Search This Blog

Sunday 12 May 2019

நாடியில் கோசார கிரகங்களின் கோலாட்டம் - 4



நாடியில் கோசார கிரகங்களின் கோலாட்டம் - 4



அத்தியாயம் - 4

மூன்று கிரக இணைவுகள்.

         சூரியன் + செவ்வாய் + புதன் = ஜாதகரின் சகோதரர்களுடன் மற்றும் நண்பர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். ஜாதகர் அதிகாரம் மிக்க மற்றும் பலம் மிக்க முக்கியஸ்தர்களின் கடுங்கோபத்திற்கு ஆளாவார்.

         ஜனன ஜாதகத்தில் செவ்வாய், புதன் இணைவு இருந்து அதன் மேல் கோசார சனி வரும்போதும் ஜாதகருக்கு மேற்சொன்ன பலன்களே ஏற்படும்.

         நீச சூரியன், செவ்வாய், புதன் ஆகியோரின் இணைவு இருக்க ஜாதகர் கீழ்தரமான மக்களாலும், மற்றும் இரு எதிரிகளாலும் தொல்லைகளை அனுபவிப்பார். நண்பர்களுடன் இணைந்து கூட்டுத் தொழில்புரிபவர்களுக்குள்ளும் இதேபோல் தொல்லைகள் காரணமாக கூட்டு உடைந்துவிடும்.

         மேஷத்தில் உச்ச சூரியன், செவ்வாய், புதன் இணைவு உள்ள ஜாதகத்தில் கூட்டு வியாபாரம், தொழில் செய்யும் நண்பர்களுக்குள் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், இவர்களில் அதிக பலம்மிக்க கூட்டாளிகளில் ஒருவரின் குறுக்கீடும், உறுதித் தன்மையாலும் தொழில் கூட்டில் முறிவு ஏற்பட்டுவிடாது.

         ஜாதகத்தில் சனி, புதன், கேது ஆகியவற்றின் இணைவு வியாபாரத்தில் சண்டை சச்சரவுகள், வாக்குவாதங்கள், தர்க்கங்கள் ஆகியவற்றை ஏற்படுத்தும். மேலும், பூமி விஷயங்களிலும் பிரச்சனைகள் ஏற்படும்.  நெருங்கிய நண்பர்கள் கூட ஜாதகருக்கு எதிராக திட்டமிட்டு சதி செய்வர்.

        ஜனன ஜாதகத்தில் புதன் மற்றும் சந்திரன் இணைந்து கேது இவர்கள் இருவருக்கும் நடுவில் இடம்பெற  ஜாதகருக்கு நில விஷயங்களில் பிரச்சனைகள், வழக்குகள், இவருக்கும் இரு பெண்களுக்கு இடையே சண்டைகள் மற்றும் ஏமாற்றப்படுதல், வஞ்சிக்கப்படுதல் ஆகியவையும் நிகழும்.

        ஜனன ஜாதகத்தில் சூரியன் மற்றும் குருவுக்கு இடையே கேது இடம்பெற தந்தை மகனுக்கு இடையே சண்டை சச்சரவுகள் இருக்கும். மேலும், இராஜ சபையில் ஏற்படும் கருத்து வேறுபாடுகளால் ஜாதகருக்கு பிரச்சனைகள் ஏற்படும்.

        ஜனன ஜாதகத்தில் இருக்கும் செவ்வாய் மற்றும் சனி மீது கோசார கேது வரும் காலத்தில் உடன் பிறப்புக்களிடையே உப்புப் பெறாத விஷயங்களுக்கு எல்லாம் சண்டைகள் நடக்கும். மேலும், பணியிடத்தில் எதிரிகளால் தொல்லைகளை அனுபவிப்பார்.

        ஜனன ஜாதகத்தில் இருக்கும் சூரியன் மற்றும் செவ்வாய்க்கு இடையே கேது இருக்க ஜாதகர் தன் இரத்த உறவுகளால் பிரச்சனைகளையும், சண்டை சச்சரவுகளையும் அனுபவிப்பார்.

       ஜனன ஜாதகத்தில் சூரியன் + கேது + சுக்கிரன் இணைவு ஜாதகருக்கு பரம்பரைச் சொத்து மற்றும் பண விவகாரங்களில் வழக்கு விகாரங்களைச் சந்திக்கும் நிலை ஏற்படும்.

       ஜனன ஜாதகத்தில் சூரியன் + கேது + சனி இணைவு ஜாதகருக்கும் அவரது தந்தைக்கும் இடையே சண்டை சச்சரவுகளை, வழக்கு விவகாரங்களை ஏற்படுத்தும். மேலும், தொழில் மற்றும் வேலைகளில் தடைகள் ஏற்படுத்துவதோடு, பலம் மிக்க, அதிகார தோரணை மிக்க மேலதிகாரிகளால் தொல்லை ஏற்படும்.

       ஜனன ஜாதகத்தில் சூரியன் + கேது  இணைவு, இராகுவின் பார்வை பெற ஜாதகரின் தந்தை பல கஷ்டங்களை சந்திப்பார். அவை அவராலேயே அவருக்கு ஏற்படுத்திக் கொண்டதாக இருக்கும்.

       ஜனன ஜாதகத்தில் சந்திரன் + சூரியன் + செவ்வாய் இணைவு ஜாதகருக்கு அவர் விஷயங்களில் குடும்பப் பெரியவர்கள் மற்றும் மரியாதைக்குரிய பெரிய மனிதர்கள் ஆகியோரின் தலையீடு காரணமாக மனப் படபடப்பு, மன உளைச்சல், மன அமைதியின்மை ஆகியவை ஏற்படும்.  

       ஜனன ஜாதகத்தில் சந்திரன் + சூரியன் + குரு இணைவு ஜாதகருக்கு நல்ல அதிர்ஷ்டத்தை தருகிறது. சூரியன், குரு ஆகியோரின் கோசார நிலையில் ஜனன ஜாதக சந்திரனைத் தொடும் போது ஜாதகருக்கோ அல்லது அவர் மகனுக்கோ வேறு வெளி இடத்தில் கௌரவம், மரியாதை கிடைக்கும்.

