Search This Blog

Sunday 9 November 2014

இந்த வார நட்சத்திரபலன் 9/11/2014 முதல் 15/11/2014 வரை. (தினபூமி நாளிதழில் வெளியானது.)


இந்த வார நட்சத்திரபலன்
9/11/2014 முதல் 15/11/2014 வரை.
(தினபூமி நாளிதழில் வெளியானது.)


மேஷம்


 (அஸ்வினி-1, 2, 3, 4 பாதங்கள்பரணி-1, 2, 3, 4 பாதங்கள்கார்த்திகை-1, பாதம்)

அஸ்வினி --

புத்தி சாதுர்யமுள்ள அஸ்வினி நட்சத்திர வாசகர்களே !

       இந்த வாரம் தனவரவு அதிகரிக்கும்எதிரிகளின் பணமும் வந்து சேரும்.   வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும்.  இருக்கும் இடத்தில் நல்ல புகழும் உண்டாகும்மனமகிழ்ச்சிபகைகளை வெல்லும் திறன் ஆகியவைஏற்படும்.   வாழ்க்கையில் முன்னேற்றங்களையும்சுகானுபவங்களையும்மற்றும் கௌரவத்தையும் அடைவீர்கள்தாய் மாமனுக்கும் நன்மை ஏற்படும்தொலைதூரப் பயணங்களால் நன்மை ஏற்படும்சிலருக்கு வெற்றிகரமானதொழில் முன்னேற்றங்கள் ஏற்படும்.

பரணி  --

தான தருமங்களைச் செய்யும் பரணி நட்சத்திர வாசகர்களே !

       இந்த வாரம் உங்களுக்கு ஆபரண சேர்க்கை உண்டுகல்வியில் வெற்றி பெறக் கவனமாகப் படிக்க வேண்டும்.  உடன்பிறப்புக்களிடையே கருத்து வேறுபாடு ஏற்படலாம்புத்திர பாக்கியம் ஏற்படும்கௌரவப் பட்டங்கள்,பதவிகள் ஆகியவை கிடைக்கும்.  அரசாங்கத் துறைகளின் மூலமாக எதிர்பார்த்த அனுகூலங்கள் யாவும் வந்து சேரும்சில விஷயங்களில்சிலருக்குத் தடை,தாமதங்கள் ஏற்படலாம்மேடைப் பேச்சாளர்கள் தங்கள் பேச்சின் மூலமாக வருமானம் ஈட்டுவர்.  கொடுத்த கடனை திரும்பப் பெறுவதில் சிக்கல்கள் எழாதுசுலபமாக வசூலாகிவிடும்.   தம்பதிகளுக்கு இடையே கோபம் மறைந்து சமாதானமாக இணைந்து பேரின்பம் அடைவர்மிகவும் அன்பு காட்டும் பெண்களின் ஆதரவால் லாபம் ஏற்படும்குழந்தைகளின்  சுட்டித்தனம் மற்றும் சேட்டைகளைக் கண்டு மனம் மகிழ்ச்சி அடையும்.

கார்த்திகை  1 ஆம் பாதம்.—

கலை ஆர்வம் மிக்க கார்த்திகை நட்சத்திர வாசகர்களே !

       இந்த வாரம் உங்களுக்கு சிறப்பான பலன்களாய் நடக்கும்விருந்தினர் வருகையால் வீட்டில் கும்மாளமும்குஷியாகவும் இருக்கும்சினிமா,மால்களில் பொழுது போக்குதல் எனச் செலவுக்கும் குறைவிருக்காது.தந்தைவழி உறவுகளால் அனுகூலம் ஏற்படும்அரசு வகையில் கட்ட வேண்டிய தீர்வைகள்வரி பாக்கிகள் ஆகியவற்றைச் செலுத்துவதற்குத் தேவையான பணவரவுகள், பணவுதவிகள் வந்து சேரும். பணிபுரியும் இடத்தில் மேலதிகாரிகளின் ஆதரவால் பணியில் முன்னேற்றங்களை அடைய முற்படுவீர்கள். மனதுக்குப் பிரியமான மங்கையுடன் ஏற்படும் இனிய பயணங்களால் இன்புறுவீர்கள்.


ரிஷபம்

கார்த்திகை – 2,3,4 பாதங்கள்-ரோகிணி-1,2,3,4-பாதங்கள்-மிருகசிரீடம்-1,2 பாதங்கள்)

கார்த்திகை 2,3,4 பாதங்கள் –

கல்வியில் ஆர்வம் மில்லாத கார்த்திகை நட்சத்திர வாசகர்களே !

       இந்த வாரம் இனிய வாரம்வாரத்தின் முதல் நாளில் எதிர்பாராத தனவரவும் உண்டுசுற்றத்தார் மூலமாகவும் பணவுதவிகள் கிடைக்கலாம்.தொழிலில் விஸ்தரிப்பு நடவடிக்கைகள் மூலமாக வருமான வாய்ப்புகள் பெருகும்இரண்டாம் நாளில் கோபத்தைக் குறைத்தால் குடும்பத்தில் குழப்பங்களும் குறையும்மூன்றாம் நாள் தந்தைவழி உறவுகளால் வீண்தொல்லைகள் ஏற்படலாம். 4 ஆம் நாளில் தீயவர்கள் தொடர்பால் சஞ்சலம் ஏற்பட வாய்ப்புண்டு. 5 ஆம் நாள் வீட்டில் சுப காரியங்கள் அனைத்தும் சிறப்புறவெற்றிகரமாக நடக்கும். 6 ஆம் நாளில் புதிய நண்பர்கள் சேர்க்கை,தொழில் இலாபம் ஆகியவை ஏற்படும். 7 ஆம் நாள் கற்பனை வளம் பெருகும்.தாய் மூலமாக நன்மைகள் ஏற்படும்.

ரோகிணி  –

கல்வியில் பட்டங்கள் பெற்ற  ரோகிணி நட்சத்திர வாசகர்களே !

