Search This Blog

Friday, 25 August 2017

மிதுன சுக்கிரன் தரும் மீளாத வாழ்க்கை !

         ஜாதகத்தில் நல்ல பலன்களைக் கொடுக்கக் கூடிய சுக்கிரன் ஒரு சுபகிரகம். இராசி மண்டலத்தில் சூரியனுக்கு மேற்குப்புறம் இருக்கிறது. சுக்கிரன் பலவித சுக துக்கங்களையும் குறிப்பவனாகும். ஆனால், சுக்கிரனுக்கு முக்கியமாக சில குணங்கள் உண்டு. சுக்கிரன் வலுவான, அழகான, சரீரத்தை உடையவர். வசீகரத் தோற்றத்தையும், கருமையான சுருட்டை நிறைந்த கேசத்தையும் உடையவர். அவர் கண்கள் மிக நேர்த்தியாக இருக்கும். கண்கள் கூர்மை மிக்கதவாகவும், பிறரை வசீகரிகக் கூடியதாகவும்  இருக்கும்.  இவரது உயரும் சுமாரானதாகவும் இருக்கும். இவர் குறைவாகவும், மிதமான அளவு உண்பவராகவும் இருப்பார்.  இவர் மேம்பட்ட குணாதிசயங்கள் படைத்தவர். ரஜோ குணத்தைப் பெற்றவர். சந்தோஷம் நிறைந்தவர். புலன் உணர்ச்சி இன்பங்களில் ஆர்வம் மிகுந்தவர். இவருக்கு ஒரு கண்ணில் பார்வைக் குறைவு உண்டு என்பது சாஸ்திரம். இவர் பிராமண வகுப்பைச் சேர்ந்தவர். கிரக சாம்ராஜ்யத்தில் மந்திரி பதவி இவருக்கு உரியதாகும். இவரது பாஷை சமஸ்கிருதமாகும். தென்கிழக்கு திசை இவருக்கு உரியது. அதிதேவதை (மஹாலட்சுமி) பிரத்தியதி தேவதை இந்திரன் ஆவார். இவருக்கு உகந்த புஷ்பம் வெண்தாமரை. ஆசனம் – ஐங்கோணங்களை உடையது. இரத்தினம் – வைரம் அல்லது வெள்ளைப் புஷ்பராகம். உலோகம் – வெள்ளி. தான்யம் – மொச்சை. இவருக்கு மிக்க சந்தோஷத்தைத் தரக்கூடிய நேரம் பகல் 2 மணி முதல் 3 – 30 மணி வரையாம். மனிதனது உடலில் இவர் இந்திரியங்களைக் குறிகாட்டுகிறார்.
        அடுத்து இவரது காரகத்துவங்களைப் பற்றி  அறிந்து கொள்வோமா ? அரசு சின்னம், திருமணம், வெள்ளை நிறம், காதலன் அல்லது காதலி சுகங்கள், காரிய சித்தி, புஷ்பங்கள், கீர்த்தி, யௌவனம், பயணம், உப்பு ரசம், நேர் பார்வை, ஓரு பட்சம், (15 நாள்) யஜுர்வேதம், அரசாள்வோர், வியாபாரிகள், அழகு, சல்லாபம், ஆறுகள், நாற்படை, விசித்திரமான கவிதை, நடனம், பாட்டு, சம்போகம், நடுவயது, பெண் சுகம், மனைவியின் சந்தோஷம், பலவித ஆபரணங்கள், பிறரைப் பரீசலிப்பதில் இஷ்டம், மதிபிற்குரிய வேலை ஆட்கள், ஒருவரது பாக்கியம், உடற்கவர்ச்சி, நல்ல குழந்தைகள், பல இராஜ்ஜியங்கள், பூ மாலைகள், நாதஸ்வரம், வீணை மற்றும் புல்லாங்குழல் போன்ற வாத்தியக் கருவிகள், இராஜநடை, அணிமா, மணிமா, கரிமா, லஹிமா, பிராப்தி, பிராகாம்யம், ஈசத்துவம், வசித்துவம் ஆகிய அஷ்ட ஐஸ்வரியங்கள், மனோகரமான அவயவங்கள், ருசியான சிற்றுண்டி உணவுகள், வசந்த ருது, பெண் பணியாளர், கிழக்கு, கண்கள், உண்மையான உரையாடல், கலைகளில் நுண்ணறிவு, குளிப்பதில் இஷடம், கம்பீரம், அதிசயம், நடிப்பு, நாடகங்களும், விளையாட்டுக்களும், அலங்கரித்துக் கொள்ளுதல், விளையாட்டில் ஆர்வம், காமவெறி, தன்மானம், வெண்ணிற ஆடைகள், லட்சுமி பூஜை. காமக்கீரிடையால் சோர்வு, பகல், தாய்மை, காவிய நிர்மாணம், கட்டுரைகள் எழுதும் தன்மை, சுபகாரியங்கள், மர்ம உறுப்புகள், மலமூத்திரம் வெளியேறுதல், பாம்புப் புற்று, வழி நடத்தல், மனைவியிடம் இருந்து அல்லது மனைவிக்குக் கிடைக்க்க் கூடிய சொத்து, ரகசியங்கள், மாலை போஜனம் இவற்றையெல்லாம் குறிக்கும்.
பாவங்களில் சுக்கிரன் தரும் பலன்.
       இலக்னத்தில் சுக்கிரன் இருந்தால் நடனம், நாட்டியம், சங்கீதம், போன்ற கலைகளில் அதிக நாட்டம் உள்ளவர்களாக இருப்பர். அரசங்காத்திடம் இருந்து விருதுகளும், பரிசுகளும் பெறுவர்.
        இரண்டாம் வீட்டில் இருந்தால் நல்ல உணவும், பானங்களும் கிடைக்கும். தன்னை அலங்கரித்துக் கொள்வதில் அதிக நாட்டம் இருக்கும். வாகனம், வீடு போன்ற பல சுக சௌக்கியங்கள் உள்ளவர்களாவார்.
