Search This Blog

Saturday 8 March 2014

புதிய பாரதம் - 2014





புத்தாண்டில் உருவாகும் புதிய பாரதம்… !

    1 – 1 – 2014 அன்று  நமது தலைநகர் புதுடெல்லியில், புதுவருடத்தில் கன்னி இலக்னமாக எழுகிறது. அந்த உதயமானது புதிய ஆட்சியாளர்களைத் தரலாம். அதிகாரம் எனும் நாற்காலியைப் பிடிக்கும் சரியான போட்டியாக அமையலாம். நாட்டினுடைய பொருளாதாரத்திற்கும், அரசியலுக்கும் இடையேயான போராகவும் அமையலாம். இளைய தலைமுறை அரசியல்வாதிகள், கலைஞர்கள், நடிகர்கள் மற்றும் விஞ்ஞானிகள் ஆகியோர் உருவாகலாம். நாட்டில் புதிய, நிலையான மாற்றங்களும், மறக்கமுடியாத பல புதுப்புது நிகழ்வுகளும் ஏற்படலாம். கீழேயுள்ள புதுவருட ஜாதகத்தை அலசுவோமா ?



கேது

குரு()


லக்//
குரு()
சந்
சனி
செவ்


புது வருடம்
01 – 01 – 2014
நியூடெல்லி
நள்ளிரவு- 00—00
இராசி




நவாம்சம்
கேது
சுக்()

இராகு
சுக்()
சூரி
புத,சூரி
சந்

இராகு
சனி
லக்//
செவ்



புதன்

    இலக்னத்தில் மார்ச் இறுதி வாரம் முதல், ஜூலை 2 ஆம் வாரம் வரை, தற்காலிக அசுபரான செவ்வாயின் நீண்டகால அமர்வு, நாட்டில் அரசியல் குழப்பங்கள், போர் மற்றும் பெரும் விபத்துக்கள் ஆகியவற்றைத் தோற்றுவிக்கலாம். மேலும், எல்லைப் பிரச்சனைகள், கொலைகள், கொள்ளைகள் அதிகரிக்கும். மக்கள் முக்கியமாகக் கூடுமிடங்களில் தீ விபத்துக்கள் ஏற்படலாம், வெடிகுண்டுகள் வெடிக்கலாம். மிக முக்கிய தலைவர்கள் மருத்துவ மனையில் அனுமதிக்கப்படலாம் அல்லது மரணமடையலாம்.

    இலக்னாதிபதி, 4 ஆம் வீட்டில் அமர்ந்துள்ளதால், தானியங்கள், பூமி, தாதுக்கள், சுரங்கங்கள் ஆகியவற்றைப் பற்றிய பேச்சுக்கள் மக்கள் மத்தியிலும், பாராளுமன்றத்திலும் முக்கியப் பேச்சாக அமையலாம். இயற்கைச் சீற்றங்களும், நில அதிர்வுகளும் ஏற்படலாம். ஆயினும், புதன் இலக்னாதிபதியாதலால், மக்களுக்கு மகிழ்ச்சியும், பல நன்மைகளும் ஏற்படும்.

    தன பாவத்தில் இராகு மற்றும் சனியின் அமர்வு பொருளாதார சீர்கேட்டையும், தேசிய இடர்பாடுகளையும், ஏற்றுமதியில் மந்தநிலையையும் ஏற்படுத்தும். பந்த் மற்றும் தர்ணாக்களும் ஏற்படும். சனி அனைத்து நிலைகளிலும் முன்னேற்றத்தைத் தரும். சனி, இராகு இணைவு மத்தியில் ஆட்சி மாற்றத்தைக் கொண்டுவரலாம். குரு பார்வை மேற்சொன்ன நிலைகளில் நல்ல மாற்றங்களைத் தரும். பொருளாதார நிலைகளில் சிறிது முன்னேற்றம் ஏற்படும்.

    தனாதிபதியின் புத்திர ஸ்தானாதிபதியுடனான பரிவர்த்தனையால் குழந்தைகள் சம்பந்தமான விஷயங்கள், மகிழ்ச்சி தரும் பொழுதுபோக்குகள், அவர்களின் கல்விநிலை, பங்குச் சந்தை நிலவரங்கள் ஆகியவற்றில் நாடு முன்னேற்றங் காணும்.

