Search This Blog

Monday 3 June 2013

தனுசுராசியின் காரகங்கள்




                                    c
தனுர் இராசியின் குண இயல்புகள்.

       காலபுருஷ தத்துவத்தின் 9 ஆம் இடமான தனுர் இராசியின் அளவு 240 பாகை முதல் 270 பாகை வரை ஆகும்.  இது ஒரு நெருப்பு இராசி, உபயராசி, ஆண்ராசி, உஷ்ணமானராசி, உலர்ந்த ராசி, இரு உருவம் கொண்ட நீண்ட இராசியாகும். இது குறிக்கும் திசை கிழக்கு ஆகும். தேவகுரு எனும் குருவே இதன் ஆட்சியாளர் ஆவார். இந்த இராசியில் எந்த ஒரு கிரகமும் உச்ச, நீசம் அடைவதில்லை. புதன் இங்கு பலம் இழக்கிறார். சூரியன், சந்திரன், செவ்வாய் ஆகியோர் நட்பு நிலையையும், சனி சம நிலையையும், சுக்கிரன், புதன் பகை நிலையையும் அடைகிறார்கள்.

       ஒரு நேரத்தில் ஒருசெயலில் மட்டும் கண்ணும் கருத்துமாக இருந்து, உச்சத்தைத் தொடுவதைக் குறிக்கோளாகக் கொண்ட இராசியாகும். சாதாரண நிலையில் இருந்து, தெய்வீக நிலைக்கு இட்டுச் செல்லும் இராசி இது. குரு பலமாக இருந்தால் அரசாங்க உதவிகள் மூலமாக அனுகூலம் கிடைக்கும்,
    
கட்டமஸ்தான அளவோடு உருவாக்கப்பட்ட உடற்கட்டும் -  நல்ல 

உயரமும் - நீண்ட முட்டை வடிவிலான முகமும் - அகன்ற நெற்றியும் - 

அடர்த்தியான புருவமும் - நீண்ட மூக்கும் - நீலநிறக் கண்களும் - 

கவர்ச்சிகரமான தோற்றமும் - அரக்கு நிறக் கேசமும் - கேசம் குறைந்த 

வழுக்கை நிலையும் கொண்டவர்கள். இவர்கள் இரக்க குணமும் - 

தைரியமும் - நல்லிதயமும் - ஆசைகள் அதிகம் உள்ளவரும் - நேர்மை 

தவறாதவரும் - உண்மையானவரும் - தயாள குணமும் - நட்பு 

மிக்கவரும் ஆவார்.

       எப்போதும் ஒரு பொருளின் அல்லது நிலையின் நல்ல பக்கத்தை 

மட்டுமே தன்னம்பிக்கையோடு பார்ப்பவர்கள். இவர்கள் எதையும் 

துணிவோடு எடுத்துச் செல்பவரும் - சுறுசுறுப்பானவரும் - 

கருணையுள்ளம் கொண்டவரும் - மனிதாபிமானம் உடையவரும் - 

பயணங்களை விரும்பவரும் - கப்பல் பயணம் - வெளி விளையாட்டுக்கள் 

- உடற்பயிற்சி ஆகியவற்றிலும் ஆர்வமுடையவர்கள் ஆவர்.

       தடைகள் வரும் போது தனக்கே உரிய பாணியில் தடைகளைத் 

தகர்த் தெறியும் தகுதி உடையவர்கள். அதிக பலம் - சக்தி - முனைப்பு - 

வீரியம் ஆகியவற்றோடு ஆசிர்வதிக்கப்பட்டவர்கள். இவர்கள்  தத்துவம் - 

சட்டம் - மதம் அல்லது மருத்துத்தோடு தொர்புடையவர்கள் ஆவர். 

எந்தவொரு நெருக்கடியான நிலையிலும் தைரியத்தை 

இழக்கமாட்டார்கள். எப்போதும் ஆழமான ஆராய்ச்சிக்குப் பின்னரே எந்தச் 

செயலிலும் இறங்குவர். பழகுவதற்கு இனியவர். 

       ஒளி பொருந்தியவர்கள் - நம்பிக்கை உடையவர்கள் - 

சுதந்திரமானவர்கள் - நகைச்சுவை உணர்வும் - கௌரவமும் மிக்கவர்கள். 