       இந்த வாரம் உங்களுக்கு முதல் நாளில் காரியத்தடைகள்,காலதாமதங்கள் ஏற்படுமமறுநாள் மேலதிகாரிகளால் பாராட்டப்பட்டு பதவி உயர்வின் மூலம் பணப் பயன்களை அடைவீர்கள்அடுத்த நாளில் வாகனங்களில் செல்லும் போது எச்சரிக்கையுடன் இருக்காவிட்டால் விபத்தில் சிக்க நேரிடலாம். கவனம் தேவை. 4 ஆம் நாள் இடைவிடாத வேலை காரணமாக நேரத்துக்கு உணவருந்தாத நிலை ஏற்படும். 5 ஆம் நாள் மது,மாமிசம் அருந்துபவர்களுக்குத் தொல்லைகள் எழலாம். 6 ஆம் நாள்- விருந்து,மகிழ்ச்சிக் கொண்டாட்டம், ஆரவாரம், ஸ்திரீகளால் மகிழ்ச்சி என ஆனந்தம்தான். 7 ஆம் நாளில் சுபச்செய்திகளை எதிர்பார்க்கலாம். தனலாபம் ஏற்படும்.


மிருகசிரீஷம் – 1 , 2 பாதங்கள் –

திறமை மிக்க மிருகசிரீட நட்சத்திர வாசகர்களே !

      இந்த வாரம் உங்களுக்கு மிகச் சுமாரான வாரம்மூன்றாம் நாளும்,கடைசி நாளும் மட்டுமே நற்பலன்களை எதிர்பார்க்கலாம்  இந்த நாட்களில் உங்கள் திறமை மிக்க செயல்பாடுகளால் அனைவரின் பாராட்டையும் பெறுவீர்கள்நீங்கள் எதிர்பார்த்த இடங்களில் இருந்து பணவரவு தாராளமாக இருக்கும்அரசாங்கத்திடம் இருந்து அனுகூலமான செய்திகள் மற்றும் தகவல்கள் வந்து சேரும்முதல்நாள் பயணத்தில் துன்பமும்பின்னர் வரும் நாட்களில் கடன் கொடுத்தவர்களின் கெடுபிடிசகோதரர் விரோதம்அரசு வகைத் தொல்லை,  ஆகியவை ஏற்படும்எனவே இன்பம் வரும் போது மகிழ்ச்சி பொங்குவதும்துன்பம் வரும் போது துவளுவதும் தானே வாழ்க்கை.இரண்டையும் சமமாக பாவித்தால் துன்பமும் இன்பமாகும்.

மிதுனம்

(மிருகசிரீடம்- 3,4 பாதங்கள்திருவாதிரை-1,2,3,4 பாதங்கள்புனர்பூசம்-1,2,3பாதங்கள்)

மிருகசிரீஷம் – 3 , 4 பாதங்கள். –

அனுஷ்டானங்களில் நம்பிக்கையற்ற மிருகசிரீட நட்சத்திர வாசகர்களே !

       இந்த வாரம் உங்களுக்குப் பெரியோர்களின் ஆசியும்மேலதிகாரிகளின் ஆதரவும்புதிய நண்பர்களால் நன்மையும் ஏற்படும்மாணவர்களுக்குக் கவனச் சிதறல்கள் காரணமாகப் படிப்பில் ஆர்வம் குறையலாம். எனவே, ஆசிரியர்களின் ஆலோசனைப்படி ஆழ்ந்து படித்தால் அதிக மதிப்பெண்கள் பெறலாம் சிலருக்கு இடமாற்றங்கள் ஏற்படலாம் மனோதைரியம் அதிகரிப்பதன் காரணமாக எவரையும் எதிர்த்து வெற்றி பெறுவீர்கள். தொழிலில் எதிர்பார்த்தபடி பல வழிகளிலும் தனவரவு அதிகரிக்கும். சிலருக்கு நல்ல குரு வாய்க்கப் பெற்று ஆன்மிக வழியில் அறிவுத் தெளிவு ஏற்படும், பயிர், மனை இவற்றால் இலாபம் ஏற்படும். சிலருக்கு திருமணம், சந்ததி விருத்தி ஏற்படலாம். சகோதரரால் நன்மைகள் உண்டு.


திருவாதிரை ---

நற்குணம் மிக்க திருவாதிரை நட்சத்திர வாசகர்களே !

       இந்த வாரம் உங்களுக்கு தந்தை வர்க்கத்தினரால் நன்மை பல ஏற்படும் அரசுப் பணியாளர்களுக்கு புதிய பதவியும்பொறுப்பும் கிடைக்கும்வாகன வசதியும்நற்கல்வியும் கிடைக்கும்சிலருக்கு அரசாங்க விருதுகள் கிடைக்கும்வாக்கு வன்மை ஓங்கும்.    சிலருக்கு வீடுமனை ஆகியவை கிடைக்கும். பூரண சயன சுகம் ஏற்படும்.  பிறருக்கு உதவும் நல்ல எண்ணம் மேலோங்கும்.  தொழில் விஷயமாகத் தீட்டிய முக்கியத் திட்டங்கள் நிறைவேற எடுத்த நடவடிக்கைகள் வெற்றி பெறும்.  குழந்தைகளின் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் தேவைவியாபாரிகளுக்கு வங்கிக் கடன்கள் பெறுவதில் எவ்விதச் சிக்கல்களும் ஏற்படாதுவியாபரிகள் தங்கள் வாக்கால் வாடிக்கையாளர்களைக் கவர்ந்து இலாபத்தைப் பெருக்குவர்.

புனர்பூசம் – 1, 2, 3 – பாதங்கள்.

எதையும் வெளிப்படையாகப் பேசாத புனர்பூச நட்சத்திர வாசகர்களே !