       ஜனன ஜாதகத்தில் சந்திரன் + சூரியன் + சுக்கிரன் இணைவு குடுப்பத்தில் பொருளாதார கஷ்டங்களுக்குக் காரணமாகிறது. தேவையற்ற செலவுகளும் ஏற்படும். குடும்பத்தின் செல்வநிலை அதிக அளவு விரயமாகும்.

       ஜனன ஜாதகத்தில் சந்திரன் + சூரியன் + சனி இணைவு ஜாதகரின் பெற்றோர்கள் மற்றும் இரந்த உறவுகள் அவரின் சுதந்திரமான முன்னேற்றத்திற்கு குறுக்கே வருவதன் காரணமாக அவர் விருப்பத்துக்கு செயல்பட முடியாத நிலை ஏற்படும். சொந்த பந்தங்களே அவரின் முன்னேற்றங்களுக்குத் தடையாகும்.

       ஜனன ஜாதகத்தில் சந்திரன் + சூரியன் + இராகு இணைவு ஜாதகரின் தந்தைக்கு மிகப் பெரிய கஷ்டங்களைக் கொடுக்கும். அந்த கஷ்டங்கள் சரியாக சுமார் 12 முதல் 18 மாதங்கள் ஆகலாம். இவை செயற்கையான வழிமுறைகளில் அவருக்கு அவரின் நண்பர்கள் என்ற போர்வையில் உள்ளவர்கள் ஏற்படுத்தும் கஷடங்கள் ஆகும்.

       ஜனன ஜாதகத்தில் சந்திரன் + சூரியன் + கேது ஆகியோரின் இணைவு ஜாதகரின் குடும்பத்தாருக்கு விரக்தியான மனநிலையையும், பெரிய கஷ்டங்களையும் தரும். அதன் காரணமாக அவர்கள் தெய்வீக சிந்தனையிலும், பிரார்த்தனைகளிலும் ஈடுபடுவர். ஆனால், இந்த வேண்டுதல்களினால் அவர்களுக்கு ஏற்பட்ட கஷ்டங்களில் இருந்து உடனடியாக விடுதலை கிடைக்காது. 

கோசார கிரகத்தின் மூலமாக நிகழ்வுகளின் பலன் காண கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய விதிகள்.

1.   தினமும் கோசார கிரக நிலைகளை குறிப்பிட்ட இடைவெளிவிட்டு பாகை/கலைகளில் வருமாறு தயாரித்து வைத்துக்கொள்ள வேண்டும்.

2.   பலன் காண வருகின்ற ஜாதகரின் ஜாதகம் பஞ்சாங்க கணிதப்படி சரியாக கணிக்கப்பட்டுள்ளதா ? என உறுதி செய்து கொள்ளவேண்டும்.

3.   ஜாதகத்திலும், கோசாரத்திலும் வக்கிர கிரகங்கள் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும்.

4.   ஜாதகத்திலும், கோசாரத்திலும் கிரகங்கள் பரிவர்த்தனை பெற்ற நிலைகளைக் கண்டு கொள்வதும் அவசியமாகிறது.

5.   ஒவ்வொரு கிரகங்களின்  காரகத்துவங்களை தனித் தனியாக மதிப்பீடு செய்துகொள்ள வேண்டும்.

6.   ஜாதகத்திலுள்ள கிரகங்களின் பாகை அளவு நிலைகள் மற்றும் அந்த நிலைக்கு வர அவை எடுத்துக் கொள்ளும் கால அளவுகளையும் அறிந்து கொள்ளவேண்டும். மேலும், ஒரு இராசிக்கு பகை கிரகங்கள் வரும்/இருக்கும் கால அளவுகள் (நாள்/மாதம்/வருடம்) ஆகியவற்றையும் அறிய வேண்டும்.

         உதாரணமாக – ஜாதகத்தில் மகரம் 15° யில் செவ்வாய் இருக்க, கோசார சனி அந்த இராசிக்குள் நுழைந்து செவ்வாய் இருக்கும் 15° யைத்தொட 15 மாத கால அவகாசம் எடுக்கும். எனவே, இந்த 15 மாத காலத்தில் ஜாதகருக்கு வேலைகளில் பல தொந்திரவுகள், கஷ்டங்கள் ஏற்படும். அதுவே, சனி ஒரு சுப கிரகத்தைக் கடக்க நேர்ந்தால் ஜாதகருக்கு நல்ல பலன்களே நடக்கும் என பலன் காணவேண்டும்.

         மற்றுமொரு உதாரணத்தை எடுத்துக் கொள்வோம். ஜாதகத்தில் சந்திரன் அஸ்வினி முதல் பாதத்தில் இருக்கும் போது, கோசார இராகு அதே பாதத்தைக் கடக்கும் போது, ஜாதகருக்கு மனக் குழப்பங்கள், மனோபயங்கள், மனதில் ஒரு துக்கம் ஆகியவை அந்தக் காலத்தில் ஏற்படும் என பலன் கூறவேண்டும். கோசார இராகு என்று அஸ்வினி நட்சத்திரத்தை தாண்டுகிறதோ அன்று முதல் ஜாதகருக்கு மனவலிமை, மனஅமைதி போன்ற அனுகூலமான பலன்கள் நடக்கும்.

7.        இதே போன்று இரு கோசார அசுபக் கிரகங்கள் பரஸ்பர பரிவர்த்தனை ஆகி ஒரு குறிப்பிட்ட இராசியைக் கடக்கும் போது, அதற்கு 7 ஆம் இடத்தில் கோசார சுக்கிரன், குரு ஆகிய சுபர்கள் கடக்கும் போது, அந்த அசுப கிரகங்களால் ஆபத்துக்கள் ஏற்படும்.

     உதாரணமாக – ஜனன ஜாதகத்தில் ஒர் இராசியில் செவ்வாய், சூரியன் இணைவு இருந்து,  கோசார இராகு  அதன் மேல் வர, கோசார குரு இந்த இராசிக்கு 7 ஆம் இடத்தைக் கடக்கும் போது ஜாதகருக்கு கடவுளின் அருளாலோ அல்லது நண்பர்களின் உதவியாலோ இதுநாள் வரை ஏற்பட்டிருந்த கவலைகளும், கஷ்டங்களும், தொல்லைகளும் நீங்கிவிடும்.  