எதையும் வெட்டு ஒன்று துண்டு ரெண்டு எனப் பேசுபவர்கள் - 

காதலுடையவர்கள் - வெளிநாட்டு நண்பர்களோடு நட்புக் கொள்ள 

நாட்டம் உடையவர்கள். கடவுளின் மேல் பயமும் - மத உணர்வும் 

உடையவர்கள். சக்த்தியும் - உள்ளுணர்வும் கலந்த வரும் முன் 

உரைப்பவர்கள். சில நேரங்களில் தங்கள் பணிகளில் அதிக ஆர்வக் 

கோளாறினால் ஓய்வொளிவற்றவர்கள் - பாரம்பரியத்தையும் - ஆசார 

அனுஷ்டானங்களைக் கட்டிக் காப்பவர்கள். 


       தொழிலில் ஒரு வெறியோடு முன்னேறுபவர்கள். எந்தவொரு 

காரியத்தில் இறங்கினாலும் சீக்கிரமாக அதன் முடிவைக் காணவும் - 

சந்தர்ப்ப சூழ்நிலைகளை தனக்குச் சாதகமாக்கிக் கொள்வதிலும் 

வல்லவர்கள். உயர் கல்வி பெறுவதோடு - மற்றவர்களுக்குக் கீழ் 

பணியாற்றுவதை விரும்பமாட்டார்கள்.  ஓரிடத்தில் அமர்ந்து வேலை 

பார்ப்பதையும் விரும்பமாட்டார்கள். வெகுவிரைவிலேயே அனைத்து 

சுகங்களுடன் கூடிய செல்வந்தர் ஆகிவிடும் இவர்கள் -  நோகாமல் 

நொங்கு தின்பவர்கள். குரு பாதிப்படையாது இருந்தால் அரசியலில் 

கொடிகட்டிப் பறப்பார்கள். கம்பெனிச் சட்டம் - கட்டிடக்கலை வல்லுனர் - 

ஒப்பந்தக்காரர் - வெளிநாட்டுத் தூதுவர் - வெளிவிவகாரத்துறை ஆகிய 

பணிகளுக்குப் பொருத்தமானவர்கள்
    
       தனுர் இராசிக்காரர்கள் ஆலோசனை வழங்குவதாக எண்ணி 

மற்றவர்களை ஏளனம் செய்வதையும் - அவமானப்படுத்துவதையும் 

தவிர்க்கவேண்டும். பெற்றோர்கள் - சகோதரர்கள் மீதான வெறுப்பைக் 

குறைத்தால் நன்மை ஏற்படும். இவர்கள் நண்பர்களால் மிகவும் 

விரும்பப்படுபவர்கள். பெண்கள்பால் இளகிய மனம் கொண்டு நட்புப் 

பாராட்டுவார்கள். வீட்டில் உள்ளவர்களிடம் அனுசரித்துச் சென்றால் 

மட்டுமே இவர்கள் எதிர்பார்க்கும் வெற்றியும் - சுதந்திரமும் - 

சந்தோஷமும் இவர்களை வந்தடையும். குழந்தைகளுக்காக அதிகம் 

செலவு செய்பவர்கள். அத்துடன் தானதர்மங்கள் - கோவில் 

குளங்களுக்கும் அதிகம் செலவு செய்வார்கள். வெளியுலகில் 

வெற்றியாளராக இருந்தாலும் வீட்டு விவகாரங்களில் தோல்வியே 

அடைவர்.
    

       இவர்கள் நல்ல ஆசிரியராக -மதபோதகராக - பேச்சாளாராக - பக்தி 

சொற்பொழிவாளராக - வங்கிப் பணியாளராக - அரியல்வாதியாக - கல்வி 

மற்றும் மத சம்பந்தமான ஸ்தாபனங்களின் பொறுப்பாளராக - எடிட்டிங் - 

பப்ளிஷிங் - ஆகியவற்றிலும் திறமை மிக்கவராக- பொருத்தமானவராக 

இருப்பார்.
    

அதிர்ஷ்ட எண்கள் - 6 - 3 - 5 - 8 ஆகும். 


அனுகூலமான எண்கள் - 1 - 4 ஆகும்.

தவிர்க்கப்பட வேண்டிய எண்கள் - 2 - 7 - 9 ஆகும்.
   
அதிர்ஷ்ட நிறம் - வெள்ளை - பச்சை - ஆரஞ்ச் - வெளிர் நீலம் ஆகும்.

தவிர்க்கப்பட வேண்டிய நிறங்கள் - சிகப்பு - கருப்பு ஆகும். 


அதிர்ஷ்டக் கல் - மரகதக்கல் மோதிரம் அணிவது உத்தமம்.
  

No comments:

Post a Comment