Search This Blog

Friday 25 August 2017

மிதுன சுக்கிரன் தரும் மீளாத வாழ்க்கை !

         ஜாதகத்தில் நல்ல பலன்களைக் கொடுக்கக் கூடிய சுக்கிரன் ஒரு சுபகிரகம். இராசி மண்டலத்தில் சூரியனுக்கு மேற்குப்புறம் இருக்கிறது. சுக்கிரன் பலவித சுக துக்கங்களையும் குறிப்பவனாகும். ஆனால், சுக்கிரனுக்கு முக்கியமாக சில குணங்கள் உண்டு. சுக்கிரன் வலுவான, அழகான, சரீரத்தை உடையவர். வசீகரத் தோற்றத்தையும், கருமையான சுருட்டை நிறைந்த கேசத்தையும் உடையவர். அவர் கண்கள் மிக நேர்த்தியாக இருக்கும். கண்கள் கூர்மை மிக்கதவாகவும், பிறரை வசீகரிகக் கூடியதாகவும்  இருக்கும்.  இவரது உயரும் சுமாரானதாகவும் இருக்கும். இவர் குறைவாகவும், மிதமான அளவு உண்பவராகவும் இருப்பார்.  இவர் மேம்பட்ட குணாதிசயங்கள் படைத்தவர். ரஜோ குணத்தைப் பெற்றவர். சந்தோஷம் நிறைந்தவர். புலன் உணர்ச்சி இன்பங்களில் ஆர்வம் மிகுந்தவர். இவருக்கு ஒரு கண்ணில் பார்வைக் குறைவு உண்டு என்பது சாஸ்திரம். இவர் பிராமண வகுப்பைச் சேர்ந்தவர். கிரக சாம்ராஜ்யத்தில் மந்திரி பதவி இவருக்கு உரியதாகும். இவரது பாஷை சமஸ்கிருதமாகும். தென்கிழக்கு திசை இவருக்கு உரியது. அதிதேவதை (மஹாலட்சுமி) பிரத்தியதி தேவதை இந்திரன் ஆவார். இவருக்கு உகந்த புஷ்பம் வெண்தாமரை. ஆசனம் – ஐங்கோணங்களை உடையது. இரத்தினம் – வைரம் அல்லது வெள்ளைப் புஷ்பராகம். உலோகம் – வெள்ளி. தான்யம் – மொச்சை. இவருக்கு மிக்க சந்தோஷத்தைத் தரக்கூடிய நேரம் பகல் 2 மணி முதல் 3 – 30 மணி வரையாம். மனிதனது உடலில் இவர் இந்திரியங்களைக் குறிகாட்டுகிறார்.
        அடுத்து இவரது காரகத்துவங்களைப் பற்றி  அறிந்து கொள்வோமா ? அரசு சின்னம், திருமணம், வெள்ளை நிறம், காதலன் அல்லது காதலி சுகங்கள், காரிய சித்தி, புஷ்பங்கள், கீர்த்தி, யௌவனம், பயணம், உப்பு ரசம், நேர் பார்வை, ஓரு பட்சம், (15 நாள்) யஜுர்வேதம், அரசாள்வோர், வியாபாரிகள், அழகு, சல்லாபம், ஆறுகள், நாற்படை, விசித்திரமான கவிதை, நடனம், பாட்டு, சம்போகம், நடுவயது, பெண் சுகம், மனைவியின் சந்தோஷம், பலவித ஆபரணங்கள், பிறரைப் பரீசலிப்பதில் இஷ்டம், மதிபிற்குரிய வேலை ஆட்கள், ஒருவரது பாக்கியம், உடற்கவர்ச்சி, நல்ல குழந்தைகள், பல இராஜ்ஜியங்கள், பூ மாலைகள், நாதஸ்வரம், வீணை மற்றும் புல்லாங்குழல் போன்ற வாத்தியக் கருவிகள், இராஜநடை, அணிமா, மணிமா, கரிமா, லஹிமா, பிராப்தி, பிராகாம்யம், ஈசத்துவம், வசித்துவம் ஆகிய அஷ்ட ஐஸ்வரியங்கள், மனோகரமான அவயவங்கள், ருசியான சிற்றுண்டி உணவுகள், வசந்த ருது, பெண் பணியாளர், கிழக்கு, கண்கள், உண்மையான உரையாடல், கலைகளில் நுண்ணறிவு, குளிப்பதில் இஷடம், கம்பீரம், அதிசயம், நடிப்பு, நாடகங்களும், விளையாட்டுக்களும், அலங்கரித்துக் கொள்ளுதல், விளையாட்டில் ஆர்வம், காமவெறி, தன்மானம், வெண்ணிற ஆடைகள், லட்சுமி பூஜை. காமக்கீரிடையால் சோர்வு, பகல், தாய்மை, காவிய நிர்மாணம், கட்டுரைகள் எழுதும் தன்மை, சுபகாரியங்கள், மர்ம உறுப்புகள், மலமூத்திரம் வெளியேறுதல், பாம்புப் புற்று, வழி நடத்தல், மனைவியிடம் இருந்து அல்லது மனைவிக்குக் கிடைக்க்க் கூடிய சொத்து, ரகசியங்கள், மாலை போஜனம் இவற்றையெல்லாம் குறிக்கும்.
பாவங்களில் சுக்கிரன் தரும் பலன்.
       இலக்னத்தில் சுக்கிரன் இருந்தால் நடனம், நாட்டியம், சங்கீதம், போன்ற கலைகளில் அதிக நாட்டம் உள்ளவர்களாக இருப்பர். அரசங்காத்திடம் இருந்து விருதுகளும், பரிசுகளும் பெறுவர்.
        இரண்டாம் வீட்டில் இருந்தால் நல்ல உணவும், பானங்களும் கிடைக்கும். தன்னை அலங்கரித்துக் கொள்வதில் அதிக நாட்டம் இருக்கும். வாகனம், வீடு போன்ற பல சுக சௌக்கியங்கள் உள்ளவர்களாவார்.
