Search This Blog

Wednesday 25 April 2018

திருமணநிலைகள்




திருமணநிலைகள்




   I.       திருமணத்திற்கான ஆய்வின்போது, பரிசீலித்து சீர்தூக்கிப் பார்க்க வேண்டிய      ஜாதக நிலைகள்
1.) 7 ஆம் பாவம்      
2.) 7 ஆம் வீட்டிலுள்ள கிரகங்கள்  
3.) 7 ஆம் அதிபதி
4.) 7 ஆம் அதிபதிக்கு இடங்கொடுத்தவன்.
5.) காரகன் - சுக்கிரன்
6 ). (பெண்ணுக்கு) கணவன் காரகன் குரு
7). மேற்கண்ட கிரகங்களின் சாரநாதன்    
8). நவாம்சம் மற்றும் அதன் அதிபதிகள்.
9). 7 ஆம் வீட்டின் பதா ( 7 ஆம் அதிபதி, இலக்னத்தில் இருந்து எத்தனையாவது      இராசியில் இருக்கிறாரோ, அதில் இருந்து 7 வது இராசி 7 ஆம் பதாவாகும்.   உபபதா 12 ஆம் அதிபதியை வைத்துக் கணக்கிடுவதாகும். )
10) மற்ற அம்சங்களாவன * 2 ஆம் அதிபதி / 2 ஆம் வீடு,
      *4 ஆம் அதிபதி / வீடு, 5 ஆம் அதிபதி / வீடு ( இயற்கையான காதல், பண்பாடு,
      பாரம்பரியம், புத்திரபாக்கியம், வம்சவிருத்தி ஆகியவற்றுக்கான இடம் ) 8 ஆம் வீடு / அதிபதி ( காம வாழ்க்கை ) 9 ஆம் வீடு / அதிபதி ( பாக்கியஸ்தானம் )
11.) இவை இலக்னம், இராசி மற்றும் சூரியன் நிலைகளில் இருந்து அலசப்பட   வேண்டும்.
12.) 7 இல் உள்ள கிரகங்களின் தன்மைகள்

      சூரியன்  ஜாதகர் சுமாரான அழகுடனும், மெல்லிய கேசத்துடனும் திகழ்வார். இவருக்கு ஒரு சில நண்பர்களே இருப்பர். இவர் மற்றவர்களுடன் சகஜமாகப் பழக மிகவும் சிரமப்படுவதோடு, எவருடனும் ஒத்துப் போகமாட்டார். இவருடைய திருமணம் தாமதப்படும் அல்லது அதில் பிரச்சனைகள் எழும். பயணங்கள் மேற்கொள்வதில் ஆர்வமுடையவராக இருப்பார். ஒழுக்கத்திற்கும் இவருக்கும் ரொம்ப தூரம். வெளிநாட்டு மோகம் உடையவர். வெளிநாட்டுப் பொருட்களையே விரும்புவார். இவருக்கு அமையும் மனைவியின் குணம் கேள்விக்கு உரியதாக இருக்கும்.  பெண்களால் இவருக்கு அவமானங்களும், இழப்புகளும் ஏற்படும். அரசின் அதிருப்திக்கு ஆளாவார். அவமானத்துக்கு உள்ளாவார். இவரது உருவமும் சீர்கெடும். இணக்கமற்ற, மகிழ்ச்சியற்ற மணவாழ்க்கை ( சுபர் பார்க்க நலம் ) பொறாமைகுணமும், அதிகாரம் செலுத்துகின்ற துணை அமையும்.

      சந்திரன் :- (வளர்) விரைவில்  திருமணம் நடக்கும். மகிழ்சிகரமான வாழ்க்கை, பொதுவான வாழ்க்கை முன்னேற்றம், குறுகிய தூர மகிழ்வுப் பயணங்கள். தேய்பிறைச் சந்திரன் எனில் விசுவாசமில்லா, உண்மையில்லா மனைவி. சுபர் பார்வை பெற கற்புள்ள, உண்மையுள்ள மனைவி அமைவாள்.  ஜாதகர் காம உணர்வு அதிகம் உள்ளவர். பொறாமை குணம் உள்ளவர். இளமையிலேயே தாயாரை இழக்க நேரலாம். அழகான மனைவி அமைவாள். ஆனாலும், ஜாதகர் பிற பெண்கள் மேல் நாட்டம் கொள்வார். சமூக உணர்வு இருப்பினும் பரந்த மனப்பான்மை இருக்காது. சக்தி மிக்கவராக இருப்பார். வெற்றிகரமான வாழ்க்கை அமையும். வளர்பிறை சந்திரனாகில் உயர்ந்த குல வழித் தோன்றலாய் இருப்பார். இல்லையெனில் பலம் மிகுந்தவராக இருப்பார். இடுப்புப் பகுதி வலியால் கஷ்டப்படுவார். கஞ்சத்தனம் மிக்கவர். தேய்பிறை சந்திரனாகில் எதிரிகளுடன் அடிக்கடி சண்டையிட்டுக் கொண்டே இருப்பார்.