       இந்த வாரம் உங்கள் அழகும் பொலிவும் கூடும்பெயரும்புகழும் ஓங்கும்அறிவுத்திறனும் கூடும்சிலர் பணவிஷயங்களில் மிகவும் எச்சரிக்கையுடன் இருப்பர்.  நல்லவர்களுடன் ஏற்படும் பழக்கத்தால் நல்லதே நடக்கும்மாணவர்களுக்குக் கல்வியில் தேர்ச்சி உண்டுசிலருக்குப்  பிரிவும்,பகையும் ஏற்படலாம்உழைப்பு அதிகமாகி அதற்கேற்ற ஆதாயம் இராதுதொலைதூரச் செய்திகளால் இல்லத்தில் மகிழ்ச்சி பெருகும்சிலருக்குப் புதுப்புதுப் பதவிகளும் அதனால் வருவாய்ப் பெருக்கமும் ஏற்படும்புதிய வாகனயோகம் ஏற்படலாம்யாத்திரையும்வெளிநாட்டுப் பயணங்களும் ஏற்படும்.


கடகம்

(புனர்பூசம்- 4 ஆம் பாதம்பூசம்-1,2,3,4 பாதங்கள்ஆயில்யம்-1,2,3,4 பாதங்கள்)

புனர்பூசம் – 4 ஆம் பாதம்.

பேச்சுத் திறன் மிக்க புனர்பூச நட்சத்திர வாசகர்களே !

       இந்த வாரம் முதல் இரண்டு நாட்கள் மற்றும் 5 ஆம் நாள் மிகச் சிறப்பாக இருக்கும்எதிர்பார்த்தபடி தனவரவுகள் கைக்கு வந்து சேரும்வந்த பணத்தை தரும காரியங்களுக்கு தாராளமாகச் செலவு செய்து மகிழ்வீர்கள்கேளிக்கைபிறந்த நாள் விருந்துகள் என மகிழ்ச்சி பொங்கும் வாரமாக அமையும்நல்லோர் சேர்க்கையால்  மாணவர்களுக்குக் கல்வியில் தேர்ச்சி உண்டுசிலருக்கு உழைப்பு அதிகமாகி அதற்கேற்றார் போல் ஆதாயமும் அதிகரிக்கும்தொலைதூரச் செய்திகளால் இல்லத்தில் மகிழ்ச்சி பெருகும்.சிலருக்குத் தொழிலில் புதிய கொள்முதல் மூலமாக அதிகமான வருவாய்ப் பெருக்கம் ஏற்படும்புதிய வாகனயோகம் ஏற்படலாம்யாத்திரையும்,வெளிநாட்டுப் பயணங்களும் ஏற்படும்.

பூசம் -- 

கல்வியில் சிறந்த பூச நட்சத்திர வாசகர்களே ! 
 
       இந்த வாரம் உங்களுக்கு முதல் இரண்டு நாட்கள் நல்ல செய்திகள் வரும்.  சுபகாரியச் செலவுகள் ஏற்படும்.  புதிய முயற்சிகளால் பண வருமானம் அதிகரிக்கும்வாடிக்கையாளரிடம்  நட்புப் பாராட்டும் வியாபாரிகளுக்கு அதிக இலாபம் கிடைக்கும்அழகிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள்அதிகாரிகளின் நட்பால் ஆதாயம் பெறுவீர்கள்நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வெற்றி பெறும்.  பிறர் மேல் இரக்கம் ஏற்பட்டுத்  தானதருமங்கள் செய்வீர்கள்.அரசாங்கத்தால் அனுகூலம் உண்டுவாக்கு வன்மையால் வருமானம் பெருகும்.நல்ல வாகனங்கள் வாங்க முற்படுவீர்கள்சில மாணவர்கள் கல்வியில் உயர்நிலை எய்துவர்உத்தியோகம் மற்றும் தொழிலில் அபிவிருத்தி ஏற்படும்.


ஆயில்யம் –

கோபம் மிக்க ஆயில்ய நட்சத்திர வாசகர்களே !

       இந்த வாரம் சுபகாரியங்களுக்காக வீடே விழாக்கோலம் பூணும்.திடீரென ஏற்படும்பயணங்களால் ஆதாயமும்மகிழ்ச்சியும் ஏற்படும்அரசுப் பணியாளர்களுக்கு எதிர்பார்த்தபடி தலைமைப் பதவிகள் தேடி வரும்வீரம் பொங்கும்தங்கள் சேவைகள் அனைவராலும் அங்கீகரிக்கப்படும்இசை ஆர்வத்தால் சங்கீத சபாக்களுக்குச் சென்று இசை கேட்டு மகிழ்வீர்கள்நீங்கள் எதிர்பாராத விதத்தில் இடமாற்றங்கள் ஏற்படலாம்.  மகான்களின் தரிசனத்தால் மனம் மகிழ்வதோடுமனதில் அமைதியும் நிலவும்வியாபாரிகளுக்கு முதலீடுகள் அதிகரித்து இலாபமும் அதிகரிக்கும்உத்தியோகம் மற்றும் தொழிலில் அபிவிருத்தி ஏற்படும்.  புத்திர பாக்கியம் ஏற்படும்தொழில் வாய்ப்புகள் பிரகாசமாய் இருக்கும்.


 சிம்மம்

மகம்-1,2,3,4 பாதங்கள்,பூரம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் உத்திரம்- 1 பாதம்)

மகம் –

தரும சிந்தனை மிக்க மக நட்சத்திர வாசகர்களே !

