Search This Blog

Sunday 7 December 2014

இந்தவார நட்சத்திர பலன் - 7/12/2014 -- 13 / 12 / 2014(தினபூமியில்)

இந்தவார நட்சத்திர பலன் - 7 / 12 / 2014 முதல் 13/12/2014

மேஷம்

 (அஸ்வினி-1, 2, 3, 4 பாதங்கள்பரணி-1, 2, 3, 4 பாதங்கள்கார்த்திகை-1, பாதம்)

அஸ்வினி --

       இந்த வாரம் செலவுகள் அதிகரிக்கும். அதற்குத் தக்க வருமானமும் அதிகரிக்கும். குடும்பத்தில் வீண்வாக்கு வாதங்களைத் தவிர்ப்பது நல்லது. மகான்களின் சந்திப்பால் மனம் மகிழும். முயற்சிகள் அனைத்திலும் முன்னேற்றம் அடைவீர்கள். சிலருக்குத் தேவையற்ற அலைச்சல்கள் ஏற்படலாம். நல்ல நண்பர்களின் சேர்க்கை ஏற்படும். நற்காரியங்களில் ஈடுபடுவீர்கள். நேர்த்தியாக உடையணிந்து, விருந்தினர்களுடன் கேளிக்கைகளில் ஈடுபட்டு மகிழ்வீர்கள். அரசு ஆதாயங்களால் தொழில் வழியில் முன்னேற்றம் ஏற்படும். சிலருக்குத் தோல் சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்பட்டு சரியாகலாம். மனமகிழ்ச்சி, பகைகளை வெல்லும் திறன் ஆகியவை ஏற்படும்


பரணி  --

       இந்த வாரம் இன்பப் பயணங்களால் சந்தோஷம் பெருகும். புதுப்புது தொழில் தொடர்புகள் ஏற்படலாம். அதன் காரணமாகத் தொழிலில் இலாபங்கள் அதிகரிக்கும். வாழ்க்கையில் முன்னேற்றங்களையும், சுகானுபவங்களையும் மற்றும் கௌரவத்தையும் அடைவீர்கள். சிலர் பழைய கடன்களை அடைக்கப் புதிய கடன்கள் வாங்க நேரும். தீயோர் தொடர்பால் வீண் பிரச்சனைகள் எழலாம். எனவே, எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு அரசால் கெடுபிடிகள் ஏற்படலாம். குழந்தைகளால் அவமானங்களும், தொல்லைகளும் ஏற்படலாம். கல்வியில் வெற்றி பெறக் கவனமாகப் படிக்க வேண்டும்.  
கார்த்திகை  1 ஆம் பாதம்.—

       இந்த வாரம் உறவுகளுடன் ஒற்றுமை ஓங்கும். தொழிலில் எதிர்பார்த்த அளவுக்கு இலாபம் அடைய புதிய யுக்திகளைக் கடைப்பிடிப்பீர்கள். வராத விருந்தினர் வருகையால் வீட்டில் கும்மாளமும், குஷியும் இருக்கும். செலவுக்கும் குறைவிருக்காது. அரசுவகையில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைத்து ஏற்றம் உண்டாகும். தம்பதிகளுக்கு இடையே கோபம் மறைந்து சமாதானமாகி, இணைந்து பேரின்பம் அடைவர். மிகவும் அன்பு காட்டும் பெண்களின் ஆதரவால் லாபம் ஏற்படும். குழந்தைகளின்  சுட்டித்தனம் மற்றும் சேட்டைகளைக் கண்டு மனம் மகிழ்ச்சி அடையும். மேடைப் பேச்சாளர்கள் தங்கள் பேச்சின் மூலமாக வருமானம் ஈட்டுவர்.  கொடுத்த கடனை திரும்பப் பெறுவதில் சிக்கல்கள் ஏற்படலாம்.
ரிஷபம்