      செவ்வாய் :- தாமதத்  திருமணம், ஆரோக்கியமற்ற, வழக்கு  விவகாரங்கள் அல்லது துணை மரணம். பாசமிக்க, காமவுணர்வு மிக்க துணை. செவ்வாய் சுயவீட்டில் இருக்க, குரு பார்க்க அல்லது கடகத்தில் இருக்கக் கேடில்லை எனலாம்.  ஜாதகர் பெண்களிடம் மிகவும் பணிவுள்ளவராகவும், மனைவி சொல் மிக்க மந்திரமில்லை என மனைவிக்கு அடங்கியவராகவும் இருப்பார். மணவாழ்க்கைப் பிரச்சனைகள் நிறைந்ததாகவும், மோதல்கள் நிறைந்ததாகவும் இருக்கும்.  இரு மனைவிகளின் குடுமிபிடி சண்டை ஏற்படவும் வாய்ப்பு உண்டு. மூடத்தனமாகவும், முன்யோசனை இன்றி பங்குச்சந்தை போன்ற சூதாட்டங்களில் ஈடுபடுபவராகவும் இருப்பார். புத்திசாலியாக இருந்தாலும், வெடுவெடுப்பானவராகவும், சிடுசிடுப்பு மிக்கவராகவும், பிடிவாதமான, எதற்கும் இணக்கமில்லாத எதிலும் வெற்றி பெற முடியாதவராகவும் திகழ்வார்.

      புதன் :- ( பலம்மிக்க ) புத்திகூர்மையுள்ள, கலையுணர்வுள்ள, அதிர்ஷ்டமிக்க, மற்றும் செல்வ வளம்மிக்க துணை  அமையும். ( பலமற்ற ) இணக்க மற்ற, மகிழ்ச்சியற்ற மண வாழ்க்கை. நல்லொழுக்கம் உடையவராகவும் விளங்குவார். இரசிப்புத் தன்மையுடனும், நேர்த்தியாகவும் உடைகளை அணிபவராகவும் இருப்பார். சட்டத் துறையில் ஆழ்ந்த அறிவுள்ளவராக இருப்பார். வியாபார விஷயங்களிலும், இளமைக் காலத்திலேயே எழுத்துலகில் வெற்றியாளராகத் திகழ்வார். இளமையிலேயே செல்வ வளமை மிக்கப் பெண்ணை மணப்பார். கணிதம், ஜோதிடம் மற்றும் வானியல் ஆகியவற்றை கற்றுத் தேர்ந்தவராக இருப்பார். மிகவும் சிரத்தையுடன் பக்தி மார்க்கத்திலும், மத சம்பந்தமான விஈயங்களிலும் ஆர்வமுள்ளவராக இருப்பார். இராஜதந்திரி, ஆனால் புதன் பாதிப்பு அடைந்திருந்தால் தந்திரக்காரராகவும், சூது நிறைந்த, ஏமாற்றுக்காரராகவும் விளங்குவார், மற்றவர்களைக் கவரும் விதமான அழகுடனும், வசீகரமான உடற்கட்டும் உடையவராக இருப்பார்.