       இந்த வாரம் உங்களுக்கு இனிய வாரம்மனைவி மூலம் மட்டற்ற மகிழ்ச்சி நிலவும்வாக்கால் வருமானம் பெருகும்விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும்அரசாங்கத்தால் அனுகூலம் உண்டுவிரும்பிய பொருட்களை எல்லாம் வாங்கிக் குவிப்பீர்கள்..  சுகமும் ஆடை ஆபரண சேர்க்கைபுத்திர பாக்கியம் மற்றும் எதிர்பாராத பணவரவுகள் ஆகியவை ஏற்படும்புதிய தொழில் முயற்சிகள் அரசு உதவியுடன் வெற்றி பெரும்கல்வியில் தேர்ச்சிதெய்வ சிந்தனை மற்றும் தரும சிந்தனையும் ஏற்படும்சிலருக்கு உயர்ரக வாகனங்கள் கிடைக்கும்பிரபலமானவர்களின் ஆறுதலும்நட்பும் கிடைக்கும்.

பூரம் –

துடுக்குத்தனம் மிக்க பூர நட்சத்திர வாசகர்களே !

       இந்த வாரம் உங்களுக்கு ஓரளவே பணவரவு இருக்கும்ஆறுவது சினம் என சினத்தை அடக்கினால் சிரமங்கள் குறையும்உடன் பிறந்தவர்களோடு அனுசரித்துச் செல்வது நல்லதுகல்வியில் தேர்ச்சிதெய்வ சிந்தனை மற்றும் தரும சிந்தனையும் ஏற்படும்சிலருக்கு உயர் ரக வாகனங்கள் கிடைக்கும்.பணம் சம்பாதிப்பதில் ஆக்கமும்ஊக்கமும் ஏற்படும்சிலருக்கு பணமுடை ஏறபடுவதோடுதேவையற்ற அலைச்சல்களும் ஏற்படும்வீண் மனஸ்தாபங்களைத் தவிர்த்தால் வீட்டில் அமைதி நிலவும்பல புண்ணியத் தலங்களுக்கு பயணம் செய்யும் வாய்ப்புக் கிட்டும்திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமணம் நடக்கும்சிலர் பலவகையிலும் பிறரால் குற்றம் சாற்றப்பட்டு அவதிப்பட நேரலாம்பணிபுரியும் பெண்கள் பதவி உயர்வுகளை எதிர்பார்க்கலாம்.

உத்திரம்- பாதம் –

உண்மையையே பேசும் உத்திர நட்சத்திர வாசகர்களே !

       இந்த வாரம் முதல் நாளும்கடைசி மூன்று நாட்களும் உங்களுக்குச் சிறப்பான பலன்களைத் தரும்.  பக்திச் சொற்பொழிவுகளைக் கேட்பதில் ஆர்வமும்மகிழ்ச்சியும் ஏற்படும்.  திடீர்ப் பயணங்கள் மூலமாக ஆதாயங்கள் ஏற்படும்.  பழைய கடன்களை அடைத்துவிடுவீர்கள்.  இடைவிடாத பணி காரணமாக நேரத்துக்கு உணவு உண்ண இயலாமல் போகும்புதிய தொழில் தொடங்க எடுக்கப்படும் முயற்சிகள் வெற்றி பெறும் காலம் கனிந்து வரும்அரசு அதிகாரிகளின் அன்பு மற்றும் ஆதரவால் பணி உயர்வு நினைத்தபடி கிடைக்கும்.  சிலநேரங்களில் சுறுசுறுப்பற்ற நிலையும்மனோபயமும் நிலவும்.மகான்களின் ஆசியும்புதிய தொடர்புகளால் நன்மைகளும் ஏற்படும்போட்டி,பந்தயங்களில் வெற்றி கிடைக்கும்.


கன்னி

உத்திரம் – 2, 3, 4-பாதங்கள்ஹஸ்தம்-1, 2, 3, 4 பாதங்கள்சித்திரை – 1,2பாதங்கள்)

உத்திரம் – 2, 3, 4 – பாதங்கள்.

தைரியம் மிக்க உத்திர நட்சத்திர வாசகர்களே !

       இந்த வாரம் பல வழிகளிலும் தனவரவு ஏற்படும்எந்தக் காரியத்தையும் திறம்படச் செய்யும் உங்கள் செயல்திறன் கூடும்அதன் காரணமாக உங்கள் பணி இலக்கை அடைவீர்கள்சிலருக்கு மற்றவர்களை ஆணையிடும் உயர் பதவி கிடைக்கும் புதிதாக வேலை தேடுபவர்களுக்கு 12 ஆம் தேதிக்குப் பிறகு நல்ல காலம் பிறக்கும்.  மாணவர்கள் தங்கள் கிரகிப்புத் தன்மையால் கல்வியின் தரத்தை உயர்த்திக் கொள்வர்விற்பனைப் பிரதிநிதிகளின் வருமானம் தங்கள் பேச்சுத் திறனால் அதிகரிக்கும்குடும்ப வாழ்க்கையில் சந்தோஷம் நிலைத்திருக்கும்.

ஹஸ்தம் –

பொன் ஆபரணத்தில் பிரியம் கொண்ட ஹஸ்த நட்சத்திர வாசகர்களே!

       இந்த வாரம்  உங்களுக்கு மிக்க அனுகூலமான வாரம்பொருளாதார நிலைகள் திருப்திகரமாக இருக்கும்பழைய கடன்கள் விரைவில் வசூலாகும்.எதிர்பாராத இடத்தில் இருந்து வந்த பணவரவால் மனம் மகிழும்தங்கள் சகோதரரின் நடவடிக்கைகள் உங்களுக்கு எரிச்சலூட்டும்ஏமாற்றத்தைத் தவிர்க்க கூட்டாளிகளிடம் எச்சரிக்கையாக இருப்பது நல்லதுமனைவியுடன் கருத்துவேறுபாடு ஏற்பட வாய்ப்பு இருப்பதால் சமாதானமாகப் போவது சிறப்பு.போட்டி தேர்வுகளில் எதுர்பார்த்த வெற்றி கிட்டும் பெண்களால் இலாபம்வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறுதல் ஆகியவற்றால் வரும் இன்பம் நிலைத்திருக்கும்.