( கார்த்திகை – 2,3,4 பாதங்கள்-ரோகிணி-1,2,3,4-பாதங்கள்-மிருகசிரீடம்-1,2 பாதங்கள் )

கார்த்திகை 2,3,4 பாதங்கள்

       இந்த வாரம் பிறரிடம் கோபத்தால், துர்வார்த்தைகளைப் பேசாதிருப்பது நல்லது, சகோதரர்களிடம் விரோதம் ஏற்படாதிருக்க அனுசரித்துச் செல்லுங்கள். இக்கட்டான சூழ்நிலைகளில் பிறரிடம் கடன் வாங்கும் நிலை ஏற்படும். வேலை விஷயமாக அரசிடம் இருந்து எதிர்பார்த்த தகவல்கள் வந்து சேரும். வியாபாரத்தில் திட்டமிட்டபடி விரிவாக்கங்களைச் செய்து முடிப்பீர்கள். அதன் காரணமாக வருவாயும் ஓரளவு அதிகரிக்கும். மேடைப் பேச்சாளர்களுக்குத் தங்கள் வாக்குவன்மையால் வருமானம் அதிகரிக்கும். பெண்களால் ஆதாயம் ஏற்படும். மாணவர்கள் போட்டி பந்தயங்களில் வெற்றி பெற்று பள்ளிக்குப் பெருமை சேர்ப்பர்.

ரோகிணி  –

       இந்த வாரம் எதிர்பாராத தனவரவுகள் ஏற்படும். பக்திப் பிரசங்கங்கள் கேட்பதில் ஆர்வம் ஏற்படும். புதிய வியாபாரத் தொடர்புகளால் இலாபம் அதிகரிக்கும். உயர் அதிகாரிகளால் பாராட்டப்பட்டு பதவி உயர்வின் மூலமாகப் பணப் பயன்களை அடைவீர்கள். புண்ணிய ஸ்தல யாத்திரைகள் சென்று மகிழ்வீர்கள். சிலருக்குப் பாசம் மிக்க உறவுகளைப் பிரிந்து வாழ நேரிடலாம். ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். தந்தைவழி உறவுகளால் வீண்தொல்லைகள் ஏற்படலாம். நல்ல நண்பர்களுடன் பழகுவது நன்மை அளிக்கும். இடைவிடாத வேலை காரணமாக நேரத்துக்கு உணவருந்த முடியாத நிலை ஏற்படும். மது, மாமிசம் அருந்துபவர்களுக்குத் அஜீரணத் தொல்லைகள் எழலாம்.

மிருகசிரீஷம் – 1 , 2 பாதங்கள்

      இந்த வாரம் நீங்கள் ஈடுபடும் காரியங்களில் வெற்றி கிட்டும் என எதிர்பார்க்க முடியாது. குடும்பத்தினரின் உல்லாசப் பொழுதுபோக்குகளாலும் விருந்தினர் வருகையாலும் செலவுகள் அதிகரிக்கும். உங்கள் திறமை மிக்க செயல்பாடுகளால் அனைவரின் பாராட்டையும் பெறுவீர்கள். தொழிலில் ஏற்படும் முழுஈடுபாடு காரணமாக தாராளமான பணவரவு இருக்கும். சிலருக்குப் பருவமாற்றம் காரணமாக சளி, தலைவலி, காய்ச்சல் என சிறு உடல் உபாதைகள் ஏற்படலாம். வீட்டில் ஏற்படும் குழப்பங்கள் காரணமாக உணவின் மீதும் வெறுப்பு ஏற்படும். அரசாங்கத்திடம் இருந்து அனுகூலமான செய்திகள் வந்து சேரும். பாசம் மிக்க பெண்களால் மனமகிழ்ச்சி ஏற்படும். பயணங்களால் சுகம் ஏற்படும்.
மிதுனம்

(மிருகசிரீடம்- 3,4 பாதங்கள், திருவாதிரை-1,2,3,4 பாதங்கள், புனர்பூசம்-1,2,3 பாதங்கள்)

