Search This Blog

Saturday 28 April 2018

பலதீபிகையில் கிரகங்களின் நோய் காரகங்கள்.


பலதீபிகையில் கிரகங்களின் நோய் காரகங்கள்.





         ஜோதிட நூல்களில் மிக முக்கியமான, அதிகாரபூர்வமான, தகுதியுடைய, 

நம்பத் தகுந்த நூல்களில் 13 ஆம் நூற்றாண்டில், கேரளாவில் நம்பூதிரி குடும்பத்தில் 

பிறந்த “ மந்தரேஸ்வரர் “ எழுதிய “ பலதீபீகை ” யும் ஒன்றாகும். இதை அவர் 

சமஸ்கிருத மொழியில் எழுதினார். மந்தரேஸ்வரர் இளமையில் அவர் 

“மார்க்கண்டேய பட்டாத்ரி” – என அழைக்கப்பட்டார். இவர் இவரது மேற்படிப்பை 

ஹிமாசலப் பிரதேசத்திலுள்ள “பத்ரிகாஸ்ரம” த்திலும் பிஹாரிலுள்ள “மிதிலா” 

விலுமாக மேற்கொண்டார். வேதாத்தம், நியாயா, தர்க்கம், மீமாம்சம், வியாகரணம் 

ஆகியவற்றில்  சிறந்து விளங்கினார்.

         இந்த புத்தகத்தில், அவர் கிரகங்கள் மற்றும் பாவங்கள் ஆகியவை   

குறிப்பிடக்கூடிய நோய்களைப் பற்றிய  விளக்கங்கள் ஜோதிட மாணவர்களுக்குப் 

பயனுள்ளதாக இருக்கும். ஒரு ஜாதகர் இன்ன நோயால் இன்னலுக்குள்ளாவார் 

என்பதை கீழ்கண்ட விதிகளால் அறியலாம் –
1.   

ருண, ரோக, சத்ரு பாவமான 6 ஆம் வீட்டில் உள்ள கிரகங்கள், 8 மற்றும் 12 இல் உள்ள 

கிரகங்களைப் பார்க்க வேண்டும்.

2.   6 ஆம் அதிபதி அல்லது 8 ஆம் பாவாதிபதி.

3.   6 ஆம் அதிபதியுடன் இணைந்துள்ள கிரகங்கள் மற்றும்

4.   ஜாதகத்தில் மிகவும் பலமிழந்த கிரகம் ஆகியவற்றையும் பார்க்க வேண்டும். ஜோதிடர் 

இவற்றில் எது பலம் மிக்கதாக உள்ளதோ அதற்குரிய நோயைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். 
         

இனி ஒவ்வொரு கிரகத்துக்குமான நோய்களைப் பற்றிய விவரங்களைக் காணலாம்

         சூரியன் – காய்ச்சல், பித்த நீர் வாதம், வலி, உடல் எரிச்சல், வலிப்பு, உடல் 

நடுக்கம், இதய நோய், கண் உபாதைகள், தொப்புளுக்குக் கீழ் உள்ள பகுதிகளில் வலி, 


கரப்பான், அக்கி போன்ற தோல் சம்பந்தப்பட்ட நோய்கள், எதிரிகளால் தொல்லை, 

தீக் காயங்கள், துப்பாக்கி, தோட்டா போன்றவற்றால் ஏற்படும் காயங்கள், மனைவி, 

மக்களால் ஏற்படும் தொல்லைகள், திருட்டு, கொள்ளையால் ஏற்படும் பயம், பாம்பால் 

ஆபத்து, பேய், ஆவி போன்றவற்றால் ஏற்படும் பயம், அரசால் விதிக்கப்படும் 

தண்டனைகள் ஆகியவற்றுக்குக் சூரியனே காரகம் பெறுகிறார்.

         சந்திரன் – தூக்கத்தில் நடக்கும் நோய், சோம்பேறித்தனம், இருமல், கபம் 

சம்பந்தமான நோய்கள், இராஜ பிளவை, முகப்பரு, காய்ச்சல், நடுக்கம், மன 

அழுத்தம், கொம்புள்ள மிருகங்கள், முதலை, ஆமை போன்றவற்றல் தாக்கப்படுதல், 

பசியின்மை, ருசி அறியாமை, பெண்களால் அவமானம் ஏற்படல், மஞ்சள் காமாலை 

நோய், இரத்த்த்தில் ஏற்படும் பாதிப்பு, நீரில் மூழ்கும் அபாயம், ஆயாசம், அசதி, 


களைப்பு, குரூர பெண் தெய்வங்கள், யட்சினி, நாக தேவதை ஆகியவர்களின் 

கோபத்துக்கு ஆளாவதால் ஏற்படும் பயங்கள் ஆகியவை ஏற்படும்.