      குரு :- உயர்குடியில் பிறந்த, அதிர்ஷ்டமிக்க, உண்மையுள்ள, தாராளகுணம் கற்பு நிலை தவறாத, பொதுவான முன்னேற்றமும், சந்தோஷமான வாழ்க்கையும் அமையும். இரக்க குணமுள்ளவர், தந்திரம் மிக்கவர், இவருக்கு அமையும் மனைவி அழகு மிக்கவளாக அமைவாள். திருமணத்தின் மூலமாக நல்ல கல்வியையும், இலாபங்களையும் அடைவார். மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்கக் கூடியவர். யூக வணிகம் செய்வதில் வல்லவர். விவசாயத்தில் சிறந்து விளங்குவார். குணத்தில் தந்தையை விட உயர்ந்த நிலை அடைவார். வெகுதூரமுள்ள புனிதத் தலங்களுக்குப் புண்ணிய யாத்திரைகள் மேற்கொள்வார். நல்ல குழந்தைகள் பிறப்பார்கள்.

      சுக்கிரன் :- (பலம் மிக்கதாயின்) காதல் மிக்க  துணை, மிக  உயர்ந்த  முன்னேற்றமுடைய, சந்தோஷமான மற்றும் அதிர்ஷ்டகரமான புலன் சம்பந்தப்பட்ட வாழ்க்கை உடையவர். சண்டை இடுவதில் விருப்பம் உடையவர். உணர்ச்சியும் காமமும் மிக்கவர். ஆரோக்கியம் அற்ற, ஒழுக்கம் அற்ற பழக்க வழக்கங்களை உடையவர். இவருக்குத் துணை நிற்கும் மனைவி அமைந்து, மகிழ்ச்சிகரமான வாழ்க்கையும் அமையும். இன்பமான, கவர்ச்சியான, அழகான, வெற்றிகரமான மனிதராய் இருப்பார். மற்றவர்களைக் காந்தம் போல் கவர்வார். இவருக்கு நோய் காரணமாக ஆண்மையை இழக்கும் ஆபத்து உண்டு.  எதிர்பாலரிடம் வெற்றிகரமான கூட்டு வைத்திருப்பார். (பாதிக்கப் பட்ட) சுக்கிரன் எனில் வரம்பு மீறிய, ஒழுக்கமில்லாத துணை, சந்தோஷமற்ற வாழ்க்கை, இசைவுள்ள இல்லற வாழ்க்கையில் பாதிப்பு ஏற்படும்.

      சனி :-   மகிழ்ச்சியற்ற மணவாழ்க்கை. ஜாதகர் தன் மனைவியின் கட்டுப்பாட்டில் இருப்பார். மனைவி அழகு குறைந்தவராகவும், கூன் விழுந்தவராகவும் இருப்பார். இவருக்கு ஓன்றுக்கு மேற்பட்ட திருமணமோ, விதவையுடன் திருமணமோ, விவாகரத்து ஆனவரோடோ அல்லது வயது முதிர்ந்த பெண்ணுடனோ திருமணம் நடக்கும். தந்திரம் மிக்கவராகவும், சிறந்த வர்த்தகராகவும் விளங்குவார். அயல்நாட்டு வாழ்க்கையும், நிரந்தர மணவாழ்க்கையும், அரசியல் வெற்றி உடையவராகவும் இருப்பார். வெளிநாட்டில் உயர்ந்த நிலை அடைந்து, சிறப்பான கௌரவத்தையும் அடைவார்.

      இராகு :-  பிரிவினை, நோயாளி, மோசமான சுபாவமுள்ள துணை. ஜாதகியாக இருந்தால் குடும்ப கௌரவத்தைக் குழி தோண்டிப் புதைப்பார். நெறி முறைகளுக்கு ஒவ்வாத, முறையற்ற வழிகளைக் கடைப்பிடிப்பார். வெளிநாட்டு பெண்கள் அல்லது வேறு ஜாதிப் பெண்களுடன் தொடர்பு வைத்திருப்பார். இவரது மனைவி கர்பப்பைக் கோளாறால் அவதிப்படுவார் நல்ல தரமான, சுவைமிக்க உணவுகளை உட்கொள்வார். படோடாபமான வாழ்க்கை வாழ்வார். சர்க்கரை நோய், பேய் பிசாசு பிடித்தல் மற்றும் அமானுஷ்ய சக்தி போன்றவற்றால் கஷ்டப்படுவார்.
         கேது – இவருக்கு மணவாழ்க்கை மகிழ்வானதாக இருக்காது. இவர் காமம் மிக்கவர். பாவி, விதவைகள் மீது ஆசைவைப்பார். மனைவி நோயாளியாக இருப்பார்.  ஆணாய் இருந்தால் அடிவயிறு, பெண்ணாய் இருந்தால் கருப்பை புற்றுநோயாலும் அவதிப்படுவர்.  ஆண்மை இழப்பாலும், மாறாத அவமானத்தாலும் கஷ்டப்படுவார்.  