        மூன்றாம் இடத்தில் சுக்கிரன் இருந்தால் மெலிந்த சரீரமும், தாழ்ந்த புத்தியும், பிறரைக் கண்டு சகிக்காத மனமும், காம விவகாரங்களில் துக்கம் அடைபவனாகவும், தன் சுற்றத்தாருக்கு கஷ்டங்கள் கொடுப்பவனாகவும், கெட்ட நடத்தையில் ஈடுபடுபவனாகவும் இருப்பான்.
        நான்காம் இடத்தில் சுக்கிரன் இருக்க நல்ல சுகஜீவனத்தை அனுபவிப்பான். ஆனால் அடிக்கடி வஞ்சனைக்கு உள்ளாவான்.
        ஐந்தாமிடத்தில் சுக்கிரன் இருக்க, எல்லாக் காரியங்களிலும், முக்கியமாக கலைகளிலும் நாட்டமுள்ளவனாக இருப்பான்.
                   ஆறாம் இடத்தில் சுக்கிரன் இருந்தால் பெண்களிடம் வெறுப்பு உள்ளவனாக இருப்பான். எப்பொழுதும் ஏக்கப்பட்டுக் கொண்டிருப்பான். பலமற்ற சரீரம் உடையவன். சத்ருக்களின் பேரைக் கேட்டால் அஞ்சுபவனாய் இருப்பான். அரசாங்கத்தினரால் சிற்சில தொல்லைகள் ஏற்படும்.
        7 ஆம் இடத்தில் சுக்கிரன் இருக்க எப்போதுமே சிற்றின்பத்தை நினைத்து வருந்திக் கொண்டே இருப்பவனாகவும்.  கெட்ட நடத்தையுள்ள பெண்களிடம் நேசம் உள்ளவனாகவும், கால தேச வர்த்தமானத்தை நினைக்காமல் காமவெறியோடு இருப்பவனாகவும், மனைவியால் இகழப்பட்டவனாகவும் இருப்பான்.
        8 ஆம் இடத்தில் சுக்கிரன் இருக்க அரசிடமிருந்து பணம் கிடைக்கக் கூடும். ஆனால், அவனக்கு அகங்காரமும், கர்வமும் அதிகமாக இருக்கும். அவன் யாரையும் எளிதில் நம்பிவிடுவான்.
         9 ஆம் இடத்தில் சுக்கிரன் இருக்க இவன பலராலும் பூஜிக்கப்படுவான். இவன் வெளிநாடு போவதற்காகவும், வழிபாடுகளை நிறைவேற்றுவதற்காகவும் பணம் சேமித்து வைப்பான். இவனுக்கு அடிக்கடி மனைவியிடம் தகராறு வரும், ஆனாலும் சமாதானம் ஆகிக் கொள்வான்.
        10 ஆம் இடத்தில் சுக்கிரன் இருக்க – சுக ஜீவனமும், நித்திய கர்மானுஷ்டானங்களும், மனைவி மக்களிடம் அன்பும், தெய்வ அனுகூலமும், விடா முயற்சியும், சகிப்புத் தன்மையும் உடையவனாகவும் இருப்பான்.
        11 ஆம் இடத்தில் சுக்கிரன் இருக்க சங்கீதம், நடனம், நகாசு வேலைகள் ஆகியவற்றில் அதிக ஆர்வம் உள்ளவனாக இருப்பான். தர்ம காரியங்களில் பங்கெடுப்பான். வேதம் முதலியவற்றை நன்கு படிப்பான்.
        12 ஆம் இடத்தில் சுக்கிரன் இருக்க – நல்ல வழிகளை விட்டு விட்டுக் தீய வழிகளிலேயே திரிந்து கொண்டிருப்பார்கள். பல சேர்க்கைகள் இருக்கும். மணவாழ்வில் மணமிருக்காது.
        இப்படிப்பட்ட சுக்கிரன் இராசியிலோ, நவாம்சத்திலோ மிதுனத்த்தில் வந்துவிட்டால், மணவாழ்வைக் கெடுத்துக் குட்டிசுவராக்கிவிடுவார் என்பது அனுபவ உண்மையாகும்.
        மிதுனத்தில் சுக்கிரன் இருக்குமானால் அந்த ஜாதகன் பணக்காரனாகவும், பதவிசு நிறைந்தவனாகவும், இரக்கம் உள்ளவனாகவும், நன்றாக பேசக் கூடியவனாகவும், பிறரால் போற்றப்பட்டவனாகவும், நுண்கலையில் ஆர்வம் உள்ளவனாகவும். வாக்குவாத்த்தில் கெட்டிக்காரனாகவும், பணமே கதி என்று இருப்பவனாகவும் இருப்பான். அவனுக்குக் கல்யாணத்தின் மூலம் எப்போதும் சுகம் ஏற்படாது. மனைவிக்கும், அவனுக்கும் தகராறுகள் இருந்து கொண்டேயிருக்கும். இவற்றை ஓரிரு ஜாதகங்கள் கொண்டு பலன் அறிவோம்.
        இப் பெண்மணி 16 – 11 – 1960 இல் மாலை 6 மணி – 23 நிமிடங்களுக்கு, பெங்களூருவில் பிறந்தவர். இவரது இலக்னத்தில் ஒரு கிரகமும் இல்லை. இலக்னாதிபதி சுக்கிரனும், குருவும், சனியும் 8 ஆம் வீட்டில் இருக்கின்றனர்.  7 ஆம் வீட்டு அதிபதி செவ்வாய் 2 ஆம் வீட்டிலும், 8 க்குடைய குரு தன் வீட்டில் சுக்கிரன் மற்றும் சனியுடனும் இருக்கிறது. நவாம்ச இலக்னம் பாபகர்த்தாரி யோகத்தில் இருக்கிறது.


