Search This Blog

Friday 12 October 2012

இராகுவின் – குணங்கள்.





இராகுவின் – குணங்கள்.

     “ட்ராகனின் தலை” அல்லது “வடக்கு நோட்” எனப்படும் இராகுவின் காரகத்துவங்களாவன :- சாகசம்புரிதல்,தைரியமுடையவர்,மச்சம், பாம்பு,விஷமுள்ள ஜந்துக்கள்,கற்கள்,கிருத்துவர்கள்,முகமதியர்கள்,கண்டுபிடிப்பாளர்கள்,வழக்கு,நோய்கள்,பேராசிரியர்கள்,நகைசெய்பவர்கள், பம்புகள்,ரேடியோ, வேட்டைக்கார்கள்,வில் வித்தையறிந்தவர்கள்தென்மேற்கு திசை, எரிவாயு,வெளிநாட்டவர்,வெளிநாடு,வெளிநாட்டுப் பயணம், இஞ்ஜினியரிங் மற்றும் தொழில் சம்பந்தமான வணிகம், புகை, முதுமை,பிதாமகன், திருட்டு, சூதாட்டம், குடித்தல்,நிழல் உலகம், சமூக விரோதிகள், கருப்பு நிறம்,கலப்பு உலோகம்,கோமேதகம்,ஜோதிடர்கள்,ஊழல், திடீர் விபத்துக்கள்,அரசியல் சதித் திட்டங்கள்,நாடு கடத்தப்படுதல், போராட்டங்கள்,பயணிகள்,கெட்ட எண்ணங்கள், முரட்டுத் தனமான பேச்சு,கண்பார்வை பாதிப்பு,இரண்டாந்திருமணம், தாமதங்கள், தடைகள்,குழந்தைப் பிறப்பில் தடை, தத்தெடுத்தல் ,தொழுநோய்,பின்புறம்,(பட்டக்),குழந்தைகளால் துயரம்,கொடூர குணம், மந்தகதியில் பணி புரிதல்,காய்ச்சல்,கீறல், கல்லறை, மூடநம்பிக்கை, மண்,கைம்பெண்,இடமாற்றம்,பதவி விலகல், பதவிப் பறிப்பு,மனநோய் மருத்துவர்,கொள்ளைநோய்,விஞ்ஞானிகள்,பொருள் லாபம்,பயந்த சுபாவம்.

நிறம் – கருப்பு,
குணம் – குரூரன்,
மலர் – மந்தாரை,
சமித்து – அறுகு,
தேசம் – பர்பதேசம்,
தேவதை – பத்ரகாளி,
பிரத்யதிதேவதை – ஸர்பம்,
ஆசன வடிவம் –கொடி வடிவம்,
வாகனம் – ஆடு,
தானியம் – உளுந்து,
பிணி – பித்தம்,
சுவை – புளிப்பு,
நட்பு கிரகம் – சனி,சுக்கிரன்.
பகை – சூரியன்,
சமம் – புதன்,குரு.
ஆட்சி வீடு – இல்லை.
மூலதிரிகோணம் – கும்பம்,
உச்சம் – விருச்சிகம்,
நீசம் – ரிஷபம்,
உறுப்பு – முழங்கால்
நட்சத்திரங்கள் – திருவாதிரை,சுவாதி,சதயம்.
தசை வருடம் – ௧௮ வருடங்கள்,
பாலினம் –பெண்.
காலம் – ஒண்ணரை யாண்டுகள்,
உருவம் – உயரம்.
உபகிரகம் – வியதீபாதன்,
க்ஷேத்திரம் – காளஹஸ்தி,திருநாகேஸவரம்.





 



No comments:

Post a Comment