        மேற்சொன்ன பலன்கள் 7 இல் அமர்ந்த கிரகத்தோடு இணைந்த அல்லது பார்த்த கிரகங்களப் பொறுத்து மாறுபடும். இவற்றில்  சுபர் தொடர்பு அல்லது சுயவீட்டிலுள்ள கிரகங்கள் அல்லது உச்ச கிரகங்கள்  மேற்சொன்ன எதிர்  மறையான  விழைவுகளை  மாற்றிவிடுகிறது.  இதைப் போலவே, நல்ல  கிரகங்களின்  மீதான  அசுப பாதிப்பு, சுபரால் ஏற்படும் நல்ல விளைவுகளைக் குறைத்துவிடுகிறது.
        சூரியன், இராகுவால் பாதிக்கப்பட்டால், பெண்களுடனான உறவால் அவதூறு அல்லது அவர்களால் பயமுறுத்தப்படுவதால் பண இழப்புகள் அல்லது அதற்கு சமமான இன்னல்கள் ஏற்படும். சூரியன், செவ்வாயால் பாதிப்பு அடைந்தால் மணவாழ்க்கை சச்சரவு மிக்கதாகவும், ஒருவருக்கு ஒருவர் வெறுப்பதும், இரத்த அழுத்தம் மற்றும் இருதய நோய் ஆகியவையும் ஏற்படலாம். மேலும், உடலில் அதிக உஷ்ணம் ஏற்படுவதின் காரணமாக, மூலநோய் மற்றும் அல்சர் போன்ற நோய்கள் ஏற்படலாம். சூரியன், சந்திரனால் பாதிக்கு அடைந்தால், திருமண பாக்கியம் இருக்காது. மற்றும் இழிவான அல்லது ஏழ்மை நிலையால் கஷ்டம் ஆடைவார். சூரியனோடு, புதன் இணைந்தால் அறிவாளியாகவும், அரசு மற்றும் பிற துறைகளால் ஏற்படும் தொல்லைகளை தந்திரமாக சமாளிக்கும் திறமை மிக்கவராகவும் இருப்பார். சூரியனை, குரு பார்த்தால் அல்லது இணைந்தால் இவருக்கு அமையும் துணை மிகுந்த பக்தி மிக்கவராகவும், ஜாதகரை வழி நடத்துபவராகவும் இருப்பார். சுக்கிரன் இணைந்து இருந்தால் மத சம்பிரதாயங்களை அனுசரித்துத் திருமணம் நடைபெறும்.

13. ஏழாம் அதிபதியின் நிலை :- கேந்திர / கோணங்களில் இருக்க இசைவான,     ஒற்றுமைமிக்க இல்லற வாழ்க்கை. ஏழாம் அதிபதி  6 / 8 / 12       இல்  இருக்க  ஆரோக்கியமற்ற  துணை  மற்றும்  மகிழ்ச்சியற்ற மண    வாழ்க்கை. பாதகத் தன்மைகள், சுப பார்வை பெற குறையும்.

14. சுக்கிரனின் நிலை :-
      பலம்மிக்க   சுக்கிரன் எதிர்பாலரை கவர்ந்திழுக்கும் தன்மையை இளம் வயதிலேயே கொடுத்துவிடுகிறார். மேலும், இனிய இல்லற வாழ்க்கைக்கும் ஆசீர்வதிக்கிறார்.
     3 / 6 / 10 / 11 ஆம் வீடுகளில் சுக்கிரன் இடம்பெற அல்லது சுப சுக்கிரன்    7 இல் இடம்பெற திருமணத்திற்குப் பின் அதிர்ஷ்டம்.
      சுக்கிரன் கேந்திரத்தில் / சுய / உச்ச வீட்டில்  இடம்பெற பொருள் லாபம், இனிய இல்லறத்தால்  ஆசீர்வதிக்கப்படுகிறார் மற்றும் எல்லா வகையான வாழ்க்கை சுகங்களையும் அள்ளித்தருகிறார்.
     2 / 5 / 6 / 7 / 9 / 12 ஆகிய இடங்களில் , மற்ற இடங்களை விட அதிக நன்மையளிக்கிறார். மகரத்தில் மிக்க ஒட்டுதலையும், ஆக்ரமிப்புடன் கூடிய விருப்பத்தையும் கொடுக்கிறார்.
      12 இல் சுக்கிரன்  இனிய  இல்லறத்திற்கும், இரகசிய  காதல் விகாரங்களையும்,
அதிக பொருள் சேர்க்கும் பேராசையையும் அளிக்கிறார். ஆனால் அவர் சனியின்
நவாம்சத்தில் இடம்பெற கூடாது.