லக்//
செவ்

கேது
லக்//

செவ்
சுக்
கேது
    
   இராசி

புத

நவாம்சம்
குரு
சூரி

ராகு


சனி,குரு
சுக்
சூரி
புத
சந்


சனி
சந்
ராகு

தசா இருப்பு – செவ்வாய் – 4 வ – 2 மா – 15 நாள்.
மிதுன நவாம்சத்தில் சுக்கிரன் உள்ளார்.  இலக்னத்துக்கு 7 ஆம் வீட்டில் சூரியனும், நவாம்ச 7 ஆம் வீட்டில் இராகுவும் உள்ளனர். இவர் சிவில் இன்ஜினியரிங் டிப்ளமோ படித்து, இரயில்வேயில் வேலைக்குச் சேர்நதார். தன்னுடன் வேலை செய்யும் வேறு ஜாதிப் பையனை இப் பெண் பதிவுத் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகே, தன் பெற்றோரிடம் தெரிவித்தார். ஆனால், திருமணம் நடந்த 8 மாதங்களுக்குள் இருவருக்குள்ளும் சண்டை ஏற்பட்டுத் தன தந்தையின் வீட்டுக்கே திரும்ப வந்துவிட்டார். தான் செய்த தவறுக்காக வருந்தி வேதனைப்படுவதே கண்ட பலனாயிற்று.

       அடுத்த ஜாதகம் ஒரு ஆண் மகனது. ஜாதகர் 6 – 6 – 1952 அன்று காலை 10 – 30 மணிக்கு திருச்சூரில் பிறந்தவர். இவருக்கு மிதுன நவாம்சத்தில் சுக்கிரன் அமர்ந்துள்ளார். இவருக்குத் திருமணம் நடந்து 2 பெண் குழந்தைகளுக்குத் தந்தையான பிறகு, வியாபார விஷயமாக அடிக்கடி வெளியூர் சென்ற இவர், சென்ற இடத்தில் அழகு நிறைந்த ஒரு முஸ்லீம் பெண்ணை புதன் திசை சுக்கிர புத்தியில் நேசித்து திருமணம் செய்து கொண்டார்.

குரு
சுக்,புத
சூரி



கேது
சந்
சனி(வ)
சுக்
புத
இராகு
      
இராசி
லக்//


நவாம்சம்
சூரி

கேது
லக்
குரு


செவ்,
சந்
சனி (வ)
செவ்

இராகு


திசா இருப்பு – குரு தசா – 9 வ – 5 மா – 26 நாள்.
அவளின் விருப்பப்படி மதம் மாறி, தனது மனைவி, குழந்தைகளை உதறித் தள்ளிவிட்டு, இவளோடு சிறிது காலமே வாழ்ந்தார். அதற்குப் பிறகு இப் பெண் அசல் முஸ்லீம் பையன் ஒருவன் மீது காதல் கொண்டு, இவனை உதறி சென்றுவிட்டாள். அரசியை நம்பி மனைவியைக் கைவிட்ட கதையானது.
        அடுத்து ஒரு ஜாதகம். இவர் ஒரு பொறியாளர். 30 – 4 – 1956, காலை சுமார் 04 மணி-45 நிமிடத்திற்கு – சென்னையில் பிறந்தவர். இவரது ஜாதகத்தில் மிதுனத்தில் சுக்கிரன், 2 இல் சூரியன் இருக்கிறார். 7 ஆம் அதிபதி புதன் பாபகர்த்தாரியில் உள்ளார். சனியால் பார்க்கப்படுகிறார். இலக்னமும் பாபகர்த்தாரியில் உள்ளது.
லக்//
சூரி
புத
கேது
சுக்

