Search This Blog

Sunday, 23 June 2019





பன்னிரு இராசிகளில் சூரியனின் தாக்கம்.


விருச்சிக இராசியில் சூரியன்

         விருச்சிக இராசியில் உள்ள சூரியன் ஜாதகரை மனதளவில் அதிக பலம் மிக்கவராகவும், எதிலும் தோல்வி காணாத அளவுக்கு அதீத சக்தி உடையவராகவும் ஆக்கிவிடுகிறது. எதையும் அறியும் ஆர்வம் மிக்கவராகவும், உறுதி கொண்டவராகவும், எதற்கும் பின் வாங்காதவராகவும், நெஞ்சுரம் கொண்டவராகவும் இருப்பார். மறைபொருள் காண்பதில் ஆர்வம் உள்ளவராகவும், நியாயத்திற்குப் புறம்பாக நடக்காதவராகவும் இருப்பார். ஆய்வுத் திறன் மிக்கவராகவும், கூர்மதி உடையராகவும், குரங்குப் பிடிபோல் விடாப்பிடியாக இருப்பவரும், பிடிவாதம் மிக்கவராகவும், கொள்கைப் பிடிப்பு உடையவராகவும் விளங்குவார். சிக்கன மானவரும், பிரச்சனைகளுக்கு உரியவராகவும், சந்தேக குணம், பிடிவாத குணம், வளைந்து கொடுக்காத, அடம் பிடிக்கிற, மூர்க்கத்தனமான குணங்களை உடையவராகவும் இருப்பார். மனம் திறந்த. வெளிப்படையானவராகவும் இருப்பார். பிறரைக் கேலி செய்பவராகவும், வசைபாடுகிறவராகவும், நோய், விபத்துக்களையும், உறவுகளின், நண்பர்களின் மரணத்தை சந்திக்கக் கூடியவராகவும் இருப்பார். எதிர்ப்பு குணமும், போராட்ட குணமும், நாட்டில் புரட்சிகரமான மாற்றங்களைக் கொண்டு வரும் ஆளுமை உணர்வு உள்ளவராகவும் இருப்பார். இதனால் ஈடுபடும் காரியங்கள் எதிலும் வெற்றி கொள்பவராகவும், தைரியசாலியாகவும் இருப்பார்.
         அதுவே, பலம் குறைந்த, பாதிப்படைந்த சூரியனாகில் – காமவுணர்வு மிக்கவராகவும், பொறாமை உடையவராகவும், முரட்டு குணம் உடையவராகவும், பொதுமக்களிடையே செல்வாக்கு இல்லாதவராகவும், ஏற்ற, இறக்கம் உள்ள வாழ்க்கையை உடையவராகவும் இருப்பார். அரசு உயர் அதிகாரிகளின் அனுகூலம் இருக்காது. அரசாங்கத்தால் இழப்புகள் இருக்கும். பொறுப்புள்ள பதவிகளை ஏற்றாலும் அதில் வெற்றி பெறுவது அரிது.
         குறிகாட்டப்படும் நோய்கள் – பொதுவான உறுப்புகள், சிறுநீரக பாதிப்பு, கல்லடைப்பு, மேகநோய், குடல் வால் அழற்சி,  இதய படபடப்பு, கீல் வாதம் ஆகியவற்றைக் குறிகாட்டுகின்றன. 

தனுசு இராசியில் சூரியன்.

         சூரியன் தனுசு இராசியில் இருக்க ஜாதகர் களிப்புடைய, மகிழ்ச்சி நிறைந்தவராகவும், ஒளிமயமானவராகவும், நம்பிக்கையுடையவராகவும், இரக்க குணம் உடையவராகவும், தர்மம் செய்பவராகவும் விளங்குவார். நீதிமான், மத ஆர்வம் உடையவர், கடமை தவறாதவர், உள்ளுணர்வு உடையவர், ஞான சூட்சுமம் உடையவர். தன்னம்மிக்கை உடையவர். சுறுசுறுப்பானவர், அசலான வேலைகளைச் செய்பவர், உண்மையானவர், கண்டுபிடிப்பாளர், புதிய பொருள்களை உருவாக்குபவர். சுயவுரிமை, சுதந்திரம் ஆகியவற்றை விரும்புபவர். பிறர் தயவோ, உதவியோ இன்றி தானகவே, தனியாகவே வேலைகளைச் செய்ய விரும்புவார். இவரது எண்ணங்கள் நேர்மையானதாகவும், தீர்மானமானதாகவும் இருக்கும். குழந்தைகள் பிறப்புக்கும், ஆரோக்கியத்திற்கும் அனுகூலமாய் செயல்படுவர். பயணங்கள், கடல் பயணங்கள், இடம் அல்லது இருப்பிட மாற்றங்களை விரும்புவர். ஆசிரியர்கள், ஞானிகள், மதத் தலைவர்கள், ஆன்மிக குருமார்கள் ஆகியோருக்கு உரிய மதிப்பையும், மரியாதையையும் அளிப்பவர். எதையும் தாங்கும் இதயத்தோடு, சிறப்பான வாழ்க்கையை வாழ்பவர்.
         சூரியன் பலமற்று, பாதிப்படைந்து இருந்தால் – அசட்டுத் துணிச்சல் உடையவர், செலவாளி, அஜாக்கிரதையானவர், மாற்றங்களை உடையவர், சத்தங்களை விரும்புகிற, வெளிநாட்டுப் பொருள்களை விரும்புகிறவராய் இருப்பார்.
         குறிகாட்டப்படும் நோய்கள் – விபத்தினால் ஏற்படும் காயங்கள், கீழே விழுதல், வெட்டுப்படுதல், முடக்குவாதம், நரம்புத் தளர்ச்சி, கபம், நுரையீரல் சம்பந்தமான நோய்கள், கண்ணில் பாதிப்பு ஆகியவை குறிகாட்டப்படுகின்றன.