8.        இதே போன்று இரு ஒருவருக்கொருவர் பகையான கிரகங்கள் ஓர் இராசியில் இணைந்து அதில் ஒரு கிரகம் மற்றுமொரு கிரகத்துடன் பரிவர்த்தனை ஆகி இருந்தால் அதன் முடிவு வேறு மாதிரியாக இருக்கும்.

ஜாதகம் – 23


சூரி, செவ்
சுக்




உ. ஜா. 23





சனி,குரு



         இந்த உதாரண ஜாதகத்தில், செவ்வாய் மற்றும் சூரியன் இரண்டுமே ஆண் மற்றும் நெருப்பு கிரகங்கள் ஆகும். இரண்டுமே ஒளி மிக்க கிரகங்கள் ஆகும். இவர்களுடன் சுக்கிரனும் மீனத்தில் இணைந்துள்ளது. சுக்கிரன் ஒரு பெண்கிரகம் ஆதலால் சூரியன், செவ்வாயுடன் முழுவதுமாக பலத்தை இழக்கிறது. இதன் காரணமாக ஜாதகருக்கு குழந்தைப் பிறப்பில் பிரச்சனை, மனைவிக்கு ஆரோக்கியக் குறைவு ஆகியவை ஏற்படுவதோடு, இவரிடமுள்ள பணம் அனைத்தும் அரசாங்கத்தால் கைப்பற்றப்படும். இந்த கிரக நிலைகளை மட்டும் வைத்து சுக்கிரனின், குருவின் பரிவர்த்தனை தொடர்பை சம்பத்தப்படுத்தி பார்க்காமல் எந்த ஜோதிடராவது ஜாதகத்தைப் பார்த்தவுடன் துரிதமாக பலன் சொல்ல முடியுமா?. ஆனால், இந்த பரிவர்த்தனையை கருத்தில் கொண்டால் சரியான பலன் கீழ்க்கண்டவாறு அமையும்.  ஜாதகனின் பணம் எதிரகளின் கைகளிலோ அல்லது முட்டாள் அரசியல்வாதிகள் கைகளிலோ அல்லது அரசாங்கத்திலோ மாட்டிக்கொண்டாலும், மரியாதைக்குரிய, மதிப்புமிக்க மனிதர்களின் உதவியால் பணம் மீண்டும் அவர் கைக்கு வந்து சேரும். இந்த விதி ஜனன ஜாதக கிரக இணைவு மற்றும்  இதே போன்ற கோசார கிரக இணைவுகளுக்கும் பொருந்தும்.    
9.   அஸ்தமன கிரக தாக்கங்களும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.

10.  ஒரு குறிப்பிட்ட இராசியில் 3 அல்லது 4 கிரகங்கள் இருக்கும் போது அவற்றின் பாகைகளின் வரிசைப்படி கணக்கிட்டு அதன்படி அவைகளின் தாக்கங்களைக் கண்டறிய வேண்டும்.

        ஒரு ஜாதகரின் ஜாதகத்தில் இவை தவிர மேற்கொண்டும் உள்ள பல விதிகளின் மூலமாக ஜாதகரின் வாழ்க்கையில் ஏற்படப் போகிற பலன்களைக் காணுகின்ற வழிமுறைகளை  அடுத்துவரும் பத்திகளில் காணலாம்.

ஜாதகம் – 24

        நாடி காரணிகள் – கீழ்க்கண்ட ஜனன ஜாதகத்தில் கர்ம காரகன் எனப்படுகிற சனி, நீசமாகி, தன் பகைவன் கேதுவுடன் இணைந்துள்ளார்.

குரு
சனி,கேது

சுக்

உ. ஜா. 24
சூரி,சந்
லக்//, புத
செவ்



இராகு



         இந்த நீச சனி தன் பகைவன் கேது எனும் சங்கிலியால் கட்டப்பட்டுள்ளார்.
         அடுத்து, மேஷத்திலுள்ள நீச சனி. மகரத்தில் உள்ள உச்ச செவ்வாயுடன் பரிவர்த்தனை பெற்றுள்ளார். எனவே, கிரக இணைவுகளானது சனி + கேது + செவ்வாய் ஆகும் இதற்கு பலன் காணும்போது, ஜாதகர் வேலைகள் நிரந்தம் இல்லாமல் தடைப்பட்டு, விட்டு விட்டு பணிகளைச் செய்வார்.  குருவுக்கு இரண்டாம் இடத்தில் இந்த இணைவு இருப்பதால் தொழில், வேலைகளில் சிறிது முன்னேற்றங்கள் இருக்கும். ஆனால், அது நிரந்தர பலன் தராது எனலாம்.

         மேற்கு திசையைக் குறிக்கும் மிதுனத்தில் மனைவியைக் குறிகாட்டும் சுக்கிரன் உள்ளார். மற்றுமொரு மேற்கு திசை இராசிநான துலாத்தில் இராகு உள்ளார். இது அந்த ஜாதகரின் திருமணம் பாழானதைக் குறிகாட்டுகிறது.  மேலும் செவ்வாய் தனது பகைக் கிரகம் புதனுடன் 7 ஆம் வீடான கடகத்தில், அங்கே  சந்திரனும் சூரியனும் உள்ளனர். இந்த புதன் மற்றும் செவ்வாயின் பகையான இணைவு ஜாதகரின் வாழ்க்கையின் சந்தோஷம் மற்றும் அமைதிக்கு முள்ளாக இருப்பதாக அர்த்தம் தருகிறது.

         கைரேகை விஞ்ஞான ஜோதிடப்படி இந்த ஜாதகரின் உள்ளங்கையில் புதன் மேட்டில் கேதுவின் காரணிகள் தென்படும். செவ்வாய், சனி கிரக பரிவர்த்தனையால் அவர்களுடன் கேதுவும் இணைவதாகக் கொள்ளாலம்.