         செவ்வாய் - தாகம், வாயு மற்றும் அசிடிட்டி, பித்தத்தால் ஏற்படும் காய்ச்சல், தீ 

விபத்து, குஷ்டம், கண் பாதிப்புகள், குடல் வால் அழற்சி, காக்காய் வலிப்பு, மஞ்சை 

சம்பந்தப்பட்ட நோய்கள்,  வேனக்கட்டி, வெடிப்பு, கரப்பான், சொறி சிரங்கு போன்ற 

தோல் சம்பந்தப்பட்ட நோய்கள், அரிப்பு உணர்வு, ஊனம், பய உணர்வு, சண்டைகள், 

உடன் பிறப்புகள், சித்தப்பா, பெரியப்பா பசங்கள் ஆகியோருடனான கருத்து 

வேறுபாட்டால் பிரச்சனைகள், வழக்கு விவகாரங்கள், எதிர் எதிராக 

மோதிக்கொள்ளுதல், மார்பின் மேல் பகுதியில் ஏற்படும் நோய்கள் ஆகியவை 

செவ்வாயால் குறிகாட்டப்படுகின்றன.

         புதன் – பித்துப் பிடித்தல், உளநிலை மாற்றம், பைத்தியமாதல், எதையும் 

நினைக்க முடியாமை, ஞாபகமறதி, கவலைகள், கற்பனைக் காய்ச்சல், சந்தேகம் 

கொள்ளுதல், மறந்துவிடுதல், கடுஞ்சொற்களை உதிர்த்தல், தொண்டை கண், மூக்கு 

ஆகியவற்றில் ஏற்படும் நோய்கள், பித்தம், கபம், வாதத்தால் ஏற்படும் நோய்கள், 

அலர்ஜி, கண்டுபிடிக்க முடியாத தோல் வியாதிகள், அபாயத்தை அளிக்கக்கூடிய 

முத்திய நிலையிலுள்ள மஞ்சள் காமாலை நோய், குடற் காய்ச்சல், கெட்ட கனவுகள், 

கொப்பளங்கள், பரு, தோல் வியாதிகள், பணிவான தன்மை, கடினமாக உழைத்தல், 

படுக்கையை நனைத்தல் ஆகியவை புதனால் ஏற்படும் நோய்களாகும்.

         குருவால் ஏற்படும் நோய்கள் – பதட்டம், அடிவயிறு பிரச்சனைகள், சீழ் பிடித்த 

கட்டி, பிளவை, பரு, குடல் வால் அழற்சி, மூத்திரகல் அடைப்பு,   சிறுநீரக 

கல்அடைப்பு, எலும்புருக்கி நோய், காச நோய், மூச்சடைப்பு, கபம் சம்பந்தமான 

நோய்கள், காது பிரச்சனைகள், தேவ கோபம், பிராமண சாபம், வழக்கு 

விவகாரங்கள், பிரம்ம ராக்ஷ்சர்கள், குரு, பெண்கள் ஆகியோரின் சாபங்கள், கல்லீரல், 

மண்ணீரல், குடல் ஆகியவற்றை பாதிக்கக் கூடிய காய்ச்சல் ஆகியவை ஆகும்.

        சுக்கிரன் – இரத்த சோகை,  கண் பாதிப்பு, சிறுநீரக பாதிப்பு, சர்க்கரை நோய், 

வீரியம் குறைவு, ஆண்மை குறைவு, போஸட்ரேட் கிளாண்ட்ஸ் பாதிப்பு, சுரப்பிகளை 

பாதிக்கும் காய்ச்சல், உடலுறவில் நாட்டமின்மை அல்லது அதீத காம உணர்ச்சி, 

ஆரோக்கியமற்ற பழக்க வழக்கங்கள், உடலில் நீர் சத்துக் குறைவு, நட்புக் கெடுதல், 

தோல் வியாதி, ரகசிய உறுப்பு நோய்கள் ஆகியவை ஏற்படும்.

        சனி - கபம் மற்றும் பித்த சம்பந்தமான நோய்கள், கால் வலி, முடக்குவாதம், 

கால் முடம், கடின உழைப்பு, கழைப்படையச் செய்யும் வேலை, ஆயாசம், உளநிலை 

மாற்றம், பித்துப் பிடித்தல், பொய் பேசுதல், அடிவயிற்றுப் பிரச்சனைகள், 

வேலைக்காரர்களுடன் சண்டை அல்லது அவர்களால் தொல்லை. மனைவி, 

மக்களுக்கு அபாயம், உடல் நோவு, வேதனை, கடும் துயரம், மரம் மேலே விழுதல், 

கற்கள் அல்லது மற்றவர்களால் செய்யப்படும் செய்வினை பயம், விபத்துக்கள், சிறை 

செல்லுதல் ஆகியவை ஏற்படும்.


        இராகு – இதய நோய், நெஞ்செரிச்சல், பைத்தியம் பிடித்தல், புத்தி பிரழ்தல், 

அலர்ஜி, காய்ச்சல், காயம், வெட்டு, புண்கள், மனக் கோளாறு, பாம்பு கடித்தல் 

அல்லது கொடிய மிருகங்கள் கடித்தல், ஆவிகளினால் பாதிப்பு ஆகியவை ஏற்படும்.

        கேது – சாபம், சுரப்பிகள் காசநோய், எதிரிகளால் மூர்க்கமாக தாக்கப்படுதல் 

ஆகியவை ஏற்படும்.


        மாந்தி – துரதிர்ஷ்டமான நிலை, நோய், பலமின்மை ஆகியவை ஏற்படும்.









No comments:

Post a Comment