மகர இராசியில் சூரியன்
       
         மகர இராசியில் சூரியன் இருக்க – ஜாதகர் அதிக ஆசை உடையவர், இலட்சியவாதி, அதிகாரமும், புகழும் உடையவர். தலைமைப் பொறுப்புக்குத் தகுதியானவர். நன்மைக்கோ அல்லது தீமைக்கோ ஆணையிடுவதிலும், பிறரை வழி நடத்துவதிலும் வல்லவர். சிந்தனையாளர், எதையும் எளிதாக எடுத்துக் கொள்ளாதவர், ஆழமான மனதுடையவர், எதையும் சீர்தூக்கிப் பார்த்து செய்யும் கற்பிப்பாளர் ஆவார். செயல் முறை திறன் மிக்கவர். பொருளாதார உணர்வு உடையவர். துப்பறியும் நிபுணர். வாழ்க்கையில் சிறப்பான நிலையடைந்து பிரசித்தி பெற்றவராய் திகழ்வார். அடிக்கடி ஏமாற்றம் அடைந்தாலும் மனம் தளரமாட்டார். இவர் முக்கியப் பொறுப்பேற்று செய்யும் காரியங்களில் பல தடைகளுக்குப்பின் வெற்றியடைவார். தன்னை முன் நிறுத்துபவர். சுயநலவாதி. எதிலும் எச்சரிக்கை உடையவர், சிக்கனமானவர்.
         சூரியன் பாதிப்பு அடைந்திருந்தால் – தனிமை இவருக்கு இனிமை தரும். முகவாட்டம், சிடுசிடுப்பு, மகிழ்ச்சியற்ற தன்மை உடையவர். இவர் வாழ்க்கையில் தடைகளும், தாமதங்களும், ஏற்ற இறக்கங்களும் இருக்கும். இவர் ஈடுபடும் காரியங்களில் பாராட்டப்படாத காரணத்தால் மனத் தளர்ச்சி அடைவார். சளி, மூட்டுவலி, தோல் வியாதி, அஜீரணம், வயிற்றுப்போக்கு ஆகிய உபாதைகள் ஏற்படும்.
         



தொழிலுக்கான காரகங்களும்,காரணிகளும்.