புத,லக்
குரு

கேது
செவ்


     
      இராசி
குரு


நவாம்சம்
சந்
செவ்


சூரி
சந்
சனி(வ)
இராகு



இராகு
சுக்
சனி(வ)

கேது தசா இருப்பு – 0 வ – 8 மா – 17 நாள்.
இந்த ஜாதகர் தனது 28 வது வயதில் ஒரு பெண்ணை மணந்தார். ஆனால், அவர் கதை, செல்லாக் காசு கொடுத்து  ஊசல் வடையை வாங்கியது போல் ஆகிவிட்டது. அவர், மணந்து கொண்ட பெண் ஏற்கனவே கன்னி கழிந்தவள் என்றும், கருவினை அழித்தவள் என்றும் திருமணம் முடிந்த்துமே தெரிந்துவிட்டது.
        ஜோதிட சாஸ்திரத்தில் சொல்லப்பட்டிருக்கும் ஒவ்வொரு நீதியும், நடப்பையும், உண்மையையும், பிரத்யட்சமாக எடுத்துக் காட்டுகிறது. எனவே, இவ்வளவு விலை மதிக்க முடியாத ஜோதிட சாஸ்திரத்தை உதறித் தள்ளிவிட்டு மக்கள் கஷ்டப்படுவது யாருக்குமே சோபையையும், சந்தோஷத்தையும் தருவதில்லை.



Thursday, 10 August 2017

குருப் பெயர்ச்சி பலன்கள் - 2017 மகரம், கும்பம், மீனம்.


குருப் பெயர்ச்சி பலன்கள் - 2017
மகரம், கும்பம், மீனம்.




மகரம்


( உத்திராடம்- 2,3,4- பாதங்கள், திருவோணம்-1,2,3,4 மற்றும் அவிட்டம் 1,2 பாதங்கள் )
       கர்மகாரகனான சனியை அதிபதியாகக் கொண்ட அலைந்து கொண்டே இருப்பவரும், சாதிக்கும் வலிமையும், பலன் கருதி உதவுபவருமான மகரராசி அன்பர்களே! தங்கள் இராசிக்கு குருப் பெயர்ச்சி தரும் பலன்களைப் பார்ப்போம். பொதுப் பலன்கள், பார்வை பலன்கள், மூர்த்தி நிர்ணயப்படி சிறப்பு பலன்கள் என அனைத்து இராசி நண்பர்களுக்கும் சீரான சிறப்பான பலன்களே அமையும்.

       தங்கள் இராசிக்கு தைரிய, விரய பாவாதிபதியான குருஆவணி 27 க்கு  கர்ம பாவத்தில் அமர்கிறார். அதன் காரணமாக  ஈசன் பிரம்மனின் தலையைக் கொய்த தோஷத்திற்காக, கிள்ளப்பட்ட அவனின் தலை ஓட்டிலேயே அவர் பிச்சை எடுத்துத் திரிந்தார் என்பது பழம் பாடல்.  அப்படியிருக்க நாம் எம்மாத்திரம். அனைத்துக் காரியங்களுக்கும்  பிறர் தயவையே நாட வேண்டியிருக்கும்சிலருக்கு இதுநாள்வரை பார்த்துக் கொண்டிருந்த வேலையை விடவேண்டிய சூழல் எழலாம். சிலருக்கு இதுநாள்வரை வகித்து வந்த பதவி பறி போகலாம். பதவி உயர்வு கிடைக்க தடை, தாமதங்கள் கூட ஏற்படலாம். மனக்கவலைகளால் உடல் ஆரோக்கியம் கெட்டு, பல வியாதிகளுக்கு வழிவகுக்கலாம்.மாசினும் பணவரவுகள் ஓரளவு வந்து கொண்டுதான் இருக்கும். எவரை நம்பியும் கடன் கொடுக்க வேண்டாம். உங்கள் விருப்பங்கள் எதுவும் நிறைவேறாது. வெளியூர், வெளிமாநிலம், வெளிநாடு என ஊரைவிட்டுப் போகவேண்டிய சூழ்நிலை எழலாம். மனச் சோர்வால், உடல் சோர்வும் சேர்ந்து கொள்ளும். எதிலும் திருப்திகரமான வாழ்க்கை அமையாது. அரசு மூலம் எவ்வித ஆதாயங்களையும் எதிர்பார்க்க முடியாது. வியாபாரம், தொழில் புரிபவர்களுக்கு, போட்டிகள் அதிகமாகி உழைப்புக்கேற்ற இலாபம் இருக்காது. வாழ்க்கையில் பிடிப்பு இல்லாமல் வெறுப்பாய் இருக்கும். வீண் விவாதங்களால் பிறருடன் மனஸ்தாபம் ஏற்படும். கையிலுள்ள பணமெல்லாம் விரயத்தால் கரையும். உழைப்பு அதிகமாகி ஊதியம் குறையும். பொதுவாழ்வில் மற்றும் அரசியலில் இருப்பவர்களுக்கு கெடுபிடிகள், வேண்டாத டென்ஷன், எதிரிகளின் ஏற்றம் ஆகியவை காரணமாக இறங்குமுகமாக, முன்னேற்றம் எதுவும் இன்றி, பின்னடைவுகளைத் தரும். அவமானங்களும் ஏற்படலாம். அரசுப் பணியாளர்கள் உயர் அதிகாரிகளின் நெருக்கடி தாங்காமல் விடுமுறை எடுக்க வேண்டிய நிலை ஏற்படலாம். எனவே, அமைதியாக மருத்துவ விடுப்பு எடுத்து மனையிலேயே ஓய்வெடுப்பது டென்ஷனையாவது குறைக்கும். பெற்றோர்களின் மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும்.