மிருகசிரீஷம் – 3 , 4 பாதங்கள். –

              இந்த வாரம் எதிர்பாராத தனவரவு உண்டு. சுற்றத்தார் மூலமாகவும் பணவுதவிகள் கிடைக்கலாம். தொழிலில் எடுக்கப்படும் விஸ்தரிப்பு நடவடிக்கைகள் மூலமாக வருமான வாய்ப்புகள் பெருகும். தேவையற்ற சினத்தைக் குறைத்தால் குடும்பத்தில் குழப்பங்களும் குறையும். தந்தைவழி உறவுகளால் வீண்தொல்லைகள் ஏற்படலாம். தீயவர்கள் தொடர்பால் சஞ்சலம் ஏற்பட வாய்ப்புண்டு. எனவே, அத்தகையோரை விட்டு விலகுவது உத்தமம். வீட்டில் சுப காரியங்கள் அனைத்தும்  சிறப்புற, வெற்றிகரமாக நடக்கும். புதிய தொழிலாளர் சேர்க்கை காரணமாக தொழிலில் உற்பத்தி பெருகும். புத்திர பாக்கியம் ஏற்படும். தாய் மூலமாக நன்மைகள் ஏற்படும்.
திருவாதிரை ---

       இந்த வாரம் வீட்டில் மனைவியிடம் வீண் விவாதங்களைத் தவிர்க்கவும். புண்ணிய கதைகள் கேட்டல், சாதுக்களின் தரிசனத்தால் மனம் அமைதி பெறும். காணாமல்போன பொருட்கள் கைக்கு வந்து சேரும். சிலருக்குக் காரியத் தடைகள் ஏற்படலாம். நல்லோர் சேர்க்கையாலும், பந்துக்கள் வருகையாலும் உற்சாகம் பொங்கும். அரசுப் பணியாளர்களுக்குப் புதிய பதவியும், பொறுப்பும் கிடைக்கும். வாகன வசதியும், நற்கல்வியும் கிடைக்கும். சிலருக்கு அரசாங்க விருதுகள் கிடைக்கும்வாக்கு வன்மை ஓங்கும். சிலருக்கு வீடு, மனை ஆகியவை கிடைக்கும். பூரண சயன சுகம் ஏற்படும்பிறருக்கு உதவும் நல்ல எண்ணம் மேலோங்கும்தொழில் விஷயமாகத் தீட்டிய முக்கியத் திட்டங்கள் நிறைவேற எடுத்த நடவடிக்கைகள் வெற்றி பெறும்

புனர்பூசம் – 1, 2, 3 – பாதங்கள்.
       இந்த வாரம் ஈடுபடும் வேலைகளில் புதிய சாதனைகளைப் படைப்பீர்கள்பெண்கள் சல்லாபம், முயற்சிகளில் வெற்றி போன்றவற்றால் மனம் மகிழும். பெரியோர்களின் ஆசியும், மேலதிகாரிகளின் ஆதரவும், புதிய நண்பர்களால் நன்மையும் ஏற்படும். மாணவர்களுக்குக் கவனச் சிதறல்கள் காரணமாகப் படிப்பில் ஆர்வம் குறையலாம். எனவேஆழ்ந்து கவனமாகப் படித்தால் அதிக மதிப்பெண்கள் பெறலாம்சிலருக்கு இடமாற்றங்கள் ஏற்படலாம்மனோதைரியம் அதிகரிப்பதன் காரணமாக எவரையும் எதிர்த்து வெற்றி பெறுவீர்கள். தொழிலில் எதிர்பார்த்தபடி பல வழிகளிலும் தனவரவு அதிகரிக்கும். சிலருக்கு நல்ல குரு வாய்க்கப் பெற்று ஆன்மிக வழியில் அறிவுத் தெளிவு ஏற்படும்,

. கடகம்

(புனர்பூசம்- 4 ஆம் பாதம், பூசம்-1,2,3,4 பாதங்கள், ஆயில்யம்-1,2,3,4 பாதங்கள்)

புனர்பூசம் – 4 ஆம் பாதம்.