         கலைஞர்கள் – (ஆர்டிஸ்ட்) மிதுனம், துலாம், தனுசு ஆகிய இராசிகள் கலைகளுக்கு அனுகூலமான இராசிகளாகும். இவை ஜன்ம இலக்னம், சந்திரா இலக்னம், சூரிய இலக்னமாக கலைகளுக்கு அனுகூலமாகும். கலைஞர்களுக்கு புதன், சுக்கிரனின் தாக்கம் ஜாதகத்தில் அதிகமாக இருக்கும். புதனானவர் ஜாதகருக்கு கலைக்குத் தேவையான, மனதளவில் நல்ல சிந்திக்கும் திறனையும், உடலளவில் நல்ல சாமர்த்தியத்தையும், திறமைகளையும் கொட்டுக் கொடுக்கிறது. சுக்கிரன் இத் திறமைகளையும், சிந்தனைகளையும் ஒன்று திரட்டி, கலைக்கான படைப்புத் திறனை மேலும் அதிகரிக்க உதவுகிறது. சுக்கிரன் கலையின் அழகை நாம் உணரக்கூடிய திறனை நமக்கு அளிக்கிறான்.  சந்திரன் – சுக்கிரன், சந்திரன் – புதன், செவ்வாய் – சந்திரன் ஆகியோரின் அனுகூலமான பார்வைகளும் அதற்கு உதவுகின்றன.
         கட்டிட வல்லுநர்கள் – (ஆர்ச்சி டெக்ட்) – கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம் ஆகிய இராசிகள் இலக்னமாக அமைய, அனுகூலமான நிலையாகும். கட்டிடம், உருவம், அமைப்பு மற்றும் திட்டமிடல் ஆகியவற்றிற்குக் காரகரான சனியே பிரதான கிரகம் ஆயினும், செவ்வாய், புதன் ஆகியோரின் அனுகூல நிலையும் கருதப்பட வேண்டும்.
                  விளையாடு வீரர் – (அதலெட்)  விளையாட்டு வீரர்களுக்கு கன்னி, தனுசு ஆகிய இராசிகள் இலக்னமானால் அனுகூலமானதாக இருக்கும். கிரகங்களில் செவ்வாய், குரு ஆகியோர் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றனர். அடுத்து புதனும், இலக்ன பாவமும், 5 ஆம் பாவமும் நல்ல பார்வைகளைப் பெறுவதோடு இவையும் கருத்தில் கொள்ளப்பட வேண்டும்.
        பல் மருத்துவர் – (டென்டிஸ்ட்) – பல ஜாதகங்களில் குரு, புதன், சனி மற்றும் செவ்வாய் ஆகிய கிரகங்கள் முக்கியத்துவம் பெறும். அதை போல் பல ஜாதகங்களில் 6 ஆம் வீட்டின் தாக்கம் அதிகமாக இருக்கும், 6 ஆம் வீடு, நோயையும், உபாதைகளையும் குறிக்கும். சனி பல்லையும், செவ்வாய் அறுவை சிகிச்சையையும், புதன் கைத்திறனையும், குரு தொழில் வெற்றியையும் ஆளுமை செய்கின்றன என்பதை நாம் அறிந்து கொள்ளவேண்டும்.
         விமான ஓட்டி – ( ஆவியேட்டர் ) –நெஃப்டியூன் மற்றும் புதன் ஆகியோர் முக்கியத்துவம் பெறுகின்றனர். தைரிய ஸ்தானமான 3 ஆம் வீடும் பாக்கிய பாவமான 9 ஆம் வீடும் இதற்கு மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றன. மேலைநாட்டைப் பொறுத்தவரை நெஃப்டியூன் எடுத்துக் கொள்கின்றனர்.
         ஜோதிடர் – மேலைநாட்டினர் யுரேனஸ்ஸை முக்கியமாக்க் கருதுகின்றனர். ஆனால் நாம் கல்விக் காரகன் புதனையே முக்கியமாகக் கருதுகிறோம். புதனுக்கு செவ்வாயின் தெருக்கமான தொடர்பு கணித அறிவை, திறமைகளை அள்ளி வழங்குகிறது.