            குரு 5 ஆம் பார்வையாக தனபாவத்தைப் பார்வையிடுவது நல்ல நிலை ஆதலால் இல்லத்தில் இனிய விழாக்கள், சுபகாரியங்கள் சிறப்புற நடைபெறும்.பல வழிகளிலும் தனவரவு ஏற்படும். முன்னர் பிரிந்திருந்த தம்பதியர் ஒன்று சேர்ந்து இன்ப மயமான வாழ்க்கை வாழ்வர். உடன் பிறந்தவர்கள் வெளியூருக்குப் பிரயாணங்கள் மேற்கொள்வர். மாணவர்களுக்குக் கல்வி தொடர்பான விஷயங்களில் மேன்மை ஏற்படும். வக்கீல், மதபோதகர், ஜோதிடர் போன்ற வாக்கால் வருமானம் ஈட்டுவோருக்கு தேவைக்கு அதிகமாகவே வருமானம் வரும்.

       குரு 7 ஆம் பார்வையாக சுக பாவத்தைப் பார்வையிடுகிறார் அதன் காரணமாக புதிய நவீன வண்டி வாகனங்கள் வாங்குவீர்கள். புதிய மனை, வீடு ஆகியவற்றை வாங்கும் யோகம் ஏற்படும். தாயாரின் ஆரோக்கியம் மேம்படும். உடுக்கை இழந்தவன் கை போல உயிர் நண்பர்கள் தக்க சமயத்தில் உதவிக்கரம் நீட்டுவர். ஆராய்ச்சிக் கல்வி படிக்கும் மாணவர்கள் வழிகாட்டுபவர்கள் உதவியுடன் மேன்மை அடைவர். உங்கள் வாழ்க்கைக்குத் துணைக்கு அவர்கள் கல்வித் தகுதிக்கு ஏற்ப புதிதாக, சிறப்பான, கைநிறையச் சம்பளத்துடன் நல்ல வேலை கிடைக்கும். வழக்கு, வியாஜ்யங்கள் உங்களுக்கு சாதகமாக வெற்றி பெறும்.   

      குரு தனது 9 ஆம் பார்வையால் ருண, ரோக, சத்ரு ஸ்தானத்தை பார்வை செய்கிறார். அதன் காரணமாக நீண்ட நாட்களாக இருந்துவந்த வியாதிகள் மருத்துவ முன்னேற்றங்களால் நன் முறையில் குணமாகும். இதுவரை எதிரிகளாக இருந்தவர்கள் சமாதானக் கொடி பறக்கவிட்டு நட்பு பாராட்டுவார்கள். பகை மறைந்து புதிய நட்புகள் உருவாகும். மனைவியின் மனம் கோணாமல் ஆடம்பர பொருட்கள் அனைத்தையும் வாங்கிக் கொடுத்து மகிழவைத்து, மகிழ்வீர்கள். சமூகத்தில் தந்தையின் மதிப்பும், மரியாதையும் உயரும். அசையாச் சொத்துக்கள் வாங்கும் யோகம் ஏற்படும்.

      மகர இராசியினருக்கு மூர்த்தி நிர்ணயப்படி ரஜத மூர்த்தியாக இரண்டாம் நிலையில் அமைவதால் இந்த இராசிக்காரர்களுக்கு வெள்ளி ஆபரணங்கள், பாத்திரங்கள் ஆகிய சேர்க்கை உண்டாகி நன்மை அளிக்கும்.

              மகரத்திற்க்கு -  ரஜத மூர்த்தியாக இருப்பதால் சுப பலன் சிறிதளவு குறையும். (10) 65%

     ஒவ்வொரு வியாழக் கிழமையும், குரு ஹோரையில், தொடர்ந்து 12 வாரங்கள் குரு ஸ்தோத்திரத்தை 108 முறை பாராயணம் செய்து, மஞ்சள் வர்ண மலர்களால் அர்ச்சித்து வழிபாடு செய்ய நற்பலன்கள் சித்திக்கும்.





கும்பம்


( அவிட்டம் – 3,4 பாதங்கள்சதயம்-1,2,3,4 பாதங்கள்-பூரட்டாதி-1,2,3 பாதங்கள்)
       ஆயுள் காரகனான சனியை அதிபதியாகக் கொண்ட மனித இனத்திற்கு சேவை செய்யும் மனப்பான்மையும், நியாயம் வழக்குவதில் சமர்த்தரும், ஆன்மிகத் துறையில் நாட்டமுடையவருமான  கும்பராசி அன்பர்களே! தங்கள் இராசிக்கு குரு பெயர்ச்சி  தரும்  பலன்களைப் பார்ப்போம். பொதுப் பலன்கள், பார்வை பலன்கள், மூர்த்தி நிர்ணயப்படி சிறப்பு பலன்கள் என அனைத்து இராசி நண்பர்களுக்கும் சீரான சிறப்பான பலன்களே அமையும்.