         எனவே, புதன் ரேகை உடைந்து உள்ளங்கையின் கீழாக இருக்கும். இந்த சனி, செவ்வாய் பரிவர்த்தனை குருவுக்கு 2 ஆம் இடத்தில் ஏற்படுவதால், குருவின் தாக்கம் ஜாதகரை வாழ்க்கையில் துறவு நிலைக்குக் கொண்டு செல்லும். அதன் இறுதி முடிவானது ஜாதகருக்கு ஏற்படும் பணி, தொழில் களில் தடைகள், மன அமைதியின்மை, உறவுகளுடன் (பெற்றோரோடு பிறந்தவர்கள்) சண்டை சச்சரவுகள், திருமண முன்னேற்றத்தில் தடைகள் ஆகியவையாகவே இருக்கும். செவ்வாய்க்கு 2 – 12 இல் கிரகங்கள் இல்லை. மகரத்தைப் போன்ற தென் திசை இராசிகளிலும் கிரகங்கள் இல்லை. செவ்வாய், சனிக்கு 5 ஆம் மற்றும் 9 ஆம் இடங்களில் கிரகங்கள் இல்லை. இந்த நிலைகளின் காரணமாக ஜாதகர்க்கு வாழ்க்கையில் எள்ளவும் அமைதியும், சந்தோஷமும் இல்லாமல் போயிற்று எனலாம்.  

ஜாதகம் – 25



குரு, லக்//



உ. ஜா. 25
 புத,கேது
இராகு
சூரி,சந்
சுக்

செவ்

சனி

        இந்த பெண்ணின் ஜாதகத்தில் சூரியன் தனது ஆட்சி வீடான சிம்மத்தில் உள்ளார். பெண் ஜாதகத்தில் சுக்கிரனே ஜீவன் ஆதலால் பலன்களை சுக்கிரனை வைத்தே பார்க்க வேண்டும். சந்திரனுடன், சுக்கிரன் இணைந்துள்ளதால் ஜாதகி குற்றம் சொல்வதற்கு தகுதியானவள் ஆகிறாள். கணவன் காரகன் செவ்வாய் வட திசையான விருச்சிகதில் உள்ளார். இதே வடதிசை இராசியான கடகத்தில் புதன் கேது இணைவு உள்ளது.  இது அவளுக்கும் அவள் கணவனுக்கும் இடையேயான சண்டை சச்சரவுகளை குறிகாட்டுகிறது. மேலும் இவளின் கணவன் (செவ்வாய்) மற்றுமோர் பெண்ணுடன் (புதன்) காதலில் விழுந்துள்ளதைக் காட்டுகிறது. இதற்குக் காரணம் செவ்வாய், புதன், கேது ஆகியோரின் வடதிசை இராசிகளில் உள்ள தொடர்பே ஆகும்.


         குருவுக்கு 5 இல் சூரியன் இருப்பது ஜாதகிக்கு மதிப்பு மிக்க, புகழ் பெற்ற புத்திரன் இருப்பதை குறிகாட்டுகிறது. சந்திரன், சுக்கிரன் இணைவு சூரியன், குரு பார்வையைப் பெற்றதால் இவளுக்கு பெண் குழந்தை இல்லை. மேலும் பெண் குழந்தை பிறந்தாலும், அக்குழந்தைகள் உயிரோடு இருக்க வாய்ப்பில்லை. ஜாதகி பிறந்ததில் இருந்து இரண்டாவது முறையாக கோசார கேது விருச்சிகத்தைத் தொடும் போது, இவளுக்கும் அவள் கணவனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு பிரிவினையில் முடியும் என்று கூறலாம்.  பிறகு, ஜாதகி பிறந்த நாளில் இருந்து கோசார குரு மூன்றாவது முறையாக, சுமார் 40 அல்லது 41 வது வயதில் கன்னியிலுள்ள சனியைத் தொடும் போது கணவன், மனைவிக்குள் மீண்டும் சமாதானமாகி, ஒற்றுமையுடன் சந்தோஷமாக வாழ்வர்.

         இதைப் போலவே, கோசார கேது கடகத்தில் உள்ள புதன் மேல் வரும் போது ஜாதகி தனது சகோதரர்களுடன் அடிக்கடி சண்டையிட்டும், வழக்கு விவகாரங்களில் ஈடுபடவும் செய்வாள். அதேபோல் கோசார இராகு தனுசு இராசியைத் தொடும்போதும் மேற்சொன்ன பலனையே ஜாதகி அனுபவிப்பாள். இரண்டாவது முறையாக கோசார இராகு வரும்போது அதன் பாதிப்புகள் அதிகம் இருக்கும்.

ஜாதகம் – 26

         இந்த ஜாதகத்தில் கிரகங்கள் நாடி விதிப்படி, ஒரு திசைக் கிரகங்கள் வரிசைப் படுத்தப்பட்டு உள்ளன. வடக்கு – இராகு – மீனத்தில் உள்ளார். கிழக்கு – சூரியன், சந்திரன், புதன் தனுசுவிலும், சனி – சிம்மத்திலும், தெற்கு திசை இராசிகளான கன்னி மற்றும் மகரத்தில் கேது, செவ்வாய், குரு, சுக்கிரன் ஆகியோர் உள்ளனர்.

இராகு




உ. ஜா. 26
இராசி

சுக், குரு
சனி
சூரி,சந்
லக்//,புத


கேது,செவ்

         கோசார சனி மகரத்தில் வந்த போது ஜாதகர் ஜோதிடரிடம் ஆலோசனைக்கு வந்தார். ஜனன ஜாதகத்தில் அங்கே சுக்கிரனும், குருவும் உள்ளனர்.

         தென் திசை கிரகங்களான கேது, செவ்வாய், குரு, சுக்கிரன் உள்ளனர். குருவுக்கும் சுக்கிரனுக்கும் இடையில் கேதுவும் செவ்வாயும் உள்ளதால் ஜாதகருக்கும், அவர் மனைவிக்கும் இடையே சண்டை சச்சரவுகள் ஏற்பட்டன. சுக்கிரன் (மனைவி) செவ்வாய் (கணவன்) கேது (வழக்கு விவகாரங்கள், சண்டை சச்சரவுகள்) குரு (நீதிபதி) ஆகியவற்றைக் குறிகாட்டுவதால் ஜாதகத்தில் கோசார சனியின் நகர்வின் போது ஏற்பட்ட நிலையை தெள்ளத் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டுகிறது.

         இதன் காரணமாக இருவரும் கோர்ட்டுக்குப் போனார்கள். கோசார குரு கன்னிக்கு வந்தபோது தீர்ப்பு வெளியானது. மகரம் கணவன் காரகன் செவ்வாயின் உச்ச வீடு ஆனதாலும், அங்கே குரு இருந்ததாலும் கணவனுக்கு சாதகமாகவே நன்மையான தீர்ப்பு வந்தது.