         ரசவாதி, ரசாயன விஞ்ஞானி - (கெமிஸ்ட்) – சிம்மம், கன்னி, துலாம் இலக்னமாக அமைய அனுகூலமாகி, இத் தொழில் ஏற்படும். செவ்வாய், புதன் ஆகியோரும் அனுகூலமாக, சாதகமாக இருக்க வேண்டும். 6 ஆம் வீட்டின் அமைப்பும் சிறப்பாக இருக்க வேண்டும்.
         நடனக் கலைஞர் (டான்ஸர்) சிம்மம், கன்னி ஆகிய இராசிகள் இலக்னமாக அமைந்தால் இதற்கு சாதகமான நிலை உருவாகும். சுக்கிரனின் நிலை மிகச் சிறப்பாக இருக்க வேண்டும். துணையாக புதன், சந்திரன், செவ்வாய் ஆகியோரும் அனுகூலமாக இருக்க வேண்டும். இணக்கத்தையும், ஈடுபாட்டையும், கவர்ச்சியையும் சுக்கிரன் அளிக்கிறார். சந்திரன் நாதத்தை (டியூன்) ஆள்கிறது. நடனம் ஆடுவதற்கான உடல் பலத்தையும், சக்தியையும் செவ்வாய் அளிக்கிறார். நடன அசைவுகளுக்குத் தேவையான நினைவாற்றலை  புதன் அள்ளி வழங்குகிறார். ஜாதகருக்கான தனிப்பட்ட உடல், உருவ அமைப்பைக் குறிகாட்டுவது 5 ஆம் இடமாகும். அதுவே, கேளிக்கைகளுக்கும், சந்தோஷத்திற்குமான பாவமும் ஆகும். மற்றவர்களை மகிழ்விக்கக் கூடிய இடமும் ஆகும்.
         மருத்துவர் – (டாக்டர்) – செவ்வாய் கிரகம் மிகவும் முக்கியமானதாகும். செவ்வாய் அறுவை சிகிச்சை, மருந்து அளித்தல் ஆகியவற்றுக்கான திறமையை அளிக்கிறார். ரட்சகன், காப்பாளன், உபகாரியாக இருக்கும் மருத்துவர்களுக்குக்கு குரு காரகம் பெறுகிறார். 6 ஆம் வீடும், 12 ஆம் வீடும் முறையே நோய்க்கும், மருத்துவமனை படுக்கைகளுக்கும் காரகம் பெறுகின்றன.
         வரைவாளர் – (டிராஃப்ட்ஸ் மேன்) வரைவாளர் ஜாதகத்தில் புதனும், சுக்கிரனும் மிகவும் முக்கியத்துவம் பெறுகின்றன. அடுத்ததாக செவ்வாய் முக்கியமாகிறது. மூன்றாம் வீடும் முக்கியத்துவம் பெறும். புதன் புரிந்து கொள்ளும் சக்தியையும், திறமையையும், செவ்வாய் தேவையான பொறியியல் திறமையையும், சுக்கிரன் கலைத் திறனையும் அளிக்கின்றனர். வரையும் திறமைக்கும், எழுத்துத் திறமைக்கும் மூன்றாம் வீடு காரகம் பெறுகிறது.
         பொறியாளர் – (இன்ஜினியர்) சிம்மராசி அதிக முக்கியத்துவம் பெறுகிறது. கிரகங்களில் செவ்வாய் மற்றும் சனி முக்கியத்துவம் பெறுகின்றன. திட்டங்களை தயாரிப்பதற்கும், செயல் படுத்துவதற்கும் சனி காரணமாகிறார். உருவாக்குவதற்கும், திட்டமிடுவதற்குமான திறமையை செவ்வாய் தருகிறார்.        
         எலக்ட்ரீஷியன் – அனேக ஜாதகங்களில் புதனும், செவ்வாயும் முக்கியத்துவம் பெறுகின்றன. புதன் புரிந்து கொள்ளும் தன்மையையும், செவ்வாய் பொறியியல் அறிவையும் வழங்குகின்றன. மேலும் செவ்வாய் சக்திக்குக் காரகமாவதால் மின்சக்திக்கும் அதுவே காரகம் ஆகிறது.
         விவசாயி – விவசாயத்துக்கு சனியே காரகம் பெறுகிறார். சோர்வு உண்டாக்குகிற கடின உழைப்புக்கு, முக்கியமாக விவசாயத்தை சனியே குறிகாட்டுகிறார். சில ஜாதகங்களில் சந்திரனும் அனுகூலம் செய்கிறார். 4 ஆம் வீடு விவசாயத்தையும், பூமியையும் குறிகாட்டுகிறது. போஷாக்கான சத்துணவை சந்திரன் குறிகாட்டுகிறான்.