சித்திரை – 1,2 பாதங்கள் –

அடிக்கடி ஊர் சுற்றும் சித்திரை நட்சத்திர வாசகர்களே !

       இந்த வாரம்  பொருளாதார நிலையைப் பொறுத்தவரை சிரமமான காலம்அதன் காரணமாக சேமிப்புக்களில் இருக்கும் பணத்தில் கை வைக்கவேண்டிய நிலை ஏற்படும்பங்குச் சந்தையில் ஆலோசித்து இறங்குவது நல்லதுபழைய பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகள் நல்ல வருமானத்தை அடைவார்கள்கல்வியில் தேர்ச்சி ஏற்பட கடின உழைப்புத் தேவைபுத்திர பாக்கியம்சுபகாரிய நிகழ்ச்சிகள் ஆகியவற்றால் இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கும்விரிவாக்கங்கள் செய்வதினால் தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும்மேலதிகாரிகளின் உதவியால் உயர்பதவிகள் கிடைக்கும்.

துலாம்

சித்திரை-3,4 பாதங்கள்சுவாதி – 1,2,3,4 பாதங்கள் மற்றும் விசாகம்- 1,2,3பாதங்கள்)

சித்திரை-3,4 பாதங்கள் –

தைரியம் மிக்க சித்திரை நட்சத்திர வாசகர்களே !

       இந்த வாரம் எல்லா வசதிகளும் இன்பமும் ஏற்படும்நல்ல உயர்ந்த மனிதர்களின்பண்புமிக்கவர்களின் நட்பு ஏற்படும்சிறப்பான ஆடை அணிந்து மிடுக்காக உலாவருவீர்கள்உறவுகள் வருகையால் உள்ளம் மகிழும்.தனவருமானம் அதிகரிப்பதால் அனைத்துக் காரியங்களும் அனுகூலமாய் இருக்கும். சிலருக்கு வீண்பேச்சு, வீண்அலைச்சல் மற்றும் வீண்செலவுகள் ஏற்படும். மிகப் பெரிய சாகசங்களைப் புரிவீர்கள். அதிகாரிகளுடன் வீண் சச்சரவுகளை விலக்கினால் பணியில் எதிர்பார்த்த உயர்வுகள் இருக்கும்.

சுவாதி 

நற்குணம் மிக்க சுவாதி நட்சத்திர வாசகர்களே !

       இந்த வாரம் உங்கள் சம்பாதிக்கும் திறன் மேம்படும்மிகக் கடினமான வேலைகளையும் தன்னம்பிக்கை காரணமாக சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள்.அரசு வேலைக்கு மனுச் செய்தவர்களுக்கு அனுகூலமான பதில்கள் வரும்.வியாபாரிகளுக்கு வியாபாரம் ஏற்ற இறக்கமின்றி ஒரே சீராக இருக்கும்குடும்ப சந்தோஷம் குறைவில்லாது நிறைந்திருக்கும்தம்பதிகளிடையே அன்னியோன்யம் அதிகரிக்கும்பெரியோர்களின் ஆசியால் நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வெற்றி அடையும்அண்டை வீட்டார்நண்பர்கள் மற்றும் சகோதரரால் உங்கள் பிரச்சனைகளுக்கு ஒரு முடிவு வரும்.

விசாகம்- 1,2,3 பாதங்கள் –

வியாபார நுணுக்கம் அறிந்த விசாக நட்சத்திர வாசகர்களே !

       இந்த வாரம் பண விஷயத்தைப் பொருத்தவரை திருப்திகரமான வாரமாக இருக்கும்வரவேண்டிய கடன் பாக்கிகள் சிரமமின்றி வசூலாகும்.உறவுகள்நண்பர்கள் மற்றும் குடும்பத்தார் மூலமான உதவிகள் தடைப்படாது.எடுத்த முயற்சிகள் யாவும் வெற்றி அடைய அதிக உழைப்பு தேவைப்படும்.புதிய பெண்கள் தொடர்பு ஏற்படும்பல வகையான உயர்ந்த வாகன வசதி அமையும்சிலருக்குப் பெரிய இடத்துப் பெண் மனைவியாக அமைவாள்.மனைவி மூலம் பூர்ண சுகம் கிடைக்கும்மாணவர்களுக்குக் கல்வியில் தேர்ச்சி உண்டாகும்.  அரசுப் பதவியில் உள்ளவர்கள் தயவால் அனுகூலமான பலன்களை அடைவர் நல்ல புத்திர பாக்கியம் ஏற்படும்

விருச்சிகம்

விசாகம்- 4, அனுஷம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் கேட்டை -1,2,3,4 பாதங்கள் )

விசாகம்ஆம் பாதம் –

திறமைமிக்க விசாக நட்சத்திர வாசகர்களே !

       இந்த வாரம்  தங்களுக்கு  உழைப்பு அதிகமாகிஅதற்கேற்ற இலாபமோ,பலனோ கிடைக்காதுஆரோக்கியக் குறைவும் ஏற்படலாம். புத்தி தெளிவு மற்றும் செயல்திறன் அதிகரிக்கும்புதுத்தெம்பும்உற்சாகமும் கூடும்வாகன வசதிகள் மேம்படும்அந்தஸ்து உயரும்சிலருக்கு அதிகாரப் பதவியும்,அமைச்சர் போன்ற பதவிகளும் கிடைக்கும் வாய்ப்பு ஏற்படும்தொலை தூரத்திலிருந்து நற்செய்திகள் வந்து மகிழ்ச்சி அளிக்கும்உதவிகரமான புதிய நண்பர்கள் கிடைப்பர்.  எழுத்துத் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்தாய் மாமனுக்கும் நன்மை ஏற்படும்சிலருக்குக் கௌரவப் பட்டங்கள் கிடைக்கும்.பயணங்களிலும் எச்சரிக்கை தேவை.

அனுஷம் –

ஆராய்ச்சி மனம் கொண்ட அனுஷ நட்சத்திர வாசகர்களே !