      தங்கள் இராசிக்கு தனம் மற்றும் இலாப பாவத்திற்கும் அதிபதியான குருஆவணி 27 க்குப் பிறகு ஒன்பதாமிடம் அமர்ந்து உங்கள் இராசியை நேரடியாகப் பார்க்கிறார். திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமணம் விரைவில் நடக்கும். புது வாகனம் வாங்கும் யோகம் மற்றும்  புத்திர பாக்கியம் ஏற்படும். குடும்பத்தில் நிலவிய குழப்பங்கள், தடுமாற்றங்கள் அனைத்தும் உங்கள் சமயோசித புத்தியால் சரியாகிவிடும்நல்ல யோகமான காலமாதலால் அரசாங்க அனுகூலங்கள், எதிரிகளை வெல்லுதல், அதிகரிக்கும் சொத்துக்கள் என எல்லாம் நன்மையாகவே நடக்கும். இதுநாள்வரை இருந்து வந்த சிறு உடல் உபாதைகள் மறையும்.  ஏமாற்றங்கள், மனமகிழ்ச்சியற்ற மணவாழ்க்கை ஆகியவை மறைந்து கணவன் மனைவிக்கு இடையே நல்லுறவு ஏற்பட்டு வீட்டில் மகிழ்ச்சி நிலவும். இராஜ தந்திரத்தால் அரசியலில் நல்ல பதவிகள் வந்து சேரும் இராஜயோகம் உண்டாகும். அரசாங்கத்தின் மூலமாக எதிர்பார்த்த அனுகூலங்கள் அனைத்தும் தாமதம் இன்றிக் கிடைக்கும். புண்ணிய காரிய ஈடுபாட்டினால் தானதருமங்கள் செய்து மங்காத புகழ் எய்துவீர்கள். தவத்திலும், பூஜை புனஸ்காரங்களிலும், தெய்வீக வாழ்க்கையிலும் பற்று ஏற்படும்.  தந்தையின் முழுமையான ஆதரவு கிட்டும். பொதுமக்களுக்குக் காப்பாளராக இருப்பார். இவர் இடும் கட்டளைகளை பிறர் ஏற்று நடக்கும் வண்ணம் இவருடைய அந்தஸ்து உயரும். வளம் கொளிக்கும் வயல்களால் வசதி வாய்ப்புகள் பெருகும். சமூகத்தில் இவருக்கென ஒரு தனியிடம், அதுவும் முதலிடம் கிடைக்கும். வீட்டிற்குத் தேவையான வீட்டு உபயோகப் பொருட்கள் அனைத்தையும் வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரிகளுக்கு இதுவரை வசூலாகாத கடன்கள் அனைத்தும் வசூலாகிவிடும். மாணவர்களுக்கு நினைவாற்றல் பெருகி கல்வியில் மேன்மை அடைவர். புதிய தொழில்களில் முதலீடுகள் செய்வதால் தொழில் முன்னேற்றங்கள் சிறப்பாக இருக்கும். அரசுப் பணியில் இருப்பவர்களுக்கு அவர்களின் சிறந்த பணிக்காக விருதுகள் கிடைக்கும். அரசு வெகுமதி மற்றும் புகழ் தேடி வரும்.

       குரு தனது 5 ஆம் பார்வையால் ஜென்ம இராசியைப் பார்ப்பதால் இம் மண்ணில் இவரைப்போல் உண்டோ என பெயரும் புகழும் கூடும். தெளிவான சிந்தையால் முடங்கியிருந்த செயல்பாடுகள் அனைத்திலும் உத்வேகத்துடன் செயல்படுவீர்கள். உடல் பாதிப்புகள் விலகி ஆரோக்கியம் மேம்படும். இதயம் தொடர்பான சிகிச்சைகள், சிக்கலின்றி செய்யப்பட்டு நோய் சீராகும். தனியார் மற்றும் அரசுப் பணியில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வுகள் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். முதல் நிலை பெற்று பரிசுகளையும் பெறுவர்.

       குரு 7 ஆம் பார்வையாக தைரிய பாவத்தைப் பார்வையிடுகிறார். அதன் காரணமாக தைரியமாக எடுக்கும் புது முயற்சிகளில் தவறாது வெற்றி அடைவீர்கள். பல நாளாக வேலையின்றி அலைந்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பணவசதி பெருகி அடகு வைத்த நகைகளை திருப்பிவிடுவீர்கள். அதன் காரணமாக கடன் சுமைகள் குறையும். மாணவர்களுக்குக் கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய வாகன யோகம் ஏற்படும். தொலைதூரச் செய்திகள் மகிழ்ச்சி அளிக்கும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் ஏற்படும்.