         வக்கீல் – (லாயர்) சிம்மம், துலாம், தனுசு ஆகிய இராசிகள் வக்கீல்களுக்குக் காரகம் பெறுகின்றன. முக்கியத்துவம் பெறுகிற பாவம் பாக்கிய பாவம் எனும் 9 ஆம் வீடு ஆகும். சனியும், புதனும், அடுத்து குருவும் முக்கியத்துவம் பெறுகின்றனர். சுறுசுறுப்புள்ள, கடினமான, கஷ்டமான வேலைகளை குறிகாட்டுபவர் சனியாவார். புதன் எதையும் அறிவு பூர்வமாகப் புரிந்துகொள்ளும் தன்மையையும், பேச்சு வன்மையையும் தருகிறார். நீதியையும், நேர்மையையும் நிலைநாட்டுபவர் குரு ஆவார்.
         மெஷினிஸ்ட் – 99 சதவிகித ஜாதகங்களில் செவ்வாயே முக்கியத்துவம் பெறுகிறார். சனி 98% மற்றும் புதன் 95% பங்களிப்பும் பெறுகின்றனர். விருச்சிகமும், சிம்மமும் அனுகூல இராசிகளாகின்றன. மெஷினிஸ்டுக்குத் தேவையான கடின உழைப்பை சனி குறிகாட்டுகிறார். பராமரிப்பு மற்றும் சரி செய்யும் வேலைகளுக்கான, அறிவையும் புதன் வழங்குகிறார்.
         திரைப்பட நடிகர் – (மூவி ஆக்டர்) – செவ்வாய் முக்கியமானவர். பின்னர் புதனும், சுக்கிரனும் முக்கியத்துவம் பெறுகின்றனர். 5 ஆம் வீடு மிகவும் முக்கியமாகிறது. அடுத்து இலக்னபாவம் முக்கியத்துவம் பெறுகிறது. சக்தி மிக்க மனிதனுக்குத் தேவையான சக்தியை தைரிய காரகன் செவ்வாய் அளிக்கிறான். நடிப்புத் திறமையை புதன் அளிக்கிறார். நடிப்புக்குத் தேவையான அழகு, நவநாகரீக உடை மற்றும் கவர்ச்சியை அளிப்பவர் சுக்கிரன் ஆவார்.   
         இசைவாணர் -  (இசையமைப்பாளர், பாடகர்) – முதலில் சந்திரனும், பின்னர் சுக்கிரனும் முக்கியத்துவம் பெறுகின்றனர். கன்னி, கும்பம் மற்றும் மீனம் ஆகிய இராசிகளும், 5 ஆம் வீடும் மிகவும் முக்கியத்துவம் பெறுகின்றன. ஒரு இசைவாணர் ஆக ஜாதகருக்கு பொறுமையும், பல வருட கடினப் பயிற்சியும் முக்கியமாகிறது. அதற்கு உறுதுணையாய் இருப்பவர் சனி ஆவார். காலம், சுருதி, இசை, ராகம், தாளம் ஆகியவற்றுக்கு சந்திரன் காரகம் பெறுகிறார்.         
செவிலியர் – (நர்ஸ்) – இங்கும் சந்திரனும், செவ்வாயும் முக்கியத்துவம் பெறுகிறார்கள். ஜாதகத்திலும் ருண,ரோக, சத்ரு ஸ்தானமான 6 ஆம் வீடு முக்கியத்துவம் பெறுகிறது. மேலும், 95 % ஜாதகங்களில் அயன சயன பாவமான 12 ஆம் வீடும் முக்கியத்துவம் பெறுகிறது. முக்கியகாக செவியிலியர் தொழிலுக்கு கை கொடுப்பது தாய்க்குக் காரகமான சந்திரனே ஆகும். சில செவிலியர் நோயாளிகளிடம் தாய் பாசத்தைக் காட்டுவதைக் காணலாம். சுறுசுறுப்பு, மக்களுக்கு மருந்து அளித்து பேணிக்காத்தல், கடின உழைப்பு ஆகியவற்றை தருபவர் செவ்வாய் ஆகும். சோய்க்கான இடம் 6 ஆம் வீடு, அடைபட்டுக் கிடக்கும் இடம் 12 ஆம் வீடாகும். எனவே, மேலே சொல்லப்பட்டவையவே செவிலியருக்கான காரகங்களாகும்.