        மூன்றாம் இடத்தில் சுக்கிரன் இருந்தால் மெலிந்த சரீரமும், தாழ்ந்த புத்தியும், பிறரைக் கண்டு சகிக்காத மனமும், காம விவகாரங்களில் துக்கம் அடைபவனாகவும், தன் சுற்றத்தாருக்கு கஷ்டங்கள் கொடுப்பவனாகவும், கெட்ட நடத்தையில் ஈடுபடுபவனாகவும் இருப்பான்.
        நான்காம் இடத்தில் சுக்கிரன் இருக்க நல்ல சுகஜீவனத்தை அனுபவிப்பான். ஆனால் அடிக்கடி வஞ்சனைக்கு உள்ளாவான்.
        ஐந்தாமிடத்தில் சுக்கிரன் இருக்க, எல்லாக் காரியங்களிலும், முக்கியமாக கலைகளிலும் நாட்டமுள்ளவனாக இருப்பான்.
                   ஆறாம் இடத்தில் சுக்கிரன் இருந்தால் பெண்களிடம் வெறுப்பு உள்ளவனாக இருப்பான். எப்பொழுதும் ஏக்கப்பட்டுக் கொண்டிருப்பான். பலமற்ற சரீரம் உடையவன். சத்ருக்களின் பேரைக் கேட்டால் அஞ்சுபவனாய் இருப்பான். அரசாங்கத்தினரால் சிற்சில தொல்லைகள் ஏற்படும்.
        7 ஆம் இடத்தில் சுக்கிரன் இருக்க எப்போதுமே சிற்றின்பத்தை நினைத்து வருந்திக் கொண்டே இருப்பவனாகவும்.  கெட்ட நடத்தையுள்ள பெண்களிடம் நேசம் உள்ளவனாகவும், கால தேச வர்த்தமானத்தை நினைக்காமல் காமவெறியோடு இருப்பவனாகவும், மனைவியால் இகழப்பட்டவனாகவும் இருப்பான்.
        8 ஆம் இடத்தில் சுக்கிரன் இருக்க அரசிடமிருந்து பணம் கிடைக்கக் கூடும். ஆனால், அவனக்கு அகங்காரமும், கர்வமும் அதிகமாக இருக்கும். அவன் யாரையும் எளிதில் நம்பிவிடுவான்.
         9 ஆம் இடத்தில் சுக்கிரன் இருக்க இவன பலராலும் பூஜிக்கப்படுவான். இவன் வெளிநாடு போவதற்காகவும், வழிபாடுகளை நிறைவேற்றுவதற்காகவும் பணம் சேமித்து வைப்பான். இவனுக்கு அடிக்கடி மனைவியிடம் தகராறு வரும், ஆனாலும் சமாதானம் ஆகிக் கொள்வான்.
        10 ஆம் இடத்தில் சுக்கிரன் இருக்க – சுக ஜீவனமும், நித்திய கர்மானுஷ்டானங்களும், மனைவி மக்களிடம் அன்பும், தெய்வ அனுகூலமும், விடா முயற்சியும், சகிப்புத் தன்மையும் உடையவனாகவும் இருப்பான்.
        11 ஆம் இடத்தில் சுக்கிரன் இருக்க சங்கீதம், நடனம், நகாசு வேலைகள் ஆகியவற்றில் அதிக ஆர்வம் உள்ளவனாக இருப்பான். தர்ம காரியங்களில் பங்கெடுப்பான். வேதம் முதலியவற்றை நன்கு படிப்பான்.
        12 ஆம் இடத்தில் சுக்கிரன் இருக்க – நல்ல வழிகளை விட்டு விட்டுக் தீய வழிகளிலேயே திரிந்து கொண்டிருப்பார்கள். பல சேர்க்கைகள் இருக்கும். மணவாழ்வில் மணமிருக்காது.
        இப்படிப்பட்ட சுக்கிரன் இராசியிலோ, நவாம்சத்திலோ மிதுனத்த்தில் வந்துவிட்டால், மணவாழ்வைக் கெடுத்துக் குட்டிசுவராக்கிவிடுவார் என்பது அனுபவ உண்மையாகும்.
        மிதுனத்தில் சுக்கிரன் இருக்குமானால் அந்த ஜாதகன் பணக்காரனாகவும், பதவிசு நிறைந்தவனாகவும், இரக்கம் உள்ளவனாகவும், நன்றாக பேசக் கூடியவனாகவும், பிறரால் போற்றப்பட்டவனாகவும், நுண்கலையில் ஆர்வம் உள்ளவனாகவும். வாக்குவாத்த்தில் கெட்டிக்காரனாகவும், பணமே கதி என்று இருப்பவனாகவும் இருப்பான். அவனுக்குக் கல்யாணத்தின் மூலம் எப்போதும் சுகம் ஏற்படாது. மனைவிக்கும், அவனுக்கும் தகராறுகள் இருந்து கொண்டேயிருக்கும். இவற்றை ஓரிரு ஜாதகங்கள் கொண்டு பலன் அறிவோம்.
        இப் பெண்மணி 16 – 11 – 1960 இல் மாலை 6 மணி – 23 நிமிடங்களுக்கு, பெங்களூருவில் பிறந்தவர். இவரது இலக்னத்தில் ஒரு கிரகமும் இல்லை. இலக்னாதிபதி சுக்கிரனும், குருவும், சனியும் 8 ஆம் வீட்டில் இருக்கின்றனர்.  7 ஆம் வீட்டு அதிபதி செவ்வாய் 2 ஆம் வீட்டிலும், 8 க்குடைய குரு தன் வீட்டில் சுக்கிரன் மற்றும் சனியுடனும் இருக்கிறது. நவாம்ச இலக்னம் பாபகர்த்தாரி யோகத்தில் இருக்கிறது.