    செவ்வாயானவர், துலாத்தில் நுழையும் காலத்தில், நாட்டில் போர் மேகம் சூழலாம். தொழிலாளர் பிரச்சனைகள், கதவடைப்புக்கள், இராணுவத்தில் பிரச்சனைகள், பொதுசுகாதாரப் பிரச்சனைகள் ஆகியவை ஏற்படலாம்.

    மூன்றாம் அதிபதி இலக்னத்தில் இருப்பது, மீடியாக்கள் மற்றும் தகவல் தொடர்புத் துறைகளில் வியத்தகு முன்னேற்றங்களைத் தரும். அண்டை நாடுகளுடனான ஒப்பந்தங்கள், எல்லைப் பிரச்சனைகள், நீர்ப் பிரச்சனைகள் பொருளார ஒப்பந்தங்கள் ஏற்படலாம். மக்களின் கடின உழைப்பால் நாடு முன்னேறும். நாட்டின் முப்படைகளின் தைரியமும், செயல்பாடுகளும் அதிகரிக்கும். தொழில் நிலைகளில் முன்னேற்றம் ஏற்படும். மக்களின் மதவுணர்வுகளும், சுதந்திர உணர்வுகளும் கூடும்.

    இலக்னாதிபதி புதன், சுகபாவத்தில் அமர்ந்ததால், நாட்டின் விஞ்ஞான முன்னேற்றத்தால் வெற்றிகரமான புதிய கண்டுபிடிப்புக்கள் உருவாகும். நாடு கல்வித்துறையில், மற்றும் சுரங்கத்துறையில் முன்னேற்றம் காணும். சனி மற்றும் செவ்வாயின் பார்வை பாதிப்பால்  போக்குவரத்து மற்றும் விவசாயத்துறைகளில் பாதிப்புகள் ஏற்படலாம். மேலும், 4 ஆம் வீட்டின் பாதிப்பு, வெள்ளம், மண்சரிவு, நிலநடுக்கம், சுரங்க ஊழல்கள், தேசிய இடர்பாடுகள், பல கட்சிகளுக்கிடையேயான குழப்பங்கள், அரசுக்குப் பின்னடைவுகள் ஆகிய அனைத்தும் தரும். என்றாலும், குருவின் பார்வை இப் பாதிப்புக்களைக் குறைக்கும். 4 ஆம் அதிபதி புதன் மற்றும் 10 ஆம் அதிபதி குருவின் பரிவர்த்தனை, புதியதோர் நல் ஆட்சி அமையப்போவதைக் குறிகாட்டுகிறது.

    11 ஆம் அதிபதி சந்திரன் மற்றும் 12 ஆம் அதிபதி சூரியன் ஆகியோரின் 4 ஆம் இட இணைவு, பொருளாதார சீர்கேட்டையும், நாட்டிற்கு வருவாய் இழப்பையும் முக்கியமாக விவசாயம், ரியல் எஸ்டேட் துறை, வாகன விற்பனை ஆகிய துறைகளின் வருவாயை பாதிக்கும்.

    5 ஆம் வீட்டில் சுக்கிரன் அமர்ந்தது, நாட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு இடையூறுகளைத் தரலாம். சந்தோஷத்திற்கு இடமானதால், சினிமாத் தொழிலிலும் சரிவுகள் ஏற்படலாம். கல்விக் கூடங்களில் ஒழுங்கற்ற தன்மைகள், ஊழல்கள் ஏற்படலாம். பிப்ரவரி மாதக் கடைசியில் நிலைமைகள் சீர்படலாம்.

    5 மற்றும் 2 ஆம் அதிபதியின் பரிவர்த்தனை யோகம், பங்குச்சந்தை நிலவரங்களில் முன்னேற்றம் மற்றும் ஏற்ற இறக்கமற்ற நிலையான சூழலைத்தரும். மக்களின் அறிவுத் தாகம் கூடும். அறிவாளிகளின் எண்ணிக்கை கூடும். நாட்டின் புகழும் கூடும்.

    ஆறாம் அதிபதி இரண்டாம் இடத்தில் இருப்பது, உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் சுமுகமற்ற நிலைகள் உருவாகும். நோய்கள், தர்ணாக்கள் ஆகியவற்றால் பொருளாதார பாதிப்பு ஏற்படும். அரசியல்வாதிகளின் வெளிநாட்டுப் பயணங்கள் அதிகரிக்கும். தைரியம் பெருகும். தலைவர்கள் எதையும் ஆணித்தரமாகப் பேசுவர்.

