Search This Blog

Wednesday 31 October 2012

ரிஷபராசியின் குண இயல்புகள்

ரிஷபராசியின் குண இயல்புகள்





 காலபுருஷ தத்துவப்படி இரண்டாவது ராசியான, ரிஷபராசியின் பாகையளவு 30˚ முதல் 60˚ வரையாகும். இதன் அதிபதி, அசுரகுரு எனப்படும் சுக்கிரனேயாவார். இது ஒரு பெண் ராசி – பூமி தத்துவ ராசி – ஸ்திர ராசி யாகும்.இந்த ராசி, தெற்கு திசையையும், ரஜோ குணத்தையும், உடற்பகுதியிற் கழுத்தையும் குறிக்கிறது. சந்திரன் இந்த ராசியில் உச்சமாகிறார். யுரேனஸ் நீசமடைகிறார். ரிஷப ராசியிற் பிறந்தவர்கள், நல்ல ஆளுமையும், கவர்ச்சியும், உடையவர்கள்.உணர்ச்சி மிக்கவர்கள்,தங்கள் சொந்த பந்தங்களிடமும் ,நண்பர்களிடமும் மிகுந்த ஈடுபாடு உடையவர்கள். படோடாபம் மிக்க பழக்க வழக்கங்களை யுடையவர்கள், அன்புமிக்கவர்களாகவும், எதையும் யோசிக்காமல்,திடீரெனச் செய்பவர்களாகவும்,கர்வமிக்கவர்களாகவும்,புகழை விரும்புபவர்களாகவும் இருப்பர்.துணைவரிண் உடல்நலத்தின் காரணமாகக் கவலை கொள்ளும் நிலையுள்ளவர்கள்.இசையும், மந்திரப் பிரயோகங்களும் இந்த ராசிக்கார்களுக்கே உரியதாகும். வெகுதூரப் பயணங்கள் மேற்கொள்வர்.வியாபார நுணுக்கங்களும்,அனுபவ அறிவும் அதிகமுடையவர்கள். நடுத்தர உயரமும்,அகன்ற நெற்றியும்,ஒளிரும் கண்களும்,தடித்த கழுத்தும், கரிய கேசங்களும், நல்ல கட்டமைப்புள்ள உடல்வாகும் உடையவர்கள். காமத்தில் ஆர்வமும்,எப்போதும் இன்பத்தை விரும்புவர்களாகவும்,அதிக அளவு ஆசையும் கொண்டவராகவும் இருப்பர். இவர்கள் நேர்மையானவர்கள், நம்பத்தகுந்தவர்கள், பிறரிடம் பிரியம் மிக்கவர்கள், மெதுவாகப் பணிகளைச் செய்பவர்களாக இருந்தாலும், அவற்றை திறம்பட, நேர்த்தியாகச் செய்து விடுவார்கள்.கடின உழைப்பாளிகள் ஆயினும், வேலையில் குறைகூறினால், ரோஷப்பட்டு பணியை முடக்கிவிடுவர். எதையும் சிந்தித்து செயல்படக்கூடியவர்கள். கலை,இலக்கியம்,இசை, இயற்கையழகு ஆகியவற்றில் விருப்பமுடையவர்கள். ஓய்வையும்,சுகத்தையும் அதிகம் விரும்புபவர்கள். எதிர் பாலினத்தின் மீதான ஆர்வம் காரணமாக,அதிக காதல் விவகாரங்களைக் கொண்டவர்களாக விளங்குவர். நல்ல ஆரோக்கியமான மேனியுடையவர்கள். தலைக்கனம் மிக்கவர்களாக இருப்பினும், புன்னகை தவழும் முகமுடைய இவர்களின், ஆலோசனைகள், ஏற்றுக்கொள்ளத் தக்கதாக இருக்கும். என் வழி தனி வழியென,தனெக்கெனத் தனி கொள்கைகளும்,வழிமுறைகளும் உடையவர்கள்.உள்ளுணர்வு மிக்கவர்கள். அதிகாரம் செய்யவே,தாங்கள் பிறந்த்தாக எண்ணங்கொண்ட இவர்கள்,மற்றவர்களை அடக்கியாள்வதை விரும்புவதோடு, எப்போதும் தாங்கள் செய்வதே சரியென நினைப்பவர்கள். கோபம் வராது,வந்தால் ரிஷபமெனும் காளையைப்போல்,முட்டித் தள்ளிவிடுவர். பணத்தின் அருமையறிந்தவர்கள். பணத்தைச் சேமிக்கும் பழக்கமுடையவர்களாதலால்,அனாவசியச் செலவுகளை தவிர்ப்பவர்கள்.