         மகரத்தில் கோசார சனி வந்த போது கோசார இராகு தனுசு இராசியில் வர மனோகாரகன் சந்திரன், புத்திக்கு காரகன் புதன் ஆகியோர் இராகுவின் தீய தாக்கத்தால் ஜாதகரின் பெற்றோர்க்கும், சகோதரர்களுக்கும் பல இன்னல்களை ஏற்படுத்துவார். இந்த நிலை இராகு விருச்சிகத்தை அடையும்வரை நீடிக்கும்.
ஜாதகம் – 27 அ - ஆ

         கீழ்கண்ட ஜாதகங்களில் ஒன்று ஜாதகரின் (27.அ) ஜனன ஜாதகம், மற்றொன்று ஜாதகர் ஆலோசனை கேட்க வந்த நேரத்துக்கு உரிய ஜாதகம் (27ஆ) ஆகும்.


சூரி,சந்
புத
சுக்,கேது


உ. ஜா. 27.அ
இராசி
குரு .(வ)
செவ்


இராகு,
சனி



         இங்கு கோசார செவ்வாய் விருச்சிகத்தில் நுழைந்துள்ளது. ஜனன ஜாதகத்தில் சனி அங்கு பூட்டப்பட்டு உள்ளார். கோசார சனி மகரத்தில் ஜனன ஜாதகத்தில் செவ்வாய் அங்கே உள்ளார். அவர் கேள்வி கேட்ட நாளில் செவ்வாய், சனி ஆகியோர் தங்களின் ஆட்சி வீட்டிலேயே உள்ளனர். கோசார இராகு தனுசு வீட்டில் உள்ளார். கோசார ஜாதகத்தில் புதனும் செவ்வாயும் கிரக யுத்தத்தில் உள்ளனர். ஆகையால், கோசாரத்தில் கேள்வி நேரத்தின் போது நெருப்பு கிரகம் செவ்வாய், புதனுடன் இணைந்து, ஜனன ஜாதக விருச்சிக இராசியில் சனி மீது வருகின்றனர். நெருப்பு கிரகமான சூரியனும் விருச்சிகத்தில் பிரவேசிக்கிறார். சூரியன், சனிக்கு பகைவர் ஆவதால், ஜாதகர் வேலை பார்த்த தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டு தொழிற்சாலையை பாழாக்கியது.

        



கேது
சந்
உ. ஜா. 27.ஆ
கோசாரம்

சனி
குரு
இராகு
சூரி,செவ்
புத
சுக்


         இந்த நெருப்பு கிரகங்களான சூரியன், செவ்வாய் ஆகியவை மிகப் பெரிய தீ விபத்தைக் குறிகாட்டுகிறது. விருச்சிக இராசி உலோகங்களால் ஆன இயந்திரங்கள் பயன்பாட்டில் உள்ள தொழிற்சாலையைக் குறிகாட்டுகிறது. சூரியன் + செவ்வாய் + புதன் = ஜாதகர் வேலை பார்த்த இடத்தில் ஏற்பட்ட மிக அதிகமான கொள்ளை போதல், தீ வைப்பு மற்றும் கலகத்தைக் குறிகாட்டுகிறது.

ஜாதகம் – 28 அ - ஆ

       


செவ் (வ)
23°
சனி (வ)

உ. ஜா. 28.அ
இராசி
இராகு
குரு(வ)

கேது


சந், சூரி
புத

சுக்


         ஜாதகரின் ஜனன ஜாதகத்தில் குரு கடகத்தில் உள்ளார். ஜாதகருக்கு ஏற்படும் கஷ்டங்கள் சீர்பட, சமன்பட குருவின் பார்வை உள்ளதா? இல்லையா? – என்ற சந்தேகம் எழுகிறது. ஆனால், ஜனன ஜாதகத்தில் குரு வக்ரமானதாலும், கோசாரத்தில் குரு சிம்மத்தில் இருப்பதாலும் குரு பார்வை 5 ஆம் வீட்டின் மீது இல்லாததால் அவரின் கஷ்டங்கள், துன்பங்கள் சீராகாது. இதையே, ஜாதகியின் ஜனன ஜாதகமாகி, செவ்வாய் 23° யில் வக்கிரமாகி உள்ளது. மிதுனத்தில் உள்ள சனியும் வக்கிர நிலை பெற்று பின் பார்வையால் செவ்வாயைப் பார்க்கிறது. ஜாதகியானதால் சுக்கிரனே ஜீவகாரகன். அதிலிருந்தே அவளது விதி நிர்ணயிக்கப்பட வேண்டும்.




கேது

உ. ஜா. 28.ஆ
கோசாரம்

சனி
குரு
இராகு
சூரி
செவ், புத
சுக்

சந்

         ஆனால், அவளது ஜனன ஜாதகத்தில் 28.அ. சுக்கிரன் நீசம் பெற்று அதற்கு திரிகோண இராசியில் கேதுவுடன் இணைவு பெறுகிறது. இது ஜாதகி வாழ்க்கையில் வகையாக மாட்டிக்கொண்டதை குறிகாட்டுகிறது. சுக்கிரனில் இருந்து 9 ஆம் இடத்தில் வக்கிர செவ்வாய் இடம் பெற்றுள்ளது. எனவே, சுக்கிரன் + கேது + செவ்வாய் இணைவு ஏற்படுகிறது. இது எதிர்காலத்தில் கணவன், மனைவிக்கு இடையே ஏற்படப்போகிற சண்டை சச்சரவுகள், வழக்கு விவகாரங்களைக் குறிகாட்டுகிறது. சுக்கிரன் குறிகாட்டும் ஜாதகி மற்றும் செவ்வாய் குறிகாட்டும் அவளின் கணவன், இவர்களுக்கு இடையே உள்ள தடைகளுக்கு, பிரிவினைக்குக் காரணமாகும் கேது ஆகியவை இவர்களுக்கு இடையேயான பிணக்குகளையும், பிரிவினையையும் குறிகாட்டுகிறது.

