Search This Blog

Friday 7 March 2014

பா.ஜ.க - காங்கிரஸ் ?





பாரதீய ஜனதாக் கட்சிகாங்கிரஸ் கட்சி --- ஓர் ஒப்பீட்டு ஆய்வு.


    தேர்தல் டென்ஷனில் அரசியல்வாதிகளின் பல்ஸ் எகிருவதைப் போல் போதுமக்களின் பல்ஸ் அதிகரிப்பதையும் நாம் உணரமுடிகிறது. இத் தருணத்தில் பா... – மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் ஜாதகத்தை ஆய்வு செய்து முடிவறிவதே இக் கட்டுரையின் நோக்கம். முதலில் தசா புத்தி அடிப்படையிலும், பின்னர் வருட ஜாதகத்தின் மூலமாக இரு கட்சிகளுக்கான வருட பலனை அறிவதன் மூலமாகவும் நாம் ஒரு முடிவுக்கு வரலாம்.

    பா..க வின் ஜாதகம்.
    இக் கட்சி உதயமான நாள் 1980 ஆம் வருடம் ஏப்ரல் மாதம் 6 ஆம் நாள், பகல்  11 – 30 மணியாகும். தாமரை அன்றுதான் தலைநகர் டெல்லியில் மலர்ந்தது.

சூரி

சுக்
லக்//


லக்//
சுக்
செவ்,
இராகு
புத
குரு
புத, கேது


பாஜக -- ஜாதகம்

சந்


நவாம்சம்



செவ்,குரு
சனி
இராகு
சூரி



சந்


சனி

கேது



    உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான, நமது நாட்டின் பாராளுமன்றத் தேர்தல், இந்த வருடம் ஏப்ரல் மாதம் 16 ஆம் நாள் முதல் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அக் காலத்தில் பாஜக கட்சிக்கு நடக்கும் திசையானது சூரிய திசை, இராகுபுத்தி மற்றும் சந்திரன் அந்தர காலமாகும்( 10-4-2014 முதல் 8-5-2014).

    தசாநாதன் சூரியன் மூன்றாமிடத்துக்கு உரியவனாகி 10 ஆம் இடத்தில் உள்ளான். 10 ஆம் இடமானது, நிர்வாகத் தலைமையைக் குறிக்கும். பிரதமர், ஆட்சிப் பதவிகள், அதிகாரங்கள், அதிகாரத்துக்கு வரும் கட்சி, அரசியல்வாதிகள், மதத்தலைவர்கள், புகழ் பெற்ற மனிதர்கள் மற்றும் உலக அரங்கில் தேசத்தின் பெருமை, கெளரவம், புகழ் ஆகியவற்றைக் குறிக்கும்.

    சூரியனின் காரகங்கள் ஆவனஅரசர், ஜனாதிபதி, பிரதம மந்திரி, நாட்டின் தலைமை, ஆட்சியாளர், மத்திய மந்திரி சபை, அதிகாரப் பதவி, செல்வாக்கு மிக்க அரசியல் தலைவர்கள் ஆகியவையாகும். சூரியன், புதனின் நட்சத்திரத்தில் உள்ளார். 3 ஆம் இடம் அண்டை நாடுகள், அவற்றின் திருப்தி மற்றும் திருப்தியற்ற  நிலைகள், பொது அறிவிப்புக்கள், மேடைப்பேச்சு ஆகியவற்றைக் குறிக்கும்,

   தசாதிபதி சூரியன் புதனின் சாரத்தில் 10 ஆம் இடத்தில் பலம் பெற்று, புதன் 9 ஆம் இடத்தில் உள்ளார். அவர் 10 ஆம் அதிபதி குருவால் பார்க்கப்படுகிறார். இலக்னாதிபதியான புதன் 9 இல் பலம் மிக்கவராக உள்ளார். புதன், குருவின் நட்சத்திரத்தில் இருப்பதால் மேலும் பலம் பெறுகிறார். சந்திரன் அந்தரத்தில் தேர்தல் நடைபெறவுள்ளதால், 2 ஆம் அதிபதியான அவர் புதனின் சாரம் பெற்று, வெற்றி பாவமான 6 இல் உள்ளார். 9 இல் உள்ள புதன் செவ்வாயால் பார்க்கப்படுகிறார். இக் காரணங்களினால் தசா புத்தி அந்தர காலத்தில் கிரக நிலைகள் பாஜக வுக்கு சாதகமாக இருந்தாலும். குரு, செவ்வாய், சனி மற்றும் இராகுவின் மூன்றாமிட அமர்வு தங்களின் சுயபலத்தில் ஆட்சி அமைக்க முடியாத நிலைக்குத் தள்ளிவிடுகிறது.
    இனி கோசார நிலைகளைப் பார்ப்போம், 16 – 4 – 2014 அன்றைய கோசார நிலை ;
புத
சூரி.கேது
லக்//