    ஏழு மற்றும் பத்தாம் அதிபதியின் பரிவர்த்தனை எதிர்க் கட்சிகள் ஆட்சியைப் பிடிக்கும் என்பதைக் குறிகாட்டுகிறது. ஜூலை மாதத்தில் பாராளுமன்றத்தில் பல மாற்றங்கள் ஏற்படலாம்.

    எட்டாம் வீட்டில் உள்ள கேது, சனியின் பார்வையால் பாதிப்படைவதால், ஆயுள் காப்பீட்டுத் துறைகளில் சிக்கல்களை உருவாக்கும். பலரின் கூட்டு மரணங்களும் ஏற்படும். தற்போதைய ஆளும் கட்சியின் ஆட்சி முடிவுக்கு வரும்.

    ஒன்பதாம் அதிபதி 5 இல் இருப்பதால் குழந்தைகள் நன்மையடைவர். அவர்களின் கல்வி நிலை உயரும். சினிமாத்துறை, பங்குச்சந்தை ஆகியவை நன்நிலை அடையும். நீதிபதிகள், மதத் தொடர்பான தர்மஸ்தாபனங்கள் ஆகியவற்றில் ஏற்படும் ஊழல்களில் பலர் சிக்க நேரிடலாம். மேல்சபையில், வெளியுறவுக் கொள்கைகள், கப்பல் துறை மற்றும் தொலைத் தொடர்புத்துறை ஆகியவற்றிற்கான புதிய சட்டவிதிமுறைகள் உருவாக்கப்படலாம்.

    பத்தாம் வீட்டில் குருவின் அமர்வு தங்கம். வெள்ளி விலையை மேலும் உயர்த்தும். உணவுப் பொருட்களின் விலையும் உயரும். மார்ச் மாதத்திற்குப் பிறகு மோசமான அரசியல் சூழ்நிலைகள் மாறி, விலைவாசிகளும் குறையும். வடமாநிலங்களில் நல்ல மழை பொழியும். முக்கிய அரசியல் தலைவர் மரணம் எய்தலாம். வெளிநாட்டு அச்சுறுத்தல்கள் ஏற்படலாம். நாட்டின் ஒற்றுமை உணர்வு குறையும். தேர்தலுக்கு முன் ஆளுங்கட்சிக்கும், எதிர்க்கட்சிக்கும் இடையேயான விரிசல்கள் அதிகரிக்கும்.

    பதினோராம் அதிபதி 4 இல் இருப்பதால் பொருளாதாரநிலை சீரடையும். கல்வி, உணவு பாதுகாப்பு மசோதாவுக்கு நல்ல முடிவுகள் ஏற்படலாம், விவசாயம், சுரங்கம் பூமி, வாகனங்கள் மூலமான இலாபங்கள் அதிகரிக்கும்.

    டிசம்பர் 2014 இல் குரு வக்ரநிலை அடையும் போது அதீத மழையின் காரணமாக அழிவுகள் ஏற்படும். சூரிய கிரகண காலத்தில் ( ஜூலை-17 ) நிலநடுக்கம் மற்றும் புயற்காற்று போன்றவற்றால் அழிவு வரலாம்.

    நான்காம் அதிபதி 12 இல் இருப்பது வெளிநாட்டு மூலதனங்கள் அதிகரிக்கச் செய்யும். மருத்துவ மனைகள் நவீனமயமாக்கப்படும், சிறைச்சாலைகள் சீரமைக்கப்படும். ஆளும் கட்சியினர் இடையேயான கருத்து வேறுபாடுகள் வெளிச்சத்துக்கு வரும்.

    எனவே, நண்பர்களே! புது வருடத்தில், புதிய பாரதம் உருவாகும் என்று நம்புவோமாக. ஏற்றமிகு எதிர்கால இந்தியாவை நிர்மாணிப்பது இளைஞர்கள் கையில்தான் உள்ளது. சாந்தி நிலவ வேண்டும், ஆத்ம சக்தி ஓங்க வேண்டும். வாழ்க பாரதம் ! வாழிய பாரதமணித் திருநாடு ! வந்தேமாதரம்

--- ஜோதிட கலாநிதி. எஸ். விஜயநரசிம்மன். எம்.எஸ்ஸி (அப்ளைடு அஸ்ட்ராலஜி)

                                                 செல் -- 94888 62923 , 9789101742.

No comments:

Post a Comment