       இந்த வாரம் தூரதேசத்தில் இருந்து வரும் நல்ல தகவல்களால் மனமகிழ்ச்சி ஏற்படும். அதே நேரம் நண்பர்கள் பகையால் மனக் கலக்கம் ஏற்படலாம். சோம்பல் காரணமாகச் சுறுசுறுப்பற்ற நிலை ஏற்படும். ஆயினும், எதிர்பார்த்தபடி தனவரவுகள் கைக்கு வந்து சேரும். வந்த பணத்தை தரும காரியங்களுக்கு தாராளமாகச் செலவு செய்து மகிழ்வீர்கள்கேளிக்கை, பிறந்த நாள் விருந்துகள் என மகிழ்ச்சி பொங்கும்.  நல்லோர் சேர்க்கையால்  மாணவர்களுக்குக் கல்வியில் தேர்ச்சி உண்டு. வியாபாரிகளுக்கு வங்கிக் கடன்கள் பெறுவதில் எவ்விதச் சிக்கல்களும் ஏற்படாது. வியாபரிகள் தங்கள் வாக்கால் வாடிக்கையாளர்களைக் கவர்ந்து இலாபத்தைப் பெருக்குவர். சிலருக்கு உழைப்பு அதிகமாகி அதற்கேற்றார் போல் ஆதாயமும் அதிகரிக்கும்.

பூசம் -- 

       இந்த வாரம் உங்களுக்குத் தொழிலில் புதிய கொள்முதல் மூலமாக அதிகமான வருவாய்ப் பெருக்கம் ஏற்படும். புதிய வாகனயோகம் ஏற்படலாம். யாத்திரையும், வெளிநாட்டுப் பயணங்களும் ஏற்படும். வீட்டுக்கு வரும் விருந்தினருடன் சினிமா, டிராமா என செல்வதால் மனம் மகிழும். ஞானிகளின் அருளால் நல்லதே நடக்கும். தேவையற்ற அலைச்சல்கள் ஏற்படும். அதிகாரிகளிடம் பணிவுடன் நடந்தால், எதிர்பார்க்கும் பணி உயர்வுகள் எளிதா கிடைக்கும். சிலருக்கு கடன் வாங்கும் நிலை ஏற்படலாம். மாணவர்கள் தங்கள் கடின உழைப்பால் கல்வியில் நல்ல தேர்ச்சி அடைவர். பணிபுரியும் பெண்களுக்கு இடமாற்றங்கள் ஏற்படலாம்.

ஆயில்யம்

       இந்த வாரம் புதிய முயற்சிகளால் பண வருமானம் அதிகரிக்கும். வாடிக்கையாளரிடம்  நட்புப் பாராட்டும் வியாபாரிகளுக்கு அதிக இலாபம் கிடைக்கும். அழகிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். அதிகாரிகளின் நட்பால் ஆதாயம் பெறுவீர்கள். நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வெற்றி பெறும் சுபகாரியங்களுக்காக வீடே விழாக்கோலம் பூணும். திடீரென ஏற்படும். பயணங்களால் ஆதாயமும், மகிழ்ச்சியும் ஏற்படும். அரசுப் பணியாளர்களுக்கு எதிர்பார்த்தபடி தலைமைப் பதவிகள் தேடி வரும். வீரம் பொங்கும். தங்கள் சேவைகள் அனைவராலும் அங்கீகரிக்கப்படும். இசை ஆர்வத்தால் சங்கீத சபாக்களுக்குச் சென்று இசை மழையில் நனைவீர்கள்.