குரு

சுக்
குரு
சூரி
லக்//
கேது
சனி
சுக்


16 – 4 2014
டெல்லி




நவாம்சம்
செவ்


சந்
புத



சந், சனி
இராகு
செவ்

இராகு



    சந்திராலக்னத்துக்கு 7 இல் ,11 ஆம் அதிபதி சூரியன் உள்ளார். 7 ஆம் இடம் கூட்டாளியைக் குறிக்கிறது. எனவே, கூட்டணிக் கட்சிகளுடன் ஆட்சி அமைக்கும் நிலை உருவாகும். அவர்களால் பாஜகவுக்கு ஆதாயம் / இலாபம் ஏற்படும். சந்திராலக்னத்திலுள்ள உச்ச சனி ஜனனஜாதக 10 ஆம் அதிபதி குருவின் சாரம் பெற்றும், குரு, புதன் பரிவர்த்தனையாகி, குருவால் சந்திராலக்னம் பார்க்கப்படுதலாலும் பாஜகவுக்கு சாதகமான நிலை ஏற்படுகிறது. கோசாரத்தில் சூரியன் வர்க்கோத்தமமாகி, இலக்னத்தில் கேதுவுடன் இணைந்து, கேதுவின் சாரத்தில் உள்ளார். கேதுகிரீடம், செங்கோல், வெற்றிச்சின்னம் மற்றும் வெற்றிக் கோப்பையையும் குறிக்கிறது. எனவே பாஜக ஆட்சியைப் பிடிப்பது திண்ணம்.

    பொதுவான சூரிய தசா (9- 5 2018 வரை) பலன்
    அரசு மற்றும் அரசியல் ஆதாயங்கள் கிட்டும். யந்திர, மந்திர மற்றும் ஆன்மிக உணர்வுகள் அதிகரிக்கும். அரசுப் பணியாளர்களின் நட்பு மற்றும் ஆதரவு கிடைக்கும். அதனால் அனைத்துப்பணிகளையும் சிறப்பாகச் செய்யமுடியும். இக்காலத்தில் மக்களுக்கு அதிக எதிர்பார்ப்புகள் உருவாகும். கூட்டாளிகளுக்குள் ஒற்றுமையின்மை, பிரிவு மற்றும் எதிர்ப்புகள் நிலவும். கால்நடைகள் மற்றும் அரசுப் பணியாளர்களின் எண்ணிக்கை குறையும். அனைத்துப் பணிகளையும் அரசு வெற்றிகரமாக முடிக்கும்.

    இராகுஅரசின் சதிகள், கிளர்ச்சிகள், கலகங்கள், ஆள்மாறாட்டம் ஆகியவற்றைக் குறிப்பதால் இராகு புத்தியில் வன்முறைகள், கலகங்கள் ஏற்படலாம். இராகு புத்தியில்தான் ஹிட்லர் ஜெர்மனியின் வேந்தனானான். இரண்டு மாதங்களுக்குப் பிறகு நற்பலன்கள் ஏற்படும்.
    
இனி காங்கிரஸின் ஜாதக, தசா, புத்தி, அந்தரநிலைகளை அலசுவோமா ?

    1969 ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 22 ஆம் நாள் முன்னாள் பாரதப்பிரதமர் அன்னை இந்திராகாந்தி அவர்களால் காலை 10 மணிக்கு தலைநகர் டெல்லியில் உருவாக்கப்பட்டது. அதன் ஜனன ஜாதகப்படி காங்கிரஸின் எதிர்காலம் எங்ஙனம் உள்ளது என்பதை ஆராய்வோமா ?


சனி()
சந்





 சுக்

 இராகு

 செவ்

 இராகு


 தேசிய காங்கிரஸ்




    நவாம்சம்
சனி()

 செவ்

 கேது

சந்
சூரி

 லக்//

சூரி, புத

குரு, சுக்


கேது
குரு

லக்//
புத
      
நடப்பு திசாஇராகு/ குரு புத்தி, மற்றும்  சுக்கிர அந்தர காலமாகும்.