       இந்த வாரம் செலவுகள் அதிகமாகும்ஆதலால் பணமுடையும் இருக்கும்.  வேலையில் சிரத்தையும்கடின உழைப்புமே எப்போதும் உங்கள் பையை பணத்தால் நிரப்பும்தங்களுக்குக் கீழ் பணிபுரிபவர்கள் வேலையில் கை கொடுப்பர்மற்றவர்களிடம் பேசும் போது எச்சரிக்கையுடன் பேசவும்நன்கு ஆராய்ந்து பங்குச்சந்தை மற்றும் போட்டி பந்தயங்களில் ஈடுபடுவதுஇழப்பைத் தவிர்க்கும்திருமணமாகாத பெண்களுக்கு திருமணத்துக்கான முயற்சிகள் இந்த வாரம் மேற்கொள்ளப்படும்அவசியமற்றஅலைச்சல் தரும் பயணங்கள் மேற்கொள்ள நேரும்அரசு ஊழியர்களுக்குக் கட்டளைகளை இடும்படியான அதிகாரம் மிக்க உயர் பதவிகள் கிடைக்கும்பிள்ளைகள் நல்ல உயர்வான முன்னேற்றங்களை எதிர்பார்க்கலாம்.

கேட்டை 

தற்பெருமை மிக்க கேட்டை நட்சத்திர வாசகர்களே !

இந்த வாரம் சுக சௌகரியங்கள் சேரும்சுபசெய்திகளால் மனம் மகிழும்வெளிநாட்டுப் பயணம் மற்றும் வாணிபத்தால்  தனலாபம் அதிகரிக்கும்வீட்டில் அமைதியும்நிம்மதியும் நிலவும்.   மனைவியின் பேச்சைக் கேட்டு நடக்க வேண்டிய நிலை ஏற்படும்செலவுகளைக் குறைத்து சேமித்து வைப்பது நல்லதுவியாபாரத்தில் போட்டிகளைச் சமாளிக்க கடினமாக உழைக்க வேண்டியது வரும்விவசாயிகளுக்கு அதிக மகசூல் ஏற்பட்டு,இலாபத்தால் வசதிகள் பெருகும்பெண்களின் வாழ்க்கையில் துன்பங்கள் மறைந்துமுன்னேற்றம் ஏற்படும்பக்தி மார்க்கத்தில்  ஈடுபாடு அதிகரிக்கும்.சுபகாரிய நிகழ்வுகளால் இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கும்

தனுசு

மூலம்-1,2,3,4 பாதங்கள்பூராடம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் உத்திராடம் –1பாதம்)

மூலம் –

அறிவு மிக்க மூலா நட்சத்திர வாசகர்களே !    
       
   இந்த வாரம் பல திசைகளில் இருந்தும் பணம் கூடுதலாக வரும்.மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்படாதிருக்க அனுசரித்துச் செல்வது நல்லது. எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு தொழிலில் புதிய திட்டங்களைத் தீட்டி முன்னேற முயல்வீர்கள். உறவுகள் வருகையால் சந்தோஷம் பெருகுவது பொல், செலவுகளும் அதிகரிக்கும்.  சிறப்பான பொதுஜனத் தொடர்பு காரணமாக உபரி வருமானம் கிடைக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் வீணான வாக்குவாதம் செய்யாதிருப்பது நல்லது. பூமி அல்லது வாகனம் வாங்கும் யோகம் ஏற்படும். அதுபோல் உங்கள் எதிரிகளிடம் இருந்து விலகியே இருப்பது நல்லது. உங்களது நற்குணங்கள் அனைவரின் பாராட்டையும் பெறும்.மாணவர்களுக்குக் கல்வியில் தேர்ச்சி உண்டாகும்.

பூராடம் 

பரோபகார குணம் மிக்க பூராட நட்சத்திர வாசகர்களே !

       இந்த வாரம் உங்களுக்கு இனிய வாரம்புண்ணியத் தல யாத்திரைகள் ஏற்படும்ஓங்கும்பொருளாதார உயர்வினால் எப்போதும் மனதில் மகிழ்ச்சி பொங்கும்குடும்பத்தாருக்கும் அவர்கள் ஆசைகள் நிறைவேறுவதால் குதுகலமாய் இருப்பர். அனுபவ பூர்வமான அறிவுத்திறன் கூடும், பூமி வீடு மூலம் இலாபம் ஏற்படும். சிலருக்கு வீண் விரயங்கள் ஏற்படலாம்மனைவியின் பணிவிடை மகிழ்ச்சி தரும். மதிப்பு, கௌரவம் உயரும்.சோம்பேறித்தனம் அதிகரிக்கும். பெண்களுக்கு ஆன்மிகத்தில் ஈடுபாடும், அதன் காரணமாகக் குடும்ப முன்னேற்றமும் ஏற்படும்.

உத்திராடம் –1 ஆம் பாதம் –

கலையுணர்வு மிக்க உத்திராட நட்சத்திர வாசகர்களே !

       இந்த வாரம் பொன் பொருள் ஆபரணங்கள் ஆகியவை விதவிதமாகக் கிடைக்கும்நல்ல பண்பாளர்களின் நட்பும்அன்பும் கிடைக்கும்மனதில் தெய்வ பக்தி கூடும்நினைத்ததை நினைத்தபடியே சாதிக்கும் திறன் அதிகரிக்கும்.நல்ஆரோக்கியமும்புதுத் தெம்பும்புத்தொளியும் ஏற்படும்.  பணக்கார மனைவியும் அமைவாள்அழகானஎழில் நிறைந்த வீடும் கிடைக்கும்தாயின்  ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. சிலருக்கு குடும்ப வாழ்க்கையில் குழப்பம் வரலாம்கடன் கொடுத்தவர்கள் கண்டிப்புடன் நடந்துகொள்வர்.