காவலர் – (போலீஸ்) – சோதிக்கப்பட்ட 100% ஜாதகத்தில் கிரகங்களான சனியும், செவ்வாயும் முக்கியத்துவம் பெறுகின்றன. நியாதிபதியான சனி குற்றம் செய்தவர்களைத் தண்டிக்கும் அதிகாரம் உடையவர். 12 ஆம் வீடு காவலர் வேலைக்கான பாவமாகிறது. குற்றவாளியைப் பிடிக்கும் வரை மிகவும் கடினமான வேலையாவதால் அதற்கு செவ்வாய் உதவுகிறது. கட்டுப்பாடுள்ள நீதிபதியாக சனி திகழ்கிறார். செவ்வாய் காவலருக்கு வேண்டிய மனோதைரியம் மற்றும் துணிச்சலைத் தருகிறது. உண்மையில், சட்டத்தை பாதுகாக்கும் அதிகாரிகள், காவலர் மற்றும் இராணுவ வீரர்கள ஆகியோருக்கு செவ்வாய் காரகம் பெறுகிறார். சமூகத்தின் இரகசிய எதிரிகளான குற்றவாளிகளையும், அவர்கள் இருக்க வேண்டிய இடமான சிறைச்சாலையையும் 12 ஆம் இடம் குறிகாட்டுகிறது.
அரசியல்வாதிகள் ( பொலிடீஷியன் ) – நூறு சதவிகித ஜாதகங்களில் சூரியன் முக்கியத்துவம் பெறுகிறார். 86% சதவிகிதம் புதனும், குரு மற்றும் 10 ஆம் வீடும் மிக முக்கிய காரணிகள் ஆகின்றன. அதிகாரம் மிக்க அதிகார பதவியை அளிப்பவர் சூரியன் ஆவார். தலைமைப் பதவியை சூரியனும், தலைப்பதவிக்கான விவேகத்தையும், சூட்சுமப் புத்தியையும், புத்திசாலித்தனத்தையும்  புதனும் அளிக்கின்றனர். மதிப்பு, மரியாதை, கௌரவம், மக்களுக்கு உதவும் குணம், மிக உரிய பதவி ஆகியவற்றை அளிப்பவரு குரு ஆவார். 10 ஆம் வீடு பொது வாழ்க்கையையும், மேலாண்மை மற்றும் வியாபாரத்தையும் குறிகாட்டுகிறது.
விற்பனையாளர் ( சேல்ஸ் மேன் ) – பார்க்கப்பட்ட பல ஜாதகங்களிலும் குருவின் தாக்கமே அதிகம் இருந்தது. அடுத்ததாக முக்கியத்துவம் பெறுபவர் புதன் ஆவார். வாடிக்கையாளரைக் கவரும் திறமை, அவர்களின் நன்மதிப்பைப் பெறுதல் மற்றும் தனக்கு சாதகமாக்கி வெற்றி அடைதல் ஆகிய திறன்களை குரு அளிக்கிறார். தன் பேச்சுத் திறனால் விரிவாக, விளக்கமா அவர்களிடம் எடுத்துரைக்கும் நாவன்மை, அறிவுத்திறன் ஆகியற்றை அளிப்பவர் புதன் ஆவார். மேலும், குரு பணவிஷயங்களை, பொருளாதாரத்தைக் குறிக்கும் எனினும் வணிகத் திறமையை புதன் அளிக்கிறார். சந்திரனின் பார்வை இருப்பின் ஜாதகர் பொதுமக்களுக்குத் தேவையான பலசரக்குக் கடை, குளிர்பானக் கடை ஆகியவற்றை நடத்துவார். சுக்கிரனின் தாக்கம், பார்வை இருந்தால் ஜாதகர் நவநாகரீக ஆடைகள், நகை வியாபாரம், கலைப் பொருட்கள், பெண்கள் விரும்பக்கூடிய அழகு சாதனப் பொருட்கள், சுகந்த, பரிமள வாசனைத் திரவியங்கள் வியாபாரம் ஆகியவற்றைச் செய்வார்.         
ஆசிரியர்- (டீச்சர்) – சூரியன், சந்திரன் அல்லது மிதுனம், கன்னி, தனுசு ஆகிய இராசிகள் இலக்னமாக எழ அவை இத்தொழிலுக்கு சாதகமான, அனுகூலமான நிலையைத் தருகிறது. மேலும், பாக்கியபாவம் என்கிற 9 ஆம்பாவமும், அறிவி விருத்தி அளிக்கும் 5 ஆம் பாவமும் முக்கியத்துவம் பெறுகின்றன.











