Search This Blog

Saturday 8 June 2013

புதன் மற்றும் குருவின் காரகங்கள்




                                   உ
புதனின் காரகங்கள்
    கிரக சாம்ராஜ்யத்தின் இளவரசன் புதன்ஆவான்.புதன் குறிகாட்டுவன: மாமன்,புத்திகூர்மை, கல்வி,வைஷ்ணவம்,துவைதம், விஷ்ணு,வணிகம்,கணிதம், கணக்காளர்,அஞ்சல்துறை,நகைச்சுவை,இலக்கணம்,எழுதுதல்,கட்டிடக்கலை,பண்ணை,பச்சை,வாழை,வடக்கு, இதிகாசங்கள்,பேச்சு,நுண்கலை,உபாசனை,பொழுதுபோக்கும்இடம், உறவுகள்,குழந்தைகள்,தோல்,தொழிலாளி,கிளி, பூனை,ருது, தத்துப்பிள்ளை, வைசியர்,பழம்தராதமரங்கள்,ஜோதிடம்,வாசம்,அதர்வணவேதம்,விளையாட்டுமைதானம்,ஈரத்துணி,அறுசுவையுணவு,வட்டவடிவம், மகதம், தட்டச்சு,அச்சுக்கலை, சிற்பக்கலை,வர்ணமிடும்வேலை ,ஓவியம்,வேர்கள்,பித்தளை,குழந்தைப்பருவம்,அம்பு வடிவம், கற்பூரம், இடதுகாது, ஆராய்ச்சி,அறிஞர்,சிறுபயணம்,தர்க்கம்,பாண்டித்தியம் ,இணைபிரியாமை,நம்பகமான,எல்லாச்செயல்களிலும் சீரான வளர்ச்சி. ,பொதுவான வெற்றி,தாராளமனமுடைய,நல்லநீதி,வியாபாரம்,ஆண்மை,தைரியம்,சாமர்த்தியம்,கலையார்வம், சந்தோஷமான நிலை, விவேகமுள்ள, ஜாக்கிரதையான,சாதுரியமான, அதிர்ஷ்டசாலி,மறைபொருள்விஞ்ஞானம்,கணிதமேதை,சகலகலாவல்லவன்,உள்ளுணர்வு உள்ள, சொற்பொழி வாளர், வாய்ச்சவடால்காரர்,ஞாபகசக்தி மிக்கவர்,எழுத்தும்,திருத்தம்மும் செய்பவர், ஆசிரியர்,பத்திரிக்கைஆசிரியர், மூளை, யுக்தி, நடனம்,விகடம்,வேதாந்தம் ,துளிர்க்கும் மரம்,ரத்தின சோதனை செய்தல்,தாயத்து தயாரித்தல்,மாந்த்ரீக பரிகாரம் செய்தல் ஆகும்.
    புதன் பாதிப்பு அடையும்போது தந்திரசாலியாகவும்,விஷமத்தனமான,மொட்டைக்கடுதாசி எழுதுபவர்,பொய்யர்,சூதாடி,கர்வமுடையவர்,கொள்கையற்றவர்கள்,திடசித்தமில்லாத,நெறிதவறிய, கணிதத்தில் தவறுசெய்யும்,அவதூறாகப்பேசக்கூடிய,வழக்கு மற்றும் மதசம்பந்தமான பிரச்சனைகள்,மோசமானதீர்ப்பு,விதண்டாவாதம்,கபடமற்ற,உண்மைக்குமாறான,வஞ்சிக்கும்,திறமையற்ற,தவறான,விகாரமானவராக இருப்பர்.
    புதன் குறிகாட்டும் உடற்பகுதிகள் –அடிவயிறு,நாக்கு,நுரையீரல்,நரம்பு மண்டலம்,வாய்,மயிர்,திசுக்கள்,தோல் மற்றும் கைகள் ஆகும்.
    நோய்கள் – மனநோய்,மலட்டுத்தன்மை,தலைசுற்றல்,காதுகேளாமை,குரல் உபாதைகள்,கண் நோய்,திக்குவாய்,ஆஸ்மா,மூச்சுத்திணறல், வெண்குஷ்டம்,,மார்புச்சளி,நரம்புவலி,சீரற்ற இதயத்துடிப்பு ஆகியவையாகும்.
குருவின் காரகங்கள்
    குரு கிரக சாம்ராஜ்யத்தின் மந்திரியாவார்.யோகம் மற்றும் அதிர்ஷ்டத்துக்குப் பொறுப்பாகிறார்.இக்கோள் புகழையும்,வெற்றியையும் கொண்டுவருகிறது,வளர்ச்சி மற்றும் சந்தர்பங்களைத் தருகிறது.நம்பிக்கை,தன்னம்பிக்கை,உயர்ந்தமனம்,நீரின்மேலோ,காற்றிலோ நடப்பது,தயாளகுணம்,எல்லா நிலைகளிலும் விரிவாக்குதல்,பக்திமார்க்கம், தத்துவம்,மனோசக்தியும் தருகிறது.