    தசாநாதன் இராகு நீச சனியின் ஆட்சி வீட்டில் பலமற்ற குருவின் சாரம் பெற்றுள்ளார். அந்தர நாதன் சுக்கிரன் தற்காலிக அசுபராவார். 6 மற்றும் 11 க்கு உரியவர். குருவின் சாரம் பெற்றுள்ளார். 1 மற்றும் 4 க்கு உரிய குரு 11 இல் சுக்கிரனுடன் இணைவு பெற்றுள்ளார். ஆட்சி மற்றும் அரசியலைக் குறிக்கும் சூரியன், பாதகாதிபதியான புதனுடன் இணைந்து விரயபாவமான 12 இல் உள்ளார். பகை வீடான சுக்கிரன் வீட்டில், குரு, செவ்வாயின் சாரம் பெற்று பலமிழக்கிறார். பலமற்ற குருவின் சாரம் பெற்ற சுக்கிரன் அந்தரத்தை நடத்துகிறார். இந்நிலைகள் காங்கிரஸுக்கு சாதகமான நிலைகளல்ல.

    பொதுவாக, இராகு திசை சந்தோஷமின்மையையும், கஷ்டமான சூழலையும், மனக் குழப்பங்களையும் தரும். சக்திமிக்க எதிரிகளைக் கண்டு அஞ்சுவர். தலைகுனிவு மற்றும் அவமானங்களைத் தரும். கூடாநட்பு கேடாய் முடியும். பதவி இழப்புகளும் தவிர்க்க முடியாததாகும். குரு புத்தி தடைகளையும், பண இழப்புகளையும் தரும்.

அடுத்து, இரண்டு கட்சிகளின் வருஷ ஜாதகத்தின்படி பலன்களைக் காண்போமா ?
                                             

                                             சந்,சூரி  முந்தா              புத,குரு

கேது

குரு
()

முந்தா
சூரி.சுக்
செவ்
கேது
குரு


   
காங்கிரஸ்
22 – 11 – 2013 ---
நவம்பர் - 2014
லக்//
சந்
சந்
புத
சுக்    பாஜக
6 – 4 - 2013 முதல்
ஏப்ரல் – 2014 மற்றும் ஏப்ரல் 2015.
வரை


முந்தா.
செவ்


சுக்
சூரி
இராகு,
சனி
புத


லக்//
சனி
()
இராகு

                                                                          செவ் 
பாஜகவெளியிலுள்ளவை 2014 – 15 க்கான வருஷ ஜாதக கிரக நிலைகள்.

    காங்கிரஸின் வருஷாதிபதி சந்திரன் பலம் மிக்கவராக உள்ளார். அதன் காரணமாக கூட்டாளிகளால் நன்மை ஏற்படும். புதிய கூட்டணிகள் உருவாகும். அரசில் முக்கியத்துவமும், ஆதாயங்களும் ஏற்படும். அரசு உயர் அதிகாரிகளின் உதவிகள் கிடைக்கும்புகழும் மரியாதையும் குறையாது. சமூகப் பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கும்.

   முந்தா என்றால்  -- பிறக்கும் போது இலக்னத்தில் இடம்பெறும் முந்தா, ஒவ்வொரு ஆண்டும் ஒரு இராசிக் கட்டம் நகரும், முக்கியப் புள்ளியாகும்,

    முந்தாவின் நிலை ; இரண்டாம் பாவத்தில் முந்தா, செவ்வாயுடன் இணைவு. முயற்சியால் ஆதாயம் மற்றும் கூட்டாளிகளிடம் மரியாதையும் உயரும். இரண்டாமிடம் கௌரவத்தையும், அரசு அனுகூலங்களையும், கூடுதல் பலத்தையும் தரும். அனுகூலமற்ற நிலைகள் அனுகூலமாகும். கேளிக்கைகளிலும், சுகானுபவங்களிலும் ஆர்வம் கூடும்.

    சிம்மராசியில் முந்தேஷின் நிலைக்கான பலன் ; அரசாங்க ஆதரவு உண்டு. அரசு அதிகாரிகளின் நட்பு ஆதாயம் தரும். தேர்தல்களில் வெற்றி கிட்டும். பணிகளில் முன்னேற்றம் ஏற்படும்.

    5 ஆம் இடத்தில் இடம்பெற்றுள்ள முந்தேஷ்சூரியன் தரும் பலன்கள் ; மக்களால் சந்தோஷம் ஏற்படும். அரசு மரியாதை கிடைக்கும்.
இனி பாஜகவின் வருஷஜாதக பலனைக் காண்போம் ;


    வருஷாதிபன்செவ்வாய் ஆவார். அவர் தரும் பலன்.

     புகழ், எதிரிகள் சிதறி ஓடுதல், அதிகாரபதவி கிடைத்தல், புதிய கூட்டாளிகள் மற்றும் நண்பர்களின் நல்லுறவு ஆகியவற்றைத் தரும். காவற்துறையின் உதவிகள் கிடைக்கும். கௌரவமும், மரியாதையும் அதிகரிக்கும். கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டை நிலைநிறுத்தும் பொறுப்புள்ள பதவிகள் மற்றம் அதிகாரம் மிக்க பதவிகள் தேடிவரும்.  

