ளபடி மொட்டையாகப் பயன்படுத்தக் கூடாது. முழு ஜாதக கிரக நிலைகளை அனுசரித்தே பலன் காணப்பட வேண்டும். அத்துடன் கிரகங்களின் பலம் அறிந்து, வலுவான நிலையில் உள்ளதா ? -  என அறிந்த பின்னரே பலன் நிர்ணயிக்கப்பட வேண்டும்.