மகரம்

உத்திராடம்- 2,3,4- பாதங்கள்திருவோணம்-1,2,3,4 மற்றும் அவிட்டம் 1,2பாதங்கள் )

உத்திராடம்- 2,3,4- பாதங்கள் ---

பலம் மிக்க உத்திராட நட்சத்திர வாசகர்களே !

       இந்த வாரம் பண வருவாய் அதிகரிக்கும்வியாபாரிகள் எதிர்பார்த்தபடி வங்கிக் கடன்கள் சிரம்மின்றிக் கிடைக்கும்.  உறவுகள்நண்பர்கள் மற்றும் குடும்பத்தார் ஆகியோரின் ஒத்துழைப்பால் அகம் மகிழும்தொழில் விஷயமாக எடுத்த முயற்சிகள்யாவும் வெற்றி அடைய அதிக முயற்சிகள் தேவைப்படும்.பணிபுரியும் பெண்களுக்கு தற்போது இருக்கும் வேலையைக் காட்டிலும் நல்ல வேலைக்குப் போகும் வாய்ப்புகள் அமையும்.  பல வகையான உயர்ந்த வாகன வசதி அமையும்சிலருக்குப் பெரிய இடத்துப் பெண் மனைவியாக அமைவாள்.மனைவி மூலம் பூர்ண சுகம் கிடைக்கும்மாணவர்களுக்குக் கல்வியில் தேர்ச்சி உண்டாகும். அரசுப்பதவியில் உள்ளவர்கள் உயர் அதிகாரிகளின் தயவால் பயன் பெறுவர். நல்ல புத்திர பாக்கியம் ஏற்படும்.  

திருவோணம்-

கர்வம் மிக்க திருவோண நட்சத்திர வாசகர்களே !

       இந்த வாரம்   உங்கள் பணத்தைப் புதிய முதலீட்டுத் திட்டங்கள் மூலமாக சேமிக்க முற்படுவீர்கள்நீண்ட நாட்களுக்குப் பின்னர் வந்த  பழைய உறவுகளின்  வரவு  மகிழ்வைத் தரும்நெருங்கிய நண்பர்களின் உதவியால் கூட்டாளிகளிடையே ஏற்பட இருந்த குழப்பங்கள் சரியாகும்வீட்டு வாடகை வசூல் திருப்திகரமாக இருக்காதுமாணவர்களின் கல்வி முன்னேற்றத்துக்குக் கடின உழைப்பு தேவைப்படும்வீட்டில் நவீன உபகரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள்வியாபார சம்பந்தமான வெளிநாட்டுப் பயணங்கள் இலாபம் தரும்.இதுவரை கடினமாக இருந்த காரியங்கள் எளிதில் கைகூடும்.


அவிட்டம் 1,2 பாதங்கள் –

முன்கோபம் மிக்க அவிட்ட நட்சத்திர வாசகர்களே !

       இந்த வாரம் தாராளமான தனவரவு வரும்.  இனிய தகவல்கள் இல்லம் தேடி வரும்.  சுற்றமும்நட்பும் சூழ சுபகாரியப் பேச்சுக்கள் நடைபெறும்எதிரிகளின் திட்டங்களை சமயோஜிதமாகச் செயல்பட்டு முறியடிப்பீர்கள்நவீன காலத்துக்கு ஏற்றபடி புதுப்புது சாமான்களை அறிமுகப்படுத்தி வியாபாரத்தில் ஏற்றம் காண்பீர்கள்அரசுப்பணியாளர்கள் அக்கறையுடன் பணிபுரிந்து,அதிகாரிகளின் பாராட்டுதல்களைப் பெறுவார்கள்குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் தீரும்புதிய கடன்களை வாங்க வேண்டிய சூழ்நிலை எழும்தீய குணம் உள்ள  நபர்களிடம் இருந்து விலகி இருப்பதே நல்லதுபுதிய முதலீடுகளால் தொழில் ஏற்றம் காணும்.

கும்பம்

அவிட்டம் – 3,4 பாதங்கள்– சதயம்-1,2,3,4 பாதங்கள்-பூரட்டாதி-1,2,3 பாதங்கள்)

அவிட்டம் – 3,4 பாதங்கள்

கம்பீரம் மிக்க அவிட்ட நட்சத்திர வாசகர்களே !      இந்த வாரம் எதிர்பார்த்த இனங்களில் இருந்து தனவரவு உண்டு. குடும்ப உறவுகளின்  ஒத்துழைப்பால் குடும்ப முன்னேற்றம் சாத்தியப்படும். அன்புமிக்க பெண்களால் ஆனந்தம் பெருகும். அரசு வகையில் எதிர்பார்த்த  ஆதாயம் மற்றும் உதவிகளால்  தொழிலில் முன்னேற்றம் ஏற்படலாம். உங்கள் திறமைமிக்க செயல்களால் வெற்றிகளும், பாராட்டுதல்களும் குவியும். தங்கள் வாழ்க்கையில் மனைவி மூலமாக முன்னேற்றத்துக்கான நல்ல ஆலோசனைகள் கிடைக்கும்.   வெளியூர்ப் பயணங்கள், வெற்றிகரமாகவும், இலாபகரமாகவும் அமையும்.  இல்லத்தில் மகிழ்ச்சி பொங்க, மங்கல காரியங்கள் ஈடேறும்.மாணவர்களுக்குப் படிப்பில் தேர்ச்சி ஏற்பட்டு, அறிவுச் சுடரொளி வீசும்.

சதயம்-

வசீகரமான சதய நட்சத்திர வாசகர்களே !