        கோசார நிலைகளைப் பார்க்கும் (28.ஆ) போது மகரத்தில் சனி, ஜனன ஜாதக (28.அ) கேது மீது வருகிறார். இது ஜாதகி பிரச்சனைகளை சந்திக்கும் நிலைக்கு ஆளாகப்பொகிறார் என்பதைக் குறிகாட்டுகிறது. சனிக்குப் 12 ஆம் வீட்டில் வக்கிர செவ்வாய்  உள்ளார். சுக்கிரனுக்கு 9 இல் உள்ள வக்ர செவ்வாய், பின்ஒரு இராசியில் வந்து (மேஷம் = கிழக்கு) கிழக்கு திசை இராசியான சிம்மத்தில் இணைவு பெறுகிறார். இது, கணவன் மனைவியை தனியாய் தவிக்கவிட்டு, ஓடிவிட்டதைக் குறிகாட்டுகிறது. கோசார கிரக நகர்வின் போது, கேது, ஜனன ஜாதகத்தில் மிதுனத்தில் உள்ள சனியின் மீது வரும்போது, ஜாதகிக்கும் அவள் கணவனுக்கும் இடையே சண்டை சச்சரவுகள், வழக்கு விவகாரங்கள் ஏற்படுகிறது.

         ஜனன ஜாதகத்தில் சுக்கிரன் நீசம் ஜாதகி கேள்வி கேட்க வந்த போது கோசார சந்திரன் கன்னியில் சுக்கிரன் மீது நகர்வு. சந்திரன் நகர்வுக்கும், குற்றம் சுமத்துதலுக்கும் காரணமாவதால் ஜாதகியை அவள் கணவன் தனியாக விட்டுவிட்டு ஓடிவிட்டான்.

         இரண்டாவது கேள்வி - ஜனன ஜாதகத்தில் சுக்கிரன் நீசம் அதன் மீது கோசார சந்திரன் வரும் நிலை ஜாதகி ஒரு பெண் குழந்தைக்குத் தாய் என்பதைக் குறிகாட்டுகிறது. சுக்கிரன் மற்றும் சந்திரன் இணைவு குருவுக்கு 2 இல் இருப்பது ஜாதகியின் மகள் ஒரு மருத்துவராகவோ அல்லது இராசாயன பாடத்தில் விரிவுரையாளராகவோ ஆகும் நிலையைக் குறிகாட்டுகிறது. இந்த 2 வது கேள்விக்கு பதில் = ஜாதகியின் மகள் பிற்காலத்தில் மதிப்பு மரியாதையும் பெற்று வாழ்க்கையில் மிகப் பெரிய கௌரவத்தையும் அடைவார்.

ஜாதகம் – 29 – அ & ஆ

         ஜாதக எண் 29 அ.  இந்த ஜாதகர் 25 – 12 – 1936 இல் பிறந்துள்ளார். அவரின் பிறப்பு ஜாதகம். ஜாதக எண். 29 – ஆ. ஜாதக ஆய்வுக்கு வந்த நேரத்தில் உள்ள கோசார கிரக நிலைகள்.

         இந்த ஜாதகரின் ஜாதகத்தில் கோசார சனி மகரத்தில் உள்ள ஜனன ஜாதக செவ்வாய் மீது வந்த நாள் முதல் ஜாதகர் தனது தொழிலில் பல தடைகளையும், எதிர்ப்புகளையும் மற்றும் கருத்து வேறுபாடுகளையும், தவறான புரிதல்களையும் அனுபவித்தார்.



சந்

கேது
லக்///
சனி
உ. ஜா. 29.அ
இராசி


செவ்

சூரி,புத
இராகு
குரு
சுக்



         இதற்கிடையே, இராகுவும் தனுசு இராசிக்குள் நுழைந்தார். அங்கே ஆண் குழந்தையைக் குறிகாட்டும் சூரியன், புதன் மற்றும் இராகு ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். அந்த நாளின் கோசார கிரக நிலை ஜாதகர் தனது புதல்வன் (சூரியன்) பற்றிய கவலையில் இருந்தார் என்றும் தனது வியாபாரம் (புதன்) பற்றிய கவலையிலும் இருந்தார் என்பதையும் குறிகாட்டுகிறது. கோசார செவ்வாயும் தனுசு இராசியில் நுழைந்தார். அங்கே இராகு + சூரியன் + புதன் இணைவு உள்ளது. இது ஜாதகரின் மகனின் வியாபாரம் மற்றும் பொருளாதார நிலையில் கடுமையான கஷ்டங்களால் இருள் சூழ்ந்ததை குறிகாட்டுகிறது. மேலும், இராகு, புதன் மற்றும் செவ்வாயின் இணைவு ஜாதகருக்கு வியாபாரத்தில் ஏற்படப் போகும் நிரந்தர சண்டைகளைக் குறிகாட்டுகிறது. பிறப்பு ஜாதகத்தில் செல்வ நிலையைக் குறிக்கும் சுக்கிரன் துலாத்தில் உள்ளார். குருவும் விருச்சிகத்தில் அவருக்கு 2 ஆம் இடத்தில் உள்ளார்.  ஆனால், கோசாரத்தில் புதன், சுக்கிரன் மற்றும் சந்திரன் விருச்சிகத்தில் நுழைந்த போது ஜனன ஜாதக குரு விருச்சிகத்தில் உள்ளார். 
   




கேது

உ. ஜா. 29ஆ
கோசாரம்
லக்///

சனி
குரு(வ)
சூரி,செவ்
இராகு
புத, சுக்
சந்




       இந்த நிலை அவரின் நெருங்கிய உறவுகள் பண விஷயத்தில் அவரை ஏமாற்றியுள்ளதைக் குறிகாட்டுகிறது. ( கோசாரத்தில் பொருளாதார காரகன் சுக்கிரனுடன் இணைந்துள்ள நீச சந்திரன் மற்றும் வியாபாரத்தைக் குறிக்கும் புதன்) எனவே, மிக நெருங்கிய உறவுகள், பண விஷயத்தில் அவர்களின் மோசமான குணத்தால் ஜாதகரை ஏமாற்றிவிட்டனர்.   

        இந்த நிலையில் இருந்து ஜாதகருக்கு விமோசனம் கிடைக்குமா ? – என்பதே முக்கிய கேள்வி.

        கிடைக்கும். எப்போது ? கோசார சனி ஜனன செவ்வாய் இருக்கும் நட்சத்திர பாகையைக் கடக்கும் போது ஜாதகருக்கு நன்மையான பலன்கள் ஏற்படும்.

