Search This Blog

Saturday 8 March 2014

ஜோதிட மேதை. வி. எஸ். கல்யாணராமன். பெங்களூரு




ஓம் ஶ்ரீ ராகவேந்திராய நமஹ
ஜோதிஷ் ஏக் ஸங்கேத் ஹை, ஹை பவிஷ்ய அனுமான்,                         யே ப்ராக்யா கி ஜ்யோதி கா ஹை அத்யாம்திக் ஞான் I

    எதிர்காலத்தில் நிகழப்போகும் நிகழ்வுகளைத் துல்லியமாக நமக்குத் தெளிவாக எடுத்துரைப்பதே ஜோதிடமாகும். அதுவொரு உள்ளுணர்வின் ஒளி மற்றும் இறைஞானம் ஆகும். இந்த இறையருளால் ஒரு நல்ல ஜோதிடன், நெத்தியடியாக பலன்களை உரைக்கமுடிகிறது. தசா, புத்தி மற்றும் கோசார நிலைகள் ஆகிய, கர்மவினைகளின் சமன்பாட்டு நிலைகள் ஒத்து வரும் போது மற்றும்  நன்றாக வேலை செய்யும் போது, இது அவனுக்கு சாத்தியமாகிறது, என்றால் மிகையாகாது.

   இத்தகைய ஜோதிடர்கள், இகலோக ஜோதிட நிலைகளிலும், (முன்டேன் அஸ்ட்ராலஜி) தமது இலக்கைக் குறிவைத்துத் தாக்கும் தோட்டாபோல், தங்கள் பலன்களைத் தரத் தவருவதில்லை. இத்தகைய பெருமைமிகு ஜோதிடர் பெரியவர் ஆனாலும் அகவை எண்பது கடந்த இளைஞர், திரு. வி.எஸ். கல்யாணராமன் அவர்கள், வருடாவருடம், எக்ஸ்பிரஸ் ஸ்டார் டெல்லர் (ஈஎஸ்டி) ஆங்கில ஜோதிட மாத இதழ் வழங்கும், ஈஎஸ்டி நாஸ்டர்டாம்ஸ் அவார்டுஎனும் 2013 வருடத்திற்ககான கௌரவம் மிக்க பரிசை, வழங்கி கௌரவப்படுத்தி அதுவும் கௌரவமடைகிறது என்பது நமக்கெல்லாம் பெருமைதானே ? ( நாஸ்டர்டாம்பிரான்ஸில் பிறந்த, உலகின் மிகப் பெரிய ஜோதிட ஆலோசகர் மற்றும் அருள்வாக்குச் சித்தர் ஆவார் ).

    இத்தகைய ஜோதிடமேதை, வானியலாளர் மற்றும் கணித மேதை திரு வி.எஸ். கல்யாணராமன் அவர்கள்  .எஸ்.டி ஆங்கில ஜோதிடப் பத்திரிக்கை மற்றும் தமிழ், மலையாள ஜோதிடப் பத்திரிக்கைகளில் ஆராய்ச்சிக் கட்டுரைகள், எழுதிவரும் மிகப் பெரிய, மிகச் சிறந்த எழுத்தாளராவார். இவர் இந்திய தேசிய அரசுப் பணியில், காவல் துறையில் உயரிய பதவியில் சிறப்பாகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.

    இளம் வயதிலேயே, பிரசித்திபெற்ற புருஷோத்தமன் நம்பூதிரியிடம் ஜோதிடத்தைத் தொழிலாகச் செய்வதில்லை என்ற வாக்கோடு, பயின்றார். பாஸ்கரதாசன், படோத்பலா, விஎஸ்கே, உத்பலா, மிஹிரா, பரத்வாஜா, அஜாதசத்ரு, ஜனமேஜயா. ஞானவாக்யா என பல புனைபெயர்களில் எழுதிவரும், இந்த ஜோதிட மேதை இப் பெருமைமிகு விருதைப் பெற்றமைக்காக இவருக்கு குருவருள் ஜோதிடம்தனது  வாசகர்கள் சார்பாக வாழ்த்துத் தெரிவிப்பதில் மிக்க மகிழ்ச்சியடைகிறது.

           வாழ்க அவர் புகழ் ! வளர்க அவரின் ஜோதிட சேவை !

 --- ஜோதிட கலாநிதி. எஸ். விஜயநரசிம்மன். எம். எஸ்ஸி.(அப்ளைடு அஸ்ட்ராலஜி

No comments:

Post a Comment