     முந்தா தரும் பலன் ; தற்போது  5 ஆம் பாவத்தில் இருக்கும் முந்தா, பலத்தைக் கூட்டி, மகிழ்ச்சியைப் பெருக்கும். புதிய கூட்டாளிகளின் தொடர்பு, கடவுள்அந்தணர்கள் மற்றும் அரசு எனப்படும் மக்களின் ஆதரவு பெருகும். வெற்றிகள் குவியும், வெற்றி விழாக்கள், மகிழ்ச்சிக் கொண்டாட்டங்கள் ஏற்படும். உலகமெங்கும் புகழ் பரவும். மத ஆர்வங்கள் மற்றும் புனிதப் பயணங்கள் பலன் தரும்.

     மீனராசியில் இருந்து முந்தா தரும் பலன் ; அனுகூலமான பலன்கள் தொடரும். புண்ணிய புருஷர்களின் அருகாமை கிட்டும். வெற்றி மேல் வெற்றி கிட்டும். எதிர் பாராத நல்ல திருப்பங்கள் ஏற்படும். அரசியலில் ஏற்றமிகு காலமாக இருக்கும்.

     முந்தேஷ் ஆன குரு 7 ஆம் பாவத்தில் இருப்பதால், கூட்டணிக் கட்சிகளால் ஏற்படும்  தொல்லைகள் அதிகரிக்கும். அதனால் கவலைகள் ஏற்பட்டு பணிகளில் தொய்வும், தாமதங்களும் ஏற்படும்.

     மேற்சொன்ன பலன்கள் 2014 ஏப்ரல் வரையாகும். இனி 2015 ஏப்ரல் வரையான பலன்களைப் பார்ப்போம்.

     இவ்வருடத்திற்கான வருசேஷ் சுக்கிரன் ஆவார். அவர் மகிழ்ச்சிக் கொண்டாட்டங்களைப் தருவார், கூட்டணிக் கட்சிகளின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். கருத்து மோதல்களில் வெற்றியைப் தரும். அரசுக்கு ஆதாயங்கள் பெருகும். நவீன பொழுதுபோக்கு சாதனங்கள், நவநாகரீகப் பொருள்கள் ஆகியவற்றின் வர்த்தகம் பெருகும். மக்களுக்கும் இதன் பலன்கள் சென்றடையும். பொருளாதார உயர்வு ஏற்படும்.

     முந்தா புள்ளி 6 ஆம் பாவத்தில் விழுவதால், வெற்றிகள் குவியும். ஆயினும், மக்களின் ஆரோக்கியம் குறையும். பணிகளில் முடக்கம் ஏற்படும். விபத்துக்கள் அதிகரிக்கும், மனஅமைதி குறையும். பெண்களுக்குத் தீங்கு ஏற்படுவதின் மூலமாக அவமானங்கள் ஏற்படும். கடன்களும் அதிகரிக்கும்.

     முந்தேஷ்செவ்வாயின் இராசியான, மேஷத்தில் இடம் பெற்றுள்ளதால், அனுகூலமற்ற பலன்கள் ஏற்படும், ஆயுதங்களால் ஆபத்துக்கள் ஏற்படும், போர், கலகம், வழக்கு விவகாரங்கள் மற்றும் செலவினங்களும் கூடும்.

    முந்தேஷ்இலாப பாவத்தில் இடம்பெற்றுள்ளதால் பொருளாதார முன்னேற்றங்கள், தொழில் துறை மற்றும் வணிக முன்னேற்றங்கள் ஏற்படும். தாய்த் திருநாட்டின் புகழ் தரணியெங்கும் பரவும். மக்களுக்கும் சுகமான நல்வாழ்வு அமைந்து மகிழ்ச்சியுடன் வாழ்வர்.

     எனவே நண்பர்களே ! இரு கட்சிகளின் தசா பலன்கள் மற்றும் வருஷ ஜாதக பலன்களை ஆராயுங்கால், பாரதீய ஜனதா கட்சிக்கே அதிக அனுகூலமான பலன்கள் தென்படுவதைக் காணலாம். காலம் சொல்லும் பதில் என்ன ? – என்பதைப் பொருத்திருந்து பார்ப்போம். என் தந்தை எழுதியபடிசாந்தி நிலவ வேண்டும், ஆத்ம சக்தி ஓங்க வேண்டும்உலகிலே சாந்தி நிலவ வேண்டும்
     வாழ்க பாரதம் ! வாழிய பாரதமணித் திருநாடு ! வந்தேமாதரம் !

-- ஜோதிட கலாநிதி. எஸ். விஜயநரசிம்மன். எம். எஸ்ஸி ( அப்ளைடு அஸ்ட்ராலஜி ).
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                        

   

No comments:

Post a Comment