        கோசாரத்தில் சிம்மத்தில் உள்ள குரு ஜனன ஜாதகத்தில் கும்பத்தில் உள்ள  சனியை பார்க்கும்போது இதுநாள்வரை ஜாதகர்பட்ட கஷ்டங்கள் தீரும். பல நன்மைகளும் ஏற்படும். மேலும், கோசாரத்தில் முதல்தர சுபர்களான புதன், சுக்கிரன் ஆகியோர் ஜனன ஜாதக குருவின் மீது சஞ்சரிக்கும் போது ஜாதகரின் இல்லத்தில் மங்களகரமான சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். 

ஜாதகம் – 30 அ & ஆ



லக்///

செவ்
உ. ஜா. 30.அ
இராசி
இராகு

சந்,கேது
சுக்

குரு
சனி
சூரி,புத

         மற்றுமொரு ஜாதகத்தைப் பார்ப்போம். உச்சம் பெற்ற கர்மகாரகன் சனியால் ஜாதகர் மிக உயரிய பதவியில் இருந்து, சமூகத்தில் கௌரவம், மதிப்பு, மரியாதையுடன் வாழ்பவர் என்பதை அறிகிறோம். சனிக்கு 2 இல் குரு இருப்பது அவர் பார்க்கும் பணியில் மேலும் முன்னேற்றத்தை அளிக்கிறது.




கேது

உ. ஜா. 30. ஆ
கோசாரம்


சனி
குரு(வ)
சூரி, செவ்
ராகு, புத
சுக்





கன்னியில் உள்ள சூரியன் + புதன் இணைவுக்கு திரிகோணத்தில் சந்திரனும், கேதுவும் உள்ளனர். இந்த இணைவு ஜாதகர் எதையும் கிரகித்துக் கொள்ளக் கூடிய, மிகப் பெரிய மேதாவியாக, மறைபொருள் (சந்திரன் + கேது) விஷயங்களையும் அறிந்தவராகவும் இருப்பார் என்பதை உணர்த்துகிறது.

        ஜாதகம் பரிசீலனைக்கு வந்த நேரத்தில் கோசார சனி மகரத்தில் நுழைந்த போது ஜனன ஜாதகத்தில், அங்குள்ள சந்திரன், கேதுவின் மேல் நகர்கிறது. இது சந்திரன், கேது மற்றும் சனியின் இணைவை மகரத்தில் ஏற்படுத்துகிறது. இதன் காரணமாக தாய்வழிச் சொந்தங்கள் இவரோடு சண்டையிடவும், பழி போடுதலும் மற்றும் குற்றம் சுமத்துவதுமாக உள்ளனர்.

         ஜனன ஜாதகத்தில் கீழ்திசை கிரகங்கள் சிம்மத்தில் உள்ள சுக்கிரன், தனுசுவில் உள்ள இராகு ஆகும். இது ஜாதகரின் மனைவி மிகுந்த மனக் கஷ்டத்தில் உள்ளார் என்பதை அறிகிறோம். அவளுக்கு இருக்கும் நோய் மற்றும் வீடு பற்றிய விவகாரங்களில் சண்டை சச்சரவு ஏற்படும். 

ஜாதகம் – 31 அ & ஆ


சூரி,சுக்
புத




உ. ஜா. 31. அ
இராசி



இராகு
லக்//,குரு(வ)
சனி(வ)









லக்///,கேது

உ. ஜா. 31. ஆ
கோசாரம்


சனி
குரு(வ)
ராகு,
சூரி, செவ்

சுக்,சந்,புத





       ஜாதகம் எண் 31 அ வை பார்ப்போம்.  இந்த ஜாதகத்தில் இலக்னத்தில் கிழக்கு திசை இராசியில் குரு, மற்ற கிழக்கு இராசிகளான மேஷத்தில் சூரியனும், சிம்மத்தில் இராகுவும் உள்ளனர். ஆனால், குருவும், சனியும் வக்கிர நிலையில் உள்ளனர். ஜனன ஜாதகத்தில் குரு + சூரியன் + இராகு இணைவு. ஜாதகத்தில் இராகு உள்ள இடத்தில் கோசாரத்தில் வக்கிர குரு உள்ளார். சூரியனும், குருவும் பரிவர்த்தனை ஆகியுள்ளனர். இதன் காரணமாக ஆண் மகவை குறிகாட்டும் சூரியன், இராகுவினால் பாதிப்பு அடைகிறார். இது ஜாதகருடைய மகன் கடும் இன்னல்களை சந்திப்பதைக் குறிகாட்டுகிறது.

         களத்திர காரகன் சுக்கிரன் கோசாரத்தில் நீச சந்திரனுடன் இருப்பது ஜாதகரின் மனைவியும் கஷ்டங்களை அடைவதையும், அவளுக்கு மன அமைதி இன்மையையும் குறிகாட்டுகிறது.

         கோசாரத்தில் சூரியனும், இராகுவும் ஒரே பாகையில் உள்ளனர். இதன் காரணமாக ஜாதகரின் மகனுக்கு மரணத்துக்கு இணையான பெரிய ஆபத்து / கண்டத்தைக் குறிகாட்டுகிறது.

ஜாதகம் – 32 அ & ஆ 

கேது,சந்
லக்///



உ. ஜா. 32. அ
இராசி




சனி,புத
சூரி, செவ்

குரு,சுக்


இராகு





லக்///,கேது

உ. ஜா. 32. ஆ
கோசாரம்


சனி,சந்
குரு(வ)
 செவ்,சூரி
புத,ராகு

சுக்





        இந்த ஜாதகத்தில் இராகு தனுசுவில் வந்துள்ளது. ஜனன ஜாதகத்தில் அவ்விடத்தில் தந்தைக் காரகன் சூரியன், சனியுடன் பகை பெற்றுள்ளனர். புதனும், செவ்வாயும் பகை நிலையிலேயே உள்ளனர்.

        கோசாரத்தில் இராகுவுடன் இணைந்து இதே கிரக இணைவுகள் உள்ளன. குருவும், சூரியன் பரிவர்த்தனை ஆகியுள்ளனர். ஆனால், குரு வக்ரமாகி உள்ளதால் அவருக்குப் பின்புற பார்வையே உள்ளது. இதன் காரணமாக குருவின் பார்வை கடகத்தில் இருந்து துவங்கி, பணத்தைக் குறிக்கும் சுக்கிரன் இருக்கும் விருச்சிகத்தில் முடிகிறது. இதனால், அவருடைய சகோதரருடன் சண்டை சச்சரவுகள் மற்றும் ஜாதகருக்குப் பணக் கஷ்டங்களும் இருக்கும். வக்ர குருவின் பார்வை சுக்கிரன் மீது விழுவதால் ஜாதகர் அவரது மகனின் செல்வாக்கால் பெரிய மனிதர்களின் உதவியால் ஜாதகர் இந்த இக்கட்டான சூழ்யிலையில் இருந்து வெளிவருவார்.