புத்திரபாக்கியம்,பெரியமனம், கற்பிப்பதில் ஆர்வம்,சட்டம்,மதபோதகர்,தத்துவவாதி,வங்கிப்பணி,கம்பேனிவேலை,வெளிநாடு,வேகமான,சமூகத்தொடர்பு, விமானப்பயணம், நீண்டபயணம்,சந்தோஷஆரவாரம்,வெளிநாட்டு வாழ்க்கை,மறைபொருள் விஞ்ஞானம்,சட்டத்திற்கு உட்பட்டவர்,கௌரவம்,மரியாதை, மருத்துவம்,உண்மையான,நன்மதிப்பு,இயற்கையானஅமைதி,முன்னேற்றம்,பரம்பரைச்சொத்து,தருமசிந்தனையுள்ள,மரணசாசன சொத்துக்களால் லாபம்,செல்வம்,அழகு,தீர்மானமான நல்லதீர்ப்பு,அனுசரித்துச் செல்லும் மனம்,குடும்பத்தினர் மற்றும் பொதுமக்களால் லாபம்,அரசாங்கவுதவி,புனிதபயணம்,பொருளாதாரம் மற்றும் அதிர்ஷ்டம், பரந்தமனப்பான்மை,இரக்ககுணம்,பதவிவுயர்வு,வியாபாரத்தில் லாபம்,வழக்குகளில் வெற்றி,அரசியலில் பலம்,அரசால் நன்மை,பதவி மற்றும் அதிகாரம்,வெளிநாட்டு நபருடன் தொடர்பு,புத்தகம் பதிப்பித்தல்,சமூகமரியாதை,சகஜமான நபர்,கூட்டாளி,நீதிக்குத்தலை வணங்குதல் மற்றும் நியாயமான முறையில் சம்பாதித்தல்,தயாரிப்பு மற்றும் விரிவாக்கத்துக்கான முதன்மை ஆளுனர், பிராமணர், யோகாப்பியாசம்,தியானத்தால் மனம் ஒருநிலையடைதல், தெய்வீகஞானம்,மதத்தலைமை,விசாரணை மற்றும் பரிசோதனை,அரசரால் அல்லது அரசாங்கத்தால் ரட்சிக்கப்படுதல்,பட்டங்கள் பெறுதல்,தத்துவ ஆராய்ச்சிகள்,மந்திரிசபை மேற்பார்வை செய்தல்,பொறுமை,சிற்பக்கலை,விலகிச் செல்வதிலிருந்துஒன்றுபடுதலுக்கானமுயற்சிகள்மேற்கோள்ளுதல்,தங்கம்,நீலக்கல்,இனிப்பு, வாழ்க்கையின் பொதுத்தரம்,உயர் பண்புகள்,உடல்பருமன்,புஷ்டி,ஆண்சந்ததி, ஜோதிடம்,,உலகசிந்தனை,அமைதியான சுபாவம்,அரசியல் தந்திரம்,ஐம்புலனடக்கம்,நகரவாழ்க்கை நீதி நெறிக்குரிய மற்றும் சட்ட திட்டத்திற்குரிய தொகுப்புக்கள்,சமஸ்கிருதம்.இனிப்பு,ஜித்தேந்ரியங்களை அடக்கியாளும் தன்மை,கடலைப்பருப்பு,கருவூலம்,வட்டிக்கடை, வங்கிகள்,மஞ்சள்,புஷ்பராகம்,தகரம்,கொழுப்பு,ஜோதிடர்,ஆசான்,சன்யாசி,தலைவன்,புறா,குதிரை,வாத்து,ஒருமாதம்,ஆகாய தத்துவம், அரசமரம், ரிக்வேதம், தோளில் அடையாளம்,மத்திமமான துணி,வட்டவடிவம்,சிந்து மாகாணம்,வழிபாட்டுத்தலங்கள், புனிதநதிகள், தென்னைமரம், சிவன்,பார்வதி, ,மூளை,இளமை,உயரமான,குளிர்பானம், உணவு,காது,வயிறு,சிறுநீரகம்,தொடை,சதை,தமனிகள்,ரத்தம்,பாதம்,கல்லீரல்ஆகியவற்றை யும் குறிக்கும்.
    குரு குறிகாட்டும் நோய்கள் – மஞ்சள் காமாலை,கல்லீரல் உபாதைகள்,தலைசுற்றல்,சோம்பேறித்தனம்,நீடித்த நோய்கள்.தூங்கிக் கொண்டேயிருத்தல்,உடற்கொழுப்பு,ராஜபிளவை,வாய்வுத்தொல்லை,குன்மம்,குடல்வால் இறக்கம்,ஒவ்வாமை,மூலம்,சர்க்கரை நோய்,ஜன்னி, புற்றுநோய்,தீராத தோல் நோய்,கபத்தொல்லைகள் ஆகியவையாகும்.
    குரு பாதிக்கப்பட்டும்போது—தீவிரவாதி ஆவார்,வீண்செலவு செய்வார்,அஜாக்கிரதை,வழக்குகள்,சூதாடி,அநீதி,ஏழ்மை,செய்நன்றி மறத்தல், காய்ச்சலால் மரணம்,மறுப்புநிலை,உணர்ச்சிவசப்பட்ட மனநிலை,வாதங்கள்,அற்பமான,ஜனங்களால் வெறுக்கப்பட்டவராகிறார்.
    

No comments:

Post a Comment