லக்//
செவ்

கேது
லக்//

செவ்
சுக்
கேது
    
   இராசி

புத

நவாம்சம்
குரு
சூரி

ராகு


சனி,குரு
சுக்
சூரி
புத
சந்


சனி
சந்
ராகு

தசா இருப்பு – செவ்வாய் – 4 வ – 2 மா – 15 நாள்.
மிதுன நவாம்சத்தில் சுக்கிரன் உள்ளார்.  இலக்னத்துக்கு 7 ஆம் வீட்டில் சூரியனும், நவாம்ச 7 ஆம் வீட்டில் இராகுவும் உள்ளனர். இவர் சிவில் இன்ஜினியரிங் டிப்ளமோ படித்து, இரயில்வேயில் வேலைக்குச் சேர்நதார். தன்னுடன் வேலை செய்யும் வேறு ஜாதிப் பையனை இப் பெண் பதிவுத் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகே, தன் பெற்றோரிடம் தெரிவித்தார். ஆனால், திருமணம் நடந்த 8 மாதங்களுக்குள் இருவருக்குள்ளும் சண்டை ஏற்பட்டுத் தன தந்தையின் வீட்டுக்கே திரும்ப வந்துவிட்டார். தான் செய்த தவறுக்காக வருந்தி வேதனைப்படுவதே கண்ட பலனாயிற்று.