. சிம்மம்
( மகம்-1,2,3,4 பாதங்கள்,பூரம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் உத்திரம்- 1 பாதம்)

மகம்

       இந்த வாரத் துவக்கத்தில் தீயோரைக் கண்டு அஞ்ச நேரிடும். குழந்தைச் செல்வங்களால் மனக்கலக்கம் மற்றும் அவமானம் ஏற்படலாம். பின்னர், ஈடுபடும் புதிய முயற்சிகளால் வாழ்க்கையில் எதிர்பார்த்த முன்னேற்றங்கள் இருக்கும். ஸ்த்ரீ சுகம், கேளிக்கை ஈடுபாட்டால் மகிழ்ச்சி, பந்து ஜன வரவால் உற்சாகம், மகான்களின் தரிசனம் ஆகியவை ஏற்படலாம். பணியில் இருப்பவர்களுக்கு நீங்கள் எதிர்பார்த்த அல்லது விரும்பிய இடத்திற்கு இடமாற்றங்கள் ஏற்படலாம்தெய்வ தரிசனத்தால்  மனம் மகிழ்வதோடு, மனதில் அமைதியும் நிலவும். வியாபாரிகளுக்கு முதலீடுகள் அதிகரித்து இலாபமும் அதிகரிக்கும். உத்தியோகம் மற்றும் தொழிலில் அபிவிருத்தி ஏற்படும்புத்திர பாக்கியம் ஏற்படும். தொழில் வாய்ப்புகள் பிரகாசமாய் இருக்கும்.

பூரம்

       இந்த வார முதல் நாளில்  குடும்பத்தாரிடையே ஓரளவே ஒற்றுமை நிலவும். பயணம், அரசு சம்பந்தமான வேலைகள் மற்றும் தந்தை வகை உறவுகளால் தோல்லைகள் ஏற்படலாம். பின்னர், எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி மேல் வெற்றி கிடைக்கும். நீங்கள் விரும்பிய பொருட்களை எல்லாம் வாங்கிக் குவிப்பீர்கள்.  சுகமும், ஆடை ஆபரண சேர்க்கை, புத்திர பாக்கியம் மற்றும் எதிர்பாராத பணவரவுகள் ஆகியவை ஏற்படும். புதிய தொழில் முயற்சிகளுக்காக எதிர்பார்க்கப்படும் வங்கிக் கடன் உதவிகள் சிரமத்திற்குப் பின் கிடைக்கும். அரசு உதவியுடன் பணவரவு இருக்கும். ஆறுவது சினம் என சினத்தை அடக்கினால் சிரமங்கள் குறையும். உடன் பிறந்தவர்களோடு அனுசரித்துச் செல்வது நல்லது.

உத்திரம்- 1 பாதம்

       இந்த வார மத்தியில்  உங்களுக்குச் சிறப்பான பலன்கள் ஏற்படும். துவக்கத்தில் பண விஷயமான சிந்தனைகள் தலைதூக்கும். ஆரோக்கிய பாதிப்பு, காவல் துறையினரால் அச்சம் ஆகியவை ஏற்படலாம். திட்டமிடப்பட்ட பயணங்களில் தடைகள் ஏற்படலாம். பிறரைக்கண்டு ஏற்படும் பொறாமை மற்றும் கோபங்களைத் தவிர்ப்பது நல்லது. பின்னர், கல்வியில் தேர்ச்சியும், தெய்வ சிந்தனை மற்றும் தரும சிந்தனையும் ஏற்படும். சிலருக்கு உயர் ரக வாகனங்கள் கிடைக்கும். பணம் சம்பாதிப்பதில் ஆக்கமும், ஊக்கமும் ஏற்படும். வீண் மனஸ்தாபங்களைத் தவிர்த்தால் வீட்டில் அமைதி நிலவும். திடீர்ப் பயணங்கள் மூலமாக ஆதாயங்கள் ஏற்படும்பழைய கடன்களை அடைத்துவிடுவீர்கள்இடைவிடாத பணி காரணமாக நேரத்துக்கு உணவு உண்ண இயலாமல் போகும்.


கன்னி

( உத்திரம் – 2, 3, 4-பாதங்கள், ஹஸ்தம்-1, 2, 3, 4 பாதங்கள், சித்திரை – 1,2 பாதங்கள்)

உத்திரம் – 2, 3, 4 – பாதங்கள்.