       குரு தனது 9 ஆம் பார்வையால் புத்திர பாவத்தைப் பார்க்கிறார். இதன் காரணமாக குடும்பத்துடன் குதூகலிக்க இனிய சுற்றுலாப் பயணங்களை மேற்கொண்டு மகிழ்வீர்கள். பூர்வீக சொத்துக்கள் கைக்கு வந்து சேரும். குழந்தைகளின் ஒற்றுமை ஓங்கும். பத்திரிக்கைத் தொழில் சிறக்கும். சந்ததி விருத்தி ஏற்படும். புத்தி கூர்மை, மனத்தெளிவு, சுபவாக்கு, கல்வி கேள்வியால் சொற்பொழிவு ஆற்றும் திறன் ஆகியவை மேம்படும். புராண இலக்கிய உணர்வு, சிறு காவியங்களை அனுபவிக்கும் திறன் ஆகிழவை மேலோங்கும். தாய்வழியிலும், மனைவி மூலமாகவும் இலாபம் உண்டாகும். வீட்டில் சுப மங்கள காரியங்கள் நிறைவேறும்

       கும்ப இராசியினருக்கு மூர்த்தி நிர்ணயப்படி உலோக மூர்த்தியாக நான்காம் நிலையில் அமைவதால் இந்த இராசிக்காரர்களுக்கு இரும்பினாலான விவசாய, பொறியியல் உபகரண சேர்க்கை உண்டாகி குறைந்த அளவு நன்மை அளிக்கும். இரும்பினாலான்ன உபகரணங்கள், பொருட்களை உழவாரப் பணிக்கு, ஆலயங்களுக்குக் காணிக்கையாக செலுத்துவது நல்லது.     

           கும்பம் -  உலோக மூர்த்தியாவதால் அவர் அளிக்கும் நன்மை ஓரளவு குறைகிறது. (9) 75%

       ஒவ்வொரு வியாழக் கிழமையும், குரு ஹோரையில், தொடர்ந்து 12 வாரங்கள் குரு ஸ்தோத்திரத்தை 108 முறை பாராயணம் செய்து, மஞ்சள் வர்ண மலர்களால் அர்ச்சித்து வழிபாடு செய்ய நற்பலன்கள் சித்திக்கும்.




மீனம்


( பூரட்டாதி – 4 ஆம் பாதம், உத்திரட்டாதி-1,2.3.4 பாதங்கள் , ரேவதி- 1,2,3,4 பாதங்கள்)
       தேவகுருவான குருவை அதிபதியாகக் கொண்ட கீர்த்திமான், கெட்டிக்காரர், இரக்கமுள்ள, அதிக செலவாளியுமான மீனராசி அன்பர்களே! தங்கள் இராசிக்கு குரு பெயர்ச்சி  தரும் பலன்களைப் பார்ப்போம். பொதுப் பலன்கள், பார்வை பலன்கள், மூர்த்தி நிர்ணயப்படி சிறப்பு பலன்கள் என அனைத்து இராசி நண்பர்களுக்கும் சீரான சிறப்பான பலன்களே அமையும்.

       தங்கள் இராசிக்கும் கர்ம பாவத்திற்கும் அதிபதியான குருஆவணி 27 ஆம் நாள் 8 ஆம் பாவத்திற்கு இடம் பெயர்கிறார். 7 ஆம் பாவத்தில் இருந்தவரை மணமாகாதவர்களுக்குத் திருமணம் சிறப்பாக நடந்திருக்கும். பிள்ளைகளால் பெற்றவர்கள் பெருமை அடைந்திருப்பார்கள்.  தொழில் துறையில் நல்ல வளர்ச்சி ஏற்பட்டிருக்கும். மனைவி மக்களுடன் வாழ்க்கை சந்தோஷமாகக் கழிந்திருக்கும். இந்த, குருவின் தற்போதைய ஆயுள் பாவ மாற்றத்தால் இம்மை எட்டில் வாலி பட்டம் இழந்து போம்படியானதும்என்ற பழம் பாடலின்படி, இக் காலத்தில் பதவி, உத்தியோகம், கௌரவம் ஆகியவற்றில் இறக்கம், மாற்றம் அல்லது இழப்பு இவற்றில் ஏதேனும் ஒன்று நிகழலாம். .வியாபாரத்தில்  எதிர்பார்த்த இலாபங்கள் கிட்டாது, கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். கீழ்நிலையில் உள்ளவர்களின் சிநேகத்தால் அவப்பெயர் ஏற்படும். பயணங்களின் போது விபத்துக்களைச் சந்திக்க நேரும். எனவே, பயணங்களின் போது அதிக கவனத்துடன் இருங்கள். கோர்ட், வழக்கு போன்ற தண்டச் செலவுகளால் கைப்பணம் கரையும். பணமுடையும் ஏற்படும். தாள முடியாத மனக் கஷ்டங்களும், அதன் காரணமாக உடல் ஆரோக்கியம் கெடுதல் ஆகியவை ஏற்படும். காரியங்கள் எதுவும் நினைத்தபடி கை கூடாது. உடல் உழைப்பு அதிகமாகி அதற்கேற்ற இலாபமோ, பலனோ எதுவும் இராது. அக்னி விபத்து, அரச கோபம், சரீரக் கஷ்டம் ஆகியவை ஏற்படும். உடல் பலஹீனமும், சோர்வும் ஏற்படும்.   தேவையற்ற செலவுகள் ஏற்படும். கடன் வாங்கியவர்களிடம் இருத்து வரவேண்டிய பாக்கிகள், நிலுவையாவதால், பொருளாதாரச் சிக்கல்கள் எழும். தந்தை மூலமான விரயங்கள் தவிர்க்க முடியாத்தாகும். மனைவி மூலமான வருமானங்கள் தக்க சமயத்தில் கை கொடுக்கும். மனதளவிலும், உடலளவிலும் இன்னல்கள் எழும். சிலர் தங்கள் பழைய வீட்டை மாற்றி அமைத்து புதுப்பித்துக் கொள்ளக் கூடும். இளைஞர்களும், யுவதிகளும் தங்கள் காதல் விவகாரங்களால் பெற்றோர்களுக்கு மனவருத்தத்தை அளிப்பர்.
       குரு தனது 5 ஆம் பார்வையால் விரயபாவத்தைப் பார்ப்பதால், செலவுகள அனைத்தும் சுப செலவுகளாக மாறும். வீட்டில் நடக்கும் சுபகாரியங்களால் செலவுகள் கூடினாலும், சந்தோஷம் நிலவும். வீடு கட்டுதல் போன்ற செலவுகள் ஏற்படும். தொழில், வியாபாரம் என சம்பாத்தியம் காரணமாக வெளியூர், வெளி மாநிலம், வெளிநாடு செல்லவேண்டிய சூழல் உருவாகும். அதன் காரணமாக குடும்பத்தைப் பிரிய நேரும்உடன் பிறப்புகளுக்கு தொழில் மேன்மை ஏற்படுவதோடு, சிலருக்கு நல்ல வேலை வாய்ப்பும் ஏற்படும்.