எந்த நட்சத்திரக்காரருக்கு என்ன தொழில் ஏற்படும்?

        அன்பு நண்பர்களே ! விண்ணில் ஒளிர்கின்ற மின் மினிகளாகிய நட்சத்திரங்கள் மண்ணில் பிறந்த ஒவ்வொருவரின் ஜன்ம நட்சத்திரத்தின்படி தொழில் அமைவதை பண்டைய நூல்களில் காணலாம். அவை தற்போது தங்கள் பார்வைக்கு.
அஸ்வினி – தொழிற்சாலை சேவை, காவல்துறை, மருத்துவம், அறுவைசிகிச்சை, ரயில்வே, சிறைச்சாலை, செம்பு, இரும்பு, உருக்கு வணிகர், குதிரை வியாபாரி,
பரணி – இசை மற்றும் விளையாட்டுத்துறை, சந்தோஷப்படுத்துதல் மூலமான வருமானம், வெள்ளி மற்றும் அதைப் போன்ற உபயோகப் பொருட்கள், கால்நடை மருத்துவர், ஹோட்டல், கிரிமினல் வக்கீல், கண்ணாடி வணிகம், தோல் சம்பந்தப்பட்ட பொருட்கள்.
கார்த்திகை – பார்வையாளர், இராணுவம், காவல்துறை, மருத்துவம், கப்பற்படை, பாதுகாப்புத் துறை, கெமிக்கல் தயாரிப்பாளர்கள்,உலோகப் பெட்டிகள், இசை, நடனம், பொறியாளர், வரி வசூலிப்பவர், கம்பளி விற்பனையாளர்.
ரோகிணி – ஹோட்டல், சொத்து விற்பனையாளர், மோட்டர் வாகன பெட்ரோல், திருமண தரகர், ஆடை மற்றும் முத்து வியாபாரி,
மிருகசிரீஷம் – எஸ்டேட் முதலாளி, வாத்திய இசை, ப்ளாட்டினம், தையல்காரர், அல்லது ஆடை வடிவமைப்பாளர், கால்நடை மருத்துவர், டாக்ஸி ஓட்டுனர், சவுண்ட் இன்ஜினியர், ரூபி மற்றும் வைர வியாபாரி.
திருவாதிரை – வேலையாள், சேல்ஸ் மேன், புத்தக வியாபாரி, தபால், தந்தி பணியாளர், போக்குவரத்துத் துறை, விளம்பர நிறுவனம், விளம்பரப் பிரிவு, மருந்து மற்றும் பானங்கள் விற்பனையாளர்.
புனர்பூசம் – பத்திரிக்கைத் துறை, எடிட்டிங், பதிப்பித்தல், பரிசோதகர், மதகுரு அல்லது தலைவர், வக்கீல், பேராசிரியர், திரவ வணிகர், ஜோதிடர், கணித வல்லுனர், எழுத்தர், கம்பளி வியாபாரி.
பூசம் – சுரங்கப் பொருட்கள் வியாபாரி, கிணறு, சுரங்கம், வாய்க்கால், பாதாளச் சாக்கடை போன்ற பூமிக்கு அடியே குழிதோண்டும் பணிகள். குடிநீர், வடிகால் பணிகள்.(ப்ளம்பர்), கடற்படை, நீர்மூழ்கி கப்பலில் வேலை, அணைக்கட்டுகள், குகைப் பாதை, பாலங்கள் ஆகியவற்றில் வேலை.
ஆயில்யம் – விற்பனைப் பிரதிநிதி, ஆடிட்டர், ட்ராவலிங் ஏஜெண்ட், தண்ணீர் வினியோகப் பொறியாளர், வழிகாட்டி(கைடு), பொருளாதாரம், ஜாதிடம், எழுத்தர் மற்றும் கடிதப் பொக்குவரத்து.
மகம் – பெரிய தொழிற்சாலைகளின் காண்ட்ராக்ட், கிரிமினல் லாயர், அறுவைசிகிச்சை நிபுணர், மருத்துவத் துறை, ஆபரணத் தயாரிப்பாளர், அரசும்முறை, சேவைகள்.
பூரம் – அரசு சேவைகள், போக்குவரத்து, வனொலி, இசை, விளையாட்டு, ஆட்டோமோபைல், ஸ்டூடியோ, புகைப்படக்கலை, தோல், உணவகம், பொறியாளர், கல்வியாளர், கண்கண்ணாடி விற்பனையாளர்.
உத்திரம் – சேவை, வணிகம், கணக்கர், காண்ட்ராக்டர், விரிவுரையாளர், பிரஸ், பொறியாளர், தகவல் தொடர்பு மற்றும் கல்வித் துறை.
ஹஸ்தம் – சேல்ஸ் மேன், வணிகம், ஓவர் சீஸ், தகவல் தொடர்பு, ஷிப்ப்பிங் & கிளியரிங், டெக்ஸ்டைல், பாலங்கள், அணைக்கட்டுகள், குகைகள், வாய்கால்கள்      (நீர்பாசனத் துறை) ஆகியவற்றைக் கட்டும் பொறியாளர், வக்கீல், ஏற்றுமதி-இறக்குமதி, கலைஞர் (ஆர்ட்டிஸ்ட்) அல்லது தயாரிப்பாளர் (பொருள்களை)
சித்திரை – சட்ட வல்லுனர் (லாயர்), சர்ஜன்ஸ், பொறியாளர், விஞ்ஞானி, கூட்டுத் தொழில்(வியாபாரக் கூட்டாளி) காண்ட்ராக்ட்டர், விளையாட்டு சாதனங்கள், வானொலி, தொலைக்காட்சி, மோட்டார் பாகங்கள், ஆடை, அணிகலன்கள்.                                                                                  
சுவாதி – இமிடேஷன் ஒர்க்ஸ், ஆட்டோமொபைல்ஸ், போக்குவரத்து, (ட்ரான்ஸ்போர்ட்), டூரிஸ்ட், ஆர்ட், பெயிண்ட், டொக்கரஷன், நாடகம், எக்ஸரே, இன்ஸ்ட்ரூமெண்ட் தயாரிப்பாளர், விஞ்ஞானிகள், நீதிபதி, கவிஞர், சமையல் கலைஞர், பெண்களுக்கான ஆடை வடிவமைப்பாளர், நவநாகரிக சாமான்கள்.