       அடுத்த ஜாதகம் ஒரு ஆண் மகனது. ஜாதகர் 6 – 6 – 1952 அன்று காலை 10 – 30 மணிக்கு திருச்சூரில் பிறந்தவர். இவருக்கு மிதுன நவாம்சத்தில் சுக்கிரன் அமர்ந்துள்ளார். இவருக்குத் திருமணம் நடந்து 2 பெண் குழந்தைகளுக்குத் தந்தையான பிறகு, வியாபார விஷயமாக அடிக்கடி வெளியூர் சென்ற இவர், சென்ற இடத்தில் அழகு நிறைந்த ஒரு முஸ்லீம் பெண்ணை புதன் திசை சுக்கிர புத்தியில் நேசித்து திருமணம் செய்து கொண்டார்.

குரு
சுக்,புத
சூரி



கேது
சந்
சனி(வ)
சுக்
புத
இராகு
      
இராசி
லக்//


நவாம்சம்
சூரி

கேது
லக்
குரு


செவ்,
சந்
சனி (வ)
செவ்

இராகு


திசா இருப்பு – குரு தசா – 9 வ – 5 மா – 26 நாள்.
அவளின் விருப்பப்படி மதம் மாறி, தனது மனைவி, குழந்தைகளை உதறித் தள்ளிவிட்டு, இவளோடு சிறிது காலமே வாழ்ந்தார். அதற்குப் பிறகு இப் பெண் அசல் முஸ்லீம் பையன் ஒருவன் மீது காதல் கொண்டு, இவனை உதறி சென்றுவிட்டாள். அரசியை நம்பி மனைவியைக் கைவிட்ட கதையானது.
        அடுத்து ஒரு ஜாதகம். இவர் ஒரு பொறியாளர். 30 – 4 – 1956, காலை சுமார் 04 மணி-45 நிமிடத்திற்கு – சென்னையில் பிறந்தவர். இவரது ஜாதகத்தில் மிதுனத்தில் சுக்கிரன், 2 இல் சூரியன் இருக்கிறார். 7 ஆம் அதிபதி புதன் பாபகர்த்தாரியில் உள்ளார். சனியால் பார்க்கப்படுகிறார். இலக்னமும் பாபகர்த்தாரியில் உள்ளது.
லக்//
சூரி
புத
கேது
சுக்

புத,லக்
குரு

கேது
செவ்


     
      இராசி
குரு


நவாம்சம்
சந்
செவ்


சூரி
சந்
சனி(வ)
இராகு



இராகு
சுக்
சனி(வ)

கேது தசா இருப்பு – 0 வ – 8 மா – 17 நாள்.
இந்த ஜாதகர் தனது 28 வது வயதில் ஒரு பெண்ணை மணந்தார். ஆனால், அவர் கதை, செல்லாக் காசு கொடுத்து  ஊசல் வடையை வாங்கியது போல் ஆகிவிட்டது. அவர், மணந்து கொண்ட பெண் ஏற்கனவே கன்னி கழிந்தவள் என்றும், கருவினை அழித்தவள் என்றும் திருமணம் முடிந்த்துமே தெரிந்துவிட்டது.
        ஜோதிட சாஸ்திரத்தில் சொல்லப்பட்டிருக்கும் ஒவ்வொரு நீதியும், நடப்பையும், உண்மையையும், பிரத்யட்சமாக எடுத்துக் காட்டுகிறது. எனவே, இவ்வளவு விலை மதிக்க முடியாத ஜோதிட சாஸ்திரத்தை உதறித் தள்ளிவிட்டு மக்கள் கஷ்டப்படுவது யாருக்குமே சோபையையும், சந்தோஷத்தையும் தருவதில்லை.



No comments:

Post a Comment