      குரு தனது 7 ஆம் பார்வையால் தனபாவத்தை பார்வையிடுகிறார். அதன் காரணமாக குடும்பத்தில் திருமணம் போன்ற சுபகாரிய நிகழ்வுகள் அதிகம் ஏற்பட்டு சந்தோஷமான தருணங்களாக அமையும். காப்பீட்டுத் திட்டம் மூலமாகவோ, பங்கு சந்தை மூலமாகவோ ஆதாயங்கள் பெருகும். ஏதேனும் ஒரு வகையில் பிறரின் பணம் கையிருப்பு இருந்து கொண்டே இருக்கும். அரசாங்கம் மூலமாக வரவேண்டிய நிலுவைத் தொகைகள் உடனடியாக்க் கிடைக்க வாய்ப்பு உண்டு. அரசியல்வாதிகள் தங்கள் உடன் இருப்பவர்களிடம் அதிகப்படியான எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. கணவன் மனைவி உறவு பலப்படும். தாம்பத்தியத்தில் மகிழ்ச்சி நிலவும்.

       குரு தனது 9 ஆம் பார்வையால் சுக பாவத்தை பார்வை செய்வதால் நோய்கள் தீர்ந்து ஆரோக்கியம் பெருகும். பிள்ளைகளின் கல்வி சம்பந்தமான செலவுகள் அதிகரிக்கும். வீடு மராமத்துச் செலவுகள், வாகனம் சரிசெய்யும் செலவுகள் வழக்கத்தைவிட அதிகமாக இருக்கும். சிலருக்கு வீடு கட்டும் ஆசை நிறைவேறும். மாணவர்கள் ஆராய்ச்சிக் கல்விக்காக வெளியூருக்குச் சென்று தங்கிப் படிக்க வேண்டிய சூழல் உருவாகும். மனையாளுக்குப் புதிய வேலை வாய்ப்புகள் ஏற்படும். வழக்குகள் வெற்றி அடைந்து முடிவுக்கு வரும். தாயின் ஆரோக்கியம் பெருகி, தந்தைக்கு மனமகிழ்ச்சி ஏற்படுத்தும்.

               மீன இராசியினருக்கு மூர்த்தி நிர்ணயப்படி தாமிர மூர்த்தியாக மூன்றாம் நிலையில் அமைவதால் இந்த இராசிக்காரர்களுக்கு செம்பாலான  பாத்திரங்கள்  சேர்க்கை உண்டாகி ஓரளவு நன்மை அளிக்கும். செப்பு பாத்திரங்களை ஆலயங்களுக்குக் காணிக்கையாக செலுத்துவது நல்லது.

       மீனத்துக்கு -  தாமிர மூர்த்தியாக இருப்பதால் சுப பலன்  குறையும். (8)60%

       ஒவ்வொரு வியாழக் கிழமையும், குரு ஹோரையில், தொடர்ந்து 12 வாரங்கள் குரு ஸ்தோத்திரத்தை 108 முறை பாராயணம் செய்து, மஞ்சள் வர்ண மலர்களால் அர்ச்சித்து வழிபாடு செய்ய நற்பலன்கள் சித்திக்கும்.