விசாகம் – வியாபாரம், ட்ராவலிங் ஏஜண்ட், டூரிஸட், ஷிப்பிங் ஆபீசர், ஏர் ட்ராவல், வெளிநாட்டு பயணத் தொடர்பு ( ஃபாரினர்ஸ் தொடர்பு) வங்கி, நீதிபதி, எஸ்டேட் முதலாளி, ப்ரோக்கர், பாதுகாப்புத் துறை, வரி மற்றும் வருவாய்துறை, கலால் வரித் துறை,(கஸ்டம்ஸ்), ஆடிட்டர் மற்றும் பங்குச்சந்தை ஆர்வலர்.

அனுஷம் – சுரங்கப் பொறியாளர், பூமி சம்பந்தமான பொருட்கள் விற்பனை, விவசாயி, பொறியாளர், நடிகர், மேல்தோல் மற்றும் மிருகத்தின் தடிமனான தோல், ஆயில் என்ஜின் மற்றும் வியாபாரி, ப்ளம்பர், பணியாட்கள், பல் வைத்தியர்.
கேட்டை – கெமிக்கல் இன்ஜினியர், பிரஸ், பதிப்பாளர், பவர் மற்றும் தெர்மல் ஸ்டேஷன், அணைக்கட்டுப் பகுதிகள், இண்டஸ்ட்ரி, இன்ஷியூரன்ஸ் ஏஜெண்ட், சர்ஜன், அறுவை சிகிச்சை உபகரணங்கள், விளம்பரத்துறை, விளம்பர ஏஜெண்ட், கேபிள் தயாரிப்பாளர்கள், வயர்ஸ், இசைக்கருவிகள் தயாரிப்பாளர்கள்.
மூலம் – வக்கீல், மத போதகர், மருத்துவர், பேச்சாளர், பொதுசேவை செய்பவர்கள், பலசரக்குக் கடை, எக்ஸ்சேன்ஜ், இறக்குமதி வியபாரம்
பூராடம் – வட்டித் தொழில், கேஷியர், கணக்காளர், ஏர் டிராவல் ஏஜெண்ட்ஸ், போக்குவரத்து, இசை, உணவுவிடுதிகள், ஆஸ்பத்திரி, ஹெல்த் செண்டர், ஃபாரின் எக்ஸசேன்ஜ், ஸடாக் எக்ஸசேன்ஜ் மற்றும் ரப்பர் பொருட்கள்.
உத்ராடம் – எஸ்டேட், சுரங்கம், நீர்பாசனம் போன்ற பூமிக்கு அடியில் செய்யும் பணிகளுக்கான இன்ஜினியர் மற்றும் காண்ட்ராக்டர், பொதுமக்கள், ஆரோக்கியம், மைன்ஸ், அருங்காட்சியகம், தர்ம ஸ்தாபன பொறுப்புகள், மத்தியஸ்தர், நீதிபதி, ஏற்றுமதி அதிகரித்தல் (எக்ஸ்போர்ட் ப்ரமோஷன்), சர்வதேச வணிகம் மட்டும் கஸ்டம்ஸ்.
திருவோணம் – மைன், மைன் பொருட்கள், திரவங்கள், ஆயில், பெட்ரோல், கிணறுகள், நிலக்கரி, தோண்டும் வேலைகள், விவசாயி, குளிர்சாதனப்பெட்டி, கூலர்ஸ், அரசர், மந்திரி அல்லது அதுபோன்ற உயர்பதவிகள் மற்றும் டிரஸ்ட்.
அவிட்டம் – மைன், க்ரவுண்ட் இன்ஜினியர், தத்துவமேதை, சர்ஜன், விவசாயி, தொழில்துறை, தோல், மேல்தொல், விலங்கின் தடிமனான தோல் ஆகியவற்றின் வியாபாரி, காவல்துறை, இராணுவம், தகவல் தொடர்பு, பிரஸ் மற்றும் தொலைபேசித் துறை,   
சதயம் – விஞ்ஞானி, மறைபொருள் விஷயங்கள், விமானப் பயணங்கள், வானசாஸ்திரம், ஜோதிடம், சிறைத்துறை, புள்ளி இயல், ரேஷன் ஆபீஸ், தொழிற்சாலைகள்.
பூரட்டாதி – கற்பிக்கும் தொழில், ஜோதிடம், மருத்துவம், தத்துவவாதி, இலக்கியவாதி, அரசியல்வாதி, மந்திரி, கவுன்சிலர், சட்டக்கல்வி, கிரிமினல் லாயர், திட்ட கமிஷன், ப்ப்ளிக் கம்பெனிஸ்.
உத்திரட்டாதி – பொறியாளர், ஏற்றுமதியாளர் & இறக்குமதியாளர், பரம்பரைத் தொழில் – வியாபாரம், கிளப்ஸ், கம்பெனிஸ்,  மருத்துவமனை, தர்ம ஸ்தாபனம்,சோசைட்டி ஆகியவற்றின் மூலமான லாபங்கள். மீன்பிடிப்பு தளம், நீர்மூழ்கி கப்பல், ஷப்பிங், பவுண்டரிஸ், சி. ஐ.டி. படகுகள், குடை, மழைக் கோட்டு தயாரிப்பாளர்
ரேவதி – பதிப்பாளர்கள், எடிட்டர், மதத் தலைவர், சட்டம், சிவில் இன்ஜினியர், ஷேர் புரோக்கர், விளம்பரம் மற்றும் விளம்பரத் துறை, வானொலி, தொலைபேசி, தட்டச்சு, ஆடிட்டர், கணக்காளர், கைரேகை நிபுணர், ஜோதிடர், கணிதமேதை.
         எனவே, நண்பர்களே ! எந்த நட்சத்திரத்துக்கு என்னென்ன தொழில்கள் என அறிந்து கொண்டது பயனுள்ளதாக இருக்கும் என நம்பி முடிக்கிறேன். தொழில் பற்றிய மற்றுமொரு கட்டுரையுடன் அடுத்தமாதம் சந்திக்கிறேன்.
                    வாழ்க வளமுடன்.

Indraya Rasi Palan | 23.06.2019 | Daily rasi palan | இன்றைய ராசிபலன் | P...

Indraya Rasi Palan | 24.06.2019 | Daily rasi palan | இன்றைய ராசிபலன் | P...