Search This Blog

Thursday 4 October 2012

சனியின் குணங்கள்.





சனியின் குணங்கள்.





நிறம் – கறுப்பு,              குணம் – குரூரன்,             மலர் – கருங்குவளை,             

இரத்தினம் – நீலக்கல்,
        
சமித்து – வன்னி,            தேசம் – சௌராஷ்டிரம்,       தேவதை- யமன்,                  

பிரத்யதிதேவதை – பிரஜாபதி,
        
திக்கு – மேற்கு,             ஆசனவடிவம்- வில்வடிவம்,    வாகனம் – காகம்,                 

தானியம் – எள்,
        
உலோகம்-இரும்பு,           பிணி- வாதம்,                சுவை – கைப்பு,                   

நட்பு –புதன்,சுக்கிரன்,இராகு,கேது,
        
சமம் – குரு              காரகம் – ஆயுள்,இரவில்தந்தை,  ஆட்சி – மகரம்,கும்பம்.            

பகை – சூரியன்,சந்திரன்,செவ்வாய்
        
மூலதிரிகோணம் –கும்பம்,    உச்சம் – துலாம்,              நீசம் – மேஷம்,                  

உறுப்பு – தொடை,
        
தசா ஆண்டுகள் – 19 ,       பாலினம் – திருநங்கை,         உருவம் – குள்ளம்,               

நட்சத்திரங்கள் –பூசம்,அனுஷம்,உத்திரட்டாதி,
        
உபகிரகம் – குளிகன்,        க்ஷேத்திரம் – திருநள்ளாறு,                             

இராசியில் சஞ்சரிக்கும் காலம் – இரண்டரையாண்டுகள்.


   ஜோதிடத்தில் சனி ஒரு வேலைக்காரர். இவரது காரகத்துவம்,கடினஇழைப்பு, கஷ்டங்கள், 

முதுமை, வேலையாள், கீழ்மட்ட   வேலையாள்    ,உரும்பு மற்றும் உருக்குத் தொழிலில் 

வேலைபார்ப்பவர்,நகராட்சி மற்றும் சுத்தம் செய்யும் பணியில்   ஈடுபடுபவர்கள்.ஒரு பலம்    

மிக்க சனியால் சிறப்புமிக்க சக்தியைக் கொடுக்கமுடியும்.அத்தோடு மரியாதை, பெயர், புகழ், 

ஆகியவற்றையும்    அளிக்கும்.அதே நேரம், பலமிழந்த நிலையில்,மிகுந்த  இன்னல்களை  

யளித்து அழித்துவிடுவான்.சனியின் உலோகம்-இரும்பு,இரத்தினம்-நீலக்கல்,திசை -மேற்கு 

ஆகும்.நவகிரகங்களில் சனியே மிகவும் குறைந்த வேகத்தில் பயணிப்பவர்,ஒரு ராசியை 

கடக்க அவர் சுமார் இரண்டரை வருடங்கள் எடுத்துக்கொள்கிறார்.இவர் உத்யோக காரகன் 

அல்லது தொழிலுக்குத்   தொடர்புடையவராகிறார். இராசி  மண்டலத்தில்,காலபுருஷ 

தத்துவப்படி,10 மிடமான மகரம் மற்றும் 11 மிடமான கும்பத்திற்கும்,சனி அதிபதியாகிறார். 

தண்டித்தல்,சேவகத் தொழில்,சுமை தூக்குதல்,   திருடுதல்,அடிமை   வேலைசெய்தல்,

சன்யாசம்,மது  வியாபாரம்,மாமிச வியாபாரம்,பயிர் செய்தல், ஆயுள், செக்காட்டுதல்,

கலவரம் செய்தல்,மரணம்,மரண காரணம்,விபத்து, பதவியிழத்தல்,நீச ஜனம், 

கைவிலங்கு,சிறைவாசம்.சூதாட்டம்,பிராமணார்த்தம் உண்ணல்,ஆயுள் காப்பு,பழைய 

இரும்பு,பழைய காகிதம்,எள்ளு,கொழுப்பு வஸ்த்துக்கள்,  மண்ணெண்ணைய்,தோல், 

கிழங்குவகைகள், கடுகு, உளுந்து,  புண்ணாக்கு,எரு,மண்பாத்திரம்,மான்தோல்,வாகனங்களின் 

பாகங்கள்,நிலக்கரி,கார்பன் ஆகியவற்றிற்கும் காரகராகிறார்.
  
    இவர் மெதுபவாக நகருபவராதலால் ,இவர் கொடுக்கும் பலன்களைத் தாமதமாகவே 

கொடுப்பார்.இவர் கொடுக்கும் பலன்கள்  வெகுநாட்கள் நீடித்திருக்கும்,சூரியனிடமிருந்து, 

வெகுதுரத்திற் பயணிப்பதால்,இவர் மீது விழும் ஒளி குறைவாகவேயிருப்பதால் 

,ஒளியின்றிக் கருப்பாகவே இருப்பார்,ஆகையால் இவர் நிறம் கறுப்பு.எனவே,சனி 

லக்னத்துடன் தொடர்புற,ஜாதகர் கருப்பாக யிருப்பார்.7 ம் பாவத் தொடர்பு ,மனைவி 

கருப்பாக அமைவார்.சனி   ஒளியற்றவராதலால்,சனி    தொடர்பு,கல்வி சம்பந்தப்பட்ட 

தனம் ,வித்தை ஆகிய ஸ்தானங்களுடனும்,புதனுடனும் சம்பந்தப்பட,கல்வியில் விருத்தி 

ஏற்படாது.அதனால்,பாட்டாளி மக்களையும், தொழிலார்களையும் குறிக்கிறார்.இவர் 

பொதுஜனங்களின் பிரதிநிதி யாவார்.பிரிவினை சக்தியுடையவராதலால்,7 மிட 

தொடர்பு,மனைவியுடன் பிரிவையும், 5 மிடத் தொடர்பு புத்திர  தோஷம் ஏறபடும்.வேதாந்த 

மனப்போக்குள்ள,சனி,, 2 – குடும்பம், 4 – சுகம், 12 மோட்சம் ஆகிய பவஙகளோடு 

தொடர்புற,ஜாதகரை குடும்பத்தைவிட்டு விலகி,     சந்யாசியாகத் தூண்டுவார். சனி 4 

மிடதொடர்பு அல்லது 4 ம் அதிபதி தொடர்பு, வலுத்தால் ஒரு நிலம் கிட்டும்.தொழில் 

பாவத்தோடு தொடர்புற்று வலுத்தால்,ஒரு அன்றாடங்காய்சியைக் கூட அரசனாக்குவார். 

சிலருக்கு மாதச் சம்பளம்

பெறக்கூடிய வேலை வாய்ப்பு கிட்டும்.8 மிடத் தொடர்பு பூர்ணாயுள் தரும்.   6 மிடத் 

தொடர்பு வாதம் ,  மனநோய்,பாரிசவாயு,   இதயக் கொளாறு,இரத்தம்,எலும்பு,ஆஸ்மா 

வியாதிகளைத் தரும்.







No comments:

Post a Comment