       இந்த வாரத் துவக்கத்தில் குடும்பத்தில் பாசப் போராட்டங்கள் ஏற்படலாம். அரசு அதிகாரிகளை அனுசரித்துச் சென்றால் தொழில் அல்லது வியாபாரத்தில் ஏற்படும் சிக்கல்களைச் சமாளிக்கலாம். பின்னர், கடன்களை அடைக்க தக்க சமயத்தில் பணவரவு ஏற்படும்சிலருக்குப் புதிய தொழில் தொடங்க எடுக்கப்படும் முயற்சிகள் வெற்றி பெறும்அரசு அதிகாரிகளின் அன்பு மற்றும் ஆதரவால் பணி உயர்வு நினைத்தபடி கிடைக்கும்சிலநேரங்களில் சுறுசுறுப்பற்ற நிலையும், மனோபயமும் நிலவும். புதிய தொடர்புகளால் நன்மைகளும் ஏற்படும். போட்டி, பந்தயங்களில் வெற்றி கிடைக்கும். உங்களின் அபரிமிதமான அறிவுத் திறனால் கௌரவப் பட்டங்கள், புதிய பதவிகள் ஆகியவை கிடைக்கலாம்.


ஹஸ்தம்

       இந்த வாரம் இனிய வாரம். பொருளாதார நிலைகள் திருப்திகரமாக இருக்கும். ஆடை, ஆபரண இலாபங்கள் பெற்று உற்சாகமாகத் திகழ்வீர்கள். பிள்ளைப் பேறு, தொழிலில் புதிய வாய்ப்புக்கள் மற்றும் லாட்டரி யோகம் ஆகியவை ஏற்படலாம். சிலருக்கு அக்னி பயம், திடீர் விபத்து ஏற்பட வாய்ப்பு இருப்பதால் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. எந்தக் காரியத்தையும் திறம்படச் செய்யும் உங்கள் செயல்திறன் கூடும். அதன் காரணமாக உங்கள் பணி இலக்கை அடைவீர்கள். சிலருக்கு மற்றவர்களை ஆணையிடும் உயர் பதவி கிடைக்கும் புதிதாக வேலை தேடுபவர்களுக்கு நல்ல காலம் பிறக்கும். மாணவர்கள் தங்கள் கிரகிப்புத் தன்மையால் கல்வியின் தரத்தை உயர்த்திக் கொள்வர். விற்பனைப் பிரதிநிதிகளின் வருமானம் அவர்களின் பேச்சுத் திறனால் அதிகரிக்கும்.

சித்திரை – 1,2 பாதங்கள்

       இந்த வாரம் சித்திரை முதல் மற்றும் இரண்டாம் பாதத்தில் பிறந்தவர்கள் வீட்டில் அமைதியை நிலைநாட்ட வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. தேவையற்ற செலவுகளைக் குறைத்துச் சிக்கனமாக இருந்தால், பணமுடைகளைத் தவிர்க்கலாம்.  ஆயினும், எதிர்பாராத இடத்தில் இருந்து வந்த பணவரவால் மனம் மகிழும். தங்கள் சகோதரரின் நடவடிக்கைகள் உங்களுக்கு எரிச்சலூட்டும். ஏமாற்றத்தைத் தவிர்க்க கூட்டாளிகளிடம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. மனைவியின் கருத்துத்துக்களுக்கு உரிய மரியாதை அளித்தால் இல்லத்தில் இன்பம் பொங்கும். போட்டி தேர்வுகளில் எதிர்பார்த்த வெற்றி கிட்டும். பெண்களால் இலாபம், வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறுதல் ஆகியவற்றால் வரும் இன்பம் நிலைத்திருக்கும்.

வல்லமை தாராயோ பராசக்தி- இந்த மானுடம் பயனுற வாழ்வதற்கே !

No comments:

Post a Comment