       இந்த வாரம் அரசுப் பணி புரிபவர்களுக்கு அனுகூலமான மற்றும் அற்புதமான வாரம்அதனால் மற்றவர்களுக்குச் சிறப்பான வாரம் இல்லை என்ற அர்த்தமில்லைஅவர்களுக்கு உயர் அதிகாரிகளின் ஆதரவு இருப்பதால்,எதிரிகளின் கொட்டம் அடங்கும்அரசுப் பணிபுரியும் பெண்கள் தங்களுக்கு விருப்பமான இடத்திற்கு மாற்றம் பெற முயற்சிப்பர்அந்த முயற்சிகளில் அவர்கள் வெற்றியும் பெறுவார்கள். சிலருக்கு அனைத்து வசதிகளுடன் கூடிய அழகிய இல்லம் அமையும்புதிய பதவிகள் தேடிவரும்அந்தஸ்து உயரும்விவசாயிகளுக்கு ஆதாயம் கிட்டும்மாணவர்களுத் தேர்வு முடிவுகள் மகிழ்ச்சி தருவதாக இருக்கும்.

பூரட்டாதி-1,2,3 பாதங்கள் –

பக்தி மிக்க பூரட்டாதி நட்சத்திர வாசகர்களே ! 

       ஓய்வெடுத்துஉல்லாசமாய்ப் பொழுது போக்கும் விதமாகநமக்கு எல்லா நாட்களும் ஞாயிற்றுக் கிழமையாக இருப்பதில்லைஅதேபோல் இன்பமும் துன்பமும் கலந்தது தானே வாழ்க்கைஇந்த வாரம் கேளிக்கை மற்றும் ஆடம்பரச் செலவுகள் அதிகமாவதின் காரணமாகப் பணமுடை ஏற்பட வாய்ப்பு உண்டுநேர்மையும் கடின உழைப்பும் மட்டுமே வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தை அளிக்கும். இந்த வாரம்  உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் வெற்றியின் மகிழ்ச்சியை அனுபவிப்பீர்கள். உங்கள் இல்லத்தில்  மகிழ்ச்சிகரமான கொண்டாட்டங்கள் தூள் பரத்தும். மாணவர்கள் தங்கள் பொன்னான நேரத்தை முகநூல் மற்றும் இணையதளங்களைப் பார்ப்பதில் வீணடிக்காமல், கருத்தோடு படித்தால் நல்ல மதிப்பெண்கள் பெறலாம்.
மீனம்

பூரட்டாதி – 4 ஆம் பாதம்உத்திரட்டாதி-1,2.3.4 பாதங்கள் , ரேவதி- 1,2,3,4பாதங்கள்)

பூரட்டாதி – 4 ஆம் பாதம் –

அழகு மிக்க பூரட்டாதி நட்சத்திர வாசகர்களே !

       இந்த வாரம் பணவரவு அதிகரிப்பதால் மகிழ்ச்சி தரும் வாரம்வழக்குகள் ஏதேனும் இருப்பின் நிச்சியமாக வெற்றி பெரும்விஐபி களின் நட்பு உருவாகும்அவர்கள் மூலமாக ஆதாயங்கள் பெறும் நிலை உருவாகும்கீர்த்தி பெருகும்புனித காரியங்களில் ஈடுபாடு ஏற்படும்கௌரவப் பட்டங்கள் கிடைக்கும்பணிபுரிபவர்களுக்கு உதவியாளர்கள் அமைவர்அரசுப் பணிக்கு முயல்பவர்களுக்கு அனுகூலமான காலமாகும்கால்நடைச் செல்வம்பால்வளம் பெருகும்மனதில்  நினைத்ததை நினைந்தபடியே நடத்தி முடிப்பீர்கள்அதிகாரம் பண்ணும் தலைப்பதவி கிடைக்கும்பலவகைப் பயணங்களும் அதனால் இலாபமும் ஏற்படும்.

உத்திரட்டாதி-

கல்வியில் சிறந்த உத்திரட்டாதி நட்சத்திர வாசகர்களே !

       இந்த வாரம் சுபச் செய்திகளால் மனம் மகிழ்ச்சி ஏற்படும்தனவரவு அதிகமாவதால் தான தருமங்களில் ஈடுபாடு ஏற்படும்தாயின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவைமாணவர்கள் தங்கள் தெளிவான அறிவினால் பாடங்களைச் சுலபமாக கிரகித்துக் கொண்டு அதிக மதிப்பெண்கள் பெறுவர்மனைவி,  நண்பர்கள்மற்றும் உறவுகளிடம் சுமகமாக நடந்து கொண்டால் கருத்து பேதங்களைத் தவிர்க்கலாம்பெண்களால் சந்தோஷம் உருவாகும்வாகனங்களில் செல்லும் போது மிகுந்த எச்சரிக்கையுடன் செல்லவும்நல்ல நண்பர்களுடன் பழகுவது நல்லதுதீயகுணமுள்ள நண்பர்களைத் தவிர்க்கவும்உங்கள் மனம் உயர்ந்த எண்ணங்களைக் கொண்டதாக அமையும்.
ரேவதி-


மனைவி பேச்சுக்கு மறு பேச்சுப் பேசாத ரேவதி நட்சத்திர வாசகர்களே!

       இந்த வாரம் பணவரவு அதிகரிப்பது போல்செலவுகளும் கூடும்ஆழ்ந்த மனக்கவலைகள் அன்பு மனைவியின் அரவணைப்பால் குறையும்குழந்தைகளின் சேட்டைசெயல்பாடு கண்டு உங்கள்  முகத்தில் புன்னகையும்,மகிழ்ச்சியும் ஏற்படும்.  பணிபுரியும் பெண்கள் தங்கள் பணி மற்றும் குடும்பச் சுமைகளை ஒருசேரச் சுமப்பதில் சிரமப்படுவார்கள்வியாபார விரிவாக்கம் பற்றிய தங்கள் கூட்டாளியின் ஆலோசனைகள் ஏற்றுக் கொள்ளத் தக்கதாகவும்,சிறப்பானதாகவும் இருக்கும்மாணவர்கள் மகிழ்வான கல்விச் சுற்றுலாச் செல்லும் வாய்ப்பு ஏற்படும்.

No comments:

Post a Comment