சூதாட்டப் பழக்க முடையவர்கள்.புதன் திசையில்,அதில் ஆதாயம்பெற வாய்ப்புண்டு. இவர்கள், பிரச்சனைகளில் தாங்களாகவே மாட்டிக் கொள்ளக் கூடியவர்கள்.மற்றவர்களின் முகஸ்துதியில் மயங்காத வண்ணம்,அவற்றை தவிர்த்து,முன்ஜாக்கிரதையாக ஒதுங்கிவிடுவது இவர்களுக்கு நல்லது.இவர்களுக்கு எளிதில் பாதிப்படையக்கூடிய உறுப்புகள் தொண்டை, இதயம், மற்றும் சிறுநீரகம் ஆகும். இவர்களின் மணவாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக இருக்கும். இந்த ராசி ஆண்களுக்கு,அழகிய மனையாளும்,பெண்களுக்கு அன்புமிக்க மணாளனும் அமைவது உறுதி. கஷ்டங்களும், துன்பங்களும் மிகுந்த வாழ்க்கையமைந்தாலும்,எந்த சூழ்நிலையிலும் ,ஒருவரையொருவர் விட்டுக்கொடுக்காமல் வாழ்வர். ஒருவருக்கொருவர் அன்பு மழை பொழிந்து,அன்யோன்யமாகவும் வாழ்வர். பெண்கள் சிறந்த மனைவியாகவும்,தாயாகவும் விளங்குவர். தங்கள் இல்லத்தைச் சிறப்பாகப் பராமரிப்பதிலும், குழந்தைகளைச் சிறப்பாக பேணிக் காப்பதிலும் வல்லவர்கள். ரிஷப ராசிக்காரர்கள்,ஆடம்பரப் பொருட்கள்,காஸ்மெடிக்ஸ்,வாசனைப் பொருட்கள்,வாசனைத் திரவியங்கள்,தங்க ஆபரணங்கள்,நவரத்தினங்கள் ஆகிய வியாபாரங்களில் ஈடுபடலாம். மேலும்,பைனான்ஸ் சம்பந்தமானவை,விவசாயம், இசை,சினிமா,நடிப்பு,சினிமா தயாரிப்பு,வாகனப் போக்குவரத்து போன்ற தொழில்களில் ஈடுபடாலாம். கார்மண்ட்ஸ்,பியூட்டி பார்லர்,லேடீஸ் கிளப்,அழகு சாதனப் பொருட்கள் விற்பனை போன்றவற்றில் ஈடுபட்டால் லாபம் ஈட்டலாம். அதிர்ஷ்ட எண்கள் – 2 மற்றும் 8.கவர்ச்சி எண்கள் -7 மற்றும் 9 ஆகும். ஒத்துவராத எண்கள் 5 ஆகும். அனுகூலமற்ற எண்கள் 1,3,4 மற்றும் 6 ஆகும். அனுகூலமான கிழமைகள் – வெள்ளி,புதன்,சனி மற்றும் திங்களும்,கூட்டாளிகள் மூலம் லாபம் அளிப்பது வியாழனும், அனாவசியச் செலவுகள் அளிப்பது செவ்வாயும், வீட்டில் நல்ல ஓய்வு அளிப்பது ஞாயிற்றுக் கிழமையுமாகும்..வெண்மை,பிங்க் மற்றும் பச்சை ஆகிய வண்ணங்கள் மிகவும் பொருத்தமானவையாகும். கடவுளை வணங்கி, தங்கத்திலோ அல்லது பிளாட்டினத்திலோ பதித்த,வைரம் அல்லது எமரால்டு மோதிரத்தை,வலது கை 3 வது விரலில் அணிவது உத்தமம். புதன்,சூரியன், சனி மற்றும் ராகு தசாக் காலங்கள் நல்லதைத்தரும். குரு,சுக்கிரன் மற்றும் கேது தசாக் காலங்கள் தீமைகளைத் தருவனவாகும். சனி, இந்த ராசிக் காரர் களுக்கு உபகாரியாவார்.

No comments:

Post a Comment