         ஜனன ஜாதகத்தில் குருவும், செவ்வாயும் பரிவர்த்தனை ஆகியுள்ளனர். இது சுக்கிரனும் அவர் நண்பர் செவ்வாயும் இணைந்துள்ளதற்கு சமம். விருச்சிகம் பூமியைக் குறிகாட்டுகிறது. எனவே, ஜாதகரின் கேள்வி பூமி, சொத்து பற்றியமாகவே இருக்கும். கேள்வி நேரத்தில் கோசார இராகு சுக்கிரனுக்கு அடுத்த இராசியில் உள்ளது. எனவே, அந்த சொத்து மிகவும் பழமையானது என அறிகிறோம்.

         ஜனன ஜாதகத்தில் குரு, செவ்வாய் பரிவர்த்தனையினால், சுக்கிரனும் இவர்களுடன் இணைவு பெறுகிறார். இதனால் இந்த வீடு, சொத்துக்கள் தெய்வீக தன்மையுடையதைக் காட்டுகிறது.

         இந்த ஜாதகரின் தந்தைக்கு இரு இடங்களில் சொத்துக்கள் இருந்தன. அந்த பரம்பரைச் சொத்துக்கள் மீது வழக்கு விவகாரங்கள் இருந்தன. கேள்வி எழுப்பப்பட்ட நேரத்தில்   குரு வக்ரம் காரணமாக கடகத்தில் இருந்து சுக்கிரனைப் பார்ப்பதாகக் கொள்ளலாம். எனவே, குறுகிய காலத்திலேயே ஜாதகருக்கு சாதகமான நிலை உருவாகும் எனலாம்.

ஜாதகம் – 33

       கீழ்க் கண்ட கோசார கிரக நிலைப்படி ஒரு ஜாதகரின் நிலையைப் பார்ப்போம்.  ஜாதகரின் 29 வயது முதல் 30 ½ வயதுவரை கோசார சனி மகரத்தில் ஜன்மச் சனியாக அமைந்தது. ஜனன ஜாதகத்தில் கேதுவும் மகரத்திலேயே இருந்தது. இதன் காரணமாக ஜாதகரின் தொழிலில் தடைகள் பல ஏற்பட்டன. மன அமைதியின்மையும் ஏற்பட்டது. செவ்வாய் மகரத்தில் இருந்த போது அந்த நேரத்தில் ஜாதகருக்கு மனதில் சஞ்சலங்களும், பணக் கஷ்டங்களும், தன்னம்பிக்கை இன்மையும், அதன் காரணமாக ஏற்படும் எதிர்பாராத, திடீர் தொழில் பாதிப்புகளும் ஆகிய நிகழ்வுகளால் ஏற்படும் கவலைகளும் உருவாகின. சுக்கிரன் மகரத்தில் நுழைந்த போது அவரது குடும்ப கஷ்டங்கள் அனைத்தும் சூரியனைக்கண்ட பனிபோல் விலகின. அப்போது ஜாதகருக்கு பொறுமையைக் கடைப்பிடிக்கவும், எப்போதும் இறை சிந்தனையில் இருந்து வேண்ட அனைத்தும் நன்மையாக நடக்கும் என ஆலோசனை வழங்கப்பட்டது.

செவ்

சூரி,சுக்
புத


உ. ஜா. 33.
கோசாரம்
இராகு

சனி,
கேது






சந்

அதன் பிறகு 1992 ஆம் வருடம் கோசார சனி  ஜனன ஜாதக கேதுவின் பாகையுக் கடந்து, பிறகு குருவின் பாகையைக் கடந்த போது ஜாதகர் கண்டிப்பாக மிக நல்ல பலன்களையே அனுபவிப்பார். தொழில் விருத்தியும், முன்னேற்றங்களும் சிறப்பாக இருக்கும்.

ஜாதகம் - 34   
     
         மற்றுமொரு ஜாதகர் வந்து கேட்ட கேள்வி நேரத்தின் போது உள்ள கோசார ஜாதகத்தைப் பார்ப்போம்.

         கோசார சனி, ஜனன ஜாதகத்தில் உள்ள செவ்வாய், கேது, சந்திரனைக் கடந்து விட்டது. ஆகையால் ஜாதகர் மீது தேவையற்ற குற்றங்கள் மற்றவர்களால் சுமத்தப்பட்டு பல கஷ்டங்களை அனுபவிக்க நேர்ந்தது. அத்துடன் அவர் மனதில் தன்னம்பிக்கைஇன்மையையும், வாழ்வில் அவநம்பிக்கையையும் தோற்றுவித்தது. கோசார குரு ஜனன ஜாதகத்தில் சிம்மத்தில் உள்ள புதனை கடக்கும் போது ஜாதகர் கல்வி நிலையிலும், அறிவுத்திறன் மேம்பாட்டிலும் வெற்றி பெறுவார்.

குரு


இராகு

உ. ஜா. 34.
கோசாரம்


சனி
புத(வ)
 சந்,கேது


செவ்
சூரி,சுக்

கோசார சூரியன் சிம்மத்தைக் கடக்கும் போது, ஜனன ஜாதக்த்தில் புதனும், சூரியனும் பரிவர்த்தனையில் உள்ளதால்  ஜாதகரின் தந்தை வீட்டில் இவரது நங்கைக்கு திருமணம் போன்ற சுப மங்கள காரியங்கள் நடைபெறும். அதாவது ஜாதகரின் 30, 31, 32 வது வயதுகளில் கோசார குரு சிம்மம், கன்னி ஆகிய இராசிகளைக் கடக்கும் போது வீடு, பூமி, சொத்துக்கள் வாங்குதல் போன்ற சந்தோஷ தருணங்களும்,  குடும்பத்திலும் மகிழ்ச்சி நிலவும். 







No comments:

Post a Comment