Search This Blog

Friday 12 October 2012

கேதுவின் -- குணங்கள்







கேதுவின் -- குணங்கள்


    
ட்ராகன்ஸ் வால்” அல்லது தெற்குநோட் எனும் கேதுவின் காரகத்துவங்கள் :- ஞானம்,பக்தி மார்க்கம், மின்அணுவியல், வைடூரியம்,அரக்கு நிறம்,கேது ஒரு ராசியைக்கடக்க ஒண்ணரை ஆண்டுகள் ஆகிறது.தாயின் வழி பாட்டி,மதம்,மதமாற்றம், மோட்சம்,ஜோதிடம், விடுதலை, ரகசிய சதித்திட்டம்,ரகசியக்காதல், இலக்கியவாதி,கலையார்வம்,பெருமை,ஒத்துப்போகாமை,பிச்சையெடுத்தல்,திவாலாகுதல்,கஞ்சத்தனம்,துறவி,சண்டைகள்,மணடையோடு,தத்துவ்வாதி
சுயநலவாதி,மதவிழாக்கள்,அரசியற் படுகொலைகள்,நண்பர்கள் , கவர்ச்சி,அவலட்சணம்,ரகசிய உடன்பாடுகள்,கோள்சொல்லுதல், சிறைப்படல்,கணேசன் வழிபாடு,கைது வாரண்டை ரத்துசெய்தல்,சிவ பக்தர்,புனித நீராடல்,வைத்தியர்,காயம்,மாதவம்,ராஜாளி, முட்டாள்தனம்,காய்ச்சல்,நாய்,மாந்ரீகம்,முள்செடி, தத்துவவாதி, எதிரிகள்தொல்லை,பசி,அளவான உணவு,கொம்புள்ள மிருகம், வேட்டைக்காரன் தோழமை,வயிறு,கண்வலி,அம்மைநோய்.இது     ஒருசாயா கிரகம் அல்லது நிழல் கிரகமாகும்.

நிறம் – சிகப்பு,
குணம் – குரூரன்,
மலர் –செவ்வல்லி,
சமித்து – தர்பை,
இரத்தினம் –வைடூர்யம்,
தேசம் – அந்தர்வேதி,
தேவதை – இந்திரன்,சித்திரகுப்தன்,
பிரத்யதிதேவதை – பிரம்மன்,
திக்கு – வடமேற்கு (ஆகாயம்)
ஆசனவடிவம் – முற வடிவம்,
வாகனம் – சிங்கம்,
உலோகம் – துருக்கல்,
பிணி – பித்தம்,
சவை – புளிப்பு,
நட்புக்கோள் – சனி,சுக்கிரன்,
பகை – சூரியன்,சந்திரன்,செவ்வாய்.
சமம் – புதன்,குரு.
காரகம் – மாதாமகம்,ஞானம்,மோக்ஷம்.
ஆட்சி வீடு – இல்லை.
மூலதிரிகோணம் – மீனம்.
உச்சம் – விருச்சிகம்.
நீசம் – ரிஷபம்.
உறுப்பு – உள்ளங்கால்,
நட்சத்திரங்கள் – அசுவதி,மகம்,மூலம்.
திசையாண்டுகள் – ஏழு ஆண்டுகள்.
பாலினம் – திருநங்கை.
ராசியில் சஞ்சரிக்கும் காலம் – ஒண்ணரையாண்டுகள்.
உருவம் – உயரம்,
உபகோள் – தூமகேது.
க்ஷேத்திரம் – காளஹஸ்தி.



 




    

No comments:

Post a Comment