15. ஏழாம் அதிபதியின் பலம் :-
                 எப்போது ஒரு வீடு பலமிழந்ததாக கருதப்படுகிறது ?
      அந்த வீடு  அதன் அதிபதி  அவ்வீட்டின் காரகர் ஆகியோர் கீழ்கண்ட     வகையில்   18 புள்ளிகள் பெற்றால்  பாதிக்கப்பட்டுள்ளது எனலாம்
--- எல்லாமே பலம் இழக்க  ( 3 புள்ளிகள் )
---  பாபகர்த்தாரி நிலை  ( 3 புள்ளிகள் )
---  அசுபர் கூட்டு அல்லது பார்வை ( 3 புள்ளிகள் )
---  பகை கிரக இணைவு  ( 3 புள்ளிகள் )
---  இவற்றிலிருந்து 4 / 8 / 12 இல் அசுபரர்கள் ( 3 புள்ளிகள் )
---  இவற்றிலிருந்து 5 / 9 இல் அசுபர்கள் ( 3 புள்ளிகள் )
--- மேலே கண்டவற்றில் 2 அல்லது 3 நிலைகளில் பாதிக்கப்பட்டால் அந்த வீடு பலம் இழந்ததாகக் கருதப்படுகிறது.

== மேலும் ஒரு வீட்டின் அதிபதி 6 / 8 / 12 இல் இருந்தாலும் அல்லது
      6 / 8 / 12 ஆம் அதிபதிகள் அந்த வீட்டில் இருந்தாலும், அவ் வீடு
      பலம் இழந்ததாகும்.

== ஒரு வீட்டில் அதன் அதிபதியிருக்க அல்லது பார்க்க ,பலமிக்க நட்பு கிரகம் இருக்க      அல்லது பார்வை பெற, குரு, சுக்கிரன், அல்லது வளர்பிறை  சந்திரன் போன்ற இயற்கை சுபர்களின் இணைவு அல்லது     பார்வைபெற ( இவர்கள் 6 / 12 க்கு அதிபதியாக இருத்தல் கூடாது ) அல்லது       சுபகர்த்தாரியில் இருக்க, அந்தவீடு பலம் மிக்கதாகக்  கருதப்படுகிறது.

== இராசியிலும்  நவாம்சத்திலும், இந்த  மூன்றின் மீதான சுப / அசுபகிரகங்களின்     அனைத்துப் பார்வைகளும் பார்க்கப்பட வேண்டும். நவாம்சக் கட்டமும், நவாம்ச கிரக நிலைகளும் ஒருவரின் திருமண நிலை மற்றும் துணை பற்றிய      நம்பகமான தகவல்களை இராசிக் கட்டத்தோடு இணைத்துப் பார்க்கும்போது     நமக்குக் கிடைக்கின்றன. இதில் சிறந்த மேலான நிலை எது எனில்,       கிரகங்களின் உச்ச / சுய / நட்பு இராசி நிலைகள்     மற்றும் சுப நவாம்ச      நிலையே ஆகும்.

== ஏழாம் வீட்டில், அதிக கிரகங்கள் இருக்கும் போது, அக் கிரகங்களில் பலம்  மிக்க   மற்றும் 7 ஆம் அதிபதிக்கு  நட்பு மிக்க  கிரகமே அதிமுக்கியமானதாக எடுத்துக்    கொள்ளப்பட வேண்டும்.

== திருமணத்திற்கான  யோக  நிலைகளும், 7 ஆம் பாவத்திற்குரிய யோகங்களும்     பார்க்கப்பட வேண்டும்..

      சம்மந்தப்பட்ட கிரக தசா / அந்தரதசா மற்றும் கோசார நிலைகள் ஆகியவற்றை, திருமணக் காலங்காண பகுத்தாய்வு செய்யவேண்டும்.

No comments:

Post a Comment